29 March 2011

பவர் ஸ்டார் சீனிவாசனின் லத்திகா விமர்சனம் - விரைவில்

நாள்: 28.03.2011

நேரம்: காலை 7.30 மணி

***** தொலைபேசி உரையாடல் *****

நான்: ஹலோ மச்சி... தூங்கிட்டு இருக்கியா...

எதிர்முனை: இல்லடா வேலைக்கு கிளம்பிட்டு இருக்கேன்.

நான் (மனதிற்குள்): தப்பாச்சே...

நான்: லீவ் போட்டுட்டு வா மச்சி... படத்துக்கு போகலாம்...

எதிர்முனை: டேய் சும்மா இருடா...

நான்: ஆமாம்டா... நான் சும்மாதான் இருக்கேன்... அதனாலதான் கூப்பிடுறேன்...

எதிர்முனை: ஆபீஸ் போகலைன்னா பிரச்னை ஆயிடும்டா...

நான்: நீ இப்போ லீவ் போடலைன்னா அதைவிட பெரிய பிரச்சனை ஆயிடும் மச்சி... நீ எல்லாம் ஒரு நண்பனா...

எதிர்முனை: இப்ப என்ன உனக்கு லீவ்தானே போடணும்.... சரி போடுறேன்... போதுமா...

நான்: நண்பேண்டா...

எதிர்முனை: நீ சரியான $%&* டா... அதுசரி எந்த படத்துக்கு போறோம்...

நான்: நீ நேர்ல வா மச்சி சொல்றேன்... சஸ்பென்ஸ்...

**************************************************

நேரம்: காலை 11 மணி

நண்பன்: டேய்... இப்பயாவது எந்த படத்துக்கு போறோம்ன்னு சொல்லித்தொலைடா...

நண்பன்: இதுக்கு ஏன்ப்பா நீ இத்தனை முறை திரும்புற...? இதுக்கு அந்த சாமியாரே தேவலை போல இருக்கே...

நான்: இல்ல மச்சி... அது உனக்கு கொஞ்சம் சஸ்பென்சா இருக்கட்டும்ன்னு பார்த்தேன்... வெயிட் பண்ணு...

நண்பன்: நீ மட்டும் இப்ப சொல்லலைன்னா என் தலையே வெடிச்சிடும்...

நான் (மனதிற்குள்): நான் சொன்னாலும் அதேதான் நடக்கும்... பரவாயில்லையா...

நண்பன் (திரையரங்க இணையதளத்தில் செக் செய்துக்கொண்டே): ஒருவேளை தூங்கா நகரமா...? அந்தப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துட்டேனேடா...

நான் (மனதிற்குள்): இது தூங்கா நரகம் மச்சி...

நண்பன்: நான் பாட்டுக்கு நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன்... ஏதாவது பதில் சொல்லேண்டா...

நான்: டேய் சஸ்பென்ஸ்ன்னு சொன்னா உனக்கு பொறுக்காதே... கொஞ்ச நேரம் மூடிக்கிட்டு இரு... தியேட்டருக்கு போனதும் உனக்கே தெரியும்...

நண்பன்: சரி... போய்த்தொலை...

**************************************************

சென்னை அபிராமி மெகா மால் வாசலில்...

நேரம்: மாலை 3 மணி

நான் (தானைத்தலைவர் பவர் ஸ்டார் சீனிவாசனின் லத்திகா திரைப்பட பேனரை காட்டியபடி): மச்சி... இந்தப்படத்துக்கு தான் நாம போகப்போறோம்...

நண்பன் (ஜெர்க்காகி): மச்சி... ஆபீஸ்ல இருந்து கால் வந்துச்சு... நான் அவசரமா போகணும்...

நான்: ஆபீஸ்ல இருந்து கால் மட்டும்தான் வரும்... இப்ப என்கிட்ட இருந்து செருப்பு வரும்... எப்படி வசதி...?

நண்பன்: டேய்... சொன்னாக்கேளுடா இந்தப்படத்துக்கு எல்லாம் எவனும் போகமாட்டான்...

நான்: அப்ப நாம போவோம்...

நண்பன்: ஒரு பெரிய மனுஷனை இப்படி கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போறது அவ்வளவு நல்லா இல்லை...

நான்: சொல்லிக் கூப்பிட்டா நீ வரமாட்ட... சொல்லாம கூப்பிட்டதால தான் நீ வந்த...

நண்பன்: நீ யா...?

நான்: ஆமாம்யா...

நண்பன்: யா வா...?

நான்: ஆமாம்டா...

நண்பன்: டா வா...?

நான்: கழுதை வயசாகுது லத்திகா படம் பார்க்க பயப்படுற... உனக்கென்ன மரியாதை...

நண்பன்: நீ கெட்டவார்த்தைல திட்டினாலும் நான் உள்ளே வரமாட்டேன்...

நண்பனை வலுக்கட்டாயமாக நான் இழுத்துச்செல்ல...

நண்பன்: போயிறலாம் மாப்பு... உள்ளே இல்ல வெளியே...

**************************************************

நேரம்: மாலை 3.30 மணி

ஒருவழியாக பல தடைகளை கடந்து திரையரங்கினுள் சென்று அமர்ந்தோம்... மற்றவை விமர்சன வடிவில் விஷமாக கூடிய விரைவில்...

லத்திகா படத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு அறுக்கப்பட்ட ஆடு:
ஹிஸ்டடின்னா வரலாறு தானே...

டிஸ்கி: இந்தமுறை "மெட்ராஸ் பவன்" சிவக்குமார் ஆடு தப்பித்துக்கொண்டது... ஆனந்தத்தொல்லை வெளிவரும் வேளையில் அறுத்துட வேண்டியதுதான்...

Post Comment