31 December 2010

புத்தாண்டு சபதங்கள்

வணக்கம் மக்களே...

ஒவ்வொரு புதுவருட பிறக்கும்போதும் இந்த சமுதாயம் நம் முன்பு ஒரு கேள்வியை வைக்கிறது. உங்களுடைய நியூ இயர் ரெசல்யூஷன் என்ன...? (ங்கொய்யால யாருங்க கண்டுபுடிச்சது இந்த மேட்டரை...) சரி, இதுவரை எடுத்த நியூ இயர் ரெசல்யூஷன்களில் ஒன்றையாவது காப்பாற்றியிருக்கிறேனா...?

-          பொண்ணுங்க பேச்சை கேட்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன். நாசமாப் போச்சு.
-          சரக்கை மறக்க நினைத்தேன். நண்பர்கள் ஞாபகப்படுத்தினார்கள்.
-          மற்றவர்களை கலாய்க்கக் கூடாதென்று கருதினேன். பதிவுலக வாழ்க்கையில் அது சாத்தியமா என்ன...?

இதெல்லாம் முடியாதபோது ஒன்றை மட்டும் சாதித்திருக்கிறேன். (வேறு வழியில்லாமல்).
- தம்மடிக்க கூடாது என்று எண்ணினேன். எந்த நேரத்தில் நினைத்தேனோ நான் வழக்கமாக அடிக்கும் இந்தோனேஷியா சிகரெட் கிடைப்பதில்லை. கிங்க்ஸையும் பில்டரையும் பற்ற வைத்தால் வாய் குப்பைலாரி மாதிரி நாறுது. இப்போ வேற வழியில்லாமல் பழக்கத்தை கைவிட்டுவிட்டேன். மேலே படத்தில் இருக்கும் சிகரெட் பிராண்ட் சென்னையில் எங்கேயாவது கிடைக்கிறது என்றால் விவரம் சொல்லுங்கள்.

அப்படியே கொஞ்சம் சீரியஸா இந்த வருடம் எனக்கு என்னென்ன மாற்றங்களை கொடுத்திருக்கிறது என்று சிந்தித்தேன்.
-          வலைப்பூ. சென்ற வருடமே வைத்திருந்தாலும் தீவிரமாக எழுத ஆரம்பித்தது இந்த ஆண்டில்தான். அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் கண்ட வளர்ச்சி அபரிமிதமானது.
-          காதல். சிலபல வருடங்களாக ஒரு தலையாக ஓடிக்கொண்டிருந்த காதல் முற்றுப்புள்ளி என்று நினைத்திருந்த நேரத்தில் கமா போட்டு வேகமெடுத்திருக்கிறது. இதைப் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்.
-          வேலை. ஏதோ எனக்கென்று ஒரு வேலையில் இருந்தேன். இப்போது நல்லவேலையை தேடுகிறேன் பேர்வழி என்று எந்த வேலையும் இல்லாமல் வெட்டியாக இருக்கிறேன்.

சரி, சொல்லவந்த மேட்டர் சின்னதாக இருந்ததால் முன்னாடி இப்படி மொக்கை போட வேண்டியதாகிவிட்டது. அதாகப்பட்டது, நம் வாசகர்கள் பலரது வேண்டுகோளின்படி டெம்ப்ளேட் மாற்றம் செய்ய இருப்பதால் நம்ம கடைக்கு ரெண்டு நாள் லீவு. (எல்லாருக்கும் சந்தோஷமா இருக்குமே). இதுக்கு எதுக்கு ரெண்டுநாள்ன்னு நீங்க கேக்கலாம். அது ஒரு சோகக்கதை. வலைப்பூ ஆரம்பித்த ஆர்வக்கோளாறில் எல்லாப் பதிவுகளிலும் ஏகப்பட்ட கலரிங், பார்மேட்டிங், டிங்கரிங் செய்திருந்தேன். இப்போ என்ன டெம்ப்ளேட்டை மாற்றினாலும் கருமம் பிண்ணனி எழுத்துக்கள் மட்டும் ஆரஞ்சு வண்ணத்திலேயே இருக்கிறது. இதை சரிசெய்ய ஒரே வழி மறுபடி எல்லா இடுகைகளிலும் டிங்கரிங் வேலை பார்ப்பது மட்டுமே என்பதால் இரண்டு நாட்கள் தேவைப்படுகின்றன. மேலும் இந்த இரண்டு நாட்கள் நண்பர்கள் வலைப்பூக்களில் பின்னூட்டமிட முடியாத நிலையிலும் இருக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் மேலும் சில மாற்றங்களோடு 2011ல் வருகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

74 comments:

எல் கே said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள். உங்கள் காதல் திருமணமாய் மாற வாழ்த்துக்கள். விரைவில் வேலை கிடைக்கும்

மாணவன் said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா...

Unknown said...

உங்களுக்கு என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சேலம் தேவா said...

புதுசா வாங்க பாஸ்..!! புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!

வைகை said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

எப்பூடி.. said...

//தம்மடிக்க கூடாது என்று எண்ணினேன். எந்த நேரத்தில் நினைத்தேனோ நான் வழக்கமாக அடிக்கும் இந்தோனேஷியா சிகரெட் கிடைப்பதில்லை.//

இந்தோனேசியாவுக்கு ஒரு டிக்கட் போடா வேண்டியதுதானே? :-)

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

பதிவு அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள். வெள்ளைநிற டெம்பேல்ட் வைத்தால் கண்களைப் பாதிக்காது. படிப்பவருக்கு சுலபமாய் இருக்கும். உதா. http://zenhappiness.net/

Unknown said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>>அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் கண்ட வளர்ச்சி அபரிமிதமானது.


கரெக்ட்


- >>>> காதல். சிலபல வருடங்களாக ஒரு தலையாக ஓடிக்கொண்டிருந்த காதல் முற்றுப்புள்ளி என்று நினைத்திருந்த நேரத்தில் கமா போட்டு வேகமெடுத்திருக்கிறது. இதைப் பற்றி விரிவாக

அட இது வேறயா> இனி கவிதையா வரும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// இப்போ என்ன டெம்ப்ளேட்டை மாற்றினாலும் கருமம் பிண்ணனி எழுத்துக்கள் மட்டும் ஆரஞ்சு வண்ணத்திலேயே இருக்கிறது.//

http://draft.blogger.com சென்று உங்கள் கணக்கில் நுழைந்து

Make Blogger in Draft my default dashboard டிக் செய்து கொண்டு

Design பகுதியை கிளிக் செய்து கொண்டு உள்ளே சென்றால் நீங்கள் நினைத்த எதையும் மாற்ற முடியும்

தமிழ்வாசி பிரகாஷ் said...

புதிய பொலிவுடன் வரும் உங்களை வரவேற்க காத்திருகிறோம்!

யோ வொய்ஸ் (யோகா) said...

கடைக்கு ரெண்டு நாள் லீவா, கடையை சூப்பர் மார்க்கட்டாக மாற்ற போகிறீர்களோ?

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

படத்தில் உள்ள சிகரட் இந்தியாவில் கிடச்சாலும் யாரும் சொல்லாதீங்க..
(ha haa.. உங்க நியூ இயர் கொள்கை....என்னாகிறது...?? )

டெம்ப்ளேட் மாத்திட்டு, வாங்க.. அடுத்த வருடம் பார்க்கலாம்...! :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

[im]http://www.trendsupdater.com/wp-content/uploads/2010/12/happy-new-year-2011-iphone.jpg[/im]

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள்....

Unknown said...

அந்த சிகரெட் கரையறதுக்கு கால் மணிநேரத்துக்கு மேல ஆகுமே . என்ன ஒன்னு அடிச்சுட்டு பார்த்தா இனிப்பா இருக்கும் வாயெல்லாம் .

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபா....


எதுக்கும் டெம்பிளேட் பேக் அப் எடுத்து வைத்துக்கொண்டு எதையும் செய்யுங்கள்

Speed Master said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள், கடை ரெண்டு நாளு லீவா? சரி அப்போ மூனாவது நாள் கடை தொறக்கலேன்னா, ஏலத்தில் விடப்படும்.....
காதலு, கத்திரிக்கான்னு எதையாவது பண்ணுங்க... ஆனா கவித கிவிதன்னு டார்ச்சர் பண்ணா அப்புறம் இருக்கு.........!

ம.தி.சுதா said...

பிரபா நல்ல பையன் ஆயிட்டாண்டியோய்...

தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்

Unknown said...

உண்மைக் காதல் நிச்சயம் தோற்காது.. உங்கள் காதல் திருமணத்தில் முடிய என் வாழ்த்துக்கள்..

go to template designer and change ur text color..

settaikkaran said...

சபதங்கள் இனிதே நிறைவேறட்டும்! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! :-)

டிலீப் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

2010-ன் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் ,இசையமைப்பாளர்கள்

ஜில்தண்ணி said...

நிறைய மாத்திக்கனும்..பாப்போம் அடுத்த வருசம் என்னாதான் ஆகுதுன்னு :)

புத்தாண்டு வாழ்த்துக்கள் மாம்சு :)

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரபா :-)

தினேஷ்குமார் said...

பிரபா இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

Nirmal said...

The brand you have mentioned is Indonesian brand, I used to smoke very rarely with my Indonesian friends, Specialty is this cigarette tobacco is mixed with Cloves ( Lavangam) and Cinnamon ( Pattai). So when you smoke you get different taste. I like it. If you want I will ask my friends to bring some packs for you. Send me a mail to nirmalcb@gmail.com

Unknown said...

அந்த சிகரெட் குடித்தால் உங்கள் தெரு பக்கமே யாரும் வராத மாதிரி நாற்றம் அடிக்குமே
அதையா கேட்கிறீர்கள்

suneel krishnan said...

புத்தாண்டு நல வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் said...

இனிய புத்தாண்டில்.... காதல் வாழ்க!!

Jana said...

எல்லோரும், எல்லாமும் பெற வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

>>> பிரபா.. ஆங்கில புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சியையும் தரட்டும்!!

Kanchana Radhakrishnan said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்

செங்கோவி said...

புத்தாண்டு வாழ்த்துகள்...கண்ணை எரிக்கும் டெம்ப்லேட்டை மாற்றுவதற்கு நன்றி.

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Vinu said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தூயவனின் அடிமை said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

@ எல் கே, மாணவன், விக்கி உலகம், சேலம் தேவா, வைகை, எப்பூடி.., பாண்டிச்சேரி வலைப்பூ, குழந்தை நல மருத்துவன்!, சி.பி.செந்தில்குமார், SUREஷ் (பழனியிலிருந்து), தமிழ்வாசி - Prakash, யோ வொய்ஸ் (யோகா), Ananthi (அன்புடன் ஆனந்தி), பிரஷா, நா.மணிவண்ணன், அருண் பிரசாத், Speed Master, பன்னிக்குட்டி ராம்சாமி, ம.தி.சுதா, ஜெ.ஜெ, சேட்டைக்காரன், டிலீப், ஜில்தண்ணி - யோகேஷ், இரவு வானம், dineshkumar, Nirmal, ஹாஜா மொஹைதீன், dr suneel krishnan, எம் அப்துல் காதர், Jana, ரஹீம் கஸாலி, சிவகுமார், Kanchana Radhakrishnan, செங்கோவி, அஞ்சா சிங்கம், கலாநேசன், Vinu, இளம் தூயவன், ஜீ...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்... அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// இந்தோனேசியாவுக்கு ஒரு டிக்கட் போடா வேண்டியதுதானே? :-) //

இதுக்காக அவ்வளவு தூரம் போய்வர முடியாதே :(

Philosophy Prabhakaran said...

@ பாண்டிச்சேரி வலைப்பூ
// வெள்ளைநிற டெம்பேல்ட் வைத்தால் கண்களைப் பாதிக்காது. படிப்பவருக்கு சுலபமாய் இருக்கும் //

ஆமாம் நண்பா... அதுபோலத்தான் அமைக்க இருக்கிறேன்... அப்புறம் உங்கள் ஆங்கில வலைப்பூ அருமை...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// அட இது வேறயா> இனி கவிதையா வரும் //

அது இப்போ இல்ல... வலைப்பூ ஆரம்பிச்ச காலத்துல இருந்தே நடந்துகிட்டு இருக்கு... ஆனா கவிதைதான் வரமாட்டேங்குது...

Philosophy Prabhakaran said...

@ SUREஷ் (பழனியிலிருந்து)
// http://draft.blogger.com சென்று உங்கள் கணக்கில் நுழைந்து

Make Blogger in Draft my default dashboard டிக் செய்து கொண்டு

Design பகுதியை கிளிக் செய்து கொண்டு உள்ளே சென்றால் நீங்கள் நினைத்த எதையும் மாற்ற முடியும் //

நீங்கள் சொல்லும் முறையை நான் ஏற்கனவே முயற்சி செய்துவிட்டேன்... அது பலனளிக்கவில்லை... இருப்பினும் உங்கள் ஆலோசனைக்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

@ யோ வொய்ஸ் (யோகா)
// கடைக்கு ரெண்டு நாள் லீவா, கடையை சூப்பர் மார்க்கட்டாக மாற்ற போகிறீர்களோ? //

கிட்டத்தட்ட அப்படித்தான்... ரெண்டு நாளைக்கு அப்புறம் வந்து பாருங்க தெரியும்...

Philosophy Prabhakaran said...

@ Ananthi (அன்புடன் ஆனந்தி)
// படத்தில் உள்ள சிகரட் இந்தியாவில் கிடச்சாலும் யாரும் சொல்லாதீங்க..
(ha haa.. உங்க நியூ இயர் கொள்கை....என்னாகிறது...?? ) //

ஏன் இந்த கொலைவெறி... நான் பாவம் இல்லையா...

// [im]http://www.trendsupdater.com/wp-content/uploads/2010/12/happy-new-year-2011-iphone.jpg[/im] //

பின்னூட்டத்தில் படம் வரும் டெக்னிக் இதுவரை நமது வலைப்பூவில் செயல்படுத்தவில்லை... விரைவில் செயல்படுத்துகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// அந்த சிகரெட் கரையறதுக்கு கால் மணிநேரத்துக்கு மேல ஆகுமே . என்ன ஒன்னு அடிச்சுட்டு பார்த்தா இனிப்பா இருக்கும் வாயெல்லாம் //

நீங்களும் அடிச்சிருக்கீங்க போல... அப்புறம் கிங்க்ஸ், பில்டர் அடிக்கிறவங்கள பத்தி கொஞ்சம் தரக்குறைவா எழுதிட்டேன்... தப்பா எடுத்துக்காதீங்க...

Philosophy Prabhakaran said...

@ அருண் பிரசாத்
// எதுக்கும் டெம்பிளேட் பேக் அப் எடுத்து வைத்துக்கொண்டு எதையும் செய்யுங்கள் //

சரி ஓகே... நினைவூட்டியதற்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// கடை ரெண்டு நாளு லீவா? சரி அப்போ மூனாவது நாள் கடை தொறக்கலேன்னா, ஏலத்தில் விடப்படும்... //

ஆஹா... சொல்ல மறந்துட்டேன்... திடீர்னு மூடு சரியில்லன்னா லீவ் extend ஆகுமே...

// காதலு, கத்திரிக்கான்னு எதையாவது பண்ணுங்க... ஆனா கவித கிவிதன்னு டார்ச்சர் பண்ணா அப்புறம் இருக்கு.........! //

உங்க எல்லாரோட நல்ல நேரம் இதுவரைக்கும் அப்படி எதுவும் வந்து தொலைக்கலை...

Philosophy Prabhakaran said...

@ ம.தி.சுதா
// பிரபா நல்ல பையன் ஆயிட்டாண்டியோய்... //

டெம்ப்ளேட் மாற்றப்போவதற்குத்தானே இந்த வரிகள்... நன்றி...

Philosophy Prabhakaran said...

@ ஜெ.ஜெ
// உண்மைக் காதல் நிச்சயம் தோற்காது.. உங்கள் காதல் திருமணத்தில் முடிய என் வாழ்த்துக்கள்.. //

ஆறுதல் தரும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி...

// go to template designer and change ur text color.. //

பலனளிக்கவில்லை...

Philosophy Prabhakaran said...

@ Nirmal
// The brand you have mentioned is Indonesian brand, I used to smoke very rarely with my Indonesian friends, Specialty is this cigarette tobacco is mixed with Cloves ( Lavangam) and Cinnamon ( Pattai). So when you smoke you get different taste. I like it. If you want I will ask my friends to bring some packs for you. Send me a mail to nirmalcb@gmail.com //

நீங்கள்தானே Mrinzo Nirmal உங்களைப் பற்றி பார்வையாளரின் தளத்தின் மூலம் நிறைய அறிந்திருக்கிறேன்... எனது தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள்.. உங்கள் அன்புக்கு நன்றி... எனினும் "Gudang Garam" என்றழைக்கப்படும் இந்த சிகரெட் சென்னை பர்மா பஜாரில் பெட்டி பெட்டியாக ஹோல்சேலில் கிடைப்பதாகவும், மேலும் நுங்கம்பாக்கம், வேளச்சேரி போன்ற இடங்களில் லூசிலும் கிடைப்பதாக நண்பர்கள் மூலம் தெரிந்துக்கொண்டேன்...

Philosophy Prabhakaran said...

@ ஹாஜா மொஹைதீன்
// அந்த சிகரெட் குடித்தால் உங்கள் தெரு பக்கமே யாரும் வராத மாதிரி நாற்றம் அடிக்குமே //

என்னது நாற்றமா... பாஸ் அது ஒரு நறுமணம்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//// go to template designer and change ur text color.. //

பலனளிக்கவில்லை...//

நீங்கள் விரும்பும் வண்ணத்திற்கு எழுத்துக்களை மாற்றியபின்னர் அப்ளை டூ ப்ளாக் கை ஒரு கிளிக் செய்யவும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்கள் வைத்திருக்கும் டெம்ப்ளேட் பிளாக்கருடையதே கிடையாது என்று நினைக்கிறேன்.

Philosophy Prabhakaran said...

@ SUREஷ் (பழனியிலிருந்து)

பின்னிரவு நேரத்திலும் சளைக்காமல் பதில் பின்னூட்டம் போட்டதற்கு நன்றி...

// நீங்கள் வைத்திருக்கும் டெம்ப்ளேட் பிளாக்கருடையதே கிடையாது என்று நினைக்கிறேன் //

ஆம்... இது பிளாக்கர் டெம்ப்ளேட் கிடையாது... அதுதான் பிரச்சனையே...

மேலும் எனது பிரச்னையை எப்படி புரிய வைப்பதென்று புலப்படவில்லை... அதாவது ஒவ்வொரு பதிவு போடும்போதும் நான் அதை "default font color" ல் வைத்திருந்தாள் இப்போது நீங்கள் சொல்வதுபோல எளிதாக மாற்றியிருக்கலாம்... ஆனால் நான் ஒவ்வொரு பதிவிலும் எழுத்துக்களை மொத்தமாக செலெக்ட் செய்து அதை ஆரஞ்சு நிறத்தில் மாற்றி அமைத்தேன்... இப்போது எந்த டெம்ப்ளேட் மாற்றினாலும், default கலரை எப்படி மாற்றியமைத்தாலும் பழைய பதிவுகள் மட்டும் ஆரஞ்சு வண்ணத்திலேயே இருக்கின்றன... இப்போது இந்த சிக்கலை தீர்க்க நான் ஒவ்வொரு இடுகையையும் edit செய்து அதன் எழுத்துரு வண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

// பொண்ணுங்க பேச்சை கேட்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன். நாசமாப் போச்சு//
அதாவது பொண்ணுங்க பேச்சை கேக்காததால நாசமா போச்சுனு சொல்றீங்க கரெக்ட்ஆ? I like it...ha ha

Happy new year to u

FARHAN said...

பழையதை மறப்போம்
புதியதை நினைப்போம்

கோவங்களை துரோப்போம்
சந்தோசங்களை பகிர்வோம்
...
எதிரியை மன்னிப்போம்
நண்பனை நேசிப்போம்

சொன்னதை செய்வோம்
செய்வதை சொல்வோம்

தீயதை விட்தெரிவோம்
நல்லதை தொடர்வோம்

2010 இற்கு விடை கொடுப்போம்
2011 இணை வரவேற்போம் ...


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
wish u happy new year to all

ரஹீம் கஸ்ஸாலி said...

புதிய டெம்ப்ளேட் கலக்கல். உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே....

ரஹீம் கஸ்ஸாலி said...

நண்பரே வாக்குப்பட்டைகளை காணவில்லை. கவனிக்கவும்

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த தளத்தில் பார்க்கவும்
http://ta.indli.com/static/add-indli-voting-widget-blogger-tamil

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

ரஹீம் கஸ்ஸாலி said...

மீண்டும் தமிழ்மணம் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் 20-இல் 9-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்.

Harini Resh said...

உங்உங்களுக்கு என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்கள் காதல் வெற்றி பெறவும் விரைவில் வேலை கிடைக்கவும் வாழ்த்துக்கள் தம்பி

சர்பத் said...

எலிக்கு பயந்து வீட்ட கொளுத்தறதா? வாசத்துக்கு பயந்து தம் அடிகரத விடறதா? அய்யகோ...

anyways happy new year :)

settaikkaran said...

வலைப்பூவை அருமையாக மாற்றி அமைத்திருக்கிறீர்கள்! இவ்வாண்டிலும் பட்டை கிளப்ப எனது நல்வாழ்த்துகள்! :-)

எப்பூடி.. said...

இப்பதாங்க கண்ணுக்கு பாதிப்பில்லாம உங்கள் கடைக்கு வர முடியுது:-) அடுத்த பதிவை காணம்!!!

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா ,அட்டகாசம். புதிய லே அவுட் அருமை. தமிழ்மனம் 51 & 31 ரேங்க் வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

கண்ணைக்கவரும் வகையில் பிளாக் லே அவுட் ,கருத்தை கவரும் வகையில் லோகோ (எம் ஆர் ராதா)சூப்பர்

எப்பூடி.. said...

ப்ரோபையில் பிக்சரா உங்க படம் இருந்தது ஒரு அடையாளமாக இருந்தது, அதை மாற்றியிருக்க வேண்டாமே !!!!!

Gopikaa Ramanan said...

Happy New Year to you!
Indha 2011-il ungal kaadhal vetri pera matrum ungaluku oru velai-illa velai kidaika en vazhthukkal. :)

Nirmal said...

Gudang means Gudown ( Gidangu) Garam means Salt. in Indonesian language