26 December 2010

மன்மதன் அம்பு – கேள்விக்குறியா..? ஆச்சர்யக்குறியா...?

வணக்கம் மக்களே...

கொஞ்சம் லேட் விமர்சனமே. நேற்றுதான் பார்த்தேன். பாசிடிவ் விமர்சனம் எழுதுவதா...? நெகடிவ் விமர்சனம் எழுதுவதா....? என்று சத்தியமாக தெரியவில்லை. எனவே என் எண்ணத்தை அப்படியே பதிவு செய்கிறேன். அது எப்படிப்பட்ட விமர்சனம் என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

திரைக்கு முன்...
திரையரங்கத்திற்குள் நுழையும்போது சூர்யா பாடல் உட்பட பத்துநிமிட படம் முடிந்திருந்தது. அதைவிட பெரிய காமெடி, திரையரங்கில் வெறும் ஆறு பேர் மட்டுமே இருந்தார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா...? ஆனால் உண்மையில் அதுதான் நடந்தது. மூன்று அரங்கம் கொண்ட அம்பத்தூர் முருகன் காம்ப்லெக்சில் காலை 9 மணிக்காட்சிக்கு சென்றிருந்தோம். நாங்கள் அரங்கம் மாறி அமர்ந்துவிட்டோம் என்றே எண்ணுகிறேன். மொத்தத்தில் அறுநூறு பேர் அமர்ந்து படம் பார்க்கும் இடத்தில் நாங்கள் ஆறு பேர் மட்டுமே அமர்ந்து படம் பார்த்தோம். இடைவேளை கூட விடாமல் தொடர்ச்சியாக ரீல் ஒட்டிவிட்டார்கள். நடுவில் ஒருமுறை மட்டும் சிறுத்தை ட்ரைலர் காண்பிக்கப்பட்டது.

சிறுத்தை முன்னோட்டம்
மறுபடியும் ஒரு போலீஸ் கதை. அண்ணனின் காக்க காக்க, சிங்கம் போன்ற படங்களை எல்லாம் ஒரே படத்தில் தம்பி தூக்கி சாப்பிட்டுவிடுவார் போல. அப்படி ஒரு விறைப்பு நம்ம சிறுத்தைகிட்ட. (தேள் எதுவும் கொட்டக்கூடாத இடத்தில் கொட்டிடுச்சு போல). அதுலயும் டபுள் ஆக்ஷன். இன்னொருவர் வழக்கம்போல தமிழ்சினிமாவின் வேலைவெட்டி இல்லாத இளைஞன். தெலுங்கு விக்ரமாற்குடு ரீமேக்காம். வெளங்கிடும்.

சரி இப்போ நம்ம மன்மதன் அம்புவுக்கே போவோம்...

கதைச்சுருக்கம்
ஏற்கனவே பல வலைப்பூக்களில் படித்த அதே வாடிப்போன கதைதான். அதாவது நடிகை நிஷாவும் பிரபல தொழிலதிபர் மதனகோபாலும் காதலிக்கிறாங்க. அவர்கள் காதல், திருமணத்தை நெருங்கும் வேளையில் மதனகோபால் நிஷாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு மேஜர் மன்னார் மூலமாக அவரை வேவு பார்க்கிறார். தனது பொருளாதார சூழ்நிலை காரணமாக மேஜர் மன்னார் கொஞ்சம் தகிடுதத்தோம் போட மதனகோபாலும் நடிகை நிஷாவும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.

இதில் மேஜர் மன்னார் அவரது மனைவியை விபத்தில் இழந்த கதை, அந்த விபத்துக்கு காரணம் யார், புற்றுநோயால் அவதிப்படும் மேஜர் மன்னாரின் நண்பர், நடிகை நிஷாவின் தோழி தீபாவின் குடும்பம், மதனகோபாலின் அத்தைப்பெண் சுனந்தா என்று சில கிளைக்கதைகள்.

முக்கிய நடிகர்கள்
- மேஜர் மன்னார் கதாப்பாத்திரத்தில் கமல். வழக்கமான கமல் படங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் கமலின் டாமினேஷன் ரொம்பவும் குறைவே. அடக்கி வாசித்திருக்கிறார். கமல் அறிமுகமாகும் காட்சி தவிர்த்து சண்டைக்காட்சி என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. தகிடுதத்தோம் பாடலில் கமல் போட்டது ஒரே ஒரு ஸ்டெப் தான் என்றாலும் அது கமல் ரசிகர்களை சிலிர்க்க வைக்கிறது.

- அம்புட்டு அழகு அம்புஜாஸ்ரீ (எ) நடிகை நிஷாவாக த்ரிஷா. ரொம்ப நல்லவங்க. தமிழில் கவிதைகள் எழுதும் தமிழ் நடிகை என்று சொல்லி நம்மை ஏமாற்ற முயல்கிறார். மேலும் சினிமா நடிகைகள் எல்லாம் இவ்வளவு நல்லவங்களா என்று யோசிக்க வைக்கும் ஒரு பாத்திர படைப்பு.

- தொழிலதிபர் மதனகோபாலாக மாதவன். ஹீரோ போல அறிமுகமாகி, பின்னர் அமெரிக்க மாப்பிள்ளை போல தடம் மாறி, வில்லனாக உருவெடுத்து இறுதியில் ஒரு இரண்டாம் நாயகனாக முடிக்கிறார். பாதி படத்தில் சரக்கும் சரக்கு நிமித்தமுமாகவே வளம் வருகிறார். போதையில் இருப்பவர்களின் பேச்சுமுறை மற்றும் பாடி லாங்குவேஜ் காட்டுவதில் கலக்கியிருக்கிறார்.

மற்றும் பலர்
-          சங்கீதா. கமலுக்கு அடுத்து படத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று குறிப்பிடலாம். ஆரம்பத்தில் லோலாயி போல அறிமுகமாகி போகப்போக நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.
-          இந்த வரிகளை எழுதுவதற்கே வேதனையாக இருக்கிறது. ஊர்வசி ரமேஷ் அரவிந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்படியே என் அம்மா அப்பாவை நினைவுப்படுத்தி பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை கண்கலங்க வைத்தது. அதிலும் ஹீமொதேரபி, ரேடியேஷன் போன்ற வார்த்தைகள் என்னை பாடாய்ப்படுத்தியது.
-          அடப்பாவிகளா ஒரு அழகு ஓவியத்தையே வீணடித்திருக்கிறார்கள். நம்ம களவாணிப்பொண்ணு ஓவியா இரண்டே இரண்டு காட்சிகளில் தலை காட்டி இருக்கிறார். இந்த மாதிரி எல்லாம் வந்துபோனா தமிழ் சினிமாவில் துண்டு போட முடியாது அம்மணி.
-          குருப் என்ற கதாப்பாத்திரம் ஒன்று வருகிறது. கொச்சின் ஹனீபா இருந்திருந்தால் இந்த கேரக்டரை அல்வா மாதிரி தூக்கி சாப்பிட்டிருப்பார். இப்போது நடித்திருக்கும் குஞ்சன் என்ற நடிகரின் நடிப்பும் ஹனீபாவையே நினைவூட்டுகிறது.
-          பிரெஞ்சு நடிகை கரோலின் கமலின் மனைவியாக ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றுகிறார். வித்தியாசமான ஒரு பாத்திரத்தில் பாடகி உஷா உதுப்.
-          சூர்யா ஒரே ஒரு பாடலில் நடிகர் சூர்யாவாகவே வருகிறார். இயக்குனரும் இசையமைப்பாளரும் ஆளுக்கொரு காட்சியில் தலை காட்டுகிறார்கள்.

பிண்ணனி தொழில்நுட்பங்கள்
-          இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் தெரியவே இல்லை சில காட்சிகளை தவிர்த்து. பல காட்சிகள் கமல் படம் என்று சொல்லும் அளவிலேயே இருக்கிறது.
-          தேவிஸ்ரீ பிரசாத் இசையில் நீலவானம் பாடல் இனிமை. தகிடுதத்தோம் பாடல் முன்னர் குறிப்பிட்டது போல நம்மையும் தகிடுதத்தோம் போட வைக்கிறது.
-          வசனங்கள் கலக்கல். அதிலும் இரண்டாம் பாதியில் வரும் வசனங்களை எல்லாம் பலமுறை திரும்ப திரும்ப கேட்டு ரசிக்க வேண்டுமென தோன்றுகிறது.
-          பாரிஸ், பார்சிலோனா, ரோம், வெனிஸ் என்று ஐரோப்ப நாடுகளை சுற்றிக்காட்டியிருக்கிறது மனுஷ் நந்தனின் கேமரா. கப்பல் காட்சிகளும், நீல வானம் பாடலமைப்பும் சபாஷ்.

படம் சொல்லும் கருத்துக்கள்:
கொஞ்சம் சீரியஸ்:
-          வீரத்தின் மறுபக்கம் மன்னிப்பது. வீரத்தின் உச்சக்கட்டம் மன்னிப்பு கேட்பது.

கொஞ்சம் சிரிப்பு:
-          சிட்டி பொண்ணுங்களை சைட் அடிங்க. வில்லேஜ் பொண்ணுங்களை மேரேஜ் பண்ணுங்க.

பஞ்ச் டயலாக்:
-          பொய் எப்பவும் தனியா வராது. கூட்டமா தான் வரும்.

ரசிகனின் தீர்ப்பு:
கமலின் முழுநீள நகைச்சுவைப்படங்கள் பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களுடன் ஒப்பிடும்போது மன்மதன் அம்பு கொஞ்சம் தள்ளியே நிற்கிறது. மாறாக மும்பை எக்ஸ்பிரஸ் படத்தோடு ஒப்பிட்டால் தேவலை. முதல்பாதி நிறைய செண்டிமெண்டாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் நகைச்சுவை கொட்டிக்கிடக்கிறது.

கமல் ரசிகன் என்ற முறையில் பார்த்தால் ரசிக்கலாம். மற்றபடி சந்தேகம்தான்.

மன்மதன் அம்பு குறி தவறிவிட்டது
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

67 comments:

சி.பி.செந்தில்குமார் said...

சிறுத்தை படு டப்பா ஆகப்போகுது

சி.பி.செந்தில்குமார் said...

>>>பாசிடிவ் விமர்சனம் எழுதுவதா...? நெகடிவ் விமர்சனம் எழுதுவதா....? என்று சத்தியமாக தெரியவில்லை. எனவே என் எண்ணத்தை அப்படியே பதிவு செய்கிறேன்.

பொதுவாக எல்லாருக்கும் ஏற்படும் குழப்பம்தான்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லாயிருக்கு..

சி.பி.செந்தில்குமார் said...

படம் பற்றிய விமர்சனம் குறைவு.அதற்கு ஈடு கட்ட சிறுத்தை இன்ன பிற அம்சங்களை சேர்த்து சமாளித்தது சிறப்பு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பொய் எப்பவும் தனியா வராது. கூட்டமா தான் வரும்.:)
படம் பார்க்கணும்

திவ்யா மாரிசெல்வராஜ் said...

சபாஷ் சரியான விமர்சனம்.

Unknown said...

நாங்கல்லாம் கதைக்குதான் ரசிகர்கள்.
அப்போ படம் பார்க்கலாமா? வேணாமா? என நாங்கள் படத்தப் பார்த்துதான் தெரிஞ்சிகனுமா?

//மன்மதன் அம்பு – குறி தவறிவிட்டது//

தவறிய குறி ரசிகன் மேல படுதா? என்று சொல்லவேயில்லையே!

Unknown said...

நடு நிலையான நல்ல விமர்சனம் நண்பா!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரெம்ப கஷ்டப்பட்டு படம் பார்திருபிங்க..போல...

எல் கே said...

ஹ்ம்ம் நல்ல விமர்சனம். எப்படியும் படம் பாக்க போறது இல்லை

Prem S said...

Arumaiyana vimarsanam" nadikar suryavai 'nadikai' suryavaka ahkiathai kavanika"

பெசொவி said...

ஒரு கமல் ரசிகனாக இருந்தும், படத்தின் நிறைகுறைகளை விவரித்தது சூப்பர்!

pichaikaaran said...

குப்பை படம் என நான் சொன்னபோது , என் நடுநிலையை சந்தேகப்பட்ட பிரபா...இப்ப நீயும் அதைதான் சொல்கிறாய்

எப்பூடி.. said...

மன்மதன் அம்பு - நோ கொமன்ஸ், சிறுத்தை - கார்த்திக்கு விழும் முதல் அடியாக இருக்குமென்று நம்பலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த மாதிரி பண்றதுக்கு இப்போ நிறையப் பேர் இருக்காங்க, கமல் என்னைக்குத் தன் பொறுப்பையும் உணர்ந்து படம் பண்ணுவாரோ? ஆஸ்காருலாம் வெறும் பேச்சுத்தான் போல!

'பரிவை' சே.குமார் said...

படத்தின் நிறைகுறைகளை விவரித்தது சூப்பர்!

Unknown said...

என்னது பஞ்ச தந்திரம் முழு நீல நகைச்சுவை படமா .சரியான கடி ஜோக் படம் . அதுக்கு மும்பை எக்ஸ்பிரஸ் நல்ல காமெடியாக இருக்கும் .

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கடேசி பத்தி மட்டும் படிச்சேன்.. :) படம் இன்னும் பாக்கல.. அனேகமா பிடிக்காது தான் போல :)

Unknown said...

///கமல் ரசிகன் என்ற முறையில் பார்த்தால் ரசிக்கலாம். மற்றபடி சந்தேகம்தான்.///


என் நண்பர் ஒருவர் கமலின் தீவிர ரசிகர் .அவர் இந்த படத்தை பார்த்து விட்டு கமல் இந்த படத்தை எடுக்காமலே இருந்திருக்கலாம் என்றார்

Unknown said...

நல்ல விமர்சன் பிரபாகரன்.. நடுவுல போனஸா.. சிறுத்தை ட்ரைலர் வேற ஓட்டறீங்க.. சூப்பர்..

Anonymous said...

:)

செங்கோவி said...

நல்ல விமர்சனம் ப்ரபா..வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை..மன்னிப்பது அல்ல.

FARHAN said...

விமர்சனம் சூப்பர் என்னை பொறுத்தவரை படம் சூப்பர்
கட்டரில் டோஹா நகரில் சில தமிழ் படங்களே வெளியாகும்
மன்மதன் அம்பு சிரிப்பு வெடிகளுடனும் மக்களின் ஆரவாரதோடும் நன்றாக இங்கே போகிறது

தினேஷ்குமார் said...

நல்ல விமர்சனம்

பாலா said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. கமல் ரசிகர்கள் மட்டுமே இந்த படத்தை ரசிக்க முடியும். என்னை பொறுத்தவரை கடைசி இருபது நிமிடங்களை இன்னும் சுவாரசியமாக அமைத்திருக்கலாம். நன்றி

Sivakumar said...

>>> I am going for it tomorrow...i am a fan of kamal but will post a neutral review. because for me...good cinema is bigger than kamal. his films always get mixed reviews....(a bit lazy, thats why typed in english..excuse)

Sivakumar said...

//குப்பை படம் என நான் சொன்னபோது , என் நடுநிலையை சந்தேகப்பட்ட பிரபா...இப்ப நீயும் அதைதான் சொல்கிறாய்// Ha ha...

karthikkumar said...

படம் பாக்கலாமா... எதுக்கும் பார்ப்போம்...

சர்பத் said...

விஜய் படம் ஓடலை, அஜித் படம் ஓடலை இப்போ கமல் படமும் ஓடலை. இன்னமும் கதைக்காகவோ / திரைகதைக்ககவோ தான் படங்கள் ஓடுகின்றன, நடிக்கும் நாயகர்களை மட்டுமே நம்பி அல்ல. நல்ல படம் எடுங்கப்பா நாங்களும் தியேட்டர்க்கு வர்றோம்.

Geetha6 said...

