26 December 2009

எனக்கான பரமனைத் தேடி...! - ஒரு முன்னோட்டம்

வணக்கம் மக்களே...

கடந்த கட்டுரைக்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்த நண்பர்கள் sujai narendar, sp vijay, ramalingam, raghavendar, eee karthi, c (??? - யாரென்றே கண்டுபிடிக்க இயலவில்லை), dinesh, pon magesh, pavithran, sweetline preethi ஆகியோருக்கு நன்றி. இதற்கும் ஒரு படி மேலே சென்று "மனோரஞ்சிதம்" என்ற கவிதைத்தொகுப்பை பரிசளித்த பட்டுகோட்டை பிரபாகரனுக்கும் நேரடி வார்த்தைகளில் என்னை புகழ்ந்து கூசிப்போக வைத்த அருள் குமரனுக்கும் ஒரு SPECIAL THANKS.

பட்டுகோட்டை பிரபாகரன் பரிசளித்த மனோரஞ்சிதம் கவிதைத்தொகுப்பில் இருந்து ஒரு சூழ்நிலைக் கவிதை... அதாங்க situation song... sorry poem...


என்
எண்ணத்தில்,
புதிய அலை தோன்றி,
என்னை அறியாமல்
எழுதத் தூண்டியது.
எதை எழுதுவது எழுது கோலால்,
எதையாவது எழுது என,
என் கரங்களுக்கு
எண்ணம் கட்டளை இட்டது.
எழுத நினைத்த நொடி முதல்,
எழுதுகிறேன், எழுதுவேன்.
எக்காளமிட்டு அவற்றை
எதிர்ப்போர் எதிர்க்கட்டும்.
ஏன் எனக்காகத் தான்
எழுதுகிறேன் நான்.
என் எழுத்துக்கு,
என்றும் முதல் வாசகன் நானே.
அனைத்தையும் படைத்தவன்
அவற்றை ஏன் படைத்தான்,
அனைத்தும் பார்த்து வியக்க.
அதனால் நானும் படைக்கிறேன்,
அறிவில் உதித்தவற்றை.

எது எப்படியோ... இதுவரைக்கும் எனது வலைப்பூவிற்கு ஒரு FOLLOWER கூட சேரவில்லை என்பதில் எனக்கு வருத்தம் தான். உங்களது வசதிக்காகவும் எனது வாய்ப்பிற்காகவும் இந்த வலைப்பூவின் "be a follower" பகுதிக்கான நேரடி இணைப்பு இது:

விருப்பமுள்ளவர்கள் இணையலாம்.

மேலும் என்னுடைய பதிவுகளைப் பற்றிய உடனடியான தகவல்களையும் sms மூலமாக எனது கருத்துகுத்துக்களையும் பெற விரும்புவோர் கீழுள்ள படத்தை கிளிக்கி பதிவு செய்துக்கொள்ளலாம்.

கட்டுரைக்குள் குதிப்பதற்கு முன்னால் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்பும் சில கருத்துத்துளிகள்...

எனது கடந்த இரண்டு பதிவுகளை படித்தவர்கள் சிலர், எனது நலம்விரும்பிகள் சிலர், சுற்றம், நட்பு, தாய் - தந்தை உட்பட பலரும் என்னிடம் கேட்கும் million dollar question: "BE படித்துவிட்டு BPOவில் வேலை செய்கிறாயே...?". கேள்வி கேட்பவர்களிடம் வறுமையின் நிறம் சிகப்பு கமல் ஸ்டைலில் "bio chemistry படிச்சிட்டு accounts officeல குமாஸ்தா வேலை பாக்குறானே, அவன் படிப்புக்கும் தொழிலுக்கும் சம்மந்தம் இருக்கா என்ன...?" என்று குதர்க்கம் பேசியதுண்டு. இருந்தாலும் இதுபற்றி கழிவறையில் அமர்ந்து கன நேரம் சிந்தித்தேன். BE படித்துவிட்டு BPOவில் வேலை செய்வது தவறா...? தவறுதான்... BPOவில் பணிபுரிவது அல்ல... BE படித்தது...

கடந்த வாரம் செய்தித்தாளை மேய்ந்துக்கொண்டிருந்தபோது கண்ணில் தென்பட்ட ஒரு செய்தி, "கோவில் கருவறைக்குள் வைத்து என்னை கற்பழித்தார்; அர்ச்சகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்". சின்னச்சின்ன தப்புக்கெல்லாம் கூட கண்ணைக் குத்தும் சாமி இதற்கு என்ன செய்தது...?, எதை குத்தியது...? பக்தகேடிகள் யாரவது இதற்கு பதில் சொல்ல விரும்பினால் சொல்லலாம்.

சென்ற வாரமே எழுதியிருக்க வேண்டிய பதிவு இது. ஆனால் வேட்டைக்காரன் வெளியான அதே துயர நாளில் நமது பதிவையும் வெளியிட வேண்டாம். வெளியிட்டால் பலத்த உயிர்சேதம் ஏற்படும் எனக் கருதினேன்.

நண்பர்களைப் பற்றி எழுத முடிவு செய்துவிட்டேன். ஆனால் யாரைப் பற்றி எழுதுவது...? மூன்றாம் வகுப்பில் ஆரம்பித்து இன்று வரை எத்தனையோ நண்பர்களை கடந்திருக்கிறேன். மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது இரட்டைக் குடுமி போட்டுவரும் நிர்மலா இன்னும் என் கண்களுக்குள்ளேயே நிற்கிறாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பறையில் என்னருகில் அமரும் மோனிஷா இன்றளவும் என் நினைவில் இருக்கிறாள். அட பொண்ணுங்க மட்டும் இல்லைங்க பசங்களும்தான். ஓட்டைப்பல் அருண், u.satish, ganesh, raghavan, v.pradeep, c.harish, gopinath, murali rajan etc etc இவ்வாறாக எந்த ஒரு நண்பனையும் நான் மறந்ததில்லை. ஆனால் இவர்கள் எல்லோரைப் பற்றியும் எழுத முடியுமா...? கண்டிப்பாக முடியும். ஆனால் அது ஓரிரவில் சாத்தியப்படாத ஒன்று.

எனவே, நண்பர்களுள் சிறந்த நண்பர்கள் சிலரைப் பற்றி மட்டும் எழுதலாமா என்று எண்ணினேன். அது என்ன "சிறந்த நண்பர்கள்" நண்பர்கள் என்றாலே சிறந்தவர்கள் தானே. எனினும் எனது மனத்தைக் கவர்ந்த நண்பர்கள், மனதை பாதித்த நண்பர்கள் பத்து பேரை மட்டும் தேர்வு செய்து TOP 10 பாணியில் கட்டுரை எழுதலாமென்ற எண்ணம் கொண்டு பத்து பேர் கொண்ட அந்த பட்டியலை தயார் செய்தேன்.

தற்போது எனது மனக்குழப்பம் என்னவென்றால் என்னுடைய வலைப்பதிவை படிக்கும், படித்துவிட்டு comments எழுதும் நண்பர்கள் பலரும் அந்த பட்டியலில் கிடையாது. அது மட்டுமில்லாமல் பட்டியலில் இருக்கும் நண்பர்களில் பலரும் எனது வலைப்பதிவை படித்தது கிடையாது.

இத்தகைய சூழ்நிலையில் அந்த பட்டியலை வெளியிட்டால் comments எழுதக்கூடிய அன்பு நண்பர்கள் மனம் புண்படுமே. எனவே அத்தகைய comments எழுதும் நண்பர்களிடம் இருந்து "no objection" கிடைத்தால் மட்டுமே இந்தப் பதிவை எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன். உங்களது கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.

மீண்டும் ஓர் புத்தாண்டு பிறக்கப்போகிறது. வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டில் என்னென்ன resolutions எடுத்துக்கொள்ளலாம். நான் எடுத்துக்கொள்ளப்போகும் சில resolutions...
1. கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய் படங்களை திரையரங்குகளில் பார்க்கக்கூடாது.
2. யாருடைய பேச்சையுமே கண்மூடித்தனமாக கேட்க கூடாது. (குறிப்பாக பெண்களின் பேச்சை)
3. பெண்ணாசையை அறவே துறக்க வேண்டும்.
4. எந்த ஒரு வாடிக்கையாளரிடமும் கடிந்து பேசக்கூடாது, அழைப்பை துண்டிக்க கூடாது.

மேற்கண்ட resolutionகளில் மூன்றாவதை மட்டும் மனஉறுதி கொண்டவர்கள் யாராவது முயற்சி செய்து பாருங்கள். இப்படி உங்களுக்கு ஏதாவது resolutions இருந்தால் அதைப்பற்றி எழுதுங்களேன்.


என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment