21 October 2012

பீட்சா



அன்புள்ள வலைப்பூவிற்கு,

வசீகரமாய் ஒரு தலைப்பு, ட்ரைலர் பார்க்கும் முன்பு வரை புஷ்கர் - காயத்ரி, வெங்கட் பிரபு ஸ்டைலில் கலாட்டா படமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். ட்ரைலர் பார்த்தபிறகு ஏதோ க்ரைம் த்ரில்லரோ, சைக்கோ த்ரில்லரோ கிடைக்கப்போகிறது என்று இன்னும் ஆர்வமானேன். தேவி கலா திரையரங்கம், முதல் வரிசை. படம் தொடங்குவதற்கு முன்பு ஏனோ பொல்லாங்கு நினைவுக்கு வந்தது


வழக்கமாக திரைக்கதை முழுவதையும் எழுதிவிடும் பதிவர்கள் கூட பீட்சாவிற்கு ஸ்பாய்லர் எழுதி விடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பதே படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நானும் அதையே பின்பற்ற விரும்புகிறேன். படம் ஏற்படுத்திய தாக்கத்தை மட்டும் பிட்ஸ் அண்ட் பீசஸாக பதிவு செய்கிறேன்.

விஜய் சேதுபதியை சுந்தர பாண்டியனில் பார்த்துவிட்டு ஏதோ ஹீரோ நண்பர், அமெரிக்க மாப்பிள்ளை ரேஞ்சுக்கு வைத்திருந்தேன். அவரோ படு இயல்பான நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார். நிறைய காட்சிகளில் அவருடைய இடத்தில் நம்மை ஃபீல் பண்ண வைக்கிறார்.


கண்ணுக்கு அழகாக ரம்யா நம்பீசனும், எஸ்.எஸ்.மியூசிக் செல்லக்குட்டி பூஜாவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ரசிப்பதற்கு கூட நேரம் தராமல் திகில் நம்மை சூழ்ந்துக்கொள்கிறது.

ஆரம்ப நிமிடங்களில் விஜய்யும் ரம்யாவும் ரொமாண்டிக்கான காதல் ஜோடியை எந்த பாசாங்கும் இல்லாமல் பிரதிபலித்திருக்கிறார்கள்.

விஜய், ஸ்மிதா பங்களாவுக்குள் நுழைந்த பிறகு சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் ரோலர் கோஸ்டரில் ஏறியது போல ஜிவ்வென்று இருக்கிறது.

எப்படா, இடைவேளை விடுவாங்க'ன்னு வாட்சை பார்க்கவைக்கும் படங்களுக்கு மத்தியில் இப்ப ஏண்டா இடைவேளை விட்டாங்க'ன்னு யோசிக்க வைக்கிறது பீட்சா.

கடைசி பத்து நிமிடம் வரை சஸ்பென்ஸை மெயின்டெயின் செய்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். ரம்யா லெட்டர் எழுதி வைப்பதில் ஆரம்பித்து இறுதியில் விஜய் நெற்றியிலிருக்கும் சோட்டானிகரை அம்மன் குங்குமத்தை அழிப்பது வரை, “ஒங்க அடுத்த சீனு இதானே ராசா...!என்று நினைக்க வைத்து நினைக்க வைத்து ஏமாற்றியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அந்த பொண்ணே ஒரு கற்பனையாக இருக்கலாம்...என்று ஒரு கேரக்டர் சொல்லும்போது நான் இதுவரை பார்த்த சைக்கோ த்ரில்லர் படங்களை நினைத்து தலை சொறிந்தேன். ஒரு கட்டத்தில் சிசு கொலை பற்றி ஏதோ கருத்து சொல்ல முனைகிறார்களோ என்று யோசித்து மறுபடியும் ஏமாந்தேன். ஆனால் அந்த ஏமாற்றம் மிகவும் பிடித்திருந்தது.

ஹீரோ, ஹீரோயினுடைய அப்பா அம்மா, குடும்பம், காதல் கல்யாண சிக்கல் என்று வழக்கம்போல அரைமணிநேர ஃப்ளாஷ்பேக் எதுவும் வைக்காமல் ஒரேயொரு புகைப்படத்தில் சுருக்கென்று முடித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியத்தில் ஒரு சோறு.

கோபியும் சந்தோஷும் இணைந்து படத்தை நம் கண்களுக்கும் காதுகளுக்கும் பிடித்த மாதிரி கொடுத்திருக்கிறார்கள். எடிட்டர் லியோ புண்ணியத்தில் படத்தில் தேவையற்ற காட்சிகள் என்று எதுவும் தென்படவில்லை. முழுதாக வந்த ஒரு பாடல்காட்சி கூட விஷுவல் கவிதையாக இருந்ததே ஒழிய வேகத்தடையாக தோன்றவில்லை.


கார்த்திக் சுப்புராஜ் இதுவரை பத்து குறும்படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறாராம். இனி ஒவ்வொன்றையும் தேடிப்பார்க்க வேண்டும். கார்த்திக், பாலாஜி மோகன், தியாகராஜன் குமாரராஜா போன்றவர்கள் தான் நான் தமிழ் படமெல்லாம் பாக்குறதில்லை...என்று திசை மாறும் இளைஞர்களை கவனஈர்ப்பு செய்கிறார்கள்.

ரம்யா நம்பீசனுடைய முகப்பரு மாதிரி படத்தில் சிற்சில குறைகள் இருக்கலாம். ஆனால் அவை நம்மை உறுத்தவில்லை.

மிகவும் எதிர்பார்த்து காத்திருந்து மாஸ் ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு எரிச்சலில் யாரும் படத்தை பார்த்துடாதீங்கன்னு பத்து நண்பர்களுக்காவது எஸ்.எம்.எஸ் அனுப்பிவிடுவோம். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு யாரும் மிஸ் பண்ணிடாதீங்க'ன்னு குரூப் எஸ்.எம்.எஸ் அனுப்ப வைத்திருக்கிறது பீட்சா...!

Paranormal Activity மூன்று பாகங்களையும் சேர்த்தால் கூட பீட்சாவிடம் நெருங்க முடியாது...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 October 2012

பேஜ் 3...!

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மேலைநாட்டு பல்சுவை சஞ்சிகைகளில் பேஜ் 3 என்றொரு சமாச்சாரம் உண்டு. நம்மூர் வண்ணத்திரை, சினிக்கூத்து நடுப்பக்கங்கள் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் சற்றே கவர்ச்சி தூக்கலாக மேலாடைகள் இல்லாத பாலாடைகளின் புகைப்படங்கள் வெளியிடப்படும். மேற்படி மூன்றாம் பக்க கலாசாரத்தை மங்களகரமாக துவக்கி வைத்த பெருமை ப்ரிட்டனில் வெளியாகும் 'தி சன்' என்ற பத்திரிக்கையையே சாரும். லண்டன் குமுதம் என்று அடைமொழி தரவல்ல குறும்புத்தனமான சஞ்சிகை. மூன்றெழுத்து நடிகையின் முன்னழகு ரகசியம், பார்ட்டிக்கு உள்ளாடை அணிய மறந்துவந்த நடிகை போன்ற செய்திகள் தான் சன்னில் முன்னிலை பெறும். 

 
1969ம் ஆண்டு சன்னின் நிறுவனர் ரூப்பர்ட் மர்டாக்குக்கு அந்த குஜாலான யோசனை தோன்றியது. முதல் பதிப்பின் மூன்றாம் பக்கத்தில் உல்லா லிண்ட்ஸ்ட்ராம் பட்டனில்லாத சட்டையணிந்து காட்சியளித்தார். அதைக்கண்ட அந்தக்கால பெல் பாட்டம் இளைஞர்கள் “வாவ்...! சட்டை மேலே எவ்ளோ பட்டன்ஸ்...!” என்று வாய் பிளந்தனர். சம்பவம் நடந்து மிகச்சரியாக ஓராண்டு கழித்து இருபது வயது ஆர்வக்கோளாறு ஸ்டெபானி தன்னுடைய பிறந்தநாள் ஆடையுடன் போஸ் கொடுத்தார். பக்கவாட்டில் இருந்து பக்காவாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் இலைமறை காயாக கவர்ச்சி இருந்தது.

ஸ்டெபானி அடிகோலிட்ட சேவையை சன் மற்ற மாடல்களின் துணையோடு செவ்வனே தொடர்ந்தது. அதைக்கண்டு கிளர்ச்சியடைந்து சமூக காவலர்களும் பெண்ணியவாதிகளும் பொங்கல் வைக்க ஆரம்பித்தார்கள். எனினும் ச்சீ... பொம்பளை படம் போட்டு பொழப்பு நடத்துறாங்களே’ன்னு பொங்கியவர்கள் கூட கக்கிஸ் பக்கம் ஒதுங்கி கள்ளத்தனமாக பேஜ் 3 பெண்களை ரசித்ததால் சன்னின் விற்பனை பிரதிகள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.

சன்னின் ஒளிவு மறைவில்லாத உத்தி கண்டு இங்கிலாந்தில் “தின” என்று ஆரம்பிக்கும் மற்ற சராசரி பத்திரிக்கைகளும் கவர்ச்சியில் தொபுக்கடீர் என்று குதித்தன. இருப்பினும் சன்னிடம் ஒரு தனித்துவம், க்ரியேட்டிவிட்டி இருந்தது, கவர்ச்சிப்படத்தை அன்றாட நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தியது. உதாரணத்திற்கு கலைஞர் கருப்பு சட்டை அணிந்தது பரபரப்பு என்றால் அன்றைய மாடல் கருப்பு நிற பேண்டீஸ் அணிந்திருப்பார். படத்திற்கு கீழே லூஸுப்பையனின் நக்கல் கமென்ட் இடம் பெற்றிருக்கும். கால்பந்து உலக கோப்பை நடந்தால் மாடல் இரண்டு கால்பந்துகளை கையில் ஏந்தியபடி காட்சியளிப்பார்.

பின்னர் எழுபதுகளில் தொடங்கி சுமார் இருபது ஆண்டுகள் வரை மூன்றாம் பக்கத்தில் படத்திற்கு பொருத்தமான இரட்டை அர்த்த கேப்ஷன் பிரசுரிக்கப்பட்டது. கவர்ச்சியை பார்த்து கிறங்காதவர்கள் கூட கேப்ஷனை பார்த்து மெர்சலானார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தங்களுடைய கேப்ஷன்கள் எல்லை மீறிப்போவதை உணர்ந்த சன் மாடல்களின் ஊரு, பேரு, வயதோடு நிறுத்திக்கொண்டது.

அத்தோடு சன் அறிமுகப்படுத்திய புதிய விதிமுறை சில மாடல்களை அலற வைத்தது. தன்னை இயற்கை ஆர்வலராக காட்டிக்கொள்ள முனைந்த அப்போதைய சன்னின் சீப் எடிட்டர், சிலிக்கானை அறவே தடை செய்தார். அதன் விளைவாக அதுவரை பேஜ் 3யில் உச்சத்தில் இருந்த கேட்டி ப்ரைஸ், மெலிண்டா போன்ற போலிகளின் மார்க்கெட் தொங்கிப்போனது.

தொண்ணூறுகளின் இறுதியில் ஐரோப்ப நாடுகளில் தலைவிரித்தாடிய இணைய புரட்சி, பேஜ்3 அழகிகளுக்ககவே தனி இணையதளம் தொடங்க அடிக்கோலிட்டது. சஞ்சிகையில் இடம்பெற்றதை விட அதிக கிளுகிளுப்பு விகிதத்துடன் மாடல்கள் வெவ்வேறு கோணங்களில் இணையங்களில் வெளியாகி இளசுகளின் கணையங்களில் ஹார்மோன் சுரக்கச் செய்தது. நாளுக்கு நாள் சன்னுடைய புகழ் சிகரம் தொட, சன்னின் அடுத்த அதிரடி - உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போல பேஜ் 3 மாடல்களுக்கான தேடல் நடத்தியது. அதாவது விருப்பப்பட்டு அனுப்பும் பெண்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தி இறுதியில் அந்த ஆண்டிற்கான அழகியை தேர்வு செய்வார்கள். அதன் சமீபத்திய வெற்றியாளர் இருபத்தி இரண்டு வயது இஞ்சி இடுப்பழகி லூஸி.

என்னதான் வாசகர்கள் அரை ஆடை அழகிகளை பார்த்து அகமகிழ்ந்தாலும் அழகிகளின் பர்சனல் வாழ்க்கையில் கவலை, தனிமை, புறக்கணிப்பு, அவமதிப்பு என்று பல்வேறு பாதிப்புகள் படர்ந்திருந்தன. அவர்களில் பலர் போதையின் பிடியிலும், தவறான செக்ஸ் உறவுகளிலும் விரும்பியோ விரும்பாமலோ திணிக்கப்பட்டிருந்தனர். அதனை மையமாக வைத்து The curse of Page 3 என்கிற ஆவணப்படம் 2003ம் ஆண்டு வெளியாகி அதிர வைத்தது. (இந்தியாவில் கூட பாலிவுட் பிரபல இயக்குனர் மதுர் பண்டர்க்கர் கைவண்ணத்தில் பேஜ் 3 என்ற திரைப்படம் வெளியானது).

அதனை தொடர்ந்து க்ளேர், என்ற பெண் எம்.பி பேஜ் 3 கவர்ச்சியை தடை செய்ய போராடினார். ஆனால் ஆணாதிக்க சண்முகம் அவரை கேலி செய்தது. தனியொரு ஆளாக போராடிய அவருடைய மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அப்போது அந்த பெண் எம்.பியின் தலையை டாப்லெஸ் மாடலின் உடலோடு ஒட்டி பிரசுரித்து சன் தன்னுடைய வக்கிர புத்தியை வெளிக்காட்டிக் கொண்டது. இருப்பினும் க்ளேரின் பெருமுயர்சிக்கு சிறுபலனாக பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாடல்களை பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு அப்போதைய ஸ்வீட் சிக்ஸ்டீன்களான சமந்தா ஃபாக்ஸ், டெபி ஆஷ்பி போன்றவர்களுக்கு ஆப்படித்தது, கூடவே சன்னுக்கும்.

சன்னுக்கே சில பெண் எடிட்டர்கள் நியமிக்கப்பட்டபோது அவர்கள் மூன்றாம் பக்கத்திற்கு முடிவு கட்ட நினைத்தனர். எனினும் அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்ததாலும், அதனை நிறுத்தினால் சன் தன்னுடைய தனித்துவத்தை இழந்துவிடும் அபாயம் இருந்ததாலும் கவர்ச்சி மழை இன்றளவும் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.

வழக்கமாக ஒரேயொரு மாடல் சிங்கிள் சிங்கமாக காட்சியளிக்கும் மூன்றாம் பக்கத்தில், சமீபத்தில் சன் நாற்பதாவது ஆண்டுவிழாவை கொண்டாடிய போது மட்டும் ஒரு சேர பதினைந்து அழகிகள் பிகினியில் போஸ் கொடுத்து வாசகர்களை ஜொள்ளருவியில் நனைய வைத்துவிட்டார்கள்.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 October 2012

மாற்றான்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழின் முதல் சயமீஸ் ட்வின்ஸ் திரைப்படம் என்று பிரகடனப்படுத்தப்பட்டு, சற்றே தாமதமாக மூன்றாவது படமாக வெளிவந்திருக்கிறது. இனி இயக்குனர்கள் விஜய், பாலா, கே.வி.ஆனந்த் போன்ற ஆபத்பாந்தவர்கள் படைப்புகளை மறந்தும் பார்க்கமாட்டேன் என்று மாரியாத்தா மீது சத்தியம் செய்திருந்தாலும் கன்னுக்குட்டி நடித்திருக்கும் ஒரே காரணத்திற்காக திரையரங்கிற்கு விரைந்தேன். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வது இதுதான் போல...!

திரையரங்கம் சென்று பார்த்தே தீருவேன் என்று அடம் பிடிக்கும் சிங்கக்குட்டிகள் சிகப்பு பத்தியை புறக்கணிக்கலாம்.

சூர்யாக்களுடைய அப்பா உலகம் போற்றும் ஜெனிடிக் விஞ்ஞானி. அவருடைய ஆராய்ச்சியின் விளைவாக அவரது மனைவிக்கு ஒட்டிக்கொண்டு இரட்டைக்குழந்தைகள் பிறக்கின்றன. ஒன்னு அராத்து, இன்னொன்னு அம்மாஞ்சி. அளப்பறையாக ஒரு ஓபனிங் சாங். அதாவது பாடலின் தொடக்கத்தில் குழந்தையாக இருப்பவர்கள், நாலரை நிமிடத்தில் சூர்யாக்களாக மாறிவிடுகிறார்கள். பார்ட்டியொன்றில் காஜலை பார்த்து லவ்வுகிறார்கள். ஆனால் பார்ட்டி அம்மாஞ்சியை தேர்வு செய்கிறது. பிறிதொரு அமங்கல தினத்தில் அம்மாஞ்சி சூர்யாவை போட்டுவிடுகிறார்கள். இரண்டாம் பாதியில் தனியாள் சூர்யா, தன் சகாவின் மரணத்திற்கு காரணமானவர்களை, அதாவது அம்பு, அம்பு எய்தவன், டிக்கெட் கிழிப்பவர், பாப்கார்ன் விற்பவர் என்று அனைவரையும் சகட்டுமேனிக்கு பழி வாங்கித்தள்ளுகிறார்.

சூர்யா, தோணி கிரிக்கெட் ஆடுவதுபோல ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் சர்வசாதாரணமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். மற்றபடி சூர்யாக்களை ஒட்டுக்கா திரையில் காட்டிய தொழில்நுட்பமும், தொ.நு கலைஞர்களும் தான் ரியல் ஹீரோஸ்.

கன்னுக்குட்டியின் கேரக்டர் படத்தில் தெளிவாக சொல்லப்படவில்லை. கலீல் ஜிப்ரான் கவிதை விரும்புகிறார், பார்ட்டியில் கூத்தடிக்கிறார், ஒரு சூர்யாவை லவ்வுகிறார், ஆனால் இருவருடனும் ரொமான்ஸ் செய்கிறார், ஒரு சூர்யா இறந்ததும் இன்னொரு சூர்யாவை லவ்வுகிறார். ஆனால் இரண்டு பெரிய முட்டைக்கண்களை காட்டி நம்மை ஹாஃப்பாயில் மாதிரி அப்படியே சாப்பிடுகிறார். சூர்யாவிற்கு பதில் கன்னுக்குட்டியை ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடிக்க வைத்திருந்தால் நான்கு முறைகூட படம் பார்க்கலாம். கன்னுக்குட்டிக்கு குரல் கொடுத்த சின்மயியுடைய நிஜத்தொழிலே மொழிபெயர்ப்பு என்பதால் இலகுவாக தமிழ், ஆங்கிலம், ரஷ்யன் என்று கலந்துகட்டி அடித்திருக்கிறார்.

சச்சின் கேட்கர் என்ற மராத்தி நடிகர் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ் நடிக்க வேண்டிய கேரக்டராம். அவரை விடபெட்டர் என்று சொல்லுமளவிற்கு உருவமும் நடிப்பும் பொருந்தியிருக்கிறது. சார் அஜித், விஜய், ஹீரோவுக்கு ஃப்ரெண்ட்லியான அப்பா கேரக்டர் என்று ஒரு ரவுண்ட் வருவார். (அதற்குப்பின் காணாமல் போய்விடுவார்). சூர்யாஸ் அம்மா கேரக்டரில் நடித்திருப்பவர் தேசிய விருது நடிகை, நாயகன் படத்தில் கமலுக்கு தங்கையாக நடித்தவர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தீயே தீயே பாடல் முதல்முறை கேட்கும்போதே பிடிக்கும் ரகம். இரண்டு மாதங்கள் தாங்கும். மற்றவை சுமார். நானி கோனி விஷுவலில் ரசிக்கலாம். பின்னணியிசையை பொருத்தமட்டில் ஏழாம் அறிவை தாண்டி ஒரு மைல்கல் வந்துவிட்டார் என்று சொல்லலாம். க்ளைமாக்ஸ் காட்சி நெருங்கும்போது சம்பந்தமே இல்லாத டமுக்குடப்பாங்மியூசிக் உறுத்துகிறது.

படம் முழுவதுமே லாஜிக் என்ற வஸ்து கிஞ்சித்தும் இல்லாமல் நம்முடைய காதுகள் மட்டுமில்லாமல் எங்கெல்லாம் சொருக முடியுமோ அங்கெல்லாம் சாமந்தியை சொருகுகிறார்கள். உதாரணம் சூர்யா ரஷ்ய ராணுவ அதிகாரியிடம் எஸ்.ஏ.ராஜ்குமார் மியூசிக் போட்டு எஸ்ஸாகும் காட்சி. அது சரி, கன்னிவெடியில் கால் வைத்தவர் உயிர் பிழைத்ததாக காட்டியவரிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும் ?

இடைவேளைக்குப்பின் ஏதோ ஞாயிறு காலை தேவாலயத்திற்குள் நுழைந்த உணர்வு நம்மை பீடிக்கிறது. ரஷ்ய மொழியிலும் தமிழிலும் மாறி மாறி அல்லது ஒருசேர பேசி எழவெடுக்கிறார்கள். அதையும் மீறி திரையரங்கில் உட்கார்ந்திருப்பவர்களை குஜராத்தி பெண்கள் துடைப்பத்தால் அடித்துவிரட்ட முற்படுகிறார்கள். அதிலும் அசராதவர்களை இறுதியில் எலிகளை விட்டு கடித்தே கொல்லுகிறார்கள்.

அரசியல், கம்யூனிசம் என்று ஜல்லியடிக்காமல் ஒரு மொக்கை மசாலா படத்தை எடுத்ததற்காக கே.வி.ஆனந்துக்கு ஒரு பொக்கே ஷாப்பையே கொடுக்கலாம். இதான் சார் உங்க ஏரியா...! இனி இதேமாதிரி மொக்கைப்படங்களா எடுத்து தள்ளுங்க. ஆனாக்கா ஹீரோயினா மட்டும் காஜல் அகர்வாலை நடிக்க வைத்து பார்த்தே ஆகவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்.

மாற்றான் - சராசரிகளுக்காக எடுக்கப்பட்ட சராசரி சினிமா...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 October 2012

எல்லாரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க...!

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பதிவின் தலைப்பு போல பல கருத்தாழம் பொதிந்த வசனங்களை டப்பிங் படங்களில் பார்க்கலாம். குறிப்பாக ஆங்கில கொரிய பட மொழிபெயர்ப்புகள் விழி பிதுக்கும்...! கடந்த ஞாயிறன்று பல்லு கூட வெளக்காமல் பேப்பரை பிரித்தபோது எனக்கும் விழி மட்டுமில்லாமல் பலதும் பிதுங்கியது. என்ன ஏதுன்னு ஒரு ரவுண்ட் பார்ப்போம்...!

அதிசய ராட்ஷசி (Ice Queen)
எருவாமாட்டின் என்ற அரியவகை மூலிகையை சேகரிக்க அமேசான் காடு நோக்கி பயணிக்கிறது ஒரு குழு. ஆங்கே ஜுராஸிக் பார்க் கொசு போல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனியில் உறைந்து இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றுகின்றனர். அதனை அறிவியல் ஆராய்ச்சிக்காக விமானத்தில் வைத்து கொண்டு வருகின்றனர். விமானம் விபத்தில் சிக்கிவிடுகிறது. அதுவரை பனிக்கட்டிகளுக்கிடையே உறைந்திருந்த பெண்ணின் உடல் உஷ்ணநிலை தாளாமல் விழித்தெழுகிறது...! குழுவினரில் ஒவ்வொருவராக ஐஸ் ராணியால் கொல்லப்படுகின்றனர். உச்சக்கட்ட காட்சியில் ஹீரோ ஐஸு ராணியோடு ஜல்சா செய்து, சாமர்த்தியமாக வெந்நீர் தொட்டியில் அமுக்கி உருக்கி கொல்கிறார்.

ரகசிய தீவு (Dinotopia)
இரு இளைஞர்கள் தங்கள் தந்தையுடன் தனி விமானத்தில் பறந்து தங்கள் விடுமுறையை கொண்டாடுகின்றனர். இங்கேயும் விமானம் விபத்தில் சிக்கி கடலில் விழுந்துவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக தந்தை உயிரிழந்துவிட இளைஞர்கள் மட்டும் அருகிலிருக்கும் தீவை சென்றடைகிறார்கள். அங்கே வெளியுலக பரிட்சயம் இல்லாத மனிதர்கள் உடன் டைனோசரும் வாழ்கின்றன(ர்). முக்கியமான விஷயம், மனிதர்களுக்கும் டைனோசர்களுக்கும் சுமூக உறவு நிலவுகிறது. டைனோசர்கள் ஆங்கிலம் பேசுகின்றன. அந்த தீவின் விதிப்படி உள்ளே வந்தவர்கள் யாரும் வெளியே போக முடியாது. விதியை உடைத்து இளைஞர்கள் இருவரும் மீண்டு வந்தார்களா என்பதே மீதிக்கதை...!

தொடர்புடைய சுட்டி: அதிசய உலகம் 3D

பேய் நிலா - தேனாண்டாள் ஃப்லிம்ஸ் வெளியீடு (The Possession)
ஒரு மர்மப்பெட்டி கதையின் மையக்கரு. ஆரம்பக்காட்சியிலேயே பெட்டியை திறக்க முற்படும் கிழவி தூக்கி வீசப்படுகிறாள். 13 வயது நடாஷாதான் பேய் நிலா. ஒரு வீட்டில் பழைய அறைகலன்கள் விற்கப்படும்போது நடாஷா பெட்டியொன்றை பார்த்து கவரப்பட்டு வாங்குகிறாள். அன்றிரவு தனிமையில் பெட்டியை திறக்கிறாள் நடாஷா. உள்ளே ஒரு இறந்துபோன பட்டாம்பூச்சியும் ஒரு மோதிரமும் இருக்கின்றன. மோதிரத்தை கையில் அணிந்தபடி உறங்கிவிடுகிறாள். அதன்பிறகு அந்த வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகின்றன. சிறுமி நடாஷா விசித்திரமாக நடந்துக்கொள்கிறாள். அப்புறமென்ன ஆத்மா, தீயசக்தி, நல்லசக்தி எச்சச்ச எச்சச்ச...! மருத்துவத்தால் சாதிக்க முடியாததை மந்திரவாதி சாதிக்கிறார். தீயசக்தி மறுபடியும் பெட்டிக்குள் முடங்குகிறது. பெட்டிக்குள் இருந்து விசும்பல் சத்தம் கேட்பதுபோல இரண்டாம் பாகத்திற்கு லீட் வைத்துவிட்டு திரை இருள்கிறது...!

ஆழ்கடல் அசுரன் (நானே சூட்டிய பெயர்) (Bait)
ஆஸ்திரேலிய பெருநகர் ஒன்றை சுனாமி தாக்குகிறது. அதன் பிடியில் இருந்து தப்பிப்பிழைப்பவர்கள் ஒரு சூப்பர் மார்கெட்டுக்குள் சிக்கிக்கொள்கின்றனர். ஆபத்தில் இருந்து தப்பித்தோம் என்று ஆசுவாசமாகும் போதுதான் அந்த கொடூரத்தை பார்க்கின்றனர் - சுறா...! (விஜய் படம் அல்ல). கொடிய சுறா மீன்கள் இரையை தேடி கடும்பசியில் அலைகின்றன. எஞ்சியிருப்பவர்களை சுறாக்கள் ஒவ்வொருவராக கொல்ல ஆரம்பிக்கின்றன. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற சூட்சுமத்தை உணர்ந்துக்கொள்ளும் மாந்தர்கள் இறுதியாக சுறாக்களுக்கு ரிவிட் அடித்துவிட்டு உயிர் பிழைப்பதே மீதிக்கதை...!

உள்ளூர் மொழிகளில் இருந்து விரைவில் வெளியாகவிருக்கும் டப்பிங் படங்கள் :-
புதுவை மாநகரம்: மம்மூட்டி, டாப்சி, நதியா நடித்த டபுள்ஸ் (மலையாளம்)
பிஸ்னஸ்மேன்: மகேஷ் பாபுவும் கன்னுக்குட்டியும் நடித்தது. (தெலுங்கு)
சத்ரிய வம்சம்: ஸ்ரீகாந்த், ஹனி ரோஸ் நடித்த உப்புக்கண்டம் பிரதர்ஸ் II (மலையாளம்)
சிவாங்கி: சார்மி நடித்த மங்களா (தெலுங்கு)
புதையல்: அப்பாஸ், தபு நடித்த இதி சங்கதி (தெலுங்கு)
ராஜா மகாராஜா: டஷு கவுஷிக் நடித்த ராஜூ மகாராஜூ (தெலுங்கு)

மேற்கண்ட படங்கள் எந்த வெள்ளிக்கிழமை வேண்டுமானாலும் தமிழக திரையரங்குகளில் ஊடுருவும் அபாயம் இருப்பதால் அனைவரும்  அதுவரை தாழ்வான பகுதியிலேயே பதுங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இம்புட்டு வெவரமா பேசினாலும் பிஸ்னஸ்மேன் பட கன்னுக்குட்டி ஸ்டில்லை பார்த்ததும் மனசு டபக்குன்னு ஸ்லிப் ஆகுதே... அது ஏன் சார்...???

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment