13 August 2011

புத்தக வாசிப்பு


அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தகத்தின் முதல் வரியிலிருந்து “முற்றிற்று” என்பது வரை இடைவிடாது புத்தகங்கள் வாசிப்போரை நான் அறிவேன். ஆனால் நான் அவர்களை “நன்கு படித்தவர்கள்” என்று கூறமாட்டேன். ஏனெனில் அத்தகையோர் தாங்கள் படிக்கும் விஷயங்களை நல்லவை என்றும் கெட்டவை என்றும் பிரித்து, நல்லவைகளை மாத்திரம் ஏற்றுக்கொண்டு மற்றவற்றை மறந்து விடுவதில்லை. எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு மூளையைக் குழப்பிக்கொள்வார்கள். நல்லவைகளை மறந்துவிட்டுக் கெட்டவைகளை மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் பிரகிருதிகளும் உண்டு. தங்களுக்குள்ள திறமையையும் அறிவையும் அபிவிருத்தி செய்துகொள்வதே, புத்தகங்களைப் படிப்பதன் முக்கிய நோக்கம். உங்கள் ஜீவனத்திற்கோ அல்லது மானிட வாழ்க்கையின் உயர்ந்த அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கோ அவசியமான சாதனங்களை ஒவ்வொருவரும் புத்தகப்படிப்பின் மூலம் பெறுகிறார்கள். படிப்பதன் முதல் நோக்கம் அதுதான். இரண்டாவது நோக்கமென்னவெனில் நாம் வாழும் உலகத்தைப் பற்றிய பொது அறிவைப் பெறுவதே. எனினும் படித்தவைகளை அத்தியாயம், அத்தியாயமாக செங்கல்களைப்போல் மனதில் அடுக்கிவைத்துக் கொண்டிருப்பதால் எவ்வித பலனும் ஏற்படாது. படித்து மனதில் பதிய வைத்துள்ள பல்வேறு விஷயங்களையும் பிரயோஜனகரமான முறையில் ஒன்று சேர்த்து ஓர் அறிவு மாளிகையாக நிர்மாணிக்க வேண்டும். இல்லாவிடில், தாங்கள் அதிகமாகப் படித்துள்ளோமென்ற வீண் கர்வத்தைத் தவிர வேறு எவ்வித பலனும் ஏற்படாது.

வாசிக்கும் கலையை நன்கு அறிந்து கொண்டிருப்பவர்கள் ஒரு புத்தகத்தையோ அல்லது பத்திரிக்கையையோ வாசித்தால், அதில் எதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உடனே பகுத்துணர்ந்துக் கொள்வார்கள். அதைக்கொண்டு அவர்கள், வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் சுலபமாகச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். அப்படியானால்தான் படிப்பின் மூலம் பலன் ஏற்பட முடியும்.

உதாரணமாக ஒரு பிரசங்கி, தாம் பேசப்போகும் விஷயம் பற்றிய சகல தகவல்களையும் நன்கு அறிந்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடில் தன் அபிப்ராயங்களை ஆட்சேபிக்கும் எதிரிகளைச் சமாளித்து சமாதானப்படுத்த முடியாது. மற்றும் தம்முடைய அபிப்ராயங்கள் நியாயமானவையாக இருப்பினும் கூட சரியான வாதங்களுடன் அவைகளை ஸ்தாபிக்கவும் எதிரியின் ஆட்சேபங்களைத் தவிர்க்கவும் முடியாது.

மேலே உள்ள விஷயங்கள் அனைத்தையும் கூறுவது நானல்ல. ஹிட்லரின் “மெய்ன் காம்ப்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான “எனது போராட்டம்” என்ற நூலில் இருந்து சுடப்பட்ட வரிகள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல் வாசகன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புத்தகம் வசிப்பது என்பது ஒரு கலை...

பொதுவாக புத்தகம் வாசிப்பது அந்த கருத்துக்களை அதன் உணர்வுகளை எங்கு பகிர்ந்துக் கொள்ள போகிறோம் என்று தெரியாது...

ஆனால் புத்தகங்களை தொடர்ந்து வாசித்து அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை ரசித்து இதன் வரிகளை உணர்ந்து படித்தால் அந்த கருத்துகள் அதன் தாக்கம் நாம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வோறு வாக்கியத்திலும் வந்து ஞாபகம் படுத்திக்கொண்டிரக்கும்..


அறிஞர்கள் பேச்சாளர்களும் தான் படிக்கும் புத்தகத்தின் வாக்கியத்தை வார்த்தைகளை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது. ஆனால் அவர்கள் பேசும்போது அந்த சூழலுக்கு ஏற்றார் போர் அவைகள் வந்து அவர்களிக் பேச்சை அழகாக்கும்..

ஆகையால் தொடர்ந்து படிப்பது நல்லது..

அதிகபட்சமாக கண்ணதாசன் வைரமுத்து மேத்தா அப்துல் ரகுமான் போன்றோரின் நூல்களை அதிக ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன் அதுவும் 15 முதல் 20 வயதுக்குள்...

அதுதான் இப்போது என் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது..

அர்த்தமுள்ள இந்து மதம் நூல் என்னை ஒரு எழுத்தாளனாக பரிமணிக்க வழி வகைசெய்தது என்று கூட சொல்லலாம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆசிரியர் பணியிலும் புத்தக வாசிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஒரு பாடத்தை எத்தனைமுறை நடத்தியிருந்தாலும் அதை நடத்துவதற்க்கு முன் ஒரு படித்துவிட்டு செல்வதுதான் ஒரு நல்ல ஆசிரியருக்கு அழகாகும்...

பகிர்வுக்கு மிக்க நன்றி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா படிச்சிருக்கீங்க.......!

இராஜராஜேஸ்வரி said...

ஹிட்லரின் “மெய்ன் காம்ப்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான “எனது போராட்டம்” என்ற நூலில் இருந்து சுடப்பட்ட வரிகள்.
பயனுள்ளவை....

தமிழ் வண்ணம் திரட்டி said...

நண்பரே மெயில் அனுப்பி விட்டேன்

Anonymous said...

The extracts hav come from Hitler. So, he used all the benefit of his reading in killing a lakh of helpless and defenseless human beings.

எந்த விதமான நூல்களைப் பற்றி பேசுகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

நிகழ்காலத்தில்... said...

வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவருக்கும் ஏற்ற கருத்துதான்.,

(சுட்ட)பகிர்வுக்கு வாழ்த்துகள்

sarujan said...

மிகவும் முக்கியமான கலையை

ARV Loshan said...

ஆகா.. சுட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே.. :)
அருமையான வரிகளை சொன்னேங்க :)