10 November 2011

நக்மாயிசம்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நந்திதா மொராஜி என்று சொன்னால் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதுதான் தமிழகத்தை ஒரு பீரியட்டில் உலுக்கிய நடிகை நக்மாவின் நிஜப்பெயர். நாற்பத்தியொரு வருடங்களுக்கு முன்பு மும்பையில் பிறந்த ரம்பை.

1990ம் ஆண்டு தனது கலைச்சேவையை நக்மா பாலிவுட்டில் ஆரம்பித்தபோது அவர் தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்டிப்படைக்க போகிறார் என்று யாரும் கணித்திருக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் சில மொக்கையான இந்தி படங்களில் நடித்து வந்த நக்மா, பின்னர் தெலுங்கு தேசத்தில் தஞ்சம் புகுந்தார். நக்மாவும் மற்ற நடிகைகள் போல தொடக்கத்தில் இழுத்திப்போர்த்திக்கொண்டும் சல்வார் கமீஸ் அணிந்துக்கொண்டும் நடித்திருக்கிறார். ஆனால் அதைத்தான் விரும்பியதா இந்த சமுதாயம்...??? படுக்கையில் பாலகிருஷ்ணாவோடு புரளவிட்டார்கள், மழையில் நாகார்ஜுனுடன் நனையவிட்டார்கள். குறிப்பாக அல்லரி அல்லுடு படத்தில் மழையில் நனைந்தபடி அவர்போட்ட கெட்ட ஆட்டத்தை தெலுங்கு சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இவ்வாறாக திரையுலக வாழ்க்கையை தொடர்ந்துக்கொண்டிருந்த நக்மாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் ஷங்கரையே சேரும். ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் இன்று பல தரப்பினரும் பரவலாக பேசுவதற்கு ஷங்கர் அன்று நக்மாவை அறிமுகப்படுத்தியதே காரணம் என்று நினைக்கிறேன். அந்தப்படத்தில் ஷ்ருதி என்ற கேரக்டரில் நடித்த நக்மா தமிழக இளைஞர்களின் குருதியை சூடாக்கினார். முக்காபுலா பாடலில் Cow Girl-ஆக தோன்றிய நக்மா நம் பெற்றோருக்கு மாட்டுப்பெண்ணாக வரமாட்டாரா என்று இளைஞர்கள் ஏங்கித்தவித்தார்கள்.

காதலனுக்கு காதலியாக நடித்த நக்மாவுக்கு அடுத்த ஆண்டே அடித்தது லக்கி சான்ஸ் – ரஜினி பட ஹீரோயின். “நீ நடந்தால் நடையழகு... நீ சிரித்தால் சிரிப்பழகு... நீ பேசும் தமிழழகு...” போன்ற வரலாற்று சிறப்புமிக்க வரிகளை வைரமுத்து ரஜினிகாந்துக்காகத்தான் எழுதினார் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஃபிகர் பிகருதான் நீ சூப்பர் பிகருதான் என்று சூப்பர் ஸ்டாரே வாய்ஸ் கொடுத்தார். தன்னுடைய பால் வெள்ளை நிறத்தால் கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டு பெண்கள் தங்களுக்கு அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று விரும்புவார்கள். அதேபோல் தான் இளைஞர்கள் பலர் தங்களுக்கு நக்மா மாதிரி மனைவி கிடைக்க வேண்டுமென்று கனவு கண்டார்கள். காதலன் படத்தின் மூலம் எப்படி இளைஞர்களை ஈர்த்தாரோ அதேபோல பாட்ஷா படத்தின் மூலம் நடுத்தர வயதுக்காரர்களையும் கவர்ந்திழுத்தார். பாட்ஷா படம் வந்த புதிதில் மனைவிக்கு தெரியாமல் பல கணவர்கள் தங்கள் பர்ஸில் நக்மா போட்டோவை வைத்திருந்தார்கள்.

காதலன், பாட்ஷா என்று இரண்டு புயல்கள் தமிழகத்தின் கரையை கடந்தபின் மேட்டுக்குடி என்ற படத்தில் யக்கா மக இந்துவாக தோன்றினார் நக்மா. இந்தப்படத்தில் தலைவர் கவுண்டமணிக்கு இணையாக நக்மா ஆடிய துடிப்பான நடனம் இதோ உங்கள் பார்வைக்காக...

காலப்போக்கில் நன்றி மறந்த தமிழ் ரசிகர்கள் நக்மாவையும் மறக்கத் தொடங்கினார்கள், நக்மாவும் சில மொக்கைப் படங்களில் நடித்து தன்னுடைய இமேஜை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார். சரத்குமார், சத்யராஜ், பிரபு போன்ற சீனியர் நடிகர்களுடன் ஜோடி சேரும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இருபத்தி ஓறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நக்மா தீனா படத்தில் குத்தாட்டம் போட்டு ஒரு ரீ-என்ட்ரி கொடுத்தார். சிட்டிசன் படத்தில் நக்மா துப்பாக்கியை மேலே உயர்த்திக் காட்டியபோது ரசிகர்கள் மனதில் புல்லட்கள் பாய்ந்தன. 

இதற்குள்ளாக நக்மாவின் தங்கை ஜோதிகா என்ட்ரி கொடுக்க, நக்மா போஜ்புரி படங்களில் நடிக்க பறந்துவிட்டார். போஜ்புரி படங்களில் பிரபலமான ரவி கிஷனுடன் இவர் நடித்த படங்கள் செம ஹாட். நடிகைகள் என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இருக்காது. நக்மா மட்டும் விதிவிலக்கா என்ன...? சரத்குமாரில் ஆரம்பித்து அசாருதீன், கங்குலி, தாவூத் இப்ராஹீம் என்று தேசிய அளவில் ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.

மதநல்லிணக்க மங்கை:
நக்மா பற்றி பலரும் அறிந்திடாத தகவல். நக்மாவின் தந்தை ஒரு ஹிந்து. தாய் ஒரு இஸ்லாமியர். நக்மா பிறந்தது கிறிஸ்மஸ் தினத்தில். கிறிஸ்மஸ் அன்று பிறந்ததாலோ என்னவோ நக்மா நாளடைவில் கிறிஸ்தவ மதத்தில் இணைந்து மத போதகராகிவிட்டார். சமீபத்தில் அவருடைய ஜெபக்கூட்ட வீடியோ ஒன்றை பார்த்து நக்மா நினைவுகள் மலர்ந்து இந்த அரிய பெரும் பதிவினை எழுதி அதை நக்மாவிற்காக சமர்ப்பிக்கிறேன்.

இந்த வீடியோவில் சகோதரி நக்மா என்று ஸ்லைடு போட்டவனைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

54 comments:

நிரூபன் said...

இனிய மிட் நைட் வணக்கம் மச்சி,

என்ன இந்த நேரத்தில?

பதிவை காலையில் படிக்கிறேன்.

Philosophy Prabhakaran said...

இந்த இடுகையை எழுத எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த "சிம்ரனோமேனியா" புகழ் அண்ணன் பன்னிக்குட்டி அவர்களை வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்...

Unknown said...

மேடத்தோட சேவை தொடர வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகிய படங்க்ளுடன் அருமையான பயனுள்ள முக்கியத்தகவல்கள். பார்த்த படித்த யாருமே இரவு தூங்கியிருக்க மாட்டார்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

தமிழ்மணத்தில் என்னை நட்சத்திரப்பதிவராக இந்த வாரம் 7th to 13th தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

என் வலைப்பூவில் இந்த வாரம் மட்டும் தினமும் 4 பதிவுகள் வெளிவரும்.

காலை 11 மணி, பிற்பகல் 2 மணி, 4 மணி மற்றும் 6 மணி.

இன்று போலவே தினமும் வருகை தந்து உற்சாகப்படுத்த வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று வருகை தந்து பின்னூட்டம் கொடுத்து, தமிழ்மணத்தில் வோட் அளித்துச் சென்றதற்கு என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

gopu1949.blogspot.com

வை.கோபாலகிருஷ்ணன் said...

உடான்ஸ், தமிழ்மணம் மற்றும் இண்ட்லியில் நானும் நக்மாவுக்கு வோட் போட்டு விட்டேன். vgk

ரைட்டர் நட்சத்திரா said...

நக்மா வ ?

நாய் நக்ஸ் said...

ஹி.. ஹி...

சதீஷ் மாஸ் said...

//பாட்ஷா படம் வந்த புதிதில் மனைவிக்கு தெரியாமல் பல கணவர்கள் தங்கள் பர்ஸில் நக்மா போட்டோவை வைத்திருந்தார்கள்.//

இது புதுசா இருக்கே... தகவல் விக்கிபீடியால இருந்து எடுத்திங்களோ..

பால கணேஷ் said...

நக்மாயணம் பிரமாதம் நண்பா...

வெளங்காதவன்™ said...

:)

Unknown said...

நக்மா பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்..

கும்மாச்சி said...

நக்மா பற்றி இவ்வளவு தகவல்கள் கொடுத்து அசத்திவிட்டீர்கள்.

CS. Mohan Kumar said...

காமெடியா ஆரம்பிச்சு சீரியஸா முடிச்சிட்டீங்களே !!

பாலா said...

காலாகாலத்துல கல்யாணம் நடக்கலைன்னா இப்படித்தான் அர்த்த ராத்திரியில் எழுந்து ஆன்டி கட்டுரைகள் எழுத தோன்றும்.

MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப ஃபீலிங்கா இருக்கீங்க போல ஹா ஹா ஹா ஹா....!!!

கோகுல் said...

வாழ்க நக்மா!வளர்க அவரது பணி!

சி.பி.செந்தில்குமார் said...

>>அதேபோல் தான் இளைஞர்கள் பலர் தங்களுக்கு நக்மா மாதிரி மனைவி கிடைக்க வேண்டுமென்று கனவு கண்டார்கள்.

yயோவ், இதெல்லாம் ரொம்ப ஓவரு..


நக்மாவை சகோதரி என சொல்லிய ஆளை தேடிட்டிருக்கேன்.. ஹா ஹா செம பன்ச்

கார்த்தி said...

சுப்பர் பதிவு சார்! அந்தக்காலத்தில எங்களுக்கும் பிடிச்ச நடிகையா இருந்தவர். புதிய தகவல்களும் அறிய தந்தமைக்கு நன்றிகள்!

Unknown said...

\\\\\\\\\\\\\\\\\\\\ பாட்ஷா படம் வந்த புதிதில் மனைவிக்கு தெரியாமல் பல கணவர்கள் தங்கள் பர்ஸில் நக்மா போட்டோவை வைத்திருந்தார்கள்.\\\\\\

அப்படியா?

Unknown said...

பதிவு செம்ம கலக்கல் பாஸ்!
அறியாத வயசுல ஜோள்ளுவிட்டுட்டே பார்த்தது..ம்ம்ம்...அதொரு காலம்!

என்ன கொடுமை பாஸ்..சகோதரி ஆகிட்டாய்ங்களா?

Unknown said...

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்! உங்க தளம் கூகிள் க்ரோம்ல ஓப்பன் ஆகுதில்ல! அதனாலதான் தொடர்ச்சியா வரமுடியல! உங்களுக்காக இப்ப நெருப்புநரிய யூஸ் பண்ணி வர வேண்டியிருக்கு ஏன் பாஸ் இப்பிடி?

Nirosh said...

வசனங்கள் கையாண்ட விதம அருமை வாழ்த்துக்கள்..!

'பரிவை' சே.குமார் said...

"நக்மாயிசம்...!" பிரமாதம்

அனுஷ்யா said...

# நக்மா துப்பாக்கியை மேலே உயர்த்திக் காட்டியபோது ரசிகர்கள் மனதில் புல்லட்கள் பாய்ந்தன. #

பாயின்ட்ட புடிச்சுட்டீங்க போங்க...:)

N.H. Narasimma Prasad said...

//ஆனால் அதைத்தான் விரும்பியதா இந்த சமுதாயம்...??? படுக்கையில் பாலகிருஷ்ணாவோடு புரளவிட்டார்கள், மழையில் நாகார்ஜுனுடன் நனையவிட்டார்கள்//

இதென்ன, 'பராசக்தி' சிவாஜி படம் பார்த்த தாக்கமா?

எனக்கு மிகவும் பிடித்த நடிகை இவர். இவரை ஜோதிகவோடு ஒப்பிடும்போது ஜோதிகா ஒன்று அவ்வளவு அழகில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

Prem S said...

எனக்கு ஜோதிகாயிசம் தான் பிடிக்கும் பாஸ்

Anonymous said...

நக்மா பக்தில ...நீங்களும் ஆசிரமம் கட்டிருவீங்க போல...

இளம் பரிதி said...

epdinga ipdiyellam.....?

உண்மைத்தமிழன் said...

நக்மாவின் அப்பாவும், ஜோதிகா மற்றும் ரோஷிணியின் அப்பாவும் வேறு வேறு நபர்கள் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்..!

நக்மா தன்னைப் பெற்ற அப்பாவின் மூலமாக, இப்போது 400 கோடிக்கும் மேலான சொத்துக்களில் பங்குதாரராக இருக்கிறார்..!

Anonymous said...

அண்ணே இந்த ஆன்டிய ஞாபகபடுத்துனதுக்கு நன்றி....பாட்ஷா வந்த டைம்ல நீங்களும் போட்டோவ பர்ஸ்ல வச்சிருந்தீங்களாமே அண்ணே...

Thooral said...

//முக்காபுலா பாடலில் Cow Girl-ஆக தோன்றிய நக்மா நம் பெற்றோருக்கு மாட்டுப்பெண்ணாக வரமாட்டாரா என்று இளைஞர்கள் ஏங்கித்தவித்தார்கள்//
super..

Philosophy Prabhakaran said...

@ சதீஷ் மாஸ்
// இது புதுசா இருக்கே... தகவல் விக்கிபீடியால இருந்து எடுத்திங்களோ.. //

எனக்கு தெரிஞ்சு இந்த மாதிரி ஒருத்தர் வச்சிருந்து அவர் மனைவி கோபித்துக்கொண்டார்... நக்மா போட்டோவைத்தான்....

Philosophy Prabhakaran said...

@ கணேஷ்
// நக்மாயணம் //

இதையே தலைப்பா வச்சிருக்கலாமே... ச்சே மிஸ் பண்ணிட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ பாலா
// காலாகாலத்துல கல்யாணம் நடக்கலைன்னா //

இன்னும் நாள் இருக்கு... அதுக்குள்ளயா...

// இப்படித்தான் அர்த்த ராத்திரியில் எழுந்து ஆன்டி கட்டுரைகள் எழுத தோன்றும். //

ஹி ஹி இந்த கட்டுரையை எழுதி ஒரு மாசத்துக்கு மேல ஆகுது... Draftல இருந்துச்சு...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// yயோவ், இதெல்லாம் ரொம்ப ஓவரு.. //

நான் உங்களைச் சொல்லலை சிபி... இளைஞர்களை சொன்னேன்...

Philosophy Prabhakaran said...

@ ஜீ...
// அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்! உங்க தளம் கூகிள் க்ரோம்ல ஓப்பன் ஆகுதில்ல! அதனாலதான் தொடர்ச்சியா வரமுடியல! உங்களுக்காக இப்ப நெருப்புநரிய யூஸ் பண்ணி வர வேண்டியிருக்கு ஏன் பாஸ் இப்பிடி? //

சரி செய்கிறேன்... தகவல் தந்தமைக்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// பாயின்ட்ட புடிச்சுட்டீங்க போங்க...:) //

அய்யய்யோ நான் எதையும் புடிக்கலைங்க... எனக்கு எதுவும் தெரியாதுங்க...

Philosophy Prabhakaran said...

@ N.H.பிரசாத்
// எனக்கு மிகவும் பிடித்த நடிகை இவர். இவரை ஜோதிகவோடு ஒப்பிடும்போது ஜோதிகா ஒன்று அவ்வளவு அழகில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. //

பட் திறமையில் ஜோதிகா முன்னிலை வகிக்கிறாரே....

Philosophy Prabhakaran said...

@ உண்மைத்தமிழன்
// நக்மாவின் அப்பாவும், ஜோதிகா மற்றும் ரோஷிணியின் அப்பாவும் வேறு வேறு நபர்கள் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்..!

நக்மா தன்னைப் பெற்ற அப்பாவின் மூலமாக, இப்போது 400 கோடிக்கும் மேலான சொத்துக்களில் பங்குதாரராக இருக்கிறார்..! //

அண்ணே நீங்க ஒரு நடமாடும் என்சைக்கிளோபீடியான்னு நிரூபிச்சிட்டீங்க... அவங்க குடும்பத்தை பத்தி ரொம்ப டீப்பா போக வேண்டாம்ன்னு விட்டுட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ மொக்கராசு மாமா
// அண்ணே இந்த ஆன்டிய ஞாபகபடுத்துனதுக்கு நன்றி....பாட்ஷா வந்த டைம்ல நீங்களும் போட்டோவ பர்ஸ்ல வச்சிருந்தீங்களாமே அண்ணே... //

பாட்ஷா வந்தப்ப எனக்கு ஏழு வயசு...!

Anonymous said...

ஆஹா அருமை..ஓஹோ பெருமை. கலக்கல் நண்பா.

நிரூபன் said...

நல்லதோர் அலசல். நக்மாவின் திரைத் துறை வாழ்வு தொடக்கம் அவரின் ஆன்மீக வாழ்வு வரை அருமையாக அலசியிருக்கிறீங்க.

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

Priya said...

//பாட்ஷா படம் வந்த புதிதில் மனைவிக்கு தெரியாமல் பல கணவர்கள் தங்கள் பர்ஸில் நக்மா போட்டோவை வைத்திருந்தார்கள்.//.... இப்படியெல்லாம் கூட நடந்திருக்கா...:)

Anonymous said...

thanks.

bye rajnagma

http://www.youtube.com/user/rajnagma

http://www.facebook.com/raj.nagma

pls visit

Sharmmi Jeganmogan said...

என்னை பள்ளி நாட்களில் நக்மா மாதிரி இருக்கிறேன் என்று சொல்லித் தான் போற்றுவார்கள். அந்தப் பழைய ஞாபகத்தைக் கிளப்பிவிட்டுட்டீங்களே Philo.
சகோதரி நக்மா என்று போட்டவன் கிடைத்தால் நான் வாழ்த்துச் சொன்னதாக சொல்லி விட்டு பின் உங்கள் வேலையைப் பாருங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் என்னய்யா இது? நக்மாவ பத்தியெல்லாம் எழுதுற அளவுக்குன்னா....... டூ பை ஃபோர், ஃபோர் பை டூ, த்ரீ பை சிக்ஸ்.... டோட்டலா எப்படியும் நாப்பது வயசாகி இருக்கனுமே........... ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Philosophy Prabhakaran said...
இந்த இடுகையை எழுத எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த "சிம்ரனோமேனியா" புகழ் அண்ணன் பன்னிக்குட்டி அவர்களை வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்...////

இதுல இது வேறயா.....? (சிம்ரன் ரேஞ்சு எங்கே... நக்மா எங்கே? கம்பேரிசன் பண்றதுக்கு ஒரு அளவு வேணாம்? பிச்சிபுடுவேன் பிச்சி......!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
மேடத்தோட சேவை தொடர வாழ்த்துக்கள்!////

கஸ்டமர்?

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// யோவ் என்னய்யா இது? நக்மாவ பத்தியெல்லாம் எழுதுற அளவுக்குன்னா....... டூ பை ஃபோர், ஃபோர் பை டூ, த்ரீ பை சிக்ஸ்.... டோட்டலா எப்படியும் நாப்பது வயசாகி இருக்கனுமே........... ? //

அப்ப காந்தியை பத்தி எழுதனும்ன்னு 90 வயசு ஆகியிருக்கனுமா...? அய்யா போதி தருமர் பத்தி எழுதனும்ன்னா 1500 வயசு ஆகியிருக்கனுமா....? என்னங்கய்யா உங்க லாஜிக்...

// சிம்ரன் ரேஞ்சு எங்கே... நக்மா எங்கே? கம்பேரிசன் பண்றதுக்கு ஒரு அளவு வேணாம்? பிச்சிபுடுவேன் பிச்சி......! //

புரியல... யார் பெரிய ரேஞ்சுன்னு சொல்றீங்க... சிம்ரனா...? நக்மாவா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அப்ப காந்தியை பத்தி எழுதனும்ன்னு 90 வயசு ஆகியிருக்கனுமா...? அய்யா போதி தருமர் பத்தி எழுதனும்ன்னா 1500 வயசு ஆகியிருக்கனுமா....? என்னங்கய்யா உங்க லாஜிக்...////

நக்குமாவ பார்த்து ஜொள்ளுவிட்டத பத்தி எழுதிப்புட்டு இப்ப பேச்ச பாருங்கய்யா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////
புரியல... யார் பெரிய ரேஞ்சுன்னு சொல்றீங்க... சிம்ரனா...? நக்மாவா...?//////

வாயக் கழுவுங்கய்யா.... இப்படியெல்லாம் கேட்கலாமா? இதெல்லாம் அடுக்குமா? சிம்ரனுக்கு ஈடு இணை ஏது?

முத்தரசு said...

சில தகவல்கள் எனக்கு புதுசு - நன்றி

//இந்த வீடியோவில் சகோதரி நக்மா என்று ஸ்லைடு போட்டவனைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன்//

ஏன் ஏன்? அந்த அளவுக்கு போகனுமா?
விடுங்க விடுங்க

Kite said...

குஷ்பூவுக்கு அடுத்து கொஞ்ச நாள் நாள் உச்சத்தில் இருந்தார். தமிழை விட தெலுங்கில் நிறைய படங்கள் நடித்துள்ளார். ரம்பா வந்தவுடன் தமிழில் இவருடைய இடம் பறிபோனது.

சிறந்த நடிகை என்று சொல்ல முடியாது. பாட்ஷாவில் நீச்சலுடை, குளியல் காட்சிகளில் நடித்ததுதான் இன்று வரை நினைவில் நிற்கிறது.