15 November 2010

கேரக்டர் – சினிக்கூத்து சித்தன் (18+)

வணக்கம் மக்களே...

முன் குறிப்பு: தொடர்ந்து கேரக்டர் பதிவுகளை சிறப்பான முறையில் எழுதிவரும் வானம்பாடிகள், கடுகு அகஸ்தியன், ஆடுமாடு (அட பதிவரோட பெயர்தாங்க) ஆகியோரை நான் ரொம்பவும் மதிக்கிறேன். இது பால்மணம் மாறாத பாலகன் ஒருவனின் சிறிய முயற்சி மட்டுமே. யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

யார் இந்த சினிக்கூத்து சித்தன்...?
நான்காண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானவன். என்னுடன் மூன்றாண்டுகள் கல்லூரியில் குப்பை கொட்டியவன். இவனது இயற்பெயர்.... இயற்பெயரை சொன்னால் அவனுக்கு மதச்சாயம், சாதிச்சாயம் எல்லாம் பூசிப்பார்க்கும் இந்த சமூகம். எனவே இயற்பெயரை வெளியிட விரும்பவில்லை. கடைசியாக அவனை ஜனவரி மாதம் சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியில் பார்த்த ஞாபகம். இப்போது அடுத்த புத்தக கண்காட்சியே வரப்போகிறது. ஆனால் அவன் என் கண்களுக்கு காட்சி தரவில்லை. அவன் நம்பருக்கு போன் செய்தால் ஒரு பொம்பளைப்பிள்ளை இங்கிலீஷ்ல என்னமோ சொல்லுறா. பயபுள்ளை பில்லு கட்டியிருக்க மாட்டான் போல. அந்த பக்கிக்கு நேற்று (நவம்பர் 14) பிறந்தநாள். எவ்வளவு முயன்றும் வாழ்த்து சொல்ல முடியவில்லை. சரி அவனை வாழ்த்தி (!!!) ஒரு பதிவு எழுதலாமென்று ஆரம்பிக்கிறேன். இத படிக்கிற என் / எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் யாராவது அந்த நாயை பார்த்தீங்கன்னா இந்த பக்கமா பத்தி விடுங்க பாஸ்.

பொதுவாக கேரக்டர் பதிவுகளில் கார்டூன் ஒன்றை வரைந்திருப்பார்கள். ஆனால் எனக்கு வரைய தெரியாததால் அது சாத்தியப்படவில்லை. அவனது போட்டோவையும் அவனது அனுமதி இல்லாமல் இணைக்க விரும்பவில்லை. அப்புறம் என்னதான் செய்வது என்று குப்புற படுத்துக்கொண்டும், குனிந்துக்கொண்டும் யோசித்தபோது அப்படியே அச்சுஅசலாக 99.9% அவனைப் போலவே இருக்கும் முகம் ஒன்று நினைவிற்கு வந்தது. அதுதான் மேலே இணைத்துள்ள நம்ம சாம் அண்டர்சன். சாம் ஆண்டர்சனை வைத்து தனி பதிவு ஒன்றையே தேற்றிவிடலாம் என்பதால் இங்கே அவரைப் பற்றி எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. நீங்கள் இந்த திவ்யமான முகத்தை மட்டும் நம்ம பதிவின் நாயகன் சினிக்கூத்து சித்தனாக மனதில் பதிய வைத்துக்கொண்டு அடுத்த பத்திக்கு செல்லவும்.

சினிக்கூத்து சித்தன் அன்னார் சினிக்கூத்து புத்தகங்களை வாசிப்பதில் (வாசிக்க என்ன இருக்கிறது...?) அதீத ஆர்வம் காட்டுவார் என்பதாலும் அவ்வப்போது பல சித்து வேலைகளை செய்வார் என்பதாலும் அவர் இவ்வாறு அழைக்கப் படுவதாக தமிழறிஞர்கள் கூறுகின்றனர். என்னோட காலேஜ்ல படிச்சான்றதால அவனும் என்னமாதிரி யூத்துன்னு நினைச்சுக்காதீங்க. நம்ம தமிழ் சினிமால சார்லி, தாமு இவங்கள்லாம் காலேஜ் ஸ்டூடன்ட்ஸா நடிப்பாங்களே. அதுமாதிரிதான் இவனும். வயசு முப்பதுக்கு மேல இருக்கும் ஆனா அவனே அவனை யூத்துன்னு நினைச்சுக்குவான். கல்லூரியில் இருக்கும் நேரம் தவிர்த்து விடுதியில் பெரும்பாலும் கட் பனியனையும் இத்துப்போன லுங்கி ஒன்றினையும் அணிந்திருப்பான். கத்திரிக்காய் மாதிரி குள்ளமா கொஞ்சம் குண்டா இருப்பான். மாநிறம் என்று சொல்லக்கூடிய ஒரு கலர். கொழுப்பு எக்கச்சக்கமா இருக்கும், அவன் பேச்சிலும் உடம்பிலும்.

இவன் இருக்கானே சில நேரங்களில் அப்பாவி, பல நேரங்களில் அடப்பாவி. பட் ரொம்ப கலர்புல்லான பர்சன். எப்படின்னு கேக்குறீங்களா...? சதா சிகப்பு விளக்கு பகுதி பற்றிய நினைவுகள், பச்சையான கொச்சையான பேச்சு, பார்ப்பதெல்லாம் நீலப்படங்கள், படிப்பதெல்லாம் மஞ்சள் புத்தகங்கள். இப்ப சொல்லுங்க இவன் கலர்புல்லானவன் தானே. பயபுள்ள தொடர்ந்து அரைமணிநேரத்துக்கு மேல ஆளைக்காணோம்ன்னா யாரோட ரூம்லையோ பிட்டு படம் போட்டிருக்காங்கன்னு ஈசியா கண்டுபிடிச்சிடலாம். த்ரிஷா குளிக்கிற வீடியோ ரிலீஸ் ஆனா புதுசுல தினமும் காலைல எழுந்ததும் அத ஒருமுறை பார்த்துட்டு தான் மறுவேலை பார்ப்பான். என்னடான்னு கேட்டா குளிக்கலைன்னா த்ரிஷா அழுக்காயிடுவாங்கடான்னு வியாக்கியானம் பேசுவான். இவனோட கட்டிலின் மெத்தையை தூக்கினால் இன்ப பயணம், ஜோதி தரிசனம், பகலில் ஓர் நிலவு இந்தமாதிரி நிறைய இலக்கிய புத்தகங்கள் காணப்படும். பயலுக்கு அவ்வளவு இலக்கிய ஆர்வம். அது மட்டுமில்லை, ரூம்ல எங்கேயாவது சினிக்கூத்து அல்லது வண்ணத்திரை புத்தகம் இருந்து அதை திறந்து பார்த்தால் நடுப்பக்கம் மட்டும் மிஸ் ஆகியிருக்கும் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி வச்சிருப்பான். ஆறுமாசத்துக்கு ஒருமுறை பரீட்சை ரிசல்ட் வரும்போது மட்டும் விரக்தியில் சேத்து வச்ச புத்தகத்தை எல்லாம் கொண்டுபோய் எடைக்கு போட்டுட்டு வருவான். ஆனா ரெண்டு நாள் கழிச்சு எடைக்கு போட்ட காசுல புது புக்ஸ் வாங்கிட்டு வருவான்.

உன் தம்பி எந்த கிளாஸ் படிக்கிறான்னு கேட்டா திருதிருன்னு முழிப்பான் ஆனால் எந்த நடிகன் எவ்வளவு சம்பளம் வாங்குறார்ன்னெல்லாம் அவனோட டேட்டாபேஸ்ல கரெக்டா அப்டேட் பண்ணி வச்சிருப்பான். சினிமாவுல அசிஸ்டன்ட் டைரக்டராகி படிப்படியா டைரக்டர் ஆகணும்ன்றது அய்யாவோட லட்சியம். இவனே பல டைரக்டர்களோட கலவைன்னு சொல்லலாம். அதாவது கொஞ்சம் பாக்யராஜ், கொஞ்சம் டி.ஆர்., கொஞ்சம் பேரரசு, கொஞ்சம் எஸ்.ஜே.சூர்யா இவங்களையெல்லாம் சரிவிகிதத்துல மிக்ஸ் பண்ணா சினிக்கூத்து சித்தன் ரெடி. பாக்யராஜ்ன்னு சொன்னேன்ல, முருங்கைக்காய் மேட்டர் மாதிரி நிறைய மேட்டர் வச்சிருப்பான். அவ்வப்போது அதுபற்றி லெக்சர் எடுப்பான். டி.ஆர்ன்னு சொன்னேன்ல, பையன் ரைமிங்க்ல அசத்துவான். அதுமட்டும் இல்லாம டி.ஆர் அடிக்கடி தங்கச்சி செண்டிமன்ட் காட்டுவது போல இவன் அடிக்கடி அக்கா செண்டிமன்ட் சீன் காட்டுவான். பேரரசுன்னு சொன்னேன்ல, மரணமொக்கை போடுவான். ஏதாவது ஒரு சம்பவம் நடந்துச்சுன்னா உடனே இப்படித்தான் நான் டிப்ளோமா படிக்கும்போது ஒருத்தன்... ன்னு ஆரம்பிப்பான். அதுக்கப்புறம் நிறுத்தவே மாட்டான். எஸ்.ஜே.சூர்யான்னு சொன்னேன்ல, பையன் வாய தொறந்தா சில நேரங்களில் மட்டும் டபுள் மீனிங் வசனங்கள் வரும் பல நேரங்களில் மூன்று அர்த்தங்கள், நாலு அர்த்தங்கள் ஏன் சமயங்களில் முப்பது அர்த்தங்கள் வரும் வசனமெல்லாம் பேசுவான்.

ஒன்பது மணிக்கு காலேஜ்ன்னா எட்டரை மணிக்குத்தான் படுக்கையை விட்டு எழுந்திரிப்பான். சில நாட்களில் விடியற்காலையே எழுந்திரித்திருப்பான் அது எதற்காக என்பது அவன் அவசர அவசரமாக கைலியை துவைத்து காயப்போடும்போதுதான் புரியும். கிளாஸுக்கு போயிட்டா சத்தமே வெளிய வராது. பொண்ணுங்க முன்னாடி நல்ல புள்ள இமேஜை மெயின்டைன் பண்ணுரத்துக்காக தான் அந்த நடிப்பெல்லாம். சிவாஜி கணேசன், கமலஹாசனெல்லாம் இவன்கிட்ட கடன் வாங்கணும். கமல்ன்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது. இவனும் கமல் மாதிரி அடிக்கடி (அவனுக்கே) புரியாமலேயே பேசுவான். காலையில் குணா கமல், மாலையில் சிகப்பு ரோஜாக்கள் கமல், இரவில் ஆளவந்தான் கமல் இந்த மாதிரி மல்டிபிள் பர்சனாலிடிகளை வெளிப்படுத்துவான்.

காதல் இவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். இதுவரைக்கும் நிறைய பொண்ணுங்களை சின்சியரா லவ்விருக்கான். வாரம் ஒரு பொண்ணு பின்னாடி போய் வாட்ச்மேன் வேலை பார்ப்பான். ஆனால் இதயம் முரளி மாதிரி கடைசி வரையும் லவ்வ சொல்லவே மாட்டான். திடீர்னு பேப்பர் பேனா எடுத்துகிட்டு கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதுற வைரமுத்து மாதிரி உட்கார்ந்துடுவான். கவிதை எழுதுறாராம். இவன் எழுதுன கவிதைகளிலேயே காலேஜ் பசங்க மத்தியில ரொம்ப ஹிட் ஆன கவிதை உங்கள் பார்வைக்காக...
தமிழ்மொழி பயின்று வராத கவிதை
கனிமொழி பயின்று வந்தது...
ஆனால் அடுத்த வாரம் அவன் தேன்மொழி பயில ஆரம்பித்தது வேற கதை. ஏதோ பொண்ணுங்க எல்லாம் இவன் பின்னாடி சுத்துற மாதிரியே பில்டப் கொடுப்பான். ஆனா அந்த பொண்ணுங்களுக்கு சத்தியமா இவன் யாருன்னே தெரியாது.

இப்படியே எழுதச் சொன்னா அடுத்த வருஷம் நவம்பர் 14 வரைக்கும் கூட எழுதுவேன். சரி இந்த வருஷம் வாழ்த்தினது போதும்னு முடிவு பண்ணி இதோடு முடிச்சிக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

டிஸ்கி 1: எழுத ஆரம்பிக்கும்போது சாதரணமாக தான் ஆரம்பித்தேன். ஆனால் முடிக்கும்போது 18+ என்று போடும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. சில வார்த்தைகளும் வரிகளும் அபத்தமாக தெரியலாம். ஆனால் அவற்றை எல்லாம் சென்சார் செய்தால் சினிக்கூத்து சித்தனின் வீரியம் குறைந்துவிடும்.

டிஸ்கி 2: சம்பந்தப்பட்ட அந்த நண்பன் இந்தப் பதிவை படிப்பான்னு நினைக்குறேன். அவனுக்காக சில வரிகள். மேலே இருக்கும் பதிவில் ஏதேனும் வார்த்தைகளோ வரிகளோ உன்னை பாதித்திருந்தால் உன்னிடம் மனதார மன்னிப்பு மண்ணாங்கட்டி எல்லாம் கேட்கமாட்டேன். ஏன்னா நீ என் நண்பேண்டா...!

Post Comment

43 comments:

எல் கே said...

பாவம் உங்க நண்பர்,.. இப்படியா மாட்டி விடறது

Philosophy Prabhakaran said...

@ LK
சும்மா தான்... நட்பு ரீதியான கலாய்த்தல்...

சி.பி.செந்தில்குமார் said...

pirapaa பிரபா உங்க எழுத்து நடையில் எள்ளல் நகைச்சுவை எல்லாம் கூடிக்கிட்டே இருக்கு,வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கு தமிழ்மணம் ஓட்டு இடுவதில் ஏதோ சிக்கல்,விழலை.இண்ட்லி தமி 10 ல ஓட்டு போட்டாச்சு நண்பா

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
எனது எள்ளல் நகைச்சுவை பற்றி வள்ளல் போல பாராட்டியதற்கு நன்றி நண்பரே...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
தமிழ்மணத்தில் சரியாகவே இணைத்திருக்கிறேன்... அவர்களின் தளத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டிருக்கலாம்...

பரவாயில்லை இருக்கட்டும்... நீங்க வந்தா மட்டும் போதும்...

சிவராம்குமார் said...

பத்த வச்சுட்டியே பரட்டை!!!

சைவகொத்துப்பரோட்டா said...

சித்தருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

கேரக்டர் விவரிப்பு நன்றாக செய்கிறீர்கள்! நகைச்சுவையுடன் கலந்து சொல்வதால் படிக்க சுவாரசியமாக ரசிக்கும்படியாக உள்ளது!

Unknown said...

உங்க பிரெண்டோட அந்தரங்கத்தை எல்லாம் போட்டு ஓடச்சுபுட்டீங்களே. பாவம் உங்க நண்பர் .கைலி மேட்டர் லாமா இழுக்கிறது

Madhavan Srinivasagopalan said...

:-) present sir.

padichchittu appuram kamentu poduren.

varrrtaaaa..

ஹரிஸ் Harish said...

நல்ல காமெடியா எழுதீருக்கீங்க..டிஸ்கி 2 சூப்பரு..

pichaikaaran said...

super...

Unknown said...

மனதார மன்னிப்பு மண்ணாங்கட்டி எல்லாம் கேட்கமாட்டேன். ஏன்னா நீ என் நண்பேண்டா...!

பார்த்து பாஸ், உங்கள பத்தி ஏதாவது அவரு பிளாக் ஆரம்பிச்சு எழுதிட போறாரு.

Unknown said...

பினிஷிங் சூப்பர்..

Muthu said...

Nanum kuda antha paiyana Innocent nu ninachen da...........

அருண் பிரசாத் said...

நண்பேண்டா.... நீங்கதானா அது

Philosophy Prabhakaran said...

@ சிவா
இன்னும் பத்த வைக்கவே இல்லை பாஸ்... இது சும்மா புஸ்வானம்...

@ சைவகொத்துப்பரோட்டா
பேச சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்...

@ எஸ்.கே
பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே...

@ நா.மணிவண்ணன்
என்னது அந்தரங்கமா...? அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை... இன்னும் நிறைய சரக்கு இருக்கு... கொஞ்சம் கெளரவமா இருக்கட்டுமேன்னு நிறுத்திக்கிட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ Madhavan
என்ன பாஸ்... படிச்சீங்களா... இல்லையா... திரும்பவும் வரவே இல்லை... கமென்ட் போடும் அளவிற்கு பதிவு இல்லையா...

@ ஹரிஸ்
நன்றி... எல்லாம் ஒரு புலோவுல வர்றது தான்...

@ பார்வையாளன்
நன்றி நண்பரே...

Philosophy Prabhakaran said...

@ இரவு வானம்
அப்படி எதுவும் நடந்தா சந்தோஷப்படுற மொத ஆள் நானாதான் இருப்பேன்...

@ பதிவுலகில் பாபு
நன்றி நண்பரே... அடுத்த பதிவு உலகப்படம் பற்றியது... மறக்காம வந்துடுங்க...

@ Muthu
ஏமாந்துட்டியே முத்து...

@ அருண் பிரசாத்
ஆமாம்... நானே தான்...

ஆர்வா said...

ஐயயோ.. அவரை பார்த்தாகணுமே.. இல்லைன்னா எனக்கு தூக்கமே வராதே...

Unknown said...

சுவரஸ்யமா சொல்லியிருக்கீங்க.. நண்பர்தான் பாவம் ...

ஜில்தண்ணி said...

அடுத்த பிரதமர் சாம் ஆண்டர்சன் வாழ்க வாழ்க :)

Philosophy Prabhakaran said...

@ கவிதை காதலன்
அவரை பார்த்தீங்கண்ணா அதுக்கப்புறம் நீங்க தூங்கமாட்டீங்க...

@ கே.ஆர்.பி.செந்தில்
விடுங்க பாஸ்... அவன் இதெல்லாம் சீரியஸா எடுத்துக்க மாட்டான்...

@ ஜில்தண்ணி - யோகேஷ்
வாங்க ஜில்தண்ணி... நம்ம கடைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... எப்படி இருக்கீங்க...

கேரளாக்காரன் said...

neenga koodiya seekkiram no:1 bloggera varathukkudaana paathaila poitrukkinga well done

Anonymous said...

இதை வாசித்தபோது நம்ம நண்பர்களின் நினைவு தான் வருது.நம்ம நண்பர்களில் பல பேர் இப்புடி தான்.தங்கட பெர்சுக்க நடிகைகளின் படத்தை வச்சுக்கிட்டு திரிவாங்க.ஏனெண்டு கேட்டா "பேர்ஸ் உடம்பில உரசும்போது அந்த நடிகையே உரசுற போல இருக்கிண்டு" மொக்கையா பதில் வரும்,

எப்பூடி.. said...

பிறந்தநாள் வாழ்த்துக்களில் வித்தியாசமான வாழ்த்து :-) நட்புக்குள்ள இப்பிடி வாழ்த்தினாத்தான் ஒரு கிக் :-)

venkat said...

“வாழ்த்தினது” போதும்

எம் அப்துல் காதர் said...

நாங்க இதுவரை அவரை (உங்க நண்பனைத்தான்) பார்க்கலை!! பார்த்தால் பத்தி விடுறோம். ஹி ஹி நல்ல இருக்கு நண்பா!!

Philosophy Prabhakaran said...

@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)
இது என்ன வஞ்சப்புகழ்ச்சியா... எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை... நம்பர் 1 பதிவர்கள் 18+ பதிவுகள் போடலாம்... ஆனால் 18+ பதிவுகள் போடுபவர்கள் எல்லாம் நம்பர் 1 ஆக முடியாது...

@ kanthasamy
ம்ம்ம்... உண்மைதான் பெத்த அம்மா அப்பா போட்டோவக்கூட வச்சிருக்க மாட்டாங்க...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
நீங்களாவது புரிஞ்சிகிட்டீங்களே...

@ venkat
நன்றி...

@ எம் அப்துல் காதர்
நன்றி... அவரை ஏற்கனவே சிலர் பத்திவிட்டு அவர் இந்தப் பதிவை படித்துவிட்டதாக அறிந்தேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பேண்டா....

Unknown said...

நண்பனுக்கு இப்படி ஒரு பிறந்த நாள் பரிசா,
நல்ல வேலை அவர் உங்க கண்ணுல இன்னும் மாட்டல.....
ஓட்டு போட்டாச்சி நண்பா

Philosophy Prabhakaran said...

@ வெறும்பய
நன்றி...

@ விக்கி உலகம்
நான் இன்னும் அவன் கண்ணுல மாட்டலை...

அருண் பிரசாத் said...

பாஸ், ரஜினி தொடர்பதிவு (எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்) எழுதறீங்களா? உங்க பெயரை சேர்க்கலாமா ?

Philosophy Prabhakaran said...

@ அருண் பிரசாத்
கண்டிப்பா சேருங்க... அதுக்குத்தானே இருக்கேன்...

அருண் பிரசாத் said...

ok boss

Anonymous said...

இன்னும் உண்மைகள் இருந்தால் தொடருங்கள்......
அப்போதாவது சினிக்கூத்து சித்தன் கண்ணில் மாட்டுவான்.......

“தமிழ்மொழி பயின்று வராத கவிதை
கனிமொழி பயின்று வந்தது...”
ஹா ஹா ஹா .....................கவிதை சுப்பர்

Philosophy Prabhakaran said...

@ அருண் பிரசாத்
பிண்றோம்ஜி...

@ Anonymous
தொடர்ந்தால் சுவாரஸ்யம் இருக்காது முடிந்தால் பின்னர் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்...
பாராட்டுகளுக்கு நன்றி...
அடுத்தமுறை வரும்போது தங்கள் அடையாளத்தோடு வந்தால் சிறப்பாக இருக்கும்...

மாணவன் said...

செம கலக்கல்...

நண்பேன்டா.. சூப்பர்

Vengatesh TR said...

.தமிழ் இன்னைக்கு கட்டுகிட்டடு போதும்,

.நான், நாளைக்கு வரேன் !!

Philosophy Prabhakaran said...

@ மாணவன், சிகப்பு மனிதன்
நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த மாதிரியே எனக்கும் ஒரு பிரண்டு இருந்தான். ஆனா தோற்றம் மட்டும் தான் நம்ம தலைவர் சாம் மாதிரி, கேரக்டர் நேர ஆப்போசிட்... அட, நெஜமாவே 7-8 கேர்ள் பிரண்டு வெச்சிருந்தான்னு சொல்ல வந்தேன்!