24 February 2011

நாட்டுநடப்பு – 24022011


வணக்கம் மக்களே...

லாட்வியா நாட்டில் 27 வயது இளைஞர் ஒருவர் சினிமா பார்க்கச் சென்றிருக்கிறார். போன இடத்தில் சும்மா இருக்காமல் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த 42 வயது மதிக்கத்தக்க நபரை சுட்டுக்கொன்றிருக்கிறார். என்ன காரணம் என்று தெரியுமா...? பாப்கார்னை சத்தம் போட்டு சாப்பிட்டாராம்.

(மேலே இருக்கும் நடிகை படம் எதுக்கா...? இவங்க நடிச்ச படம் பார்க்கும்போது தான் சம்பவம் நடந்திருக்கு. அப்போ கொல்ல வேண்டியதுதான்)
********************

கலைஞர் குடும்பத்த விட பெரிய்ய்ய்ய குடும்பமா இருக்கும்போல...
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் ஜியோனா சாணா (Ziona Chana) என்ற 66 வயது ஆசாமி (வயோதிகர்ன்னு சொல்ல மனசு வரலை) இதுவரைக்கும் 39 பெண்களை திருமணம் செய்திருக்கிறாராம். அதைவிட கொடுமை, இவர், இவரது 39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரக்குழந்தைகள் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்களாம்.

(இப்பக்கூட நாற்பதாவது திருமணத்திற்கு தயாராக இருப்பதாக திருவாய் மலர்ந்திருக்கிறார் மனிதர்)
********************

மேலே பார்க்கும் இந்த கருவியில் டோஸ்ட் செய்வதோடு மட்டுமல்லாமல் பாடல்களையும் கேட்டுக்கொள்ளலாம். சமையலறையில் ஒரு பொழுதுபோக்கு தேவை என்ற நோக்கில் இதை தயாரித்துள்ளதாக சீன நிறுவனம் கூறுகிறது. இதன் விலை 50 அமெரிக்க டாலர்கள் மட்டுமே.

(இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை. வந்தாலும் வரவேற்பை பெறாது. ரேடியோவை தனியாவும், டோஸ்டரை தனியாவும் வாங்கிக்க தெரியாதா நம்மளுக்கு)
********************

அச்சாப் கவ்ரா (Assaf Gavra) என்னும் இஸ்ரேலிய புகைப்பட கலைஞர் இந்த புகைப்படத்தை சில மணிநேரங்கள் நதிக்கரையில் காத்திருந்து எடுத்திருக்கிறார்.
********************

மலேசிய சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா...

(இதையெல்லாம் பார்த்தா என்ன சொல்றதுன்னே தெரியல. நீங்களே ஏதாவது சொல்லிட்டு போங்க)

டிஸ்கி: 
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

22 February 2011

பிரபா ஒயின்ஷாப் – 22022011


வணக்கம் மக்களே...

கடந்த வாரத்தில் ஒருநாள் ஒரு பெட்டிக்கடையில் பார்த்தேன். இந்தியா டுடே ஆங்கில மற்றும் தமிழ் பதிப்புகள் அருகருகே வைக்கப்பட்டிருந்தன. ஆங்கிலப் பதிப்பின் அட்டைப்படத்தில் தோனி கிரிக்கெட் உடையுடன் போஸ் கொடுப்பது போலவும், தமிழ் பதிப்பின் அட்டைப்படத்தில் அதே தோனி நெற்றியில் வீரத்திலகத்தோடு கையில் தேங்காயை வைத்துக்கொண்டு பூஜைக்கு தயாராக இருப்பது போலவும் வெளியிட்டிருந்தார்கள். அட்டைப்படத்தில் இருக்கும் இந்த முரண்பாடு என்ன மாதிரியான உள்குத்து என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழகம், தமிழக மக்கள் என்றால் அப்படிப்பட்ட பிம்பம் தான் இருக்கிறது போலும்.

இந்த வருடத்திலிருந்து சி.பி.செந்தில்குமார் மாதிரி மொக்கைப்படங்களை எல்லாம் பார்த்து நேரத்தை விரயம் செய்யாமல் செலக்டிவாக நல்ல படங்களை மட்டுமே பார்க்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். அதற்காக பொங்கலுக்கு வெளிவந்த ஓரளவுக்கு நல்ல கமர்ஷியல் படங்களை கூட புறக்கனித்தேன். ஆனால் இப்போது கெளதம் மேனனால் எனது முடிவு முடிவுக்கு வந்துவிட்டது. எப்போதுமே அதிகம் எதிர்பார்க்கும் படங்கள் இப்படித்தான் ஏமாற்றி விடுகின்றன. அதே சமயம் போன வாரம் வெளிவந்த பயணம் படத்தை தவறவிட்டதற்காக வருந்துகிறேன். இதனால் கூற வருவது என்னவென்றால், யாராவது நடுநிசி நாய்கள் படம் பார்க்கும் எண்ணத்திலிருந்தால் தயவு செய்து அதை மாற்றிக்கொண்டு பயணம் படத்தை பாருங்கள்.

எனது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் குறித்த பதிவை இன்னும் விரிவாக விரிவாக எழுதியிருக்கலாம் என்றெண்ணி வருந்துகிறேன். பதிவை படித்த சிலர் ஒருநாள் கொண்டாட்டம் தானே..., இளைஞர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்... என்ற ரீதியில் பின்னூட்டமிட்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் என்னுடைய பதில்: நீங்கள் நினைப்பது போல இது வருடத்தில் ஒருநாள் மட்டும் நடைபெறும் நிகழ்வல்ல. அவர்களின் தினசரி பயனமுறை அப்படித்தான் இருக்கிறது. இதில் ஈவ்-டீசிங், எல்லை மீறல்கள், வன்முறை, ஆராஜகம் என்று என்னென்னவோ நடக்கின்றன. இதையெல்லாம் நம்பமாட்டேன் நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் தான் என்று அடம் பிடிப்பவர்கள் காலை வேளையில் என்னோடு சென்னை வள்ளலார் நகர் (மிண்ட்) பேருந்து நிலையத்திற்கு வந்து அந்த அவலங்களை உங்கள் கண்ணால் பாருங்கள். இங்கே எனக்கு பக்கம் பக்கமாக அட்வைஸ் பண்ணுவது போல அவர்களுக்கு அட்வைஸ் பண்ணி அசிங்கப்படுங்கள்.

கிழக்கு பதிப்பகத்தின் டிஸ்கவுண்ட் சேல் இந்தமாத இறுதிவரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏனோ தெரியவில்லை, ஆன்மிகம் குறித்த புத்தகங்கள் வாங்குவதற்கு ஆளில்லாமல் குவிந்துக்கிடக்கின்றன. ஒருவேளை மக்கள் திருந்திவிட்டார்களோ...??? அப்புறம், வாங்குவதற்கு கூச்சப்படுகிறார்கள் என்றேண்ணுகிறேன், பாலியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களும் குவிந்திருந்தன. சரி, நாமாவது ஆதரவு கொடுப்போம் என்ற நல்ல எண்ணத்தில் (!!!) பாலியல் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்தேன். (என்னது..? புத்தக விமர்சனமா... அட போங்கப்பா எனக்கு ஒரே வெட்கமா இருக்கு...)

ட்வீட் எடு கொண்டாடு:
ஜெ. பிறந்த நாள்... 5 நாட்கள் கொண்டாட்டம்...! # அடேங்கொப்பா’... அஞ்சு நாளா.... பொறாந்தாங்க போல....

வந்தியத்தேவனாக விஜய்! - தட்ஸ்தமிழ் எக்ஸ்க்ளூஸிவ்!! # funnyin செல்வனாக ஆகாம இருந்தா சரி.

"இது தப்புன்னு" நேரா சொல்லாம நாசூக்கா சொல்றேன் பேர்வழின்னு மொக்கை போடும்போது எரிச்சல் தான் வருது... #"மேனேஜ்மென்ட் ஸ்கில்"லாமாம்

கல்யாணங்கற தேர்ல போறதுக்கு எல்லோரும் துடிக்கிறாங்க..ஆனா அது சந்தோஷங்களின் இறுதி ஊர்வலத் தேருங்கறது யாருக்கும் தெரியறதில்லை # எச்சரிக்கை

பதிவுலகில் புதியவர்:
நூற்றுக்கணக்கான பதிவர்களையும் இடுகைகளையும் பற்றி வலைச்சரத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்க வேற தனியா எதுக்கு. வலைச்சரத்திற்கு போய் அள்ளிக்கோங்க.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_22.html

எனக்குப் பிடித்த பாடல்:
இது கொஞ்சம் பழைய பாடல்தான், ஆனால் நிறைய பேர் கேட்டிருக்கமாட்டீர்கள். ஸ்ரீகாந்த் சினேகா நடித்து வெளிவந்த போஸ் என்ற படத்தில் இடம்பெற்ற வைத்த கண் வைத்தது தானோடி... என்ற பாடல். ஒரு திருமண இல்லத்தில் பாடுவதாக வரும் அந்த கொண்டாட்டப் பாடலைத்தான் இந்த வாரம் முழுக்க கொண்டாடினேன். ஆண்குரல் மது பாலகிருஷ்ணன் என்று நினைக்கிறேன், அவரது குரலும் மதுவாகவே கிறக்கம் தந்தது. அப்புறம், யாரோ எந்தன் உயிரின் அறையிலே கவிதை புத்தகம் படித்தது... தேடிப்பார்த்தேன் அந்த இடத்திலே உந்தன் வாசனை... என்று ரொமாண்டிக்கான வரிகளும் பாடாய்ப்படுத்தியது.

இந்த வார புகைப்படம்:


ஒரு கிழக்கத்திய டாய்லெட்டை மேற்கத்திய டாய்லெட்டாக மாற்றுவது எப்படியென்று யாரோ ஒரு அறிஞர் கழிவறையில் அமர்ந்து கனநேரம் சிந்தித்திருக்கிறார்.

இந்த வார தத்துவம்:
“GRAVITATION IS NOT RESPONSIBLE FOR PEOPLE FALLING IN LOVE…”
-          Albert Einstein

பார்த்ததில் பிடித்தது:
இந்த வார ஆவியில் என்னைப் பெண் பார்த்த படலம் என்ற பெயரில் ஒரு கவிதை தொகுப்பும், அம்மாவின் பெயர் என்ற பெயரில் ஒரு சிறுகதையும் வெளிவந்திருக்கிறது. நான் சொல்லவந்தது அந்த படைப்புகளை பற்றியல்ல. அவற்றிற்கு எஸ்.இளையராஜா என்றொரு ஓவியர் மிகவும் அழகாக புகைப்படங்கள் வரைந்திருக்கிறார்.

அந்த ஓவியம் இணையத்தில் கிடைக்கப்பெறவில்லை. முடிந்தால் ஆவி வாங்கிப் பாருங்கள். மேலே இருப்பது அவர் வரைந்த வேறொரு ஓவியம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 February 2011

வலைச்சரத்தில் நான்...


வணக்கம் மக்களே...

நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வலைச்சர ஆசிரியர் வாய்ப்பு இப்போது கிட்டியிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை கொடுத்த சீனா அய்யா அவர்களுக்கு எனது முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொண்டு இன்றுமுதல் எனது ஒருவார பயணத்தை தொடங்குகிறேன்.

அழைப்புக்கான மெயில் வந்த நொடியிலிருந்தே ஏனோ ஒரு பயம் கலந்த பொறுப்புணர்ச்சியை உணர்கிறேன். இதுவே என்னுடைய தளம் என்றால் நான் எதை வேண்டுமானால் எழுதிக்கொள்ளலாம். ஆனால் வலைச்சரத்தில் எழுதும்போது சொற்களை கவனமாக தொடுக்க வேண்டுமே...

இந்த ஆசிரியர் பொறுப்பை ஏதோ கடமைக்காக செயல்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. எந்த ஒரு பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தாலும் அதை ஒரு அர்பணிப்புடன் செய்வதே என்னுடைய பாலிஸி. எனவே வலைச்சரத்திற்காக கொஞ்சம் கடுமையாகவே உழைக்கிறேன். அநேகமாக தினம்தினம் இரண்டு இடுகைகள் வரும் என்று நினைக்கிறேன்.

இதன் காரணமாக சொந்த வலைப்பூவிற்கு விடுமுறை விடுவதா வேண்டாமா என்றோ யோசித்தால்... இன்றைக்கு வரவேண்டிய பிரபா ஒயின்ஷாப் மட்டும் ஒருநாள் தாமதமாக நாளை வெளிவரும். மற்றபடி எப்போதாவது நேரம் கிடைத்தால் எதையாவது பற்றி எழுதுகிறேன்.

எனவே, அடுத்த ஒருவார காலத்திற்கு என் மீது அன்புள்ளம் கொண்டவர்கள் வலைச்சரத்தில் எனக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஆதரவளிக்கவில்லை என்றால் உங்களுக்குத்தான் இழப்பு அந்த அளவிற்கு ஒருவாரம் முழுவதும் வலைச்சரத்தில் முழுக்க முழுக்க சரக்கு மட்டுமே...

வலைச்சர இணைப்பு:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 February 2011

நடுநிசி நாய்கள் – வக்கிரமான கிரியேட்டிவிட்டி

வணக்கம் மக்களே...

கெளதம் மேனன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர். காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் ரசனையான மனிதர். அபாரமான கிரியேட்டிவிட்டி கொண்டவர். குறிப்பாக காதல் காட்சிகளை படமாக்குவதில் அவருடைய ஸ்டைலே தனி. அப்படிப்பட்ட ஒருவர் ஒரு த்ரில்லர் படம் எடுத்தால்...? இப்படியான எதிர்பார்ப்புகளோடு நடுநிசி நாய்கள் படத்திற்காக நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இரண்டு மணிநேரங்கள் கடந்தபிறகு என்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகியிருந்தது.

கதைச்சுருக்கம்:
எட்டு வயதில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படும் ஒரு சிறுவன். அதுவும் அவரது தந்தையால் உட்படுத்தப்படுகிறான். அதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கு பக்கத்து வீட்டு ஆன்ட்டியின் ஆதரவும் அன்பும் கிடைக்கிறது. ஆன்ட்டியின் உதவியால் தன் தந்தையிடம் இருந்து மீண்டு வரும் சிறுவன் ஆன்ட்டியின் பராமரிப்பிலேயே வளர்கிறான். ஆனால் தந்தையிடம் இருந்து மீண்ட சிறுவன் தனது மனப்பிறழ்வில் இருந்து மீளவில்லை. அதனால் ஏற்படும் சம்பவம்களும் பாதிப்புகளுமே மீதிக்கதை.

மீதிக்கதையை திரையில் பாருங்கள் என்றெல்லாம் சொல்லவே மாட்டேன். ஆனாலும் ஒரு நல்ல விமர்சனத்தை எழுதும் நோக்கில் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

நாயகனாக சமர், வீரா என்ற கேரக்டர்களில் புதுமுகம் வீரா நடித்திருக்கிறார். அப்படியென்றால் டபுள் ஆக்ஷனா என்று கேட்காதீர்கள். ஸ்பிளிட் பர்சனாலிட்டி. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் மல்டிபிள் பர்சனாலிட்டி. நல்ல நடிப்பு, பிரமாதமான நடிப்பு. ஆனால் எரிச்சலூட்டுகிறார். அவரது பாத்திர படைப்பு அப்படி. அதிலும் முதல் பாதியில் அடிக்கடி மீனாட்சி அம்மா, மீனாட்சி அம்மா என்று சொல்லி சொல்லியே வெறுப்பேற்றுகிறார்.

நாயகி சுகன்யாவாக சமீரா ரெட்டி. நாயகி பெயரை சுகன்யா என்று வைத்ததில் எனக்கு பர்சனலாக மிகவும் வருத்தம். (ஏன் என்றெல்லாம் கேட்கப்பிடாது...) நல்லவேளையாக அவருக்கு கடைசிவரை எந்த அசம்பாவிதமும் நடக்காததால் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன். ஆனால், அழகையா நடிப்பையோ ரசிக்க முடியாதபடி இரண்டாம் பாதி முழுக்க வதைக்கப்படுகிறார்.

படத்தில் மொத்தமே நான்கு (முக்கிய) கேரக்டர்கள்தான். நாயகன் நாயகியை தவிர்த்து பக்கத்து வீட்டு ஆன்ட்டியாக புதுமுக நடிகை ஸ்வப்னா. அவரை தேர்ந்தெடுத்ததில் கெளதமின் ரசனையை வியக்கிறேன். நல்ல அழகு, எனினும் அந்த அழகு சிதைக்கப்படுகிறது. அப்புறம், விஜய் என்னும் போலீஸ் அதிகாரியின் கேரக்டரில் புதுமுக நடிகர் தேவா. ஆரம்பத்தில் வரும் சில காட்சிகள் அவர் புத்திசாலி போலீஸ் என்று கூறுகிறது. ஆனால் இறுதிவரை அந்த புத்திசாலித்தனத்திற்கு வேலை கொடுக்கப்படவில்லை.

ஒரே ஒரு காட்சியில் சமந்தா. படத்தில் அவருக்கு கொடுக்கப்படாத முக்கியத்துவத்தை எனது பதிவில் கொடுத்து ஆறுதலடையவே மேலே இருக்கும் ஸ்டில்.

படத்தில் பாடல்களோ, பிண்ணனி இசையோ இல்லை. ஆனாலும் அது ஒரு குறையாக தெரியவில்லை. சிறப்பு சப்தங்களை வைத்து அந்த காலியிடங்களை கச்சிதமாகவே நிரப்பியிருக்கிரார்கள். சிறப்பு சப்தங்கள் வேலைப்பாடுகள் செய்தவரின் பெயர் ரெங்கநாதன் என்று திரையில் பார்த்ததாக ஞாபகம்.

ஈரம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா இந்தப்படத்திற்கும் ஒளிப்பதிவியிருக்கிறார். ரெண்டும் த்ரில்லர் கதை என்பதாலோ என்னவோ அந்தப்படத்தின் பாதிப்பு ஆங்காங்கே ஒளிப்பதிவில் தெரிகின்றன. எடிட்டிங்கை சில பேர் சிலாகிக்கலாம், ஆனால் எனக்கென்னவோ பிடிக்கவில்லை. இந்த படத்திற்கு இரண்டு மணிநேரம் தேவையே இல்லை. ஒன்றரை மணிநேரத்திலேயே கதை சொல்லி முடித்திருக்கலாம்.

வசனங்கள் மிகவும் குறைவே. அடிக்கடி பீப் ஒலிகள் கேட்கின்றன. (புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்). சில இடங்களில் ஷார்ப்பான வசனங்கள். உதாரணத்திற்கு சமூக வலையமைப்பு தளங்களின் மறுபக்கத்தை விவரிக்கும் வசனம்.

படத்தின் ப்ளஸ்:
- சொல்லப்படாத கதை என்று சொல்லமாட்டேன். எனினும், ஒரு புதிய உணர்வை கொடுத்தது. தொடர்ந்து மதுரக்காரைங்க, கோவில் திருவிழா டைப் படங்கள் பார்த்ததில் இருந்து ஒரு ரிலீப்.
மற்றபடி வேறொன்றும் சொல்வதற்கில்லை...

படத்தின் மைனஸ்:
- வக்கிரமான காட்சியமைப்புகள். இத்தனைக்கும் இன்னும் நிறைய வக்கிரங்களை இயக்குனர் கேமராவின் கோணத்தில் காட்டாமல் புரிய வைத்திருக்கிறார். அப்படி இருந்தும் ரொம்ப மோசம். அதிலும் முதல்பாதியில் செக்ஸ், செக்ஸ், செக்ஸ்.
- இசை, பாடல்கள், சண்டைக்காட்சிகள் இப்படி எதுவுமே இல்லாதது புதிய முயற்சிதான் என்றாலும் ஒரு கமர்ஷியல் சினிமாவாக தோற்றுப்போகிறது.
- நிறைய லாஜிக் மீறல்கள். உதாரணத்திற்கு பட்டணத்து பக்கத்துவீட்டுப்பெண் இப்படியெல்லாம் வலிய வந்து பரிவு காட்டுவார் என்பதில் உடன்பாடில்லை.
- ஏகப்பட்ட குழப்பங்கள். முக்கியமாக, மீனாக்ஷி அம்மா கேரக்டர் எப்படிப்பட்டது என்பது இறுதிவரைக்கும் விளங்கவே இல்லை.

எனக்குப் பிடித்த காட்சி:
உண்மையில் அப்படி எந்தக் காட்சியும் இல்லை என்றாலும் வீரா மீனாட்சி அம்மாவை பலவந்தப்படுத்தி வன்புணரும் காட்சியில் அந்த நடிகையின் நடிப்பு, முக பாவனைகள் பிரமிக்க வைத்தது.

வெர்டிக்ட்:
படம் முழுவதும் முடிந்ததும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களைப் பற்றி இரண்டு ஸ்லைட் காட்டினார்கள். (மெசேஜ் சொல்றாராம்). அந்த கருத்தை சொல்வதற்கு இரண்டு மணிநேரம் கருமத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். கெளதம் மேனன் தான் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் அதை இப்படித்தான் தவறான பாதையில் நிரூபிக்க வேண்டுமா...? இயக்குனர் தனது ரசனையையும், மூளை பலத்தையும் குப்பையில் கொண்டுபோய் கொட்டியிருக்கிறார். மாஸ், கிளாஸ் இரண்டையும் முயன்று இரண்டிலும் பரிதாபமாக தோற்றிருக்கிறார் இயக்குனர்.

எதிர்பார்க்கப்படும் ஆவி மார்க்: 37, குமுதம் ரேட்டிங்: ஓகே.

டிஸ்கி: Border Town படத்திற்கும் இந்தப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவேளை இருந்தால் அதுவும் எதேச்சையாக அமைந்ததாகவே இருக்கும். மற்றபடி ஏற்கனவே நிறைய தமிழ் சினிமாக்களில் பார்த்த சைக்கோத்தனங்கள் இருக்கின்றன.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

பச்சையப்பன் கல்லூரியும் பன்னாடைப்பயல்களும்

எதிர்கால இந்தியா, எதிர்கால எகிப்து, எதிர்கால அண்டார்டிகா இதெல்லாம் இவனுங்க கையிலதான் இருக்குதாமாம்...


பல அறிஞர்களையும் பேரறிஞர்களையும் உருவாக்கியதாம் பச்சையப்பன் கல்லூரி #வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...


அப்படியே நேரமிருந்தா இந்த காணொளி கருமத்தையும் பாருங்க...


டிஸ்கி: யூத்துன்னா அப்படித்தான் இருக்கும்ன்னு யாரும் வக்காலத்து வாங்காதீங்க... இந்த கழிசடைகளை நேரில் பார்த்தவர்கள் அந்த காரியத்தை செய்ய மாட்டார்கள்...

Post Comment

17 February 2011

நடுநிசி நாய்கள் – Border Town


வணக்கம் மக்களே...

இரண்டு வாரத்திற்கு முன்பு Memories of Murder படம் குறித்து எழுதியிருந்தேன். அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் நிறைய ஒற்றுமைகள். இரண்டும் உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன, இரண்டுமே வன்புணர்ச்சி குறித்த படங்கள், இரண்டுமே இன்றுவரை தீர்வாகாத வழக்குகள்.

-          Title: Border Town
-          Country: United States of America
-          Language: English
-          Year: 2006
-          Genre: Crime, Thriller
-          Cast: Jennifer Lopez, Maya Zapata, Rene Rivera
-          Director: Gregory Nava
-          Producers: David bergstein, Gregory Nava, Simon Fields
-          Cinematographer: Reynaldo Villalobos
-          Editor: Padraic McKinley
-          Music: Graeme Revell
-          Length: 111 Minutes

அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் அமைந்துள்ள ஜூவாரெஸ் எனும் தொழிற்சாலை நகரத்தில் 1993ம் ஆண்டு முதல் இன்றுவரை ஏராளமான பெண்கள் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 400 பெண்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அரசு குறிப்பேடுகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் 5000க்கும் மேற்பட்ட பெண்கள் இதுவரை கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்த வரிகளை எழுதவே வலிக்கிறது. வீட்டில் இளம்பெண்கள் யாராவது காணாமல் போனால் ஒரு குறிப்பிட்ட மலையடிவாரத்திற்கு சென்று குச்சியை மணலில் குத்தி தங்கள் மகளின் பிணம் இருக்கிறதா என்று தேடிப்பார்ப்பார்களாம். கிட்டத்தட்ட, ஈழப் படுகொலைகள், தமிழக மீனவர்கள் பிரச்சனை எப்படியோ அதுபோலவே இதுவும் ஒரு துயர சரித்திரம். இந்த உண்மைச்சம்பவங்களை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமே Border Town.

ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஜூவாரெஸ் நகரில் பெரும்பாலும் இளம்பெண்களே பணியமர்த்தப்படுகின்றனர். நம்ம ஊரில் எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் என்ன நடக்கிறதோ அதே காரணம்தான். குறைவான ஊதியத்தை கொடுத்து அதிக நேரம் வேலை வாங்கலாம், கடுமையாக உழைப்பார்கள் என்ற கேவலமான மார்கெட்டிங் மென்டாலிட்டி. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறாள் ஈவா எனும் இளம்பெண். ஒருநாள் அவள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது அலுவலக வாகன ஓட்டுனரும் மற்றொருவனும் சேர்ந்து அவளை வன்புணர்கின்றனர். அவள் இறந்துவிட்டதாக நினைத்து மண்ணில் புதைத்துச்செல்கின்றனர். ஆனால் அவள் இறக்கவில்லை, புதையுண்ட மண்ணில் இருந்து மீண்டு வீடு திரும்புகிறாள். இந்நிலையில் அமெரிக்க பத்திரிகை ஒன்றின் சார்பாக இந்த தொடர்கொலைகள் பற்றி செய்தி சேகரிக்க ஜெனிபர் லோபஸ் அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கே உள்ளூர் பத்திரிகை ஒன்றை சொந்தமாக நடத்திவரும் தனது பழைய காதலர் டியாசின் உதவியை நாடுகிறார். இருவருக்கும் ஈவாவிற்கு ஏற்பட்ட கொடுமைகள் தெரிய வருகிறது. ஜெனிபர் லோபஸ், ஈவாவிற்கு ஆதரவளித்து உதவியாக இருக்கிறார். மேலும் அவளுக்கு எதிராக வன்செயல் புரிந்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதாக உறுதியளிக்கிறார். இந்த தொடர்கொலைகளை இருட்டடிப்பு செய்யும் அரசாங்கம், அவர்களுக்கு துணைபோகும் போலீஸ், அரசுக்கு அடிபணியும் / அடிபணிய வைக்கப்படும் ஊடகங்கள், பணம் தின்று கொழுத்த தொழிலதிபர்கள் இவர்களுக்கு மத்தியில் ஈவாவிற்கு நியாயம் கிடைத்ததா...? ஜெனிபர் லோபஸின் லட்சியம் நிறைவேறியதா...? ஜூவாரெஸின் தொடர்கொலைகள் நிறுத்தப்பட்டதா...? என்பதே மீதிக்கதை.

இத்திரைப்படம் 2006ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பின்னர் பல எதிர்ப்புகளை கடந்து 2007ம் ஆண்டில் ஜெர்மனியில் தொடங்கி பல உலக நாடுகளில் வெளியிடப்பட்டது. அப்பொழுதும் அமெரிக்காவில் வெளியிடப்படவில்லை. இறுதியாக 2008ம் ஆண்டில் அமெரிக்காவில் டிவிடியாக இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் இத்திரைப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ஜெனிபர் லோபஸுக்கு விருது கிடைத்தது.

இப்படி ஒரு கதைக்களன் கொண்ட படத்தில் ஜெனிபர் லோபஸின் அழகை ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் நிறைய காட்சிகளில் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக, தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணைப் போலவே உடையலங்காரம் செய்துக்கொண்டு வரும் காட்சியில் கொள்ளை அழகு. அப்புறம், மேலோட்டமான ஒரு பாலுறவு காட்சியும் படத்தில் இருக்கிறது.

படத்தின் பிளஸ் பாயிண்டுகள்:
- ஜெனிபர் லோபஸ். இவர் மட்டும் நடிக்காமல் போயிருந்தால் படம் இந்த அளவிற்கு கூட வரவேற்பை பெற்றிருக்காது. ஆவணப்படம் போல ஆகியிருக்கும்.
- ஈவாவாக நடித்த இளம்பெண் பல இடங்களில் பிரமாதமான நடிப்பு. மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்ணாக வரும் காட்சிகளில் கச்சிதமான நடிப்பு.
- அமெரிக்கா மெக்சிகோவின் அரசியல் பூசல்களை முடிந்தவரைக்கும் பிற நாட்டு மக்களுக்கும் புரியும் வகையில் காட்டியிருக்கிறார்கள்.

எனக்குப் பிடித்த காட்சி:
தான் சேகரித்து தந்த செய்திகளை பத்திரிகை நிறுவனம் இருட்டடிப்பு செய்வதை அறிந்து தனது உயரதிகாரியிடம் ஜெனிபர் லோபஸ் கோபப்படும் காட்சி. ஒரு கட்டத்தில் ஜெனிபர் அநீதியின் பக்கம் சாய்ந்துவிடுவாரோ என்றொரு சந்தேகம் ஏற்படும். ஆனால் அடுத்த சில நொடிகளில் அப்படியெல்லாம் இல்லை என்று ஜெனிபர் ரெளத்திரம் பழகும் காட்சி. சூப்பர் மேடம்.

நல்லா நோட் பண்ணிக்கோங்க. நடுநிசி நாய்கள் இந்தப்படத்தின் காப்பி என்று நான் குறிப்பிடவில்லை. அது காப்பியா, தழுவலா, பாதிப்பா என்று சில தினங்களில் தெரிந்துவிடும். அதுவரை காத்திருப்போம். எனினும் நான் அறிந்தவரைக்கும் கெளதம் மேனன் செய்திருக்கும் புதுமைகள் / மாற்றங்கள்:
- தொழிற்சாலை பிண்ணனி என்பது கால் செண்டர் பின்னணியாக மாற்றப்பட்டுள்ளது இது ஈசன் படத்தையும் வன்புணர்ச்சி குறித்த கதைக்களன் யுத்தம் செய் படத்தையும் நினைவூட்டும் ஆபத்து இருக்கிறது.
- பார்டர் டவுன் படத்தில் கொலையாளி ஒருவனல்ல. ஆனால் நடுநிசி நாய்கள் படத்தில் நடக்கும் கொலைகளுக்கு எல்லாம் ஒரே ஒரு சைக்கோ கில்லரே காரணம் என்று அறியப்படுகிறது.
- நடுநிசி நாய்கள் படத்தில் பாடல்களோ, இசையோ கிடையாது.

வெர்டிக்ட்:
ஒரு கமர்ஷியல் சினிமாவாக ரசிக்க முடியுமா என்று சொல்ல முடியவில்லை. இருப்பினும், ஜூவாரெஸின் துக்க சரித்திரத்தை அறிந்துக்கொள்ள ஒரு சிறந்த திரைப்படம். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

பதிவிறக்க இணைப்புகள்:
நேரடி இணைப்பு:
கிடைக்கப்பெறவில்லை...
டோரன்ட் இணைப்பு:
(இரண்டு விதமான இணைப்புகளிலும் ஆங்கில சப்-டைட்டில்கள் இணைக்கப்பட்டுள்ளன).
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

நையாண்டி பவன் – ஒரு அறிமுகம்


வணக்கம் மக்களே...

பதிவுலக பெரியவர்களோடு சேர்ந்து நாங்க ஆரம்பித்திருக்கும் கவுண்டமணி - செந்தில் ரசிகர் மன்றம் பற்றி அறிந்திருப்பீர்கள். அப்படியே, ரசிகர் மன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க போன வாரம் பஞ்சாயத்தை கூட்டினோம். ஆக்சுவல்லி, அந்த டிஸ்கஷன் டாஸ்மாக்குல தான் நடந்திருக்கணும். இருந்தாலும், நம்ம மெட்ராஸ் பவன் சிவகுமார் சுத்த சைவம் என்பதால் கே.ஆர்.பி அண்ணனின் ஆபிசுல வச்சு டிஸ்கஷனை தொடங்கினோம்.

நம்ம தளத்துல கண்டிப்பா பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுத்தே ஆகணும்னு பொதுக்குழு தீர்க்கமான முடிவொன்றை எடுக்க, நகைச்சுவையுடன் எழுதும் பெண் பதிவர்கள் யாரென்று யோசித்தால் பளிச்சுன்னு நம்ம வெட்டிப்பேச்சு சித்ரா மேடம்தான் தெரிஞ்சாங்க. அப்புறம் இன்னொரு பெண் பதிவருக்கான இடத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி மேடமை தேர்வு செய்தோம். நல்லபடியா ரெண்டு பேரும் நம்ம கரகாட்ட கோஷ்டியில் சேர ஒப்புக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. அப்படியே அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்க போஸ்டுக்காகத்தான் காத்திருக்கிறோம் மேடம்ஸ்.

சரி, அடுத்ததா என்ன மாதிரி போஸ்ட் போடலாம்னு யோசிச்சோம். பதிவர்களோட கோக்கு மாக்கா பேட்டி எடுத்து நான் போடுறேன்னு சிவா சொன்னார். அஞ்சா சிங்கம் அவரது காட்டு தர்பார் கான்செப்ட்டை விவரித்தார். இந்த வரிசையில் நேற்று கே.ஆர்.பி அண்ணனின் கோக்கு மாக்கு பேட்டியையும் அதற்கு முந்தய நாள் அஞ்சா சிங்கத்தின் காட்டு தர்பாரையும் படிச்சிருப்பீங்க.

என்னோட பங்குக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சு பார்த்து குமுதத்தில் வெளிவரும் நையாண்டி பவன் மாதிரி ட்ரை பண்ணலாம்ன்னு முடிவு பண்ணேன். நையாண்டி பவன் காமிக்ஸ் கான்செப்ட் பற்றி அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்கு நையாண்டி பவன் என்ற இந்த ஹோட்டலுக்கு நம்ம தானைத்தலைவர் கவுண்டமணி அண்ணன்தான் முதலாளி அவரோட உதவியாளரா செந்தில். ஹோட்டலுக்கு வந்துபோற விருந்தாளிகள் கிட்ட செமையா லந்து பண்ணுவாங்க. இந்த கான்செப்ட்டை கே.ஆர்.பி அண்ணனிடம் சொல்லி நீங்க பண்ணா நல்லா இருக்கும்ன்னு சொன்னேன். அவர் நீங்களே பண்ணுங்க தம்பின்னு இளைய தலைமுறைக்கு வழிவிட்டார்.

நானும் கவுண்டமணி செந்தில் ரசிகன் தான் என்றாலும் அவர்களின் வசனங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் அளவிற்கு ஞாபக சக்தி கிடையாது. இருந்தாலும் ரெண்டு நாளா ரொம்ப யோசிச்சு நையாண்டி பவனின் முதல் எபிசோடை ரெடி பண்ணியிருக்கேன். நையாண்டி பவனின் முதல் விருந்தாளி நம்ம ஓலகப்பட இயக்குனர் மிஷ்கின்.

இதனால் கூற வருவது என்னவென்றால் கவுண்டரின் ரசிகர்கள் அனைவரும் அப்படியே மன்றத்துக்கு போய் உங்க கருத்துகுத்துக்களை கும்மு கும்முன்னு கும்முங்க...


அப்புறம் முக்கியமான விஷயம்... அங்கேயும் இங்கேயும் உள்ள அனைத்தும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது... யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 February 2011

பிரபா ஒயின்ஷாப் – காதலர் தின ஸ்பெஷல்

வணக்கம் மக்களே...

காதலில் வென்றவர்கள் சந்தோஷமாகவும், காதலில் தோற்றவர்கள் அதைவிட டபுள் மடங்கு சந்தோஷமாகவும் சரக்கடித்து கொண்டாடுங்கள்...

ஒருதலை காதலர்கள், பிரிந்துபோன காதலர்கள் எல்லாருக்கும் ஒரு அட்வைஸ். உங்கள் காதல் கைகூடாததை நினைத்து சந்தோஷப்படுங்கள். ஒருவேளை, காதல் வெற்றி பெற்றிருந்தால் தம்மடிக்கவும், சரக்கடிக்கவும் ரோட்டில் கும்முன்னு போகும் பிகரை சைட்டடிக்கவும் சுதந்திரம் இல்லாமல் போயிருந்திருக்கும். அந்த நிலை உங்களுக்கும் தேவையா...? இந்த உலகத்துல, பேச்சுலர் லைப் மாதிரி சந்தோஷமானது ஏதாவது இருக்கா...? அதனால பழசை நினைச்சு வருத்தப்பட்டு வருத்தெடுக்காமல் வாழ்க்கையை கொண்டாடுங்கள்.

பொதுவா, யாருக்காவது கல்யாணம் ஆச்சுன்னா குவா... குவா... எப்போன்னு எல்லாரும் கேப்பாங்க. ஆனா சினிமாக்காரங்களுக்கு கல்யாணம் ஆனா மட்டும் டைவர்ஸ் எப்போன்னு கேக்கணும் போல. அப்படித்தாங்க இருக்குது நிலைமை.

இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஜோடின்னு எல்லாருக்கும் முன்னுதாரணமா வாழ்ந்துட்டு இருக்காங்க நம்ம தல அஜீத்தும் ஷாலினி அண்ணியும். இந்த வார ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் அஜித் ஷாலினி காதல் பேட்டியை வெளியிட்டிருக்கிறார்கள். அட, கோவிச்சுக்காதீங்கப்பா அப்படியே மூணு பக்கம் தள்ளி விஜய் சங்கீதா லவ் ஸ்டோரியும் போட்டிருக்காங்க.

ஒரு வாரமா நம்ம கவுண்டமணி அண்ணன் கையில ரோஜாப்பூவோட ரொமாண்டிக் லுக் விடுற ஸ்டில்லை போட்டு பில்டப் பண்ணிட்டு இருந்தோம். அந்த சஸ்பென்சை உடைக்கிற நேரம் வந்தாச்சு. அண்ணன் கையில வச்சிக்கிட்டு இருந்தது ரோஜாப்பூ மட்டுமல்ல. அது ஒரு வலைப்பூவும் கூட. நீங்களும் வந்து நம்ம மன்றத்துல சேருங்க... மதியத்துக்குள்ள பெரிய மனுஷங்க யாராவது வந்து ரிப்பன் கட் பண்ணி திறந்து வைப்பாங்க...

வரலாற்றில் இந்த நாள்:
பென் ஹர் என்ற திரைப்படம் பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்கு, இது 1959ம் ஆண்டு வெளிவந்த ஒரு இதிகாசத் திரைப்படம். பதினோரு ஆஸ்கர் விருதுகளை வாங்கிக் குவித்த திரைப்படம்.

இந்தப்படம் 1971ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதிதான் முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த காலக்கட்டம் இப்போது மாதிரியானது அல்ல. போன வாரம் வெளிவந்த படத்தை இந்த வாரமெல்லாம் டிவியில் போடமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழலில் இத்திரைப்பாடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது ஒரு வரலாற்று சம்பவமாக ருதப்படுகிறது.

ட்வீட் எடு கொண்டாடு:
காதல் தோல்விக்கு பெண்களை காரணம் சொல்லும் ஒவ்வொரு ஆணும் அடுத்த காதலுக்கு தயாராகின்றான் # கூட்டத்துல கட்டு சோற்றை அவிழ்த்தல்

எதிர் வீட்டு ஃபிகர் கூட சரியா தெரியாம கஷ்டப்பட்டேன்; ஆனா இப்போ அடுத்த தெரு ஆன்ட்டி கூட அம்சமா தெரியுது! # THANKS TO VAASAN EYE CARE

பல நேரங்களில் காதலியின் அழகைக்காட்டிலும், அறிவு அச்சப்படுத்துகிறது # ஓவரா கேள்வி கேட்கிறாங்க

நாளைக்கு காதலர் கிரகணம், வெளில போனாக்கா மனசுக்கு கெடுதி!CartoonNetwork அல்லது DiscoveryTamil பார்த்துகிட்டு வீட்லயே இருப்பேன்

காதல் காதல் காதல்! காதல், ஒரு கழட்டி போட்ட செருப்பு. சைஸ் சரியா இருந்தா யாரு வேணுனா மாட்டிக்கலாம்!

உலகின் மிகச்சிறந்த ரொமாண்டிக் படங்கள் என்று கூகிளி பார்த்தேன். நிறைய லிஸ்ட் கிடைத்தது. கிட்டத்தட்ட, எல்லா லிஸ்டிலும் இருந்த ஐந்து படங்கள்.
1.        City Lights
2.       Gone with the Wind
3.       Casablanca
4.       The English Patient
5.       Titanic

பதிவுலகில் புதியவர்: ஐ ஆம் சீரியஸ்...
ஆக்சுவல்லி, இவர் புதியவர் அல்ல. நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச பிரபல பதிவர் தம்பி கூர்மதியான்தான். அவர் வைத்திருக்கும் ஆங்கில வலைப்பூ உட்பட நான்கு வலைப்பதிவுகளில் இதுவும் ஒன்று. அதிகம் அறியப்படாதது. தலைப்பு மட்டும்தான் சீரியஸ் மற்றபடி இடுகைகள் அனைத்தும் செம காமெடி ரகம். ஏனோ தெரியல, இந்த வலைப்பூவில் அடிக்கடி இடுகையிடுவது இல்லை. வாருங்கள் அவரை ஊக்குவித்து நிறைய எழுத வைப்போம்.

எனக்குப் பிடித்த பாடல்:
என்னன்னு தெரியல. இந்த வாரம் எந்த பாடலும் பெரிய அளவில் மனதை ஈர்க்கவில்லை. ஒருவேளை, ஆணி அதிகம் என்பதாலோ என்னவோ. இருந்தாலும், சிறுத்தை படத்தின் ராக்கம்மா... பாடல் கொஞ்சூண்டு பிடித்திருந்தது. தமன்னாவின் இடுப்பில் இல்லாத ஈர்ப்பு கூட சுச்சியின் குரலில் இருக்கிறது.

இந்த வார புகைப்படம்:
கூகிள் பஸ்ஸில் ஒரு வட இந்தியர் அனுப்பியிருந்தார். எந்த இடத்தில் எடுத்த புகைப்படம் என்று கேட்டேன், பதிலே வரவில்லை. அநேகமாக ராஜஸ்தானாக இருக்குமென்று நானாகவே யூகித்துக்கொண்டேன்.

இந்த வார காணொளி:
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எனக்கு பிடித்த போட்டியாளர் மாதங்கியை வெளியேற்றிவிட்டார்கள் :(


இந்த வார கவுஜை: (நண்பர் ஒருவரின் வலைப்பூவில் எப்பவோ படித்தது...)
என் நண்பனின் காதலி கிங்க்பிஷரே...
உன்னிடம் ஒரு கேள்வி:
அரைலிட்டர் தண்ணீரே என்னால் அருந்தமுடியவில்லை...
உனைமட்டும் எப்படி ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே விடுகின்றான்...?

இந்த வார எஸ்.எம்.எஸ்:
காதல் ஜோடிக்கு கொடுக்க சிறந்த பரிசுப்பொருள் எது....???
வெங்காயம்...

காரணம்:
-          காதலின் நிறம் பிங்க்.
-          விலை உயர்வானது.
-          காதலன் / காதலியின் கண்களில் ஆனந்த கண்ணீர் கேரண்டி.

இந்த வார தத்துவம்:
“DON’T FALL FOR ANYONE… UNTIL THEY ARE READY TO CATCH YOU…”
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 February 2011

காதலர் தினம்...???

பிப்ரவரி 14, காதலர் தினம் மட்டும்தானா...?
.
.
.
.
வேறென்ன ஸ்பெஷல்...?


காத்திருங்கள்...

மேலும் விவரங்களுக்கு:


Post Comment

9 February 2011

டாகுடர் விஜய் – எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்


வணக்கம் மக்களே...

முஸ்கி 1: விஜய் ரசிகர்கள் யாரும் இந்தக்கோட்டை தாண்டி படிக்க வேண்டாம்.


முஸ்கி 2: சொல்றத சொல்லிட்டேன். அதுக்குமேல, உங்க இஷ்டம்.

ஒரு கட்டத்திற்கு பிறகு விஜய் படங்கள் ரிலீஸ் என்றாலே ஒரு குதூகலம் பிறக்க ஆரம்பித்துவிட்டது. எதுக்கா...? கும்பலா தியேட்டருக்குப் போய் விஜயோட பஞ்ச் டயலாக்குகளுக்கு கவுண்ட்டர் கொடுத்துக்கொண்டு, மனதுவிட்டு சிரித்து படம் பார்ப்பதில் இருக்கும் சுகமே தனி. அந்த வகையில் எனக்குப் பிடித்த என் மனதை கடுமையாக பாதித்த ஐந்து விஜய் படங்களின் பட்டியல்:-

5. திருமலை
அநேகமாக விஜய்க்கு பஞ்ச் டயலாக் கிறுக்கு பிடிக்க ஆரம்பித்தது இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன். நீயா பேசியது... அப்படின்னு கேக்குறதுக்காக மட்டுமே ஜோதிகாவை எகிப்து வரை கூட்டிட்டுப் போவார். அங்கே காதல் ரசம் சொட்டச் சொட்ட, நம் காதில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு பாடலை பாடி பயங்கரமா வெறுப்பேத்துவார். ஜோதிகாவோடு அசால்ட்டாக காதல் செய்யும் காட்சிகள் அனைத்தும் செம காமெடி.

எ.பி.காட்சி: காட்சி அல்ல பாடல். நீயா பேசியது... பாடல் தான். அந்தப்பாடலில் விஜய் ஜோதிகா முகபாவனைகளை பார்த்தால் நாலு நாளைக்கு சோறு உள்ள இறங்காது.

4. போக்கிரி
இந்தப்படம் நிறைய பேருக்கு சீரியஸா பிடிக்கும். ஆனா செம காமெடி படம். அட, நான் வடிவேலு செய்யும் காமெடிகளை சொல்லவில்லை. நம்ம டாகுடர் காமெடிகளை தான் சொல்கிறேன். விஜய் இந்தப்படத்தில் செம அசால்ட். அடிக்கடி மூக்கை உறிஞ்சுவார் (மேனரிசமாம்). எல்லாவற்றையும் விட மிகப்பெரிய காமெடி க்ளைமாக்ஸ் காட்சியில் வாட்ச்மேன் டிரஸ் போட்டபடி விஜய் நடந்து வருவதுதான். வடிவேலு காமெடிகள் நிஜமாவே நல்லா இருக்கும்.

எ.பி.காட்சி: இரண்டு ரவுடி கும்பலுக்கு மத்தியில் உட்கார்ந்துக்கொண்டு விஜய் மூக்கை உறிஞ்சியபடி செம அசால்ட்டாக பேசும் காட்சி. (அட யாராவது கர்சீப் வாங்கி கொடுங்கப்பா... சின்னப்பிள்ளை மாதிரி மூக்கை உறிஞ்சிக்கிட்டு)

3. வேட்டைக்காரன்
விஜய்யை பற்றி பெட்டிக்கடைக்காரர் ஓவராக பில்டப் கொடுக்க ஆரம்பித்ததும் சிரிக்க தொடங்கியவன் தான் படம் முடியும் வரை நிறுத்தவே முடியவில்லை. விஜய் குல்லா போட்டபடி குதிரையில் வருவது, வில்லன் விஜய் காதில் வந்து பயம்ன்னு சொல்றது எல்லாமே செம காமெடி. அப்புறம் பஞ்ச் டயலாக். சாமி முன்னாடி மட்டும்தான் சாந்தமா பேசுவேன். சாக்கடை முன்னாடி இல்லை... மறக்கக்கூடிய வசனமா அது...!!!

எ.பி.காட்சி: சொல்லிச் சொல்லி அலுத்துபோச்சு. அறிமுகப்பாடலில் விஜய் கான்க்ரீட் கல்லொன்றை ஓங்கிக் குத்துவாரே... அந்தக்காட்சிதான்... (குத்துங்க எஜமான் குத்துங்க...)

2. சுறா
நண்பர்களின் எச்சரிக்கையை எல்லாம் மீறி முதல்நாள் முதல்காட்சி பார்த்த படம். வேட்டைக்காரனையே கொஞ்சம் உல்டா பண்ணியது போல நிறைய சீன் இருக்கும். உதாரணத்திற்கு டாகுடரின் அறிமுகக்காட்சி உச்சக்கட்ட நகைச்சுவை. விஜய்க்கு ஊர்மக்கள் கொடுக்கும் பில்டப்... அடங்கப்பா... வடிவேலுவும் தமன்னாவும் வேற அவங்கவங்க பங்குக்கு செமையா வருத்தெடுப்பாங்க. அப்பப்ப பாடல்கள் மட்டும் கொஞ்சம் ஆறுதல் தந்தது.

எ.பி.காட்சி: வேறென்ன, விஜய் சுறா நீச்சல் போட்டபடி கடலிலிருந்து கொடுப்பாரே ஒரு இன்ட்ரோ சீன்... அதுதான்...

1. சிவகாசி
விஜய் + பேரரசு = வெறிக்கூட்டணி. இந்தப்படத்தில் மிகவும் ரசிக்க வைத்த விஷயம் விஜய்யின் மேனரிசங்கள். அசினும் விஜய்யும் மாறி மாறி செய்யும் இரட்டையர்கள் காமெடி செம. ரெண்டாவது பாதியில் பிரகாஷ் ராஜும் கூட சேர்ந்து மொக்கை போடுவார். மசாலாத்தனங்கள் என்று சொல்லப்படும் ஊரை ஏமாற்றும் காட்சிகள் எல்லாம் குபீர் சிரிப்பை வரவழைத்தது. இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்தமாதிரி எல்லாம் ஊரை எமாற்றுவார்களோ...???

எ.பி.காட்சி: விஜய் அவரது படையோடு அசினிடம் போய் நின்று எங்க அண்ணனை திட்டினியாமே...? என்று நக்கலடிக்கும் காட்சி.

ம்ம்ம்... இந்தப்பதிவை இதே ஸ்டைலில் தொடர்வதற்கு மிகவும் ஆசைப்பட்ட பன்னிக்குட்டி ராம்சாமி, வம்ப வெலைக்கு வாங்குவோம் மணிவண்ணன், அப்புறம் விஜயின் தீவிர விசிறி ஐத்ரூஸ் மூவரையும் வம்புடன் அழைக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 February 2011

நடிகர் விஜய் – எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்


வணக்கம் மக்களே...

சில வாரங்களுக்கு முன்பு எனக்குப் பிடித்த பத்து விஜய் படங்கள் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒன்றினை எழுத அழைப்பு வந்திருந்தது. அழைத்தவர் ஹிட்ஸ்ராசக்க சி.பி.செந்தில்குமார் (அப்பாடா புதுசா ஒரு பட்டைப்பெயர் வச்சாச்சு...). என்னடா பத்து படங்கள்ன்னு சொல்லிட்டு தலைப்புல ஐந்துன்னு போட்டிருக்கான்னு யோசிக்கிறீங்களா...? இருங்க சொல்றேன். விஜய்ன்னாலே நமக்கெல்லாம் நக்கலடிச்சுதான் பழக்கம். ஆனா, நம்ம கடைப்பக்கம் வர்ற கொஞ்சநஞ்சம் விஜய் ரசிகர்களை வருத்தப்பட வைக்க எனக்கு விருப்பமில்லை. அதுலயும் தளபதிடா தளத்தின் நிர்வாகி வினு வேற முன்னூறாவது பின்தொடர்பவராக இங்கே வந்து இணைந்திருக்கிறார். அதுக்காக, நக்கலடிக்காமலும் இருக்க முடியாது. கல்லா கட்டுமா காவலன் எழுதினப்பவே பதிவுல ஒரு இடத்துல கூட டாகுடர்ன்னுற வார்த்தை வரலைன்னு பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன் ரொம்ப பீல் பண்ணார். அதனால சீரியஸா ஒரு அஞ்சு, நக்கலடிச்சு ஒரு அஞ்சுன்னு ரெண்டா பிரிச்சுக்கிட்டேன்.

இப்போ உண்மையா, சத்தியமா விஜய் நடிப்பில் எனக்குப் பிடித்த ஐந்து படங்களின் பட்டியல்:-
5. ப்ரியமுடன்
விஜய் நடிப்பில் எனக்குப் பிடித்ததிலேயே பழைய படமென்றால் இதுதான். கொஞ்சம் வித்தியாசமான காதல் கதை. ஹீரோயினாக எனக்கு மிகவும் பிடித்த (அப்போ) கவுசல்யா நடித்த படம். விஜய் அவரது நண்பர்களுடன் வரும் சில காட்சிகள் கூட ரசிக்கும் வகையில் இருந்தது. தேவா இசையில் மணிவண்ணன் ஆட்டத்தில் ஒயிட் லகான் கோழியை மறக்கவே முடியாது. இவை எல்லாவற்றையும் விட விஜய் நடிப்பில் இருந்த வில்லத்தனம் அதிகம் ரசிக்க வைத்தது.

எ.பி.காட்சி: விஜய் உயரமான கட்டிடம் ஒன்றின் மொட்டைமாடியில் நின்று தனது காதலுக்காக ஜெய்கணேஷிடம் கெஞ்சுவதும் பின்னர் ஆத்திரத்தில் அவரை அங்கிருந்து கீழே தள்ளிவிடும் காட்சி.

4. ப்ரண்ட்ஸ்
முழுநீள நகைச்சுவை திரைப்படமென்று ஊருக்கே தெரியும். வடிவேலுவிற்காகவே விழுந்து விழுந்து சிரித்த ரசித்த திரைப்படம். விஜய்யும் சூர்யாவும் கூட குறைவில்லாமல் காமெடி செய்திருப்பார்கள். பங்களாவுக்கு வெள்ளை அடிக்க ஆரம்பித்ததும் நம் உள்ளத்தை கொள்ளை அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பிற்பாதியில் கொஞ்சம் தொய்விருந்தாலும் இப்போது தொலைகாட்சியில் நகைச்சுவை காட்சிகளை பார்த்தாலும் மனதுவிட்டு சிரிக்க வைக்கும் படம்.

எ.பி.காட்சி: ஆணியே புடுங்க வேணாம்...!!!

3. கில்லி
இந்த மாதிரி மசாலா படங்கள் எனக்குத் துளியளவும் பிடிக்காது. அதிலும் தெலுங்கு டப்பிங் என்றால் சுத்தம். அதையெல்லாம் மீறி இந்தப்படத்தை ரசிக்க வைத்த ஒரு விஷயம் விஜய்யின் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள். அப்படியே எங்கள் வீட்டு சூழலை பிரதிபலித்தது. அதிலும் விஜய்யும் அவரது தங்கையும் அடிக்கும் லூட்டிகள் செம காமெடி ரகம். அப்புறம், த்ரிஷாவுக்காக கொஞ்சம். படம் பார்த்ததும் ஏதோ கேர்ள்பிரண்டோடு டூர் போயிட்டு வந்த அனுபவம் கிடைத்தது.

எ.பி.காட்சி: குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே... எதை குறிப்பிட்டு சொல்வதென்று தெரியவில்லை.

2. குஷி
திரையரங்கம் சென்று பார்த்த முதல் விஜய் படம். அப்ப, எஸ்.ஜே.சூர்யா மீது கொஞ்சம் நல்ல இமேஜ் இருந்தது. மென்மையான, மேன்மையான காதல் கதை. விஜய் ஜோ சம்பத்தப்பட்ட ஊடல், ஈகோ காட்சிகள் அருமையா இருக்கும். விவேக் காமெடி சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டியது. மும்தாஜை மறக்க முடியுமா....? (ம்ம்ம்... அப்போ அவர் ஸ்லிம்மா இருந்தார்). வழக்கம்போல ரயில்வே ஸ்டேஷன் க்ளைமாக்ஸ் என்றாலும் பிடித்திருந்தது.

எ.பி.காட்சி: வேறென்ன, இடுப்பு காட்சியே தான்.

1. வசீகரா
யாருக்குமே பிடிக்காத படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது ஆச்சர்யம். விஜய் சினேகா ஜோடிப்பொருத்தம் சூப்பர். சிக்னேச்சர் சரக்கு அடிச்சா போதை கொஞ்சம் கொஞ்சமா ஏறுமே அதே மாதிரி விஜய்க்கும் சினேகாவுக்கும் இடையே காதல் கொஞ்சம் கொஞ்சமாக மலரும். மரபு வேலிகளை உடைத்தெறியும் அந்தக் காதல் பிடித்திருந்தது. விஜய் மணிவண்ணன் கெமிஸ்ட்ரி பிடித்திருந்தது. விஜய் நாசர் கெமிஸ்ட்ரியும் அதே பாணி. வடிவேலுவுடன் செய்யும் காமெடி காட்சிகளும் களை கட்டும். எப்போது பார்த்தாலும் மனதை மயிலிறகால் வருடிக்கொடுக்கும் படம்.

எ.பி.காட்சி: விஜய் திருமண விழாவை எப்படி நடத்த வேண்டுமென்று விவரிக்கும் காட்சி. அந்தக் காட்சியில் விஜய்யின் பாடி லாங்குவேஜ் பிரமாதம்.

இந்தப் பதிவை தொடர்வதற்காக இருக்கவே இருக்கிறார் தளபதிடா வினு. அவரை அன்புடன் அழைக்கிறேன்.

நாளைக்கு விஜய் ரசிகர்கள் யாரும் இந்தப்பக்கம் தல காட்ட வேண்டாமென்று மறுபடியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் நாளைய பதிவு: டாகுடர் விஜய் எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment