23 November 2010

சொகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாருய்யா

வணக்கம் மக்களே...

ஏற்கனவே இரண்டு பதிவுகளை டைப் அடித்து DRAFTல் வைத்திருக்கும் நிலையில் அவையிரண்டையும் ஓரம்கட்ட வைத்திருக்கிறது ஒரு திரைப்பாடல். ஈசன் படத்திற்காக எழுதப்பட்ட ஜில்லா விட்டு ஜில்லா வந்த... என்று ஆரம்பிக்கும் பாடல். எப்போதுமே எனக்கு ஒரு முட்டாள்தனமான பழக்கம் உண்டு (நிறைய இருக்கிறது... அதில் இதுவும் ஒன்று) ஒரு படத்தின் டைட்டில் பிடித்திருந்தால் மட்டுமே அந்த படத்தை பார்ப்பேன். இல்லையெனில் யார் என்ன சொன்னாலும் அந்தப் படத்தில் கவனம் செலுத்தமாட்டேன். இப்படித்தான் அஞ்சாதே படத்தை புறக்கணித்து பின்னர் படம் வெளிவந்து ஐம்பது நாட்களுக்குப்பிறகு பார்த்தேன். மேலும் களவாணி படத்தை இன்று வரை பார்க்கவே இல்லை. அந்த வரிசையில் ஈசன் படத்தையும் பார்க்கவேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் இப்போது என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.


நேற்றிரவு ஈசன் படத்தின் பாடல்களை பதிவிறக்கி கேட்டுக்கொண்டிருந்தேன். மொத்தம் ஐந்து பாடல்கள். ஜேம்ஸ் வசந்தன் இசையில் எல்லாப் பாடல்களும் அருமையாக இருந்தன. அதாவது, முதல்முறை கேட்கும்போதே பிடிக்கும் அளவிற்கு இருந்தன. ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கூட அதுபோல முதல்முறை கேட்கும்போதே பிடித்துவிடாது. ஐந்து பாடல்களில், நான்கு பாடல்கள் படம் சிட்டி சப்ஜெக்ட் என்பதை புரிய வைத்தன, ஒரு பாடலைத் தவிர. அதுவே இந்தப் பதிவின் தலைப்பாக விளங்கும் அந்தப் பாடல். பாடல் ஆரம்பித்ததும் இப்பல்லாம் எல்லாப் படங்களிலும் கிராமத்து திருவிழா பாடல் ஒன்றினை வைத்துவிடுகிறார்கள் என்று சலித்துக்கொண்டேன். ஆனாலும் பிறந்ததிலிருந்து சிட்டியிலேயே வளர்ந்தவன் என்பதால் மனம் அத்தகைய பாடல்களை விரும்பியது.

வழக்கமான நாட்டுப்புற பாடல்களைப் போலவே வந்தனம் வந்தனம்... என்றே ஆரம்பித்தது. ஆனாலும் அந்தக் குரல் என்னை ஏதோ செய்தது. தஞ்சை செல்வி என்ற நாட்டுப்புற கலைஞர் பாடலைப் பாடியிருக்கிறார். இயல்பான, கரகரப்பான ஒரு குரல். அடுத்த வரிகள்...
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளுய்யா...
தூத்துக்குடி பொண்ணுய்யா... நான் தூத்துக்குடி பொண்ணுய்யா... என் கதையை கேளுய்யா...
சொகத்தை விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாருய்யா...

இந்த வரிகள் பாடலின் மீது ஒருவித எதிர்பார்ப்பை உண்டு பண்ண ஹெட்செட்டை எடுத்து மாட்டிக்கொண்டு உட்கார்ந்தேன். ஒரு சிறுகதையை போல சுருக்கென்று வலிக்க வைத்த அந்த பாடலின் வரிகள் உங்கள் பார்வைக்காக...
அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம்...
வாழ்க்கையில போண்டியாம்...
எட்டாவதா என்னப் பெத்த எங்கப்பனுக்கிது தெரியல...
சுப்பனும் அத சொல்லல... சுப்பனும் அத சொல்லல...

வளர்ந்து நிக்கிற தென்னையா வக்கனையா நான் நின்னேன்...
வக்கனையா நான் நின்னேன்...
எழயும் கர சேர்த்ததினால் எழரையா நான் ஆனேன்...
எழரையா நான் ஆனேன்...

அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா மாப்பிள்ளை...
பீக்காளிக்கு மறுபிள்ளை...
வளையை போல என்ன தட்டி போனானய்யா மாப்பிள்ளை...
துப்பில்லாத ஆம்பிளை... அவன் துப்பில்லாத ஆம்பிளை...

அஞ்சாம் நாள் மூட்டுவலியில் மாப்பிள்ளை தான் படுத்துட்டான்...
என் உசுர எடுத்துட்டான்...
ஒன்னு போனா ஒன்னு வந்து வருசமெல்லாம் சோர்ந்துட்டான்...
கனவையெல்லாம் ஓடச்சிட்டான்... என் கனவையெல்லாம் ஓடச்சிட்டான்...

காய்ச்சலுக்கு காடு வித்தேன்... இருமலுக்கு நிலம் வித்தேன்...
வித்ததெல்லாம் போக அட எச்சமாக நான் நின்னேன்...
மிச்சமாக நான் நின்னேன்... அட மிச்சமாக நான் நின்னேன்...

ஊரிலுள்ள மீசையெல்லாம் என்னச் சுத்தி வந்துச்சு...
இள மனச கெடுத்துச்சு...
உசுர விட மானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சது...
வயிறு எங்க கேட்டுச்சு...
ஒரு சாண் வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன்...
நான் எல்லாத்தையும் விக்கிறேன்...
இப்ப இங்க நிக்கிறேன்... என் கதையை முடிக்கிறேன்...
ஒரு சாண் வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன்...
நான் எல்லாத்தையும் விக்கிறேன்...
இப்ப இங்க நிக்கிறேன்... என் கதையை முடிக்கிறேன்...

மோகன்ராஜ் என்ற கவிஞர் இந்தப் பாடலை இயற்றியிருக்கிறார். தஞ்சை செல்வியின் தமிழ் உச்சரிப்பு கூட பாடலுக்கு பலம் சேர்த்திருக்கிறது. எனக்கு இசையை பற்றி எதுவும் தெரியாது. சில ஆண்டுகளுக்கு தமிழகத்தின் தென்மாவட்டமொன்றில் நடந்த திருமண விழாவில் ஒரு இசைக்கருவியின் இசையை கேட்க நேர்ந்தது. நாதஸ்வரம் போன்றதொரு இசைக்கருவி அது ஆனால் நாதஸ்வரம் இல்லை. அதன் பெயர் என்ன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. நாயனமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். அந்த இசைக்கருவியையே இந்தப் பாடல் முழுவதிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். அது என்ன இசைக்கருவி என்று விவரம் தெரிந்தவர்கள் கேட்டு சொல்லுங்கள்.

தமிழிஷில் ஓட்டு போடுவது, பின்னூட்டமிடுவது இதற்கெல்லாம் முன்னதாக முதலில் இந்தப் பாடலை கேளுங்கள். கீழே பாடுலுக்கான யூடியூப் இணைப்பை கொடுத்திருக்கிறேன் (ஆடியோ மட்டும்):


படத்தில் இந்தப் பாடலை எந்த இடத்தில் எப்படி இணைத்திருப்பார்கள் என்று தெரிந்துக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறது. அதற்காகவே படத்தை பார்ப்பதென்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் நந்தலாலாவும் ஈசனும் ஒரே நாளில் வெளியானால் நந்தலாலாவுக்குத்தான் முன்னுரிமை. பின்ன, தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் தான் காத்திருப்பது.

உபரித்தகவல்: பாடகி சின்மயி இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தப் பாடலையும் அதன் வரிகளையும் புகழ்ந்து ட்வீட்டியிருக்கிறார்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

53 comments:

எப்பூடி.. said...

பாடல் வரிகளை வாசித்துக்கொண்டே கேட்டபோது முதல் தரத்திலேயே மிகவும் பிடித்து போயிற்று. அஞ்சாதே, ஈசன் கூட ரத்தத்த சரித்திரமும் வருகிறதென்று நினைக்கிறேன்.

ஹரிஸ் Harish said...

களவாணி படத்தை இன்று வரை பார்க்கவே இல்லை//
களவாணி தலைப்பு நல்லா தான் இருக்கு..

ஹரிஸ் Harish said...

பாட்டு நல்லா இருக்கு தல..

துமிழ் said...

nallaaththaan irukku

pichaikaaran said...

நன்றாக ரசித்து இருக்கிறீர்கள்..

பகிர்வுக்கு நன்றி

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பாட்டு ரொம்ப கனமா இருந்தது :((

வெங்கட் said...

பாட்டு நல்லா இருக்கு

Unknown said...

Hi bloggers/webmasters submit your blog/websites into http://www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends….

http://www.ellameytamil.com

இப்பகுதியில் செய்திகள், தொழில்நுட்பம், தமிழ் வரலாறு, தமிழ் சினிமா, நகைச்சுவை, கதை, கவிதை, சினிமா பாடல்கள் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இங்கே கிடைக்கும்…

http://www.ellameytamil.com

Ramesh said...

கண்டிப்பாக கேட்டு விடுகிறேன் இந்தப் படத்தின் பாடல்களை.. வரிகள் சுருக்கென்றுதான் இருக்கின்றன..

Unknown said...

ரொம்ப ரசிச்சு கேட்டிருக்கீங்க போல..

அலுவலகத்துல இருக்கறதால வீட்ல போய் டவுன்லோட் பண்ணிக் கேக்கறேன்..

கலக்குங்க பிரபாகரன்..

மாணவன் said...

அருமையாக ரசனையுடன் அழகாக பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்,

பாடல் வரிகளில் ஒரு விலைமாந்தரின் நிலையை உணர்வுகளுடன் சிந்திக்கக்கூடியதாய் பதிவு செய்துள்ளார் கவிஞர், வாழ்த்துக்கள்

பகிர்வுக்கு நன்றி

priyamudanprabu said...

பகிர்வுக்கு நன்றி

Mugundan | முகுந்தன் said...

அருமையான பாடல்,
கேட்பதற்கும் இனிமை...

அவள் படும் துன்பம்...
இயற்கையானது.

கவிஞருக்கு வாழ்த்துகள்...உங்களுக்கும்
பிரபாகரன்.(பாடலை அறிமுகப்படுத்தியமைக்கு)

Arun Prasath said...

நல்ல பகிர்வு நண்பரே

karthikkumar said...

நானும் இந்த படத்திற்குதான் வெய்ட்டிங் தல

NaSo said...

ஒரு நல்ல பாடலை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி நண்பரே!

Unknown said...

ரொம்ப நாள் கழித்து சிறுகதை போன்ற பாடம் வரிகள், நன்றாக உள்ளது.

'பரிவை' சே.குமார் said...

எனக்கு எப்பவுமே கிராமிய இசைப்பாடல்கள் மிகவும் பிடிக்கும்... அந்த வரிசையில் ஈசன் பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்டதில் என்னை ஆட்கொண்ட பாடல் இது. நல்ல பாடல்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் போயி பாட்டக் கேக்குறேன்....!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பாடல் நண்பரே. அறிமுகத்திற்கு நன்றி. ஒரு விலைமாதின் கதையை அழகாய் பாட்டில் வடித்திருக்கிறார் பாடலாசிரியர். குரலும், இசையும் பலம் சேர்க்கிறது பாடலுக்கு. நன்றி.

ம.தி.சுதா said...

அருமை அருமை... ஜேம்ஸ் வசந்திடம் ஒரு வித்தியாசமான திறமையிருக்கிறது....

தல தளபதி said...
This comment has been removed by the author.
ஹரிஸ் Harish said...

//உசுர விட மானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சது...
வயிறு எங்க கேட்டுச்சு...//

இந்தவரி நச்..

தல தளபதி said...

//ஆனால் நந்தலாலாவும் ஈசனும் ஒரே நாளில் வெளியானால் நந்தலாலாவுக்குத்தான் முன்னுரிமை. பின்ன, தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் தான் காத்திருப்பது.//

முன்னுரிமை கொடுக்கலாம் என்ன ஒன்னு; இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சி நா இதுக்கு முன்னாடி எடுத்த படமெல்லாம் குப்பை படம்னு மிஷ்க்கின் சொல்லுவாரு, படம் பாத்துட்டு நல்லாருக்குன்னு சொன்ன நமக்கும் பல்ப்பு, அந்த படத்துல வேல செஞ்ச டெக்னிஷியன்சுக்கும் பல்ப்பு.

பாட்டு சூப்பர்.

THOPPITHOPPI said...

நானும் நந்தலாலா படத்துக்காகதான் காத்திருக்கிறேன். ஆனால் மனுஷன் இதற்க்கு முன் எடுத்த அஞ்சாதே,சித்திரம் பேசுதடி படத்தை குப்பை படம் என்று சொல்லி இருக்கிறார், தான் நடித்த படம் வெளிவரும் ஆணவத்தில் இப்படி சொன்னாரா இல்லை உண்மையில் அந்தளவுக்கு நல்லா இருக்கானு படம் வெளிவந்த பின்தான் பார்க்கணும்.

எஸ்.கே said...

பாட்டு கேட்டேன்! மிக நன்றாக இருந்தது!

சைவகொத்துப்பரோட்டா said...

பகிர்ந்தமைக்கு நன்றி பிரபாகர்.

இம்சைஅரசன் பாபு.. said...

பாட்டு கேட்டான் நல்ல இருக்கு .....நீங்க கேட்ட வாத்தியம் ஒண்ணுல நாயனம் ன்னு சொல்லுவாங்க .....இல்லேன்னா ஒத்து ன்னு இன்னொன்றாக இருக்கும் என்று நினைக்கிறன் மக்கா

Anonymous said...

நான் இன்னும் கேக்கல.. இந்தப் பதிவ படிச்சதுனால ஆர்வம் கூடிருச்சு.

Unknown said...

இன்னும் பாட்டு கேக்கல...

அன்பரசன் said...

//இப்படித்தான் அஞ்சாதே படத்தை புறக்கணித்து பின்னர் படம் வெளிவந்து ஐம்பது நாட்களுக்குப்பிறகு பார்த்தேன்.//

நானும்தான் சில மாதங்கள் கழித்து பார்த்தேன்.இந்த பாடல்களை கேட்டுட்டு அப்புறம் சொல்றேன்.

சி.பி.செந்தில்குமார் said...

good post praba

க ரா said...

i downloaded it.. but yet to hear it.. Thanks for sharing...

Unknown said...

super பதிவு நண்பரே

என்ன என் பதிவு பக்கம் ஆளையே காணும்.
ரொம்ப busy யோ

Anonymous said...

supper song da.....

சூன்யா said...

பாட்டு கேட்டேன், நீங்க சொன்னது அத்தனையும் உண்மை நண்பரே,,,

Prasanna said...

போட்டு தாக்கிட்டீங்க... உடனே கேட்டுபுட்றேன் :)

தமிழி said...

தம்பி பிராபகரனின் வலைத்தளம் தமிழில் இணைக்கப்பட்டுள்ளது. சிறந்த வலைப்பதிவர்களின் இணையப் பாலத்தில் தங்களை இணைத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஏதேனும் சந்தேகம் உண்டானால் என்னை அணுகவும். நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்.. . .வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி.., ஹரிஸ், துமிழ், பார்வையாளன், எல் போர்ட்.. பீ சீரியஸ்.., வெங்கட், பிரியமுடன் ரமேஷ், பதிவுலகில் பாபு, மாணவன், பிரியமுடன் பிரபு, எண்ணத்துப்பூச்சி, Arun Prasath, karthikkumar, நாகராஜசோழன் MA, இரவு வானம், சே.குமார், பன்னிக்குட்டி ராம்சாமி, வெங்கட் நாகராஜ், ம.தி.சுதா, தல தளபதி, THOPPITHOPPI, எஸ்.கே, சைவகொத்துப்பரோட்டா, இம்சைஅரசன் பாபு.., இந்திரா, கே.ஆர்.பி.செந்தில், அன்பரசன், சி.பி.செந்தில்குமார், இராமசாமி கண்ணண், விக்கி உலகம், sweetprabha, சூன்யா, Prasanna, தமிழி, T.V.ராதாகிருஷ்ணன்
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
நந்தலாலா என்று எழுதுவதற்கு பதிலாக அஞ்சாதே என்று எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்... இருக்கட்டும்... ரத்த சரித்திரம் படத்தை எல்லாம் நான் கணக்கிலேயே சேர்க்கவில்லை...

Philosophy Prabhakaran said...

@ ஹரிஸ்
// களவாணி தலைப்பு நல்லா தான் இருக்கு.. //

என்னவென்று தெரியவில்லை... எனக்கு பிடிக்கலை...

Philosophy Prabhakaran said...

@ எண்ணத்துப்பூச்சி
என்னத்துப்பூச்சி... பெயரே வித்தியாசமாக இருக்கிறது... நன்றி...

Philosophy Prabhakaran said...

@ தல தளபதி
மிஷ்கினோடு நமக்கு சில மாற்றுகருத்துக்கள் இருக்கின்றன... இருப்பினும் அவரது படைப்புகள் ரசிக்கவும் வரவேற்கவும் வேண்டியவை... அவர் இதற்கு முன்னால் எடுத்த படங்கள் கமர்ஷியல் படங்கள் என்ற அர்த்தத்தில் அவர் அப்படி குறிப்பிட்டிருக்கிறார்... சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...

Philosophy Prabhakaran said...

@ THOPPITHOPPI
அவர் இதற்கு முன்னால் எடுத்த படங்கள் கமர்ஷியல் படங்கள் என்ற அர்த்தத்தில் அவர் அப்படி குறிப்பிட்டிருக்கிறார்... சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...

Philosophy Prabhakaran said...

@ இம்சைஅரசன் பாபு..
வாத்தியம் பற்றிய விளக்கம் கொடுத்ததற்கு தனியாக ஒரு தேங்க்ஸ்...

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
கொஞ்சம் பிஸிதான்... அடுத்த வாரத்தில் பழைய நிலைக்கு திரும்பிவிடுவேன்...

sound balu said...

super song 10 time

Unknown said...

supar song

BoobalaArun said...

உண்மையிலே ஊரில் திருவிழாவில் ஒரு பாடல் கேட்ட அனுபவம்.

ஊர் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இது தெரியும்.

அப்புறம் , நான் இன்னும் அஞ்சாதே படம் பாக்கவே இல்ல. ஏன் நம்ம ஜாக்கிசேகர் எழுதினத கூட வாசிக்கல.

படம் நல்லா இருக்குன்னு பலபேர் சொல்லியும் இன்னும் நான் பார்க்கல. இப்ப dounload போட்டுட்டேன்.

நீ கலைவாணி பாரு , உண்மையில் நல்ல பொழுதுபோக்கு படம்.

Philosophy Prabhakaran said...

@ sound balu, SENTHIL
இருவருக்குமே முதல் வருகை என்று நினைக்கிறேன்...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Philosophy Prabhakaran said...

@ WiNnY...
// அப்புறம் , நான் இன்னும் அஞ்சாதே படம் பாக்கவே இல்ல. ஏன் நம்ம ஜாக்கிசேகர் எழுதினத கூட வாசிக்கல. //
பாருங்க... நல்ல கமர்ஷியல் படம்...

// நீ கலைவாணி பாரு , உண்மையில் நல்ல பொழுதுபோக்கு படம். //
ஏற்கனவே பதிவிறக்கி வைத்திருக்கிறேன்... பார்ப்பதற்கு நேரம்தான் கிடைப்பதில்லை...

Nirmal said...

Mr.Prabakar
The musical instrument name is Clarinet. it is western classical instrument. Very common instrument played during South District Christian marriages.
Thank you

Jegan said...

அந்த வாத்தியம் கிளாரினெட். பாட்டை முதலில் ஆடியோவில் கேட்கும்போது நல்லாயிருந்தது. வித்தியாசமான பாடல். ஆனால் படத்தில் பார்க்கும்போது அந்தளவுக்கு ஒட்டவில்லை. அந்த பெண்ணின் body language எதார்த்தமாக இல்லை. சுப்ரமணியபுரம் படத்தில் வரும் "மதுர குலுங்க குலுங்க.." பாடல் ஒரு எதார்த்தமான கிராமத்தை நேரில் பார்த்ததுபோல இருக்கும். அந்த எதார்த்த்டம் இந்த பாடலில் missing.