அன்புள்ள வலைப்பூவிற்கு,
நேற்றைய அழுகாச்சி பதிவை மறந்துவிட்டு ஜாலி மூடோடு ஆரம்பியுங்க...!
கடந்த இரண்டு வாரமாக விரும்பியோ விரும்பாமலோ சேனல் மாற்றும்போது CCL எனப்படும் நட்சத்திர கிரிக்கெட்டை பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது. நான் சிறுவயதில் இருந்தபோது ரஜினி, அமிதாப்பெல்லாம் விளையாடிய கிரிக்கெட்டோடு ஒப்பிடும்போது இது எவ்வளவோ தேவலை. IPL புண்ணியத்தில் ரொம்பவே ப்ரோபஷனலாக விளையாடுகிறார்கள் அல்லது விளையாடுவது போல நடிக்கிறார்கள். தமிழில் வர்ணனை செய்வதைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆங்கில வர்ணனைகளை அரைகுறையாக புரிந்துக்கொண்டு பார்ப்பதற்கு இது பெட்டர். ஆனால் அப்படியே ஆங்கில வர்ணனையாளர்களின் தொனியை காப்பி அடிப்பதும், அதிக பிரசங்கித்தனமாக பேசுவதும் (என்னைப் போல) சிரிப்பை வரவழைக்கிறது.
இந்தியாவின் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று ஃபின்லாந்தில் இருந்து இந்திய தலைநகரான டெல்லி நோக்கி பயணித்தவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. திடீரென வரிசையாக விமானத்திற்குள் நுழைந்த பணிப்பெண்கள் இந்திய குடியரசை போற்றும் (!!!) வண்ணம் டான்ஸ் ஆடி அசத்தியிருக்கிறார்கள். அதுவும் ஓம் ஷாந்தி ஓம் படத்தில் வரும் ஃபேமஸான பாடல், பாலிவுட் ஸ்டைல் நடனம்.
ஆப்பிளின் தமிழ்ப்பெயர் எத்தனை பேருக்கு தெரியும். தமிழ்க்கவிதைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பழம் ஆப்பிளாகத்தான் இருக்கும். ஆதாம் ஏவாள் சாப்பிட்ட பழமாச்சே. ஆனால் பெரும்பாலும் தமிழிலும் ஆப்பிள் என்றே குறிப்பிடுகின்றனர். தெரிந்துக்கொள்ளுங்கள், ஆப்பிளின் தமிழ்ப்பெயர் அரத்திப்பழம். இன்னும் சில பழங்கள்: ஆரஞ்சு - நரந்தம்பழம், ஸ்ட்ராபெர்ரி – செம்புற்றுப்பழம், WaterMelon – குமட்டிப்பழம் அல்லது தர்பூசணி. ஆங்... பதிவர்கள் முக்கியமா தெரிந்துக்கொள்ள வேண்டியது: லிச்சி – விளச்சிப்பழம்.
நன்றி: HIOX
சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் வேலாயுதம் என்ற ஒலகப்படத்திலிருந்து சில்லாக்ஸ் பாடலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஹீரோயினின் கும்மாங்குத்து ஆட்டத்தோடு பெண் பாடகியின் கிளாசிக் ஸ்டைல் பொருந்தவே இல்லை. நமக்கு அதுவா முக்கியம், ஹன்சிகாவின் வாளிப்பான தோற்றத்தை கண்களால் வாலிபால் ஆடிக்கொண்டிருந்தேன். அம்மணியின் கழுத்தை மட்டும் திருகி எடுத்து வேறு ஏதாவது லட்சணமான முகத்தை பொருத்தினால் சிறப்பாக இருக்குமென எண்ணிக்கொண்டேன். பாடலின் நடுவே ஏதோ ஒரு வரி மிஸ் ஆனது போல் தெரிய, ஆடியோவில் கேட்டுப் பார்த்தேன். “கட்டபொம்மன் பேரன்... கத்திமீசை வீரன்... முத்தம் வச்சு குத்திக்கொல்லு செத்துப்போறேன்...!” இதில் சிகப்பு வரிகள் மட்டும் நீக்கப்பட்டிருந்தன. ஒருவேளை கட்டபொம்மனை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று யாராவது கேஸ் போட்டிருப்பார்களோ...!
ஜொள்ளு:
பழைய கள்ளு...! |
ட்வீட் எடு கொண்டாடு:
Siva_Says siva subramani
எப்போதும் மொக்கைபோடும் காதலியிடம் நாம் அவளைவிடக் குறைவாகவே மொக்குதல் நலம்! இதில் நாம் அவளை மிஞ்சினால்.. அவள் நம்மை மிஞ்சுவாள்! தேவையா??
ubaisaji உபைதுல்லா
மோசமான கருத்துக்களை சென்சார் செய்ய நாங்க ரெடி! - ட்விட்டர் அதிரடி # நீங்க இப்ப சொன்னதே மோசமான கருத்துதான்.
jroldmonk ஜூனியர் ஓல்ட்மாங்க்
புடவை விளம்பரத்தில் 'சாத்வீகம்',அருந்ததியில் 'பயானகம்',பாடல் காட்சிகளில் 'ப்ரஜோதகம்' #அனுஷ்கா
losangelesram கலக்கல் கபாலி
டெய்லி ராஜா-ரஹ்மான், வாழ்த்துக்கள்-வாழ்த்துகள் சண்டை, தாங்கல சாமிங்களா!
இந்த கடைசி ட்வீட் சொல்லுற மேட்டர்ல நானும் பாதிக்கப்பட்டிருக்கேன். ட்விட்டர், ஃபேஸ்புக், பிளஸ்ன்னு எங்கே போனாலும் விரட்டி விரட்டி அதே மொன்னையான ராஜா vs ரஹ்மான் விவாதம். அதிலும் சில பேர் எது(க்)கெடுத்தாலும் ராஜா ராஜா தான்னு மொக்கையா கமெண்ட் பண்றது கடுப்பை கிளப்புது. நாங்க மட்டும் என்ன ராஜா ராஜா இல்லை, கனிமொழின்னா சொன்னோம். அதேபோல தான் மொழிப்பிரச்சனையும் வாழ்த்துக்கள், வாழ்த்துகள், வாத்துக்கள் எப்படி இருந்தா என்ன, யாருக்கு சொல்றோமோ அவருக்கு புரிஞ்சா போதாதா...???
அறிமுகப்பதிவர்: பூங்கதிர் ஃபோட்டூன்ஸ்
அடல்ட்ஸ் ஒன்லி எச்சரிக்கை. அதையும் தாண்டி உள்ளேபோனால் பாக்யராஜ் புகைப்படம். அதற்கு கீழே “என் தலைவன் கே.பாக்யராஜ் வாழ்க பல நூற்றாண்டு” என்ற வாக்கியம். “ஒரு மாதிரியாகவே” இருந்தது அவரது வலைப்பூ. ஜொள்ளுவதெல்லாம் உண்மை பகுதியில் நடிகர், நடிகைகளை வைத்து மேலோட்டமான இரட்டை அர்த்த ஃபோட்டோ கமெண்ட்ஸ். இன்னொரு பதிவில் அதே மாதிரியான ஃபோட்டோ கமெண்ட்ஸ். இவை தவிர அடல்ட்ஸ் ஒன்லி என்று சொல்லும் அளவிற்கு மோசமாக எதுவும் இல்லை. காதல் கவிதைகள், ட்விட்டர் ஸ்டைல் கமெண்ட்ஸ் என்று எல்லாமே இருக்கு நல்லாவே இருக்கு.
நம்ம சென்னை:
நறுக்கென்று பத்து பத்து நொடிகளாய் ஆறு ட்ரைலரை எடுத்து வைத்துக்கொண்டு அருமையாய் மெரீனா படத்திற்கு மார்கெட்டிங் செய்கிறார்கள். கூடவே இந்தப்பாடலும்.
கேட்கவும் பார்க்கவும் சென்னைவாசிகளை சிலிர்க்க வைக்கிறது...!
நைஜீரியன் காதல்:
இந்த குறும்படம் சூப்பர் என்று சொல்லமுடியாது. ஆனா, இதுல வர்ற பொண்ணு செம ஃபிகர். சான்ஸே இல்லை.
வழக்கமா மூக்குத்தி போட்ட ஃபிகர்களை ரசிப்பதில்லை. சில சமயங்களில் மட்டும் Exception...!
தன்னுடைய ரசிகனுடன் பவர் ஸ்டார்:
போட்டோ கமெண்ட்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது |
சி(ரி)றப்பு புதிர்ப்போட்டி:
பழம்பெரும் பதிவர் ஒருவரின் சிரிப்பு...! யாருன்னு கண்டுபிடிங்க...?
டிஸ்கி: கண்டுபிடிப்பவர்களுக்கு வெத்தலை பொட்டி ஒன்று பரிசாக வழக்கப்படும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|