28 November 2009

நைட் ஷிப்டில் நாத்திகம்

வணக்கம் மக்களே...

தயவு செய்து என்னை மன்னிக்கவும். என்னுடைய அடுத்த கட்டுரை எனது நண்பர்களுக்காக நண்பர்களை பற்றியதாக இருக்க வேண்டுமெனக் கருதினேன். ஆனால் அதற்குள் எனக்குள் இருக்கும் night shift நினைவுகள் மறைந்துவிடுமோ என்ற பயத்தின் காரணமாக அவசர அவசரமாக இந்த கட்டுரையை எழுதுகிறேன்.


கடந்த கட்டுரைக்கு தங்களது விலைமதிப்பற்ற கருத்துக்களை தந்த pon mahesh, tyagu மற்றும் சில நண்பர்களுக்கு கோடி நன்றிகள். இந்த முறையும்உங்கள் மேலான ஆதரவையும் பொன்னான கருத்துக்களையும் கொடுக்கும்படிகேட்டுக்கொள்கிறேன்.
இனி உள்ளே...

september மாதம்... மார்கழி மாதத்தை மன்மத மாதம் என்று சொல்வதுபோல என்னைப்பொறுத்தவரையில் september மாதம் நாத்திக மாதம். இது தந்தைபெரியார் பிறந்த மாதம். இதே மாதத்தில் தான் நானும் பிறந்தேன். ஆனால் நானொரு சிறியார் தான். சில மாதங்கள் முன்பு வரை நான் சிலகாரணங்களுக்காக எனக்குள் நாத்திகத்தை (மன்னிக்கவும்... பகுத்தறிவை) மறைத்து வைத்துக்கொண்டு வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திகோவிலுக்கு சென்று விளக்கேற்றி வைத்து வந்தது நினைவிருக்கலாம். ஆனால் இப்போது நான் மீண்டும் நானாக...

september 3 2009 - முதன்முறையாக night shift வேலைக்கு கிளம்பினேன். எங்களது batchல் உள்ள trouser boys சிலரும் seniors 8 பேர் மட்டுமே அணியில்இருந்ததால் நான் தனித்தீவாகவே இருந்தேன். சில நாட்கள் வரை seniors அந்நியர்களாகவும் team leader நண்பராகவும் தெரிந்தது. ஆனால் ஓரிருநாட்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியது. நானும் பாலும் தயங்கிதயங்கி seniors கூட்டணியில் இணைந்தோம். பின்னர் paul விஷனின் நக்கல்ஸ் தாங்க முடியாமல் கூட்டணியில் இருந்து விலகி மலையாளக்கரையோரம் ஒதுங்கினான்.
இனி நானும் சீனியர்சும்...

seniors என்பதால் சில காலம் வரை அணியில் ஊமையாக மட்டுமே இருந்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி டீக்கடையில் meeting போடுமளவிற்கு ஒன்றுகூடினோம். ஆனால் அவர்கள் முன்னிலையில் புகை நமக்கு பகை என்றே காட்டிக்கொண்டேன். தினமும் பின்னிரவில் யாருக்கும்தெரியாமல் smoking loungeல் ஒளிந்து ஒளிந்து புகைத்துவிட்டு வருவேன்.

night shift என்பதால் நாங்கள் தூங்கிக்கொண்டோ மந்தமாகவோஇருந்ததில்லை. எப்போதும் அரட்டை தான். இதில் wanted fellows - saravanan and vishan. sense of humourல் சரவணன் வடிவேலுவைப் போலவும் விஷன்விவேக்கை போலவும் செயல்படுவார்கள். சரவணன் அவ்வப்போது உள்ளே புகுந்து வடிவேலு வசனங்களை சொல்லி சிரிக்க வைப்பார். விஷனின் பேச்சு வித்தியாசமானது. அதில் நகைச்சுவையை விட சமூகக்கருத்துகள் அதிகம் அடங்கியிருக்கும்.

காலம் உருண்டோட அவர்கள் இருவரும் என்னை மிகவும் கவர்ந்தனர். அவர்களுக்கருகில் login செய்வதையே விரும்புவேன். sunday அவர்கள்இருவருக்கும் OFF என்பதால் அன்று அலுவலகம் செல்வதையே வெறுப்பேன். குறிப்பாக விஷன் என்னை அதிகம் கவர்ந்தார். அவருக்குள் இருக்கும் நெருப்பை நான் சற்று தாமதமாகவே உணர்ந்தேன்.

vishan - அவரை vision என்று கூட சொல்லலாம். பெரியார்த்தொண்டர், அதற்கும் மேலாக கமல் பக்தர். விஷனின் பேச்சை கேட்பதற்காகவே தினமும் அலுவலகம் சென்றேன். கமல் படங்களின் வசனங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டு அவ்வப்போது timing comedy அடிப்பார். (இந்த கட்டுரையை எழுதும் இந்த நாளில் vision பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பதை மன மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்)

இப்படியாக அரட்டை அரங்கம் போல செயல்பட்டு வந்த night shift, team leader சுரேஷின் அக்கப்போரால் சலனமடைந்தது. இதன் காரணமாக
மாதக்கடைசியில் pilot batch உறுப்பினர்கள் சிலர் பணியை துறக்க முடிவு செய்தனர். இதை ஒரு பிரிவு உபசார தினமாக கடைபிடிக்க திட்டமிட்டோம். october 7 மாலை t.nagar eagle barல் farewell நடத்த முடிவெடுக்கப்பட்டது.

கடந்த ஓராண்டுகாலமாக மதுவின் பிடியில் இருந்த நான் இப்போது மதுவை
நாட முடிவு செய்தேன் (பொருள் வேற்றுமையை உணர்ந்து கொள்க). நாங்கள் barல் cheers சொன்னபோது எனக்குள் இருந்த senior - junior வேற்றுமை தொலைந்தது. முதன்முறையாக அவர்கள் முன்னிலையில் புகை பிடித்தேன். உற்சாகம் பொங்கி 5 round தாண்டியபின் அங்கே என்ன நடந்ததென்றே நினைவில்லை. (இந்த இடத்தில் அன்றிரவு என்னை பாதுக்காப்பாக அழைத்துச் சென்ற நண்பர்கள் pon mahesh, ashokக்கு என் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்).

சரிபாதி seniors கழண்டுகொள்ள vignesh, velan, vivek ஆகியோரை எங்கள்
கூட்டணியில் இணைத்துக்கொண்டோம். எப்படி கூட்டணி கலைந்து மாறினாலும் விஷன் தான் center of attraction. team leader சுரேஷ் அவ்வப்போது எங்கள் கூட்டணிக்கு அலப்பரைகள் கொடுத்ததால் team manager தலைமையில் பஞ்சாயத்தை கூட்டினோம். ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சட்டம் அவரை தண்டிக்கவில்லை.

இத்தகைய கருத்து வேறுபாடுகள், குழப்பங்கள் காரணமாக manager எங்களை day shift
க்கு மாற்ற திட்டம் வகுத்தார். november 1 முதல் day shift என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. night shiftஐ பிரிவதற்கு வருத்தமாக இருந்தாலும் day shiftல் பெண்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்று தெரிந்ததும், காய்ந்த மாடுகளாக கம்பங்கொல்லையை மேய தயாரானோம்.

அடுத்த கட்டுரை நிச்சயமாக கண்டிப்பாக எனது நெருங்கிய பள்ளி, கல்லூரி
நண்பர்களை பற்றியது. அதற்கான முன்னோட்டம் தான் தற்போதைய polls.

தலைப்பு: எனக்கான பரமனைத் தேடி...!


என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment

14 November 2009

கால் சென்டரில் கம்யூனிசம்

வணக்கம் மக்களே...

நீண்ட யோசனைக்குப்பிறகு பல நாட்களின் சிந்தனைக்குப் பிறகு நான் எனது கருத்துக்களை இந்த கட்டுரையின் மூலம் தொடங்குகிறேன். எனக்கு உங்களது ஆதரவையும் ஊக்கத்தையும் கொடுத்து உதவ வேண்டுகிறேன். அது மட்டுமில்லாமல்...
WHATEVER U THINK ABOUT MY POST, MY BLOG PLEASE POST UR COMMENTS HERE OR SMS ME @ 9840279581 OR ELSE SIMPLY SCRAP ME....
ரொம்ப THANKS...!


call center, communism இரண்டும் முற்றிலும் முரண்பாடான ஒன்று என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கக்கூடும். ஆனால் அவை இரண்டும் எனக்குள் அடங்கியிருக்கிறது. வேலையில்லாத விரக்தியில் இருந்த எனக்கு வாழ்வளித்தது, allsec technologies எனும் call center. ஆனால் எனக்குள் ஒரு "கற்றது தமிழ்" பிரபாகர் ஒளிந்திருப்பது என்னுடன் நெருங்கிப்பழகிய நண்பர்கள் சிலரும் நானும் மட்டுமே அறிந்த ரகசியம். தலைப்பிற்கேற்றபடி அழுத்தமான, ஆழமான கருத்துக்கள் இந்த கட்டுரையில் இடம் பெறவில்லை என்றாலும் எனது allsec அனுபவங்களை சில கருத்துக்களோடு கலந்து தெளித்திருக்கிறேன், தெரிவித்திருக்கிறேன்.

june, july 2009 - "வறுமையின் நிறம் சிவப்பு" கமலை போல கம்யூனிச கருத்துக்களுடன் சுற்றிக்கொண்டிருந்த காலம். HCL, HOV services, e4e business solutions உட்பட சிலபல BPO interviewக்களில் வெளியேறிய விரக்தி எனக்குள் இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் july 24 2009 முழு மனதின்றி allsec technologies interviewக்கு சென்றிருந்தேன். கட்டிடத்தை பார்த்தவுடனேயே எனக்குள் கொஞ்சமாக சூழ்ந்திருந்த நம்பிக்கையும் பறிபோனது. ஆனால் எதிர்பாராவிதமாக allsecன் தேவை காரணமாக நானும் தேர்வு செய்யப்பட்டேன்.

ALLSEC TECHNOLOGIES - unity in diversity என்பார்களே அது போல பல விதமான domestic மற்றும் international process அடங்கிய call center. என்னுடன் வேலைக்கு சேர்ந்தவர்களில் பலரும் "யாரடி நீ மோகினி" தனுஷை போல english பேசக்கூடியவர்கள் என்பதால் எனக்கு எந்தவித அச்சமும் கூச்சமும் ஏற்படவில்லை. எனக்கு மேலும் தெம்பூட்டும் விதமாக "assault" ராமும் allsecல் இணைந்திருந்தான். நான், ராம், வெங்கடேஷ் பெருமாள், தியாகு நால்வரும் இணைந்து புதுக்கூட்டணி அமைத்தோம். சேர்ந்த முதல் ஒரு வாரத்தில் international முகங்களே அதிகம் தென்பட்டது. இது தவிர mavis beacon, lemon tea etc etc....


ஒரு வாரம் கழிந்தபின் எங்கள் நால்வர் கூட்டணி இரண்டாக உடைக்கப்பட்டது. நானும் ராமும் trainer பாலாஜிக்கு கீழே இணைந்தோம். trainer பாலாஜிக்குள் ஒரு communist இருப்பதை நான் முதல் நாளே கண்டுக்கொண்டேன். ஓரிரு நாட்கள் வரை நானும் ராமும் தனியாக இருந்தோம். பின்னர் நான், ராம், பிரதீப் சீலன், ஷாஜகான், ராஜேஷ், முரளி, முரளி கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய 7 பேர் கூட்டணி உருவானது. எங்களுடைய கருத்துக்கள் வெவ்வேறாக இருந்தாலும் நாங்கள் ஒன்றாக இணைந்திருந்தோம். training session முடியும் வரை பெண்கள் வாசனையே இல்லாமல் இருந்தது கொடுமையிலும் கொடுமை.


budding process ஆரம்பமானபோது எங்களது ஏழு பேர் கூட்டணி மூன்றாக சிதறி நானும் சீலனும் இணைந்தோம். நானும் சீலனும் நெருக்கமான நண்பர்களானோம். இருவரும் ஒன்றாகவே பெண்கள் அருகில் budding உட்கார்ந்தோம். ஒன்றாகவே sight அடித்தோம். நானும் அவனுடன் சேர்ந்து புகை பிடிக்க ஆரம்பித்தேன்.


இவ்வாறாக எங்களுக்குள் நாங்கள் வேறுபாடின்றி இருந்தபோதும், international call center culture என்ற ஒன்று இருந்தது. இறுக்கமான T-shirt (வாசகங்கள் பொறிக்கப்பட்ட), அவிழ்ந்து விழும் நிலையில் jeans அணிந்த பெண்கள் எங்களை ஏளனமாக பார்த்த சம்பவங்களும் நடந்தது. காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு தலையில் காரக்குழம்பை கொட்டிக்கொண்ட international fuckers எங்களை வித்தியாசமாக பார்த்தனர்.


இத்தகைய சர்வதேச call center கலாச்சாரத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஆண் - பெண் நட்பு. எப்படிப்பட்ட நட்பு இது...? smoking loungeல் மூன்று ஆண்கள் சுற்றி நின்றுக்கொண்டு நடுவில் நிற்கும் பெண்ணின் முகத்தில் புகையை ஊதுவார்கள். பின்னர் நால்வரும் சேர்ந்து கலகலவென சிரிப்பார்கள். liftக்குள் அவ்வப்போது முத்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். sense of humour என்ற பெயரில் உடன் வேலைபார்க்கும் பெண்ணைப் பற்றி கொச்சையாக இரட்டை அர்த்த வசனங்கள் பேசும் கூட்டமும் உண்டு.


இது போன்ற வேடிக்கை, வேற்றுமைகளை கடந்தபின் நாங்கள் docomo என்னும் domestic processக்குள் நுழைந்தோம். script, mock calls, avaya, aux என்று சிலபல technical terms கடந்தோம். சில நாட்கள் 3 to 12 shiftல் அனைவரும் ஒன்றாக இருந்தோம். august மாத இறுதிநாளில் யாரும் எதிர்பாரா வண்ணம் shift timings தாறுமாறாக மாற்றப்பட்டது. எனக்கும் சீலனுக்கும் night shift கிடைத்தது. தகவல் அறிந்ததும் நானும் சீலனும் அலறிக்கொண்டு team leader சுரேஷை சந்தித்து shift மாற்றித்தரும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் எதிர்பாரா விதமாக சீலன் மட்டும் வேறு shiftக்கு மாற்றப்பட்டான். எனவே september மாதம் ஆரம்பமானதும் நான் night shiftக்கு செல்ல தயாரானேன் . . . .

மற்றவை விரைவில்......

தலைப்பு: NIGHT SHIFTIL NAATHIGAM - நைட் ஷிப்டில் நாத்திகம்

FRIENDS AGAIN IM TELLING PLEASE POST UR COMMENTS HERE OR SEND IT TO 9840279581 OR ELSE SCRAP ME...! BUT PLEASE GIVE UR VALUABLE COMMENTS.

என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment