2 October 2017

பிரபா ஒயின்ஷாப் – 02102017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தோழர் ஷகிலாவின் சுயசரிதையை படித்தேன். மலையாளத்தில் வெளிவந்த இந்நூலை ஸ்ரீபதி பத்மநாபா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்பாளரின் பெயரைப் பார்த்து தேவையில்லாமல் பயப்படத் தேவையில்லை. பார்ப்பன நெடி அறவே கிடையாது.

நடிகைகளின் சொந்தக்கதைகள் என புத்தகமாகவும், சினிமாவாகவும் நிறைய படிக்கவும், பார்க்கவும் செய்திருக்கிறோம். விக்ரம் வேதாவில் மாதவன் வி.சே.விடம் சொல்வது போலதான். எல்லா நடிகைகளுக்கும் ஒரே கதைதான். ஆண்கள் கேடுகெட்டவர்கள், சமூகம் சீரழித்தது என்று எல்லா குற்றச்சாட்டுகளையும் சுற்றி இருப்பவர்கள் மீது போட்டுவிட்டு லாவகமாக தப்பிக்கும் பாணி. ஷகிலாவின் சுயசரிதையிலும் அப்படி சில இடங்களில் வருகிறது. ஆனால் முழுக்க அல்ல.

தன்னை மரியாதையாக நடத்திய, நேசித்த ஆண்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார் ஷகிலா. அவரது சினிமா பாகத்தை விட சொந்த வாழ்க்கையே அதிகம் வருகிறது. இப்புத்தகத்தை மூன்றாக (அல்லது நான்காக) பிரிக்கலாம். ஒன்று, தனிப்பட்ட வாழ்க்கை. இரண்டாவது, புகழ்பெற்ற வாழ்க்கை. மூன்று, புகழ் ஓய்ந்த பிறகான வாழ்க்கை. இதற்கிடையே பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஒரு பகுதி வருகிறது. இவையனைத்தும் நேரியிலின்றி வருவதால் சில சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தவும் செய்கிறது.

புகழ், புகழ் என்கிறார்களே ஷகிலா புகழின் உச்சியில் இருந்தது எத்தனை ஆண்டுகள் தெரியுமா ? மூன்றே ஆண்டுகள். 2000த்தில் தொடங்கி 2002 வரைதான். அதன்பிறகு மலையாள சூப்பர்ஸ்டார்கள் உட்பட கூட்டு சேர்ந்து திட்டமிட்டு ஷகிலாவை ஓரம் கட்டிவிட்டார்கள். 

புத்தகத்தின் துவக்கத்தில் இதுகுறித்து நிறைய புலம்பல்கள். என்னை இப்படி ஆக்கிவிட்டார்கள், எனக்கென யாருமில்லை என்பதையே திரும்பத் திரும்ப வெவ்வேறு வார்த்தைகளில் சொல்கிறார். அதன்பிறகு மெல்ல கதைக்கு போகிறார். சிலவற்றை படிக்கும்போது ஷகிலா உண்மையிலேயே இவ்வளவு அப்பாவியா என்று கேட்கத் தோன்றுகிறது. கின்னாரத்தும்பிகள் என்கிற மலையாள சினிமா ஷகிலாவை உச்சத்தில் ஏற்றிய படம். அதன் பிரதான கதை என்பது ஒரு பேரிளம் பெண்ணின் மீது இளவயது பையனுக்கு ஏற்படும் ஈர்ப்பு. (இந்த வயது வித்தியாச தீமிற்கு கின்னாரத்தும்பிகள் ஒரு டிரென்ட் செட்டர்). நான் கேள்விப்பட்ட வரையில் அது ஒரு சாதாரண சாஃப்ட் போர்னோ. ஷகிலாவோ அதனை ஏறத்தாழ ஒரு கலைப்படைப்பு என்கிற தொனியில் சிலாகிக்கிறார்.

பி-கிரேடு படங்களில் நடித்தது குறித்த வருத்தமிருந்தாலும், தனக்குக் கிடைத்த புகழுக்கு காரணமான ரசிகர்கள் மீது ஒரு நன்றியுணர்வு அவரிடம் இருக்கிறது. உண்மையோ பாசாங்கோ ஷகிலா அவரது ரசிகர்கள் மீது இத்தனை நன்றியுணர்வு கொள்ளத் தேவையில்லை என்பது என் எண்ணம். ரசிகர்கள் தான் ஷகிலாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

‘கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பக்கூடாது’ என்கிறார். மலையாள சினிமாவை விட தமிழ் சினிமா மீது ஷகிலாவுக்கு நல்லபிப்ராயம் உள்ளது. தமிழ் சினிமா மீது கூட அவருக்கு அத்தனை மதிப்பு தேவையில்லை. கவனித்துப் பாருங்கள். ஷகிலா குணச்சித்திர / நகைச்சுவை வேடங்களில் நடித்த தமிழ் படங்களில் கூட அவர் அறிமுகமாகும்போது யானை பிளிரும் அல்லது குதிரை கனைக்கும் சப்தத்தை பின்னணியில் ஒலிக்கவிடுவார்கள். ஷகிலா உதட்டை சுழித்துக்கொண்டோ. முந்தானையை சரிசெய்துக் கொண்டோ தோன்றுவார். ஒரு வகையில் அவை கூட ஷகிலாவின் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் வன்முறைதான். இதற்கு மலையாள படங்கள் கூட எவ்வளவோ பரவாயில்லை. நான் கேள்விப்பட்ட வரையில் ஷகிலாவின் பெரும்பாலான மலையாளப் படங்களில் அவர் வாழ்ந்து கெட்ட, ஏமாற்றப்பட்ட, அனுபவமுள்ள, இளைய தலைமுறைக்கு அறிவுரைக்கும் வேடங்களிலேயே நடித்தார்.

நிறைய இடங்களில் ஷகிலாவின் தொனி (அல்லது மொழிபெயர்ப்பாளரின் தொனி) எனக்கு நம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நினைவூட்டியது. 

சில விஷயங்களை மேலோட்டமாக சொல்கிறார். அப்பா ரெக்ரியேஷன் தொடர்பான வேலை பார்த்து வந்தார் என்கிறார். தனது அம்மாவைப் பற்றிய பத்திகள், அக்காவின் மகளை கொல்ல முயன்றது, சில்க் ஸ்மிதாவுடனான நட்பு, மரியாவின் மீதான நட்பு என்று நமக்கெல்லாம் காட்டாத பாகங்களை எல்லாம் ஷகிலா காட்டியிருக்கிறார். எல்லா பெண்களையும் போல திருமணம் செய்துகொள்ள வேண்டும். குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு பால் புகட்ட வேண்டும் என்பது போன்ற ஏக்கங்கள் அவருக்கு இருந்திருக்கிறது. புத்தகத்தை படித்து முடித்ததும் நான் ஷகிலாவின் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தேன். ஒருவேளை ஷகிலாவை நேரில் பார்த்தால் அவரது கைகளைப் பற்றிக்கொண்டு நாங்கள்லாம் இருக்கோம் என்று ஆறுதல் சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.

ஒரு கோணத்தில் ஷகிலாவை நினைத்து சுயமைதுனம் செய்தவர்கள் யாரேனும் இப்புத்தகத்தை படித்தால் அவர்களுக்கு குற்ற உணர்வாக இருக்கக்கூடும். எனக்கு இல்லையா என்று கேட்காதீர்கள். எந்த சூழ்நிலையிலும் எனக்கு ஷகிலாவைப் பார்த்து காம உணர்வு தோன்றியதே இல்லை. பருத்த உடலைக் கொண்ட ஷகிலா எப்படி மலையாளத்தில் பிரபலமானார் என்பதே எனக்கு புதிராக இருக்கிறது. ஷகிலாவின் பிரபலமான படங்கள் ஒன்றைக் கூட நான் பார்த்ததில்லை.

பலான படங்களைப் பொறுத்தவரையில் நான் நேரடியாக ஹார்ட்கோர் படங்களுக்கு தாவியவன். (அதனாலோ என்னவோ எனக்கு பிற்பகுதியில் சாப்ட் போர்னோ படங்களின் மீது அலாதியான ஈர்ப்பு ஏற்பட்டது). முதன்முதலாக திரையில் பார்த்த பாலியல் காட்சியே ஒரு புணர்வுக் காட்சி. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே எனக்கு வெகுகாலம் ஆனது. அப்போதெல்லாம் சென்னை பர்மா பஜார் பக்கமாக நடந்து போனாலே சிம்ரன் இருக்கு, ஜோதிகா இருக்கு என்று அழைப்பார்கள். அதை விட்டால் தமிழ் இருக்கு, மலையாளம் இருக்கு, இங்கிலீஷ் இருக்கு என்று மொழிகளை வரிசைபடுத்துவார்கள். பயந்த சுபாவமுள்ளவர்கள் என்றால் கூட பர்மா பஜார் வியாபாரிகள் தரும் தன்னம்பிக்கையில் ஒதுங்கிப் பார்ப்பார்கள். ஒரு வகையில் ஏராளமான தமிழக இளைஞர்களுக்கு கலவியறிவு பயிற்றுவித்தவர்கள் பர்மா பஜார் வியாபாரிகள். அப்படியொரு முறை சிம்ரன் படம் என்று சொல்லப்பட்ட சிடி எங்களுக்கு கிடைத்தது. உண்மையில் அப்படத்தில் தோன்றிய நடிகை மோனல் சாயலில் கூட இல்லை. (இப்போது யோசித்துப் பார்த்தால் அவருக்கு அபிராமி சாயல் என்று தோன்றுகிறது). ஆனாலும் அவரை சிம்ரனாக கற்பனை செய்துகொண்டு, சிம்ரன் நிஜத்தில் கண்ணாடி அணிவாரா என்றெல்லாம் தீவிரமாக விவாதித்திருக்கிறோம்.

அதன்பிறகு ஒரு சனிக்கிழமை இரவு சூர்யா தொலைக்காட்சியில் ஒரு ஆச்சர்யம் கிடைத்தது. ஆச்சர்யத்தின் பெயர் ப்ரேமாக்னி என்று பிற்பாடு தெரிந்துக்கொண்டேன். அதன்பிறகு நிறைய மலையாள துண்டுக்காட்சிகளை தேடித்தேடி பார்க்கவும், சேகரிக்கவும் செய்தேன். எனக்கு விருப்பமான மலையாள நடிகை என்றால் அது மரியாதான். முக லட்சணமும் உடல்வாகும் பொருந்திய நடிகை மரியா. மரியா மழைக்கு ஒதுங்கும் பிட்டு ஒன்று இருக்கிறது. அது எனக்கு பல இரவுகளில் உதவியிருக்கிறது. 

யோசித்துப் பார்த்தால் மற்ற விஷயங்களில் இருக்கிறார்களோ இல்லையோ பிட்டு விஷயத்தில் மட்டுமாவது நம்மவர்கள் மதபேதமின்றி நடந்துக்கொண்டிருக்கிறார்கள். ஷகிலா ரேஷ்மா மரியா... அன்பே கடவுள் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 comments:

Unknown said...

#ஷகிலா ரேஷ்மா மரியா...#
ரோசினியை ஏன் மறந்தீர்கள் :)

Ganesh kumar said...

ஷகிலா படத்துக்கு போறவனெல்லாம் ஷகிலாக்காக போறவன் இல்லைங்கிற கூற்றுக்கிணங்க முறையே மரியா & ரேஷ்மா & சிந்து & ரோஷிணி & தேவி வகைப்படும். யோவ் மரியா பிட்ட அனுப்பிவிடு மேன்.

சிவா said...

தாங்களின் நீண்டநெடிய அனுபவத்தை வைச்சு பார்க்கையில் கையில ரேகை சுத்தமா இருக்காது போலிருக்கே?

'பரிவை' சே.குமார் said...

மனதில்பட்டதை நன்றாக எழுதியிருக்கிறீற்கள்.
அருமை.

Ponmahes said...

பதிவு அருமை...வாழ்த்துகள்.........