வணக்கம் மக்களே...
இந்தப் பதிவை எனது 25வது பதிவாக வெளியிடுவதில் நான் பெருமைப்படுகிறேன். வலைப்பூ ஆரம்பித்ததில் இருந்து எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்கள் பொன் மகேஷ், sweet பிரபாகரன், சாமியார் தினேஷ், CSE ரமேஷ் மற்றும் சக பதிவர்கள் சைவக்கொத்துப்பரோட்டா, சேட்டைக்காரன் உள்ளிட்ட பெயர் குறிப்பிட மறந்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.
இந்த வலைப்பூ என் வலிகளில் இருந்தெல்லாம் தொடர்ந்து எனக்கு விடுதலை அளித்து வருகிறது. நான் சொல்ல முடியாமல் தயங்குவதை எல்லாம் என் வலைப்பூ சொல்லிக்கொண்டு இருக்கிறது. இப்போது பட்டாம்பூச்சியைப் பற்றிய உணர்வுகளை பட்டாம்பூச்சியிடமும், சுரேஷைப் பற்றிய கருத்துக்களை அவரிடமும் சொல்லி முடிந்தாகி விட்டது. இன்னமும் நிறைய பேரிடம் நிறைய சொல்லவேண்டி இருக்கிறது.
இரண்டாம் பாகமாக எழுதப்பட்டுள்ள இந்த கவிதைப்பதிவின் முதல் பாகத்தை படிக்காத அன்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை சொடுக்கி படித்துக்கொள்ளலாம்.
பட்டாம்பூச்சி பதிவின் முதல் பாகத்தை தீட்டியபோது அந்தப் பட்டாம்பூச்சியே நேரடியாக வந்து இந்த வலைப்பூவை மொய்க்குமென நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் பின்னூட்டம் போடுவது, அடிக்கடி விசிட்டடிப்பது என்று அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சிகளை கொடுத்துவருகிறாள். இது மட்டுமில்லாமல், சுரேஷ், நிரஞ்ஜ், வந்தனா (அதே வந்தனா தான்...!) என்று எனக்கு பிடித்தவர்களெல்லாம் பின்னூட்டம் போட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
ஏற்கனவே, முதல் பாகத்தில் சொல்லிவிட்டேன், இருந்தாலும் புதிதாக படிப்பவர்களுக்கு சொல்லிவிடுகிறேன். இங்கே இருக்கும் கவிதைகள் அனைத்தும் ஆட்டையைப் போட்டவை தான். ஆனால் அவற்றில் ஒளிந்திருக்கும் உணர்வுகள் அனைத்தும் எனது உண்மை உணர்வுகளே. முதல் பாகத்தில் படித்ததை விட கொஞ்சம் பவர்புல்லான கவிதைகள் இங்கே:-
முன் குறிப்பு: சில கவிதைகளை கூர்ந்து படித்தால் பட்டாம்பூச்சி யாரென்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். ம்ம்ம்... புரிந்துக்கொள்பவர்கள் புரிந்துக்கொள்ளட்டும்.
சின்ன வயசில் நிறைய
சிலேட்டு குச்சிகளை
முழுங்குவேனாம்...!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம்
உன்னைப்பற்றி
எழுதத்தானோ...?
*****
எத்தனையோ பொய்களை
எளிதாகச் சொல்லிவிட்டேன்...
உன்னிடம் ஒரே ஒரு உண்மையைச் சொல்ல
காலங்காலமாய்த் தயங்கிக் கொண்டிருக்கிறேன்...!
பொம்மைக் கடைப்பக்கம் போகாதே
என்றால் கேட்கிறாயா பார்...
குழந்தை ஒன்று தன் தாயிடம்
உன்னைக் காட்டி
இந்த பொம்மையை வாங்கிக்கொடு
என்று அடம் பிடிப்பதை...!
*****
ஒரு வழியாய் தைரியம் வரவழைத்துச்
சொல்லிவிட்டேன் காதலை
சலனமற்றிருக்கிறது
உன் புகைப்படம்...!
ஒரு வண்ணத்துபூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது -
"ஏன் இந்தப்பூ
நகர்ந்துக்கொண்டே இருக்கிறது...?"
*****
கும்பலில் எல்லாம்
நீ போகாதே...
யார் யாரோ மிதிக்கிறார்கள்
உன் நிழலை...!
*****
கல்லூரிக்கு நீ
பிரயாணிக்கும் அரசுப்பேருந்து
நீ ஏறியவுடன்
அரசிப்பேருந்தாகிறது...!
*****
பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன பயணச்சீட்டு
வீதியில் கிடந்து புலம்பிக் கொண்டிருந்தது...
பயணம் முடிந்துவிட்டதை நினைத்து...!
*****
நீ ஒட்டப்போகும்
ஸ்டிக்கர் பொட்டுக்காக
காத்திருக்கிறது
என் குளியலறை...!
*****
நம் வீட்டில் நடக்கும் எல்லா
நிகழ்ச்சிகளிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும்
உன்னைப் பார்த்துக்கொண்டே நிற்கிறேன் நான்...!
*****
கடைசி நாள் பிரேயரில்
தேசிய கீதத்துக்கு ஏன்
தேம்பித் தேம்பி அழுதேன் என்று
எனக்கு மட்டும்தான் தெரியும்...!
*****
கை சூப்பும் குழந்தையின் விரலை
எடுத்து எடுத்து விட்டுக்கொண்டிருந்தாய்...
மறுபடி மறுபடியும் கை சூப்பினாள்...
முதலில் நீ
கையை எடுத்துவிடுவதை நிறுத்து...
உன் கையின் சுவை
அதன் விரலில் படவும்தான்
மறுபடி மறுபடியும் சூப்புகிறது...!
*****
நீ கெட்ட வார்த்தைகளே பேசியதில்லையாம்...
இப்போது புரிகிறதா...?
அந்த வார்த்தைகள் ஏன் கெட்டனவென்று...!
*****
சொந்தம் மறந்தவனென்று
உறவுகள் தூற்றட்டும்
இறந்தவர் வீட்டுக்கெல்லாம்
வரவேமாட்டேன்...
நீ
அழுதுக்கொண்டிருப்பதை
பார்க்கமுடியாது என்னால்...
நீ யாருக்காகவோ சிந்திய
கண்ணீர்த் துளிகளைப் பார்த்ததும்...
எனக்கும் செத்துவிடத் தோன்றியது...
*****
கடைசியாக ஒரு சூழ்நிலைக் கவிதை:-
எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இல்லையே...!
*****
பட்டாம்பூச்சி யாரென்பதை உணர்ந்துக்கொண்ட நண்பர்கள் கட்டாயம் பின்னூட்டம் போடும்படி கேட்டுக்கொள்கிறேன். ஏய் பட்டாம்பூச்சி... உனக்கும்தான்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN
NR PRABHAKARAN
|
|





7 comments:
காதல் கவியே..... உன் கவிதையும் சேர்த்து உன் காதலும் அவள் கை சேரும் .....
அனைத்து கவிதை so sweet .......
உன் பயணம் தினந்தோறும் தொடர என் வாழ்த்துகள்....
kavithai super.. its really urs??? by the by congrats for u for reaching 25th blogs..
again nice one....i cant find that butterfly da,,?can u give another clue.....?
தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.
ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்.
விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்தரை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதே
காதல் கவிதைகள் அத்தனையும் அழகு!!!
25 -க்கு வாழ்த்துக்கள்.
@ sweetprabha
வாழ்த்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி...
@ pavi
already i told da... poems r not mine... thanks for congrats...
@ Dinesh
இதெல்லாம் ரொம்ப ஓவர் டா... அத்தைப்பெண் என்னும் அழகிதான் அந்தப் பட்டாம்பூச்சி... போதுமா...
@ ஜெய்லானி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... என்னங்க... பின்னூட்டம் போடச்சொன்னால் ஏதோ பாடியிருக்கீங்க...
@ சைவகொத்துப்பரோட்டா
காரியம் கைகூட ஒரு வாழ்த்தெல்லாம் சொல்ல மாட்டீங்களா... நம்மெல்லாம் அப்படி தான் பழகினோமா...
கவிதை அருமை
Post a Comment