வணக்கம் மக்களே...!
வரலாற்று சிறப்பு கொண்ட மக்களுள் கிளியோபாட்ரா மீது எப்போதுமே என் மனதில் தனி மரியாதையும் பிரியமும் உண்டு. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் அதிமுக்கியமான காரணம் என்னவென்றால் கிளியோபாட்ராவின் கறுப்பு நிறம் தான். அது என்னவோ விவரம் தெரிந்த வயதிலிருந்தே (நாங்கள்லாம் மூணாம் கிளாஸ்லயே முத்தினவங்க...!) கார்வண்ண பெண்கள் மீது கொஞ்சம் கவனம் செலுத்துவேன். (சைட் அடிப்பேன்னுங்கறத தான் கொஞ்சம் டீஜண்டா சொன்னேன்). பொதுவாக பசங்க பொண்ணுங்கள கலர்னு சொல்லுவாங்க. என்னைப்பொறுத்தவரையில் கறுப்பு தான் கலர். (கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு). "ஏம்லே அந்த கருவாச்சி பின்னாடியே சுத்துத..." என்பவர்களிடம் கிளியோபாட்ராவை சான்றுகாட்டி மொக்கை போடுவேன். இப்படியெல்லாம் என்னைப் பாடாய்படுத்திய கனவுக்கன்னி கட்டழகி கிளியோபாட்ராவின் வரலாற்று பக்கங்களை ஆராய்ந்து இந்தப் பதிவை எழுதுகிறேன்.
பொதுவாக மன்னராட்சி காலத்தில் ஒரே பெயரையே எல்லா வாரிசுகளுக்கும் வைத்துவிட்டு ஒவ்வொருவருக்கும் பெயருடன் ஒரு நம்பரை மட்டும் இணைத்துவிடுவார்கள். (நம்ம இம்சை அரசன் 23ம் புலிகேசி போல). அதுபோல நமது கிளியோபாட்ரா வம்சத்தில் ஏற்கனவே ஆறு கிளியோபாட்ராக்கள் இருந்ததினால் இவருக்கு ஏழாம் கிளியோபாட்ரா என்று பெயர். கிளியோபாட்ரா குடும்பத்தில் ஆண்களாக பிறந்தாலே ப்ளாடெமி என்றும் பெண்களாக பிறந்தாலே கிளியோபாட்ரா என்றும் பெயர் வைத்துவிடுவார்களாம். நம்பர் மட்டும்தான் வேற வேற. எகிப்து நாட்டில் கி.மு 69ம் ஆண்டில் பிறந்த இவரது முழு பெயர் Cleopatra VII Philapator (சத்தியமா தமிழ்ல டைப் பண்ண முடியல).
அறிவாற்றலும் பேரழகும் கொண்ட கிளிக்கு (இனிமே இப்படியே எழுதுறேன்... ஒவ்வொரு முறையும் கிளியோபாட்ரான்னு டைப் பண்ண கை வலிக்குது) ஒன்பது மொழிகள் தெரியுமாம். (தமிழ் தெரிந்தால் வந்து பின்னூட்டம் போடச் சொல்லலாம்). கிளி ஒரு கணித மேதை. கணக்கு பண்ணுவதிலும்தான் என்பதை பதிவின் பின்பாதியை படிக்கும்போது உணருவீர்கள். கிளியின் டாடி சீக்கிரமே இறந்துவிட்டதால், அப்போது பதினெட்டு வயதே ஆகியிருந்த கிளியும் அவரது பதினைந்து வயது தம்பியும் சேர்ந்து ஆட்சிப்பொறுப்பை கவனித்துக் கொண்டார்கள். ஆனால் சிலகாலத்தில் அவரது தம்பி துரோகி ஆகி கிளியை கவிழ்த்துவிட்டார்.
இங்க தான் நம்ம ஹீரோ என்ட்ரி. ரோமப் பேரரசு (பேரரசுன்னு சொன்னதும் யாரும் பயப்படாதீங்க மக்கள்ஸ்... இவரு டைரக்டரு இல்ல) ஜூலியஸ் சீசர் உதவியுடன் போரில் வெற்றிப்பெற்று மீண்டும் எகிப்து ராணியாகிவிட்டார். ஆனால் எகிப்து நாட்டின் சட்டப்படி தனியாக ஆள முடியாததால் தனது பதினோரு வயது தம்பியை மணந்துக்கொண்டார். (பாலச்சந்தர் பட க்ளைமாக்ஸ் மாதிரி இருக்கே...) ஆயினும் தலைவனை பிரிந்து தலைவிக்கு இருக்க முடியாததால் மீண்டும் ரோமுக்கு சென்று ஜூலியஸ் சீசருடன் வாழ ஆரம்பித்தார். அவர்களுக்கு சிசேரியன் என்று ஒரு மகன் பிறந்தார். (சிசேரியனா நார்மல் டெலிவரியா என்று ஆராய்ந்து பார்த்தேன்... வரலாற்றுக்குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை). சில ஆண்டுகளில் ஜூலியஸ் மரணத்தை தழுவினார்.
ஜூலியஸின் மரணத்திற்குப்பின் அவரது ஆதரவாளரான மார்க் ஆண்டனி கிளியின் மீது காதலில் விழுந்தார். கிளியும் மார்க்குக்கு பாஸ்மார்க் போட, இருவரும் திருமணம் செய்துக்கொண்டார்கள். இருவரும் இணைந்து மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவர்களின் உறவை மையப்படுத்தி ஷேக்ஸ்பியர் பதினேழாம் நூற்றாண்டில் நாடகம் ஒன்றினை நடத்தினார். போரில் ஆண்டனி மரணமடிய அதன்பிறகு கிளிக்கு வாழ பிடிக்கவில்லை. எனவே விஷப்பாம்புகளை தனது மார்பில் கடிக்கவிட்டு கிளியோபாட்ரா தனது 39வது வயதில் தற்கொலை செய்துகொண்டதாக வரலாறு சொல்கிறது.
கிளியோபாட்ராவின் வரலாற்றை அவ்வப்போது திரைப்படமாக எடுத்தபோதிலும் 1963ம் ஆண்டில் எலிசபெத் டெய்லர் நடிப்பில் வெளிவந்த படமே இன்றளவும் பேசப்படுகிறது. நான்கு ஆஸ்கர் அவார்டுகளை வாங்கி குவித்துள்ளது. கிளியோபாட்ரா பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள ஆர்வம் இருந்தால் இந்தப் படத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் மூலம் பதிவிறக்கி கொள்ளுங்கள்.
டாரண்ட் லிங்க்: Cleopatra (1963) DVD RIP
நேரடி லிங்க்ஸ்:
இரண்டு விதமான இணைப்புகளிலும் ஆங்கில சப் டைட்டில் இணைக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக வரலாறு பற்றிய பதிவினை எழுதியிருக்கிறேன். அதுபற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டால் எனது எழுத்துக்களை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
|




