28 February 2010

விண்ணைத் தாண்டி வருவாயா...? இழப்பா...?

நான் ஏன் சார் இந்த படத்த பாத்தேன்...???

வழக்கமாக திரையில் காட்டப்படும் காதல்களை நான் என்றுமே விரும்பியதில்லை. infact, (மதன் ஸ்டைலில் படிக்கவும்) காதல் என்பது புனிதமானது, புளிப்பானது என்றெல்லாம் இன்றுவரை மக்களை ஏமாற்றி வருவதே சினிமா தான். இருப்பினும் இந்த பதிவை வெளியிடுவதற்காகவும் கேட்காமலே டிக்கட் கிடைத்தது என்பதாலும் நேற்று மாலை iDreams திரையரங்கம் சென்றேன். மீசைக்கார நண்பனும் ரோஷக்கார நண்பனும் போட்டுக்கொண்ட சண்டையில் "ஹோசன்னா..." பாடல் உட்பட இருபது நிமிட படம் முடிந்திருந்தது.
கதைச்சுருக்கம்
(நான் பார்த்த காட்சியில் இருந்து)
த்ரிஷாவை பார்த்ததும் காதல் வசமாகிவிடுகிறார் சிம்பு (!!!). த்ரிஷாவை துரத்திக்கொண்டு ஆலப்புழை வரை சென்று கொக்கி போடுகிறார். த்ரிஷா வழக்கமான பெண்களைப் போல புரிந்தும் புரியாமலும் பேசி சிம்புவை குழப்புகிறார். ஒரு காட்சியில் கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார், மறுகாட்சியிலேயே நாம friendsa இருப்போம் என்று சாலமன் பாப்பைய்யா மாதிரி சொல்கிறார். ஒரு வழியாக அவர்கள் OK ஆவதற்குள் விஷயம் த்ரிஷாவின் குடும்பத்திற்கு தெரிய வந்து த்ரிஷாவிற்கு வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். மணக்கோலத்தில் இருக்கும் த்ரிஷா திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்வதோடு இடைவேளை.

இடைவேளைக்குப்பின் த்ரிஷா காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கிறார். ஆனால் அடுத்த காட்சியிலேயே சிம்புவை பிரிகிறார். சிம்பு தனது லட்சிய சினிமாவை எடுக்கிறார். த்ரிஷா அமெரிக்க மாப்பிள்ளையை மணக்கிறார். படம் நிறைவடைகிறது.

படத்தில் உள்ள பல காட்சிகள் என்னுடைய நிஜ வாழ்க்கையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சம்பவங்கள் அச்சுபிசகாமல் பிரதிபலித்தது. (அது பற்றிய ஓர் தொடர்பதிவு கூடிய விரைவில் வெளிவரும்). ஆனாலும் படத்தைப் பார்த்தபோது எந்த உணர்வும் தோன்றவில்லை.
SIMBHU
டைட்டிலில் யங் சூப்பர் ஸ்டார் என்று போட்டதாக கேள்விப்பட்டேன். நல்லவேளையாக நான் அந்த கொடுமையை பார்க்கவில்லை. சினிமாவில் அசிஸ்டென்ட் டைரக்டராக முயற்சி செய்யும் கார்த்திக் என்னும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமாக ஒவ்வொரு படத்திலும் கணக்கு பண்ணுவதில் சிறப்பாக விளங்கும் சிம்பு இந்த படத்தில் கணக்கு போடுவதிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். எனக்கு 80 வயதாகும்போது உனக்கு 81 ஆகியிருக்கும், உனக்கு 50 வயதாகும்போது எனக்கு 49 வயது ஆகியிருக்கும் என்றெல்லாம் அவ்வப்போது புள்ளிவிவரங்களை சொல்லி கேப்டனோடு போட்டி போடுகிறார். இவர் த்ரிஷாவை உஷார் செய்வதற்காக பயன்படுத்தும் வசனங்கள் அனைத்தும் கவிதை. உச்சகட்ட காட்சியில் த்ரிஷாவுடன் பேசும் இரண்டு நிமிடங்களில் சிம்புவை ரசிக்கலாம்.
THRISHA
ஆயுத எழுத்து, சர்வம் படங்களுக்கு பிறகு த்ரிஷா இந்த படத்தில் இன்னும் அழகாக இருக்கிறார். இருப்பினும் அவ்வப்போது யதார்த்த காதலியை நினைவூட்டுவதால் ரசிக்க முடியவில்லை. சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்க்கும் ஜெஸ்ஸி பாத்திரத்தில் மலையாள கப்பகிழங்காக நடித்திருக்கிறார். குடும்பத்திற்கும் காதலுக்கும் இடையே ஆல்லாடும் நடுத்தர வர்க்கத்து பெண்ணாக வசீகரிக்கிறார். 

SIMBHU - THRISHA CHEMISTRY
இத நான் சொல்லியே ஆகணும். படத்தில் இரண்டு பேருடைய வேதியியல் (அதாங்க கெமிஸ்ட்ரி...!!!) சிறப்பாக உள்ளது. ஆனால் படத்தில் இருவரும் காதலிக்கும் காட்சிகளை விட சண்டை போடும் காட்சிகளே அதிகமாக உள்ளது. ஆங்காங்கே மேலோட்டமாக சில முத்தக்காட்சிகள் தென்படுவது ஆறுதல். 

மற்றும் பலர் 
சிம்பு, த்ரிஷா தவிர்த்து படத்தில் மனதில் நிற்கும் ஒரே கதாபாத்திரம் முதல் பாதியில் கேமரா மேனாக சிம்பு கூடவே வரும் நபர். மனிதர் டைமிங் காமடியில் பின்னி எடுக்கிறார். முதல் பாதியை தூக்கி நிறுத்தியிருப்பதே இவர் பேசும் வசனங்கள் தான். கே எஸ் ரவிக்குமார், இயக்குனராகவே சில காட்சிகளில் வந்து சென்றாலும் மனதில் நிற்கிறார். காதலுக்கு காதலர்களே சூனியம் வைத்துக்கொள்வதால் இருவரின் பெற்றோருக்கும் பெரிய அளவில் வேலை இல்லை. த்ரிஷாவின் அப்பா மட்டும் அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசி கடுப்பேத்துகிறார்.

பாடல்கள் 
படத்தில் சிறப்பான பாடலான "ஹோசன்னா..." பாடலை தவற விட்டதால் மற்ற பாடல்கள் அதிகம் மனதை கவரவில்லை. சில பாடல்களில் சிம்புவை சுற்றி முக்கால் பேன்ட் போட்ட RAP கூட்டம் ஆடுவதை ரசிக்க முடியவில்லை. மற்றபடி பாடல்கள் அனைத்தும் மென்மையாக இருக்கிறது. 

RESULT
காதலை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்கள். இன்னும் எதார்த்தமாக காட்டியிருந்தால் முதல்பாதியில் த்ரிஷா திருமணம் செய்து கொள்வதோடு படம் முடிந்திருக்கும். படத்தில் சிம்புவாவது வேறு ஏதாவது ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கலாம். டென்ட் கொட்டாயில் மண்ணை குமித்து வைத்து பார்ப்பவர்களுக்கு படத்தின் உச்சகட்ட காட்சி புரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடிய விரைவில் கிளைமாக்ஸ் மாற்றப்படுமென நம்புகிறேன். ஆனால் அது சினிமாத்தனமாகவே இருக்கும். 

காதலர்கள் அவர்களின் இணையோடு பார்த்தால் ரசிக்கலாம். காதலித்தவர்கள் படத்தை பார்க்கலாம். காதலுக்கு துளியும் சம்பந்தமில்லாதவர்கள் படத்தை பார்ப்பது வேஸ்ட்.

விண்ணைத் தாண்டி வருவாயா...? - இல்லை இழப்புதான் 

டிக்கட் எடுத்த 70 ரூபாய் இழப்புதான்.

என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

24 February 2010

அவள் ஒரு பட்டாம்பூச்சி - பாகம் 1

வணக்கம் மக்களே...

(மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தலைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ளது...)

followers எண்ணிக்கை இரட்டை இலக்கை எட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சி. என்னுடன் இணைந்த உண்மைத்தமிழன், SUREஷ், சேட்டைக்காரன் (நல்லவேளை... வேட்டைக்காரன் இல்லை) ஆகியோருக்கு நன்றி. சிலை வைக்கவில்லை என்று கோபித்துக்கொள்ள வேண்டாம். பின்னூட்டம் எழுதிய நண்பர்களுக்கு அங்கேயே பதிலளித்துள்ளேன்.


தேடித்தேடி ஓட்டளிப்பு பட்டைகள் சிலவற்றை இணைத்துள்ளேன். இன்னும் ஏதேனும் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்.
 
ஒரு மாலை நேரத்து மயக்கத்தில் அடுத்த பதிவுக்கான அக்கினிக்குஞ்சு (spark) கிடைத்தது. ஆனால் எவ்வளவோ சிந்தித்தும் தலைப்பை தாண்டி எதுவும் பிடிபடவில்லை. பிப்ரவரி முப்பதாம் தேதி வந்தாலும் எனக்கு கவிதை வராது என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. எனவே துளியும் தாமதப்படுத்தாமல் பரணில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஆனந்த விகடன்களையும் தபூ சங்கரையும் புரட்டினேன். இரண்டு பதிவுகளுக்கான matter ஒற்றை இரவிலேயே கிடைத்தது.

குறிப்பு: இது sweet பிரபாவின் கவிதைப்பதிவுக்கு போட்டியாக எழுதப்பட்டதல்ல...

அந்த நேரத்தில், அந்தி நேரத்தில் முன்னூற்றுக்கும் மேற்ப்பட்ட கவிதைகளை ரசித்தாலும் அனைத்தையும் copy, paste செய்துவிடவில்லை. முத்தான முப்பது கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை இரண்டாக பிரித்தேன். அதென்ன முத்தான கவிதைகள்...

எனது பட்டாம்பூச்சி மீதான என் உணர்வுகளைச் சொல்லும் கவிதைகள் மட்டும் இங்கே : -

முன் குறிப்பு: பதிவைப் படிக்கும் நண்பர்கள் யாரும் யாரந்த பட்டாம்பூச்சி
என்றோ, பட்டாம்பூச்சி பெயர்க்காரணம் குறித்தோ வினவ வேண்டாம்.

இந்த இரவையே
உனக்கு கடிதமாக அனுப்புகிறேன்...
அஞ்சல்தலையாய் அந்த நிலா...!
*****
எத்தனை குதிரைச் சக்தி கொண்டதோ...?
என்னைச் சுற்றிச் சுழலடிக்கும் 
உன் குதிரை வால் கூந்தல்...!
*****
நான் கிளையானபோது பூவானாய்...
கிடாரானபோது கம்பியானாய்...
காதலானபோது ஏன் மௌனமானாய்...?
***** 
இன்னும் அதிகம் ரசிப்பதுண்டு...
என்னை அடித்துவிட்டு 
நீ அழுத நிமிடங்களை...!
*****
நீ செய்த தவறு
என்னை நேசிக்காமல் இருப்பதல்ல...
நான் நேசிக்கும்படி இருப்பது...!
*****
பொம்மையை நீ கொஞ்சாதே...
அதற்கு உயிர் வந்துவிட்டால் 
யார் வளர்ப்பது...?
*****
வீட்டுக்கு ஒரு
மரம்தானே வளர்ப்பார்கள்...?
உன் வீட்டில் மட்டும்
ஏன் மயில் வளர்க்கிறார்கள்...?
*****
கனிவானதொரு சொல்லோ...
நேசம் துளிர்க்குமொரு பார்வையோ...
சில்லரையற்ற பொழுதில் 
நீயெடுக்கும் பயனச்சீட்டோ...
போதுமானதாயிருக்கிறது
உன்னை நேசிக்க...!
*****
துடிப்பதைவிட 
உன்னை நினைப்பதற்கே 
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு...!
*****
நீ இரவுகளில் தூங்குவதே இல்லை...
என் கனவுகளில் அல்லவா இருக்கிறாய்....?
நானோ காலையிலும் எழுவதே இல்லை...
கனவுகள் கலையப் பிடிக்காமல்...!
*****
ஏற்கனவே பூத்த பூ தான் 
எனினும் நீ சூடும்போது 
மறுபடியும் பூக்கிறதே...!
***** 
என்னை நினைத்துக்கொண்டு உறங்கு 
என்றாய்...
அதற்குப் பதிலாய் 
கண்ணைத் திறந்துக்கொண்டு உறங்கு
என்று சொல்லியிருக்கலாம்...!
***** 
சிற்பம்...
கவிதை...
ஓவியம்...
இசை...
நான்கு முனைச் சந்திப்பு நீ...!
***** 
எதற்காக 
நீ கஷ்டப்பட்டுக் கோலம் 
போடுகிறாய்...?
பேசாமல் 
வாசலிலேயே 
சிறிது நேரம் உட்கார்ந்திரு 
போதும்...!
***** 
என்னை நல்லவன் என்று 
நினைத்துக் கொண்டிருந்தேன்...
அந்த நினைப்பில் 
மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது
உன் மீதான காதல்...!
உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது ஆடையை ஆட்டையைப் போடச்சொல்லி 
நச்சரிக்கிறதே மனசு...!
*****
எல்லாச் சொற்களும் தீர்ந்துவிட்டன...
உன் புன்னகையின் வரி வடிவம் கொடேன்...
கொஞ்சம் கவிதை செய்கிறேன்...!
*****
அப்பாடா இப்போதான் மனதில் உள்ள பாரமே கொஞ்சம் குறைஞ்சிருக்கு... இப்போ ஒரு situation still... சும்மா சாப்பிடுங்க...
ம்ம்ம்... இது சும்மா sample தான். பலமான கவிதைகளை அடுத்த பதிவிற்காக பதுக்கியிருக்கிறேன். பிடித்திருந்தால் பின்னூட்டம் போடுங்கள்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

23 February 2010

அஜித் - சில சுவரொட்டிகள்

/* என்றும் எங்கள் தலயின் ஜாதி முக்குலத்தோர் படை */
இது எப்ப...? சொல்லவே இல்ல...
/* விரைவில் சென்னையை நோக்கி தலயின் படை */
ஆஹா... கெளம்பிட்டாங்கய்யா...

/* அசல் விலைக்கே எந்திரன் தருகிறார் ஜாக்குவார் தங்கம் */
???????!!!!!!!!!!!!!

இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையுறீங்க...

நல்லவேளை காமராசர் இப்போது உயிரோடு இல்லை...

தலயின் நிலை பற்றி விளக்க வார்த்தைகள் தேவையில்லை... இந்த படமே போதும்...

Post Comment

13 February 2010

அஜித்குமாரும் ஆயிரத்தில் ஒருவனும்

வணக்கம் மக்களே...

ஒருவழியாக எனது வலைப்பூவை மொய்க்க தொடங்கிய sp, pandiyaraj k, Ramesh Murugesan, peace train, sweet prabha, வெற்றி ஆகியோருக்கு மெரீனா கடற்கரையோரம் சிலை வைக்கலாம். இவர்களில் peace train
ம் வெற்றியும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டால் சிறப்பாக இருக்கும். வலைப்பூ உலகிற்கு வருகைதந்த பட்டுக்கோட்டை பிரபாகருக்கு வாழ்த்துக்கள். மற்றவர்களும் விரைவில் வருவார்கள் என்று நம்புகிறேன். philosophy prabhakaran வலைப்பூ இந்த மாதத்தில் அரிய பல மாற்றங்களை காண இருக்கிறது.

மாற்றம்
எண் 1: தமிழ்மணம் தளத்தில் பதிவு செய்த பின்னர் வலைப்பூவின் மீது public பார்வை படத்தொடங்கிவிட்டது. எனவே இனி private பதிவுகளுக்கு தடா. கண்டிப்பாக சமூக பதிவுகள் மட்டும்.

மாற்றம்
எண் 2: புத்தக சந்தையில் வாங்கிய "பாமரன் பக்கம்" புத்தகத்தை புரட்டினேன். அந்த writing style என்னை மிகவும் கவர்ந்தது. அது மட்டுமில்லாமல் எனது எழுத்தை மேம்படுத்தும் நோக்கில் பத்து பன்னிரண்டு வலைப்பூக்களை பின்தொடர்ந்து வருகிறேன்.

மாற்றம்
எண் 3: blog உலகின் பல்வேறு பரிமாணங்களை கண்டு வியந்தேன். எண்ணிலடங்கா templates, எண்ணிலடங்கா gadgets. இவ்வாறாக இனி இந்த வலைப்பூவில் template, gadgets, fontstyle என்று அனைத்துமே விரைவில் மாற்றம் காண இருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன்
காலம் கடந்த ஓரிரவில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை கண்டேன். முதல்பாதி முழுவதுமே குறை சொல்லமுடியாதபடி கழிந்தது. சோழ இளவரசன் கடந்துபோன பாதை துவங்கியதும் படம் வேகமெடுத்தது. ஆங்காங்கே வேகத்தடையாக பாடல்கள். ஆண்ட்ரியாவின் அங்க அசைவுகள் தனித்துவம். இரண்டாம் பாதி ஆரம்பத்தில் இருந்து படம் டாடா டோகோமொவின் பட்டி நெட் போல ஆனது. celebration of life சிலிர்ப்படைய வைத்தது. கார்த்தி தான் சோழ மன்னனை தாய்தேசம் அழைத்துவரும் தூதுவன் என்று தெரிய வருவது வரை சூப்பர். அதன்பிறகு எல்லாமே சொதப்பல். அழகம்பெருமாளின் ஒரேயொரு போன்காலில் இராணுவமே சர்வ ஆயுதங்களோடு குவியும்போது, ரீமா, ஆண்ட்ரியா, கார்த்தி மட்டும் ஏன் ஏழு ஏழரைகளை கடந்து போகிறார்கள் என்பது விளங்கவில்லை. சோழ மக்களை ராணுவம் கொடுமைப்படுத்தும் காட்சி ஈழத்தை நினைவுபடுத்தியது. இறுதிப்போரில் சோழன் வெற்றியடைவதைப்போல காட்டியிருக்கலாம்.

திரிஞ்ச நினைவுகள்
பள்ளிப்பருவத்திலும் கல்லூரிப்பருவத்திலும் கடந்து வந்த பாதையில் நண்பர்கள் சிலர் தங்கள் மணிக்கட்டில் கறுப்பும் சிகப்புமாக பல கயிறுகளை கட்டியிருப்பார்கள். அந்த கயிற்றை தொட்டாலோ அவதூறு பேசினாலோ கொந்தளிப்பார்கள். அவர்களுக்காக ஒரு situatoion கவிதை :-

"மஞ்சள் நிறத்தில் ஒரு கயிறு மணிக்கட்டில்
கறுப்பு நிறத்தில் இன்னொன்று துணைக்கு
சிவப்பு நிறத்திலும் உண்டு
புரியாத வண்ணத்தில் மற்றொன்று
சே! சாயம் போன பழைய கயிறாம் அது
அம்மா தராத பாதுகாப்பை
அப்பா தராத பாதுகாப்பை
ஆசிரியர் சொல்லாத பாதுகாப்பை
உற்ற நண்பன் என்ன...
ஹமாம் பெற்றுத் தராத பாதுகாப்பை
அந்தக் கயிறுகள் அள்ளித் தருமென...
யார் திரித்த கயிறுகள் அவை...?"
- விஜயலட்சுமி

இதைப் படித்த பின்பாவது சம்பந்தப்பட்டவர்கள் கயிறுகளை கழட்டி எறிவார்கள் என்று நம்புகிறேன்.

DEAD OR ALIVE
அவர் இருக்கிறாரா...? இல்லையா...?
யார்...? கடவுளா...?
இல்லையில்லை... கடவுள் இல்லையென்பது எப்போதோ தெளிவாக தெரிந்துவிட்டது. இப்போது கேட்பது தலைவர் பிரபாகரன் பற்றி. தலைவரின் நிலை பற்றி ஊடகங்கள் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாகசெய்திகளை வெளியிட்டபடி உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக நக்கீரன் கிராபிக்ஸ் கலக்கலெல்லாம் காட்டிக்கொண்டு இருக்கிறது. மொத்தத்தில் ஒரு மாவீரனை ஊடகங்கள் ஊறுகாயாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. இனி தலைவர் இருந்தாலும் இறந்தாலும் ஒன்று தான். ஏற்கனவே ஈழ இனம் அழிந்து அந்த இடத்தில் புல் பூண்டுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டது.

இட்லிவடை
வலைப்பூவை மேம்படுத்துவதற்காக பல்வேறு வலைப்பூக்களை வண்டாக மாறி மொய்க்க தொடங்கியிருந்தேன். நான் பார்த்த வலைப்பூக்களில் என்னை அதிகம் கவர்ந்ததும் இட்லிவடை. கார்ட்டூன் கந்தசாமி, கடுகு தாளிப்பு, லின்க்ஸ் லிங்குசாமி, சிந்திக்கும் சிவராமன், ஜோக்ஸ் ஜோதிகா, லார்டு லபக்கு தாஸ், மொபைல் மீனா, ஒரே கேள்வி ஒரே பதில், பயாஸ்கோப் பலராமன் என்று சைட்பார் முழுவதும் சைட் டிஷ் கலக்கல். நேரம் கிடைக்கும்போது ஒரு டிபன் ட்ரிப் அடித்துவிட்டு வாருங்கள்.

இந்த வார நகைச்சுவை
"அரசியலை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் என்னிடமே உள்ளது."
- பால் தாக்கரே
இந்த வார கருத்து
"successful people do not relax in chairs. they relax in their works."

இந்த வார கவிதை
"இரு நகரங்களுக்கு இடைப்பட்ட கிராமங்களில் வசிப்பவனுக்கு என்றுமே வாய்த்தது இல்லை விரைவுப் பேருந்தின் இருக்கை...!"
- ஆர்.வேணுகோபால்

அஜித் + அஜித்
அமர்க்களபடுத்தும்


இந்த வார பூச்செண்டு
சரி தலைப்பு கொண்ட கருத்துக்கு வருவோம். கலைஞருக்காக தெருவுக்கு தெரு நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பாராட்டுவிழாக்களில் ஒன்றாக திரையுலகினர் ஒன்றினை நடத்தித் தொலைத்தார்கள். விழாவில் பேசிய அனைவரும் (கமல், விஜய் உள்பட) மேடைபேச்சுக்காக கலைஞரை புகழ்ந்துவிட்டுப்போக அஜித் மட்டும் உண்மையை பேசி இருக்கிறார். அப்படி என்னதான் பேசினார் :-

"மூன்று அடியில் உலகை அளந்த கடவுளை நேரில் பார்த்ததில்லை. ஐந்தரை அடி உயரத்தில் ஒரு தமிழ்நாட்டை முதல்வர் உருவத்தில் பார்க்கிறேன். திரைப்பட தொழிலாளர்களுக்கு இடம் கொடுத்ததற்காக, அவரை பாராட்டினால் அது சுயநலம். அறுபது வருடத்துக்கும் மேலாக தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்த மாபெரும் தலைவரை பாராட்ட வந்திருக்கிறேன். தமிழர்கள் சூரியனுக்கு பொங்கலன்று நன்றி தெரிவிப்பதை போல, இந்த சூரியனுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். சினிமா உலகிற்கு நிறைய சலுகைகள் செய்திருக்கிறீர்கள். சமீப காலமாக சினிமா துறையினர் மீது கோபம் இருக்கிறது. தேவையில்லாத விஷயங்களில் அவர்கள் தலையிடுவதால். சென்சிட்டிவான விஷயங்களில் இன்டஸ்ட்ரி தலையிட வேண்டியதில்லை என்று சொல்லுங்கள். இங்கிருக்கிற ஒரு சிலர் எங்களை கட்டாயப்படுத்தி அழைக்கிறார்கள். நாங்களும் வருகிறோம். எங்களுக்கு அரசியல் வேண்டாம். காவிரியில் தண்ணீர் விடவில்லை என்றால் நீங்கள் இருக்கிறீர்கள், பார்த்துகொள்ளுங்கள். நாங்கள் செய்வதற்கு என்ன இருக்கிறது? சினிமா எளிதானதல்ல. புதுமுகமாக இருந்தாலும் ஸ்கிரீன் டெஸ்ட் செய்துதான் வருகிறார்கள். ஒவ்வொருவரும் உழைக்கிறார்கள். அப்படி உழைத்தால்தான் அவர்கள் வீட்டில் அடுப்பெரியும். ஒரு பக்கம் எங்களை அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள்; வந்தால் மிரட்டுகிறார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும். அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் வரட்டுமே. முதல்வர் இதற்கு முடிவு சொல்ல வேண்டும். தமிழ் திரையுலகத்துக்குக் கலைஞர் செய்துள்ள உதவிக்கு, நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும், நன்றி விசுவாசத்திலும்தான் நான் இங்கு வந்துள்ளேன்"

பேசி முடித்ததும் சூப்பர் ஸ்டார் தான் சொல்ல முடியாததை சொல்லிவிட்டானே என்று standing oviation கொடுத்தார்.

இந்த வார குட்டு
குட்டு என்றால் தலையில் தான் வைப்பார்கள். இந்த வார குட்டும் தலைக்குத்தான். ஏதோ பெருந்தன்மையாக அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறப்பது போல ஒரு பேட்டியை கொடுத்தார். ஊடகங்கள் புகழ்ந்து தள்ள ஒரு வாரம் கடந்தபின் உண்மை கசிந்துவிட்டது. ஜோதிடர்களின் ஆலோசனைப்படி அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்திருக்கிறார் அய்யா. ஆயிரம் பெரியார்கள் அணிவகுத்து வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.

தல ரசிகர்கள் என்னை குட்ட போகிறார்களா பூச்செண்டு கொடுக்க போகிறார்களா என்று தெரியவில்லை.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

5 February 2010

அசல் - திவ்யதரிசனம்

வணக்கம் மக்களே...

கடந்த பதிவிற்கு தங்கள் கருத்துக்களை பதிவு செய்த நண்பர்களுக்கு mercy. என்ன புரியலையா...? அதாங்க french பாஷைல thanks. அசல் படம் பார்த்தா உங்களுக்கும் புரியும். வழக்கம்போல தல படத்தை FDFS பார்த்துவிட்டேன். என் மனதில் தோன்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். OK இனி பதிவிற்கு போவோம். டொட்டொடொய்ங்க்...!

பி.கு: இது ஒரு தல ரசிகனின் விமர்சனம்

அசல் - பெயர்க்காரணம்
அப்பா அஜித்தின் மனைவி வழியாக பிறந்தவர்கள் சம்பத்தும் ராஜீவ் கிருஷ்ணாவும். ஆனால் சிங்கத்தின் சிறுவயது சேட்டையில் பிறந்தவர் மகன் அஜித். சட்டப்படி பார்த்தால் மனைவி மூலமாக பிறந்தவர்களே அசல் வாரிசுகள். ஆனால் தந்தையாரின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும் அஜித்தே அசல் வாரிசு என்று இயக்குனர் உணர்த்துகிறார்.

திரைக்கு முன்
வழக்கமாக கிடைப்பதைப் போல idreamsல் ticket கிடைக்கவில்லை. எப்படியோ எதிர்பாரா விதமாக அம்பத்தூர் முருகனில் ticket கிடைக்க பயணமானேன். திரையரங்கம் திருவிழாக்கோலம் பூண்டு இருந்தது. அசல் அஜித்தைப்போலவே கடா மீசையுடன் ரசிகர்கள் பலர் உலவிக்கொண்டிருந்தனர். banner, ஆரத்தி, பாலாபிஷேகம் போன்ற முட்டாள்த்தனங்கள் வழக்கம்போல வேடிக்கையாகவே இருந்தன. தல banner முன்பு தோப்புக்கரணம் போட்ட ஜென்மத்தை என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த அறியாமைக்கூட்டத்தில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ள அவமானமாக இருக்கிறது.

கதைச்சுருக்கம்
கதை franceல் ஆரம்பிக்கிறது. ஜீவானந்தம் (அப்பா அஜித்) france அரசாங்கத்திற்கே ஆயுதம் சப்ளை செய்யக்கூடிய டீலர். அவருடைய அசல் வாரிசுகளாக சாம் (சம்பத்), விக்கி (ராஜீவ் கிருஷ்ணா) மற்றும் ஸ்டெப்சன் சிவா (அஜித்). (இன்னும் எத்தனை காலத்திற்கு கதாநாயகனின் பெயரை சிவா, ஜீவா என்று வைப்பார்கள் என்று புரியவில்லை). அசல் வாரிசுகளுக்கு ஸ்டெப்சன்னை கண்டாலே வெறுப்பு. தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் சப்ளை செய்து பெரிய அளவில் பணம் புரட்ட வேண்டுமென்பது அசல் வாரிசுகளின் விருப்பம். அதை எதிர்க்கும் அப்பாவை கமுக்கமாக தீர்த்துகட்டிவிட்டு களத்தில் குதிக்கின்றனர். இதனால் ஏற்கனவே அந்த பிசினெஸில் இருக்கும் மும்பை டான் ஷெட்டி (கெல்லி டார்ஜி) ஆத்திரமடைந்து அசல் வாரிசுகளில் இளையவரை கடத்துகிறார். தகவலறிந்து கொந்தளிக்கும் கதாநாயகன் மும்பைக்கு பறந்து ஷெட்டி குருப்பை துவம்சம் செய்து தம்பியை காப்பாற்றுகிறார். அசல் வாரிசுகள் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கும் கட்டத்தில் கதாநாயகனை சுட்டு கடலில் வீசுகிறார்கள். இந்த இடத்தில் intermission. கதாநாயகன் சாகமாட்டான் என்பது கடைக்கோடி தமிழ்ரசிகனுக்கும் தெரிந்த விஷயம். உயிர்த்தெழுந்து வரும் நாயகன் அசல் வாரிசுகளை பழி வாங்குவதே பின் பாதி.

AJITH
டைட்டிலில் வெறுமனே அஜித் குமார் என்று போடும்போது தல ரசிகன் என்ற முறையில் வருத்தமடைந்தேன். பின்னர், கதை - திரைக்கதை - வசனம் என்று தல பெயரையும் சேர்த்ததால் படத்திற்கு சேர்ந்த தெய்வதொஷம் கழிந்தது. தலையின் ஹேர் ஸ்டைல் மற்றும் கெட்டப் சூப்பர். தல cigar பிடிக்கும் ஸ்டைல் சூப்பரோ சூப்பர். அந்த மாதிரி cigar எங்கே கிடைக்கும்னு யாராவது கேட்டு சொல்லுங்களேன். மற்றபடி நடிப்பு, சண்டைக்காட்சி, car chasing என்று எல்லாமே கலக்கல். ஆனா தலைக்கு dance மட்டும் யாராவது சொல்லிக்கொடுக்கணும்.

SAMEERA - BHAVANA
சாராவாக சமீரா, சுலபாவாக பாவனா. இருவரில் இவர் கதாநாயகி, இவர் இரண்டாம் கதாநாயகி என்று தரம் பிரிக்க முடியவில்லை. வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகிகளைப்போல 100% waste என்று சொல்லமுடியாது. ஆனால் 50% waste தான். சமீரா முந்தய படத்தைவிட கொஞ்சம் பொலிவாக தெரிகிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். பாவனா ஆரம்பத்தில் லூசுப்பென்னாக காட்டப்பட்டாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு நடித்திருக்கிறார். இருவரும் தல மீது தாங்கள் கொண்ட possessivenessஐ பகிர்ந்துக்கொள்ளும் அந்த காட்சி அருமை. படத்தின் முடிவில் எந்தவித லாஜிக்கும் இல்லாமல் பாவனாவை அஜித்தின் ஜோடியாக்குவதை நான் விரும்பவில்லை. ஒருவேளை அப்பா அஜித்தைப்போல திருமனத்திற்க்குப்பின் சமீராவை ஸ்டெப்னீயாக வைத்துக்கொள்வார் போல.

VILLANS
சம்பத், ராஜீவ் கிருஷ்ணா, சுரேஷ், கெல்லி டோர்ஜி, பிரதீப் ரவாத் என்று ஏகப்பட்ட வில்லன்கள். இவர்களில் பிரதீப் ரவாத் வழக்கமான டம்மி பீஸ் தமிழ் சினிமா வில்லன். ராஜீவ் கிருஷ்ணாவும் படம் ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே அல்லக்கையாக்கபடுகிறார். சம்பத் கஷ்டப்பட்டு பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார். சுரேஷ், ஜெமினி படத்தில் வரும் கலாபவன் மணியைப்போல் வித்தியாசமாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் பின்னர் தொலைந்துபோகிறார். கெல்லி டோர்ஜி மட்டும் மனதில் நிற்கிறார். ஆனால் பாவம் மனிதர் முதல் பாதியிலேயே மர்கயா.

மற்றும் பலர்
டான் சமோசா என்ற நகைச்சுவை பாத்திரத்தில் யூகி சேது. வடிவேலு, விவேக் போல சிரிப்பு டானாக வந்து சென்றாலும் யூகி பேசும் வசனங்கள் எல்லாமே கலக்கல். யூகி இன்னும் கூட பேசியிருக்கலாம்.
சிறப்பு தோற்றத்தில் பிரபு. சந்திரமுகியில் ரஜினிக்கும், வசூல்ராஜாவில் கமலுக்கும் செய்ததை இந்த படத்தில் தலைக்கு செய்திருக்கிறார்.
இவர்களைத் தவிர படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை.

பாடல்கள்
பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடித்திருந்தன. ஆனால் உங்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. சிங்கம் என்றால்... என்று தொடங்கக்கூடிய பாடல் நீண்ட காலம் நிலைக்கும். துஷ்யந்தா... பாடலில் வைரமுத்துவின் வரிகள் காமக்களியாட்டம் போட்டிருக்கிறது. எங்கே எங்கே... பாடல் திரையில் வராதது ஏமாற்றத்தை தந்தது.

மற்றபடி editing, cinematography, art direction, BGM இதைப்பற்றியெல்லாம் எழுதும் திறமை என்னிடம் இல்லை.

RESULT
விஜய் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்து சென்னையில் இருக்கும் ரவுடிகளை அழிக்கிறார் என்றால் அஜித் இந்தியாவில் இருந்து கிளம்பி பன்னாடுகளில் உள்ள பன்னாடை டான்களை அழிக்கிறார். பரமசிவனில் பாகிஸ்தான், பில்லாவில் மலேசியா, ஏகனில் ஹாங்காங், இப்போது அசலில் பிரான்ஸ். தல இனியாவது முழிச்சுக்கோங்க, இல்லன்னா சன்ரைஸ வேற யாராவது குடிச்சிடுவாங்க.

ajith fans இந்த படத்தை ஒருமுறை ரசிக்கலாம் மற்றவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.


அசல் - ???

படத்திற்கு என்ன one line punch கொடுக்கலாம் என்று நீண்ட நேரம் யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை. நீங்களே சொல்லுங்களேன்.

என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment