23 June 2010

என் இனிய எல்விரா...! (18+)


பொதுவாக நான் தமிழ்படங்களைத் தவிர வேறு எந்த மொழி திரைப்படங்களையும் பார்ப்பது இல்லை. (தமிழ்ப்படங்களே சமயத்தில் புரிவது இல்லை. இதில் வேற்று மொழிப்படங்கள் வேறைய...!) அத்தி பூத்தாற்போல டைட்டானிக், ஈவில் டெட், அவதார், அபோகாலிப்டோ, சக் டே இந்தியா, டான், ரேஸ், சி.ஜே.7 என்று சில வேற்றுமொழிப்படங்கள் என் மனதை கவ்வியதுண்டு. இந்தமுறை பிரபல பதிவர்கள் ஜாக்கி சேகரும், கேபிள் சங்கரும் விரட்டி விரட்டி விமர்சனம் எழுதி இருந்ததாலும், இத்தகைய படங்களை பார்ப்பதற்கு மொழி தேவையில்லை விழி இருந்தாலே போதும் என்ற உண்மையை உள்ளம் உணர்ந்ததாலும் படத்தை பின்னிரவில் பக்குவமாக பதிவிறக்கினேன். என்ன படம் என்று கேட்கிறீர்களா... கீழே பாருங்க... ஆனா படத்தோட பெயர் கீழே பார்க்காதீங்க...

Title: no miras para abajo
a.k.a.: don't look down
Tagline: When sexual fantasies come true
Country: Argentina
Language: Spanish
Year: 2008
Genre: Erotica, Romance
Cast: Antonella Costa, Leandro Stivelman
Director: Eliseo Subiela
Producer: Daniel Pensa
Cinematographer: Sol Lopatin
Editor: Marcela Saenz

இதற்கு முன்பு நான் அப்பட்டமாக துகிலுரிக்கும் ஆங்கிலப் படங்களை பார்த்திருக்கிறேன். பேக்ரவுண்டில் சாக்ஸபோன் இசையை கசியவிடும் மூன்றாம் தர மலையாள படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு நளினமான காமக்காவியத்தை இதுவரை பார்த்ததில்லை. சொல்லப்போனால் காட்சிகளை எனது கண்கள் கலையாக பார்த்ததே தவிர காமமாக பார்க்கவில்லை.


எலாய், பதின் பருவ ஆண்மகன். கல்லறைக்கு சிலைகளை மீன்பாடி வண்டியில் கொண்டு செல்வதுமாகவும், பொய்க்கால் கட்டியபடி பிட் நோட்டிஸ் விநியோகிப்பதுமாகவும் சுற்றி வருகிறான். தந்தை இறந்தபின்பு விந்தையாக மாறுகிறான். துக்கத்தில் இருப்பவன் தூக்கத்தில் நடக்க ஆரம்பிக்கிறான். ஓரிரவு தூக்கத்தில் மொட்டை மாடியில் நடந்துக்கொண்டிருக்கும்போது தவறுதலாக பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு மாறுகிறார். அங்கே ஒப்பன் சீலிங் வைத்த ஒரு பாட்டி வீட்டுக்கட்டிலில் விழுகிறார். ஆனால் கட்டிலில் இருப்பது பாட்டி அல்ல, கோடை விடுமுறையை கொண்டாட வந்த பேத்தி. பேத்திதான் நம்ம ட்ரீம் கேர்ள் எல்விரா. பாட்டியும் பேத்தியும் எலாய் மீது பாசக்கரம் நீட்ட நட்பு தொடர்கிறது. எலாயும் எல்விராவும் நெருக்கமாகி பாட்டி வீட்டில் இல்லாத ஒரு நாளில் பாடத்தை ஆரம்பிக்கின்றனர்.

எலாய் பாவம் சின்னப்பையன். முதல் உடலுறவில் டக் அவுட்டாகி சவுரவ் கங்குலியைப் போல பேந்த பேந்த முழிக்கிறார். கூனிக்குறுகி ஐம் ஸாரி என்று சொல்லும் எலாயை எல்விரா அரவணைத்து ஒவ்வொன்றாக கற்றுக்கொடுக்கிறார். இறுதியில் எலாய் மெத்தையில் மேதை ஆகிவிட, எல்விராவின் கோடை விடுமுறையும் முடிவுக்கு வர இருவரும் பிரிவதொடு படம் நிறைவடைகிறது.

ஒற்றைவரியில் சொல்ல வேண்டுமானால் டக் அவுட்டான சவுரவ் கங்குலி சதம் அடிக்கும் சச்சினாக மாறுவதும் அதற்கு பின்னணியில் இருக்கும் என் இனிய எல்விராவும் தான் கதை.


எல்விரா, இவளைப்போல எனக்கொருத்தி இருந்தால் எப்படி இருக்குமென்று எண்ணத் தோன்றியது. அப்படி ஒரு அழகு, ஆளுமை. கட்டிலில் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய அம்சங்களாக விந்தை வெளிப்படுத்தாமல் இருப்பதையும், பெண்ணை சுகப்படுத்துவதையும் குழந்தைக்கு பாடம் சொல்லித்தரும் தாயைப் போல சொல்லிக்கொடுக்கிறாள். அடுத்ததாக ஆண், பெண் உறுப்புகளில் உள்ள நேர், எதிர் துருவங்களை விவரிக்கிறாள். நேர் - எதிர் துருவங்களை இணைத்து மின்சாரம் உண்டாக்கும் கலையை கற்றுக்கொடுக்கிறாள். (இது மாதிரி வித்தையை எல்லாம் நம்ம ஆற்காடு வீராசாமிக்கு யாராவது கற்றுக்கொடுத்தால் தமிழகத்திற்கு விடியும்) ஒரு வழியாக பத்து, இருபது என்று முன்னேறும் எலாய், எல்விராவின் விருப்பப்படி என்பத்தொரு புல் அப்ஸ் (புல் என்ற வார்த்தையை யாரும் நீட்டி படிக்க வேண்டாம்) எடுத்து முடிக்கிறார். தொடர்ந்து நூறு புல் அப்ஸ் எடுக்கும்போது கட்டிலில் இருந்தபடியே உலக நகரங்களை எல்லாம் உலவிவிட்டு வருவதைப்போல உணர்கிறார். பின்னர் எல்விரகா வெவ்வேறு பொசிஷன்களை போதிக்கிறார். 

இந்தப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் வசனம் (சப் டைட்டில் புண்ணியத்தில்). காதல் காட்சிகளில் நம்ம ஊர் மணிரத்னம், கெளதம் மேனன் படங்களில் வரும் வசனங்கள் போல கட்டிலறை காட்சிகளின் போது எலாயும் எல்விராவும் பேசு வசனங்கள் அனைத்தும் கவித்துவமாக அமைந்திருந்தன. அதிலும் எல்விராவின் கொஞ்சல்களும் முனகல்களும் என்னை பாடாய்படுத்தியது. தங்களது குறிகளுக்கு செல்லப்பெயர் வைத்துக்கொள்வதும், குறியீடுகளை பயன்படுத்துவதும் விரசம் இல்லாமல் பார்த்துக்கொண்டது. மொத்தத்தில் இது ஒரு மஸ்ட் வாட்ச் திரைப்படம்.

காமத்தை அப்பட்டமாக்கப் போகிறேன் என்று சில வருடங்களுக்கு முன்னால் வேலு பிரபாகரன் சொன்னபோது அவரிடம் இருந்து இப்படி ஒரு படத்தைத் தான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் அவரிடம் இருந்து வெளிப்பட்டதோ வேறுவகையான ஒன்று. இனியாவது தமிழில் இப்படி ஒரு படம் வந்தால் சிறப்பாக இருக்கும்.

டிஸ்கி: மேற்கண்ட காவியத்தைப் பற்றி பிரபலங்கள் எழுதிய பதிவுகள்...

அப்படியே பிரபலங்கள் இதைப் போல உன்னதமான உலக சினிமா ஏதாவது இருக்கிறதா என்பது பற்றி எடுத்துரைத்தால் அடியேன் தனது அறிவை வளர்த்து கொள்வதற்கும் அருள் பெறுவதற்கும் ஏதுவாக இருக்கும்.


அய்யய்யோ... அத மறந்துட்டேனே... இந்த படத்தை இல்லையில்லை பாடத்தை நீங்கள் பதிவிறக்கிக்கொள்ள...
டோரன்ட் லிங்க்: Don't Look Down (DVD RIP)
நேரடி லிங்க்ஸ்: 

கவலைக்கொள்ள வேண்டாம் இரண்டு விதமான இணைப்புகளிலும் ஆங்கில சப் டைட்டில் இணைக்கப்பட்டுள்ளது.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment

7 comments:

ஜெய்லானி said...

தல இது மாதிரி ஒரு படம் பார்த்தேன் இங்லீஷ் மூவி பேர் நினைவில்லை . படம் நீங்க சொன்ன மாதிரிதான் காமமா தெரியல கவிதையா தெரிஞ்சுது..அது கரை ஒதுங்கிய குட்டி தீவில் முழு படமும் இருக்கும்

இது அந்த படம் எடுக்கும் டைரக்டர் , கேமராமேனின் உழைப்பே தெரிஞ்சுது..நன்றி

விஜய் said...

அவசியம் தரவிறக்கம் செய்கிறேன்.

அருமையான எழுத்து நடைக்கு வாழ்த்துக்கள்

விஜய்

Anonymous said...

நன்றாக உள்ளது உங்கள் தெளிவான விளக்கம்...
துணிந்து எழுதுகின்றீர்கள்..
தொடருங்கள்

Jackiesekar said...

நல்லா எழுதி இருக்கிங்க... வாழ்துதக்கள்.. படத்தை இப்படி அப்பட்டமா போடாதிங்க... ஆபிஸ் இருக்கறவங்க படிக்கமாட்டாங்க...
என் அனுபவத்துல சொல்லறேன்...

நன்றி நண்பா.. என்னையும் பிரபலபதிவர் லிஸ்ட்ல வச்சதுக்கு...

மங்குனி அமைச்சர் said...

நல்லா தெளிவா சொல்லிட்டிக

கொல்லான் said...

அருமையான படம்
அருமையான நடை

'பரிவை' சே.குமார் said...

அருமையான எழுத்து நடைக்கு வாழ்த்துக்கள்