8 August 2011

பிரபா ஒயின்ஷாப் – 08082011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முஸ்கி: தமிழ்மண திருவிழாவிற்காக ஒயின்ஷாப் கவுண்ட்டர் மீண்டும் திறக்கப்படுகிறது. சீக்கிரமா சரக்கை வாங்கிட்டு கெளம்புங்க. ராமதாஸ் குரூப் வர்றதுக்குள்ள கடையை சாத்தனும்.

கே.வி.ஆனந்த் இயக்கிய அயன் படத்தில் ஒரு காட்சி. இயக்குனர் ஒருவர் பர்மா பஜாருக்கு வந்து வங்கிக்கொள்ளை காட்சிகள் கொண்ட உலகப்பட டி.வி.டிக்களை வாங்கிக்கொண்டு போவார். அந்த டைரக்டரு வேறு யாருமல்ல, கே.வி.ஆனந்தே தான். அவருடைய அடுத்த படமான “கோ”வில் முதல் காட்சியே வங்கிக்கொள்ளை தான். அதே கோ படத்தில் பெண் பத்திரிக்கையாளர் பியா இயக்குனர் ஒருவருடன் கோபமாக போனில் பேசிவிட்டு, அவன் படத்துல ஹீரோ கடத்தல் பண்ணுவானாம், ஆனா கடைசியில கஸ்டம்ஸ் ஆபிசர் ஆயிடுவானாம், அதுக்கு நாலு ஸ்டார் போடணுமாம் என்று திட்டுவார். அதுவும் கே.வி.ஆனந்தே தான். அவருடைய அயன் படத்தின் கதை அதுதானே. உண்மையிலேயே தன்னைத்தானே பழித்துக்கொள்வதற்கு ஒரு மனது வேண்டும். அது கே.வி.ஆனந்திடம் இருக்கிறது. பாராட்டப்படவேண்டிய விஷயம்.

உலகத்திலேயே மிகவும் கொடுமையான வேலை மார்க்கெட்டிங் வேலைதான். சென்ற வாரத்தில் ஒருநாள் டீக்கடையோரம் நண்பருடன் நின்றுக்கொண்டிருந்தேன். சற்று தொலைவில் ஒரு பெண் சிரித்த முகத்துடன் எங்களை நோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்து ஒரு பெண் சிரிப்பது எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. அருகில் வந்தவள் ஒரு டிஸ்கவரி சேனல் வகையறா டிவிடி ஆல்பத்தை காட்டி அது இருக்கு, இது இருக்கு, ஆயிரத்து முன்னூறு ரூபாய்தான் சார் என்றாள். கூகிளை சொடுக்கினால் கேட்டதெல்லாம் கிடைக்கும் நிலையில் எனக்கு அது நிச்சயம் தேவைப்படாத ஒன்று. எனவே அந்தப்பெண் எல்லாவற்றையும் விளக்கிச்சொன்ன பின்பு மறுக்க வேண்டாமென்று ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டேன். இருந்தாலும் அவளது ஏமாற்றத்தை பார்க்க வேதனையாக இருந்தது. மன்னித்துவிடு சகோதரி.

சென்னை சிட்டியில் பைக் ஒட்டுபவர்களின் அட்ராசிட்டி தாங்க முடியவில்லை. ரெட் சிக்னல் போட்டு சுமார் பத்து நொடிகளுக்குப்பின்பு தான் வண்டியை நிறுத்துகிறார்கள். மறுபடியும் க்ரீன் சிக்னல் விழுவதற்கு பத்து நொடிகள் இருக்கும்போதே “இடித்துவிடுகிறேன் பார்...” என்று சொல்வதைப்போல முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். ட்ராபிக் போலீஸ் இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசம். சிக்னலை மதிப்பதே கிடையாது. சென்னையில் ட்ராபிக் தொல்லைகளுக்கு முக்கிய காரணம் கிடைத்த கேப்பில் எல்லாம் நுழைக்கும் பைக் ஓட்டுனர்கள்தான். என்னைப் பொறுத்தவரையில் ட்ராபிக் போலீஸ் லஞ்சம் வாங்குவதே தப்பே இல்லை. அப்படியாவது சாலை விதிகளை மதிக்கும் எண்ணம் வந்தால் சரி.

யாராவது நான் ரஜினியை நேரில் பார்த்தேன், கமலை பார்த்தேன் என்று சொன்னால் கூட பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டேன். ஓஹோ அப்படியா என்பதோடு கடந்துவிடுவேன். ஆனால் ஒருவர் சாம் ஆண்டர்சனை சந்தித்ததாக பதிவு எழுதியதில் இருந்து செம அப்செட். எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று மிகவும் பொறாமையாக இருக்கிறது. “யாருக்கு யாரோ ஸ்டெப்னி” படத்தை நான் சாம் ஆண்டர்சனை விட நான் அதிகமுறை பார்த்திருப்பேன். ஒரு நடிகனின் வேலை என்ன...? ரசிகனை ரசிக்க வைப்பது. அந்த வகையில் சாம் ஆண்டர்சன் ஒரு உலக நாயகன் தான்.

யாராவது தமிழில் கெட்டவார்த்தைகள் பேசினால் அவனை “லோக்கல்”, “கலீஜ் பார்ட்டி”, இண்டீசன்ட் ஃபெல்லோ என்றெல்லாம் சொல்கிறார்கள். அதுவே ஆங்கிலத்தில் யாராவது கெட்டவார்த்தைகள் பேசினால் அவரை (கவனிக்க ன் அல்ல ர்) மெத்த படித்த மேதாவி அல்லது பாஸ் என்கிறார்கள். என்னாங்கடா நியாயம் இது...!!!

இந்த வார ஜொள்ளு:
அடி ஆத்தா ஆத்தா... வெண்ணைக்கட்டி தேகத்தால் என்னையும் கட்டி இழுத்துபுட்டாயே...!

ட்வீட் எடு கொண்டாடு:
iParisal Parisalkaaran
பெண்களின் கைகள் ஒரு சேலையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாலும், கண்கள் என்னவோ அருகிலிருக்கும் பெண் தேர்வு செய்யும் சேலையில்தான்.

antoniOanbu அன்பு
என் நண்பன் எனப்படுபவன் யாரெனில் .... என்னிடமிருந்து அதிகபட்ச கெட்டவார்த்தைகளை வாங்கிக்கொண்டு.... சிரிப்பவன் :)

pinjimanasu பிஞ்சி மனசு
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை விவாகரத்து தீர்ப்பு.....அம்மாவிடம் 5 வருடம் அப்பாவிடம் 5 வருடம் தவிக்கும் குழந்தையின் பெயர் "தமிழ்நாடு"

sankara4 sankar -cablesankar
டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குவேன்.அடிச்சு நொறுக்கறதுக்கு முன்னாடி சரக்கு வேணுமே அதுக்கு எங்க போறது? டவுட்டு

Pattapatti பட்டாபட்டி
சிறைச்சாலைக்குப் போக மு.க.ஸ்டாலின் அஞ்சக் கூடியவர் அல்ல: கி.வீரமணி#அப்படியே அழகிரியையும் கோத்துவிடுங்க சார். அப்பால கட்சிப்பணம் நமக்கே!!

பதிவுலக அறிமுகம்: வேதாளம்
சில காலமாக பதிவுலக நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்காததால் புதிய பதிவர்களை அடையாளம் காண முடியவில்லை. நேற்று மாலை இன்ட்லியில் ஒரு மாணிக்கம் கிட்டியது. ட்விட்டர் பயனாளர்களுக்கு நன்கு அறிமுகமானவர் போல. அவரது எண்ணமும், எழுத்தும் அப்படியே என்னைப்போலவே இருந்தது பிடித்திருந்தது. வண்ணநிழல் என்பது இவரது வலைப்பூவின் பெயர். இணையத்தை ஒருவழியாக்கும் சாட்டிங் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்று படியுங்கள். சமீபத்தில் டக்கீலா என்று மப்பும் மந்தாரமுமாய் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

இந்த வாரப்பாடல்:
கொஞ்சம் தாமதமாகவே இந்தப்பாடலை கேட்டிருக்கிறேன். ஆடுகளம் திரைப்படத்தின் “அய்யய்யோ நெஞ்சு அலையுதடி...” பாடல். இந்தப்பாடலின் சிறப்பம்சம் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் அவரது மகன் எஸ்.பி.பி.சரணும் இணைந்து ஒரே ட்ராக்கில் கோரஸாக பாடியிருக்கிறார்கள். ஒரே ட்ராக்கில் அந்த இரண்டு குரல்களையும் கலந்த விதம் வசீகரமாக இருக்கிறது.

இந்த வார புகைப்படம்:
பஸ்ஸில் பார்த்தது...!

இந்த வார தத்துவம்:
“ஒரு பெண் பலவீனமான ஒருவனை ஆக்கிரமித்து அட்டகாசம் செய்வதைக் காட்டிலும், பலசாலியான ஒருவனுக்குத் தலை வணங்குவதையே விரும்புவாள்...”
- அடால்ப் ஹிட்லர்

நேற்று நண்பர்கள் தினமாம். இணையத்தில் எங்கு திரும்பினாலும் திகட்ட திகட்ட வாழ்த்துக்களும், நன்றிகளும். ஒரே கடுப்பு ஆயிடுச்சு. டுவிட்டரில் படித்தது: நெருங்கிய நண்பர்கள் எப்பொழுதும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில்லை... கொல்வதில்லை...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

41 comments:

கும்மாச்சி said...

சூப்பர் சரக்குப்பா, முதல் போனி நான்தான்

சி.பி.செந்தில்குமார் said...

ஜஸ்ட் மிஸ்

Philosophy Prabhakaran said...

follow up...

சி.பி.செந்தில்குமார் said...

ட்வீட்கள் அழகு

Unknown said...

கலக்கல் கொத்ஸ் நன்றி மாப்ள!

நிரூபன் said...

தமிழ்மண திருவிழாவிற்காக ஒயின்ஷாப் கவுண்ட்டர் மீண்டும் திறக்கப்படுகிறது. சீக்கிரமா சரக்கை வாங்கிட்டு கெளம்புங்க. ராமதாஸ் குரூப் வர்றதுக்குள்ள கடையை சாத்தனும்.//

சொல்லிட்டீங்க எல்லே, அப்புறமா ஏன் பாஸ், தாமதிக்கனும் இதோ படிச்சிட்டு வாரேன்.

சக்தி கல்வி மையம் said...

அப்ப இந்த ஒயின்ஷாப் ஒரு வாரந்தான் திறந்திருக்குமா?

அஞ்சா சிங்கம் said...

ஓகே ரைட்டு நல்லா இருக்கு ...........
விடு ஜூட்டு..........................

நிரூபன் said...

யாராவது கெட்டவார்த்தைகள் பேசினால் அவரை (கவனிக்க ன் அல்ல ர்) மெத்த படித்த மேதாவி அல்லது பாஸ் என்கிறார்கள். என்னாங்கடா நியாயம் இது...!!//

இது செம நச்...பாஸ்,

நிரூபன் said...

அடி ஆத்தா ஆத்தா... வெண்ணைக்கட்டி தேகத்தால் என்னையும் கட்டி இழுத்துபுட்டாயே...!//

ஐயகோ....முடியலை பாஸ்...

நிரூபன் said...

நீங்கள் பகிர்ந்திருக்கும் டுவிட்ஸ் எல்லாமே கலக்கல். அதுவும் பட்டாபட்டியின் டுவிட்ஸ் சூப்பர்.

நிரூபன் said...

பதிவுலக அறிமுகம்: வேதாளம்//

அறிமுகத்திற்கு நன்றி பாஸ்,
இப்பவே போய்ப் பார்க்கிறேன்.

நிரூபன் said...

கலக்கலான ஒயின்களைத் தாங்கி வந்திருக்கிறது உங்கல் ஒயின்ஷாப் பாஸ்.

Jayadev Das said...

\\முஸ்கி: தமிழ்மண திருவிழாவிற்காக ஒயின்ஷாப் கவுண்ட்டர் மீண்டும் திறக்கப்படுகிறது. சீக்கிரமா சரக்கை வாங்கிட்டு கெளம்புங்க. ராமதாஸ் குரூப் வர்றதுக்குள்ள கடையை சாத்தனும்.\\ வருஷத்துக்கு ஒரு தடவை கடையைத் திறந்தா எப்படி? அப்பப்போ திறங்க!

Jayadev Das said...

\\கே.வி.ஆனந்த்-உண்மையிலேயே தன்னைத்தானே பழித்துக்கொள்வதற்கு ஒரு மனது வேண்டும். அது கே.வி.ஆனந்திடம் இருக்கிறது. பாராட்டப்படவேண்டிய விஷயம்.\\ அட ஆமாம், இத்தனை நாள் இது ஸ்ட்ரைக் ஆகவே இல்லையே!!

Jayadev Das said...

\\மன்னித்துவிடு சகோதரி.\\ சகோதரியா...??!! பிகரு மொக்கையா இருந்ததா? [இல்லைன்னா இந்த வார்த்தை வரவே வராதுங்கண்ணோவ்!].

Jayadev Das said...

\\சென்னை சிட்டியில் பைக் ஒட்டுபவர்களின் அட்ராசிட்டி தாங்க முடியவில்லை.\\ திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

Jayadev Das said...

\\அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை விவாகரத்து தீர்ப்பு.....அம்மாவிடம் 5 வருடம் அப்பாவிடம் 5 வருடம் தவிக்கும் குழந்தையின் பெயர் "தமிழ்நாடு"\\ அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே பிள்ளை மேல கொஞ்சம் கூட பாசமோ அக்கறையோ இல்லையே? கையில் சாக்லேட்டைக் கொடுத்துவிட்டு குழந்தை போட்டிருக்கும் தங்க நகையைப் பிடுங்கும் திருடனைப் போல அல்லவா இருக்கிறார்கள்?

Jayadev Das said...

\\சிறைச்சாலைக்குப் போக மு.க.ஸ்டாலின் அஞ்சக் கூடியவர் அல்ல: கி.வீரமணி#\\ எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு, வேணுமின்னா செக் பண்ணிக்கோங்கன்னு பக்கத்தில் இருப்பவனை வைத்து பந்தயம் கட்டும் வீரமணி கில்லாடிதான். அம்மா ஆட்சிக்கு வந்திட்டாங்க இல்ல, நைசா அம்மா புராணத்தை ஸ்டார்ட் பண்ணுவாரு பாருங்க.

Jayadev Das said...

\\இந்த வாரப் படம்\\ கூர்ந்து கவனிங்க, அந்த முட்டையும் உசிரோட இல்லை, கம்பி போட்டு ஓட்டை போட்டிருக்காங்க!!

Jayadev Das said...

\\“ஒரு பெண் பலவீனமான ஒருவனை ஆக்கிரமித்து அட்டகாசம் செய்வதைக் காட்டிலும், பலசாலியான ஒருவனுக்குத் தலை வணங்குவதையே விரும்புவாள்...”\\ இது சத்தியம், நிஜம்.

Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

\\நெருங்கிய நண்பர்கள் எப்பொழுதும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில்லை... கொல்வதில்லை...\\ நிஜத்தில் காதலிப்பவர்கள் யாரும் I love You சொல்லிக் கொள்வதில்லை என்பதை உல்டா பண்ணிட்டாங்க. ஹி..ஹி..ஹி...

Prabu Krishna said...

சரக்கு புல்லா முடிச்சாச்சு நெக்ஸ்ட் எப்போ பாஸ்

'பரிவை' சே.குமார் said...

சரக்கு ரொம்ப தூக்கலா இருக்கு.
வாழ்த்துக்கள்.

ADMIN said...

ஸ்ஸோ அப்பா..என்ன கூட்டம்..! என்ன கூட்டம்..! சரக்குன்னுதும் என்னம்மா வந்து மொய்க்கிறாய்ங்க நம்ம பங்காளிங்க.. என்னால இப்போது தான் வரமுடிஞ்சது.. கூட்டத்தில சிக்கி தின்றி வந்து சேர்ந்துட்டோமில்ல..!

ADMIN said...

நல்ல அழகாக.. பதிவை அலங்கரிச்சு வெளியிடறீங்க.. சூப்பர் மாப்ளே..!

settaikkaran said...

கடை களைகட்டுது! வாழ்த்துகள்! :-)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

“அய்யய்யோ நெஞ்சு அலையுதடி...”///

இந்த வயசுல இப்படித்தான் இருக்கும்...


கலைகட்டட்டும்...

சென்னை பித்தன் said...

கடையைத் திறந்து விற்பனை தொடங்கியுள்ள உங்களுக்கு ஒரு ’ராயல் சல்யூட்’

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒயின்ஷாப் களை கட்டிருச்சு...

Sivakumar said...

இந்த வார ஜொள்ளா? வாரத்துக்கு ஒரு முறைதான் ஜொள்ளு விடுவீங்களா? டபாய்க்காதீங்க....

கோகுல் said...

என் நண்பன் எனப்படுபவன் யாரெனில் .... என்னிடமிருந்து அதிகபட்ச கெட்டவார்த்தைகளை வாங்கிக்கொண்டு.... சிரிப்பவன் :)//

ஹிஹி

VELU.G said...

வாழ்த்துக்கள் தல

ம.தி.சுதா said...

சரக்கு கிக் குறைாமல் அப்படியே தான் இருக்குப்பா...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

Philosophy Prabhakaran said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// அப்ப இந்த ஒயின்ஷாப் ஒரு வாரந்தான் திறந்திருக்குமா? //

தொடர்ந்து திறந்துவைக்க முயல்கிறேன் தல...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// சகோதரியா...??!! பிகரு மொக்கையா இருந்ததா? [இல்லைன்னா இந்த வார்த்தை வரவே வராதுங்கண்ணோவ்!]. //

ஹி... ஹி... மொக்கைன்னு சொல்ல முடியாது... ஆனா பாந்தமா இருந்தாங்க...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// இந்த வார ஜொள்ளா? வாரத்துக்கு ஒரு முறைதான் ஜொள்ளு விடுவீங்களா? டபாய்க்காதீங்க.... //

என்ன சிவா... பப்ளிக்ல இப்படியா டேமேஜ் பண்றது :))) சரி விடுங்க... அடுத்த வாரம் உங்களுக்கு பிடிச்ச தமன்னா ஸ்டில் போடுறேன்...

பாலா said...

//சென்னை சிட்டியில் பைக் ஒட்டுபவர்களின் அட்ராசிட்டி தாங்க முடியவில்லை. ரெட் சிக்னல் போட்டு சுமார் பத்து நொடிகளுக்குப்பின்பு தான் வண்டியை நிறுத்துகிறார்கள். மறுபடியும் க்ரீன் சிக்னல் விழுவதற்கு பத்...//
சேம் ப்ளட்... கொஞ்ச நாள் முன்பு இதைப் பற்றி கொஞ்சம் பதிவிட்டேன்..

http://nanganallurnerangal.blogspot.com/2011/04/blog-post.html
(3 பாகங்கள்)

[விளம்பரம் என நினைத்தால், கடந்து செல்லவும்] ;-)

Philosophy Prabhakaran said...

@ பாலா
// http://nanganallurnerangal.blogspot.com/2011/04/blog-post.html
(3 பாகங்கள்) //

மூன்று பாகங்களையும் படித்தேன்... ரொம்பவே மனம் நொந்து ஆனாலும் நகைச்சுவை ரசம் சொட்டச் சொட்ட எழுதிஇருக்கிறீர்கள்...

பாலா said...

நன்றி பிரபா !