4 February 2011

ட்விட்டருக்கு வாருங்கள் பதிவர்களே...!


வணக்கம் மக்களே...


கடந்த ஒருவார காலமாக தமிழக மீனவர்களின் நலனுக்காக இணைய வழிப் போராட்டம் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதிலும் மையப்புள்ளியாக ட்விட்டர் சேவையும் #tnfisherman என்னும் ஹாஷ் குறியீட்டு போராட்டமும் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் போராட்டத்தில் இன்னும் எழுச்சி தேவை என்று பன்னிக்குட்டி ராம்சாமி சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவிட்டிருந்தார். உண்மையும் அதுதான். நம்மில் நிறைய பேரிடம் ட்விட்டர் கணக்கு இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலானோர் மீனவப் போராட்டத்திற்காக அவசர அவசரமாக ட்விட்டர் கணக்கை தொடங்கி இருக்கிறார்கள். நீங்களும் ஒன்றைத் தொடங்கலாமே. சில பேர் எனக்கு 140 எழுத்துக்களுக்குள் நறுக்கென்று ட்வீட்டடிக்க தெரியவில்லை என்று அலுத்துக்கொள்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும், நானும் அப்படித்தான். நம்மைப் போன்றவர்களுக்காகத் தான் ரீட்வீட் (retweet) என்றொரு ஆப்ஷன் இருக்கிறது. அதாவது வேறு யாராவது சொன்னதை வழிமொழிவது. நம்முடைய பங்கிற்கு இதைச் செய்தாலே போதுமானது. கமெண்ட்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மீடியாக்களின் கவனம் நம் பக்கம் திரும்புவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆகவே மக்களே, இந்த இணைப்பை சொடுக்கவும். உங்கள் ட்வீட்டுக்கு பின்னால் #tnfisherman என்ற வார்த்தையை சேர்த்து அனுப்ப ஆரம்பியுங்கள்.

இதுவரைக்கும் நான் வழிமொழிந்த சில ட்வீட்ஸ் உங்கள் பார்வைக்காக.

அலைவரிசைக்கு ஒரு நியாயம் கிடைச்சிருக்கு.. இலங்கையின் கொலைவரிசைக்கு எப்ப நியாயம் கிடைக்கும்? #tnfisherman

சிற்றெறும்பு கடி போல டுவீட்டுகள் அரசியல்வாதிகள் தூக்கத்தைக் கலைக்கட்டும் #tnfisherman

Next time when you are ordering fish curry in a restaurant, remember its not the fish alone which is dead. #tnfisherman

மீனவர்கள் குடும்ப பிரச்சினைகளுக்காக தாங்களே கடலில் சென்று தற்கொலை செய்துகொள்கின்றனர்” -கருணாநிதி #tnfisherman

Dear KamalaHassan , you said that TN didnt care abt Mumbai Blasts. Did u see the plight of #tnfisherman . ?

ஒருவேளை தென் அமெரிக்க மீனவன் சுடப்பட்டு இருந்தால் @CharuNivedita குரல் கொடுத்து இருப்பாரோ? #TNfisherman

இது கல்யாண வீடல்ல கூவி கூவி அழைப்பதற்கு, சாவு வீடு கூப்பிடாமலேயே வாங்கப்பா #tnfisherman

தேர்தலை வச்சுக்கிட்டே இப்படி பண்றாங்களே, தேர்தல் முடிஞ்சிட்டா என்னென்ன அக்கிரமம் நடக்குமோ? #TNfisherman

விதவை கோட்டாவில் உங்க அன்னைக்கு இந்தியா. எங்காத்தாவுக்கு சத்துணவு கூடமா?” – மீனவனின் மகன் #tnfisherman

அடுத்து வரப்போற ஆட்சியை தீர்மானிக்கபோவது voter இல்லை twitter #tnfisherman

பிப்ரவரி 4 இலங்கையில் சுதந்திர தினம்...தமிழர்களுக்கு....? #tnfisherman

உங்களால என்ன முடியும்ன்னு கேட்டவங்கள்லாம் #tnfishermanக்கு வந்த ட்வீட்ஸ எண்ண முடியுமான்னு பாருங்கய்யா..

