வணக்கம் மக்களே...
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் எனக்கு பிடித்த பத்து படங்கள் பற்றிய இந்த தொடர்பதிவை எழுத என்னை நண்பர் அருண் பிரசாத் தலைமையில் அழைத்த இம்சை அரசன் பாபுக்குவும், நம்ம பரம்பரையில் வந்த நாகராஜசோழனுக்கும் (நாங்களும் சோழர் பரம்பரை தான்... தெரியுமில்ல...) நன்றிகள்...
“கமல் ரசிகனொருவன் பார்வையில்...” என்றுதான் தலைப்பில் போட நினைத்தேன். ஆனால் ஏற்கனவே ஒரு “கோமாளி” (அட... இதுவும் பதிவர் பெயர்தான்) எழுதிவிட்டதால் அதை தவிர்த்துவிட்டேன். ஒரு தனி மனிதராக நாளொரு வண்ணமும் பொழுதொரு பேச்சுமாக இருக்கும் ரஜினியை நான் என்றுமே விரும்பியதில்லை. ஆனால் ஒரு நடிகராக ரசித்திருக்கிறேன். அதற்காக “தலைவா...” என்று விளிப்பதெல்லாம் டூ மச் மச்சான்ஸ். ஒரு நாள் முழுவதும் விக்கிபீடியாவின் “Rajnikath Filmography” பக்கத்தை வைத்துக்கொண்டு மேலும் கீழும் ஸ்க்ரோல் செய்துக்கொண்டிருப்பதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் என்னை மேலும் கீழுமாக பார்த்தனர். ரஜினி நடிச்ச எனக்கு பிடிச்ச பத்து படங்களை தேர்வு செய்வதற்குள் இடுப்பு பிடிச்சிகிச்சு.
10. பாட்ஷா
அதீத கமர்ஷியல் படங்கள் என் கவனத்தை ஈர்ப்பதில்லை இருப்பினும் சில படங்கள் மட்டும் விதிவிலக்கு. அதுமட்டுமில்லாமல் முதல் முதலாக தியேட்டருக்கு போய் பார்த்த ரஜினி படம் என்பதனாலும் ஒரு ஈர்ப்பு.
எ.பி.கா: தன் தங்கையிடம் தவறாக பேசும் கல்லூரி நிறுவனரிடம் ரஜினி தனியறையில் பேசும் காட்சி.
9. ராஜா சின்ன ரோஜா / ராஜாதி ராஜா
இரண்டு படங்களிலும் வரும் ஒரே மாதிரியான பங்களா காட்சிகளை பார்த்து சில சமயங்களில் குழம்பியதுண்டு. அடிக்கடி டி.வியில் பார்த்து ரசிக்கும் படங்கள். ராஜா சின்ன ரோஜா படத்தில் அண்ணி ஷாலினி நடித்திருப்பது தனி சிறப்பு.
எ.பி.கா: ராஜா சின்ன ரோஜா.... என்ற பாடலும் அதில் வரும் காட்சியமைப்புகளும். சின்ன வயதில் எல்லோருமே ரசித்திருப்பார்கள். இப்பவும்தான்.
8. எந்திரன்
சில எதிர்மறை கருத்துக்கள் இருந்தாலும் ரஜினியின் வரலாற்றில் முக்கியமான ஒரு திரைப்படம். ஷங்கரின் பிரம்மாண்டம், ஐஸின் குளிர்ச்சி, ரகுமானின் இசை என்று படத்திற்கு ஏகப்பட்ட பலங்கள். தவிர சிட்டி v2.0 சர்ப்ரைஸ்.
எ.பி.கா: ஏற்கனவே விமர்சனத்தில் குறிப்பிட்டது போல கோவில் திருவிழாவில் ரஜினி இரும்பு ஆயதங்களை கவர்ந்திழுப்பதும் பெண்கள் அதைப் பார்த்து சாமியாடும் காட்சி.
7. மிஸ்டர் பாரத்
ரஜினி – சத்யராஜ் சவால் காட்சிகளுக்காக மிகவும் ரசித்த படம். சத்யராஜின் என்னம்மா கண்ணு வசனமும் பாடலும் செமையா இருக்கும்.
எ.பி.கா: க்ளைமாக்ஸ் காட்சி. கடைசி வரை சிலையை திறப்பாரா மாட்டாரா என்று டென்ஷனாக இருக்கும்.
6. சந்திரமுகி:
நாயகியை மையப்படுத்தி வந்த திரைப்படம் இருப்பினும் ரஜினியின் காமெடி காட்சிகள் ரசிக்க வைத்தது. இன்றளவும் ரஜினி – வடிவேலு சம்பந்தப்பட்ட காமெடி வசனங்கள் அனைத்தும் மனப்பாடம்.
எ.பி.கா: பேய் வருவதற்கான அறிகுறிகள் பற்றி வடிவேலுவிடம் ரஜினி விவரிக்கும் காட்சி. (இதுக்கு ஏன்ப்பா நீ இத்தனை முறை திரும்புற. இதுக்கு அந்த சாமியார் தேவலை போல இருக்கே.)
5. பில்லா
தல நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததும் டி.வி.டி வாங்கி பார்த்த படம். ஒரு கதாபாத்திரத்தில் முரட்டுத்தனமான டானாகவும் மற்றொரு கதாபாத்திரத்தில் அபிநயம் பிடிக்கும் ராஜூவாகவும் கலக்கியிருப்பார்.
எ.பி.கா: தனது குருப்பில் இருந்து வெளியேறும் ராஜேஷை கொல்லும் காட்சி. (பழைய பில்லாவை விட புது பில்லாவில் இந்தக் காட்சி டக்கர்.)
4. தளபதி
ரஜினி போலதான் மணி ரத்னமும் அவரை பிடிக்காவிடிலும் அவரது படங்கள் பிடிக்கும். மகாபாரத கதை பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நட்பை பறைசாற்றும் படமாக என் மனதை கவர்ந்த திரைப்படம்.
எ.பி.கா: கொட்டும் மழையில் ரஜினியிடம் அம்ரேஷ் புரி பேசும் காட்சியும் அதை தொடர்ந்து மம்மூட்டி ரஜினியின் குப்பத்திற்கு வருகை தரும் காட்சியும்.
3. தில்லு முள்ளு:
ரஜினி நடித்த ஒரே முழுநீள நகைச்சுவை திரைப்படம். போன வாரம்கூட டிவியில் ரசித்தேன். தமிழ் சினிமாவில் நிறைய ஆள்மாறாட்ட திரைப்படங்கள் வந்திருந்தாலும் இந்தப்படத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு.
எ.பி.கா: சந்தேகமே இல்லாமல் இண்டர்வியூ காட்சி.
2. முள்ளும் மலரும்
ரஜினி நடித்த உணர்ச்சிப்பூர்வமான திரைப்படங்களுள் ஒன்று. ரஜினி தனக்கும் நடிப்பு வரும் என்று நிரூபித்த படம். மற்றும் ஷோபா, ஜெயலட்சுமி என்று எனக்கு பிடித்தவர்கள் நடித்த படம்.
எ.பி.கா: ரஜினி தனது கையும் வேலையும் பறிபோன நேரத்தில் பேசும் வசனம். (ரெண்டு கால், ரெண்டு கை இல்லைனாலும் பொழச்சுக்குவான் சார் இந்த காளி.)
1. ஆறிலிருந்து அறுபது வரை
ரஜினி நடித்த படங்களில் மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம். ஒரு குடும்பத்தின் சுமைதாங்கியாக நடித்து பல காட்சிகளில் கலங்க வைத்திருப்பார். எனினும் படத்தின் க்ளைமாக்ஸ் சுபமாக முடிவதால் அதிகம் ரசித்த படம்.
எ.பி.கா: மதிய உணவு இடைவேளையில் ரஜினி தனது அலுவலக காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சி.
டாப் டென்னை தவற விட்ட படங்கள்:
- முரட்டுக்காளை
- பொல்லாதவன்
- மூன்று முகம்
- மன்னன்
- அவர்கள்
எனக்குப் பிடித்த பத்து ரஜினி பாடல்கள் (வரிசை படுத்தவில்லை):
- சிவ சம்போ.... (நினைத்தாலே இனிக்கும்)
- கண்மணியே காதல் என்பது... (ஆறிலிருந்து அறுபது வரை)
- மை நேம் இஸ் பில்லா (பில்லா)
- ஆசையை காத்துல தூது விட்டு... (ஜானி)
- பொதுவாக என் மனசு தங்கம்... (முரட்டுக்காளை)
- ராகங்கள் பதினாறு... (தில்லு முள்ளு)
- காட்டுக்குயிலு மனசுக்குள்ள... (தளபதி)
- அடிக்குது குளுறு... (மன்னன) [ரஜினி சொந்தக்குரலில் பாடிய பாடல்]
- தங்கமகனென்று... (பாட்ஷா)
- இரும்பிலே ஓர் இருதயம்... (எந்திரன்)
ரஜினியுடன் நடித்த நாயகிகளில் எனக்கு பிடித்தவர்கள்:
- படாபட் ஜெயலட்சுமி (ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும்)
- ஸ்ரீ ப்ரியா (பில்லா)
- மாதவி (தில்லு முள்ளு)
- விஜயசாந்தி (மன்னன்)
ரஜினியுடன் நடித்த வில்லன் / வில்லிகளில் எனக்கு பிடித்தவர்கள்:
- சத்யராஜ் (மிஸ்டர் பாரத்)
- ரகுவரன் (பாட்ஷா)
- ரம்யா கிருஷ்ணன் (படையப்பா)
ரஜினியுடன் நடித்த காமெடியன்களில் எனக்கு பிடித்தவர்கள்:
- செந்தில் (வீரா, முத்து)
- கவுண்டமணி (பாபா, மன்னன்)
- வடிவேலு (சந்திரமுகி)
இதுக்கு மேல ஏதாவது எழுதினா கல்லடி தான் கிடைக்கும்னு நினைக்குறேன். சரி நிறுத்திக்கிறேன். இப்போ இந்தப் பதிவை தொடர யாரையாவது அழைக்க வேண்டுமல்லவா. ஆனால் ஏற்கனவே பதிவர்கள் பலர் இந்த தொடர்பதிவை எழுதிவிட்டார்கள் எனவே இதை அப்படியே “எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள்” என்று மாற்றி இன்னொரு ரவுண்ட் விடலாம் என்று தோன்றுகிறது. இதுபற்றி நண்பர் அருன்பிரசாத்திடம் கேட்டு அவரும் ஓ.கே சொல்லிவிட்டார்.
ஆக, “எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள்” பதிவினை எழுதுவதற்கு நான் அழைப்பது :-
- ♥♪•நீ-நான்-அவன்•♪♥ எல்லோரும் எழுதி முடிச்சதும் கடைசியா எனக்கு ஒரு சான்ஸ் கண்டிப்பா கொடுங்கப்பா. அதை எழுதுவதற்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
Post Comment