23 June 2010

என் இனிய எல்விரா...! (18+)


பொதுவாக நான் தமிழ்படங்களைத் தவிர வேறு எந்த மொழி திரைப்படங்களையும் பார்ப்பது இல்லை. (தமிழ்ப்படங்களே சமயத்தில் புரிவது இல்லை. இதில் வேற்று மொழிப்படங்கள் வேறைய...!) அத்தி பூத்தாற்போல டைட்டானிக், ஈவில் டெட், அவதார், அபோகாலிப்டோ, சக் டே இந்தியா, டான், ரேஸ், சி.ஜே.7 என்று சில வேற்றுமொழிப்படங்கள் என் மனதை கவ்வியதுண்டு. இந்தமுறை பிரபல பதிவர்கள் ஜாக்கி சேகரும், கேபிள் சங்கரும் விரட்டி விரட்டி விமர்சனம் எழுதி இருந்ததாலும், இத்தகைய படங்களை பார்ப்பதற்கு மொழி தேவையில்லை விழி இருந்தாலே போதும் என்ற உண்மையை உள்ளம் உணர்ந்ததாலும் படத்தை பின்னிரவில் பக்குவமாக பதிவிறக்கினேன். என்ன படம் என்று கேட்கிறீர்களா... கீழே பாருங்க... ஆனா படத்தோட பெயர் கீழே பார்க்காதீங்க...

Title: no miras para abajo
a.k.a.: don't look down
Tagline: When sexual fantasies come true
Country: Argentina
Language: Spanish
Year: 2008
Genre: Erotica, Romance
Cast: Antonella Costa, Leandro Stivelman
Director: Eliseo Subiela
Producer: Daniel Pensa
Cinematographer: Sol Lopatin
Editor: Marcela Saenz

இதற்கு முன்பு நான் அப்பட்டமாக துகிலுரிக்கும் ஆங்கிலப் படங்களை பார்த்திருக்கிறேன். பேக்ரவுண்டில் சாக்ஸபோன் இசையை கசியவிடும் மூன்றாம் தர மலையாள படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு நளினமான காமக்காவியத்தை இதுவரை பார்த்ததில்லை. சொல்லப்போனால் காட்சிகளை எனது கண்கள் கலையாக பார்த்ததே தவிர காமமாக பார்க்கவில்லை.


எலாய், பதின் பருவ ஆண்மகன். கல்லறைக்கு சிலைகளை மீன்பாடி வண்டியில் கொண்டு செல்வதுமாகவும், பொய்க்கால் கட்டியபடி பிட் நோட்டிஸ் விநியோகிப்பதுமாகவும் சுற்றி வருகிறான். தந்தை இறந்தபின்பு விந்தையாக மாறுகிறான். துக்கத்தில் இருப்பவன் தூக்கத்தில் நடக்க ஆரம்பிக்கிறான். ஓரிரவு தூக்கத்தில் மொட்டை மாடியில் நடந்துக்கொண்டிருக்கும்போது தவறுதலாக பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு மாறுகிறார். அங்கே ஒப்பன் சீலிங் வைத்த ஒரு பாட்டி வீட்டுக்கட்டிலில் விழுகிறார். ஆனால் கட்டிலில் இருப்பது பாட்டி அல்ல, கோடை விடுமுறையை கொண்டாட வந்த பேத்தி. பேத்திதான் நம்ம ட்ரீம் கேர்ள் எல்விரா. பாட்டியும் பேத்தியும் எலாய் மீது பாசக்கரம் நீட்ட நட்பு தொடர்கிறது. எலாயும் எல்விராவும் நெருக்கமாகி பாட்டி வீட்டில் இல்லாத ஒரு நாளில் பாடத்தை ஆரம்பிக்கின்றனர்.

எலாய் பாவம் சின்னப்பையன். முதல் உடலுறவில் டக் அவுட்டாகி சவுரவ் கங்குலியைப் போல பேந்த பேந்த முழிக்கிறார். கூனிக்குறுகி ஐம் ஸாரி என்று சொல்லும் எலாயை எல்விரா அரவணைத்து ஒவ்வொன்றாக கற்றுக்கொடுக்கிறார். இறுதியில் எலாய் மெத்தையில் மேதை ஆகிவிட, எல்விராவின் கோடை விடுமுறையும் முடிவுக்கு வர இருவரும் பிரிவதொடு படம் நிறைவடைகிறது.

