12 August 2011

பால்கனி – 12082011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நாட்டுநடப்பு என்ற பெயரில் முன்பொரு முறை எழுதிய செய்தி தொகுப்பைப் போல இனி வாராவாரம் உலக செய்திகளை தாங்கி பால்கனி என்ற பெயரில் பதிவிடுகிறேன். இதை பால்கனி (balcony) என்றும் எடுத்துக்கொள்வதும், பால் + கனி என்று எடுத்துக்கொள்வதும் அவரவர் விருப்பம்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மிக்கல் பார்சா என்ற சேகரிப்பாளர், தன் வசமிருந்த மர்லின் மன்றோவின் "அந்தமாதிரியான" டேப்பை ஏலத்திற்கு விட்டு பெரும்பணம் சம்பாதிக்க நினைத்திருக்கிறார். ஏலத்தின் ஆரம்ப விலையாக 4,80,000 டாலர்கள் நிர்ணயிக்க, வாங்குவதற்கு ஒருத்தரும் முன்வரவில்லையாம். சரி, போனால் போகட்டும் பாதி விலைக்கு தருகிறேன் என்று கூவி அழைத்திருக்கிறார். அப்பொழுதும் யாரும் வந்ததாக தெரியவில்லை. காரணம், காணொளியில் இருப்பது மன்றோவே அல்ல. அவரைப்போலவே உள்ள வேறொரு நடிகை என்கின்றனர். ஆனால் பார்சாவோ அது 1946ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆறு நிமிட காணொளி. அதிலிருப்பது மன்றோதான் என்று மன்றாடுகிறார்.
(பர்மா பஜாருக்கு எப்போ வரும் #டவுட்)

ஆஸ்திரியா நாட்டின் வியன்னா மாநகரில் உள்ள ஒரு அருங்காட்சியக ஊழியர் கை, கால், முகம் கழுவியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறதா...? அவர் கை, கால், முகம் கழுவியது தண்ணீரில் அல்ல சிறுநீரில். பணி நீக்கம் செய்யப்பட 57 வயது நபர் இதுபற்றி கூறுகையில், நான் கடந்த 23 வருடங்களாக என்னுடைய சிறுநீரில்தான் முகம் கழுவி வருகிறேன். இது ஒரு யூரின் தெரபி சிகிச்சை. இது தன்னை நோய் நொடியில்லாமல் வாழ வழிவகை செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
(அய்யய்யே... பாஸூ உச்சா போயிட்டார்...)

வெளிநாட்டு ஜொள்ளு:
பாப்பா பேரு பிப்பா
சூர்யா ஒரு பவுடர் விளம்பரத்தில், உலகிலேயே மிகச்சிறிய ஏசி என்று அறிமுகப்படுத்துவார். ஜப்பானில் அதைவிட சிறிய ஏசி கண்டுபிடித்திருக்கிறார்களாம். ஜப்பானின் தாங்கோ (Thanko) எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த கூலரின் எடை சுமார் 28 கிராம் மட்டுமே. “பின் கூலர்” என்றழைக்கப்படும் இதனை நம் டையோடு இணைத்துக்கொள்ளலாம்.

USB மூலமாக இணைத்து இதனை பயன்படுத்தலாம் அல்லது பேட்டரி மூலமாகவும் பயன்படுத்தலாம் என்று இதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். பேட்டரி இணைப்பதன் மூலம் இதை பாக்கெட்டில் போட்டு எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம். இதன் விலை வெறும் 31 அமெரிக்க டாலர்கள் மட்டுமே...!

அமெரிக்கா தான் வாங்கும் கடன் உச்சவரம்பை 14.3 ட்ரில்லியன் டாலர்களிலிருந்து 16.7 ட்ரில்லியன் டாலர்களாக உயர்த்தியிருக்கிறது. இதன் மூலமாக மிகப்பெரிய நிதி நெருக்கடி ஒன்று தற்காலிகமாக (கவனிக்க, தற்காலிகமாக) தவிர்க்கப்பட்டுள்ளது என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மீண்டுமொரு பொருளாதார வீழ்ச்சி வந்தால் சைனா, இந்தியா, தைவான், கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கடும் பாதிப்புக்கு ஆளாகும் என்று தெரிகிறது.
(தெருவுக்கா போறேள்...??? – அதுக்குள்ளயா... இன்னும் நாள் இருக்கு...)

பொது இடங்களில் நடிகைகள் அணிந்துவரும் உடைகள் நம்மூரில் மட்டுமல்லாமல் மேலைநாடுகளிலும் சர்ச்சையை கிளப்புகின்றன. இதை ஒரு பப்ளிசிட்டிக்காக பயன்படுத்திக்கொள்ளும் கலாச்சாரத்தை அநேகமாக மேலைநாட்டு நடிகைகளிடமிருந்துதான் நம் நாட்டு நடிகைகள் கற்றிருப்பார்கள் என்று எண்ணுகிறேன். இந்த போட்டோகிராபர்ஸ் என்றாலே எனக்கு பிடிக்காது என்று சலித்துக்கொள்ளும் ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோகன் சமீபத்தில் ஒரு உணவகத்திற்கு டீ-ஷர்ட் அணிந்து வந்திருக்கிறார். இதில் விந்தை என்னவென்றால் உள்ளாடை எதுவும் அணியவில்லை. மறந்துட்டாங்களாமாம்.
(உணவகத்திற்கு வந்தவர்களுக்கு செம தீனிதான்...)
(யோவ் மணி... எங்க ஸ்டில்லை தேடுற...? அதெல்லாம் இங்கே போடமுடியாது...)

முந்தய பதிவுகள்:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 comments:

ம.தி.சுதா said...

அடடா நல்ல ஏசி தான் போங்... இங்கே என்ன விலையோ..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று

idroos said...

ரைட்டு.

ஒரு டவுட்டு,கேட் மிடில்டன் தங்கச்சி பிப்பாவா அந்த பொண்ணு.

பாலா said...

அடி தூள்...

Prabu Krishna said...

"உலகம் சுற்றும் வாலிபன்" பிரபா வாழ்க

N.Manivannan said...

///(யோவ் மணி... எங்க ஸ்டில்லை தேடுற...? அதெல்லாம் இங்கே போடமுடியாது...)///

உண்மைலே படித்து கொண்டே வந்தவன் தேடத்தான் செய்தேன் ,ஆனால் அவர்தான் மேலாடை போட்டுள்ளாரே பிறகென்ன அந்த ஸ்டில்லை போட வேண்டியதானே

Jayadev Das said...

\\இது தன்னை நோய் நொடியில்லாமல் வாழ வழிவகை செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.\\ நம்பிக்கை தானே வாழ்க்கை.

Jayadev Das said...

\\சூர்யா ஒரு பவுடர் விளம்பரத்தில், உலகிலேயே மிகச்சிறிய ஏசி என்று அறிமுகப்படுத்துவார்.\\ இவரு எதைத்தான் அறிமுகப் படுத்தாம விட்டாரு, [Itch Guard ஐத் தவிர!!].

Jayadev Das said...

\\அமெரிக்கா தான் வாங்கும் கடன் உச்சவரம்பை 14.3 ட்ரில்லியன் டாலர்களிலிருந்து 16.7 ட்ரில்லியன் டாலர்களாக உயர்த்தியிருக்கிறது.\\ கவுண்டமணி வீரப்பன் வேஷம் போட்டப்போ, கார்த்திக் அவரை முடியவில்லை என்றாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு மல்லு கட்டுவாரே, அதே கதைதான், அமெரிக்காவை சைனாக்காரன் கீழே விட்டுவிட மாட்டான், அண்ணன் விழுந்தால் இவனும் காலி.