28 December 2010

கனவுக்கன்னி 2010 – பாகம் 1

முஸ்கி: இது முழுக்க முழுக்க என்னுடைய தனி நபர் ரசனையை வைத்து தயார் செய்யப்பட்ட லிஸ்ட். இது நபருக்கு நபர் மாறுபடலாம்.

மயிரிழையில் லிஸ்டில் இருந்து தவறிப்போன நடிகைகள்: (யாரென்று கண்டுபிடிங்கள் பார்ப்போம்):
-          கலைஞர் வீட்டு மருமகள் என்று கிசுகிசுக்கப்பட்ட நடிகை
-          சிகரெட் வாசம் விரும்பும் நடிகை

சரி, இப்போ கவுண்டவுனுக்கு போவோமா...

10. தங்கதாரகை தமன்னா
அது எப்படி சுறாவிலும் தில்லாலங்கடியில் லூசுத்தனமாக வந்துப்போன நடிகை பையா படத்தில் மட்டும் அழகாக தெரிந்தார் என்று புரியவில்லை. எல்லாம் இயக்குனர் செய்த மாயமோ. இருப்பினும் மேடமோட சீசன் முடிஞ்சுபோச்சு என்றே எண்ணுகிறேன்.

9. மிஸ் மெட்ராஸ் த்ரிஷா
சிம்ரன், ஜோதிகா போல ஒரு ஆல்-டைம் பேவரிட் நடிகை. ஆடி அடங்கியிருந்தவரை கெளதம் மேனன் விண்ணைத்தாண்டி வரவைத்திருக்கிறார். சிம்புவுடன் ஜோடி போட்டாலும் கமலுடன் ஜோடி போட்டாலும் பொருத்தமாகவே இருக்கும்.

8. வெளிப்படை + வெகுளித்தனம் அஞ்சலி
தமிழ் சினிமாவில் நடிக்கவும் தெரியும் கவர்ச்சி காட்டவும் தெரியும் என்று சொல்லப்படும் சிற்சில நடிகைகளில் இவரும் ஒருவர். அங்காடித் தெருவில் அலட்டல் இல்லாமல் நடித்தவர் மகிழ்ச்சி படத்தில் குளிர்ச்சி காட்டி நம்மை மகிழ்ச்சி ஆக்கியவர்.

7. சமத்துப் பொண்ணு சமந்தா
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பார்த்தபோதே யார் சார் இந்த பிகரு...? என்று கேட்க வைத்த நடிகை. நடிகையின் முதல் படமான மாஸ்கோவின் காவேரி தாமதமாக வந்து தோல்வியடைந்தது கசப்பு எனினும் அம்மையார் காட்டில் மழை.

6. ஆயிரத்தில் ஒருத்தி ஆண்ட்ரியா
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென் ரொம்பவும் வெளிப்படையாக நடித்திருந்தாலும் நம் மணம் கவர்வதென்னவோ அம்மணி ஆண்ட்ரியா தான். அதிலும் உம்மேல ஆசதான்... தண்ணி அடிச்சிட்டு ஆடிய ஆட்டம் தனிச்சிறப்பு.

முதல் ஐந்து இடங்களை பிடித்த அழகிகளை பதிவின் அடுத்த பாகத்தில் பார்ப்போம். யார் அந்த ஐந்து அழகிகள் என்று யூகியுங்கள் பார்க்கலாம்.

டிஸ்கி 1: முதலிடம் பிடித்தவரை மட்டும் யாரும் கெஸ் பண்றதுக்கு சான்ஸே இல்லை. அவர் ஒரு அரிய அழகி. (க்ளு: 2009ம் ஆண்டு அறிமுகமாகி 2010ம் ஆண்டில் இரண்டு படங்கள் நடித்திருக்கிறார்)

டிஸ்கி  2: படங்களை ரைட் க்ளிக்கி தனி விண்டோவில் பார்த்தால் பெரிதாக தெரியும்.

டிஸ்கி  3: முந்தய டிஸ்கியில் டபுள் மீனிங் எதுவுமே இல்லை.

டிஸ்கி 4: நாங்களும் நாலஞ்சு டிஸ்கி போடுவோமில்ல...

Post Comment

51 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

vadai

எப்பூடி.. said...

கனவு என்றால் என்னவென்று தெரியும், நீங்க கூட அதை டயரியில குறிச்சு வைப்பீங்க :-) கன்னியின்னா என்ன?

