அன்புள்ள வலைப்பூவிற்கு,
தனுஷ் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களில்
நடித்து புகழின் உச்சியில் இருந்த சமயம், பன்னிக்குட்டி மாதிரி அவருக்கு வதவதன்னு
புதுப்பட வாய்ப்புகள் வந்து குவிந்துக்கொண்டிருந்தன. அப்போது “டாக்டர்ஸ்” என்ற
பெயரில் தனுஷுடைய மருத்துவச்சி சகோதரிகளின் அனுபவத்தை வைத்து ஒரு படமெடுக்க
இருப்பதாக தகவல் வெளியாகி முடங்கிப்போனது. அதுவே இப்போது மூன்று என்ற பெயரில்
கொலவெறித்தனமாக அவதாரமெடுத்திருக்கிறது. YES, ITS A MEDICAL MIRACLE...!
தனுஷுடைய இறுதிச்சடங்குடன் படம் தொடங்குகிறது. சோகத்தின்
பிடியிலிருக்கும் தனுஷின் மனைவி ஸ்ருதியின் நினைவுகளில்... தனுஷ் வழக்கம் போலவே
அப்பாவிடம் திட்டு வாங்கும் பொறுப்பில்லாத மகன். ஒருநாள் ச்சோன்னு மழை பெஞ்சிட்டு
இருக்கும் போது தனுஷ் ஸ்ருதியை பார்க்கிறார். வேறென்ன.. கழுதை கெட்டா
குட்டிச்சுவரு... காதல்...! சிலபல சிக்கல்களுக்கு பிறகு எக்கேடோ கெட்டு ஒழிங்க
என்ற ரீதியில் தனுஷ் – ஸ்ருதி அவர்களுடைய பெற்றோரின் விருப்பமில்லாமல், அதே சமயம்
எதிர்ப்பும் இல்லாமல் திருமணம் செய்துக்கொள்கின்றனர்.
இரண்டாம் பாதி... போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்,
தினத்தந்தி பாணி உருக்கமான கடிதம், Bipolar Disordar... ஙேஙேஙேஙே...
ஙேஙேஙேஙே...
தனுஷ் – கிக்கிக்கிக்கி எனக்கு அவரை பார்த்தா சிரிப்பா
வருது... எனக்கு அவரை பார்த்தா சிரிப்பு வருது, உள்ள அழுகையா இருக்குது... அப்டியே
ஓன்னு வாய் விட்டு அழுவனும் போல இருக்கு... ணா மணிண்ணா எனக்கு ஒரே ஒரு அருவா
குடுண்ணா... அப்டியே எடுத்து ஒரே போடு...
ஸ்ருதி – அது என்னவோ தெரியல, அந்த புள்ளயோட மூக்கு சனியனை
பார்த்தா மட்டும் நமக்கு மூடே வர மாட்டேங்குது. அதுவுமில்லாமல் அம்மணி அழுவதை
பார்த்தால் நமக்கு ஏனோ கஞ்சா அடித்தமாதிரி சிரிப்பு வந்து தொலைக்கிறது.
சிவகார்த்திகேயன் முதல் பாதியில் மனது விட்டு சிரிக்க
வைத்தாலும் இரண்டாம் பாதியின் சீரியஸ்நெஸ் கருதி இயக்குனரால் சாமர்த்தியமாக
சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். மற்றொரு நண்பராக வரும் “மயக்கம் என்ன”
சுந்தர் ராமு கேரக்டரில் நிறைய முரண்பாடுகள். ஒன்றும் விளங்கவில்லை...
பிரபு, பானுப்ரியா, ரோகிணி ஆகியோருடைய நடிப்பில் பாஸ்போர்ட்டை
எரிக்கும் காட்சியில் ரோகிணியின் நடிப்பு முன்னிலை பெறுகிறது. ஸ்ருதியின் தங்கையாக
நடிக்கும் சிறுமி இன்னொரு ஐந்து வருடங்களில் சூப்பர் ஃபிகரு. ஸ்ருதியின் தோழிகளாக
வரும் கூர்க்கா பொண்ணு உட்பட அம்புட்டும் ஜூப்பரு...!
படம் நெடுக ஸ்பான்சர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.
ஏர்செல், சூப்பர்மேக்ஸ் (அதே மொக்கை ப்ளேடு தான்), LawMan என்று விளம்பர பதாகைகளை
காட்டி எரிச்சலூட்டுகிறார்கள். இன்னொரு காட்சியில் ஹீரோ வேண்டுமென்றே ஏர்செல் லோகோ
பொறிக்கப்பட்டிருக்கும் தம்முடைய மொபைலை உயர்த்திக்காட்டுகிறார்.
ஐயகோ...! யூ சர்டிபிகேட்டை பார்த்ததும் பதறிப்போனேன்.
பனியன் கம்பெனி விளம்பரம் கணக்கா போஸ்டர் ஒட்டியதெல்லாம் சும்மாதானா. ம்க்கும்
அடிக்கடி ஒருவர் மூக்கை ஒருவர் முத்தமிட்டு வெறுப்பேற்றுகிறார்கள். பாவம் அந்த
தனுஷ் தம்பி அதுல போய் முத்தம் கொடுக்க விட்டுட்டாங்களே...!
கண்ணழகா பாடல் தனுஷ், ஸ்ருதி, கொஞ்சூண்டு ரொமான்ஸுடன்
கண்களுக்கும் அழகாகவே இருக்கிறது. ஆடியோவில் பெரிய ஹிட்டடிக்கும் பாடல்கள்
விஷுவலில் மொக்கையாகவே இருக்கும். அப்படியே அது நன்றாக இருந்தாலும் கூட எதிர்பார்த்த
அளவிற்கு இல்லையென்ற நினைப்பு ஏற்படுவது மனித இயல்பு. அதையே கொலவெறி பாடலும்
உணர்த்துகிறது.
Actually, படம் நல்லாத்தான் ஆரம்பமாச்சு...! குறிப்பாக
என்னுடைய பள்ளிக்கூட நாட்களுக்கு திரும்பவும் அழைத்துச்சென்றது என்று சொல்லலாம். சைக்கிள்
வைத்திருந்தும் அதை வீடு வரைக்கும் தோழிகளுடன் பேசியபடி தள்ளிக்கொண்டே போகும்
ஃபிகர்ஸ், டியூஷன் அனுபவங்கள், சிங்கிள் டிஜிட் விடைத்தாளை கொடுக்கும் போது
வறுத்தெடுக்கும் வாத்தியார், பல மாதங்களாகனாலும் பார்வையில் மட்டுமே காதலிக்கும்
மனோபாவம் போன்றவை யதார்த்தம். க்ளிஷேத்தனமான காட்சிகளின் போது சுய எள்ளல்
செய்துக்கொள்ளும் வகையில் சிவகார்த்திகேயனுடைய கமெண்ட்ஸ் கலக்கல். ரசனையான
வசனங்கள்... மூஞ்சைப் பாரு பழைய அஞ்சு காசு மாதிரி...! அப்படியே தனுஷ், ஸ்ருதி
காதலுக்கு ஏற்படும் தடைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் அதெல்லாம் கூட ஓகேதான்.
அதற்குப்பின் ஒரு மருத்துவர் வருகிறார், அவருக்கு
வந்திருக்குற வியாதியோட பெயர் Bipolar Disorder. அடப்பாவிகளா எத்தனை பேருடா இதே
மொக்கையை போடுவீங்க என்று நாம் அலறும்போது, நோ நோ இது Split Personality Disorder
இல்லை. அதே மாதிரி, ஆனா இது வேறயாக்கும் என்று அவசரஅவசரமாக மறுக்கிறார். படம்
பார்த்துக்கொண்டிருப்பவர்கள் தனுஷுடைய காலில் மிதிபடும் ஹட்ச் நாயாக அவஸ்தைப்பட்டு
சாகிறார்கள். அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா... ஊஊஊஊஊ.... அது வந்து ஙேஙேஙேஙே...
ஙேஙேஙேஙே... அதாவது.... ச்சே இந்த குட்டிப்பொண்ணும் பூசாரியும் பதிவெழுதவே விட
மாட்டேங்குறாங்க...! தனுஷ் சாகப்போகிறார்... சாகப்போகிறார்... சாகப்போகிறார்...
ங்கோத்தா செத்து ஒழியேன்டா என்று கடைக்கோடி ரசிகன் கலவரப்பட்டு கமென்ட் அடிக்கும்
போது படம் செத்து ச்சே தனுஷ் செத்து படம் நிறைவடைந்து திரை இருள்கிறது...!
இனிமே படம் முடிஞ்சதும் ஸ்லைடு போடுவியா... போடுவியா... போடுவியா... |
மொக்கைப் பதிவுகளை தேடிப்படிக்கும்
மனநோய் ஒன்றும் குணப்படுத்த முடியாத வியாதி அல்ல. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை
என்பது தீர்வாகாது...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|