13 February 2013

பிரபா ஒயின்ஷாப் - 11022013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்ற வாரத்தில் ஒருநாள் நண்பர் ஒருவருக்காக காலை 9 மணிக்கே கிண்டி ரேஸ் கோர்ஸ் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை. பணிபுரிய ஆரம்பத்திலிருந்தே நைட் ஷிப்ட், UK ஷிப்ட் என்று பழகிவிட்டதால் நான் இதுபோல ப்ரைம் டைம் சென்னையை பார்த்ததே சில வருடங்களாகிவிட்டது. நண்பரும் வராமல் தாமதப்படுத்தினார். நிறைய முகங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனை பேர் வாழ்க்கையை ஒரு நொடிகூட நின்று ரசிக்க முடியாமல் அவசர அவசரமாக ஓடுகிறார்கள். பேருந்துகளில் எவ்வளவு கூட்டம். அந்த கூட்டத்திலும் பெண்கள் முதற்கொண்டு முண்டியடித்து பயணிக்க வேண்டி இருக்கிறதே. உண்மையில் என்போன்றவர்களுக்கு பணிநேரம் மிகப்பெரிய வரம். இந்த படிப்பினையை எனக்குக் கொடுத்த அந்த லேட் நண்பருக்கு நன்றிகள்.

*****

சம்பவம் 1: அப்பாவுடைய நண்பர் ஒருவருக்கு வயிற்றில் புற்றுநோய் வந்தது. புற்றுநோய் அனுபவஸ்தர் என்கிற முறையில் அப்பாவிடம் ஆலோசனை கேட்க, அப்பாவும் அடையார் மருத்துவமனையை பரிந்துரைத்தார். ஆனால் நண்பர் பசையுள்ள பார்ட்டி என்பதால் அப்போல்லோவில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார். சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் ஆகியிருக்கும், செக்கப்பில் நண்பருக்கு கேன்சர் முற்றிலுமாக குணமாகவில்லை என்று கூறிவிட்டார். இப்போது அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்கள். நிலைமை கைமீறி போய்விட்டது எங்களால் எதுவும் செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டனர்.

சம்பவம் 2: எங்களுடைய அண்டை வீட்டுக்காரரின் உறவுக்கார பெண்மணிக்கு மார்பக புற்றுநோய். ஹைதையில் ஏற்கனவே சிகிச்சை எடுத்திருப்பார்கள் போல. அடுத்தகட்டமாக அடையாறு மருத்துவமனைக்கு சென்றிருந்தார்கள். முதல்கட்ட செக்கப் முடிந்ததுமே அறுவை சிகிச்சை செய்தாலும் காப்பாற்ற வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர்.

சம்பவம் 3: கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் குடல் புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட என் தந்தையார் மாதந்திர செக்கப், வருடாந்திர செக்கப் எல்லாம் முடிந்து பூரண குணமடைந்து விட்டதாக சொல்லியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் மருத்துவ வளர்ச்சிகள் நிறைந்துவிட்ட 21ம் நூற்றாண்டில் கூட கேன்சர் ஒரு கொடிய வியாதியே. முடிந்தவரை அதை தவிர்ப்பதற்கு ஆவன செய்யவும். தங்கள் பரம்பரையில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்திருந்தால் தாமதிக்காமல் சோதித்து பார்த்துவிடுவது நல்லது. அதையும் தாண்டி புற்றுநோய் வந்திருக்குற பட்சத்தில் உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது என்கிற காரணத்தினால் தனியார் மருத்துவமனைகளை நாடாமல் தயவு செய்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை அணுகுங்கள். அங்கே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறுவை சிகிச்சை செய்து, சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிவிடுவதில்லை. ஒவ்வொரு படியாக நம்முடைய கைகளை பிடித்து பொறுமையாக அழைத்துச் செல்கின்றனர்.


தொடர்புடைய  சுட்டிகள்:
மருத்துவ சேவையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை  
மீண்டு வந்த சோழன்...!


*****

ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவுக்கு போட்டோஷாப் கில்லாடி யாரோ வசமாக சிக்கியிருக்கிறார். அலெக்ஸ் பாண்டியன் விளம்பரங்களில் தெரிந்த ஜொலிப்பு, பிரியாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று தொடர்கிறது. மேற்படி படங்களின் விளம்பரங்களை பார்க்கும்போது படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் மேலிடுகிறது. எப்படி இருந்தாலும் ரெஜினாவுக்காக கே.பி.கி.ர பார்க்கத்தான் போகிறேன். கீழுள்ள புகைப்படம் நம்முடைய போட்டோஷாப் கில்லாடியின் வேலை.



கேடி பில்லா கில்லாடி ரங்கா
*****

பிப்ரவரி மாத காட்சிப்பிழை திரை இதழில் பெருமாள் முருகன் :-
கோயில் நோம்பிகளில் பிரபலமாக இருந்த ஒரு வேடிக்கை ‘ரெக்கார்ட் டான்ஸ்’. சினிமா பாடல்களுக்கேற்ப நடனமாடும் நிகழ்ச்சி அது. பெண்களின் நடனமே பிரதானம். பெண்களோடு சேர்ந்து ஆட, ஆண் ஒருவர் போதும். தொடக்கத்தில் சாமி பாடல்களுக்கு ஆடுவார்கள். உடல் முழுக்க மூடிய சேலைக் கட்டோடு வேப்பிலையும் அக்கினிச்சட்டியுமாகத் தொடங்கும் படிப்படியான வளர்ச்சி என்பது ஆடை குறைப்புத்தான். நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் ‘டூ பீஸ்' உடையோடு ஆடுவதற்கு ஏற்றபடி பாடல்கள் அமையும். நிகழ்ச்சியின் உச்சக்கட்டம் ஆடை அவிழ்ப்பு. நிர்வாணமாக ஓரிரு நிமிடங்கள் மேடையில் ஆடிவிட்டு உள்ளே ஓடிவிடுவார்கள். அச்சமயத்தில் அப்பெண்கள் தங்கள் அல்குலில் தொட்டு வீசும் கைக்குட்டையை எடுப்பதற்கு ஆண்கள் கூட்டம் அலைமோதும். ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் ஆண்களே. தொடக்கத்தில் பெண்கள் கொஞ்ச நேரம் வந்து உட்காருவார்கள். ஆடை குறைப்பு ஆரம்பமாகிக் “கிளப் டான்ஸ்" பாடல் நடனம் வந்துவிட்டால் பெண்கள் கிளம்பிவிடுவார்கள். அதன்பின் ஆண்களின் சீழ்க்கையும் ஆட்டமும் கெட்டவார்த்தைகளும் எனப் பலவும் அங்கே அரங்கேறும்.

*****

விஸ்வரூபம் பார்த்தபிறகு பூஜா குமார் நடித்த காதல் ரோஜாவே பாடல்களை யூடியூபில் தேடித்தேடி பார்க்கும் சிறியவர்களுள் அடியேனும் ஒருவன். என்னதான் மிட்டுநைட்டு மாமா பாடலில் மழையில் எல்லாம் நனைந்து கொஞ்சம் குஜாலாக ஆடினாலும் இளையராஜாவின் இசையில் காதலர்கள் ரொமாண்டிக்காக பாடிக்கொள்ளும் நினைக்கும் வரம்கேட்டு பாடல்தான் பிடித்திருக்கிறது. ஆனாலும் நீங்க மிட்டுநைட்டு மாமா லிங்கைத்தான் கேட்பீர்கள் என்று தெரியும். பார்க்க.

*****

அந்தமான் மீது சிறிய வயதிலிருந்தே எனக்கு ஒரு ஈர்ப்பு. அப்பாவின் நண்பர் அங்கிருக்கிறார், போகலாம் போகலாம் என்று பெற்றோர் சொல்லிச் சொல்லி ஏற்படுத்திய ஈர்ப்பு. கடல் கடந்து இருப்பதால் கூட அந்த ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம். அந்தமான் என்றாலே நம்முள் பலருக்கு உடனே நினைவுக்கு வருவது ஜெயில் மற்றும் ஆதிவாசிகள். சமீபத்தில் என்னுடைய அந்த நீண்ட நாள் கனவு நிறைவேறியது. அதுபற்றிய கட்டுரைகளை இனிவரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.

அடுத்து வருவது: அந்தமான் பயணத்தொடர் ஆரம்பம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 comments:

Anonymous said...

கேடி பில்லா கில்லாடி ரங்கா - செம பொருத்தமான டைட்டில்.

Unknown said...

2000ல் பார்த்து கடுப்பான ஒரு மொக்கை படத்தை மெனக்கெட்டு தேடவைத்த விஸ்வரூபம்!

CS. Mohan Kumar said...

பிரபா : அடையார் கான்சர் மருத்துவமனையில் அனைவரையும் அனுமதிப்பதில்லை. காரணம் ஒன்றே ஒன்று தான்: இட பற்றாக்குறை

புற்று நோய் அதிகம் முற்றாமல் முதல் ஓரிரு நிலையில் இருப்போருக்கும், வசதியில் சற்று குறைந்தோருக்கும் மட்டுமே முன்னுரிமை தருகிறார்கள். எனக்கு தெரிந்து 3 பேர் அடையாரில் இடம் இல்லாமல் அப்பலோ போன்ற இடங்களில் சிகிச்சை எடுக்கிறார்கள்

Ponmahes said...

தம்பி இந்த போட்டோவுல(http://3.bp.blogspot.com/-k8vPn3AKhZM/URgM-LLaDwI/AAAAAAAACKE/7heZzQdELiI/s1600/url.jpg) யாரு கேடி ??யாரு கில்லாடி ???????
பக்கத்துல உள்ள நண்பரையும் சிரிச்ச மாதிரி எடிட் பண்ணியிருக்கலாம் ..


//கோயில் நோம்பிகளில் பிரபலமாக இருந்த ஒரு வேடிக்கை ‘ரெக்கார்ட் டான்ஸ்’. சினிமா பாடல்களுக்கேற்ப நடனமாடும் நிகழ்ச்சி அது. பெண்களின் நடனமே பிரதானம். பெண்களோடு சேர்ந்து ஆட, ஆண் ஒருவர் போதும். தொடக்கத்தில் சாமி பாடல்களுக்கு ஆடுவார்கள். உடல் முழுக்க மூடிய சேலைக் கட்டோடு வேப்பிலையும் அக்கினிச்சட்டியுமாகத் தொடங்கும் படிப்படியான வளர்ச்சி என்பது ஆடை குறைப்புத்தான்.


இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி எங்க ஊர் பக்கத்துல ஒரு கோயில் ல ரொம்ப famous ...


//சம்பவம் 3: கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் குடல் புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட என் தந்தையார் மாதந்திர செக்கப், வருடாந்திர செக்கப் எல்லாம் முடிந்து பூரண குணமடைந்து விட்டதாக சொல்லியிருக்கிறார்கள்.


மிக்க மகிழ்ச்சி ....



//அடுத்து வருவது: அந்தமான் கப்பல் பயணம்

இத ஏன் தம்பி ஹைபர் லிங்க் ல கொடுத்து வச்சிருக்க ...

Philosophy Prabhakaran said...

மோகன் குமார், அடையாறு மருத்துவமனையில் அவரவர் பணவசதிக்கேற்ப மூன்றுவகையான அறைகள் உள்ளன... ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஒரே அறையில் இருக்கும் ஜெனரல் வார்ட், நான்கு பேர் தங்கக்கூடிய அறை, ஒருவர் மட்டும் தங்கும் அறை என்று... ஆனால் சிகிச்சை முறைகள் அனைவருக்கும் ஒன்றுபோல தரப்படும்...

அதேபோல, இங்கே நோய் தீவிரம் அடைந்துவிட்டது, காப்பாற்றுவது கடினம் என்றால் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்...

நீங்கள் கூறுவது போல இடப்பற்றாக்குறை ஏற்படுவதற்கும் காரணங்கள் உள்ளன... அறுவை சிகிச்சை முடிந்ததும் அவசர அவசரமாக யாரையும் டிஸ்சார்ஜ் செய்து விடுவதில்லை... அறுவை சிகிச்சையின் சீற்றம், பின்விளைவுகள் தீவிரமாக இருப்பவர்களை நீண்ட நாள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பார்கள்... என் தந்தைக்கு எதிர் பெட்டில் இருந்தவர் மூன்று மாதங்களுக்கு மேல் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருவதாக அறிந்தோம்...

Philosophy Prabhakaran said...

பொன் மகேஸ், யாரு கேடி யாரு கில்லாடின்னு நீங்களே முடிவு செய்துக்கொள்ளவும்... பக்கத்துல இருக்குறவரு ரொம்ப சீரியஸான ஆள் சிரிக்கமாட்டார் :)

நீங்க ஏன் அந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்து எங்களோடு பகிர்ந்துக்கொள்ள கூடாது...

அந்த ஹைபர் லிங்க் இரண்டு நாட்களுக்குப்பின் வேலை செய்யும்...

Unknown said...

இவிங்க ரெண்டு பேத்துக்கும் முதல பில்லி சூன்னியம் வைக்கணும் ,என்னா ஆட்டம் போடுறாங்க

அகலிக‌ன் said...

"இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் மருத்துவ வளர்ச்சிகள் நிறைந்துவிட்ட 21ம் நூற்றாண்டில் கூட கேன்சர் ஒரு கொடிய வியாதியே. முடிந்தவரை அதை தவிர்ப்பதற்கு ஆவன செய்யவும். தங்கள் பரம்பரையில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்திருந்தால் தாமதிக்காமல் சோதித்து பார்த்துவிடுவது நல்லது"

உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கையில் நீங்கள் குடிக்கும் பழக்கம் உடையவர் என்று தெரிகிறது உங்கள் பரம்பரையிலேயே புற்றுநோயும் வந்திருக்கிறது நீங்கள் கவனமாக இருங்கள். உண்மையிலேயே ஒரு அக்கறைதான் வேறொன்ரும் இல்லை.

வவ்வால் said...

பிரபா,

ஒயின் ஷாப்பிலும் ஒர்த்தான தகவல் கிடைக்கும்னு காட்டுது அடையார் மருத்துவமணை செய்தி. முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன், வருமான சான்று, மற்றும் நம்பகமான மருத்துவரின் பரிந்துரை எல்லாம் தேவைனு சிகிச்சைப்பெற்ர ஒருவர் சொல்லி இருக்கிறார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற முடியாத அளவுக்கு ஏழைனா கண்டிப்பாக இடம் கிடைக்கும்னும் சொன்னார்.
-----------

ஆந்திர ரெக்கார்ட் டான்ஸ்னு யூடிப்பில் தேடினா நிறைய மாட்டுமே :-))

நேத்து ராத்தியம்மா பாட்டுலாம் போட்டு ஆடுறாங்க,

ஹி...ஹி நான் பாட்டுக்காக தான் அந்த வீடியோவ பார்த்தேன் :-))

பாலா said...

முதல் பாராவில் பிரபல ஸ்பெல்லிங் மிஸ்டெக் பதிவரின் சாயல் தெரிகிறதே? ஹி ஹி

ஒவ்வொரு முறை அண்ணா யூனிவர்சிட்டியை கடக்கும்போதும் நமக்கு புற்றுநோய் இருக்குமோ என்ற பயம் வந்து தொற்றிக்கொள்கிறது :(

Philosophy Prabhakaran said...

நன்றி அகலிகன், பாயிண்ட் நோட்டட்...

Philosophy Prabhakaran said...

நானும் பாட்டுக்காக தான் பாக்குறேன் வவ்வால்... யூடியூபில் இருந்த ஆந்திரா வீடியோக்கள் எல்லாவற்றையும் ஏற்கனவே பார்த்தாச்சு... புதுசா எதுவும் இல்லை...

Philosophy Prabhakaran said...

பாலா, ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவரின் சாயல் என்னை அறியாமலே எனக்குள் ஊடுருவி விட்டது...