23 January 2010

குழம்பியதும் கிறுக்கியதும்

வணக்கம் மக்களே...

காலம் கடந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த கட்டுரைக்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்த நண்பர்கள் pon magesh, dinesh, ramalingam, MJ, thulukkaanam, pavithran, siddharth, sweet prabhakaran, e prabhakaran ஆகியோருக்கு நன்றி. குறிப்பாக thulukkkanam மற்றும் MJ எழுதிய comments சிறப்பாக இருந்தன. முதன்முறையாக எனது பதிவுகளுக்கு எதிர்மறையான கருத்துக்கள் தெரிவித்து என்னை உற்சாகமூட்டிய MADHUMATHY MUMMYக்கு நன்றி (எதிர்ப்பு கிளம்பினால் இந்த வார்த்தை சில நாட்களுக்குப்பின் mam என்று edit செய்யப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்).

என்னுடைய வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்துவரும் pon magesh, dinesh, sweet prabhakaran, ramalingam நால்வரில் ஒருவர் கூட இதுவரை "be a follower" பகுதியின் அங்கமாகவில்லை என்பதில் எனக்கு வருத்தம் தான். உங்களுக்காக மீண்டும் அதற்கான நேரடி link: கீழே இருக்கும் படத்தை click செய்யுங்கள்.

நண்பர்கள் சிலரிடம் இருந்து கிளம்பிய பலத்த எதிர்ப்பின் காரணமாக "எனக்கான பரமனைத் தேடி" தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதிலும் நான் எதிர்பார்த்ததைப்போலவே TOP 10 FRIENDS என்ற கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிடைத்தது.

ம்ம்ம் சரி... வேறு எதைத்தான் எழுதுவது என்று சிந்தித்தபோது ஏராளமான கருத்துக்கள் முளைத்தன. அவற்றில் passmark வாங்கிய சில கருத்துக்கள் இதோ:

"ரோஸி மிஸ்ஸும் நாய்க்குட்டியும்" என்ற பெயரில் என்மீது தாயன்பு கொண்ட ஒருவருடனான உறவைப் பற்றி அவருடைய அனுமதியுடன் எழுதலாமென்று நினைத்தேன். ஆனால் அது வெண்ணை திரண்டு வரும் நேரத்திலே பானையை உடைத்த கதையாகி விடும். anyhow இப்போது இல்லையென்றாலும் என்றாவது ஒருநாள் நான் இந்த பதிவை வெளியிடப்போவது உறுதி.

"கனா காணும் காலங்கள்" என்ற பெயரில் பள்ளிப்பருவத்தில் சிறகடித்த அந்த பச்சைக்கிளியை (முருக தனுஷ்கோடி ஸ்கூல் யுனிபார்ம் கலர்) பற்றி எழுதலாமென்று யோசித்தேன். ஆனால் அதில் பல காட்சிகளை censor செய்ய வேண்டியிருக்கும் என்ற காரணத்தினால் தவிர்த்தேன்.

"உலக நாயகி" என்ற பெயரில் ORKUT மூலம் எனக்கு கிடைத்த brazil தோழி zilma de sousa duarte பற்றியும் நாங்கள் பரிமாறிக்கொண்ட எங்கள் நாட்டு கலாச்சாரங்களை பற்றியும் எழுதலாமென்று எண்ணினேன். ஆனால் அந்த பதிவிற்கான முழு தகவல்களை நான் இன்னமும் சேகரிக்கவில்லை.

"சிகப்பு ரோஜாக்கள்" என்ற பெயரில் சிறு வயது முதல் இன்று வரை நான் போட்ட, போட்டுக்கொண்டிருக்கும் காமக் களியாட்டங்களை பற்றி எழுதலாமா என்று எண்ணினேன். ஆனால் அவற்றை இந்த சமுதாயம் கலாச்சார சீரழிவாக கருதி என்னை கைதியாக பார்க்கும். எனவே அந்த எண்ணமும் கைவிடப்பட்டது. (அநேகமாக இந்தப் பதிவு எனது மரண வாக்குமூலமாகவே இருக்கும் என்று நம்புகிறேன்).

இவற்றையெல்லாம் தாண்டி சில சில்லறைத்தனமான சிந்தனைகளும் வந்தன. எனினும் எனது கடந்த பதிவிற்கும் இந்த பதிவிற்கும் இடையில் நடந்த சம்பவங்களை சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஸ்டைலில் எழுதலாமென்று முடிவெடுத்தேன்.

என் கரங்களில் கரம்
குறிப்பு: இது புத்தாண்டிற்கு முன்பு நடந்த சம்பவம்
இது வரை kings ஒன்றே "கெளரவமான" cigarette என்று கருதிக்கொண்டிருந்த நான் சில வாரங்களுக்கு முன்பு நீலகண்டனின் உபயத்தில் black பழகினேன். இந்த வாரம் அதன் குழுவை சேர்ந்த "garam" பழக்கமானது. சில நாட்கள் தொடர்ந்து கரமை ஊதித்தள்ளியபின் ஒரு நாள் பொருளாதார நெருக்கடி காரணமாக kings புகைத்தேன். ச்சீ... எப்படித்தான் அந்த கருமத்தை பிடிக்கிறாங்களோ....

கற்பனைக் கோடுகள்
கல்லூரிகளில் நடக்கும் cultural events பாணியில் எங்கள் கால் சென்டரில் புத்தாண்டையொட்டி NUZZLE என்ற பெயரில் சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவற்றில் கற்பனைக் கோடுகள் என்ற பெயரில் tamil creative writing competition நடந்தது. உற்சாகத்துடன் அவற்றில் கலந்துக்கொன்டாலும் தலைப்பு என் கற்பனைக்கு தீனி போடும் விதமாக அமையவில்லை. எனினும் தட்டுதடுமாறி இரண்டாவது பரிசை தட்டி வந்தேன்.

ஆசாமியாக மாறிய சாமி
சில வாரங்களாக கழுத்தில் கருப்புத்துண்டை போட்டுக்கொண்டு சாமிகளாக சுற்றித்திரிந்த சிலர் மீண்டும் ஆசாமிகளாக மாறும் நேரம் வந்தது. team leader சுரேஷும் ஆறு நாள் பயணமாக சபரிமலை செல்லத் தயாரானார். அணியை பாதுகாக்கும் பணி அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் நான் கொஞ்சம் அதிகமாகவே பொறுப்பேற்றுக்கொண்டேன். team leader இருக்கையில் உட்காராதது மட்டும்தான் குறை.

மீண்டும் புத்தக சந்தை
வழக்கம் போல புத்தகங்களை பார்வையிட முதல் வாரமும் அவற்றை வாங்க இரண்டாவது வாரமும் ஆக இரண்டு முறை புத்தக சந்தைக்கு பயணமானேன். இரண்டாவது முறை செல்லும்போது என் சார்பு விருந்தினராக "சினிக்கூத்து சித்தன்" நூர்கான் கலந்துக்கொண்டான். ஆட்டோ சங்கர், M.R.ராதா, ரத்தன் டாடா போன்ற உன்னத மனிதர்களின் வரலாற்றையும், ஒ பக்கங்கள், படித்ததும் கிழித்ததும் போன்ற கருத்துக்குத்து புத்தகங்களையும் வாங்கி வந்தேன்.

ஊசிப்போன பொங்கல்
வழக்கமாக வேட்டி - சட்டை கட்டி அலப்பறையை போடும் பொங்கல் பண்டிகை இந்த முறை black out day ஆகிப்போனது. எனினும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து பொங்கல் வாழ்த்துக்கள் கிடைத்தது. பல மாதங்களாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியாகியும் பார்க்க முடியாத சூழ்நிலை.

வேட்டைக்காரன் படத்தை இரண்டாவது நாளே பார்த்தவன் ஆயிரத்தில் ஒருவனை இரண்டு வாரம் ஆகியும் பார்க்காதது மிகப்பெரிய வரலாற்றுப்பிழையாகிப்போனது. எப்படியும் அடுத்த வாரத்திற்குள் பார்த்துவிட்டு கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஆனால் இன்னமும் என் மனதை விடு "எனக்கான பரமனைத் தேடி" அகலவில்லை. தங்களது கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.


என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment