3 December 2010

கனவுதுரத்தி குறிப்புகள் - பாகம் 2

வணக்கம் மக்களே...

கனவுதுரத்தி என்ற வார்த்தைக்கு கனவுகளை, லட்சியங்களை அடைய அயராது பாடுபடுபவன் என்று அர்த்தம் சொல்கின்றனர். ஆனால் எனது இந்த பதிவின் தலைப்பிற்கு அர்த்தம் அதுவல்ல. இதுபற்றி முதல் பாகத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். இருப்பினும் புதியவர்களுக்காக மீண்டும் ஒருமுறை அதே வரிகளை காப்பி பேஸ்ட் செய்கிறேன். எனக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. தூங்கும்போது கனவுகள் ஏதேனும் வந்தால் உடனடியாக நோட்டையும் பேனாவையும் எடுத்து அந்த கனவை எழுதிவிடுவேன். இதுபோல கடந்த வாரம் கண்ட பகல் கனவு ஒன்றினை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.


கனவு கண்ட தேதி: நவம்பர் 25, 2010
கனவு கண்ட நேரம்: காலை 6:00

கனவின்படி நேரம் இரவு 8 மணி. நான் எனது முகம் தெரியாத நண்பன் ஒருவனுடன் சாலையில் நடந்து செல்கிறேன். இருவரும் ஒரு பிரவுசிங் செண்டருக்குள் நுழைகிறோம். தனித்தனி கணினி முன்பு அமர்கிறோம். நான் வலைப்பூ ஒன்றினை என்னை மறந்து படித்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக அந்த அறையின் வெளிச்சம் மங்கலாகிக் கொண்டே போகிறது. என்னைச் சுற்றி அமர்ந்திருந்த மற்ற மனிதர்களும் முகம் தெரியாத அந்த நண்பனும் ஒவ்வொருவராக காணாமல் போவதாக உணர்கிறேன். என்ன நடக்கிறதென்று புரியாமல் கணினிமுன்பிருந்து முகத்தை திருப்பி சுற்றி என்ன நடக்கிறது என்று பார்க்கிறேன். பிரவுசிங் செண்டராக இருந்த அந்த இடம் ஒரு ஏசி பாராக மாறியிருக்கிறது. ஒவ்வொரு டேபிளிலும் இரண்டிரண்டு நண்பர்களாக அமர்ந்து போதையில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நான் இடுப்புக்கு கீழே உடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக அமர்ந்துக்கொண்டிருப்பதை உணர்கிறேன். எனது இந்தக் கோலத்தை பார்த்துதான் சுற்றியிருந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள் என்று எனக்கு நானே எண்ணிக்கொள்கிறேன். உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர்கிறேன். ஆனால் பணம் கொடுக்க மறந்துவிட்டேன். என்னுடைய கிரெடிட் கார்டு பற்றிய விவரங்கள் எல்லாவற்றையும் அந்தக் கடையின் உரிமையாளருக்கு ஏற்கனவே ஒருமுறை தெரிவித்திருக்கிறேன். எனவே அவர் எனது கார்டில் இருந்து எனக்கே தெரியாமல் பணத்தை எடுத்துக்கொள்வாரோ என்று ஒரு வித அச்சம் ஏற்பட்டது. சில தூரம் கடந்து வீட்டிற்குள் நுழைந்தேன். வீட்டில் ஒரே கூட்டமாக இருந்தது. ஒரு அறையில் பெண்கள் எதையோ மறைத்தபடி கூடி நின்றிருந்தனர். அப்போதுதான் எனது தாத்தா இறந்துவிட்டார் என்பதை உணர்ந்தேன்.

தாத்தா இறந்த காட்சி வந்ததும் எனது உள்மனதிற்கு இது உண்மையல்ல கனவுதான் என்று புரிந்துவிட்டது. எனினும் என்ன நடக்கிறது என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் அப்படியே தூங்கி கனவை தொடர முயற்சி செய்தேன். ஆனால் கனவும் தூக்கமும் கலைந்துவிட்டது.

நண்பர் எஸ்.கே சென்ற முறை எனது கனவு ஒன்றிற்கு அருமையாக விளக்கம் கொடுத்திருந்தார். இந்த கனவிற்கும் அவர் சிறந்த முறையில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்காக புனைவுகள் ஏதுமின்றி நான் கண்ட கனவை அப்படியே எழுதியிருக்கிறேன். உங்களிடம் சொல்ல வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. எனது குடும்பத்தினர்களுள் எனக்கு மிகவும் பிடித்தவர் தாத்தா தான். அவர் இருந்து போகிறார் என்றால் அது கனவாக இருந்தாலுமே என்னால் தாங்கிக்கொள்ள இயலாது. அப்படி இருக்கும்போது என் கனவில் எப்படி அப்படிப்பட்ட காட்சி வந்தது என்று புரியவில்லை. மேலும் எனது கனவுகளில் அடிக்கடி நான் இடுப்புக்கு கீழே நிர்வாணமாக அதாவது வெறும் சட்டை மட்டும் அணிந்த நிலையில் (பாலு மகேந்திரா பட ஹீரோயின் போல) இருப்பதாக வருகிறது. இவை இரண்டினையும் தெளிவுப்படுத்தவும்.

பின்குறிப்பு: இந்தக் கனவை நான் எழுதி வைத்துவிட்டு மறுபடியும் தூங்கினேன். அரைமணிநேர தூக்கத்தில் மறுபடியும் ஒரு கனவு வந்தது. அது பதிவுலகம் சம்பந்தப்பட்ட ஒரு கனவு. அதையும் கூடிய விரைவில் எழுதுகிறேன்

எஸ்.கேயின் விளக்கம்:
வணக்கம் நண்பரே! இம்முறையும் என்னால் இயன்ற அளவு கனவை விளக்குகிறேன்!

உங்களின் இக்கனவில் பல விஷயங்கள் கலந்து வந்துள்ளன. முதலில் நண்பருடன் ஒரு பிரவுசிங் செண்டருக்கு செல்கிறார்கள். அங்கே வலைப் பக்கத்தை மெய் மறந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லோரும் மறைந்து விடுகிறார்கள். அவ்விடமே பாராக மாறுகிறது. இது ஒரு சந்தோசத்தை அளிக்கும் இடம். முதலில் இது நீங்கள் வலைப்பூக்களுக்கு அடிமையாகி உள்ளதை சுட்டி காட்டுகிறது, அதன் மீது தீராத பற்று, கைவிட முடியாத நிலையில் இருக்கிறீர்கள். அது உங்களை சுற்றியுள்ள நிஜ உலகத்தை மறக்க செய்கிறது.

அடுத்து அரை நிர்வாணம். நிர்வாணம் தூய்மையான நிலையை குறிக்கிறது. நம் வாழ்வில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம். அதன் சார்பான கவலையை இது குறிக்கிறது. நிர்வாணம் வேறொன்றையும் குறிக்கிறது. அது நீங்கள் எதையோ மற்றவர்களுக்கு வெளிப்படுத்த நினைக்கிறீர்கள். அரை நிர்வாணம் என்பதால் நீங்களை உங்களை முழுமையாக வெளிப்படுத்த விரும்பவில்லை. அதாவது நாம் நம்மை பற்றி ஒரு விஷயத்தை/சில விஷயங்களை இவ்வுலகிற்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். ஆனால் அதனால் மற்றவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்களோ என்ற அச்சமும் உங்களிடம் உள்ளது.

பணம் செலுத்துதல் என்பது பொறுப்பு, மதிப்பு ஆகியவற்றை குறிக்கின்றது. ஆனால் அதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். அதே சமயம் பணம் சம்பந்தபட்ட தகவல் கடைக்காரருக்கு தெரிவதால் ஏதாவது பிரச்சினை நேருமோ என பயப்படுகிறீர்கள். உங்கள் விஷயங்களை தெரிந்து வைத்துள்ள ஒருவரால் உங்களுக்கு பிரச்சினை நேருமோ என கவலைப்படுகிறீர்கள். மேலும் பணம் சம்பந்தமாக சமீபகாலமா வாழ்வில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம்.

கனவில் மற்றொருவரின் மரணம் என்பது நாம் அந்நபரை குறிப்பிடும் ஒரு பண்பு அல்லது உணர்ச்சியை கைவிடுவதை குறிக்கும். உதாரணமாக கனவில் இறப்பவர் ஒரு முன்கோபி என வைத்துக்கொண்டால் நாம் நம் முன்கோப குணத்தை கைவிடுதலை குறிக்கும். மேலும் இறப்பவர் கொண்டுள்ள ஒரு குணம் நம்மிடம் இல்லாததை/முழுமையடையாமல் இருப்பதையும் குறிக்கலாம். இதற்கு நாம் கனவில் இறப்பவரிடம் நமக்கு பிடித்த விஷயம் எது அவரின் சிறப்பம்சம் எது என யோசித்தால் புரிந்து விடும்.

மேலும் இறப்பு இன்னொன்றையும் குறிக்கிறது. குறிப்பாக மிக நெருங்கிய/அன்பு கொண்டுள்ளவரின் இறப்பு என்பது அவர் நம் வாழ்வில் இனிமேல் இருக்க மாட்டார் என்பதை குறிக்கிறது. எனவே அவரில்லாமல் நம் வாழ்வு எப்படி மாறக் கூடும் என்பதை யோசிக்க வேண்டும். அதாவது நம் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை கனவின் இப்பகுதி குறிக்கிறது.

இக்கனவு ஒரு இன்பம், சங்கடம், கவலை, அச்சம் போன்ற உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது. வாழ்வில் சமீப காலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்/ விருப்பங்கள் ஆகியவையே இதற்கு காரணமாக இருக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

45 comments:

Unknown said...

//நான் இடுப்புக்கு கீழே உடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக அமர்ந்துக்கொண்டிருப்பதை உணர்கிறேன்//
இதே போல் எனக்கும் அடிக்கடி வந்திருக்கிறது!
உலக சினிமா அடிக்கடி பார்த்தால் வருமோ? :-)

Chitra said...

////அரைமணிநேர தூக்கத்தில் மறுபடியும் ஒரு கனவு வந்தது. அது பதிவுலகம் சம்பந்தப்பட்ட ஒரு கனவு.////


....getting addicted to the blogs???? :-)

nis said...

பதிவுலகம் சம்பந்தப்பட்ட கனவில் என்னை பற்றியும் ஏதாவது இருக்குதா பிரபா :))

Riyas said...

very interesting...

ம.தி.சுதா said...

சகோரா நம்மளுக்கு விளங்கிக்கொள்ளவே மட்டும் முடிகிறது...
மீண்டும் வருவேன்....

ADMIN said...

நிறைய தூக்கம் கெடுவீர்களா பிரபாகரன்..?

அதனால் விளைந்த விளைவே இது என்று நான் நினைக்கிறேன்...

நீங்கள் சரியான முறையில், சரியான நேரத்திற்கு தூங்கி எழும் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள்..

மனதை இலேசாக வைத்துக்கொள்ளப் பழகுங்கள்..

உங்களின் வேலைபளு அதிகமாக இருக்கலாம்,மன அழுத்தம் கூடியிருக்கலாம்.. இதன் விளைவாக கூட இருக்கலாம்.. மற்றபடி கனவு என்பது மனிதனுக்கு இயற்கையாக எப்போதாவது வரத்தான் செய்யும்..!

ஒரு வேண்டுகோள்: உங்கள் அடைப்பலகையை மாற்றமுயற்சிக்கவும்.. கருமைநிற பின்னணியில் நீண்ட நேரம் நிலைத்து பார்க்கவும் படிக்கவும் வாசகர்கள் சிரம்ப்படுவார்கள்.. (என்னையும் சேர்த்துதான்)

மற்றபடி பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை..! வித்தியாசமானதாகவும் இருக்கிறது..

நன்றி! வாழ்த்துக்கள்..!

Unknown said...

பிரபா ஒரு டைப்பாகத்தான் கனவு காண்கிறீர்கள் .எஸ் .கே சாரின் விளக்கத்தை படிக்க ஆவலாக உள்ளேன்

Anonymous said...

பதிவுலகம் கனவிலும் வந்து இம்சை பண்ணுதா??
அடக் கொடுமையே..

Unknown said...

கனவு காணுங்கள்

- அப்துல் கலாம் சொன்னத நல்லாத்தான்யா fallow பண்றீங்க.

வைகை said...

என்ன பாஸ் நீங்க?! இருக்கதுலே இளைய பதிவர் நீங்க! ஒரு தமன்னா, நமீதா வந்தா பரவாஇல்லை!! உங்க கனவா பாத்தா நீங்க இளைய பதிவரா இருக்க முடியாது போலருக்கே?!!!

Ramesh said...

வெறும் சட்டை போட்ட பிரியாமணி மனசுல நல்லா பதிஞ்சுட்டாங்க போல அதான் அது திரும்பத் திரும்ப கனவுல வருது... நாம ரொம்ப பாசமா இருக்கறவங்களுக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னோ அல்லது எதாவது ஆயிட்டா என்ன பன்றதுன்னோ நம்ம சப்கான்சியஸ் மைண்ட் எப்பவும் பயந்துகிட்டே இருக்கும்.. அதனாலதான் உங்க தாத்தா உங்க கனவுல அப்படி வந்தார்... ஒழுங்கா தூங்கிப் பழகுங்க.. சரியா போயிடும்...

அஞ்சா சிங்கம் said...

பொதுவாக நான் கனவுக்கு அதிக முக்கியம் குடுப்பது இல்லை.
நம் ஆழ் மன ஆசைகளுக்கும் வக்கிரங்களுக்கும் வடிகால் தேடும் மூளையின் முயற்சியே கனவு.
அப்துல்கலாம் கனவு காண சொன்னது படுத்து கொண்டு அல்ல.
லட்சிய கனவு வேறு. மன அழுத்தத்தை குறைக்க தானாக வரும் கனவு வேறு.

எஸ்.கே said...

வணக்கம் நண்பரே! இம்முறையும் என்னால் இயன்ற அளவு கனவை விளக்குகிறேன்!

உங்களின் இக்கனவில் பல விஷயங்கள் கலந்து வந்துள்ளன. முதலில் நண்பருடன் ஒரு பிரவுசிங் செண்டருக்கு செல்கிறார்கள். அங்கே வலைப் பக்கத்தை மெய் மறந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லோரும் மறைந்து விடுகிறார்கள். அவ்விடமே பாராக மாறுகிறது. இது ஒரு சந்தோசத்தை அளிக்கும் இடம். முதலில் இது நீங்கள் வலைப்பூக்களுக்கு அடிமையாகி உள்ளதை சுட்டி காட்டுகிறது, அதன் மீது தீராத பற்று, கைவிட முடியாத நிலையில் இருக்கிறீர்கள். அது உங்களை சுற்றியுள்ள நிஜ உலகத்தை மறக்க செய்கிறது.

அடுத்து அரை நிர்வாணம். நிர்வாணம் தூய்மையான நிலையை குறிக்கிறது. நம் வாழ்வில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம். அதன் சார்பான கவலையை இது குறிக்கிறது. நிர்வாணம் வேறொன்றையும் குறிக்கிறது. அது நீங்கள் எதையோ மற்றவர்களுக்கு வெளிப்படுத்த நினைக்கிறீர்கள். அரை நிர்வாணம் என்பதால் நீங்களை உங்களை முழுமையாக வெளிப்படுத்த விரும்பவில்லை. அதாவது நாம் நம்மை பற்றி ஒரு விஷயத்தை/சில விஷயங்களை இவ்வுலகிற்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். ஆனால் அதனால் மற்றவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்களோ என்ற அச்சமும் உங்களிடம் உள்ளது.

பணம் செலுத்துதல் என்பது பொறுப்பு, மதிப்பு ஆகியவற்றை குறிக்கின்றது. ஆனால் அதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். அதே சமயம் பணம் சம்பந்தபட்ட தகவல் கடைக்காரருக்கு தெரிவதால் ஏதாவது பிரச்சினை நேருமோ என பயப்படுகிறீர்கள். உங்கள் விஷயங்களை தெரிந்து வைத்துள்ள ஒருவரால் உங்களுக்கு பிரச்சினை நேருமோ என கவலைப்படுகிறீர்கள். மேலும் பணம் சம்பந்தமாக சமீபகாலமா வாழ்வில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம்.

கனவில் மற்றொருவரின் மரணம் என்பது நாம் அந்நபரை குறிப்பிடும் ஒரு பண்பு அல்லது உணர்ச்சியை கைவிடுவதை குறிக்கும். உதாரணமாக கனவில் இறப்பவர் ஒரு முன்கோபி என வைத்துக்கொண்டால் நாம் நம் முன்கோப குணத்தை கைவிடுதலை குறிக்கும். மேலும் இறப்பவர் கொண்டுள்ள ஒரு குணம் நம்மிடம் இல்லாததை/முழுமையடையாமல் இருப்பதையும் குறிக்கலாம். இதற்கு நாம் கனவில் இறப்பவரிடம் நமக்கு பிடித்த விஷயம் எது அவரின் சிறப்பம்சம் எது என யோசித்தால் புரிந்து விடும்.

மேலும் இறப்பு இன்னொன்றையும் குறிக்கிறது. குறிப்பாக மிக நெருங்கிய/அன்பு கொண்டுள்ளவரின் இறப்பு என்பது அவர் நம் வாழ்வில் இனிமேல் இருக்க மாட்டார் என்பதை குறிக்கிறது. எனவே அவரில்லாமல் நம் வாழ்வு எப்படி மாறக் கூடும் என்பதை யோசிக்க வேண்டும். அதாவது நம் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை கனவின் இப்பகுதி குறிக்கிறது.

இக்கனவு ஒரு இன்பம், சங்கடம், கவலை, அச்சம் போன்ற உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது. வாழ்வில் சமீப காலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்/ விருப்பங்கள் ஆகியவையே இதற்கு காரணமாக இருக்கலாம்.

அருண் பிரசாத் said...

எஸ் கே விளக்கம் சூப்பர்

மங்குனி அமைச்சர் said...

எண்ணங்களின் குழப்பம் தான் கனவு ............. அதை நினைச்சு குழப்பிக்காதிங்க ......

pichaikaaran said...

கனவு என்பது பெர்சனல் விஷ்யம்.. அதை பகிர்ந்து கொள்ள அசாத்திய துணிச்சல் வேண்டும்.. நல்ல மனமும் வேண்டும்..
இரண்டும் ஒன்று சேரப்பட்ட உங்களை பாராட்டுகிறேன்

எப்பூடி.. said...

இந்த உலகத்திலேயே, ஏன்? நம்ம இந்தியாவிலேயே, ஏன்? நம்ம தமிழ் நாட்டிலேயே கனவு காணிறதை குறிச்சு வைக்கிற முதல் மற்றும் ஒரே வித்துவான் பிரபாகருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நீங்க தூங்கிறதால கனவு காணுகிறீர்களா ? இல்லை கனவு காணுறதுக்காகவே தூங்கிறீங்களா ? :-)

'பரிவை' சே.குமார் said...

மனதை இலேசாக வைத்துக்கொள்ளப் பழகுங்கள்..
நல்ல கனவு வரட்டும்...

டிலீப் said...

நல்ல கனவு

தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html

அந்நியன் 2 said...

இளைஞர்களை அப்துல்கலாம் கனவு காணச் சொன்னது சரியாத்தான் போச்சு...!!!

sinmajan said...

கனவுகளின் உலகம் எனும் சிக்மன் பிராயிட் இன் பிரபல புத்தகம் ஒன்றுள்ளது..
கிடைத்தால் படித்துப்பாருங்கள்

அன்பரசன் said...

//பிரவுசிங் செண்டராக இருந்த அந்த இடம் ஒரு ஏசி பாராக மாறியிருக்கிறது. //

அதானே பாத்தேன்.
என்னடா இன்னும் சரக்கு வரலையேன்னு...

THOPPITHOPPI said...

கனவுல எப்படி பாஸ் டைம் பார்த்திங்க

அடுத்து பதிவுலக கனவு, ஒட்டு வாங்குரமாதிரியா?

Prabu Krishna said...
This comment has been removed by the author.
Prabu Krishna said...

இங்க வந்து விருது வாங்கிட்டு போங்க!!!!!


http://balepandiya.blogspot.com/2010/12/blog-post_03.html

Philosophy Prabhakaran said...

@ ஜீ..., Chitra, nis, Riyas, ம.தி.சுதா, தங்கம்பழனி, நா.மணிவண்ணன், இந்திரா, விக்கி உலகம், வைகை, பிரியமுடன் ரமேஷ், மண்டையன், எஸ்.கே, அருண் பிரசாத், மங்குனி அமைச்சர், சசிகுமார், பார்வையாளன், எப்பூடி.., சே.குமார், டிலீப், அந்நியன் 2, sinmajan, அன்பரசன், THOPPITHOPPI, பலே பாண்டியா

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ ஜீ...
// இதே போல் எனக்கும் அடிக்கடி வந்திருக்கிறது!
உலக சினிமா அடிக்கடி பார்த்தால் வருமோ? :-) //

அட அப்படியா... எனக்கு மட்டும்தான் இப்படி என்று நினைத்திருந்தேன்... உங்களுக்குமா... நீங்களும் பாலு மகேந்திரா படங்களை விரும்பி பார்ப்பீர்களா...? :)

Philosophy Prabhakaran said...

@ Chitra
// ....getting addicted to the blogs???? :-) //

சரியா சொன்னீங்க மேடம்... அதேதான்...

Philosophy Prabhakaran said...

@ nis
// பதிவுலகம் சம்பந்தப்பட்ட கனவில் என்னை பற்றியும் ஏதாவது இருக்குதா பிரபா :)) //

இல்லை நண்பரே... அந்த கனவில் பதிவர்கள் யாரும் வரவில்லை... ஆனால் பதிவுலகம் சம்பந்தப்பட்டது...

Philosophy Prabhakaran said...

@ தங்கம்பழனி
// நிறைய தூக்கம் கெடுவீர்களா பிரபாகரன்..? //
ஆமாம் நண்பரே... நான் தொடர்ச்சியாக 8 மணிநேரம் தூங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன... இப்பொழுதெல்லாம் தவணை முறையிலேயே தூங்கி வருகிறேன்...

// உங்கள் அடைப்பலகையை மாற்றமுயற்சிக்கவும்.. கருமைநிற பின்னணியில் நீண்ட நேரம் நிலைத்து பார்க்கவும் படிக்கவும் வாசகர்கள் சிரம்ப்படுவார்கள்.. //
எனக்கென்னவோ கறுப்பு நிறத்தின் மீது தனி பாசம்...

Philosophy Prabhakaran said...

@ வைகை
// ஒரு தமன்னா, நமீதா வந்தா பரவாஇல்லை!! உங்க கனவா பாத்தா நீங்க இளைய பதிவரா இருக்க முடியாது போலருக்கே?!!! //

அந்த மாதிரி கில்பஜங் கனவுகளும் அடிக்கடி வரத்தான் செய்கின்றன... ஆனால் தமன்னாவும் நமீதாவும் வருவதில்லை... எனது விருப்ப நடிகையான ப்ரியாணி... ச்சே சாரி... ப்ரியா மணி அடிக்கடி வருவார்...

Philosophy Prabhakaran said...

@ பிரியமுடன் ரமேஷ்
// வெறும் சட்டை போட்ட பிரியாமணி மனசுல நல்லா பதிஞ்சுட்டாங்க போல //
சரியா சொன்னீங்க...

// நாம ரொம்ப பாசமா இருக்கறவங்களுக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னோ அல்லது எதாவது ஆயிட்டா என்ன பன்றதுன்னோ நம்ம சப்கான்சியஸ் மைண்ட் எப்பவும் பயந்துகிட்டே இருக்கும்.. //
ஆமாம் அப்படித்தான் போல...

Philosophy Prabhakaran said...

@ சசிகுமார்
எனது தளத்தை நீங்கள் பின்தொடர ஆரம்பிததிலும் பின்னூட்டம் இட்டதிலும் மட்டற்ற மகிழ்ச்சி... தொடர்ந்து வருகை தாருங்கள்... நன்றி...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// இந்த உலகத்திலேயே, ஏன்? நம்ம இந்தியாவிலேயே, ஏன்? நம்ம தமிழ் நாட்டிலேயே கனவு காணிறதை குறிச்சு வைக்கிற முதல் மற்றும் ஒரே வித்துவான் பிரபாகருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். //

யார் உங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் சொன்னது... எழுத்தாளர் சுஜாதா கூட தனது கனவுகளை இதுபோல எழுதி வைப்பவர் என்று அறிந்திருக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ sinmajan
// கனவுகளின் உலகம் எனும் சிக்மன் பிராயிட் இன் பிரபல புத்தகம் ஒன்றுள்ளது..
கிடைத்தால் படித்துப்பாருங்கள் //

படிக்க முயல்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ டிலீப்
// தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html //

உங்கள் விருதுக்கு மிக்க நன்றி டிலீப்...

Philosophy Prabhakaran said...

@ THOPPITHOPPI
// கனவுல எப்படி பாஸ் டைம் பார்த்திங்க //
டைம் பார்க்கவில்லை... உணர்ந்தேன்...

// அடுத்து பதிவுலக கனவு, ஒட்டு வாங்குரமாதிரியா? //
இல்லை... உதை வாங்குறா மாதிரி.... (நான் இல்லை... நீங்க...)

Philosophy Prabhakaran said...

@ பலே பாண்டியா
// இங்க வந்து விருது வாங்கிட்டு போங்க!!!!! //

அடடே... விருதெல்லாம் கொடுப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா எப்படியாவது மூளையை கசக்கி பிழிஞ்சு எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருப்பேனே...

சரி இருக்கட்டும்... விருதுக்கு நன்றி...

Unknown said...

கனவுகள் நம் எண்ணங்கள்,நினைவுகள்,ஆசைகள்,திட்டங்கள்தான்.நிஜ வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவை, கனவில் வருகிறது.சுருக்கமாக நமது கனவில் நாம்தான் ஹீரோ.எனக்கு இதெல்லாம் புரிகிறது,ஆனால் எனக்கு வரும் ஒரு கனவுக்கு அர்த்தம் யாராவது கூறுங்களேன்?திடீரென்று ஆகாயத்தில் பறக்கிறேன்,என் உறவினர்,நண்பர்களை கூவி அழைக்கிறேன்?நான் பறப்பதை அவர்கள் பார்க்கவேண்டும் என.ஆனால் சாதாரணமா பறக்கும் காக்காகூட அப்போது பார்த்து இருப்பதில்லை.௨.எதோ வழுக்கியத்தை போல கீழே விழுவது போலவும் பல முறை கனவு வந்ததுண்டு.

சிவராம்குமார் said...

உங்கள் கனவும் எஸ்.கே விளக்கமும் சுவாரசியம்!

Philosophy Prabhakaran said...

@ thamizhan
// எனக்கு வரும் ஒரு கனவுக்கு அர்த்தம் யாராவது கூறுங்களேன்...? //

உங்களது இந்த பின்னூட்டத்தை எஸ்.கேயின் தளத்திற்கு சென்று இடுங்கள்... நிச்சயம் உங்களுக்கு பதிலும் பலனும் கிடைக்கும்...

@ சிவா என்கிற சிவராம்குமார்
நன்றி...

Philosophy Prabhakaran said...

எஸ்.கேயின் பின்னூட்டத்தை இந்த பதிவில் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்...

சி.பி.செந்தில்குமார் said...

கனவு காணூம் வாழ்க்கை யாவும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கனவே கலையாதே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சட்டு புட்டுன்னு ஒரு பிகர செட் பண்ணுங்க, அப்புறம் உக்காந்துக்கிட்டே கனவு காணலாம்..ஹி...ஹி...!