10 August 2011

அஜீத், அழகர்சாமியின் குதிரை, மங்காத்தா, மாலை மங்கும் நேரம்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

அஜீத்:
“படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!'' – இப்படி தன்னுடைய ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பவர் ஷாட்ஷாத் நம்ம தல அஜீத் தான். நான் ஒரு அஜீத் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் மீண்டும் மீண்டும் பெருமைப்படுகிறேன்.


நடிகப்பசங்க பின்னாடி வராதீங்கடான்னு அன்னைக்கு எம்.ஆர்.ராதா சொன்னதையே தல கொஞ்சம் டீசண்டா, டீடைல்டா சொல்லியிருக்கார். ஆமாம் அஜீத்துக்கு தொப்பை இருக்கு, அவருக்கு ஒழுங்கா நடிக்கத் தெரியாது, அவருக்கு டான்ஸ் ஆடத்தெரியாது, அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியா வராது, அவருக்கு காமெடி பண்ணத்தெரியாது, அவருக்கு கதை தேர்வு செய்யத்தெரியாது – ஆனாலும் நான் அஜீத் ரசிகன்தான். நீங்க ஒரு ஜென்டில்மேன் தல.

அழகர்சாமியின் குதிரை:
அழகர்சாமியின் குதிரை படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. படம் கிட்டத்தட்ட முடியும்வரையில் படத்தில் வரும் கிராமத்தைப் போல வறட்சியாகவே இருந்தது. பாஸ்கர் சக்தியின் வசனங்கள் மட்டும் ஆங்காங்கே தூறல் போட்டுக்கொண்டிருந்தது. அதேமாதிரி, தம்பியுடன் சத்துணவை பகிர்ந்துக்கொள்ளும் சிறுவன், திருவிழாவிற்கு பணம் வசூல் செய்ய வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்டு காது கேட்காதது போல நடிக்கும் கிழவி என்று திரைக்கதையிலும் சில சாரல்கள். ஆனால் ஒட்டுமொத்த படமாக பார்த்தால் மொக்கையாகவே இருந்தது. ஒருவேளை கழுதையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. அப்படி இருந்தால் சிவாவிற்கு போன் போட்டு திட்டவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இறுதிக்காட்சியில் நச்சென்று நறுக்கென்று கலப்பு திருமணம் பற்றிய ஒரு கருத்தைச் சொல்லி படத்தில் மழை பெய்ததைப் போல என் மனதிலும் மழை பெய்ய வைத்துவிட்டனர்.

இருந்தாலும் “குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி...” பாடலை பார்த்து கொஞ்சம் ஏமாந்துவிட்டேன் என்றே சொல்லவேண்டும். படத்தில் மிருகங்களுடனான பாசம், பிணைப்பு பற்றி ஏதாவது சொல்லியிருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். அதே மாதிரி சரண்யா மோகனை வெறும் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும் நடிக்கவைத்து வீணாக்கிவிட்டார்கள்.

அழகர்சாமியின் குதிரை படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனக்காட்சி,
சிறுமி: டேய்... கோடங்கிக்கு பேயா பிடிச்சிருக்கு...?
சிறுவன் 1: இல்ல சாமி வந்திருக்கு...
சிறுவன் 2: ஹேய்... ரெண்டும் ஒன்னுதேன்...
100% உண்மை. சாமியாடுறவங்கள்ல ரெண்டு வகை இருக்கு. ஒன்று, நாம் என்ன செய்கிறோம் என்பதை மறந்து சாமியாடுபவர்கள். இவர்கள் மனநோயாளிகள். இவர்களை கன்னத்தில் அறைந்தால், ஏன் சிவகாசி படத்தில் வருவதுபோல சரவெடி வைத்தால் கூட சமயங்களில் அசரமாட்டார்கள். இன்னொன்று தெரிந்தே ஊரை ஏமாற்றும் அயோக்கியர்கள். (இந்தப்படத்தில் வரும் கோடாங்கி மாதிரி). இவர்களை பிடித்து பொளேர்ன்னு கன்னத்துல நாலு அறை விட்டுப்பாருங்க. அப்புறம் சாமியாவது, மாமியாவது...

ஆனா, ஆயிரம்தான் சொல்லுங்க... மைக்கேல் ஜாக்சன், பிரபு தேவா இன்னும் எத்தனை பேர் வந்தாலும் சாமியாடுறவங்க மாதிரியும், சாவுக்கு முன்னாடி சரக்கடிச்சிட்டு ஆடுறவங்க மாதிரியும் யாராலும் ஆடமுடியாது. எல்லாம் அந்த அழகர்சாமியின் திருவிளையாடல்தான்.

மங்காத்தா:
இன்னைக்கு மங்காத்தா பாடல் ரிலீஸ். ஏற்கனவே நெட்டில் வெளியாகிவிட்டது. பாட்டிலை திறப்பதற்காக காத்திருக்கிறேன். மேட்டர் அது இல்லை. மங்காத்தா – ஓஷன்ஸ் லெவன் படத்தின் காப்பி என்று சிலர் பேசிக்கொள்கிறார்கள். ஓஷன்ஸ் லெவன் படம் பார்த்தேன், மங்காத்தா ட்ரைலர் பார்த்தாலும் அப்படித்தான் தோன்றுகிறது. ஐயாம் சாமை காப்பி அடித்த தெய்வத்திரு(ட்டு)மகளை காறித்துப்பினோம். சீன் பென்னை அட்டகாசமாக இமிடேட் செய்திருக்கும் விக்ரமிற்கு சிறந்த மிமிக்ரி நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என்று கலாய்த்தோம். ஆனால் இப்போது அஜீத்தின் முறை என்றதும் கொஞ்சம் நெருடுகிறது. எதற்காக இவ்வளவு பீடிகை என்று கேட்பவர்களுக்கு – ஓஷன்ஸ் லெவன் பற்றிய பதிவு இன்று மாலை வெளிவருகிறது.

தல... அஞ்சலியோட ரொமான்ஸ் பண்ண உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கல போல...

மாலை மங்கும் நேரம்:
இசைப்பிரியர்களுக்கு இன்னுமொரு பாம்பே ஜெயஸ்ரீ கிடைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஜீவா – ஷ்ரேயா நடிப்பில் வரவிருக்கும் ரெளத்திரம் படத்தில் மாலை மங்கும் நேரம் என்றொரு அற்புதமான பாடல். மீண்டும் மீண்டும் அந்தப்பாடலைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

ரனைனா

பாடியவர் பெயர் ரனைனா ரெட்டியாம். இதுவரை தமிழில் சரோஜா படத்தின் கோடான கோடி, கோ படத்தின் அகநக மற்றும் இன்னும் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் புதியவர் - பெயர் பிரகாஷ் நிக்கி.

இந்தப்பாடல் குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். பெண்களை டார்கெட் செய்து ரொமான்டிக்காக பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். இந்த சாம்பிளை பாருங்கள் –
“நான் சமையல் செய்திடுவேன்...
நீ வந்து அனைத்திடுவாய்...
என் பசியும் உன் பசியும்
சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்...”
(அது ஏன் இந்த சமையல்கட்டு மேட்டர் எல்லாப்பொண்ணுங்களுக்கும் பிடிக்கிறது... யோவ் சிபி ஒரு ஆராய்ச்சி பதிவை போடுறது...)

இவ்வளவு ரொமாண்டிக்கான பாடலை தாமரையை தவிர வேற யார் எழுதியிருக்க முடியும்ன்னு நினைக்கிறீங்க. இந்தப்பாடலை மேலே உள்ள இணைப்பை கிளிக்கி கேளுங்கள். இப்போ நீங்க என்ன செய்யனும்னா இந்தப்பாடலை உங்கள் இணைக்கு அனுப்பி அவரையும் கேட்கச்சொல்லுங்கள். (நான் செய்தது போலவே...)
-     என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

34 comments:

MANO நாஞ்சில் மனோ said...

தல போல வருமா.....?!

Unknown said...

அஜீத் - சினிமாவில் மட்டுமே நடிக்கும் நல்ல மனிதன்!

மங்காத்தா - ஓஷன் லெவன்
எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் தோன்றியதால் அதுபற்றி எழுதியிருந்தேன்!
ஆனால் ஓஷன் லெவன் படம் பத்தி ஒன்னும் எழுத தோணல! நீங்க எழுதுங்க! ! காலங்காலமா நிறைய படங்களை காப்பி பண்றாங்க..மங்காத்தாவும் அப்பிடி இருக்கலாம் தப்பில்ல!

ஆனா தெய்வத்திருமகள் என்னமோ தமிழ்சினிமாவின் வரலாற்றையே இயக்குனர் விஜய் மாற்றியமாதிரி ஆ...ஊ ன்னு எல்லோரும் கொடுத்த பில்டப்பு தான் தாங்க முடியல!

MANO நாஞ்சில் மனோ said...

அட நான்தானா முதல் மழை....!!!

Prabu Krishna said...

பிரபா "கோலிமாரே" பாட்டு கேட்டீங்களா?

'பரிவை' சே.குமார் said...

அஜீத் முதல் மாலை மயங்கும் வேலை வரை அருமை...

Harini Resh said...

//அஜீத்:
“படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!'' – இப்படி தன்னுடைய ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பவர் ஷாட்ஷாத் நம்ம தல அஜீத் தான். நான் ஒரு அஜீத் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் மீண்டும் மீண்டும் பெருமைப்படுகிறேன்.//
//அஜீத் ரசிகை என்று சொல்லிக்கொள்வதில் மீண்டும் மீண்டும் பெருமைப்படுகிறேன்
நானும் நானும் :)

Chitra said...

ஆமாம் அஜீத்துக்கு தொப்பை இருக்கு, அவருக்கு ஒழுங்கா நடிக்கத் தெரியாது, அவருக்கு டான்ஸ் ஆடத்தெரியாது, அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியா வராது, அவருக்கு காமெடி பண்ணத்தெரியாது, அவருக்கு கதை தேர்வு செய்யத்தெரியாது –


....He has a different style of acting/dialogue delivery/looks. He does not fit into the routine mould. Maybe, thats why he looks different and special. :-)

Anonymous said...

"ரசிகன்"?

இரசிகன் என்கிறீர்கள். சரி. அதை எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று பார்த்தால், அவரின் சில பொதுவாக வைக்கப்பட்ட - இங்கே இரசிகர்களுக்குக் கொடுத்த அறிவுரை - குணச்சித்திரத்தை வைத்தே.

இதே சொற்களை இன்னொரு நடிகன் சொல்கிறான் என்று வைத்துக்கொள்கிறோம். ஆனால் அவனுக்கு நடிப்பே வராது. எப்படியோ திரையுலகத்தில் இருக்கிறான். பிழைக்கிறான். அவனுக்கு இரசிகன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

இரசிகன் என்று எப்போது நாம் சொல்ல வேண்டும்? ஒருவன் நன்றாக தனக்குக் கொடுக்கப்ப்பட்ட பாத்திரங்களை செய்து கைதட்டல் வாங்கும்போதா ? இல்லை அவனின் தனிநபர் வாழ்க்கையில் அவன் செய்யும் சில செயல்களை வைத்தா ?

பிரபாகரன், இரண்டாவதே என்றால், இரசிகன் என்று வராது. ஹீரோ வர்சிப் என்றாகும்.

முதலாவது என்றாலும் ஒரு பிரச்சினை. ஏனென்றால் ஓரிரு படங்களில் ஒருவன் நல்ல நடிப்பைத்தர நாம் அப்படங்களபொறுத்தவரையே இரசிகர்கள். அவனே இன்னும் பல படங்களை சம்பாதிக்க மட்டும் நினைத்து சொதப்பலாக்குகிறான். அப்படங்களுக்கும் நாம் இரசிகர்களா இல்லவே இல்லை.

U like him as a person for certain of his public statements. That's all. There r so many persons in public life who speak and behave better than him. Do u like him calling urself as their fans? If no, y?

Answer to the qn will explain to u the psychology of a young Tamil man.

FARHAN said...

“படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!'' – இப்படி தன்னுடைய ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பவர் ஷாட்ஷாத் நம்ம தல அஜீத் தான். நான் ஒரு அஜீத் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் மீண்டும் மீண்டும் பெருமைப்படுகிறேன்.

இதில் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள்
ஹாட்ஸ் ஆப் தல

Anonymous said...

//எதிர்பார்த்தேன்//

பிரபாகரன்!

நீங்கள் செய்தது தவறு. எதிர்பார்த்து ஒரு நாவலையோ, புதினத்தையோ, நாடகத்தையோ, திரைப்படத்தையோ படிக்க/பார்க்கச் செல்லக்கூடாது. ஏனென்றால், நம் எதிர்பார்ப்புக்கள், அப்படைப்பாளிகளைச் சிறுமைப்படுத்தி விடும். உங்கள் எதிர்ப்பார்ப்புக்களையுடைத்து புதுமைகளைப்படைப்பவனே மாபெரும் கலைஞன்.

அவர்கள் எதைத் தருகிறார்களோ அவை உங்களால் பார்க்கப்படவேண்டும். பார்த்த பின்னர் பிடித்ததா இல்லையா என்று சொல்லலாம. எதிர்பார்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை இங்கே. கலை வியாபாரமில்லை நாம் விரும்பியதைக் கேட்பதற்கு. நீங்கள் விரும்பியதைக் கொடுப்பதற்கு.

இருப்பினும் அப்படி சில கலைஞர்கள் கொடுப்பார்கள். அது வியாபாரம். பத்திரிக்கை விமர்ச்னங்களில் பார்க்கலாம். "கமல் இரசிகர்களுக்குத் தீனி!" 'இரஜனி இரசிகர்களுக்குத் தீனி!" 'தல இரசிகர்களுக்குத் தீனி!' என்று. அதாவது இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கள் முழுக்க நிறைவேற்றப்பட்டன. இப்படிப்பட்ட படங்கள் கலைப்பொருள்களல்ல. வியாபாரங்கள்.

"அ.கு"- உங்களுக்கான படமல்ல. அதாவது, அதைப்பார்ப்பதற்கென்று ஒரு தயார் நிலையிருக்கவேண்டும். அத்தயார் நிலையில்லாமல் செல்லும்போது நமக்குப் போரடிக்கும். தயார் நிலை என்றால் எதிர்பார்ப்பல்ல. எதையும் தாங்கும் இதயம் புதுமையோ பழமையோ. எதிர்பார்ப்பு என்பது பழமையைமட்டுமே குறிக்கும்.

உங்களைக்குறை சொல்லவில்லை மன்னிக்கவும். அப்படத்தில் நிறைய குறைகள் உண்டு. எனினும் ஓவர் ஆல் இம்பாக்ட் என்று பார்த்தால், சராசரி தமிழ் சினிமா பார்ப்பவர்களின் 'எதிர்பார்ப்புக்கள்'ஐ தரைமட்டமாக்கியதே அப்படத்த்தின் சிறப்பாகும்.

கோடாங்கியைப்பற்றிச் சொன்னது இரசிக்கும்படி இருந்தது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

Anonymous said...

//பெண்களை டார்கெட் செய்து ரொமான்டிக்காக பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். இந்த சாம்பிளை பாருங்கள் – “நான் சமையல் செய்திடுவேன்...நீ வந்து அனைத்திடுவாய்...என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்...”(அது ஏன் இந்த சமையல்கட்டு மேட்டர் எல்லாப்பொண்ணுங்களுக்கும் பிடிக்கிறது... //

GOOD ANALYSIS.

N.Manivannan said...

தல தல தான்

N.Manivannan said...

ரனைனா ரெட்டி சூப்பர பாடிருக்காங்க அப்படின்னு நான் சொல்ல மாட்டேன்

N.Manivannan said...

///ஒருவேளை கழுதையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. அப்படி இருந்தால் சிவாவிற்கு போன் போட்டு திட்டவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்///


ஏ எங்க தலையையே கிண்டல் அடிக்கிறியா ? ஏ அவரு யாரு தெரியுமா ? ஏ ......ஏ............. ஏ ...............(சிவா தல பய புள்ள ஏதோ தெரியாம எழுதிடுச்சு மன்னிச்சுடு தல , தல நாந்தான் சொல்றேன்ல அருவாள் எதுக்கு ...............வேணாம் வேணாம் )

Anonymous said...

//He has a different style of acting/dialogue delivery/looks. He does not fit into the routine mould. Maybe, thats why he looks different and special. :-)//

Chitra!

I don't go against what u wrote; yet there s a subtle psychological element here.

The Tamil film hero Ajay s only half Tamil: his mother s a Bengali. The cross between Bengali and Tamil has made him look different. He s not native to Tamil lang also. I mean, Tamil s not his mother tongue, although he s from Palakad and his dad s a Palakad iyer.

If it s still maintained that Tamil s his mother tongue, he seems to hve not talked in the lang in childhood and adolescent. The accent and diction is malayali. Like my son who takes a minute to finish a sentence - so haltingly as he s not habitated to the lang. Such persons may live in TN many many decades. But the accent and diction wont go away.

But there s a charm in mangling Tamil pronunciation, and having a different non-Tamil looks.

So, he looks 'special' to u and generally to all Tamils.

Anonymous said...

The criticism that he is not speaking Tamil like a Tamilian seems to hav hurt him. He has married a malayali, but his wife was born and brought up in Chennai and spks Tamil like a Tamilian.

Ajit told an interviewer.

எனக்கும் மலையாளம் வ்ரும். என் மனைவிக்கும் வரும். ஆனால் நாங்கள் பேசும் வீட்டுமொழி தமிழே. அதைத்தான் விரும்புகிறோம்

He has children. He wants them not to repeat his practice of speaking Tamil.

It all proves he has taken the criticism to heart.

Anonymous said...

//The Tamil film hero Ajay //

Ajit.

N.Manivannan said...

///இப்போ நீங்க என்ன செய்யனும்னா இந்தப்பாடலை உங்கள் இணைக்கு அனுப்பி அவரையும் கேட்கச்சொல்லுங்கள்.///


'இணை' லாம் கிடையாது , இருந்தா செய்ய மாட்டோமா ?

Unknown said...

பகிர்வுக்கு நன்றி!

Anonymous said...

Brother Ocean's 11 Different movie hope so...தல copy அடிச்சிலாம் நடிக்கணும்னு அவசியம் இல்லை ...அதுக்குதான் நம்ம doctor இளையதளபதி விசய் சாமி இருகவுகள...அவங்க பாத்துப்பாங்க....Ocean 11 story 11 பேரு சேர்ந்து casinovil திருடுவதுதான் ....but மங்காத்த எனக்கு அப்படி தோணலை ...என்னோட அபிப்ராயம் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளவும்

Naran said...

“படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!''////
.
.
அப்போ விலைவாசி பிரச்சனை ரேஷன் கார்டு வாங்கி கொடுப்பது சாதி சான்றிதழ் வாங்க அலையோ அலைன்னு அலைவது எல்லாம் ஓங்க தல பார்த்துப்பாராமா?

Anonymous said...

ஒரு சில படங்களை தவிர அஜித்தை ஸ்க்ரீனில் பார்த்தாலே சிதறி ஓடி விடுவேன். மற்றபடி பொதுவாழ்வில் அவர் சிறந்த கொள்கைகளை கடைபிடிப்பதை வாழ்த்த வேண்டும். அழகர்சாமியின் குதிரை எனக்கு பிடித்து இருந்தது. படம் சூப்பராக இல்லாவிடினும் இம்மாதிரி முயற்சிகளை வரவேற்பதன் மூலம் மேலும் நல்ல படங்கள் வரும். மங்காத்தாவும் அபேஸா?

Anonymous said...

//இந்தப்பாடலை உங்கள் இணைக்கு அனுப்பி அவரையும் கேட்கச்சொல்லுங்கள்.//

கொண்டே புடுவேன்...!!

Anonymous said...

டேய் பிரபாகரா...எங்க மதுர அஜித் ரசிகர் மன்ற தல மணிவண்ணன் கிட்ட வம்பு பண்ணாத? அஜித்தையே நக்கல் அடிக்கற அளவுக்கு வளந்துட்டியா. வடசென்னைல வந்து வடையாலயே அடிப்போம். ஒண்டிக்கு ஒண்டி வர்றியா? கீசிருவோம் கீசி..

அன்பின் பிரபாகர்,
என் ப்ளாக் ஐ.டி.யில். புகுந்து தோழன் ஒருவன் இவ்வாறு எழுதிவிட்டான். அதை நினைத்து மிகவும் வருந்தி நெகிழ்கிறேன்.மன்னிக்கவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது மங்காத்தாவும் காப்பி பேஸ்ட்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////N.Manivannan said...
தல தல தான்////

பின்ன நாங்க மட்டும் வாலுன்னா சொல்றோம்...?

Anonymous said...

அஜீத் கல்யாணத்திற்கு பிறகு நல்ல மனிதராக மாறி விட்டார். முன்பு எப்படி இருந்தார் என்பது நாம் அறிந்ததே. இப்போது இருக்கும் தெளிவு அவர் நடிக்க தேர்ந்து எடுக்கும் படங்களிகளும் சிறிது காட்டலாம். அஜீத் கோவா என்ற காவியத்தை ஒரு தடவை பார்திரந்தால் மங்காத்தா வந்து இருக்காது.

Philosophy Prabhakaran said...

@ ஜீ
// மங்காத்தா - ஓஷன் லெவன்
எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் தோன்றியதால் அதுபற்றி எழுதியிருந்தேன்!
ஆனால் ஓஷன் லெவன் படம் பத்தி ஒன்னும் எழுத தோணல! நீங்க எழுதுங்க! ! காலங்காலமா நிறைய படங்களை காப்பி பண்றாங்க..மங்காத்தாவும் அப்பிடி இருக்கலாம் தப்பில்ல! //

ட்ரைலரை பார்த்தால் அப்பட்டமான காப்பி என்றே தோன்றுகிறது... ஆனால் வெங்கட் பிரபு டைம்ஸ் ஆப இந்தியா பேட்டியில் இது ஓஷன்ஸ் லெவன் காப்பி இல்லைன்னு மறுத்திருக்கிறார்....

Philosophy Prabhakaran said...

@ பலே பிரபு
// பிரபா "கோலிமாரே" பாட்டு கேட்டீங்களா? //

இல்லையே பிரபு... ரெளத்திரம் படத்தில் இருந்து இந்த ஒருபாடலை மட்டும்தான் கேட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ simmakkal
// "ரசிகன்"? //

மண்டை காயுது... இரண்டு மூன்று முறை உங்கள் பதிலை திரும்ப திரும்ப படித்தேன்... அவரது நடிப்பைக் காட்டிலும், அவரை நான் அதிகம் ரசிக்கிறேன்... ரசிக்கிறேன் எனவே நான் ரசிகன்... இவ்வளவுதான் என்னுடைய கான்செப்ட்...

இதற்கு வேறென்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை...

Philosophy Prabhakaran said...

@ simmakkal
// நீங்கள் செய்தது தவறு. எதிர்பார்த்து ஒரு நாவலையோ, புதினத்தையோ, நாடகத்தையோ, திரைப்படத்தையோ படிக்க/பார்க்கச் செல்லக்கூடாது. ஏனென்றால், நம் எதிர்பார்ப்புக்கள், அப்படைப்பாளிகளைச் சிறுமைப்படுத்தி விடும். உங்கள் எதிர்ப்பார்ப்புக்களையுடைத்து புதுமைகளைப்படைப்பவனே மாபெரும் கலைஞன். //

இதையே என்னிடம் நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்... ஆனால் இதை செயல்படுத்துவது கடினமான செயல்... ஒரு படத்தின் பேப்பர் விளம்பரமோ, பாடலோ, ட்ரைலரோ பார்த்தால் நம்மை அறியாமலே நமக்குள் எதிர்பார்ப்புகள் வரத்தொடங்கிவிடும்... நான் எதிர்பார்க்கவே இல்லை என்று வாய் வார்த்தையில் சொல்லிக்கொண்டாலும் உள்மனது எதையோ எதிர்பார்க்கும்... எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது என்பது மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வது போன்றதாகும்...

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan

இன்னைக்குத்தான் பாலோயரா இணைந்திருக்கிறீர்களா... துரோகி...

Philosophy Prabhakaran said...

@ Naran
// அப்போ விலைவாசி பிரச்சனை ரேஷன் கார்டு வாங்கி கொடுப்பது சாதி சான்றிதழ் வாங்க அலையோ அலைன்னு அலைவது எல்லாம் ஓங்க தல பார்த்துப்பாராமா? //

யோவ்... என்னய்யா லூசுத்தனமா பின்னூட்டம் போட்டிருக்க...

சுதர்ஷன் said...

மங்காத்தா பாடல்களும் ரசிக்க கொடிய வகையில் தான் இருக்கிறது .படம் திருப்பு முனையாக அமையும் .
மங்காத்தா பாடல்களில் ரசித்த-இனிமையான வரிகளின் நினைவுகள்