26 June 2012

பிரபா ஒயின்ஷாப் – 26062012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

தூக்கம் வராமல் தவித்த ஒரு பின்னிரவில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு டைகர் விஷ்வா என்ற டப்பிங் படத்தை பார்த்தேன். எல்லாம் காஜலுக்காக. படம் சூரமொக்கை என்பது அறிந்ததே. ஆனால் காஜலும் மொக்கையாக இருந்தது எ.கொ.ச.இ. வித்தியாசமான ஹேர் ஸ்டைல் என்று காஜல் தலையில் ஒரு மண்சட்டியை கவிழ்த்துவைத்து முடி வெட்டியிருக்கிறார்கள். ஒரு மார்வாடி ஃபிகரை ஏர்வாடி ஃபிகராக மாற்றிய எருமையை டைகர் விஷ்வா படத்தின் இயக்குனருக்கு கொடுக்கலாம். க்ளைமாக்ஸுக்கு முன்னாடி வந்த தீவானா... தீவானா... பாடல் மட்டும் நம் உணர்ச்சிகளுக்கு தீவனம் போடுகிறது. 

மீண்டும் ஒரு புத்தக வெளியீட்டிற்காக “பெண் தொடா எழுத்தாளர்” கேபிள் சங்கருக்கு வாழ்த்துகள். விழாவில் பதிவர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையிலேயே இருந்தது அதிர்ச்சி. நாசருடைய பேச்சு நேர்மையாகவும் கேட்பவர்களுக்கு உற்சாகமூட்டுவதாகவும் இருந்தது. இருந்தாலும் சிலருடைய பெயரை நேரடியாக குறிப்பட முடியாத தர்மசங்கடத்துடனேயே பேசினார். நாசர், பிரகாஷ்ராஜ், மணிவண்ணன் போன்ற ஜாம்பவான் நடிகர்களுக்கு தொடர்ந்து தயிர் சாதம் மட்டுமே போட்டு வெறுப்பேற்றி வைத்திருக்கிறது தமிழ் சினிமா.

இன்னொரு ஹாட் நியூஸ், எங்கிருந்து சுட்டோம்ன்னு கண்டுபிடிக்கவே முடியாதுன்னு சவால் விட்ட கேபிளுக்கு ஒரு பல்பு...!

யூரோ கப் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விறுவிறுப்பான காலிறுதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. நாக் அவுட் போட்டி என்பதால் பெனால்டி ஷூட் முறை கையாளப்பட்டிருக்கிறது. ஆங்கே ஒரு இங்கிலாந்து ரசிகர் இத்தாலி வீரரை திசை திருப்பும் பொருட்டு தன்னுடைய பப்லுவை எடுத்து வெளியே காட்டியிருக்கிறார். ம்ஹூம்... பப்லுவை பார்த்தும் கூட இத்தாலி வீரர்கள் கவனம் சிதறாமல் 4-2 என்று அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டார்கள். நல்லவேளையாக பந்து மட்டையை பதம் பார்க்கவில்லை.

பழனியப்பா பிரதர்ஸ் வெளியீட்டில் சென்னையைப் பற்றிய அரிய பெரிய தகவல்கள் அடங்கியிருப்பதாக சொல்லப்படும் மதராசப்பட்டினம் புத்தகத்தை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இரவல் தந்தவர் அஞ்சாசிங்கம். அவர்களுடைய வெளியீடு என்பதாலோ என்னவோ கோனார் உரையை படித்தது போலவே இருக்கிறது. எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யமான தகவலுக்காக வறட்சியான பல பக்கங்களை படிக்க வேண்டி இருக்கிறது. முடிந்தால் சுவையான தகவல்களை மட்டும் இங்கே பகிர்கிறேன்.

