2 May 2012

பிரபா ஒயின்ஷாப் – 02052012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெருசு
QWERTY keypad கொண்ட அலைபேசிகளின் மீது எனக்கொரு கவர்ச்சி. சீன தயாரிப்பாளர்கள் ஆயிரத்து இருநூறுக்கெல்லாம் QWERTY கொடுத்து கெடுத்தது வேறு விஷயம். Blackberry போன்ற மாடல்களை பார்த்து QWERTY பயன்படுத்துபவர்கள் “கெத்து” என்று நானாகவே முடிவு செய்துக்கொண்டேன். அதன் விளைவாக வேலை கிடைத்த மறுநாளே Nokia E5 வாங்கினேன். எல்லாம் நன்றாகவே இருந்தாலும் தமிழ் டைப்படிக்க முடியாதது பெரிய குறை. சமீபத்தில் பெரியவர் ஒருவர் (அதாவது சமுதாயத்தில் பெரிய அந்தஸ்துடன் இருப்பவர்) டச் ஸ்க்ரீன் – அண்ட்ராய்ட் போனை வைத்து, தமிழில் டைப்பிக்கொண்டு கொடுத்த அளப்பறையை பார்த்து தொலைத்தேன். விரைவில் தமிழ் Phonetic Typing வசதி கொண்ட அண்ட்ராய்ட் போனை வாங்கியே ஆகவேண்டுமென உறுதி பூண்டிருக்கிறேன்.

மசாலா கபே கேபிள் சங்கருக்கு பெப்பே என்று தலைப்பு வைத்து சந்தானம் பேசும் மொத்த வசனங்களையும் போட்டு, அஞ்சலி – ஓவியா கில்மா ஸ்டில்ஸ் அத்தனையையும் பிரசுரித்து கும்மியடிக்க நம்பர் ஒன் பதிவர் கொலவெறியோடு காத்திருக்கிறார். கலகலப்பு – ஒரு பின்நவீனத்துவ சுயசொறிதல் இலக்கியவியாதி கும்பலும் ரெடி. “இவ்வளவு அதப்பா பேசுறியே... எங்க நீ ஒரு படமெடுத்து காட்டு பார்ப்போம்...” என்று கேபிளாருக்கு சவால் விட்டவர்களே உங்களுக்கான நேரம் வந்துவிட்டது தட்டிப்பிழிய தயாராகுங்கள். ஜல்லியடித்தல், பர்சப்ஷன் போன்ற வார்த்தைகளை தவறாமல் உபயோகித்து படத்தை கண்டமாக்கிடனும் ஆமா.
- இப்படிக்கு,
மே 11 இயக்கம்.

பகோடா போச்சே...!
போலந்து நாட்டில் ஒரு மனுஷன் பல்வலின்னு ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறார். போனது வேறொருத்திக்காக கழட்டிவிட்ட முன்னாள் காதலியின் மருத்துவமனைக்கு. அங்கதான் மனுஷன் தப்பு பண்ணியிருக்கார். ஒரு ஆங்கிளில் முன்னாள் காதலனை பார்த்ததும் வெறியானவள் அவரை படுக்கவைத்து.... (ம்ஹூம் அது இல்லை) படுக்கவைத்து கன்னாபின்னாவென்று மயக்க மருந்து கொடுத்து, மொத்த முப்பத்தி இரண்டு பற்களையும் புடுங்கித்தள்ளிவிட்டார். வீட்டுக்கு வந்து கண்ணாடியை பார்த்தவர் அப்படியே ஷாக் ஆயிட்டாராம். அப்புறமென்ன மேற்படி “அதிகார துஷ்பிரயோகம்” செய்த பல் மருத்துவச்சிக்கு மூன்றாண்டு ஜெயில் தண்டனை கொடுத்திருக்கிறார்களாம். கொடுத்தா மட்டும் போன பல்லு வந்திடுமா. அதுவாவது பரவாயில்லை மனுஷன் யாருக்காக முன்னவரை கழட்டிவிட்டாரோ அந்த ஃபிகரும் பொக்கையை காரணம் காட்டி ஓடிவிட்டார். பல்லும் போச்சு பகோடாவும் போச்சு...! நல்லவேளை அவருடைய “முன்னாள்” யூராலாஜி சர்ஜியனாக இருந்திருக்கவில்லை.

தக்காளி பிதுங்கிடுத்து...!
மேல படிச்ச மேட்டராவது பரவாயில்லை, இது கீழே இருக்குற மேட்டர். சீனாவில் பெண்”மணி” ஒருவர் மளிகைக்கடை முன்பு வண்டியை பார்க் செய்திருக்கிறார். மளிகைக்கடை உரிமையாளர் பிரச்சனை செய்ய, பதிலுக்கு ஸ்கூட்டர் பெண்ணும் அவருடைய கணவனையும் அண்ணனையும் அழைத்துவந்து சண்டை போட, களேபரத்தின் இடையே ஸ்கூட்டர் பெண் கீழே கைவிட்டு மளிகைக்கடைக்காரரின் பையை நசுக்கிவிட்டாராம். நசுங்கிய பையோடு மருத்துவமனைக்கு விரைந்த போதிலும் பலனில்லாமல் உயிரிழந்துவிட்டாராம். சீனாவின் ஆண்கள் இனி அப்டோமன் கார்ட் போட்டுக்கொண்டுதான் வீட்டிலிருந்து கிளம்பவேண்டும் போல.

குஜராத் குஜிலி
லீலை படத்தில் நடித்திருக்கும் மான்சி பரேக் மான்குட்டி மாதிரி இருக்கிறார், அவரை பராக் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. அதற்காகவாவது லீலை படம் பார்க்கவேண்டுமென கிளம்பினால் நமது ஆஸ்தான திரையரங்கு ஒன்றில் கூட படம் ரிலீசாகவில்லை. உடன்வர நண்பர்களை அழைத்தாலும் படத்தின் பெயரைக் கேட்டு கசமுசா படமோ என்று வர மறுக்கிறார்கள். இப்போதைக்கு வைர விளம்பரத்தில் மாத்திரம் மான்சியை ரசிக்க முடிகிறது.

ட்வீட் எடு கொண்டாடு:
டாய்லெட் ஓட்டையில் எறியப்பட்ட ஒவ்வொரு ஆணுறையும் சுமந்து செல்வது நீக்க இயலா பல பாவங்களை..!

சோகம், கோபம் இரண்டிலும் ஒரே மாதிரி நடந்துகொள்வது பெண்களின் இயல்பு #பேசாம_மூஞ்சிய_தூக்கி _வச்சுக்கறது

சைனா புராடக்ட் தான் மட்டம். உங்க நைனா புராடக்ட் சூப்பர் என்றேன் தோழியிடம். புரியாமல் என்னடா சொல்ற என்கிறாள். #தோழிஅப்டேட்ஸ்

அம்பேத்கர் நினைவு தினம்: நாடு முழுவதும் அஞ்சலி # அந்த பொண்ணு எங்கேப்பா வந்துச்சு? எங்க ஊருக்கெல்லாம் வரல

நீ கண்ணத்தில் கை வைத்து எதையோ யோசித்துக்கொண்டிருந்ததை பார்த்ததிலிருந்து, வேறு எதையுமே யோசிப்பதில்லை நான்....!

பாணி பூரி – நம்ம ஊரு ஸ்டைல்
கப்படிச்சாலும் கப்புன்னு அடி

மிஸ் மெட்ராஸ்
தென்றல் தொலைக்காட்சியில் மட்டும் அடிக்கடி பார்க்க முடிகிறது. மிஸ் மெட்ராஸ் கஸ்தூரியின் நளினமான நடன அசைவுகளாலும் இனிமையான இசையாலும் மனதை கொள்ளை கொள்கிறது.

TAKE DIVERSION
சென்னை வாகன ஓட்டிகளின் தற்போதைய நிலைக்கு ஏற்ற சூழ்நிலை நகைச்சுவை காட்சி...!

அடுத்து வருவது: கனவுதுரத்தி குறிப்புகள் – பாகம் 03

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

37 comments:

அனுஷ்யா said...

நீண்ட நாளைக்கு பிறகு பிரபாவிடம் கொஞ்சம் அந்த பழைய தெள்ளிய நகையுணர்வு பளீச் பளீச்... வாழ்த்துக்கள் நண்பா...

அனுஷ்யா said...

android ku போட்டியா gynaecoid ன்னு எதாவது வந்தா வாங்கலாம் என்று நான் சூளுரை எடுத்துள்ளேன்.. ஹி ஹி... :)

அனுஷ்யா said...

அதே யூராலாஜி மேட்டர் பாதி படிக்கும் போது எனக்கும் தோன்றியது... இன்னா மேட்டர்ன்னா இதுக்கு யூராலாஜி தேவ இல்ல.. ஒரு supermax ப்ளேட் போதும்... ஒரு நர்ஸ் ஏமாத்த முயற்சி பண்ண காதலனுக்கு கச்சிதமா காரியத்த கட் பண்ணியிருக்கு... :)

அனுஷ்யா said...

//உடன்வர நண்பர்களை அழைத்தாலும் படத்தின் பெயரைக் கேட்டு கசமுசா படமோ என்று வர மறுக்கிறார்கள். //

இந்த மாதிரி கழிசட பசங்ககூட எல்லாம் ஏன் கூட்டு சேர்ற... :))

அனுஷ்யா said...

பாஸ்.. இது ரஞ்சிதா சீசன்... கஸ்தூரிய அப்பறம் கவனிப்போம்... :))

Sivakumar said...

//சமீபத்தில் பெரியவர் ஒருவர் டச் ஸ்க்ரீன் – அண்ட்ராய்ட் போனை வைத்து, தமிழில் டைப்பிக்கொண்டு கொடுத்த அளப்பறையை பார்த்து தொலைத்தேன். //

நம்ம சிங்கத்தை சுரண்டி பாக்காதே தம்பி.. அப்பறம் அந்த நம்பர் தர சொல்லி உன்னை துரத்துவோம்.

Prem S said...

//நல்லவேளை அவருடைய “முன்னாள்” யூராலாஜி சர்ஜியனாக இருந்திருக்கவில்லை.//ஹ ஹா என்ன ஒரு குசும்பு

Unknown said...

டேய் என்னையா பெரிசுன்னு சொன்னே! ஒன்னைய அடுத்த தடவை பார்க்கும்போது இருக்குடா!!

அப்புறம் சிவா ஃபேஸ்புக்ல சுகன்யாவும் இருக்காங்க. எனவே இனிமே பிரபாவை நாம் தொந்தரவு செய்யத் தேவை இல்லை!!!

முத்தரசு said...

பெருசு,
பகோடா தக்காளி குஜிலி
ட்வீட் பூரி மிஸ்,
டேக், எல்லாமே கலந்து சூப்பர் காக் டைல் அடிச்ச கிக்,

பாலா said...

//மசாலா கபே

என்னமோ அவரே வசனம் எழுதி படத்தை இயக்குன மாதிரி சொல்றீங்களே. அவர் வசனம் டைப் பண்ணிதானே கொடுத்தார்? :)

//தக்காளி

கைக்கு எட்டுற தூரத்துல அந்த ஆள யாரு போயி நீக்க சொன்னது. அவரது அனிச்சை செயல் கூடவா வேலை செய்யாம போனது?

//டுவிட்ஸ்
ரசித்தேன்.

Unknown said...

கலக்கல்ஸ் பாஸ்!
அந்த சைனா பெண்மணி மேட்டர் கிலியா இருக்கு பாஸ்! சூதானமா இருக்கணும் இல்ல!

Anonymous said...

கலகலப்பு – ஒரு பின்நவீனத்துவ சுயசொறிதல் இலக்கியவியாதி கும்பலும் ரெடி///

'எந்த மாதிரியான சூழலில் நம் தமிழ்ச்சமுதாயம் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது' - இதை விட்டுட்டீங்களே! எல்லா டெம்ப்ளேட் வாக்கியமும் ரெடியா இருக்கு. படம் காலைல ரிலீஸானதும் மத்தியானம் விமர்சனம் ரிலீஸ்...

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// நீண்ட நாளைக்கு பிறகு பிரபாவிடம் கொஞ்சம் அந்த பழைய தெள்ளிய நகையுணர்வு பளீச் பளீச்... வாழ்த்துக்கள் நண்பா... //

நன்றி நண்பா... கொஞ்ச நாள் கேப் விட்டு எழுதுறதால பீறிட்டு வந்திருக்கு போல...

// android ku போட்டியா gynaecoid ன்னு எதாவது வந்தா வாங்கலாம் என்று நான் சூளுரை எடுத்துள்ளேன்.. ஹி ஹி... :) //

ஆமாய்யா... நாம திட்டம் போட்டு வாங்குறதுக்குள்ள புது டெக்னாலஜி வந்துடுது...

// அதே யூராலாஜி மேட்டர் பாதி படிக்கும் போது எனக்கும் தோன்றியது... இன்னா மேட்டர்ன்னா இதுக்கு யூராலாஜி தேவ இல்ல.. ஒரு supermax ப்ளேட் போதும்... ஒரு நர்ஸ் ஏமாத்த முயற்சி பண்ண காதலனுக்கு கச்சிதமா காரியத்த கட் பண்ணியிருக்கு... :) //

சொல்லாதீங்க தல... கேட்கும்போதே மெர்சலாகுது...

// இந்த மாதிரி கழிசட பசங்ககூட எல்லாம் ஏன் கூட்டு சேர்ற... :)) //

என்ன பண்றது... நம்ம கூட இருக்குறதெல்லாம் அம்மா அப்பாவுக்கு பயப்படுற பசங்க... தப்பித்தவறி பிட்டுப்பட தியேட்டருக்கு கூட்டிட்டு போனா எங்க, தெரிஞ்சவங்க யாராவது பார்த்திடுவாங்களோன்னு பயந்துட்டே வருவாங்க...

// பாஸ்.. இது ரஞ்சிதா சீசன்... கஸ்தூரிய அப்பறம் கவனிப்போம்... :)) //

நக்மாவுக்கு போட்ட மாதிரி ஒரு தனி பதிவு போட்டிடலாமா...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// நம்ம சிங்கத்தை சுரண்டி பாக்காதே தம்பி.. அப்பறம் அந்த நம்பர் தர சொல்லி உன்னை துரத்துவோம். //

இவ்வளவு அக்கப்போருக்கு பதிலா அடுத்த முறை நம்பரையே கொடுத்துவிடலாம்ன்னு இருக்கேன்... அதுக்கு முன்னாடி பேஸ்மென்ட்டை கொஞ்சம் ஸ்ட்ராங்கா போட்டு வைக்கணும்...

Philosophy Prabhakaran said...

@ PREM.S
// ஹ ஹா என்ன ஒரு குசும்பு //

நன்றி ப்ரேம்...

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில்
// டேய் என்னையா பெரிசுன்னு சொன்னே! ஒன்னைய அடுத்த தடவை பார்க்கும்போது இருக்குடா!!

அப்புறம் சிவா ஃபேஸ்புக்ல சுகன்யாவும் இருக்காங்க. எனவே இனிமே பிரபாவை நாம் தொந்தரவு செய்யத் தேவை இல்லை!!! //

அய்யா... அய்யய்யா... ப்ராக்கட்ல போட்டிருக்குறத படிங்கய்யா... (அதாவது சமுதாயத்தில் பெரிய அந்தஸ்துடன் இருப்பவர்) குதூகலமா இருக்குற குடும்பத்துல கும்மி அடிச்சிடாதீங்கய்யா...

Philosophy Prabhakaran said...

@ மனசாட்சி™
// பெருசு,
பகோடா தக்காளி குஜிலி
ட்வீட் பூரி மிஸ்,
டேக், எல்லாமே கலந்து சூப்பர் காக் டைல் அடிச்ச கிக், //

நன்றி தலைவா...

Philosophy Prabhakaran said...

@ பாலா
// என்னமோ அவரே வசனம் எழுதி படத்தை இயக்குன மாதிரி சொல்றீங்களே. அவர் வசனம் டைப் பண்ணிதானே கொடுத்தார்? :) //

இதுதான் ஆரம்பம்... இனிதான் பூகம்பம்...

// கைக்கு எட்டுற தூரத்துல அந்த ஆள யாரு போயி நீக்க சொன்னது. அவரது அனிச்சை செயல் கூடவா வேலை செய்யாம போனது? //

ரெண்டு பேரோட தீவிரமா சண்டை போட்டுட்டு இருக்கும்போது அந்த பொம்பளை கீழே கை விட்டுடுச்சு போல...

Philosophy Prabhakaran said...

@ ஜீ...
// கலக்கல்ஸ் பாஸ்! //

நன்றி பாஸ்...

Philosophy Prabhakaran said...

@ Chilled Beers
// 'எந்த மாதிரியான சூழலில் நம் தமிழ்ச்சமுதாயம் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது' - இதை விட்டுட்டீங்களே! எல்லா டெம்ப்ளேட் வாக்கியமும் ரெடியா இருக்கு. படம் காலைல ரிலீஸானதும் மத்தியானம் விமர்சனம் ரிலீஸ்... //

அது மேட்டர் இல்ல... படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே போட்டுடுவோம்...

உலக சினிமா ரசிகன் said...

யூராலஜி மேட்டரை ரொம்பவே ரசித்தேன்.

Unknown said...

anne vanakkamne

Unknown said...

கும்மியடிக்க நம்பர் ஒன் பதிவர் கொலவெறியோடு காத்திருக்கிறார்./////

மாப்ள....! உமக்கு விசயம் தெரியாதா? அதை புடிங்கி பல நாளாச்சு.....இப்ப பச்சைகலருகாரங்க கையில இருக்கு!

Anonymous said...

ரொம்ப நாளைக்கு பிறகு பதிவு, கலக்கு பிரபா. கலகலப்பு முதல் காட்சியே பார்த்து விட்டு விமர்சனத்தில் பொரட்டிப் போட நான் ரெடி.

அக்கப்போரு said...

இவ்வளவு அக்கப்போருக்கு பதிலா அடுத்த முறை நம்பரையே கொடுத்துவிடலாம்ன்னு இருக்கேன்//
தம்பி இந்தப் பிரச்சனைல என் பேர எதுக்கு இழுக்குற

ஹாலிவுட்ரசிகன் said...

கலக்கிட்டீங்க பாஸ். அந்த சைனாப் பொண்ணு மேட்டர வேற எழுதிபுட்டீங்க. உங்க ப்ளாக் படிச்சிட்டு எத்தன பொண்ணுங்க, எத்தன பையனுங்க பையில கைவைக்கப் போறாளுகளோ தெரீல.

நித்தியானந்தா மேட்டர் ஏதாச்சு இருக்கும்ணு எதிர்ப்பார்த்தேன்.

Anonymous said...

என்ன ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கொன்னா..?

வழக்கத்துக்கு கொஞ்சம் வித்தியாசம்...மாற்றம் நல்லது தானே..

#தோழிஅப்டேட்ஸ் 18+

சமுதாயத்தில் பெரிய அந்தஸ்துடன் இருப்பவர்//

ஈரோட்டுக்காரர சொல்லலையே...-:)

Philosophy Prabhakaran said...

@ உலக சினிமா ரசிகன்
// யூராலஜி மேட்டரை ரொம்பவே ரசித்தேன். //

நன்றி உ.சி.ர...

Philosophy Prabhakaran said...

@ N.Mani vannan
// anne vanakkamne //

யோவ் என்னய்யா இங்கவந்து வணக்கம் சொல்லிட்டு இருக்குற...

Philosophy Prabhakaran said...

@ வீடு சுரேஸ்குமார்
// மாப்ள....! உமக்கு விசயம் தெரியாதா? அதை புடிங்கி பல நாளாச்சு.....இப்ப பச்சைகலருகாரங்க கையில இருக்கு! //

ஆத்தாடி பச்சைக்கலரா... வெளங்கிடும்...

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் மூனா செந்தில்
// ரொம்ப நாளைக்கு பிறகு பதிவு, கலக்கு பிரபா. கலகலப்பு முதல் காட்சியே பார்த்து விட்டு விமர்சனத்தில் பொரட்டிப் போட நான் ரெடி. //

போடுங்க தல... ஒவியாவையும், அஞ்சலியையும் பார்த்து மெர்சலாயிடாதீங்க...

Philosophy Prabhakaran said...

@ அக்கப்போரு
// தம்பி இந்தப் பிரச்சனைல என் பேர எதுக்கு இழுக்குற //

ஒரு புறாவுக்கு போரா...?

Philosophy Prabhakaran said...

@ ஹாலிவுட்ரசிகன்
// கலக்கிட்டீங்க பாஸ். அந்த சைனாப் பொண்ணு மேட்டர வேற எழுதிபுட்டீங்க. உங்க ப்ளாக் படிச்சிட்டு எத்தன பொண்ணுங்க, எத்தன பையனுங்க பையில கைவைக்கப் போறாளுகளோ தெரீல.

நித்தியானந்தா மேட்டர் ஏதாச்சு இருக்கும்ணு எதிர்ப்பார்த்தேன். //

நன்றி தல... நித்தி பத்தி மொத்த பதிவுலகமே எழுதிட்டு இருக்கு... எதுக்கு நாம வேற தனியா...

Philosophy Prabhakaran said...

@ ரெவெரி
// என்ன ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கொன்னா..?

வழக்கத்துக்கு கொஞ்சம் வித்தியாசம்...மாற்றம் நல்லது தானே.. //

என்னய்யா சொல்றீரு ஒன்னும் வெளங்கல...

// #தோழிஅப்டேட்ஸ் 18+ //

இதுக்கேவா...

// ஈரோட்டுக்காரர சொல்லலையே...-:) //

பெரியார் இல்லை... பெரியவர்...

'பரிவை' சே.குமார் said...

பிரபா ஒயின்ஷாப்ல அதிக போதை போல இருக்கு... நடக்கட்டும்... நடக்கட்டும்...

ஜேகே said...

தல அந்தியிலே வானம் சூப்பர் பாட்டு ..

ஆனா கஸ்தூரி என்றால் எனக்கெல்லாம் தத்தோம் தகதிமிதோம் தான்!!

http://www.youtube.com/watch?v=eRkyPY31y0Q&feature=fvsr

N.H. Narasimma Prasad said...

வர வர பிரபா ஒயின்ஷாப் 'டல்லடிக்க' ஆரம்பிச்சிடுச்சே, என்ன காரணம்? சரக்கு டுப்ளிகேட்டோ?