7 August 2011

தமிழ்மணத்திற்கு வந்த சோதனை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழில் வலைப்பூ எழுதும் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு முகவரி கொடுத்த இணைய முகவரி: http://tamilmanam.net/ அது மட்டுமல்லாமல் தமிழ் படைப்புகளை தேடிப்படிக்கும் வாசகர்கள் பலர் நாடி வருவதும் தமிழ்மணமே. பதிவுலகத்தை உயரியதொரு இடத்திற்கு கொண்டு சென்றதில் தமிழ்மணத்திற்கு முக்கிய பங்கு உண்டு. மேலும், பதிவர்களுக்கிடேயே தர வரிசை, பதிவர்களுக்காக விருதுகள் என்று பதிவர்களை பெருமளவில் ஊக்குவிப்பதில் (!!!) அவர்களுக்கு நிகர் யாருமில்லை. (சரி போதும் மொக்கை போடாம மேட்டருக்கு வா...)

இந்நிலையில் சமீபகாலமாகவே, அதாவது சுமார் ஒரு வருடமாகவே தமிழ்மணம் அவ்வப்போது இக்கட்டான சூழ்நிலைகளில் அல்லல்படுகிறது. குறிப்பாக பதிவர்களுக்கான தர வரிசை ஆரம்பித்ததில் இருந்தே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. பல நேரங்களில் முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் பணியாளனைப்போல படுத்த படுக்கை ஆகிவிடும். அத்தகைய சமயங்களில் நம்முடைய வலைப்பூவை மற்றவர்கள் திறக்கவும் முடியாது, நாமும் மற்றவர்களின் வலைப்பூவை திறக்க முடியாது.

வெறுமனே லிங்கை மட்டும் கிளிக்கினால் மைனஸ் ஓட்டு விழுகிறது என்றொருமுறை பிரச்சனை வெடிக்க, பின்னர் ஒவ்வொரு முறை வாக்கிடும்போதும் பயனர் பெயர், கடவுச்சொல் கேட்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக சிக்கல் தீர்ந்தாலும் ஓட்டு போடுவது சுலபமாக இல்லை என்பதொரு வருத்தமே.

2011ம் ஆண்டு ஆரம்பமானபின்பு தமிழ்மணம் பலரது கண்களுக்கும் பழைய மனைவியாக தெரிய ஆரம்பித்தாள். எப்படி ஆர்குட் போய் பேஸ்புக் வந்ததோ அதே போல தமிழ்மணமும் நம்மிடமிருந்து நாளுக்கு நாள் விலகிக்கொண்டிருந்தது. இதற்கிடையில் பதிவர்களும் பஸ் ஓட்ட ஆரம்பித்தனர் என்பது வேறு கதை. ஜனவரி மாத ஆரம்பத்தில் சுமார் 19,000 அருகில் இருந்த தமிழ்மணத்தின் அலெக்ஸா மதிப்பீடு தற்போது 26,000 அருகில் உள்ளது.

தமிழ்மணம் கிட்டத்தட்ட செயல் இழந்துவிட்டது என்ற வரிகளை தமிழ்மணமே வெளியிட்டபோது கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது. ஆனால் சில வாரங்களில் தமிழ்மணம் இயல்புநிலைக்கு திரும்பிவிடும் என்றும் தமிழ்மணத்தின் சேவைகள் சிறந்தமுறையில் தொடர நன்கொடை கேட்டும் வந்த அறிவிப்பு நம்மை ஆறுதல்படுத்தியது. அவர்கள் அறிவித்தபடி தமிழ்மணம் ஓரளவு தனது இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது என்றே சொல்லலாம்.

தமிழ்மணம் புதுப்பொலிவுடன் இன்னும் இன்னும் அதிக பலத்துடன் மீண்டு வரும் என்று நாமெல்லாம் நம்பிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ்மணத்தின் மீது பெரிய இடி விழுந்திருக்கிறது. யாரோ பிலாசபி பிரபாகரன்னு ஒரு பதிவனாம். அவன்தான் தமிழ்மணத்தின் இந்த வார நட்சத்திரமாம். நாளைக்கு ஆரம்பித்து 15ம் தேதி வரைக்கும் தினம் ஓரிரு பதிவுகளை எழுதி கொல்வானாம். ம்ஹூம்... வெளங்கிடும்ன்னு நீங்க சொல்வது கேட்கிறது. என்ன செய்வது தமிழ்மணத்திற்கு புரியனுமே.

டிஸ்கி: தமிழ்மண நட்சத்திர வாரத்தை கணக்கில் கொண்டு பின்னூட்ட மட்டறுப்பை தற்காலிகமாக நீக்குகிறேன். அனானி அண்ணன்மார்களே இன்னும் ஒருவாரத்திற்கு எந்த தொந்தரவும் செய்ய வேண்டாமென்று உங்களிடம் இருகரம் கூப்பியும், மண்டியிட்டும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கெட்டவார்த்தையில் திட்டினாலும் பரவாயில்லை ஆனால் ஒரே பின்னூட்டத்தை 100, 200 முறை காப்பி பேஸ்ட் செய்து தொல்லை கொடுக்காதீர்கள். இதையும் மீறி யாராவது கோபத்தை வெளிப்படுத்த விரும்பினால் mail id: nrflyingtaurus@gmail.com & phone number: +91-8015899828.
-     என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

42 comments:

'பரிவை' சே.குமார் said...

தமிழ் மண நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...
கலக்குங்க பிரபாகரன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் பிரபாகரன்.... வலைச்சரத்தில் உங்கள் உழைப்பை அறிவேன்....... அதுபோல் இங்கும் கலக்குங்க.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்மணத்துல இன்னும் சப்மிட் ஆகல போல?

மாணவன் said...

தமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்!

Speed Master said...

கலக்குங்க
கலக்குங்க

கலக்குங்க

மாணவன் said...

உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் இனிய நண்பர்கள் தினநல்வாழ்த்துக்கள்!

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
தமிழ்மணத்துல இன்னும் சப்மிட் ஆகல போல?//

சப்மிட் பண்ணிட்டோம்ல....
தமிழ்மணத்தில் இணைத்த பெருமை அடியேனையே சேரும்.... :)

Philosophy Prabhakaran said...

@ 'பரிவை' சே.குமார்
நன்றி...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// வாழ்த்துக்கள் பிரபாகரன்.... வலைச்சரத்தில் உங்கள் உழைப்பை அறிவேன்....... அதுபோல் இங்கும் கலக்குங்க.......! //

நன்றி... அதற்கான முயற்சியில் தான் இருக்கிறேன்...

// தமிழ்மணத்துல இன்னும் சப்மிட் ஆகல போல? //

இப்போ சப்மிட் ஆயிடுச்சு... நமக்கும் பழைய ஆட்டம் எல்லாம் மறந்துபோச்சு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மாணவன் said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
தமிழ்மணத்துல இன்னும் சப்மிட் ஆகல போல?//

சப்மிட் பண்ணிட்டோம்ல....
தமிழ்மணத்தில் இணைத்த பெருமை அடியேனையே சேரும்.... :)
///////

தமிழ்மணத்தோட ஏதாவது சப்காண்ட்ராக்ட் போட்டிருக்கியாலே?

Philosophy Prabhakaran said...

@ மாணவன்
// சப்மிட் பண்ணிட்டோம்ல....
தமிழ்மணத்தில் இணைத்த பெருமை அடியேனையே சேரும்.... :) //

ஓஹோ... அப்போ தானா சப்மிட் ஆகலையா... நன்றிண்ணே...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
பேஸ்புக்கில் இருக்குற வடக்குபட்டி ராமசாமி ப்ரோபைல் உங்களோடதா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
பேஸ்புக்கில் இருக்குற வடக்குபட்டி ராமசாமி ப்ரோபைல் உங்களோடதா...
////////

இல்லீங்கோ, ஃபேஸ்புலயும் நான் பன்னிக்குட்டிதாங்கோ.......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னும் தமிழ்மண முகப்பு பக்கத்தில் தங்களுடைய பெயர் வரவில்லை....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
தமிழ்மண நட்சத்திர வாரத்தை கணக்கில் கொண்டு பின்னூட்ட மட்டறுப்பை தற்காலிகமாக நீக்குகிறேன். அனானி அண்ணன்மார்களே இன்னும் ஒருவாரத்திற்கு எந்த தொந்தரவும் செய்ய வேண்டாமென்று உங்களிடம் இருகரம் கூப்பியும், மண்டியிட்டும் கேட்டுக்கொள்கிறேன்
////////

மச்சி ஏதோ கெஞ்சி கேட்டதாலே விட்டுட்டுப் போறேன்...


பொழைச்சிப்போ....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
நாளைக்கு ஆரம்பித்து 15ம் தேதி வரைக்கும் தினம் ஓரிரு பதிவுகளை எழுதி கொல்வானாம்.
/////

ஓ..

நாளைக்குதான் வருதா..?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்...

ஆமினா said...

வாழ்த்துக்கள்

Admin said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா!

தமிழ்மணத்தில் நட்சத்திரம் ஆனதற்கும் வாழ்த்துக்கள் நண்பா!

settaikkaran said...

வாழ்த்துகள்! இது கிடைத்தற்கரிய வாய்ப்பு! ஜமாயுங்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

idroos said...

ஒரு மாசமா ஆளையே காணோம்?
தமிழ்மணத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.திர அந்தஸ்து பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

சேலம் தேவா said...

இப்டி ஏதாவது விஷேசம் வந்தாதான் இனிமேல் எழுதுவிங்களா..?!வலைச்சரத்தைப்போல் இங்கேயும் கலக்குங்கள் பிரபாகர்..!!நண்பர்கள்தின வாழ்த்துகள்..!! :)

Unknown said...

தமிழ்மண நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...

ராஜ நடராஜன் said...

இப்படியும் கூட தமிழ்மண நட்சத்திர அறிமுகம் சொல்ல முடியுமா:)

நட்சத்திர வாழ்த்துக்கள்.தூள் கிளப்புங்க!

சாந்தி மாரியப்பன் said...

நட்சத்திரவாரத்துக்கு வாழ்த்துகள்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

Vaazhththukkal.

Prabu Krishna said...

அட போங்க பாஸ். எனக்கும் தமிழ்மணத்துக்கும் இன்னமும் பிரச்சினை தீரவில்லை. இன்னமும் மல்லு கட்டுகிறேன்.

நட்சத்திர வாரத்துக்கு பாராட்டுகள்.

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிச்சிருக்கிறீங்க.
தம்ழி மணம் பற்றிய ஆதங்கம்...பதிவர்கள் அனைவரினதும் மன உணர்வினை, உங்கள் பதிவினூடாகத் தாங்கி வந்துள்ளது.

நிரூபன் said...

இறுதியில் சஸ்பென்ஸ் வைத்து, நீங்கள் பகிரங்கப்படுத்திய நட்சத்திர வார அறிவிப்பு, கலக்கல்.

வாழ்த்துக்கள் பாஸ்,

நிரூபன் said...

இந்த வாரம் முழுவதும், உங்களின் அசத்தலான பதிவுகளால் எங்கள் அனைவரையும் அசத்துங்கள் பாஸ்,

Anonymous said...

Congrats Praba!!

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள் வாத்யாரே .!! கலக்குங்க :-))

அஸ்மா said...

வாழ்த்துக்கள் சகோ.

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் டா மாப்ள..

Unknown said...

வாழ்த்துக்கள் சீனியர்....கலக்குங்க!

சி.பி.செந்தில்குமார் said...

vaazththukkaL வாழ்த்துக்கள். சோதனையை சாதனை ஆக்குவீர்கள்

பாச மலர் / Paasa Malar said...

நட்சத்திர வாழ்த்துகள்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சகோ .

துளசி கோபால் said...

நட்சத்திரமே! இனிய வாழ்த்து(க்)கள்.

தமிழ்மணம் தவிர வேறெங்கும் பதிவை இணைப்பதில்லைன்னு முடிவு செஞ்சு கன காலமாச்சு!

இராஜராஜேஸ்வரி said...

தமிழ்மணத்தில் நட்சத்திரம் ஆனதற்கும் வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...