ஒற்றைவரியில் சொல்ல வேண்டுமானால் டக் அவுட்டான சவுரவ் கங்குலி சதம் அடிக்கும் சச்சினாக மாறுவதும் அதற்கு பின்னணியில் இருக்கும் என் இனிய எல்விராவும் தான் கதை.


எல்விரா, இவளைப்போல எனக்கொருத்தி இருந்தால் எப்படி இருக்குமென்று எண்ணத் தோன்றியது. அப்படி ஒரு அழகு, ஆளுமை. கட்டிலில் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய அம்சங்களாக விந்தை வெளிப்படுத்தாமல் இருப்பதையும், பெண்ணை சுகப்படுத்துவதையும் குழந்தைக்கு பாடம் சொல்லித்தரும் தாயைப் போல சொல்லிக்கொடுக்கிறாள். அடுத்ததாக ஆண், பெண் உறுப்புகளில் உள்ள நேர், எதிர் துருவங்களை விவரிக்கிறாள். நேர் - எதிர் துருவங்களை இணைத்து மின்சாரம் உண்டாக்கும் கலையை கற்றுக்கொடுக்கிறாள். (இது மாதிரி வித்தையை எல்லாம் நம்ம ஆற்காடு வீராசாமிக்கு யாராவது கற்றுக்கொடுத்தால் தமிழகத்திற்கு விடியும்) ஒரு வழியாக பத்து, இருபது என்று முன்னேறும் எலாய், எல்விராவின் விருப்பப்படி என்பத்தொரு புல் அப்ஸ் (புல் என்ற வார்த்தையை யாரும் நீட்டி படிக்க வேண்டாம்) எடுத்து முடிக்கிறார். தொடர்ந்து நூறு புல் அப்ஸ் எடுக்கும்போது கட்டிலில் இருந்தபடியே உலக நகரங்களை எல்லாம் உலவிவிட்டு வருவதைப்போல உணர்கிறார். பின்னர் எல்விரகா வெவ்வேறு பொசிஷன்களை போதிக்கிறார். 

இந்தப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் வசனம் (சப் டைட்டில் புண்ணியத்தில்). காதல் காட்சிகளில் நம்ம ஊர் மணிரத்னம், கெளதம் மேனன் படங்களில் வரும் வசனங்கள் போல கட்டிலறை காட்சிகளின் போது எலாயும் எல்விராவும் பேசு வசனங்கள் அனைத்தும் கவித்துவமாக அமைந்திருந்தன. அதிலும் எல்விராவின் கொஞ்சல்களும் முனகல்களும் என்னை பாடாய்படுத்தியது. தங்களது குறிகளுக்கு செல்லப்பெயர் வைத்துக்கொள்வதும், குறியீடுகளை பயன்படுத்துவதும் விரசம் இல்லாமல் பார்த்துக்கொண்டது. மொத்தத்தில் இது ஒரு மஸ்ட் வாட்ச் திரைப்படம்.

காமத்தை அப்பட்டமாக்கப் போகிறேன் என்று சில வருடங்களுக்கு முன்னால் வேலு பிரபாகரன் சொன்னபோது அவரிடம் இருந்து இப்படி ஒரு படத்தைத் தான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் அவரிடம் இருந்து வெளிப்பட்டதோ வேறுவகையான ஒன்று. இனியாவது தமிழில் இப்படி ஒரு படம் வந்தால் சிறப்பாக இருக்கும்.

டிஸ்கி: மேற்கண்ட காவியத்தைப் பற்றி பிரபலங்கள் எழுதிய பதிவுகள்...

அப்படியே பிரபலங்கள் இதைப் போல உன்னதமான உலக சினிமா ஏதாவது இருக்கிறதா என்பது பற்றி எடுத்துரைத்தால் அடியேன் தனது அறிவை வளர்த்து கொள்வதற்கும் அருள் பெறுவதற்கும் ஏதுவாக இருக்கும்.


அய்யய்யோ... அத மறந்துட்டேனே... இந்த படத்தை இல்லையில்லை பாடத்தை நீங்கள் பதிவிறக்கிக்கொள்ள...
டோரன்ட் லிங்க்: Don't Look Down (DVD RIP)
நேரடி லிங்க்ஸ்: 

கவலைக்கொள்ள வேண்டாம் இரண்டு விதமான இணைப்புகளிலும் ஆங்கில சப் டைட்டில் இணைக்கப்பட்டுள்ளது.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment

20 June 2010

ராவணன் - தமிழனொருவன் பார்வையில்...

வணக்கம் மக்களே...

என் இனத்து ராவணன் பெருமைபெற்றவன் என்று எடுத்துரைத்ததற்காகவே பாராட்டலாம் பக்கம் பக்கமாக. ஈழத்து நிலவரம், இந்து - முஸ்லீம் கலவரம் என்று ஊரையே உலுக்கும் விவகாரத்தை ஜஸ்ட் லைக் தட் படமாக எடுத்து பணம் பார்க்கும் பழக்கம் கொண்டவர் மணி சார். இந்தப் படத்திலும் ஊரே போற்றும் மணி சார் தனது சேட்டையை காட்டியிருப்பார் என்றே நினைத்தேன். கண்டிப்பாக நெகடிவ் விமர்சனம்தான் எழுதப் போகிறேன் என்ற எண்ணத்துடனே திரையரங்கிற்குள் நுழைந்தேன். இந்தப் படத்திலும் சில எதிர்மறை கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை கடைசியில் சொல்கிறேன், இப்போது முதல் மரியாதை.

கதைச்சுருக்கம்
நான் ராமாயனமெல்லாம் படித்ததில்லை. எனவே கதையை எவற்றோடும் ஒப்பிடாமல் விவரிக்கிறேன். வீரய்யா, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன். அவனது சுற்றத்திற்கும் நட்பிற்கும் அவன் தான் தலைவன். அவனது தங்கையின் கற்பை காவல்துறையினர் களவாடிவிட வெகுண்டெழும் வீரய்யா குழுவினர், காவல்துறை அதிகாரி தேவின் மனைவி ராகினியை கடத்தி காட்டிற்குள் சிறை வைக்கின்றனர். காவல் படையுடன் காட்டிற்குள் நுழையும் தேவ் பதினான்கு நாள் போராட்டத்திற்கு பின் ராகினியை மீட்கிறார். இந்த பதினான்கு நாட்களில் நடந்தது என்ன...? யார் நல்லவர்...? யார் கெட்டவர்...? யாருக்கு யார் மீது காதல் வந்தது...? என்பதெல்லாம் மீதிக்கதை.

படம் முழுக்க விக்ரமும் அவரது குழுவினரும் இனிக்க இனிக்க திருநெல்வேலி தமிழ் பேசியிருந்தது, குற்றாலச்சாரலாய் இதமளித்தது. படம் மொத்தம் இரண்டு மணிநேரம் பத்து நிமிடங்கள் தான். இடைவேளை வரை எதிர்மறையான கருத்துக்கள் ஆக்கிரமித்திருந்தன. இரண்டாம் பாதியில் "எங்கப்பன் மவ..." என்று பிரபு விவரிக்க ஆரம்பித்ததுமே கண்ணீர் கசிந்துவிட்டது. ப்ரியா மணி ப்ளாஷ்பேக் முடிந்ததும் ஐஸ் கண்களிலிருந்து தழும்பும் ஒருதுளி கண்ணீர் கவிதையைப்போல இருந்தது. மலை உச்சியில் இருக்கும் பாலத்தில் விக்ரமும் ப்ரித்வியும் ஒத்தைக்கு ஒத்தை மோதும் சண்டைக்காட்சி அருமையாக இருந்தது. அதுதான் ராமர் பாலமோ என்னவோ...?

"சீயான்" விக்ரம்
வீரய்யாவாக விக்ரம். தமிழ் சினிமாவில் வழக்கமாக காட்டப்படும் அதே முரட்டுத்தனமான பயம் என்றால் என்னவென்றே தெரியாதவன். ஆனாலும் சலிப்பூட்டவில்லை. "டுப் டுப் டுப் டுப்", "டன் டன் டன் டனக்கா..." என்று நடிப்பில் அதகளப்படுத்தியிருக்கிறார். விக்ரம் இஸ் பேக். படம் முழுக்க அழுக்காகவே வருகிறார். பாரபட்சம் பார்க்காமல் ரெளத்திரம் பழகியிருக்கிறார். ஐஸிடம் காதலாகுவது, காதலாகியும் கண்ணியமாக நடந்துக்கொள்வது என்று கவர்ந்திருக்கிறார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது உறுதியாகிவிட்டது ஆனால் அது விக்ரமுக்கா அபிஷேக்குக்கா என்றுதான் தெரியவில்லை. கண்டிப்பாக விக்ரம் அளவுக்கு அபிஷேக் நடித்திருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.

"உலக அழகி" ஐஸ்வர்யா பச்சன்
ராகினியாக ஐஸ். பட்டம் வாங்கி பதினாறு வருடங்கள் கடந்துபோனாலும் இன்றும் ஐஸ்வர்யா உலக அழகிதான். கோபமும் தைரியமுமாக ஆரம்பக்காட்சிகளில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆட்டம் பாட்டத்திற்கு அதிகம் வாய்ப்பில்லாமல் போனது ஏமாற்றமளித்தது. கடவுள் எனப்படும் சிலைமுன்பு நின்று வேண்டிக்கொள்ளும் காட்சியில் தேர்ந்த நடிப்பு. யார் பின்னணி குரல் கொடுத்தார் என்று தெரியவில்லை, பாத்திரத்திற்கு பொருந்துகிறது ஆனால் பாப்பாவிற்கு பொருந்தவில்லை. 

மற்றும் பலர்
- தேவ் எனும் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக பிருதிவிராஜ். விக்ரமின் அனாயசமான நடிப்பிற்கு முன்னால் காணாமல் போய்விடுகிறார். "உன்னைப்போல் ஒருவன்" கணேஷ் வெங்கட்ராமன் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக நடித்திருப்பார் என்று தோன்றியது.

- விக்ரமின் அண்ணனாக பிரபு, தம்பியாக முன்னா. பிரபுவுக்கு படத்துக்கு படம் இதே பாத்திரம்தான் கிடைக்கிறது. இவரது பாத்திரம் கடைசிவரை கொல்லப்படாமல் இருந்தது ஆச்சர்யம் அளித்தது. 

- விக்ரமின் தங்கை வெண்ணிலாவாக ப்ரியாமணி. ரொம்பவே எதிர்பார்த்து போனேன் ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றி ஏமாற்றிவிட்டார். பாவம்ங்க ப்ரியாமணி எல்லாப் படத்துலயும் கற்பழிச்சா என்னதான் பண்ணுவாங்க. நல்லவேளை, கற்பழிப்பு காட்சியை காட்டித் தொலைக்கவில்லை.

- காட்டிலாகா அதிகாரியாக கார்த்திக். இவர் அறிமுகமாகும் காட்சி ஆளவந்தான் படத்தில் வரும் நந்து கமலை நினைவூட்டியது. இதுபோன்ற பாத்திரங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்தால் இன்னுமொரு ரவுண்ட் வரலாம்.

- ராசாத்தி என்னும் அரவாணி கேரக்டரில் வையாபுரி நடிப்பின் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறார். அவரை இன்னும் சில காட்சிகளில் காட்டியிருக்கலாம். ரஞ்சிதா சில காட்சிகளில் பிரபுவின் மனைவியாக தலையை காட்டினாலும் திரையரங்கில் ஆரவாரம்.

பாடல்கள்
பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ஹிட். புதிதாக எதையும் சொல்ல வேண்டியதில்லை. "வீரா வீரா..." என்று தொடங்கும் பாடல் டைட்டில் பாடலாக ஒலித்தது. "உசுரே போகுதே.." பாடல் படத்தின் ஆரம்பத்திலேயே வந்து உற்சாகம் கூட்டியது. "கொடு போட்டா..." என்று தொடங்கும் பாடலும் "கெடா கறி..." என்று தொடங்கும் பாடலும் வழக்கமாக மணிரத்னம் படத்தில் வரும் கொண்டாட்டப் பாடல்கள். "காட்டுச் சிறுக்கி..." பாடல் திரையில் வராதது மற்றுமொரு ஏமாற்றம். இது தவிர ஐஸ் - ப்ருத்வி நடனத்தினூடே ரொமான்ஸ் செய்யும் பாடல் பார்ப்பதற்கு இதமாக இருந்தது.

எனக்குப் பிடித்த காட்சி
தோனியில் குழந்தைகளுக்கு மத்தியில் நின்றுகொண்டு விக்ரம் ஐஸிடம் பேசும் வசனக்காட்சி. இதுவரை காதலை யாருமே இப்படி வெளிப்படுத்தி இருக்கமாட்டார்கள். அதேபோல சிலைமுன்பு விக்ரம் பேசும் வசனமும் சிறப்பாக இருந்தது. இந்தக் காட்சிகளை எல்லாம் விவரித்தால் நன்றாக இருக்காது, பார்த்து உணருங்கள்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்
சிற்சில எதிர்மறை கருத்துக்கள் எட்டிப்பார்த்தன. வழக்கமாக சமூகப் பிரச்னையை காசாக்கும் மணி சார் இந்தமுறை ஐஸின் மார்பகத்தை காசாக்க முயன்றிருக்கிறார் என்றே சொல்லலாம். கதைக்கு கொஞ்சமும் தேவையில்லாத சதையை ஐஸ் காட்டியிருக்கிறார். ஐஸ், அவரது வீட்டில் இருக்கும்போது கூட க்ளீவேஜ் தெரிவதுபோல உடையணிந்து இருக்கிறார். மணி சார் வீட்டு பெண்களெல்லாம் அப்படித்தான் உடுத்துவார்கள் போல. ப்ரியாமணி தோன்றும் பாடலில் கூட கேமரா பின்பு நின்றுகொண்டு "கொஞ்சம் மாராப்பை விலக்கிவிட்டு ஆடும்மா..." என்று சொல்லியிருப்பார் போல. ராவணனைப் பற்றி சொன்னதெல்லாம் ஒ.கே தான். ஆனால் ப்ரியாமணி விவகாரத்தில் ப்ரித்விக்கு சம்மந்தமே இல்லாதது போல காட்டியும், ஐஸை ப்ரித்வி உண்மையில் சந்தேகப்படவில்லை என்பது போலவும் காட்டி ராமனையும் நல்லவனாக்க முயன்றிருக்கிறார். சரி, அந்தக் கதையை விட்டுதொலைப்போம்.

தீர்ப்பு
படம் ஓடுமா என்று கேட்டால் நிச்சயம் ஓடாது என்றே சொல்லுவேன். நம் தமிழர்களின் ரசனையைப் பற்றி நமக்குத்தான் நன்றாக தெரியுமே. ஆனால் கண்டிப்பாக விருதுகளை வாங்கிக் குவிக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதாரண படமாகக்கூட அமையலாம். ஆனால் வட இந்தியாவில் படம் நிச்சயம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். கண்டனக்குரல்கள் கூட எழலாம். கண்டிப்பாக படத்தை ஒருமுறை ரசிக்கலாம். நீங்கள் மணி சாரின் விசுவாசியாக இருந்தால் பலமுறை ரசிக்கலாம்.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment

16 June 2010

என்னைக் கவர்ந்த பதிவர் பெருமக்கள்

வணக்கம் மக்களே...

சில வாரங்களுக்குப் பின்பு பதிவுலகத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறேன். காதல் தந்த மயக்கத்தில் சில வாரங்களாக உச்சி மண்டையில் காதல் உணர்வுகளைத் தவிர வேறொன்றும் உதிக்காமல் இருந்தது. பதிவுலகத்திற்கு பை சொல்லிவிடலாமா என்றுகூட தோன்றியது. அந்த நேரத்தில்தான் "கொத்துபரோட்டா" வைர விருதையும், "ஜெய்லானி" தேவதை விருதையும் கொடுத்து திக்குமுக்காட வைத்துவிட்டனர்.

கடந்த பதிவிற்கு பல தரப்பிலிருந்து வசைமொழிகள் குவிந்து மாபெரும் வெற்றியைத் தேடி தந்திருக்கின்றன. திட்ட வேண்டியதையெல்லாம் ஒரே பதிவிலேயே கொட்டி முடித்துவிட்டதால் இனி யாரைத் திட்டுவது என்று தெரியவில்லை. சரி வாங்கிய விருதுகளை நாலு பேருக்கு கொடுத்துப் பாராட்டலாம் என்று கிளம்பினேன். சும்மா ஏனோதானோ என்று விருதுகளை கொடுத்துவிடாமல், கெடுத்துவிடாமல் யாருக்கு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று ஆராய்ந்து அனுபவித்து கொடுத்திருக்கிறேன்.

 
முதலில் வைர விருதுகள். விருது பெறும் வைரமான பதிவர்கள்: Phantom Mohan, ஜில்தண்ணி, வந்துட்டான்யா வந்துட்டான், விஜய் கவிதைகள்

இதுவரை எழுதியவை: 26
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 30
வலைப்பூ தொடங்கியது: April 2010
வகையறா: நகைச்சுவை, பல்சுவை
என்னைக் கவர்ந்த பதிவு: டேய்! எவன்டா அவன் கல்யாணத்த கண்டுபுடிச்சது (இரண்டு பாகங்களும்)

முன்னர் பருப்பு - THE GREAT என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்த வளைகுடா பதிவர். தற்போது Phantom Mohan என்ற பெயரில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். எந்தப் பதிவு எழுதினாலும் அதில் சேட்டைக்காரன் ஸ்டைலில் நகைச்சுவையும் கலந்து எழுதி வருகிறார். இவர் இரண்டு பாகங்களாக எழுதியிருந்த "டேய்! எவன்டா அவன் கல்யாணத்த கண்டுபுடிச்சது?" பதிவுகளைப் படித்தபோது வியர்த்துக்கொட்டியது. ஆணாகப் பிறந்த யாராக இருந்தாலும் வியர்க்கத்தான் செய்யும்.

இதுவரை எழுதியவை: 26
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 44
வலைப்பூ தொடங்கியது: April 2010
வகையறா: நகைச்சுவை, பல்சுவை, கொஞ்சம் கம்யூனிசம்
என்னைக் கவர்ந்த பதிவு: புரட்சியின் மறுபெயர் சே

சுடுதண்ணியின் ஆஸ்தான சிஷ்யன் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவெழுத ஆரம்பித்து வேகமாக வளர்ந்து வரும் பதிவர். ஏற்கனவே வைர விருதையும் தேவதை விருதையும் வாங்கிவிட்டார். இருப்பினும் என் சார்பாக மீண்டும் ஒரு வைர விருது. மறுக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள். பல்வேறு துறைகளிலும் புகுந்து விளையாடக்கூடிய ஆல் ரவுண்டராய் இருப்பினும் இவர் எழுதிய "புரட்சியின் மறுபெயர் சே" என்ற பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இதுவரை எழுதியவை: 75
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை:64
வலைப்பூ தொடங்கியது: October 2009
வகையறா: நகைச்சுவை, விழிப்புணர்வு
என்னைக் கவர்ந்த பதிவு: திரை விமர்சனம்

பெயர் சொல்ல விரும்பாத இந்தப் பதிவர் விருதினை வாங்கிக்கொள்வாரா என்றுகூட தெரியவில்லை. பலதரப்பட்ட பதிவுகளை எழுதிவரும் பதிவர் பெரும்பாலும் எழுதுவது அட்வைஸ் ரக பதிவுகள். அப்படிப்பட்ட பதிவருக்கு நாம் கொடுக்கும் சில அறிவுரைகள்: உங்கள் தளத்தில் பக்கவாட்டில் இருக்கக்கூடிய உபகரணங்கள் எழுந்திருக்க சிரமப்படுகின்றன அல்லது எழுந்திருக்கவே மாட்டேன் என்கிறது. குறைந்தபட்சம் பழைய பதிவுகளை படிப்பதற்கு மட்டுமாவது ஏதுவாக அமைத்தால் சிறப்பாக இருக்கும். இவர் மாத்தி மாத்தி யோசித்து எழுதிய "திரை விமர்சனம்" அருமை.

இதுவரை எழுதியவை: 55
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 54
வலைப்பூ தொடங்கியது: August 2009
வகையறா: கவிதைகள்
என்னைக் கவர்ந்த பதிவு: பிறவா மகள்

ஏற்கனவே பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கும் சீனியர் பதிவர். வாரத்திற்கு ஒரு கவிதை... நச்சென்று... நறுக்கென்று... நிதானமாகவும் நிலையாகவும் ஐம்பது பதிவுகளை கடந்திருக்கிறார். காதல் பற்றி விஜய் எழுதிய கவிதைகள் அனைத்துமே எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அவற்றையும் மீறி "பிறவா மகள்" என்ற தலைப்பில் எழுதியிருந்த ஏக்கக்கவிதை உருக வைத்தது.

அடுத்தது தேவதை விருதுகள். தேவதை என்றாலே பெண்கள்தான். எனவே தேவதை விருதுகளை பெண்பதிவர்களுக்கு மட்டும் கொடுத்திருக்கிறேன். விருது பெறும் தேவதைகள்: அன்புடன் ஆனந்தி, என்னுள்...!, காகித ஓடம், தகவல் தொழில்நுட்ப செய்திகள்
இதுவரை எழுதியவை: 22
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 80
வலைப்பூ தொடங்கியது: March 2010
வகையறா: சமையல் குறிப்பு, கவிதைகள்
என்னைக் கவர்ந்த பதிவு: எனக்காய்ப் பிறந்தவனே...!

நெல்லையில் பூத்த முல்லை. குறுகிய காலத்தில் பதிவர்கள் பலரது பாசத்தைப் பெற்று பரபரவென்று வளர்ந்து வரும் பதிவர். பல்சுவை பதிவுகள் எழுதினாலும் சமையல் குறிப்பிலும் கவிதைகளிலும் அம்மணி எழுத்துக்கள் பொன்மணி. அதிலும் காதல் கவிதைகளில் உருக வைத்துவிடுகிறார். ஏற்கனவே சில விருதுகளை வாங்கியவர் இதுவரை தேவதை விருதினை வாங்கவில்லை என்று நம்புகிறேன். இந்த தேவதை எழுதிய "எனக்காய்ப் பிறந்தவனே...!" என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.

இதுவரை எழுதியவை: 57
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 13
வலைப்பூ தொடங்கியது: March 2010
வகையறா: ஈழம், கம்யூனிசம்
என்னைக் கவர்ந்த பதிவு: காதல் - பெரியார்

ஈழம், கம்யூனிசம், நாத்திகம் என்று ஆழமான கருத்துக்களை எழுதி வருபவர். எல்லாப் பதிவுகளிலும் ஏதோ ஒரு வலி ஒளிந்திருக்கும். தந்தை பெரியாரைப் பற்றி அதிகம் எழுதுவதால் பிடித்துவிட்டது. குறுகிய காலத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியிருக்கிறார்."காதல் பற்றி பெரியார்" குடியரசுவில் எழுதிய கட்டுரை சிறப்பாக இருந்தது.

இதுவரை எழுதியவை: 75
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 120
வலைப்பூ தொடங்கியது: February 2007
வகையறா: காதல், கவிதைகள்
என்னைக் கவர்ந்த பதிவு: ஒரு கடிதம் - என்னவனுக்கு

மூன்று வருடங்களுக்கு மேலாக நிலையாக பதிவுலகில் நடைபோட்டு வருபவர். நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள், எழுபத்தி ஐந்து பதிவுகள். ஏற்கனவே பல விருதுகளை வாங்கியவர். அநேகமாக தேவதை விருதினைத் தவிர எல்லாவற்றையும் வாங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். இவர் எழுதிய பதிவுகள் பலதும் காதலைப் பற்றி கவிதையாய் சொன்னது. இவர் எழுதிய கவிதைகளும் காதல் பற்றியதாகவே இருந்தன. "ஒரு கடிதம் - என்னவனுக்கு" என்று அவர் எழுதிய கடிதம் மிகவும் பிடித்திருந்தது.

இதுவரை எழுதியவை: 105
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 49
வலைப்பூ தொடங்கியது: March 2009
வகையறா: தொழில்நுட்பம்
விதூஷிகா, பிரஷா என்று கடந்த ஆறுமாத காலமாக தகவல் தொழில்நுட்பம் பற்றி எழுதி வரும் இரட்டை தேவதைகள். நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள். ஒவ்வொன்றுமே பயனுள்ள பதிவு. தளம் மிகவும் மெதுவாக இயங்குவது மட்டும் கவலை அளிக்கிறது. எல்லாமே சிறந்த பதிவுதான். இருப்பினும் "மொபைலில் தமிழ் தளங்களை காண உதவும் ஸ்கைபயர் உலாவி" அபாரமான பதிவு.

ஒரு வழியாக விருதுகளை சுமந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன். விருது பெற்றவர்கள் அவ்விருதை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வியுங்கள். மகிழ்வித்து மகிழ்வியுங்கள்.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment