4 March 2012

அரவான் – அந்த பலியாளே நீங்கதான் சார்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சயின்ஸ்-ஃபிக்ஷன், பீரியட், ஃபேண்டஸி என்று ரசிகர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும் படங்களின் மீதான ஆர்வம், இயக்குனர் வசந்த பாலனின் மீதுகொண்ட அபார நம்பிக்கை, தங்கத்தமிழச்சி தன்ஷிகா ஆகியவை என்னை அரவான் படத்திற்காக காத்திருக்க வைத்தது. அதுவும் ஒன்றரை ஆண்டுகள். யாருடைய பதிவையோ, ஏன் பதிவின் தலைப்பையோ படித்தால்கூட படத்தின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்று இரண்டு நாட்களாக இணையம் பக்கமே வரவில்லை. பல வருடங்கள் கழித்து, (அநேகமாக அமைதிப்படைக்கு பிறகு) நானும் என் தந்தையாரும் ஒன்றாக சினிமா பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

கதை படிக்க விரும்பாதவர்கள் இந்தப்பத்தியை ஸ்கிப் செய்துவிடலாம்
வேம்பூர் என்ற கிராமத்தில் களவுத்தொழில் செய்துவருகிறார்கள் பசுபதி & கோ. அச்சமயம் ராணியின் வைர அட்டிகையை யாரோ வேம்பூரின் பெயரைச் சொல்லி களவாடிவிடுகிறார்கள். பசுபதி தனது சாமர்த்தியத்தால் அந்த களவாணிப்பய ஆதி என்று கண்டுபிடித்தாலும், அவரது களவுத்திறமையை பார்த்து தன்னோடு கூட்டு சேர்த்துக்கொள்கிறார். இருப்பினும் ஆதியின் பர்சனல் விஷயங்கள் பசுபதிக்கும் வேம்பூர் மக்களுக்கும் மர்மமாகவே இருக்கின்றன. வேம்பூர் பசுபதி, சின்னவீரன்பட்டி ஆதி, மாத்தூர் கரிகாலன் என மும்முனை போட்டியாக இரண்டாம் பாதி விரிகிறது. படத்தில் பலியாள் ஹீரோ ஆதிதான் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது அந்த பலியாளே ரசிகர்கள் தான் என்று ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர். மற்றவை வெண்திரையில்...!

ஆதிக்கு மிருகம், ஈரம் படங்களுக்குப்பின் இது ஒரு குறிப்பிடத்தகுந்த படமாக நிச்சயம் அமையும். பொதுவாக மற்ற மாஸ் ஹீரோக்கள் நான் மூணு மாசமா சாப்பிடல, ஆறு மாசமா பல்லு விளக்கல என்று சீன் போட்டுவிட்டு செய்யும் பல விஷயங்களையும் ஆர்ப்பாட்டமில்லாமல் செய்திருக்கிறார். தங்கத்தமிழச்சி தன்ஷிகாவை இரண்டாம் பாதியில்தான் காட்டவே செய்கிறார்கள். அவரும் இரண்டு கில்மா பாடல்கள், இரண்டு அழுகாச்சி காட்சிகளோடு சரி. (நீ அழுவுறத பாக்குறதுக்கா தாயி நான் தியேட்டருக்கு வந்தேன்). இரண்டாம் நாயகி அர்ச்சனா கவி, ஹீரோவின் வீரத்தை பார்த்து வழியும் வழக்கமான கேரக்டர்தான். பசுபதி படத்திற்கு இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கரிகாலன் – யாருய்யா நீயி...? அந்த சிகையலங்காரம், முறைப்பு, விறைப்பு, தோரணை என நடிப்பில் மேன் ஆஃப் தி மூவி அவர்தான். சிங்கம்புலி சூரமொக்கை. நிஜவாழ்க்கையில் யாரும் முழுநேர காமெடியன்களாக இருப்பதில்லை. திருமுருகன், டி.கே.கலா மற்றும் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. சிறிய வேடங்களில் ரதி நிர்வேதம் புகழ் ஸ்வேதா மேனன், பரத், அஞ்சலி, சமையல் வல்லுநர் தாமு ஆகியோர் தோன்றுகின்றனர்.

படத்தின் வசனத்தில் எளிதான புரிதலுக்காக வட்டார வழக்கை தவிர்த்திருக்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. வசனங்கள் பருத்திவீரன், சுப்ரமணியபுரம் படங்கள் போல தானே இருக்கின்றன. அதிலும் வசனங்களில் மனதில் நச்சென பதியக்கூடியவை எதுவும் இல்லை. இசையை பொறுத்தவரைக்கும் ஓகே ரகம். நிலா... நிலா... மற்றும் உன்ன கொல்ல போறேன்... பாடல்களின் இசையும் அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. இப்படியொரு படத்திற்கு யுவன் இசை அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆரம்பத்தில் பசுபதியை டாப் ஆங்கிளில் காட்டுவதில் இருந்தே ஒளிப்பதிவின் ஆளுமை தொடங்கிவிடுகிறது. ஹீரோ புகை கூண்டு வழியாக இறங்குவது, தன்ஷிகாவுடனான ரொமான்ஸ் பாடல்களை உதாரணம் காட்டலாம். மிருகங்களை வதைக்கக்கூடாதென கருதியோ என்னவோ மாடு சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும்படி இல்லை. அதே போல டைட்டில் போடுவதில் கூட கிராபிக்ஸ் கலைஞர்கள் பெரிய அளவில் சிரத்தை எடுத்ததாக தெரியவில்லை.

வசந்தபாலன் போன்ற தேர்ந்த படைப்பாளிகள் தங்களது ஆசைக்காகவும், மனதிருப்திக்காகவும் இப்படி ஒன்றரை ஆண்டு உழைப்பையும், தயாரிப்பாளரின் பணத்தையும் வீணடிப்பதும், அப்படி அனாயச உழைப்பில் வெளிவரும் படம் வந்த வேகத்தில் முடங்கிப்போவதும் அத்தகைய இயக்குனர்களை எளிதாக திசை திருப்பும் அபாயம் உண்டு. உதாரணத்திற்கு, இயக்குனர் சற்குணம் சண்டித்தனம் செய்யும் ஹீரோ பாத்திரப்படைப்போடு எடுத்த களவாணி ஹிட். கல்வியின் அவசியம் சொல்லி எடுக்கப்பட்ட வாகை சூட வா அட்டர் ஃபிளாப். இனிமேல் அவர் வாகை சூட வா போன்ற படங்களை எடுப்பாரா...? அதனால் அரவான் போன்ற வித்தியாசமான “முயற்சிகளை” அரவணைப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை.

காவல் கோட்டம் படித்துவிட்டு அரவான் பார்ப்பவர்களின் உணர்வுகள் வேறுவிதமாக இருக்கக்கூடும். அதை வாசிக்காமல் படம் பார்ப்பவர்களுக்கு நாவலை படிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுவது உண்மை. ஒருசில விஷயங்களை திரையில் பார்ப்பதைக் காட்டிலும் நாவல்களில் அதுவும் பீரியட் நாவலில் அதன் வர்ணனையை படிப்பதற்கு அட்டகாசமாக இருக்கும். அது போல நிறைய காட்சிகள், உதாரணத்திற்கு முதல் காட்சியில் பசுபதியும் கூட்டாளிகளும் களவாடுவதைப் பற்றிய வர்ணனை எப்படி இருக்குமென நினைக்கும்போதே பேரார்வம் தொற்றிக்கொள்கிறது. புத்தகத்தின் சைஸ்தான் கொஞ்சம் பயம் காட்டுகிறது.

படத்தின் திரைக்கதை மிதவேகமே, இருப்பினும் ம்ம்ம் அப்புறம், ம்ம்ம் அப்புறம் என்று ஆர்வத்தோடு கதை கேட்க வைக்கிறது. என்ன ஒன்று படம் முடிந்தபிறகும் ம்ம்ம் அப்புறம் தொடர்கிறது. படத்தில் ஒரு முடிவு இருந்ததாகவே தோன்றவில்லை. கரெக்ட், இது நாவலின் ஒரு பகுதி மட்டுமே. படம் முடிந்ததும் இதனால் தாங்கள் கூற விரும்புவது என்ன என்று இயக்குனரிடம் கேட்க நினைக்கும் தருவாயில் மரண தண்டனை குறித்த ஸ்லைடு காட்டுகிறார்கள். இதுக்கா பாஸ் இவ்வளவு கஷ்டப்பட்டீங்க...!

தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறையை உலகிற்கு படம் பிடித்து காட்டியமைக்காக அரவானை உலக சினிமாவாக கொண்டாடலாம். அவார்டுகளை வாங்கிக் குவிக்கலாம். ஆனால் ஒரு கமர்ஷியல் படமாக அரவான் ஒரு படுமொக்கையான தோல்விப்படம் என்பதில் ஐயமில்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

49 comments:

ஜேகே said...

தலைவரே .. பொறுப்போடும் அதேநேரம் நீங்க என்னத்த உணர்ந்தீர்களோ அதை அப்படியே உண்மையாவும் குடுத்திருக்கிறீங்க .. நல்ல விமர்சனம்

Anonymous said...

unmaiyai pagirnthamaikku mikka nanri

Unknown said...

எந்த பில்டப்மும் இல்லாமல் எளிமையான விமர்சனம்.....
பெரியார்,பாரதியார் படங்களும்...கமர்சியலா மொக்கை படம்தான் ஆனா மனசுல இருக்கே!

ராஜ் said...

பிரபா,
மிகவும் அழமான அலசல். (எவ்வளவு ஆழம்ன்னு கேட்க கூடாது :)
உங்க பதிவ படிச்சா படம் கமர்ஷியல் தோல்வி மாதிரி தெரியுது.
நான் இன்னும் படம் பார்க்கல. அதனால ரெண்டாவது பாரா படிக்கல. மிச்ச பதிவ படிச்சதுல
ஆபரேஷன்கள் சக்செஸ் பேஷன்ட் செத்துட்டார் அப்ப்டின்குற மாதிரி இருக்கு.

Anonymous said...

சில குறைகைளை தாண்டி படம் நல்லாதான்யா இருக்கு. இறுதியில் மரண தண்டனையை ஒழிப்போம் ஸ்லைட்? அஜ்மல் கசாபுக்கு வசந்தபாலன்தான் பிரியாணி ஸ்பான்சர் செய்யப்போறார் போல!!

Anonymous said...

நடிப்பு, தோற்றம் ரெண்டுலயுமே வில்லன் மத்தவங்களை விட பெட்டர்தான்.

Anonymous said...

//சிறிய வேடங்களில் ரதி நிர்வேதம் புகழ் ஸ்வேதா மேனன்//

படுவா..எல்லா பொண்ணுங்க பேரையும் தெரிஞ்சி வச்சிருக்கிற புண்ணியவானே. நீவிர் வாழ்க!!

ஷைலஜா said...

நியாயமான விமர்சனம்

ஹாலிவுட்ரசிகன் said...

கமர்ஷியல் வெற்றித் தோல்விகளைப் பற்றி நான் எப்பவும் கவலைப்பட்டதில்லை ... தமிழ் சினிமாவை பொறுத்தவரை.

எப்படியும் டிவிடி தான் நமக்கு. அதனால் பார்க்கிற படம் கொஞ்சம் வித்தியாசமா, இன்ட்ரஸ்டிங்கா இருந்தா போதும். சீக்கிரமே பார்க்கிறேன்.

முத்தரசு said...

சரி....பார்த்துடுவோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////யாருடைய பதிவையோ, ஏன் பதிவின் தலைப்பையோ படித்தால்கூட படத்தின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்று இரண்டு நாட்களாக இணையம் பக்கமே வரவில்லை.//////

அடேங்கப்பா........ விருந்துக்கு பட்டினி கெடந்து போற மாதிரியில்ல இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பொதுவாக மற்ற மாஸ் ஹீரோக்கள் நான் மூணு மாசமா சாப்பிடல, ஆறு மாசமா பல்லு விளக்கல என்று சீன் போட்டுவிட்டு /////

அதானே, விக்ரம் ஓவரா போய், இப்போ ஒழுங்கா நடிச்சிட்டு இருந்ததையும் கெடுத்துக்கிட்டாரே அதைத்தானே சொல்றீங்க? பீமா கந்தசாமின்னு கேவலமான மொக்கைகள்....... அதுக்கு ரெண்டுவருசம் பில்டப் கொடுத்து வேற எடுக்குறானுங்க......

Try 🆕 said...

அருமையான விமர்சனம்.நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////(நீ அழுவுறத பாக்குறதுக்கா தாயி நான் தியேட்டருக்கு வந்தேன்)//////

சரி சரி கண்ணத் தொடச்சிக்குங்க... அடுத்து பேரரசு படத்துல நடிச்சிட்டா கணக்கு சரியாகிடும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆனால் ஒரு கமர்ஷியல் படமாக அரவான் ஒரு படுமொக்கையான தோல்விப்படம் என்பதில் ஐயமில்லை.//////

இந்த மாதிரி படங்கள் போட்ட காசை எடுத்தாலே வெற்றிதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//http://www.philosophyprabhakaran.com///

அடங்கொன்னியா.....

தினேஷ்குமார் said...

"களவுல இருந்துதான் காவல் பிறக்கும்"
இந்த வரிகள் டச் .... ஆனா பல உண்மைகள் மறைந்தும் கிடக்கு பிரபா

CS. Mohan Kumar said...

//சிவகுமார் ! said...
சில குறைகைளை தாண்டி படம் நல்லாதான்யா இருக்கு.//

I too felt the same thing.

You have also given positive review only for most part. We cannot judge its success now. Let us wait and see

Philosophy Prabhakaran said...

@ ஜேகே
// தலைவரே .. பொறுப்போடும் அதேநேரம் நீங்க என்னத்த உணர்ந்தீர்களோ அதை அப்படியே உண்மையாவும் குடுத்திருக்கிறீங்க .. நல்ல விமர்சனம் //

நன்றி ஜேகே...

Philosophy Prabhakaran said...

@ கலை
// unmaiyai pagirnthamaikku mikka nanri //

நன்றி கலை...

Philosophy Prabhakaran said...

@ வீடு K.S.சுரேஸ்குமார்
// எந்த பில்டப்மும் இல்லாமல் எளிமையான விமர்சனம்.....
பெரியார்,பாரதியார் படங்களும்...கமர்சியலா மொக்கை படம்தான் ஆனா மனசுல இருக்கே! //

அந்தமாதிரியான படங்கள் மொக்கை, சூப்பர் என்பதை தாண்டி உண்மையான வரலாற்றைச் சொன்னாலே போதும்... அந்த வகையில் பெரியார் படம் பயங்கர சொதப்பல்....

Philosophy Prabhakaran said...

@ ராஜ்
// பிரபா,
மிகவும் அழமான அலசல். (எவ்வளவு ஆழம்ன்னு கேட்க கூடாது :)
உங்க பதிவ படிச்சா படம் கமர்ஷியல் தோல்வி மாதிரி தெரியுது.
நான் இன்னும் படம் பார்க்கல. அதனால ரெண்டாவது பாரா படிக்கல. மிச்ச பதிவ படிச்சதுல
ஆபரேஷன்கள் சக்செஸ் பேஷன்ட் செத்துட்டார் அப்ப்டின்குற மாதிரி இருக்கு. //

நன்றி ராஜ்...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// சில குறைகைளை தாண்டி படம் நல்லாதான்யா இருக்கு. இறுதியில் மரண தண்டனையை ஒழிப்போம் ஸ்லைட்? அஜ்மல் கசாபுக்கு வசந்தபாலன்தான் பிரியாணி ஸ்பான்சர் செய்யப்போறார் போல!! //

இருக்கலாம் ஆனால் பெரும்பான்மை ரசிகர்கள் மனதைக் கவரும் வாய்ப்புகள் குறைவு...

// நடிப்பு, தோற்றம் ரெண்டுலயுமே வில்லன் மத்தவங்களை விட பெட்டர்தான். //

ஆமாம்...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// படுவா..எல்லா பொண்ணுங்க பேரையும் தெரிஞ்சி வச்சிருக்கிற புண்ணியவானே. நீவிர் வாழ்க!! //

இதுக்கேவா... அந்த விஷயத்தில் நானொரு தகவல் களஞ்சியம்... எப்படியாவது கூகுள் செய்து கண்டுபிடித்துவிடுவேன்...

Philosophy Prabhakaran said...

@ ஷைலஜா
// நியாயமான விமர்சனம் //

நன்றி மேடம்...

Philosophy Prabhakaran said...

@ ஹாலிவுட்ரசிகன்
// எப்படியும் டிவிடி தான் நமக்கு //

என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க...

// அதனால் பார்க்கிற படம் கொஞ்சம் வித்தியாசமா, இன்ட்ரஸ்டிங்கா இருந்தா போதும். சீக்கிரமே பார்க்கிறேன். //

ஆனா படம் இன்ட்ரஸ்டிங்கா இல்லையே...

Philosophy Prabhakaran said...

@ மனசாட்சி
// சரி....பார்த்துடுவோம் //

பாருங்க மனசாட்சி...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அடேங்கப்பா........ விருந்துக்கு பட்டினி கெடந்து போற மாதிரியில்ல இருக்கு? //

ஆமா தல... சிலருடைய பதிவை படித்தால் பயங்கரமா மூடு ஸ்பாயில் ஆகுது...

// அதானே, விக்ரம் ஓவரா போய், இப்போ ஒழுங்கா நடிச்சிட்டு இருந்ததையும் கெடுத்துக்கிட்டாரே அதைத்தானே சொல்றீங்க? பீமா கந்தசாமின்னு கேவலமான மொக்கைகள்....... அதுக்கு ரெண்டுவருசம் பில்டப் கொடுத்து வேற எடுக்குறானுங்க...... //

ஆமாம் தல... எல்லா படத்துக்கும் ரெண்டு வருஷம் டைம் எடுத்தே அந்த ஆள் காணாம போயிட்டார்... பேசாம கலைஞர் டிவியில கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடத்தலாம்...

// சரி சரி கண்ணத் தொடச்சிக்குங்க... அடுத்து பேரரசு படத்துல நடிச்சிட்டா கணக்கு சரியாகிடும்.... //

பேரரசு படமா... வேணாம்யா... அந்த புள்ள பிரபல நடிகையா வரணும்ன்னு ஆசைப்படுறேன்...

// இந்த மாதிரி படங்கள் போட்ட காசை எடுத்தாலே வெற்றிதான்... //

அடுத்த சில வாரங்களுக்கு பெரிய படங்கள் எதுவும் வருவதாக அறிகுறிகள் இல்லை... அதனால் அரவான் ஓடுவதை தவிர வேறு வழியில்லை....

Philosophy Prabhakaran said...

@ ilavarasan
// அருமையான விமர்சனம்.நன்றி. //

நன்றி தல...

Philosophy Prabhakaran said...

@ தினேஷ்குமார்
// "களவுல இருந்துதான் காவல் பிறக்கும்"
இந்த வரிகள் டச் .... ஆனா பல உண்மைகள் மறைந்தும் கிடக்கு பிரபா //

ஒன்றும் விளங்கவில்லையே...

Philosophy Prabhakaran said...

@ மோகன் குமார்
// We cannot judge its success now. Let us wait and see //

தல... ப.ராவுக்கு சொன்ன அதே பதிலை ரிப்பீட் செய்கிறேன்...

அடுத்த சில வாரங்களுக்கு பெரிய படங்கள் எதுவும் வருவதாக அறிகுறிகள் இல்லை... அதனால் அரவான் ஓடுவதை தவிர வேறு வழியில்லை....

கோவை நேரம் said...

விமர்சனம் ....உங்கள் வார்த்தை பிரயோகங்கள் மட்டுமே நன்று...மற்றபடி படத்தை பற்றிய கணிப்பு தவறு என்றே நினைக்கிறேன்.இதே மாதிரி தான் உங்க மைனா பட விமர்சனத்தில் தோல்வி படம் என்று சொன்னீர்கள்.படம் பெரிய ஹிட் அப்புறம் ஒரு தேசிய விருது கூட ..உங்களுக்கு என்ன தான் பிடிக்கும்னு தெரியலையே...///(நீ அழுவுறத பாக்குறதுக்கா தாயி நான் தியேட்டருக்கு வந்தேன்)/// என்ன..வேற எதையாவது எதிர்பார்த்து போனீங்களா...அப்போ நீங்க பிட்டு படம் தான் போயிருக்கனும்...////அடுத்த சில வாரங்களுக்கு பெரிய படங்கள் எதுவும் வருவதாக அறிகுறிகள் இல்லை... அதனால் அரவான் ஓடுவதை தவிர வேறு வழியில்லை....//// எஸ்கேப்பு .....

Jayadev Das said...

\\கதை படிக்க விரும்பாதவர்கள் இந்தப்பத்தியை ஸ்கிப் செய்துவிடலாம்\\ நல்ல அரேன்ஜ்மெண்டு மாப்பு....

Jayadev Das said...

// பொதுவாக மற்ற மாஸ் ஹீரோக்கள் நான் மூணு மாசமா சாப்பிடல, ஆறு மாசமா பல்லு விளக்கல என்று சீன் போட்டுவிட்டு //ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...

Jayadev Das said...

\\(நீ அழுவுறத பாக்குறதுக்கா தாயி நான் தியேட்டருக்கு வந்தேன்).\\ பக்கத்துள் அப்பாவா வச்சிகிட்டே இப்படி ஒரு நினைப்பா...!!

Jayadev Das said...

\\ஆனால் ஒரு கமர்ஷியல் படமாக அரவான் ஒரு படுமொக்கையான தோல்விப்படம் என்பதில் ஐயமில்லை.\\ சில பதிவர்கள் படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்றாங்களே... ஆஹா... தெளிவா குழப்புறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா!!

Philosophy Prabhakaran said...

@ கோவை நேரம்
// விமர்சனம் ....உங்கள் வார்த்தை பிரயோகங்கள் மட்டுமே நன்று...மற்றபடி படத்தை பற்றிய கணிப்பு தவறு என்றே நினைக்கிறேன்.இதே மாதிரி தான் உங்க மைனா பட விமர்சனத்தில் தோல்வி படம் என்று சொன்னீர்கள்.படம் பெரிய ஹிட் அப்புறம் ஒரு தேசிய விருது கூட ..உங்களுக்கு என்ன தான் பிடிக்கும்னு தெரியலையே... //

பல கோடிகள் செலவு செய்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் கணிப்பே பல சமயங்களில் பொய்யாகும்போது என் கணிப்பு பொய்ப்பது ஆச்சர்யமில்லை...

// என்ன..வேற எதையாவது எதிர்பார்த்து போனீங்களா...அப்போ நீங்க பிட்டு படம் தான் போயிருக்கனும்... //

ஏன் பிட்டுப்படம் தவிர மற்ற படங்களில் ஹீரோயின் அழ மட்டுமே செய்வார்களா...

Jayadev Das said...

\\அடேங்கப்பா........ விருந்துக்கு பட்டினி கெடந்து போற மாதிரியில்ல இருக்கு? \\ மாப்பூ......உனக்கு சரியான ஆப்பூ............. ஹா..ஹா..ஹா..ஹா..

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// நல்ல அரேன்ஜ்மெண்டு மாப்பு.... //

நன்றி தல...

// பக்கத்துள் அப்பாவா வச்சிகிட்டே இப்படி ஒரு நினைப்பா...!! //

கொஞ்சம் சங்கடமா தான் இருந்தது...

// சில பதிவர்கள் படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்றாங்களே... ஆஹா... தெளிவா குழப்புறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா!! //

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்...

Prem S said...

பாஸ் சொந்த டொமைனுக்கு மாறிட்டீங்க போல வாழ்த்துகள்

Prem S said...

//பல வருடங்கள் கழித்து, (அநேகமாக அமைதிப்படைக்கு பிறகு) நானும் என் தந்தையாரும் ஒன்றாக சினிமா பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.//படத்தில் நெளியும் படியான காட்சிகள் ஒன்றுமில்லையோ

N.H. Narasimma Prasad said...

அருமையான விமர்சனம் பிரபா. சீக்கிரமே படத்தை டவுன்லோட் போட்டுர்றேன்.

Unknown said...

சாக்ரடீஸ் சொல்லிட்டாரு எல்லோரும் குதிங்கலேய்!...சார் நீங்க பெரிய ஜீனியஸ் போல..அதான் பலரின் கஷ்டத்த ஒரே வரில(கமர்சியல் விஷயத்தில்) மொக்கைன்னு சுலபமா சொல்லிட்டீங்க..நடத்துங்க!..இன்னும் பல கருத்துக்கள் இருந்தாலும் இங்க பகிர மனம் வரல ஹெஹெ!

Philosophy Prabhakaran said...

@ PREM.S
// பாஸ் சொந்த டொமைனுக்கு மாறிட்டீங்க போல வாழ்த்துகள் //

நன்றி ப்ரேம்...

// படத்தில் நெளியும் படியான காட்சிகள் ஒன்றுமில்லையோ //

இரண்டு பாடல்கள் மட்டும் இம்சை செய்தன...

Philosophy Prabhakaran said...

@ N.H.பிரசாத்
// அருமையான விமர்சனம் பிரபா. சீக்கிரமே படத்தை டவுன்லோட் போட்டுர்றேன். //

நன்றி பிரசாத்...

என்னுடைய பல பதிவுகளை ஒரே நாளில் படித்தீர்கள் போல... உங்கள் பின்னூட்டங்களை கண்டேன்... மறுபடியும் நன்றி தல...

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// அதான் பலரின் கஷ்டத்த ஒரே வரில(கமர்சியல் விஷயத்தில்) மொக்கைன்னு சுலபமா சொல்லிட்டீங்க.. //

பலருடைய கஷ்டமே தான்... படம் பார்த்த பலரைப் பற்றி சொன்னேன்...

// இன்னும் பல கருத்துக்கள் இருந்தாலும் இங்க பகிர மனம் வரல ஹெஹெ! //

இங்கே அந்தமாதிரியெல்லாம் வேண்டாம்... உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் உண்டு... தாராளமாக கேளுங்கள்...

அப்பாதுரை said...

காவல் கோட்ட நாவலின் திரை வடிவமா இந்தப் படம்?
சுவையான விமரிசனம். முடிவையும் சொல்லியிருக்கலாமே? படம் பார்க்கும் எண்ணமில்லாதவருக்கு உதவியாக இருந்திருக்கும். இப்ப மண்டையைக் குடையுது.

Anonymous said...

Padam super , ungalin arivu muthirchiye padam sariyillai yendru sollavaikkirathu ,

Sanjeevi said...

படம் பாக்காமலேயே விமர்சனம் எழுதின மாதிரி மேலோட்டமா இருக்கு . இதுல பாராட்டி சில பின்னூட்டங்கள் வேற.