18 March 2013

பிரபா ஒயின்ஷாப் -18032013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கல்லூரி மாணவர்கள் பஸ் டே என்ற பெயரில், அல்லது பொதுவாகவே வட சென்னை வழித்தடங்களில் செய்யும் பப்ளிக் நியுசன்ஸை பார்க்கும்போதெல்லாம் வெறுப்பாக இருக்கும். மாஸ் ஹீரோக்களின் படங்களில் வருவது போல யாராவது வந்து நாலு சாத்து சாத்த மாட்டார்களா என்று தோன்றும். உண்மையில் அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, முனைந்தால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். அப்படி யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஆற்றல் வீணாக போகிறதே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். அது வீணாகவில்லை என்று சமீபத்திய நிகழ்வுகள் சொல்கின்றன. அந்த மாணவர்களை தலை வணங்குகிறேன் !

என்னுடைய மாணவப் பருவத்தில் மொக்கையான ஃபிகர்களை ஏற்றிவிட்டதை தவிர வேறு எதாவது உருப்படியாக செய்திருக்கிறேனா என்று யோசித்துப்பார்த்தேன். கல்லூரியில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்த சமயம், இறுதியாண்டு மாணவனை மூன்றாம் ஆண்டு மாணவன் கத்தியால் குத்திவிட்டான். இருவரும் பொறுக்கிகள் தான். ஏதோ பெண்கள் சமாச்சாரம். கத்திக்குத்து வாங்கியவன் செங்கல்பட்டு மருத்துவமனையில். குத்தியவனை வெளியே விட்டால் அடித்தே கொன்றுவிடுவார்கள் என்று பாதுகாப்பாக வைத்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். இயல்பிலேயே எங்களுடைய வகுப்பு மட்டும் மிகவும் கண்டிப்பானது என்பதால் நாங்கள் மட்டும் வகுப்பறைகளில் அமர்ந்துக்கொண்டிருக்கிறோம். மற்றவர்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென, எங்கள் வகுப்பறைக்குள் நுழைந்த மற்றொரு வகுப்பை சேர்ந்த மாணவன், “த்தா... நீங்கள்லாம் உள்ளேயே இருந்து கிளாஸை கவனிங்கடா பொட்டைங்களா...” என்று ஷங்கர் பட பொதுஜனம் மாதிரி கத்திவிட்டு போனான். அப்போது வந்ததே என் சகாக்களுக்கு ரோஷம். எல்லோருமாக சேர்ந்து வகுப்பறையை விட்டு வெளியேறினோம். அப்புறம் எல்லோருமா சேர்ந்து கம்பியூட்டர் லேபை அடித்து நொறுக்கியது, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை கொடுத்து எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பியது, டாடா சுமோவில் அடியாட்கள் துரத்தியது எல்லாம் வரலாறு. த்தூ...! ஆனால் அன்றைக்கு எல்லோருடன் சேர்ந்து நானும் வகுப்பறையை விட்டு வெளியே வந்திருக்கக்கூடாது. அட் லாஸ்ட் நானும் அந்த பொறுக்கி, பன்னாடை கூட்டத்தில் ஒருவன்தான் என்பதை மிகுந்த அவமானத்துடன் ஒப்புக்கொள்கிறேன்.



இந்த வார மொக்கைக்கு ஆச்சு'ன்னு தான் கருட பார்வை படம் பார்க்க போனேன். அருமையான கதைக்கரு. தேசிய நெடுஞ்சாலையில் ‘சாலை விடுதி' என்ற லாட்ஜ் அமைந்திருக்கிறது. ஒரு பெருமழையிரவிற்காக சிலர் அங்கே தங்கிட நேருகிறது. மொத்தம் பதிமூன்று பேர். ஒவ்வொருவராக கொல்லப்படுகின்றனர். சிறுவன் உட்பட சிலருடைய சடலங்களும் காணாமல் போகின்றன. எஞ்சியவர்கள் ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்படுகின்றனர். கடைசியாக சமூக சேவகி மட்டும் ஒரு காரில் தப்பிக்கிறார். போலீஸ் விசாரணை துவங்குகிறது; பதினோரு சடலங்கள் கிடைக்கின்றன. சிறுவன் உயிரோடு இருக்கிறான்; சமூக சேவகியை கொல்வதற்காக அவளுடைய வீட்டுக்கு செல்கிறான். கொன்றானா ? எதற்காக எல்லோரையும் கொல்கிறான் ? என்பதைச் சொல்லி இரண்டாம் பாகத்திற்கு வழியமைத்து விட்டு படத்தை முடிக்கிறார். சூப்பர் படம் என்று சொல்ல முடியாது. லோ-பட்ஜெட் படங்களுக்கென்றே உரித்தான மொக்கையான நடிகர்கள், காட்சியமைப்புகள் என்று நிறைய குறைகள் இருக்கின்றன. பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சியில் எல்லாப் பிணங்களின் கண் இமைகளிலும் அசைவு தெரிகிறது. எனினும் மற்ற லோ-பட்ஜெட் குப்பைகளோடு ஒப்பிடும்போது ஓகே ரகம்.

பழைய ஆனால் சூடான செய்தி. சதீஷ் நாராயணன்’னு நம்மாளு ஒருத்தரு. ஆஸ்திரேலியாவில் குடியமர்ந்தவர். அவருடைய மனைவியின் பெயர் ரஜினி (பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல !). ரஜினிக்கு கணவர் மீது சந்தேகம். கணவர் தனக்கு சொந்தமான பொருளை மற்றவருக்காக உபயோகித்து விடக்கூடாது என்றெண்ணிய ரஜினி, வாழைப்பழத்தில் தீ வைத்துவிட்டார். விளைவு - வாழை தோப்பே எரிஞ்சுடுத்து ! இருபது நாட்கள் உயிருக்கு போராடிய சதீஷ், உயிரிழந்துவிட்டார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது அது மட்டும்தான் எரியும்'ன்னு நெனச்சேன் என்று அப்பாவியாக பதில் சொல்லியிருக்கிறார் ரஜினி.

இந்த சம்பவத்தை கேள்விப்படும்போது எனக்கு ஒரு பாரதியார் கவிதை நினைவுக்கு வருகிறது,



அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
ஆங்கோர் காட்டிடைப் பொந்தினில் வைத்தேன் !
வெந்து தணிந்தது காடு- தழல்
மூப்பினில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?

அப்புறம் நடந்ததுதான் டுவிஸ்ட். இரண்டு ஆண்டுகள் கழித்து, வழக்கு அது பாட்டுக்கு ஒரு பாதையில் போய் கடைசியில் சதீஷ் இருபது வருடங்களாக மனைவியை டார்ச்சர் (தினத்தந்தி பாஷையில் செக்ஸ் கொடுமை) செய்தார். அதன் விளைவாக தான் மனைவி தீ மூட்டினார் என்று கேஸ் முடிக்கப்பட்டு, ரஜினி ரிலீஸ் ஆகிவிட்டார்.

கற்றது தமிழ் வணிகரீதியாக தோற்றதால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ராம் மீண்டு(ம்) வந்திருக்கிறார். என்னதான் பீட்டர் விட்டாலும் ராம் மற்றும் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் கெளதம் மேனனை பாராட்டியே ஆகவேண்டும்.



மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்று...!

அடுத்து வருவது: பரதேசி

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 comments:

ராம்ஜி_யாஹூ said...

i was told that only one song is there in this film, and that song is sung by our favorite singer, super singer soundarya nandakumar

Anonymous said...

மகளை பெறாவிட்டாலும், என் மகனின் மகளை முத்தமிடுவதும் காமத்தை சேர்ந்ததில்லை.

Unknown said...

////அட் லாஸ்ட் நானும் அந்த பொறுக்கி, பன்னாடை கூட்டத்தில் ஒருவன்தான் என்பதை மிகுந்த அவமானத்துடன் ஒப்புக்கொள்கிறேன்.////

யோவ் அக்க்யுஸ்ட்டா நீ ,(இவ்வளவு நாள் ஒரு பொறுக்கி கூடவா சகவாசம் வச்சிருந்தோம் )

ஜெட்லி... said...

kattrathu tamil padathai parthu thaan raam kku thanga meengal vaaippae vanthathu... padam eppavo mudinjudchu...late release nu sollalam....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சாதாரணமாகவே கல்லூரி மாணவர்கள் செல்லும் பேருந்துகளில் செய்யும் செயல்கள் முகம் சுளிக்கத்தான் வைக்கின்றன.பஸ் டே என்றால் கேட்கவே வேண்டாம். கண்டக்டரின் வசைபாடல்கலையும் புலம்பல்களயும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்டவர்களை பார்க்கும்போது. "இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்" திருக்ககுறள் நினைவுக்கு வரும்.
ரஜினி செய்தி அதிர்ச்சி செய்தி.

கார்த்திக் சரவணன் said...

கல்லூரி மாணவர்களின் அராஜகம் தாங்கமுடிவதில்லை. போராட்டத்தில் இன்னும் அதிக மாணவர்கள் பங்கேற்கவேண்டும் என்பதே என்னுடைய அவா. அக்கினிக்குஞ்சு மேட்டருக்கு பாரதியின் பாடல் ஒத்துப்போகிறது. தங்கமீன்கள் டிரைலரே அழ வைக்கிறது. மெயின் பிக்சர் எப்படி இருக்குமோ?

Prem S said...

. //கணவர் தனக்கு சொந்தமான பொருளை மற்றவருக்காக உபயோகித்து விடக்கூடாது என்றெண்ணிய ரஜினி, வாழைப்பழத்தில் தீ வைத்துவிட்டார். விளைவு - வாழை தோப்பே எரிஞ்சுடுத்து //


ஹா ஹா என்ன ஒரு உவமை

சீனு said...

பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் படிக்கும் கானா பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அது பல சமயங்களில் வரம்பு மீறி சென்று பேருந்தில் இருக்கும் அத்தனை பெண்களையும் முகம் சுளிக்க வைக்கும்

Unknown said...

யோவ்...பாரதியார் பாட்டை எதோடு கம்பேர் செய்வது என்று விவஸ்தை கிடையாதா...?

ஜீவன் சுப்பு said...

I'm Eagerly waiting for ram's next. Karrathu Thamil what a movie. Waiting for goldfish.

Ponmahes said...

//இறுதியாண்டு மாணவனை மூன்றாம் ஆண்டு மாணவன் கத்தியால் குத்திவிட்டான்.

இந்த கதையில் குத்துப் பட்டது ஒருத்தன் இல்ல ரெண்டு பேர் .ஒருத்தன் EEE இன்னொருத்தன் ECE பா ..

இந்த பிரச்சனை பொண்ணுங்களுக்காக வந்தது அல்ல ...

//அப்புறம் எல்லோருமா சேர்ந்து கம்பியூட்டர் லேபை அடித்து நொறுக்கியது
அடித்து நொறுக்கியது உண்மை தான்... ஆனா நாம அந்த பக்கம் வேடிக்கை பாக்க தான போனோம் ...

//டாடா சுமோவில் அடியாட்கள் துரத்தியது எல்லாம் வரலாறு. த்தூ...!
டாடா சுமோவில் அடியாட்கள் துரத்தியது இந்த பிரச்சனைக்கு அல்ல I think ...
நம்ம பசங்க 2nd year பையன(பிரதீப் I think ) அடிச்சதுக்குத் தான் நம்ம சீனியர்s கொஞ்ச பேர் நமக்காக அடி வாகிய ஞாபாகம் .....


//என்னுடைய மாணவப் பருவத்தில் மொக்கையான ஃபிகர்களை ஏற்றிவிட்டதை தவிர வேறு எதாவது உருப்படியாக செய்திருக்கிறேனா என்று யோசித்துப்பார்த்தேன்.
அப்பறம் உன்னோட கிளியோபாட்ரா வோட முதுக வச்சு ஒரு phd பண்ணியே அத முடிச்சிட்டியா ??????? முடிக்கலனா கல்யாணத்துக்கு முன்னாடி முடிச்சிரு தம்பி .........

//அப்போது வந்ததே என் சகாக்களுக்கு ரோஷம்.
இங்க பாருங்க நாங்களும் ரௌடி . நாங்களும் ரௌடி .............

//எல்லோருடன் சேர்ந்து நானும் வகுப்பறையை விட்டு வெளியே வந்திருக்கக்கூடாது.
ஆமா நாம அந்த காரணத்துக்காக மட்டுமா வெளிய வந்தோம்..... அப்படியே வெளிய வந்தும் நாம என்னத்த புடுங்குனோம் ன்னு கொஞ்சம் வெளக்குனா கொஞ்சம் நல்லா இருக்கும் ....

Ponmahes said...

//மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்று...!

ஆமா இத யாரு எழுதினது ....
நல்ல அனுபவித்து எழுதின மாதிரி தெரியுது ...நல்லா இருக்கு ...

Philosophy Prabhakaran said...

பொன் மகேஸ்,

ECE அம்பத்தூர் மணி ஞாபகம் இருக்கு... EEEல யாருன்னு மறந்துடுச்சு...

// இந்த பிரச்சனை பொண்ணுங்களுக்காக வந்தது அல்ல ... //

வேற எதுக்காக ?

// நம்ம பசங்க 2nd year பையன(பிரதீப் I think ) அடிச்சதுக்கு //

கரெக்டு... கன்பியூஸ் ஆயிட்டேன்...

நாம வேடிக்கை தான் பார்த்தோம் வெளியே வந்து எதுவும் புடுங்கல தான்... ஆனால் வெளியில் வந்ததே அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவே அர்த்தம்... அப்படி இல்லை என்றால் வெளியே வந்ததும் வேடிக்கை பார்க்காமல் அவரவர் அறைக்கு சென்றிருக்கலாம்...

தவிர, அன்றைய போராட்டத்தின் கோரிக்கை மிகவும் அபத்தமானது... சுதாகர் உட்பட சில EEE ஆட்கள், அவனை வெளிய விடுங்க நாங்க பாத்துக்குறோம்ன்னு ப்ரின்சி கிட்டயே நேரடியா கேட்டாங்க...

Harini Resh said...

//மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்று...!//


அருமை praba :)

”தளிர் சுரேஷ்” said...

மாணவர் எழுச்சி! படப்பார்வை! இறுதியில் பெண்ணின்கோபம் என சுவையாக அருமையாக ஓர் பதிவு! நன்றி!

டக்கால்டி said...

Adutthathu nu oru padam irukku..paarunga..similar to karuda parvai but released last year which has known faces like Sreeman, Kundu aarthi, Vaiyapuri etc.,

sokka said...

Karuda paarvai exact copy of IDENTITY movie

pshychic pshychartist said...

dei Prabha pls b careful wile postin ur comments lik dis, The prblm in r colg ws nt becos of Gals nd v guys neva fight fr Gals nd d guy who was stabbed ws nt a rogue r rugger he s a GEM who doesnt involve in any prblm nt evn speaks out in class dts y v wer tempted and yes 1guy enterd nd shouted at u guys becos d othr guy who ws stabbed ws frm ur class d same guy didnt lost his cool at IT r IBT...d sumo chase issue ws all creatd by seniors which made us look fucked dumb ass as v didnt hd d capability to tk ovr it durin dt age...
so i hv alwys apreciated ur blogs bt nt dis 1 it hs hurt me a lot v neva did anythin fr ours nd m proud to tell it anywer anytime...

Philosophy Prabhakaran said...

மனநல மருத்துவரே,

எல்லா சம்பவங்களிலுமே இரு தரப்பிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

// d guy who was stabbed ws nt a rogue r rugger he s a GEM //

ஆனால் மேற்கண்ட வரிகள், யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை என்கிற வடிவேலு நகைச்சுவை காட்சியை நினைவூட்டுகிறது :)

அந்த சண்டை பெண்களுக்காக நடந்தது அல்ல என்று சொல்கிறீர்கள். ஆனால் வேறு எதற்காக நடந்தது என்று சொல்லவில்லையே ?

அட் லாஸ்ட், அந்த சண்டை எதற்காக நடந்திருந்தாலும் பெரும்பான்மை தவறு கத்திகுத்து கொடுத்தவன் மீதுதான் இருக்கிறது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் பொன் மகேஷுக்கு எழுதிய முந்தய பதிலை படிக்கவும். அன்றைய தினம், அந்த கத்திக்குத்து மாணவனை வெளியே விடச்சொல்லி அவனை நாங்களே கைகளால் கவனித்துக்கொள்கிறோம் என்றுதான் போராடினீர்கள் அல்லது போராடினோம். எவ்வளவு அபத்தமான போராட்டம் ? ஒருவேளை அவனை வெளியே அனுப்பி அவனை அடித்துக் கொன்றிருந்தால் அவனுடைய குடும்பத்திற்கு யார் பதில் சொல்லியிருப்பீர்கள் ? யார் கொலைப்பழியை ஏற்றிருப்பீர்கள் ?

சரி அதையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள். உங்கள் அப்பாவி நண்பருக்காக நீங்கள் போராடினீர்கள். எங்கள் வகுப்பு மாணவனும் பாதிக்கப்பட்டிருந்ததால் எங்களையும் அழைத்தீர்கள். எல்லாம் சரி என்றே வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில், நானும் உங்களுடன் சேர்ந்து வெளியே வந்ததற்காக என்னை நானே கடிந்துக்கொள்கிறேன். அத்தனை நண்பர்களையும் எதிர்த்து தனித்து நிற்க முடியாத என்னுடைய கையாலாகாத்தனத்தை நொந்துக்கொள்கிறேன். அவ்வளவுதான்.

BTW, இவ்வளவு உரிமையுடன் பேசுகிறீர்களே. நீங்கள் யார் ?

pshychic pshychartist said...

EEE Karthik da...that problem was a small issue which was convertd into wat happend dat day by sum unwnted ppl frm ohtr depts whom i dnt wnt to mention here and d guy who ws stabbed is Haggai hv u evr heard hs name either durin colg r nw...dt explains his character pal...did u wnet nd met him ih GH aftr dat incident his hand hs turned to Green since no blood flow frm the veins nd his abdomen ws nearly teared...m leavin here nt to speaka nymore abt d past...

Philosophy Prabhakaran said...

கார்த்திக், நீ சொன்னது போல ஹகாய் என்ற பெயரை முதன்முதலில் கத்திக்குத்து நடந்தபோது தான் கேள்விப்பட்டேன்... அப்புறம் மறந்துவிட்டேன், இப்போது நீ சொன்னதும் தான் மறுபடி நினைவுக்கு வருகிறது...

நான் மருத்துவமனைக்கு வந்தேன்... ஆனால் நான் வந்தபோது இருவருமே கிட்டத்தட்ட சகஜநிலைக்கு திரும்பிவிட்டனர்...

நடந்ததை கேட்பதற்கு துயரமாகத்தான் இருக்கிறது...