தமிழுக்காக, தமிழ்நாட்டுக்காக உயிரைக் கொடுப்பேன்என்றீர்களே.. யார் உயிரை என்று நாங்கள்தான் புரிந்துகொள்ளவில்லை! #tnfisherman

உங்க குடும்பத்துக்கு ஆயிரம் தொழில் இருக்கலாம். அவஙக்ளுக்கு இது ஒண்ணுதான்யா தொழில் #tnfisherman

காவு கொடுக்கவேண்டிய கசாபுக்கு இராஜ பாதுகாப்பு, பாதுகாக்க வேண்டிய மினவர்கள இந்த அரசாங்கம் பலிகொடுத்திட்டு இருக்கே. #tnfisherman

அருணாசலபிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதிதான் - பிரதமர் #அப்ப தமிழ்நாடு.? #tnfisherman

தப்பு செய்யுற மீனவர்கள கொல்லக்கூடாதாம், கைது செய்யணுமாம்-பிரணாப் முகர்ஜி. எங்க மீனவர்கள் என்ன சாராயமா காய்ச்சுராங்க? #tnfisherman

காங்கிரஸ் கட்சிக்கு ஆட்கள் தேவை. மானம்கெட்டவர்கள், கூட்டிக்கொடுப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் - சோனியா காந்தி #tnfisherman

சகதமிழர்களின் சாவைசடலங்களைஎந்தசலனமுமில்லாமல் பார்த்து கொண்டிருக்கும் சாத்தான்களே..உங்கள் உடம்பில் ஓடுவது என்ன சாக்கடையா..?#tnfisherman

எல்லை தாண்டி மீன் பிடிச்சான் என்பது சாக்குபோக்கு நிவாரணம் கொடுப்பது நேக்கு புரியாத தமிழன் பேக்கு #tnfisherman

உங்க அரிசில உங்க அடுப்புல சோறு பொங்கியாச்சு. சேந்து சாப்பிட புருசன் இல்லாம பண்ணிட்டீங்களேடா #TNfisherman


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 comments:

Unknown said...

மீ தி பிரஸ்ட்

Unknown said...

நான் கீதபிரியன் சொன்னவுடனே செய்துவிட்டேன் நண்பரே

Unknown said...

நன்றி உங்க இப்போதான் முடிச்சேன்

நன்றி உங்க twitter account சொல்லுங்க

சாப்பிட மீன் கொழம்பு போதும்னு நெனச்சது அந்தக்காலம் சாப்பிடறதே மீனவன் உடம்பு தான் இது இந்தக்காலம் #tnfisherman

சி.பி.செந்தில்குமார் said...

>>>அடுத்து வரப்போற ஆட்சியை தீர்மானிக்கபோவது voter இல்லை twitter

idhu இது டாப்

sathishsangkavi.blogspot.com said...

//Sangakavi

வடஇந்திய மீனவனை தாக்கி இருந்தால் அங்க இருக்குற மீடியா சும்மா இருப்பாங்களா?தமிழ் மீனவனின் நிலைமை ஒரு நாள் செய்திதான்#tnfisherman //

என் பங்குக்கு...

Unknown said...

ok

Anonymous said...

அடுத்த ஆட்சியை ட்விட்டர் தீர்மானிக்குமா???
அடக் கொடுமையே.. அப்டினா எல்லாரும் vote போடாமல் tweet போட்டால் போதும் போல..

settaikkaran said...

Already sent petition.Thanks.

Speed Master said...

Yes SIr

கார்த்தி said...

இந்த டுவீட்டுக்கள் எழுச்சியின் குரல்கள்தான் எனினும் இது எவ்வளவு துாரத்திற்கு மீனவர்களுக்கு நலனை செலுத்தப்போகிறது என்று தெரியிவில்லை. வீதியில் மக்கள் இறங்காதவரை பிரச்சனைக்கு நல்ல முடிவு காணமுடியாது!

அஞ்சா சிங்கம் said...

selwin76 selwin
பிணத்தை வைத்து அரசியல் செய்யும் பினம்தின்னிகளே உங்கள் அரசியலுக்கு இந்த முறை அஜீரணம்தான் #tnfisherman

அஞ்சா சிங்கம் said...

selwin76 selwin
ஐயா மஞ்சள்துண்டு மகராசா நீ ஆண்டது போதாதா மக்கள் மாண்டது போதாதா #tnfisherman

அஞ்சா சிங்கம் said...

selwin76 selwin
சோழர்கள் காலத்தில் கடல் வல்லரசாக இருந்த தமிழன் இந்தியன் என்று ஆனபிறகு இப்போது கடலில் இறங்கினால் கொல்றாங்கப்பா #tnfisherman

அஞ்சா சிங்கம் said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

//சில பேர் எனக்கு 140 எழுத்துக்களுக்குள் நறுக்கென்று ட்வீட்டடிக்க தெரியவில்லை என்று அலுத்துக்கொள்கிறார்கள்.//

அது அடியேன் தான்:)வளவளத்தான் பின்னூட்டம் போட்டுப்பழக்கப்பட்டு ட்விட்டர் கலை எனக்கு கைவரவில்லை.ஏதோ ஒப்புக்கு சப்பாணியா சொல்றமாதிரி இருக்குது எனக்கு!

ராஜ நடராஜன் said...

பெட்டிசன்,ரிவீட் எல்லாமும் செய்து விட்டேன்.மீண்டும் வரவேண்டுமென்றால் இதோ புறப்படுகிறேன்.

Anonymous said...

அருணாசலபிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதிதான் - பிரதமர் #அப்ப தமிழ்நாடு.? #tnfisherman

நச்சுன்னு ஒரு கேள்வி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி பிரபாகரன். தொடர்ந்து போராடுவோம்.
ட்வீட்டரில் அதிக எண்ணிக்கையில் ட்விட்டுகள் என்பதைவிட அதிக ஆட்களின் ட்வீட்டுகள் என்பதற்கே அதிக முக்கியத்துவும் உள்ளது. எனவேதான் இன்னும் அதிகமான நண்பர்கள் பங்கெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம். உங்கள் ட்வீட்டுகளாலும் ஒரு மாற்றம் வர இருக்கிறது, இனியும் தாமதிக்காமல் ட்வீட்டுங்கள்!

Philosophy Prabhakaran said...

@ டெனிம், விக்கி உலகம், சி.பி.செந்தில்குமார், சங்கவி, நா.மணிவண்ணன், இந்திரா, சேட்டைக்காரன், Speed Master, கார்த்தி, அஞ்சா சிங்கம், ராஜ நடராஜன், கந்தசாமி., பன்னிக்குட்டி ராம்சாமி

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... இதைவிட தீவிரமாக மீனவர்களுக்காக ட்விட்டரில் உங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டுகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
// நன்றி உங்க twitter account சொல்லுங்க //

nrflyingtaurus... உங்களோடது...?

Philosophy Prabhakaran said...

@ இந்திரா
// அப்டினா எல்லாரும் vote போடாமல் tweet போட்டால் போதும் போல.. //

இப்போதுள்ள சூழ்நிலைக்கு vote போடுவதை விட tweet போடுவது முக்கியமாகிவிட்டது மேடம்...

Philosophy Prabhakaran said...

@ கார்த்தி
// இந்த டுவீட்டுக்கள் எழுச்சியின் குரல்கள்தான் எனினும் இது எவ்வளவு துாரத்திற்கு மீனவர்களுக்கு நலனை செலுத்தப்போகிறது என்று தெரியிவில்லை. வீதியில் மக்கள் இறங்காதவரை பிரச்சனைக்கு நல்ல முடிவு காணமுடியாது! //

நண்பா... ட்வீட்டுகள் மட்டுமல்ல இன்னும் நிறைய விஷயங்களை ட்விட்டர் பெருமக்கள், பதிவுலக பெரியவர்கள் இணைந்து செயலாற்றி வருகிறார்கள்... சென்னையில் ட்விட்டர் பயனாளர்கள் சந்திப்பு நடைபெற்று பல விஷயங்களை முடிவு செய்தனர்... மேலும் தெரிந்துக்கொள்ள: http://sharankay.wordpress.com/2011/01/31/neythal-kurippugal/

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
உங்க பதிவுலக புனைப்பெயருக்கு ஏற்ற மாதிரியே கலக்கிட்டீங்க...

// This post has been removed by the author. //

இது என்ன...? எதுவும் கெட்டவார்த்தை ட்வீட்டா...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ட்வீட்டரில் அதிக எண்ணிக்கையில் ட்விட்டுகள் என்பதைவிட அதிக ஆட்களின் ட்வீட்டுகள் என்பதற்கே அதிக முக்கியத்துவும் உள்ளது. எனவேதான் இன்னும் அதிகமான நண்பர்கள் பங்கெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம். //

அப்படிங்களா... நான் கூட இதுவரை ட்விட்டரில் பெரிய அளவில் எனது பங்களிப்பை அளிக்கவில்லை என்றே நினைக்கிறேன்... இன்னும் நிறைய ரீட்வீட்டுகிறேன்...

Unknown said...

வாழற நாளெல்லாம் சாகுற நாளா இருக்கே இதுல எங்க சந்தோசம் இருக்கு படுபாவிங்களா #tnfisherman