30 December 2010

பதிவுலகிற்கு இரண்டு அறிவிப்புகள்

குத்துங்க எஜமான் குத்துங்க

தமிழ்மணம் விருதுகளுக்காக நகைச்சுவை, தமிழ்த்திரை விமர்சனங்கள், உலகப்பட விமர்சனங்கள் என்று மூன்று பிரிவுகளில் எனது பதிவுகளை அனுப்பி வைத்திருந்தேன். இப்போது அவற்றில் இரண்டு அடுத்த கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. சினிக்கூத்து சித்தனுக்கு மட்டும் தமிழ்மணம் அருள் பாலிக்கவில்லை. இருக்கட்டும். இப்போது சில நாட்களாக இன்ட்லியில் கூட எனது பதிவுகள் ஹிட்டடிப்பதில்லை. நம்ம பதிவர்கள், வாசகர்கள் கேட்டாத்தான் ஓட்டு போடுவோம்னு அடம் பிடிக்கிறாங்க. அப்படி இருக்கும்போது தமிழ்மணம் விருதுகள்ன்னா சும்மாவா. அது மட்டுமில்லை நான் முதல் கட்ட வாக்கெடுப்புல பதிவை எல்லாம் படிச்சு பாத்துட்டு நியாயமா ஓட்டு போடணும்னு நினச்சேன். ஆனால் அது எவ்வளவு பெரிய மடத்தனம்னு அங்கே போய் பார்த்தபோது தான் தெரிந்தது. ஒவ்வொரு பிரிவிலேயும் அறுபதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இடுகைகள். அப்புறம் கண்ணை மூடிக்கிட்டு நண்பர்கள் பெயரை டிக் அடிச்சேன். அதுலயும் சில இடங்களில் இரண்டு, மூன்று நண்பர்களின் பெயர்கள் வந்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. எப்படியும் யாரும் பதிவை படிச்சிட்டு ஓட்டு போடப்போவதில்லை. அதான் நானும் பிரச்சார களத்துல இறங்கிட்டேன். இப்போ என்னுடைய பரிந்துரைகளைப் பற்றி சிறுகுறிப்புகள்.

தலைப்பை பார்த்துவிட்டு நெகடிவ் விமர்சனம் என்று நினைத்துவிடாதீர்கள். கதைச்சுருக்கம், நாயகனின் நடிப்பு, நாயகியின் நடிப்பு, பிற நடிகர்களின் பங்களிப்பு, இசை, ஒளிப்பதிவு என்று ஒரு திரைவிமர்சனத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கிறது (என்று நினைக்கிறேன்). சந்தேகம் இருந்தால் இந்த இணைப்பை சொடுக்கி படிச்சு பாருங்களேன்.

இது ஒரு கலைநுட்பம் வாய்ந்த ஸ்பானிஷ் திரைப்படத்தின் விமர்சனம். இரண்டு இளைஞர்கள், ஒரு நடுத்தர வயதுப்பெண். இவர்களால் மூவரால் ஆன பயண அனுபவங்களே கதை. காதல், காமம், அரசியல் (மெக்சிகோ நாட்டின் உள்நாட்டு அரசியல்) போன்றவைகளின் கலவையான இந்தப் படத்தைப் பற்றி இங்கே விரிவாக எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள். அது மட்டுமில்லாமல் பதிவிறக்க இணைப்புகளும் இணைத்திருக்கிறேன்.

ம்ம்ம்... இதுதான் ரொம்ப முக்கியம். கீழே கொடுத்திருக்குற இணைப்பை சொடுக்குங்க.

அங்கே இருபது பிரிவுகளில் கடைசி இரண்டு பிரிவுகளை கிளிக்குங்கள். மேலே குறிப்பிட்டுள்ள எனது இரண்டு இடுகைகளுக்கும் உங்கள் வாக்குகளை கண்டபடி குத்துங்க எஜமான் குத்துங்க.

களவாணி பயலுகளா


என்னுடைய பதிவு ஒன்று களவு போயிருக்கிறது.
என்னுடைய ஒரிஜினல் லிங்க்:
http://philosophyprabhakaran.blogspot.com/2010/12/blog-post_27.html
களவாடிய லிங்க்: 
http://ajith-vijay.blogspot.com/2010/12/blog-post_5295.html
(பயபுள்ளைங்க கடைசி வரியில் இருந்த என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN என்ற வரிகளைத் தவிர மற்ற அனைத்தையும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள்)

இதுகுறித்து எனக்கு பின்னூட்டம் மூலமாக தகவல் தெரிவித்த ரஹீம் கஸாலி, மெட்ராஸ் பவன் சிவா குமார் மற்றும் இன்னபிற அன்பு உள்ளங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்.

என்னுடைய பதிவு திருடப்படுவது இதுவே முதல்முறை அதனால் எனக்கு இந்த சம்பவத்துக்கு எப்படி ரியாக்ட் செய்வதென்று சத்தியமாக தெரியவில்லை. அது மட்டுமில்லாமல் இப்பல்லாம் எனக்கு எதிரா யாராவது ஏதாவது பண்ணாக்கூட கோபமே வரமாட்டேங்குது. என் மேல தப்பே இல்லைன்னாலும் அங்கபோய் மானங்கெட்டத்தனமா மன்னிப்பெல்லாம் கேக்குறேன். என்ன பண்றது குட்ட குட்ட குனியறது தமிழனோட குணமாச்சே. சரி இப்போ எதுக்கு அந்தக்கதை, பதிவுத்திருட்டு மேட்டருக்கே வருவோம். இதுகுறித்து வழக்கம்போல சாதுவாக அவரது தளத்திற்கு சென்று நாகரிகமாக ஒரு பின்னூட்டத்தின் மூலம் விஷயத்தை தெரிவித்தேன். ஆனால் அவர் நாசூக்காக எனது பின்னூட்டத்தை நீக்கிவிட்டு அவருடைய வேலையை பார்க்க போய்விட்டார். அவருக்கு என்னுடைய சார்பாக கடும் கண்டனங்களை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். என்னையும் ரெளத்திரம் பழக வைத்துவிடாதீர்கள் ப்ளீஸ். சரி நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனியும் இதுபோல திருட்டு நடக்காமல் தற்காத்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் யாராவது விளக்கிச்சொல்லுங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

45 comments:

pichaikaaran said...

me first

pichaikaaran said...

நண்பர்களின் லேசான கிண்டலுக்காக பதிவை தூக்கிய உங்கள் நியாய உணர்வு , மற்றவர்களுக்கு இல்லை என்பது வருந்ததக்கது

வருண் said...

***(பயபுள்ளைங்க கடைசி வரியில் இருந்த என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN என்ற வரிகளைத் தவிர மற்ற அனைத்தையும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள்)***

வெட்ட வேண்டியதை கவனமா வெட்டிட்டானுக போல! :)))

எல் கே said...

சரி விடுங்க. நீங்க பாபுலர் ஆகிட்டு வரீங்கன்னு தெரியுது

சிவகுமாரன் said...

ஒன்று செய்யங்கள் பிரபா, திருடர்கள் ஜாக்கிரதை என்று எழுதி அந்த இணைய முகவரியை குறிப்பிட்டு உங்கள் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் sms மற்றும் மெயில் அனுப்பிவிடுங்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

அப்படி போடு

சி.பி.செந்தில்குமார் said...

>>>(பயபுள்ளைங்க கடைசி வரியில் இருந்த என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN என்ற வரிகளைத் தவிர மற்ற அனைத்தையும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள்)


ஹா ஹா கோபப்படாதீங்க ,இதெல்லாம் பொது வாழ்க்கைல சகஜம்

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணம் விருதுக்கு (வரப்போகுது) வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

இண்ட்லில பிராப்ளம் ஓட்டு விழலை. நைட் போடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

இந்த கட்டுரை ஒரு சீரிய்ஸ் ஆனால் அதிலும் காமெடி மிளிருது வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

நண்பா! தமிழ்மணத்தில் குத்திடேன்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அடப்பாவியளா!! எதை எதைத் தான் திருடறதுன்னு வெவஸ்தையே இல்லாம போச்சு.. திருட்டைத் தடுக்க கொஞ்சம் பேரு எதோ வழியெல்லாம் சொல்லியிருந்தத பாத்திருக்கேன்.. எனக்குத் தெரியல..

நீங்க படித்திருக்கக் கூடிய கொஞ்சம் பதிவுகளை வைத்தாவது ஓட்டுப் போடுங்க.. நண்பர்கள்ன்னு பாத்து போடறது சரியில்லன்னு தோணுது..

ஆர்வா said...

பிரபலமாயிட்டாலே இந்த மாதிரி திருடுறது எல்லாம் சகஜமுங்கோ

இக்பால் செல்வன் said...

தமிழ்மண விருதில் வெற்றிபெற வாழ்த்துக்கள் ! பதிவு திருட்டு இப்போது சர்வ சாதரணம் ஆகிவிட்டது. மேற்கொண்டு என்ன செய்வது என நினைத்தால் இப்பதிவை படித்துப் பாருங்கள், ஒரு விளக்கம் கிடைக்கும்... http://bit.ly/gCFsEW

Unknown said...

அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே பாஸ், நீங்க நேத்து அங்க பின்னூட்டம் போட்டதையும், அவங்க அதை டெலிட் பண்ணினதையும் பார்த்தேன், என்ன பண்றது பிரபல பதிவர்னு ஆகிட்டா இது எல்லாத்தையும் சகிச்சுதான் ஆகணும் :-)

Unknown said...

வாழ்த்துக்கள்

Unknown said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் said...

மனச தளர விடாதீங்க பிலாசஃபி!! தமிழ்மணத்தில் (குத்திடேன்) விருது பெற வாழ்த்துகள் நண்பா!

அருண் பிரசாத் said...

விடுங்க பாஸ் பிரபல பதிவர் ஆகிட்டீங்க

ம.தி.சுதா said...

தமிழ்மண வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் சகோதரம்...

பதிவு திருட்டு ஒரு சாதாரண விடயமாய் போயிட்டுது... இம்முறை தமிழமண தெரிவில் உள்ள எனது ஆக்கம் ஒன்றை 9 தளங்கள் திருடியிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா...??

ம.தி.சுதா said...

எப்ப கண்ணா டெம்ளேட் மாத்தவிங்க... சத்தியமா வாசிக்க ஏலாதாம்...

பெசொவி said...

//இதுபோல திருட்டு நடக்காமல் தற்காத்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை//


அதுக்கு பதிவு போடாம இருந்தாதான் முடியும் :)
சீரியஸா சொல்லனும்னா நாம ஒண்ணும் பண்ண முடியாது சார், அந்த நாதாரிங்க திருந்தினாதான் உண்டு.

பெசொவி said...

//என்னையும் ரெளத்திரம் பழக வைத்துவிடாதீர்கள் //

இந்த விஷயத்தில் ரௌத்திரம் பழகத் தான் வேண்டும்.

பெசொவி said...

I have posted one comment there, boss!
காப்பியடிக்கப்பட்ட பதிவுன்னு லேபில் என் போடலை?

TERROR-PANDIYAN(VAS) said...

// ஆனால் அவர் நாசூக்காக எனது பின்னூட்டத்தை நீக்கிவிட்டு அவருடைய வேலையை பார்க்க போய்விட்டார்.//

வாங்க பிரதர் போய் கொஞ்ச நேரம் விள்ளாடிட்டு வரலாம்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

இதையும் கொஞ்சம் பாருங்க பிரதர்... :)

http://vijay-fanseran.blogspot.com/2010/12/blog-post_2480.html

இப்போ யாரு எங்க இருந்து பதிவ திருடினா? :))

பாரி தாண்டவமூர்த்தி said...

\\ என்ன பண்றது குட்ட குட்ட குனியறது தமிழனோட குணமாச்சே.\\

அதனாலதான் எல்லோரும் நம்மள குத்துறாங்க...இனியாவது நாம மாறனும்...

Anonymous said...

தமிழ்மண விருதில் வெற்றிபெற வாழ்த்துக்கள் !

கவிதை பூக்கள் பாலா said...

குட்ட குட்ட குனியறது தமிழனோட குணமாச்சே. சரி இப்போ எதுக்கு அந்தக்கதை, பதிவுத்திருட்டு மேட்டருக்கே வருவோம்.என்னுடைய பதிவும் இப்படி போகுது சுட சுட ( கவிதை ) பார்த்து மனம் புழுங்குது நம்ம பெயர் லிங்க் எதையாவது குடுத்தாலாவது பரவ இல்லை ... orkut

Dharsh said...

hello prabha . . . i'm Sudharsan . . i'm not doing this blog for money or any others . . i created that blog just for ajith Sir . . i'm die-hard fan of ajith . . i simply post some interesting news for publish to fans which i read . . i'm a 12th std student. . i dont have time to create posts . . i just publishing ajith & vijay news to my friends & fans . . thatz why i created . . sorry for copied from you . .

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன், வருண், எல் கே, சிவகுமாரன், சி.பி.செந்தில்குமார், தமிழ்வாசி - Prakash, எல் போர்ட்.. பீ சீரியஸ்.., கவிதை காதலன், இக்பால் செல்வன், இரவு வானம், நா.மணிவண்ணன், விக்கி உலகம், எம் அப்துல் காதர், அருண் பிரசாத், ம.தி.சுதா, பெயர் சொல்ல விருப்பமில்லை, TERROR-PANDIYAN(VAS), கல்பனா, bala

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்... அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

@ தமிழ்வாசி - Prakash, எம் அப்துல் காதர்

தமிழ்மணத்தில் வாக்களித்ததொடு அதை பகிரங்கமாக அறிவித்த உங்கள் இருவருக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...

Philosophy Prabhakaran said...

@ எல் கே
// சரி விடுங்க. நீங்க பாபுலர் ஆகிட்டு வரீங்கன்னு தெரியுது //

ஆமா ஆமா சரியா சொன்னீங்க நம்ம ரெண்டு பேருமே பிரபலம் ஆயிட்டோம் :)))

Philosophy Prabhakaran said...

@ சிவகுமாரன்
// ஒன்று செய்யங்கள் பிரபா, திருடர்கள் ஜாக்கிரதை என்று எழுதி அந்த இணைய முகவரியை குறிப்பிட்டு உங்கள் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் sms மற்றும் மெயில் அனுப்பிவிடுங்கள். //

அப்படி செய்தால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது... திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// இண்ட்லில பிராப்ளம் ஓட்டு விழலை. நைட் போடறேன் //

ம்ம்... ம்ம்... மறக்காம போடுங்க இப்போ ஒரு நாலஞ்சு நாளா எந்த இடுகையுமே இன்ட்லியில் பாப்புலர் ஆகமாட்டேங்குது...

// இந்த கட்டுரை ஒரு சீரிய்ஸ் ஆனால் அதிலும் காமெடி மிளிருது வாழ்த்துக்கள் //

ஆமா... சாவு வீட்டுக்கு போனாக்கூட அந்த நகைச்சுவை உணர்ச்சி என்னைவிட்டு போகாது...

Philosophy Prabhakaran said...

@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// நீங்க படித்திருக்கக் கூடிய கொஞ்சம் பதிவுகளை வைத்தாவது ஓட்டுப் போடுங்க.. நண்பர்கள்ன்னு பாத்து போடறது சரியில்லன்னு தோணுது.. //

நீங்க சொல்றதும் நியாயமாத்தான் படுத்து... முயற்சி பண்றேன்...

Philosophy Prabhakaran said...

@ இக்பால் செல்வன்
// மேற்கொண்டு என்ன செய்வது என நினைத்தால் இப்பதிவை படித்துப் பாருங்கள், ஒரு விளக்கம் கிடைக்கும்... http://bit.ly/gCFsEW //

அருமை இக்பால்.... உங்களுடைய இடுகையில் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்... நான் நிச்சயம் மாட்டிவிடுறேன்...

Philosophy Prabhakaran said...

@ ம.தி.சுதா
// பதிவு திருட்டு ஒரு சாதாரண விடயமாய் போயிட்டுது... இம்முறை தமிழமண தெரிவில் உள்ள எனது ஆக்கம் ஒன்றை 9 தளங்கள் திருடியிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா...?? //

ஆச்சர்யம் தான்... எனது காவலன் பதிவை கூட இரண்டு தளங்கள் சுட்டிருக்கிறது என்பதை கொஞ்சம் தாமதமாகத்தான் தெரிந்துக்கொண்டேன்...

// எப்ப கண்ணா டெம்ளேட் மாத்தவிங்க... சத்தியமா வாசிக்க ஏலாதாம்... //

இன்னும் 24 மணிநேரத்திற்குள் டெம்ப்ளேட் மாற்றப்படும்...

Philosophy Prabhakaran said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை
// காப்பியடிக்கப்பட்ட பதிவுன்னு லேபில் என் போடலை? //

நாம் அனைவரும் சேர்ந்து போட்ட 54 பின்னூட்டங்களும் நீக்கப்பட்டுவிட்டன...

Philosophy Prabhakaran said...

@ TERROR-PANDIYAN(VAS)
// வாங்க பிரதர் போய் கொஞ்ச நேரம் விள்ளாடிட்டு வரலாம்... :)) //

எனக்காக இந்த திருவிளையாடலை நடத்தியதற்கு நன்றி... காயத்துக்கு மருந்து போட்டது போல இருக்கு...

// இதையும் கொஞ்சம் பாருங்க பிரதர்... :)

http://vijay-fanseran.blogspot.com/2010/12/blog-post_2480.html

இப்போ யாரு எங்க இருந்து பதிவ திருடினா? :)) //

இது திருட்டிலிருந்து திருடப்பட்டது... என்னுடைய போஸ்ட் 28ம் தேதி காலை, முதல் திருட்டு 28ம் தேதி மதியம், இத பதிவு 29ம் தேதி... ஆகமொத்தம் ஒரிஜினல் என்னுடையதுதான்...

எப்பூடி.. said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்,

//http://ajith-vijay.blogspot.com/2010/12/blog-post_5295.html
(பயபுள்ளைங்க கடைசி வரியில் இருந்த என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN என்ற வரிகளைத் தவிர மற்ற அனைத்தையும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள்)//

'என்றும் அன்புள்ள' என்று இருந்ததால்தான் போடாம விட்டிருப்பாங்க போல!! நீங்க வெறும் N.R.PRABHAKARAN என்று போட்டிருந்தா ஒருவேளை போட்டிருப்பாங்களோ என்னமோ:-) அன்பில்லாத பசங்க.

Admin said...

தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா..! முதல் பதிவிற்கு ஓட்டு போட்டாச்சு.. (அப்ப ரெண்டாவது என்னாச்சுன்னு கேட்கப்பிடாது!)

மதிப்புள்ள பொருட்கள் மட்டுமே திருடப்படுகிறது..
:-)

குறையொன்றுமில்லை. said...

வெற்றி பெற வாழ்த்துக்கள். புதுவருட வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி.., Abdul Basith, லக்ஷ்மி

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்... அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

@ Abdul Basith
// தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா..! முதல் பதிவிற்கு ஓட்டு போட்டாச்சு.. (அப்ப ரெண்டாவது என்னாச்சுன்னு கேட்கப்பிடாது!) //

கேட்கமாட்டேன்... ஒரு பதிவிற்கு ஒட்டு போட்டதே பெரிய விஷயம் :) உங்களுக்கு எனது நன்றிகள்...