தமிழ்வாசி பிரகாஷ் said...

i think mynaa actress amala pal in first place

settaikkaran said...

ஸ்ரேயா இல்லை; உங்க கூட ’டூ’!

settaikkaran said...

// பத்தினி வேஷம் போட்ட நடிகை//

நண்பரே! முதலில் இதைக்கடந்து போய்விட்டேன். ஆனால், இதை சுட்டிக்காட்டுவது சரியென்று பட்டதால், இன்னொரு பின்னூட்டம்.

உலகத்தில் பெரும்பாலோனோர்கள் போடுவது வேஷம் தான். நடிப்புத்துறையில் இருப்பவர்களுக்கு அது முழுநேரத்தொழில்!

முதலில் ஆண்கள் ஒழுங்காக இருந்தால், பெண்கள் பத்தினியாக இருப்பது மிகவும் எளிது. பத்தினி என்ற ஒரு வார்த்தையை பெண்ணுக்கு அளவுகோலாக வைத்து விட்டு, ஆண்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.

உதாரணத்துக்கு, ’கனவுக்கன்னி’ என்று பிரபாகரன் இடுகை போட்டாலும் பிரச்சினையில்லை. அதே சமயம் ’கனவுக்கதாநாயகர்கள்,’ என்று ஒரு பெண் இடுகைபோட்டால், அவளை சுலபமாக கொச்சைப்படுத்தி விடுகிறோம். பத்தினி என்ற சொல்லுக்கு எவ்வளவு சுலபமான பொருள் கவனித்தீர்களா?

நான் பல விஷயங்களில் முற்போக்கு விரோதி; ஆனால், பெண்களை மட்டும் பத்தினி என்ற வார்த்தையின் அடிப்படையில் அணுகுவதை வெறுக்கிறேன். ஒழுக்கம் ஆண்-பெண் இருபாலருக்குமே வேண்டும்.

இந்தப் பதிவில் நீங்கள் உபயோகித்துள்ள சில சொற்கள், வருத்தமளிக்கிறது. நடிகைகளும் பெண்கள்; மனுஷிகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், இப்பின்னூட்டத்தை நீங்கள் நீக்கி விடலாம்.

சேலம் தேவா said...

//கலைஞர் வீட்டு மருமகள் என்று கிசுகிசுக்கப்பட்ட நடிகை
சிகரெட் வாசம் விரும்பும் நடிகை
பத்தினி வேஷம் போட்ட நடிகை//

பிரபாகர் எப்பயும் போல்டுன்னு சொல்லுவாங்க..!! அவரும் இப்படி கிசுகிசு போட ஆரம்பிச்சிட்டாரே..!!

//“தங்கதாரகை” “மிஸ் மெட்ராஸ்”
“சமைஞ்ச பொண்ணு” “ஆயிரத்தில் ஒருத்தி”//

கலைஞரை விட நல்லா பட்டம் சூட்றீங்க..!! :-)

//நாங்களும் நாலஞ்சு டிஸ்கி போடுவோமில்ல... //

போடுங்க போடுங்க..!! :-)

THOPPITHOPPI said...

///கனவு என்றால் என்னவென்று தெரியும், நீங்க கூட அதை டயரியில குறிச்சு வைப்பீங்க :-) கன்னியின்னா என்ன?///

hahaha

sathishsangkavi.blogspot.com said...

பிரபாகர் கலக்கீட்டிங்க... நல்லாயிருக்கு...

'பரிவை' சே.குமார் said...

பரவாயில்லை... ரொம்ப மெனக்கெட்டு இருக்கீங்க.

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
சேட்டை... உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து பதிவின் சில சொற்களை மாற்றவும் நீக்கவும் செய்திருக்கிறேன்... இரவு இதுகுறித்து விரிவான பின்னூட்டமிடுகிறேன்... நன்றி...

Unknown said...

ஸ்டில் கள் என்னை கவராததால் வெளி நடப்பு செய்கிறேன் .

அருண் பிரசாத் said...

ரைட்டு... சரி நாடோடிகள்ல நடிச்ச அந்த நடிகை பேர் என்ன? ஊமைனு கேள்வி பட்டேன்....

நமக்கு இதுல நாலெட்ஜ் ரொம்ப கம்மி

Unknown said...

:-)

அஞ்சா சிங்கம் said...

அடுத்த ஐந்து பேர் ......
பாவனா ........
அசின்..................
நயன்தாரா.................
ஜெனிலியா.............
அனுஷ்கா............
என்று நினைக்கிறேன் .

நமிதாவை சேர்க்கவில்லை என்றால் கண்டனம் தெரிவிக்கபடும்....
(நமிதா முன்னேற்ற கழகம்)................................................

டிலீப் said...

அருமை , சூப்பர், கலக்கல்

தினேஷ்குமார் said...

கலக்குங்க பிரபா

பாலா said...

அனுஷ்கா
அமலா பால்(இவரா முதலிடம்?)
காஜல் அகர்வால்
சுனைனா
ஓவியா
ஐஸ்வர்யாராய்

பாலா said...

என்னுடைய நாயகிகள் (இந்த வருடம்)

அமலா பால்
சமந்தா
காஜல் அகர்வால்
ஓவியா

இவர்கள் இரண்டில் இருந்து ஐந்து இடங்கள் பிடித்தவர்கள்.

(முதலிடம் எப்போதுமே நம்ம தலைவிக்குத்தான்)

Speed Master said...

அருமை

Anonymous said...

hey man your kanavukanni post is nice.
for more pictures if u want in HD.. visit

www.picx.in

dont miss it..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்பர் 1 அனுஷ்காவுக்கு மட்டும் கொடுக்கலென்னா அப்பூறம் இருக்கு.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாப் 5-ல் உள்ள நடிகைகள்
5. நமீதா
4. முமைத்கான்
3. மும்தாஜ்
4. ரகசியா
1. குஷ்பூ

பனித்துளி சங்கர் said...

முதல் ஐந்து இடங்களில் யார் என்று நான் அடுத்தப் பதிவில் வந்து தெரிந்துகொள்கிறேன்

பாவாடை வீரன்... said...

வர புது வருடத்தில ஏதோ ஒரு முடிவோட இருப்பீங்க போலும்...
-----புது நெல்லு... புது நாத்து...

சி.பி.செந்தில்குமார் said...

aahaa namma items

சி.பி.செந்தில்குமார் said...

>>>மேடமோட சீசன் முடிஞ்சுபோச்சு என்றே எண்ணுகிறேன்.thamana season not end.

சி.பி.செந்தில்குமார் said...

டிஸ்கி 3: முந்தய டிஸ்கியில் டபுள் மீனிங் எதுவுமே இல்லை.

s. because prabhaa is good boy. ha ha ha

சி.பி.செந்தில்குமார் said...

டிஸ்கி 4: நாங்களும் நாலஞ்சு டிஸ்கி போடுவோமில்ல...

ha ha ha kaasaa panamaa . podungka

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

pichaikaaran said...

ம்ம்ம் . சூப்பர்

ரஹீம் கஸ்ஸாலி said...

பிரபா உங்களின் பதிவான கல்லா கட்டுமா காவலன் பதின் அப்படியே வேறொரு தளத்தில்.பிரசுரிக்க உங்களிடம் அனுமதி பெற்றார்களா என்று தெரியவில்லை. பார்க்க....
http://ajith-vijay.blogspot.com/2010/12/blog-post_5295.html

செங்கோவி said...

பதிவை சுட்டுட்டாங்களா?..ஓ.கே......பிரபல பதிவர் பிரபாகரன் வாழ்க!

----செங்கோவி
நானா யோசிச்சேன் (டிசம்பர்-2010)

Philosophy Prabhakaran said...

@ ரஹீம் கஸாலி, எப்பூடி.., தமிழ்வாசி - Prakash, சேட்டைக்காரன், சேலம் தேவா, THOPPITHOPPI, சங்கவி, சே.குமார், நா.மணிவண்ணன், அருண் பிரசாத், இரவு வானம், மண்டையன், டிலீப், dineshkumar, பாலா, Speed Master, www.picx.in, பன்னிக்குட்டி ராம்சாமி, !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫, ....., சி.பி.செந்தில்குமார், T.V.ராதாகிருஷ்ணன், பார்வையாளன், ஜீ..., செங்கோவி

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ தமிழ்வாசி - Prakash
// i think mynaa actress amala pal in first place //

இல்லை நண்பரே... அமலா பால் கிடையாது... அமலா பால் 2010ல் தான் அறிமுகமானார்... நான் சொல்லும் நடிகை 2009ம் ஆண்டிலேயே அறிமுகமாகிவிட்டார்... இந்த ஆண்டு இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்...

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
// ஸ்ரேயா இல்லை; உங்க கூட ’டூ’! //

TOP 25 போட்டாக் கூட என்னுடைய லிஸ்டில் ஸ்ரேயா வரமாட்டார் :)))

// முதலில் ஆண்கள் ஒழுங்காக இருந்தால், பெண்கள் பத்தினியாக இருப்பது மிகவும் எளிது. பத்தினி என்ற ஒரு வார்த்தையை பெண்ணுக்கு அளவுகோலாக வைத்து விட்டு, ஆண்கள் தப்பித்துக்கொள்ள முடியாது //

சீதை வேடத்தில் நடித்த நடிகை என்று குறிப்பிடவே அப்படியொரு வார்த்தையை பயன்படுத்தினேன்... மற்றபடி நீங்கள் சொல்வதுபோல நான் ஆழமாக சிந்திக்க தவறிவிட்டேன் நண்பரே...

// உதாரணத்துக்கு, ’கனவுக்கன்னி’ என்று பிரபாகரன் இடுகை போட்டாலும் பிரச்சினையில்லை. அதே சமயம் ’கனவுக்கதாநாயகர்கள்,’ என்று ஒரு பெண் இடுகைபோட்டால், அவளை சுலபமாக கொச்சைப்படுத்தி விடுகிறோம். //

அவ்வாறு ஒரு பெண் இடுகையிட்டால் நீங்களோ நானோ நிச்சயம் கொச்சைப்படுத்த மாட்டோம்...

நீங்களும் சேலம் தேவாவும் குறிப்பிட்ட சில வரிகளை மேற்கோள் காட்டி பின்னூட்டமிடாமல் இருந்திருக்கலாம்...

Philosophy Prabhakaran said...

@ சேலம் தேவா
// பிரபாகர் எப்பயும் போல்டுன்னு சொல்லுவாங்க..!! அவரும் இப்படி கிசுகிசு போட ஆரம்பிச்சிட்டாரே..!! //

கிசுகிசுவெல்லாம் இல்லை... ச்சும்மா வாசகர்களுக்கு ஒரு வார்த்தை விளையாட்டு...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// ஸ்டில் கள் என்னை கவராததால் வெளி நடப்பு செய்கிறேன் //

யோவ் இதுக்கு மேல என்கிட்டே இருந்து என்ன எதிர்பாக்குறீங்க... இருக்குரதுலையே பேஸ்ட் ஸ்டில்ஸ் தேடித் பிடிச்சு போட்டிருக்கேன்... சரிவிடுங்க இரண்டாவது பாகத்தில் உங்க ஆசையை நிறைவேத்திடலாம்...

Philosophy Prabhakaran said...

@ அருண் பிரசாத்
// ரைட்டு... சரி நாடோடிகள்ல நடிச்ச அந்த நடிகை பேர் என்ன? ஊமைனு கேள்வி பட்டேன்.... //

அவங்களோட பெயர் அபிநயா... ஆனா பாருங்க முதல் படத்தில் இருந்தே அவங்க மேல ஒரு தங்கச்சி பீல் வந்துடுச்சு அதனால ரசிக்க முடியல...

// நமக்கு இதுல நாலெட்ஜ் ரொம்ப கம்மி //

நாங்க மட்டும் என்ன மெட்ராஸ் யூனிவர்சிட்டில டிகிரி படிச்சிட்டா வந்திருக்கோம்...

Philosophy Prabhakaran said...

@ மண்டையன்
// அடுத்த ஐந்து பேர் ......
பாவனா ........
அசின்..................
நயன்தாரா.................
ஜெனிலியா.............
அனுஷ்கா............
என்று நினைக்கிறேன் //

என்ன நீங்க சரியான ஆண்டி ஹீரோவா இருப்பீங்க போல இருக்கே... நீங்க சொன்னதுல ஒருத்தர் கூட என்னுடைய முதல் ஐந்தில் இல்லை என்று என்னும்போது சிரிப்பு சிரிப்பாக வருகிறது... Better luck next time...

// நமிதாவை சேர்க்கவில்லை என்றால் கண்டனம் தெரிவிக்கபடும்....
(நமிதா முன்னேற்ற கழகம்)... //

தெரிவிச்சுக்கோங்க... கண்டிப்பா அவங்களை எல்லாம் நம்ம லிஸ்டில் சேர்க்க முடியாது...

Philosophy Prabhakaran said...

@ பாலா
// அனுஷ்கா
அமலா பால்(இவரா முதலிடம்?)
காஜல் அகர்வால்
சுனைனா
ஓவியா
ஐஸ்வர்யாராய் //

நீங்கள் சொன்ன ஆறு பேரில் மூணு பேர் என்னுடைய முதல் ஐந்து பட்டியலில் இருக்கிறார்கள்...

// என்னுடைய நாயகிகள் (இந்த வருடம்)

அமலா பால்
சமந்தா
காஜல் அகர்வால்
ஓவியா //

உங்களுடைய லிஸ்டும் சிறப்பாகவே இருக்கிறது... அதிலும் என் லிஸ்டுடன் அருமையாக ஒத்துப்போகிறது...

// (முதலிடம் எப்போதுமே நம்ம தலைவிக்குத்தான்) //

அடடே... உங்க தலைவி என்னுடைய லிஸ்டில் இல்லையே...

Philosophy Prabhakaran said...

@ www.picx.in
// hey man your kanavukanni post is nice.
for more pictures if u want in HD.. visit

www.picx.in

dont miss it.. //

நீங்கள் சொல்லவே தேவையில்லை... நான் அவ்வப்போது indli images தளத்தின் மூலமாக உங்கள் தளத்திற்கு வருகை தந்துக்கொண்டுதான் இருக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நம்பர் 1 அனுஷ்காவுக்கு மட்டும் கொடுக்கலென்னா அப்பூறம் இருக்கு.........! //

அடடே நம்பர் ஒன் பொசிஷன் அந்த ஆண்ட்டிக்கு இல்லையே...

// டாப் 5-ல் உள்ள நடிகைகள்
5. நமீதா
4. முமைத்கான்
3. மும்தாஜ்
4. ரகசியா
1. குஷ்பூ //

அங்கிள் என்ன இது... எல்லாம் உங்க வயசு நடிகைகள் பேரையா சொல்றீங்க...

Philosophy Prabhakaran said...

@ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫
// முதல் ஐந்து இடங்களில் யார் என்று நான் அடுத்தப் பதிவில் வந்து தெரிந்துகொள்கிறேன் //

தாரளாம வாங்க நண்பரே...

Philosophy Prabhakaran said...

@ .....
// வர புது வருடத்தில ஏதோ ஒரு முடிவோட இருப்பீங்க போலும்...
-----புது நெல்லு... புது நாத்து... //

இதுல எதுவும் உள்குத்து இல்லையே...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// thamana season not end //

ம்ம்ம்... பொறுத்திருந்து பார்ப்போம்...

// டிஸ்கி 4: நாங்களும் நாலஞ்சு டிஸ்கி போடுவோமில்ல...

ha ha ha kaasaa panamaa . podungka //

ஹலோ... உங்களைத்தான் கலாய்ச்சிருக்கேன்... தெரியலையா...

என்ன இன்னைக்கு தொறை ஒரே இங்கிலிபீசா பேசுறீங்க...

Philosophy Prabhakaran said...

@ ரஹீம் கஸாலி
// பிரபா உங்களின் பதிவான கல்லா கட்டுமா காவலன் பதின் அப்படியே வேறொரு தளத்தில்.பிரசுரிக்க உங்களிடம் அனுமதி பெற்றார்களா என்று தெரியவில்லை. பார்க்க.... //

தகவல் கொடுத்ததற்கு மிக்க நன்றி நண்பா... அவங்க அனுமதி எல்லாம் வாங்கலையே... இருங்க நான்போய் என்னன்னு பாக்குறேன்...

Philosophy Prabhakaran said...

@ செங்கோவி
// பதிவை சுட்டுட்டாங்களா?..ஓ.கே......பிரபல பதிவர் பிரபாகரன் வாழ்க! //

ஏன் இந்த கொலைவெறி... இதையும் நீங்களாத்தான் யோசிச்சீங்களா...?

வருண் said...

***இது முழுக்க முழுக்க என்னுடைய தனி நபர் ரசனையை வைத்து தயார் செய்யப்பட்ட லிஸ்ட். இது நபருக்கு நபர் மாறுபடலாம்.***

தமன்னா எனக்கு அட்ராக்டிவாவே தோனுவதில்லை. எனிவே, முதல் அஞ்சு என்னனு பார்க்கலாம் :)

Unknown said...

"கமான் கமான் காமாட்சி" ok

Jayadev Das said...

உங்களோட கனவு பன்னிகள் சாரி... கனவு கண்ணிகள் எல்லோரும் பார்க்க ஷோக்கா இருக்காங்க. ஹி..ஹி..ஹி..ஹி..

Anonymous said...

அனுஷ்கா ஷெட்டி ஹாட் ஃபிகர்