பில்லா 2 படத்தின் சென்சார் சான்றிதழின் சாஃப்ட் காப்பி இணையத்தில் உலவிக்கொண்டிருக்கிறது. A சான்றிதழ். 128 நிமிட படம். “மயிறு”, “லொட்டை”, “ஓத்தா” போன்ற வார்த்தைகள் ம்யூட் செய்யப்பட்டிருக்கின்றன. பாடல் காட்சியொன்றில் நடிகையின் மார்கச்சை விலகிய ஷாட்டுகள் கத்தரிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே புகை, மது குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அநேகமாக ஜூலை 13 திருவிழா என்று நினைக்கிறேன்.

ட்வீட் எடு கொண்டாடு:
கட்டிப்பிடிச்சு ஹீரோயின் உதட்ட கடிச்சா அது கமல்., ஹீரோயின கட்டிப்பிடிச்சு தன் உதட்ட தானே கடிச்சுகிட்டா அது எம்.ஜி.ஆர் !

என்றைக்கோ வரப்போகும் மரணத்தை விட நாளைக்கு வரப்போகும் திங்கட்கிழமை அச்சுறுத்தலாய் இருக்கிறது. #ஆபீஸ்

சூப்பர் சிங்கர்ஸ் ஜூனியர்ஸ் அக்ரஹாரம் ஸ்பெஷல் பாத்தேன். அடுத்து தேவர், கவுண்டர், வன்னியர் ஸ்பெஷல் பார்க்க ஆவல்! நாடு உருப்படும்! #சீ

ஒரு விரலை காட்டிட்டு ரெண்டுல ஒண்ணு தொடுன்னு சொல்றதே இந்த கிளைன்ட்டுக்கு வேலையா போச்சி :-(

One thing for sure;very proud as a DMKian to see so many defending tamizh mozhi..if not for Thalaivar,this would not have been possible! :)

மனிதர்களுக்கு தான் 6 அடி, தேவதைகளுக்கு மட்டுமது 70 அடியோ? மஹி....

தமிழ்ப்படங்களில் சேலை, தாவணி, சுடிதார் என படுபாந்தமாக காட்சிதரும் ரம்யா நம்பீசன் சமீபத்தில் வெளியான பேச்சிலர் பார்ட்டி என்ற மலையாள படத்தில் தாராளமயமாக்கல் கொள்கையை கடைபிடித்திருக்கிறார். தமிழில் மட்டும் ஏனிப்படி....? என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் நாம்...??

பாண்டிச்சேரி சென்றிருந்தபோது என் கைரேகையை பார்த்து பல உண்மைகளை புட்டு புட்டு வைத்த கொசக்சி பசப்புகழ் ஜோசியக்காரர்...! ஆடியோவுக்கு வீடியோவுக்கும் ஏதோ சண்டையாம். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.

அப்படி ஒன்றும் பெரிய காமநெடி இல்லையென்றாலும் மெக்சிகோ சலவைக்காரி என்ற வசீகரமான தலைப்பை வைத்துக்கொண்டே வாசகர்களுக்கு விளையாட்டு காட்டினார் வாத்தியார். இப்போது பக்கத்து வீட்டு பப்பு கூட மெ.ச ஜோக்கை ஒப்பிக்கிறான். அதே மாதிரி இந்தியன் படத்தில் திராட்சை பழ ஜோக் ஒன்னு இருக்கு’ன்னு கடைசி வரைக்கும் சொல்லாமலே விடுவார் கமல். அதுவும் கூட வாத்தியாரின் வேலையாகத்தான் இருக்கும். திராட்சை பழ ஜோக் தேடலில் கிடைத்த இன்னொரு ஜோக்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 June 2012

சகுனி – காற்றடைத்த சிப்ஸ் பாக்கெட்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ட்ரைலரிலேயே அரசியல் மசாலா தூக்கலாக இருந்தபோதே இது “கோ” வகையறா படம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தாலும் அதையே பகடி செய்து நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் திரையரங்கம் நோக்கி பயணித்தேன்.

காரைக்குடியில் பாரம்பரியமான குடும்பத்து வீடு ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமான பணிக்காக இடிக்கப்பட இருக்கிறது. அதனை தடுத்து நிறுத்தச் சொல்லி அமைச்சரிடம் மனு கொடுக்க வீட்டு சார்பாக கார்த்தி சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அதற்குப்பின் என்ன நடக்கும் என்பது குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூட தெரியும்.

இயக்குனர் லாஜிக் என்ற வஸ்துவை வசதியாக மறந்துவிட்டதால் நாமும் மூளை என்று வஸ்துவை கழற்றிவைத்துவிட்டு படம் பார்த்தல் நலம்.

ஒரு பாட்டு, ஒரு காமெடி, ஒரு லவ் சீன், ஒரு ஃபைட்டு என்று முதல்பாதி முழுவதுமே சீட்டு குலுக்கிப்போட்டு காட்சியமைத்திருக்கிறார்கள். தியேட்டரில் ரசிகர்கள் வெறியேறி கமென்ட் அடிப்பார்களே, அந்த வேலையையும் சந்தானமே செய்துவிடுவது மிகப்பெரிய ஆறுதல்.

கார்த்தி வழக்கம் போலவே துருதுரு அசால்ட் இளைஞர் கேரக்டரே. இந்த “ஏங்க... நீங்க... வாங்க...” எத்தனை நாளைக்கு எடுபடும் என்று தெரியவில்லை. டான்ஸ் ஆடியிருப்பது மட்டும் கார்த்தியிடம் இருந்து ஒரு புது முயற்சி. என்ன தான் இருந்தாலும் சூர மொக்கை என்று சொல்லும் அளவிற்கு ஒரு படம் கூட நடிக்கவில்லை என்பதற்காக கார்த்தியின் கதை கேட்கும் திறமையை பாராட்டலாம்.

ப்ரணிதா, ஆக்சுவல்லி ஒரு மொக்கை ஃபிகரு. ஏதோ கொஞ்சம் பட்டி பார்த்து டிங்கரிங் செய்து நல்ல ஃபிகரு மாதிரி காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் ‘வெள்ள பம்பரம்’ பாடலில் பாப்பா தக்கனூண்டு குட்டை பாவாடையை போட்டுக்கொண்டு ஆடும்போது காத்து கீத்து அடிக்காதா என்று மனது ஏங்கித்தவிக்கிறது. வழக்கமா ஹீரோயினுக்கு லூசுத்தனமா நாலு சீன் வைப்பாங்க, இந்தப்படத்துல அதுகூட இல்லை. என்னைக்கேட்டால் ஹீரோயினை விட கார்த்தியை லுக்கு விடும் நைட்டி ஆண்ட்டி சூப்பர் என்பேன். 

பெயர் போடுவதில் இருந்தே கார்த்தியை விட அதிக விசிலை அள்ளுகிறார் சந்தானம். “சந்தானம் காமெடிக்காக பார்க்கலாம்...” என்ற சான்றோர் சொல்லைக் காப்பாற்றி இருக்கிறார், கொஞ்சம் கஷ்டப்பட்டு தான். கதைக்கு சம்பந்தமே இல்லாமல் காமெடி வலிந்து திணிக்கப்பட்டிருப்பதால் அதிகம் ரசிக்க முடியவில்லை. 

“டேய் டேய் டேய்... பொதைச்சுடுவேன்டா...!” என்று பொங்கும் வில்லன் கேரக்டரில் அறுபத்தி ஏழாவது முறையாக பிரகாஷ் ராஜும், முப்பத்து மூன்றாவது முறையாக எதிர்க்கட்சி தலைவர் கேரக்டரில் கோட்டா சீனிவாசராவ் அய்யாவும் நடித்திருக்கிறார்கள். பெண் சிங்கங்களாக ரோஜாவும் ராதிகாவும். மும்தாஜ் நடிப்பதாக யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள். அந்த கேரக்டரில் தான் கிரண் நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். பாவம் அந்தப்புள்ள நெலமை... வில்லனுக்கு கீப்பா நடிக்கிற லெவலுக்கு இறங்கிடுச்சு. பட் நாசரின் ‘பர்பாமன்ஸ்’ மட்டும் கலக்கல். (சொல்லி வைப்போம்... நமக்கும் என்னைக்காவது புத்தகம் வெளியிடுவார்...) ஆங்... அனுஷ்காவும் ஆண்ட்ரியாவும் கெளரவ தோற்றம். (பேசாம கேவலத் தோற்றம்’ன்னு மாத்திடலாம்).

பாடல்காட்சிகள் மரண மொக்கைகள். ஹீரோ தொழிலாள பதர்களுடன் சேர்ந்து தெருக்களில் ஆடிப்பாடுவது, பல வருடங்களுக்கு ஒருமுறை பூப்பதாக சொல்லும் வெளிநாட்டு பூக்களுக்கு மத்தியில் டூயட் பாடுவது என்று புதுமைகள் கொப்பளிக்கின்றன. ஹீரோயின் ஹீரோவை கட்டிப்பிடிக்கும் ஒரு காட்சியை தொடர்ந்து தியேட்டரே பெருமூச்சு விட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கந்தா காரவடை... பாடலை “கார்டு காட்டினா ATM காசு துப்புது... காசு இல்லாதவனை உலகம் காறித்துப்புது...” போன்ற எளிமையான வரிகளில் அழகாக எழுதியிருக்கிறார்கள். 

மொத்தத்தில் படம் பளபளப்பான பாலிதீன் கவரில் பாதிக்கும் மேலே காற்றடைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட். படத்தில் பீடி சாமியாரை கேடி சாமியாராக மாற்றுவது போல மொக்கை படத்தை மார்கெட்டிங், பேக்கேஜிங் எல்லாம் செய்து நம்மிடம் விற்க முயல்கிறார்கள். சிலருக்கு அதன் சுவை பிடிக்கலாம். சிலர் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணரலாம். சிலர் வாய் நமநமன்னு இருக்குதேன்னு வாங்கி சாப்பிடலாம். அவ்வளவுதான்.

ஆங் சொல்ல மறந்துட்டேன்... இந்தப்படத்துலயும் ஒரு கட்டத்துல “பொது ஜனம்” கமென்ட் காட்சி இருக்கிறது. எனக்கென்னவோ அரசியல் மசாலா படங்கள் நடுத்தர, அடித்தட்டு மக்களைப் பார்த்து கைகொட்டி பரிகாசம் செய்வதாகவே தோன்றுகிறது. தன்னை கேலி செய்யும்போது கூட கைதட்டி, விசிலடித்து ரசிக்கும் “புன்னகை மாறாமுகம்” மானுடப்பதர்களுக்கு எப்போதுமே உண்டு. பெரிய சமூக பொறுப்பு வெளக்கெண்ணெய் மாதிரி படமெடுக்கும் ஷங்கர், மணிரத்னம், கே.வி.ஆனந்த் இன்னபிற வெ.ம.க்கள் உண்மையிலேயே தைரியசாலிகளாக இருந்தால் தங்கள் படங்களில் நேரடியாக கருணாநிதியையோ, ஜெயலலிதாவையோ தாக்கி காட்சிகள், கதாபாத்திரங்கள் அமைக்கலாமே...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 June 2012

காலமெல்லாம் காஜல் வாழ்க...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கன்னுக்குட்டி காஜல் அகர்வால் பூமியில் அவதாரமெடுத்து இன்றோடு இருபத்தியேழு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஓர் சிறிய கொண்டாட்ட இடுகை...!

மும்பையில் பிறந்த ரம்பை

சேட்டு வீட்டு ரசகுல்லா

ஐஸ்வர்யா ராயின் தோழியாக அறிமுகமான கோழி

முதுகு தேக்கு மரம் முழுசா பார்த்தா ஜுரம்
எங்கள் வாயை நயாகரா ஆக்கிய வயாகரா...!

உன்னழகை கண்டு மயங்காமலிருக்க நான் மகான் அல்ல

மாற்றான் – என்னை தவிர மற்றவர்கள் உனக்கு

பொன் நகைகள் உன் புன்னகையின் கால்தூசி...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment