1 November 2010

தமிழ் சினிமாவின் தறுதலை ஹீரோக்கள்...!

வணக்கம் மக்களே... 

வேலையில்லாத வயிற்றெரிச்சலில் பதிவெழுத உட்கார்ந்தால் இதுபோன்ற பதிவையெல்லாம் எழுதத் தோன்றுகிறது. சமீபகாலமாக தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் ஹீரோ கதாப்பாத்திரமே எனது இந்த சமூகக்கோபத்திற்கு காரணம். இப்பொழுதெல்லாம் தமிழ் சினிமாக்களில் ஹீரோவிற்கு இரண்டே விதமான கேரக்டர்கள் தான். ஒன்று, சிட்டியில் வேலைவெட்டியில்லாமல் சுற்றிவரும் கேரக்டர். இன்னொன்று, கிராமம்களில் சண்டித்தனம் பண்ணிக்கொண்டு திரியும் கேரக்டர். இதற்கெல்லாம் விதிவிலக்காக அவ்வப்போது சில நல்ல திரைப்படங்களும் வருகிறது. ஆனால் நம் தமிழ் சினிமா ரசிகர்கள் அன்னப்பறவையை போன்ற மேன்மையான குணம் கொண்டவர்கள். சினிமாவில் இருந்து கெட்ட விஷயங்களை மட்டும் உறுஞ்சி எடுத்துக்கொண்டு நல்ல விஷயங்களை எல்லாம் தூக்கி கடாசிவிடுவார்கள்.


பொதுவாக ஹீரோவின் பாத்திர படைப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம் :-
·          ஹீரோ ரொம்ப அசால்ட். யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்.
·          ஹீரோவின் அப்பா எப்போதும் ஹீரோவை திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் ஹீரோ அவரையும் மதிக்காமல் வெறுப்பேற்றும் விதமாகவே செயல்படுவார்.
·          ஹீரோவின் அம்மா ரொம்ப பாசக்கார அம்மா கூடவே கொஞ்சம் லூசாகவும் இருப்பார். அப்பா கேரக்டர் ஹீரோவை அசிங்க அசிங்கமாக திட்டிக்கொண்டிருக்கும்போது சலனமே இல்லாமல் இடையில் புகுந்து ஹீரோவிற்கு ஹார்லிக்ஸ் கொடுப்பார்.
·          ஹீரோவிற்கு தங்கை, தம்பி, அண்ணன், அக்கா, அண்ணி போன்ற கேரக்டர்கள் அவ்வப்போது காமெடிக்காகவும் பொழுதுப்போக்கவும் வந்துசெல்வார்கள்.
·          ஹீரோவை யாராவது இரும்புக்கம்பியால் இருபது முறை பின்மண்டையில் அடித்தால் கூட ஹீரோ எழுந்து வந்து வில்லன் கும்பலை புரட்டி எடுத்து புரோட்டா போடுவார்.
·          இரண்டரை மணிநேர படத்தில் கடைசி அரைமணிநேரம் இருக்கும்போது எப்படியோ ஹீரோவிற்கு பொறுப்பு வந்து ஒரே பாடலில் பணக்காரன் ஆகிவிடுவார்.

மேற்கூறிய கேரக்டரை சில ஆண்டுகளுக்கு முன்பு மருமகப்புள்ளை தனுஷ் குத்தகைக்கு எடுத்திருந்தார். அவரது படங்கள் அனைத்திலுமே அப்பா மகனை சகட்டுமேனிக்கு திட்டுவதும் மகன் கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் அதைக்கேட்டு பல்லிளிப்பது போன்ற காட்சியொன்று நிச்சயம் இடம்பெறும். தற்போது சிலகாலமாக சிவக்குமாரின் தவப்புதல்வரும் சூர்யாவின் தம்பியாண்டானும் ஆகிய கார்த்தி இந்த கேரக்டரை கவ்வியிருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாஸ் (எ) பாஸ்கரன் படத்திலும் ஹீரோவிற்கு இப்படியொரு மானங்கெட்ட கேரக்டர் தான். பாஸ் இயக்குனர் இதற்குமுன்பு எடுத்த சிவா மனசுல சக்தி படத்திற்கும் இதே அக்கப்போர் தான். ஹீரோ கேரக்டர் இப்படியென்றால் ஹீரோயின் கேரக்டர் அதற்கும் மேல. தேடிக்கண்டுபிடித்து வெட்டிப்பயலை தான் லவ்வுவார்களாம்.

பையா படத்தில் தமன்னாவும் கார்த்தியும் கட்டிப்பிடித்துக்கொள்வதோடு படம் நிறைவு பெறும். அதன்பிறகு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தமன்னாவுடன் பன்னாடைப்பயல் கார்த்தி எப்படி குடும்பம் நடத்தினான் என்பதை யாரும் காட்டமாட்டார்கள் நாமும் யோசிக்க மாட்டோம். பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் முதல்பாதியில் ஹீரோ ஒரே பாடலில் பணக்காரன் ஆவதை ஒரு காட்சியில் கிண்டலடித்து இருப்பார்கள். ஆனால் இரண்டாம் பாதியில் அங்கேயும் அதே கதைதான். கொஞ்சம் கூட படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்கள் ஒரே பாடலில் மனம்திருந்தி படித்து பாசாகிவிடுவார்கள் படம் பார்ப்பவர்களை லூசாக்கிவிடுவார்கள்.

இத்தகைய செயல்களுக்கெல்லாம் திரைத்துறையினரை மட்டும் குறை சொல்லமுடியாது. குடும்பத்தோடு சினிமா பார்த்தவர்கள் எல்லாம் தற்போது மலிவு விலை தகடுகளில் முடங்கிவிட திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முன் இருக்கையில் கால்களை போட்டுக்கொண்டு பான்பராக்கை வாயில் குதப்பிக்கொண்டு திரியும் சைனா மொபைல் கும்பல்தான். இவர்களால் தான் நல்ல படங்களெல்லாம் வந்த வேகத்தில் திரும்பிவிடுகின்றன. மிஷ்கினின் நந்தலாலா இதுவரை ரிலீஸ் ஆகாதது கூட இதுபோன்ற கலரிங் ம(ண்)டையர்களால்தான்.

யார் என்ன சொன்னாலும் தமிழ் சினிமா திருந்தப் போவதில்லை. இனி திருந்த வேண்டியது நாம் தான். இனியாவது வெட்டி ஆபிசர் ஹீரோக்களை ரசிப்பதை நிறுத்திவிட்டு போய் அவங்கவங்க புள்ளக்குட்டிங்களை படிக்க வைப்போம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

58 comments:

Chitra said...

அப்பா கேரக்டர் ஹீரோவை அசிங்க அசிங்கமாக திட்டிக்கொண்டிருக்கும்போது சலனமே இல்லாமல் இடையில் புகுந்து ஹீரோவிற்கு ஹார்லிக்ஸ் கொடுப்பார்.

......நீங்க இங்கே திட்டிக்கிட்டு இருங்க - தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில இருந்து, தமிழ் டைரக்டர்ஸ் அனைவருக்கும் ஹார்லிக்ஸ் கொடுக்கப் போறாங்களாம்..... ஹி,ஹி,ஹி,ஹி....

சைவகொத்துப்பரோட்டா said...

சாப்பாட்டுக்கே வழி இல்லைன்னாலும் ரீபோக் சூவோடதான் ஹீரோ உலா வருவார், இதை விட்டுடீங்களே.

NaSo said...

இன்னும் நிறைய இருக்குங்க. இதையெல்லாம் பேசுறதுக்கு சினிமாவை பார்க்காமல் விட்டுடலாம்.

raja said...

மேற்கண்ட படங்களை பாராட்டிஎழுத துடியாய் துடிக்கும் பிளாக்கர்களை பற்றி மட்டும் ஏன் எழுதமா விட்டுட்டிங்க...?பாஸ் படத்துக்கு குறைந்தது 300 டிக்கெட்டாவது விற்று கொடுத்திருப்பார்கள் பிளாக்கர்கள் விமர்சனம் அப்படி..என்னவோ நாயப்போல கத்தி கத்தி சொன்னாலும் ..மண்டையிலிருந்து அறிவ வழிச்சி சொன்னாலும் யாருக்கு உரைக்கிறது.

Oceanhooks said...

Super machi!
சாட்டை அடி!
Recently i saw a movie "Katrathu Kalavu", a nice movie. I was surprised how this movie failed at the box office!!
The trend needs to change!

Unknown said...

அது என்னமோ தெரியல்லையங்க இந்த மாதிரி தறுதலையா பயபுள்ளைகளதான் இந்த பொண்ணு களுக்கு ரொம்ப புடிக்குது
நானும் எத்தனயோ பொண்ணுக கிட்ட பொய்
ஹாய் , i am business man , நானும் தொழிலதிபர் தான் ,monthly 10000 earn பண்றேன் (பொய் ) சொல்றேன் . ம்ஹூம் ஒன்னும் கண்டுமாட்டேங்குது . வாழ்க்கை புல்லா ப்ரம்ச்சாரியாவே இருந்துடுவேன் போல .ரொம்ப வருத்தமா இருக்கு
bye bye
உங்க பதிவுக்கு அந்த தறுதலைகளோட தறுதலைகள் (i mean ரசிகர்கள் )ஆட்டோல வந்துடபோறாங்க .be careful

sivakumar said...

நச்! அட இதுபோல் நானும் ஒரு பதிவெழுதலாம்னு இருந்தேன். வேலை மிச்சம். இதெல்லாம் நம்முடைய இயலாமையை பார்த்து நம்மையே சிரிக்க வைத்து காசாக்கும் உத்தி.

//ஹீரோ ரொம்ப அசால்ட். யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்//

இவரு அடுத்தவன கோர்த்துவிட்டு அடிவாங்கவைக்கிறது, ஏமாத்தறதெல்லாம் நகைச்சுவைக்காட்சியா இருக்கும்(பருத்தி வீரன், களவாணி மற்றும் பல). இதையே வில்லன் பண்ணுனா சணடைக்காட்சியா இருக்கும்.

இவரு பொண்ண படாத பாடு படுத்துவாரு, கேட்ட லவ்வ, க்லாய்க்கிறது (7g ரெயின்போ காலனி, சிம்புவின் படங்கள்), இதே அடுத்தவன் பண்ணினா தூள் கெளப்புவாரு

இவரோட ஆள அடுத்தவன follow பண்ணுனா புரட்டி எடுப்பாரு. ஆனா இவரு மட்டும் அடுத்தவன் லவ்வரை ரூட்டு விடுவாரு அத்தனை பேரும் வெளக்கு புடிச்சிட்டு வேடிக்கை பார்ப்பாங்க (குட்டி)

// ஹீரோ கேரக்டர் இப்படியென்றால் ஹீரோயின் கேரக்டர் அதற்கும் மேல. தேடிக்கண்டுபிடித்து வெட்டிப்பயலை தான் லவ்வுவார்களாம்.// ஹீரோனா அப்படித்தான்.

முக்கியமா இன்னொன்னு நாயகி ஒண்ணு பணக்காரியா இருப்பாக இல்லாட்டி பெரிய வேலையில் இருப்பாக தேடி வந்து நம்மாளுக்கு உதவுவாங்க.


இதெல்லாம் நம்ம இரசிகர்களுக்குப் புடிக்கக் காரணமென்னனு கேட்டா இவரு ஹீரோயின்கிட்ட சவால் விடறப்பெல்லாம் "நாங்க எல்லாம் நாங்க எல்லாம்" அப்படின்னு ஒட்டுமொத்த பசங்களோட பிரதிநிதி மாதிரி பேசுவாரு. அதான்

"இவர்களால் தான் நல்ல படங்களெல்லாம் வந்த வேகத்தில் திரும்பிவிடுகின்றன// இது தப்புனு நினைக்கிறேன். எல்லா தரப்பினரும் இதை விரும்பிப் பார்க்கிறார்கள்.

Unknown said...

விடுங்க பாஸ், ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்கு

Prasanna said...

ஹீ ஹீ நல்ல தொகுப்பு :)

Robin said...

//சினிமாவில் இருந்து கெட்ட விஷயங்களை மட்டும் உறுஞ்சி எடுத்துக்கொண்டு நல்ல விஷயங்களை எல்லாம் தூக்கி கடாசிவிடுவார்கள்// அடேங்கப்பா :)

அருண் பிரசாத் said...

நல்ல தொகுப்பு பிரபா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம டாகுடரோட படங்களையோ, கேரக்டர்களையோ திட்டுவதற்கு கூட சேத்துக்கொள்ளாததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்!

Philosophy Prabhakaran said...

@ Chitra
தொடர்ச்சியான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... எப்படி உங்களால் எல்லோருடைய வலைப்பூவிற்கும் தவறாமல் பின்னூட்டம் போட முடிக்றது என்று தெரியவில்லை... கலக்குறீங்க...

Philosophy Prabhakaran said...

@ சைவகொத்துப்பரோட்டா
நீங்க சொன்ன பாயிண்டும் சூப்பர்... முடிஞ்சா பதிவில் இணைத்துக்கொள்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ நாகராஜசோழன் MA
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... ம்ம்ம்... சினிமா பாக்காம இருக்குறது ரொம்ப கஷ்டம் நண்பரே... பழகிடுச்சு...

Philosophy Prabhakaran said...

@ raja
பிற பதிவர்களைப் பற்றி தற்போது எழுதும் எண்ணம் எதுவும் இல்லை... இருக்கிற ஏழரை போதாதா இது வேறையா...?

Philosophy Prabhakaran said...

@ micman
Thanks for visiting my blog da... i too will try to see that Katrathu Kalavu Movie...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
கடுமையா பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் போல... உண்மையில் இது மகிழ்ச்சியாக சொல்ல வேண்டிய விஷயம்... நீங்களாவது எந்த அக்கப்போரும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறீர்களே... ஆட்டோ தானே தாராளமா வரட்டும் நம்மகிட்ட லாரியே இருக்கு...

Philosophy Prabhakaran said...

@ தமிழ்மனை
மிகவும் கூர்மையாக படித்து கிட்டத்தட்ட ஒரு பதிவின் அளவிற்கு பின்னூட்டம் போட்டதற்கு மிக்க நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Philosophy Prabhakaran said...

@ இரவு வானம்
ம்ம்ம்... உங்களுக்கு என்ன பீலிங்கோ...

Philosophy Prabhakaran said...

@ பிரசன்னா, Robin, அருண்பிரசாத்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராமசாமி
டாகுடரைப் பற்றியெல்லாம் எழுதி எழுதி போர் அடிச்சிடுச்சு பாஸ்... புதுசா யாரையாவது கலாய்க்கலாம்...

Ponchandar said...

இப்ப வர்ற படத்துல ஹீரோ தன்னைவிட வயசான ஹீரோயின டாவடிக்கிறாங்க ! ! ! லவ்வு படமெல்லாம் க்ளைமாக்ஸ்-ல கையை பிடிக்கிறதோட சரி ! ! அலைகள் ஓய்வதில்லை-Part2 படமெடுக்கிற தில் இப்போ யாருக்காவது இருக்கா ????

Anonymous said...

congratulations wudanpirappe a.c.ramalingam thalaivar akimshai puligal katchi trichy.3n 9626314128

Unknown said...

please visit kollywood,tollywood movie gallery www.tamilrange.com

க ரா said...

நல்ல கோபம்.. இவிங்கல என்னத்த பண்ண பிரபாகரன் :)

ராம்ஜி_யாஹூ said...

nice post, this is anti MGR, negative formula.

வருண் said...

***வேலையில்லாத வயிற்றெரிச்சலில் பதிவெழுத உட்கார்ந்தால் இதுபோன்ற பதிவையெல்லாம் எழுதத் தோன்றுகிறது. சமீபகாலமாக தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் ஹீரோ கதாப்பாத்திரமே எனது இந்த சமூகக்கோபத்திற்கு காரணம். ***

யார்ட்டயும் சொல்லாதீங்க, எனக்கு ஒரு சில ஹீரோக்களை பார்க்கும்போது கால்ல உள்ளதை கழட்டி அந்த தருதலைங்கள அடிக்கனும்போல இருக்கும்.

ஆனா எல்லாத்துக்கும் காரணம் எந்திரன் படம்தான்னு "பெரிவா" சொல்றா!

நீங்க ஏன் இந்த மாதிரி தருதலை ஹீரோக்களையெல்லாம் அனலைஸ்ப் பண்ணி சிரத்தையுடன் பேசுறீங்க? அறிவு சீவிகளை கேட்டீங்கனா எல்லாத்துக்கும் காரணம் ரசினியும் எந்திரனும்தான் னு சொல்லுவாக! ரசினி இல்லைனா தமிழ்நாடு இந்நேரம் சூப்பர் பவராகி அமெரிக்காவுக்கு முன்னால இருக்கும்னு மேதைகள் சொல்றதைக் கேட்டதில்லையா நீங்க?!

Rekha raghavan said...

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. ஆனா கேட்கணுமே நம்ம ரசிகர்கள். தேவையான பதிவு.

ரேகா ராகவன்.

ஜோ/Joe said...

+1
அப்படியே நான் சொல்ல நினைச்சதை சொல்லியிருக்கீங்க.

பாலா said...

முதலில் ஹீரோ என்பதே சரியான வார்த்தை கிடையாது. லீடிங் ரோல் என்றுதான் சொல்ல வேண்டும். ஹீரோ என்றால் ரொம்ப நல்லவன். லீடிங் ரோல் என்றால் கதையின் நாயகன் அதாவது கதை யாரை சுற்றி நடக்கிறதோ அவன்.

இந்த மாதிரி ஆட்களை நீங்கள் பார்த்ததில்லையா. அப்பன் காசில் டிப்டாப்பாக சுத்துபவர்களை பார்த்ததில்லையா? அவர்களுக்குத்தான் காதலி இருக்கும் சரிதானே? அவர்கள் வாழ்க்கையிலும் சில சுவாரசியமான நிகழ்வுகள் நடக்கும்தானே. அதைத்தான் படத்தில் காட்டுகிறார்கள். நான் இந்த மாதிரி படங்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைக்காதீர்கள். இவை வேறு பொழுது போக்கு படங்கள். இதில் மெச்செஜ் தேடினால் கடுப்புதான் வரும்.

அலைகள் பாலா said...

நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டிங்க..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லா சூடா எழுதியிருக்கீங்க!

Unknown said...

அவங்கவங்க புள்ளக்குட்டிங்களை படிக்க வைப்போம்.
-
அது என்ன ஆனா ஊனா இந்த டயலாக உடரிங்க நீங்களும் சினிமாவாதி ஆயிட்டிங்க பாத்திங்களா -என்னமோ எல்லாரும் புள்ளைங்கள ஊர மேய சொல்றாமாதிரி
- சும்மா தான் எதாவது நானும் சொலனும்ல

Philosophy Prabhakaran said...

@ Ponchandar
ம்ம்ம் கரெக்ட்... சமீபத்துல வந்த காதல் சொல்ல வந்தேன், பானா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்கள் இதற்கு உதாரணம்...

Philosophy Prabhakaran said...

@ Anonymous
என்னது அகிம்சை புலிகள் கட்சியா... "ஆள" விடுங்கப்பா.... ஐயோ நான் அந்த அர்த்ததுல சொல்லல... என்னை விடுங்கப்பா...

Philosophy Prabhakaran said...

@ bala
வந்தாச்சு... வந்தாச்சு...

Philosophy Prabhakaran said...

@ ராமசாமி கண்ணன், ராம்ஜி யாஹூ
வருகை கருத்துக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Philosophy Prabhakaran said...

@ வருண்
சரியா சொன்னீங்க வருண்... இந்திரன் பத்தி ஏற்கனவே நெறைய எழுதிட்டாங்க... இதப் படிங்க மொதல்ல...

http://idlyvadai.blogspot.com/2010/10/blog-post_5154.html

Philosophy Prabhakaran said...

@ ரேகா ராகவன், Jayadeva, ஜோ
வருகை கருத்துக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Philosophy Prabhakaran said...

@ பாலா
மாற்றுக்கருத்தினை வரவேற்கிறேன்... ஆனால் எதோ ஊரிலுள்ள இளைஞர்கள் எல்லாம் வெட்டிப்பயல்கள் என்பது போல சித்தரிக்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை... தவிர நல்ல இருக்குறவங்க கூட சினிமா பாத்து கெட்டு போறாங்க...

Philosophy Prabhakaran said...

@ அலைகள் பாலா, எல் போர்டு
வருகை கருத்துக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
ம்ம்ம்... அதன் அர்த்தம்... நாம தான் இந்த மாதிரி படங்களை பார்த்து நாசமா போயிட்டோம்... நம்ம புள்ளகுட்டிங்களையாவது படிக்க வைப்போம்...

ப்ரியமுடன் வசந்த் said...

ரைட்டு பாஸ் அப்படியே சில டைரக்டர்ஸையும் புடிச்சு ஆட்டுங்களேன்!

தமிழ் வினை கருத்து மிகச்சரி!

Philosophy Prabhakaran said...

@ ப்ரியமுடன் வசந்த்
இப்ப உங்க நாட்டுல என்ன நேரம்னு தெரியல... ஆனா இந்திய நேரப்படி நள்ளிரவு தாண்டி என் பதிவை படித்ததற்கு நன்றி... சீக்கிரமே டைரக்டர்களையும் பிடிச்சு ஆட்டிரலாம்...

'பரிவை' சே.குமார் said...

நல்லா எழுதியிருக்கீங்க...
இன்னும் நிறைய இருக்குங்க.

Anonymous said...

Wonderful Punch! Prabhakaran!You are absolutely correct!
- from, sivakumar(nanbendaa.blogspot.com and madrasbhavan.blogspot.com)

Anonymous said...

thayavu seithu antha nalla ullangalai(tharuthala heroes) thitathinga..enna mathiri irukura pala velai illatha ilainjargaluku avangathan atharavu...

--Dinesh(http://expertshere.wordpress.com)
kindly look into my blog too..

Philosophy Prabhakaran said...

@ சே.குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Philosophy Prabhakaran said...

@ sivakumar
Thanks for visiting my blog for the first time... Both of ur blogs are nice... All the best to be a successful blogger...

Philosophy Prabhakaran said...

@ dinerokz
நானும் வேலை இல்லாதவன் தான் நண்பா... கொஞ்சம் யோசிச்சு பாருங்க அந்த காட்சிகள் நம்மள நக்கலடிக்கிற மாதிரி இல்ல... உங்களுடைய வலைப்பூவிற்கு வந்து பார்த்தேன்... ஆங்கிலத்தில் இருப்பதாலும் wordpressல் இருப்பதாலும் ரசிக்க முடியவில்லை... மன்னிக்கவும்...

Madurai pandi said...

Romba sari!!!

arun said...

nandhalala nalla padam nnu varathukku munnadiye mudivu pannitingala. avan oru loosu.

Philosophy Prabhakaran said...

@ மதுரை பாண்டி
நன்றி அண்ணே...

@ arun
ம்ம்ம்... தாய்ப்பாசம் பற்றிய கதை என்பதாலும் இளையராஜா இசையில் "தாலாட்டு கேட்க நானும்..." பாடலின் மீதுகொண்ட காதலாலும் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கிறேன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்ல தொகுப்பு...

Philosophy Prabhakaran said...

@ பிரஷா
நன்றி... ஏன் இந்த தாமதம்...?

அணில் said...

//..இதுபோன்ற கலரிங் ம(ண்)டையர்களால்தான்.
நல்ல வேளை நான் சைனா மொபைல் வைத்திருக்கவில்லை.

Priya said...

நல்லா எழுதியிருக்கீங்க...ஆனா
இன்னும் நிறைய இருக்கே....:)