விமர்சனம் super!

Ram said...

ஆஹா.!! மும்பை எக்ஸ்ப்ரஸ் எனக்கு பிடித்த படம்... இதை படிக்கும் போது பலருக்கு ஆச்சர்யம் இருக்கும்.. அதுல எல்லாமே டைமிங் காமெடி பாஸ்.. உணர்ந்து பாத்தா பிடித்திருக்கும்.. அதுபோல தான் இப்ப பிரபா.. ஒரு கமல் ரசிகரா இருந்தாலும் பார்வையாளனின் தொகுக்கபட்ட விமர்சனத்தை படிச்சிட்டு போயி அவரும் நாசமா போயிட்டார்.. எனக்கு படம் ரொம்ப புடிச்சிருந்தது.. தப்பிய அம்பு புரிந்துகொள்பவர் கைகளில் விழுந்துள்ளது..

சண்முககுமார் said...

விமர்சனம் super! படம் பாக்கலாமா..இதையும் படிச்சி பாருங்க

இந்தியா பைத்தியகார நாடு...?

goma said...

அடடா அப்படிப் போச்சா அம்பு....

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார், பிரஷா, தமிழ் மதி, யோவ், தமிழ்வாசி - Prakash, எல் கே, சி.பிரேம் குமார், பெயர் சொல்ல விருப்பமில்லை, பார்வையாளன், எப்பூடி.., பன்னிக்குட்டி ராம்சாமி, சே.குமார், நா.மணிவண்ணன், எல் போர்ட்.. பீ சீரியஸ்.., பதிவுலகில் பாபு, கல்பனா, செங்கோவி, FARHAN, dineshkumar, பாலா, சிவகுமார், karthikkumar, சர்பத், Geetha6, தம்பி கூர்மதியன், உண்மை தமிழன், goma

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// படம் பற்றிய விமர்சனம் குறைவு.அதற்கு ஈடு கட்ட சிறுத்தை இன்ன பிற அம்சங்களை சேர்த்து சமாளித்தது சிறப்பு //

அப்படியெல்லாம் இல்லை நண்பரே... சொல்லப்போனால் படத்தைப் பற்றி இன்னும் இரண்டு பத்திகள் எழுதுவதாக இருந்தது.... எனினும் பதிவு நீளமா இருந்தா நிறைய பேர் படிக்கிறதில்லை.... அதனால்தான் நானே நீளத்தை குறைத்துவிட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ யோவ்
// நாங்கல்லாம் கதைக்குதான் ரசிகர்கள்.
அப்போ படம் பார்க்கலாமா? வேணாமா? என நாங்கள் படத்தப் பார்த்துதான் தெரிஞ்சிகனுமா? //

அப்படின்னா தாராளமா பாருங்க...

Philosophy Prabhakaran said...

@ சி.பிரேம் குமார்
// Arumaiyana vimarsanam" nadikar suryavai 'nadikai' suryavaka ahkiathai kavanika" //

சுட்டிக்காட்டியதற்கு நன்றி... மாற்றிவிடுகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// குப்பை படம் என நான் சொன்னபோது , என் நடுநிலையை சந்தேகப்பட்ட பிரபா...இப்ப நீயும் அதைதான் சொல்கிறாய் //

இப்பொழுதும் அதையேதான் சொல்கிறேன்... குப்பைப்படம் என்று சொல்லும் அளவிற்கு படம் மோசமாக இல்லை... மேலும் நீங்கள் கமலையும் ரஜினியையும் ஒப்பிட்டு எழுதியிருந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// மன்மதன் அம்பு - நோ கொமன்ஸ், சிறுத்தை - கார்த்திக்கு விழும் முதல் அடியாக இருக்குமென்று நம்பலாம். //

சொல்ல முடியாது.... எங்க தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அந்த மாதிரி ரத்தத்தை சூடேற்றும் படம்ன்னா ரொம்ப பிடிக்கும்... உணர்ச்சிவசப்பட்டு ஓட வச்சிருவாங்க... (உதாரணம்: சிங்கம்)

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இந்த மாதிரி பண்றதுக்கு இப்போ நிறையப் பேர் இருக்காங்க, கமல் என்னைக்குத் தன் பொறுப்பையும் உணர்ந்து படம் பண்ணுவாரோ? ஆஸ்காருலாம் வெறும் பேச்சுத்தான் போல! //

என்னது ஆஸ்கரா...? காப்பி அடிக்கிறதுக்கு யாராவது ஆஸ்கர் தர்றாங்களா என்ன...?

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// என்னது பஞ்ச தந்திரம் முழு நீல நகைச்சுவை படமா .சரியான கடி ஜோக் படம் . அதுக்கு மும்பை எக்ஸ்பிரஸ் நல்ல காமெடியாக இருக்கும் . //

அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள் ஆனால் எனக்கு மும்பை எக்ஸ்பிரசை காட்டிலும் பஞ்சதந்திரம் பிடித்திருந்தது...

// என் நண்பர் ஒருவர் கமலின் தீவிர ரசிகர் .அவர் இந்த படத்தை பார்த்து விட்டு கமல் இந்த படத்தை எடுக்காமலே இருந்திருக்கலாம் என்றார் //

அவர் நிறைய எதிர்பார்ப்புகளோடு திரையரங்கம் சென்றிருப்பார் என்பது எனது கருத்து....

Philosophy Prabhakaran said...

@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// கடேசி பத்தி மட்டும் படிச்சேன்.. :) படம் இன்னும் பாக்கல.. அனேகமா பிடிக்காது தான் போல :) //

ஏன் இப்படி...? முழுசா படிக்கக்கூடாதுன்னு எதுவும் வேண்டுதலா...?

Philosophy Prabhakaran said...

@ பதிவுலகில் பாபு
// நல்ல விமர்சன் பிரபாகரன்.. நடுவுல போனஸா.. சிறுத்தை ட்ரைலர் வேற ஓட்டறீங்க.. சூப்பர்.. //

நான் ஓட்டலைங்க தியேட்டர்காரன் தான் ஓட்டி என் வித்தை கலக்கிட்டான்...

Philosophy Prabhakaran said...

@ செங்கோவி
// நல்ல விமர்சனம் ப்ரபா..வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை..மன்னிப்பது அல்ல. //

வீரத்தின் உச்சக்கட்டம் மன்னிப்பு கேட்பது என்று எழுதியிருந்தேன்... படத்தில் அப்படித்தான் வருகிறது...

Philosophy Prabhakaran said...

@ FARHAN
// விமர்சனம் சூப்பர் என்னை பொறுத்தவரை படம் சூப்பர்
கட்டரில் டோஹா நகரில் சில தமிழ் படங்களே வெளியாகும்
மன்மதன் அம்பு சிரிப்பு வெடிகளுடனும் மக்களின் ஆரவாரதோடும் நன்றாக இங்கே போகிறது //

அப்படியா... ஒருவருக்கொருவர் ரசனை மாறுபடுகிறது... எனக்கும் மகிழ்ச்சியே...

Philosophy Prabhakaran said...

@ பாலா
// உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. கமல் ரசிகர்கள் மட்டுமே இந்த படத்தை ரசிக்க முடியும். என்னை பொறுத்தவரை கடைசி இருபது நிமிடங்களை இன்னும் சுவாரசியமாக அமைத்திருக்கலாம். நன்றி //

எனக்கென்னவோ முதல்பாதியே மெதுவாக நகர்வது போல இருந்தது... மேலும் கொஞ்சம் செண்டிமெண்டாக நகர்ந்தது எனக்கு பிடிக்கவில்லை...

Philosophy Prabhakaran said...

@ சிவகுமார்
// I am going for it tomorrow...i am a fan of kamal but will post a neutral review. because for me...good cinema is bigger than kamal. his films always get mixed reviews....(a bit lazy, thats why typed in english..excuse) //

உங்கள் நடுநிலையைப் பற்றி தெரியும் சிவா... மேலும் காப்பி அடித்த படங்களை பார்க்கமாட்டேன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பதாக இருந்தால் இந்தப் படத்தையும் நீங்கள் பார்க்கக்கூடாது...இருக்கட்டும் நீங்கள் ஜப்பானிய மொழியில் கருத்து சொன்னால்கூட நான் மொழிபெயர்த்துக்கொள்வேன்...

Philosophy Prabhakaran said...

@ சர்பத்
// விஜய் படம் ஓடலை, அஜித் படம் ஓடலை இப்போ கமல் படமும் ஓடலை. இன்னமும் கதைக்காகவோ / திரைகதைக்ககவோ தான் படங்கள் ஓடுகின்றன, நடிக்கும் நாயகர்களை மட்டுமே நம்பி அல்ல. நல்ல படம் எடுங்கப்பா நாங்களும் தியேட்டர்க்கு வர்றோம். //

ஆமாம்... ஹீரோவுக்காக படம் ஓடிய காலமெல்லாம் மாறிவிட்டது... தமிழ் சினிமாவிற்கு கூடிய விரைவில் விடிவுகாலம் பிறக்க இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன்
// ஆஹா.!! மும்பை எக்ஸ்ப்ரஸ் எனக்கு பிடித்த படம்... இதை படிக்கும் போது பலருக்கு ஆச்சர்யம் இருக்கும்.. அதுல எல்லாமே டைமிங் காமெடி பாஸ்.. //

இருக்கலாம்... ஆனால் இந்தப் படத்தில் அதுபோல டைமிங் காமெடிகள் அதிகம் இல்லை... நான் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தைவிட better என்றுதான் கூறினேனே தவிர அதைவிட அதிக டைமிங் காமெடிகள் வருகின்றன என்று கூறவில்லை...

// அதுபோல தான் இப்ப பிரபா.. ஒரு கமல் ரசிகரா இருந்தாலும் பார்வையாளனின் தொகுக்கபட்ட விமர்சனத்தை படிச்சிட்டு போயி அவரும் நாசமா போயிட்டார்.. //

ஹி... ஹி... ஹி... நான் யாருடைய விமர்சனத்தையும் படித்து அந்த தாக்கத்தில் எழுதுவதில்லை... எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே எழுதினேன்... எழுதுவேன்...

Philosophy Prabhakaran said...

@ உண்மை தமிழன்
// இதையும் படிச்சி பாருங்க

இந்தியா பைத்தியகார நாடு...? //

யோவ் உஜிலாதேவி... பினாமி பேரில் வர ஆரம்பிச்சிட்டியா... அதுவும் உண்மை தமிழன் என்ற பெயரில்... படவா இனிமே உன்னை இந்தப்பக்கம் பாத்தா பிச்சிபுடுவேன்... ஓடிப்போயிடு...

Unknown said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இந்த மாதிரி பண்றதுக்கு இப்போ நிறையப் பேர் இருக்காங்க, கமல் என்னைக்குத் தன் பொறுப்பையும் உணர்ந்து படம் பண்ணுவாரோ? ஆஸ்காருலாம் வெறும் பேச்சுத்தான் போல! //

என்னது ஆஸ்கரா...? காப்பி அடிக்கிறதுக்கு யாராவது ஆஸ்கர் தர்றாங்களா என்ன..
>>>>>>>>>>>>>>>>

பகிர்வுக்கு நன்றி.

சில இடங்களில் தங்களின் மனசாட்சி காரணமாக தடுமாறியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

ஆஸ்க்கார் நாயகனுக்கே ஆஸ்கார் கொடுக்க மாட்டாங்களா!?

why ம்மா why?

சமீபத்திய ஓர் விழாவில் அவர் சொன்னது - அவருடைய படங்களின் நிறம் மாறி வருகிறது என்று!?

- இதற்க்கு இதுதான் விளக்கமோ!?

அஞ்சா சிங்கம் said...

(மன்)னார் ...............(மதன்)கோபால்..........(அம்பு)ஜா..............

எப்போதும் அதிகமாக எதிர்பார்பதால் தான் உங்களால் ரசிக்க முடியவில்லை என்று நினைக்கிறன்...
இது ஒரு நகைச்சுவை படம் அந்த வேலையை இந்த படம் சிறப்பாகவே செய்ததாக நினைக்கிறேன்.
flashback காட்சிகளின் பின்னோக்கி நகரும் படி காட்டி இருந்த புத்திசாலித்தனம்.
குறிப்பாக வசனங்கள் ஒழுக்கமா இருக்க நினைக்கிற பொண்ணுக்கு திமிர்தானே வேலி இல்லனா மேஞ்சிட்டு போடுவானுக. இப்படி படம் முழுவதும் வந்து போகும் கூர்மை....
இன்னொரு முறையை நிதானமாக படத்தை பாருங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறன்.......

Philosophy Prabhakaran said...

// ஆஸ்க்கார் நாயகனுக்கே ஆஸ்கார் கொடுக்க மாட்டாங்களா!?
why ம்மா why? //

நல்ல கேள்வி... அந்த வார்த்தைகளை நான் எழுதியதற்கு காரணம் என்னவென்றால்...

ஒருவேளை மிஷ்கினின் நந்தலாலா படத்தையும் ஜப்பானிய படம் கிகுஜிரோ படத்தையும் ஒரே நேரத்துல ஆஸ்கர் கமிட்டிக்கு அனுப்புறாங்கன்னு வச்சிக்கோங்க... என்ன நடக்கும்... உலக அளவுல நம்ம மானம் போகும்...

அதே மாதிரி தான் கமல் படங்களும்... இந்தப் படமும் உலகப்படத்தில் இருந்து சுட்ட கதையே... கமலுடாயா பெரும்பாலான படங்கள் அப்படித்தான்... அதனால் ஆஸ்கருக்கு எல்லாம் அனுப்பினால் அவமானம் நமக்குத்தான்...

சசி ராஜா said...

பார்க்க என் விமர்சனம்:

http://alonealike.blogspot.com/2010/12/good-to-see.html

என்னைப் பொறுத்தவரையில் படம் பார்க்கும்படியாய்த்தான் இருக்கின்றது..வசனம் சூப்பர்ப்.

Paul said...

படத்தை மறுபடியும் திரும்ப பாருங்க தலைவா..

வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை.. மன்னிப்பு கேட்பது அல்ல. படத்திலயும் வசனம் "வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை" என்று தான் வரும்..

மிகவும் கவனித்து அந்த வசனம் பிடித்ததால் என் மனதில் நன்றாகவே நிற்கிறது.. நிச்சயமாக அஹிம்சை என்று தான் வசனம் படத்தில் வரும் :)

Jayadev Das said...

// பாரிஸ், பார்சிலோனா, ரோம், வெனிஸ் என்று ஐரோப்ப நாடுகளை சுற்றிக்காட்டியிருக்கிறது மனுஷ் நந்தனின் கேமரா. // இதுக்காகவாச்சும் ஒரே ஒரு தடவை இந்தப் படத்தை பாத்துத் தொலைக்கலாம்னு இருக்கேன். But உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பிரபாகரன் சார்.

Philosophy Prabhakaran said...

@ மனக்குதிரை
// பார்க்க என் விமர்சனம்:

http://alonealike.blogspot.com/2010/12/good-to-see.html

என்னைப் பொறுத்தவரையில் படம் பார்க்கும்படியாய்த்தான் இருக்கின்றது..வசனம் சூப்பர்ப். //

பார்த்தேன்... உங்களோட மனக்குதிரை நல்லா இருக்கு... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை...

Philosophy Prabhakaran said...

@ பால் [paul]
// படத்தை மறுபடியும் திரும்ப பாருங்க தலைவா..

வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை.. மன்னிப்பு கேட்பது அல்ல. படத்திலயும் வசனம் "வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை" என்று தான் வரும்.. //

சரி நண்பரே... கட்டாயம் மறுபடியும் பார்க்கிறேன் :) ஆனால் டி.வி.டியில் தான் :)

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// இதுக்காகவாச்சும் ஒரே ஒரு தடவை இந்தப் படத்தை பாத்துத் தொலைக்கலாம்னு இருக்கேன். But உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பிரபாகரன் சார். //

நன்றி நண்பரே... நீங்க ஏன் மருத்துவப்பதிவுகளோடு சமூகப் பதிவுகளையும் எழுதக் கூடாது... உங்ககிட்ட நல்ல சிந்தனைகள் இருக்கு...

Jayadev Das said...

//நன்றி நண்பரே... நீங்க ஏன் மருத்துவப்பதிவுகளோடு சமூகப் பதிவுகளையும் எழுதக் கூடாது...// ஐயையோ..... மருத்துவத்தைப் பத்தியே ஒன்னும் தெரியாதே! நான் பதிவரே இல்லியே, இதுல சமூகப் பதிவுக்கு நான் எங்கே போவேன்? ஒரு வேலை என்னோட பேருல வேற பயலுக பதிவு போடுரானுங்களா........தெரியலையே!

Jayadev Das said...

//அதே மாதிரி தான் கமல் படங்களும்... இந்தப் படமும் உலகப்படத்தில் இருந்து சுட்ட கதையே... கமலுடாயா பெரும்பாலான படங்கள் அப்படித்தான்... அதனால் ஆஸ்கருக்கு எல்லாம் அனுப்பினால் அவமானம் நமக்குத்தான்...// கமலஹாசனோட ரசிகராக இருந்த போதிலும் இந்த மாதிரி உண்மையை ஒப்புக் கொள்வதற்கே ஒரு பெரிய மனசு வேணும். சில நடிகர்களின் ரசிகர்கள் அப்படியில்லை, அந்த நடிகன் மேல் உள்ள கண்மூடித்தனமான பிரியத்தால் [வெறியால் என்று கூட சொல்லலாம்] இந்த மாதிரி உண்மையை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள அவர்களது மனம் மறுக்கிறது. "எங்க தலைவரு ஒரு படத்த நல்லா இருக்குதுன்னு சொன்னாலே போதுமய்யா, படம் பிச்சிகிட்டு ஓடும்" ன்னு சொல்றாங்க, ஆனா, "உங்க தலைவரு படமே அப்பப்ப ஊத்திக்குதே அது ஏன்" ன்னு கேட்டா, "தயாரிப்பாளருக்கு வயித்து வலி, கேமரா மேனுக்கு வீட்டுல சண்டை, லைட் பாய் கக்கா போகவில்லை " ன்னு இல்லாத புருடா விடுறாங்க. அதனால உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பிரபாகரன்!! அது சரி இந்த ஆஸ்கார் பத்தி எனக்கு ஒரு சந்தேகம், நீங்கதான் தீத்து வைக்கணும். ஆஸ்கார் எல்லா மொழிப் படங்களுக்கும் கொடுக்கப் படுவதா? ஆங்கிலப் படங்களுக்கு மட்டும்தானே தருவாங்க? தமிழ்ப் படத்துக்கு எங்கே கிடைக்கும்? அந்நிய மொழிப் படப் பிரிவு ஒன்னு இருக்குது, அதுல ஒரே ஒரு விருது மொத்தமா வரும், இசை, கதை, நடிப்பு, டைரக்ஷன்... என்று எல்லா பிரிவுகளிலும் வாங்கணும்னா அது ஆங்கிலப் படங்களுக்கு மட்டும்தானே வரும்? குழந்தைகளுக்கு பொம்மை கார், ஹெலிகாப்டர் வாங்கித் தந்து சமாதானம் செய்யுற மாதிரி நமக்கும் நடிப்புக்கு ஆஸ்கார் வாங்க முடியாவிட்டாலும் ஆஸ்கார் நாயகன்னு சொல்லி சமாதானப் படுத்துகிறார்களா?

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// ஐயையோ..... மருத்துவத்தைப் பத்தியே ஒன்னும் தெரியாதே! நான் பதிவரே இல்லியே, இதுல சமூகப் பதிவுக்கு நான் எங்கே போவேன்? ஒரு வேலை என்னோட பேருல வேற பயலுக பதிவு போடுரானுங்களா........தெரியலையே! //

ஆஹா மன்னிக்கணும்... தப்பு நடந்துபோச்சு... நீங்கள் பின்தொடர்ந்து வரும் "ஹாய் நலமா" என்னும் வலைப்பூவினை உங்களுடையது என்று தவறாக புரிந்துக்கொண்டேன்... சரி இருக்கட்டும், அப்படிஎன்றால் நீங்கள் நிச்சயம் எனது வேண்டுகோளை ஏற்று வலைப்பூ ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும்...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// ஆஸ்கார் எல்லா மொழிப் படங்களுக்கும் கொடுக்கப் படுவதா? ஆங்கிலப் படங்களுக்கு மட்டும்தானே தருவாங்க?//

Oscar அல்லது Academy Awards என்று சொல்லப்படுவது அமெரிக்க படங்களுக்காக அமெரிக்கர்கள் கொடுத்துக்கொள்வது...

// தமிழ்ப் படத்துக்கு எங்கே கிடைக்கும்? அந்நிய மொழிப் படப் பிரிவு ஒன்னு இருக்குது, அதுல ஒரே ஒரு விருது மொத்தமா வரும், இசை, கதை, நடிப்பு, டைரக்ஷன்... என்று எல்லா பிரிவுகளிலும் வாங்கணும்னா அது ஆங்கிலப் படங்களுக்கு மட்டும்தானே வரும்? //

ஆமாம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான்... அந்நிய நாட்டு படங்கள் என்று ஒரு பிரிவு இருக்கும் அதற்குத்தான் பல நாட்டு படங்களும் போட்டியிட்டுக் கொள்கின்றன...

// குழந்தைகளுக்கு பொம்மை கார், ஹெலிகாப்டர் வாங்கித் தந்து சமாதானம் செய்யுற மாதிரி நமக்கும் நடிப்புக்கு ஆஸ்கார் வாங்க முடியாவிட்டாலும் ஆஸ்கார் நாயகன்னு சொல்லி சமாதானப் படுத்துகிறார்களா? //

இந்த மாதிரி பட்டப்பெயர் எல்லாம் யார் வைக்கிறதுன்னு பார்த்தா, நம்மளை மாதிரி பதிவர்கள் யாராவது ஆர்வக்கோளாரில் வைத்திருக்கலாம்... அல்லது அரசியல் தலைவர்கள் / தலைவிகளுக்காக அமைக்கப்படும் பேனர்களில் வருங்கால தமிழகமே, முத்தமிழே, மூத்திர தமிழே ன்னு அடிக்கிற மாதிரி எவனாவது அடிச்சு விட்டிருப்பான்.. அதுதான் இப்போ பரவி கிடக்குது...

ஆஸ்கர் விருது நமக்கு கிடைத்தால் பெருமைதான்... ஆனால் அதனினும் பெருமை என்னவென்றால் வருங்காலத்தில் அமேரிக்கா உட்பட பிற நாடுகளில் உள்ள சினிமாக் கலைஞர்கள் நம்ம ஊர் filmfare விருதை வாங்குவதற்காக போட்டி போட வேண்டும்...

Jayadev Das said...

//வருங்காலத்தில் அமேரிக்கா உட்பட பிற நாடுகளில் உள்ள சினிமாக் கலைஞர்கள் நம்ம ஊர் filmfare விருதை வாங்குவதற்காக போட்டி போட வேண்டும்...// நீங்க சொல்வது கிரிக்கெட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது, அவனவனும் தங்கள் நாட்டு அணியில் இருந்து சீக்கிரமே விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு இங்கு வந்து IPL கண்ட்ராவியில ஆடுறானுங்க. வாழ் நாள் முழுவதும் அவனுங்க நாட்டுக்கு ஆடி சம்பாதித்ததை விட அதிகம் ஒரே ஆண்டில் இங்கே பார்த்து விடலாம்!.... நம்ம சனத்துக்கு எவன் ஆடுனா என்ன, பேரு மட்டும் சென்னை பெங்களூருன்னு இருக்குதே அதுக்கே உயிரை விடுறாங்க, இளிச்சா வா பயலுக. ஹா...ஹா...ஹா...ஹா... [எனக்கும் கூடத் தான் தமிழகம் தொழில் நுட்பத்தில் ஜப்பான் மாதிரியும் தூய்மையில் அமேரிக்கா மாதிரியும் பாதுகாப்பில் சிங்கப்பூர் மாதிரியும் ஆகணும்னு ஆசை இருக்கு!!!! காசா பணமா ஆசைப் பட்டு வைப்போமே, இப்போ யாருக்கு என்ன நட்டம்!!]

Jayadev Das said...

பிரபாகரன் சார், உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடணும்ன்னா பத்து ஆறேழு தடவையாவது Post Comment பட்டனை அழுத்த வேண்டியிருக்குதே! ஏன்? சரி செய்யுங்களேன்!

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// நீங்க சொல்வது கிரிக்கெட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது, அவனவனும் தங்கள் நாட்டு அணியில் இருந்து சீக்கிரமே விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு இங்கு வந்து IPL கண்ட்ராவியில ஆடுறானுங்க. வாழ் நாள் முழுவதும் அவனுங்க நாட்டுக்கு ஆடி சம்பாதித்ததை விட அதிகம் ஒரே ஆண்டில் இங்கே பார்த்து விடலாம்!.... நம்ம சனத்துக்கு எவன் ஆடுனா என்ன, பேரு மட்டும் சென்னை பெங்களூருன்னு இருக்குதே அதுக்கே உயிரை விடுறாங்க, இளிச்சா வா பயலுக. ஹா...ஹா...ஹா...ஹா... //

கிரிக்கெட்டை பற்றி சொல்லும்போது... நானும் கொஞ்சம் கிரிக்கெட் பார்ப்பேன்... ஆனால் நீங்கள் சொல்வதுபோல இளிச்ச வாய்ப்பயலா இருக்க மாட்டேன்... டிவியில் பார்த்து ரசிப்பதோடு சரி... என்னைப் பொறுத்தவரையில் அது ஜஸ்ட் ஒரு எண்டர்டெயின்மென்ட்...

// பிரபாகரன் சார், உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடணும்ன்னா பத்து ஆறேழு தடவையாவது Post Comment பட்டனை அழுத்த வேண்டியிருக்குதே! ஏன்? சரி செய்யுங்களேன்! //

அப்படியா... கவலை வேண்டாம்... இன்னும் சில நிமிடங்களில் டெம்ப்ளேட் மாற்ற இருக்கிறேன்... அதன்பிறகு இந்த சிக்கல் இருக்காது...

நீங்கள் அனுப்பிய மெயிலுக்கு பதில் போட்டிருக்கிறேன்... பார்க்கவும்...

Unknown said...

அம்புக்குறி !