2 February 2011

கொஞ்சம் சாரு, கொஞ்சம் சாண்டில்யன் ஒன்றாய்ச் சேர்ந்தால்...?


வணக்கம் மக்களே...

மீண்டுமொரு நாள் புத்தக சந்தையில் பதிவுலக நண்பர் ஒருவருடன் மேயந்துக்கொண்டிருந்தேன். வானதி பதிப்பகம் வாசலில் நின்று புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று நண்பர் நீங்க, சாண்டில்யனின் கடல்புறா நாவலை படித்திருக்கிறீர்களா...? என்றார். நான் சாண்டில்யனா...? யாருங்க அவருன்னுற மாதிரி பேந்தப் பேந்த முழிச்சேன். அந்த ஜெர்க்கை வெளியே காட்டிக்கொள்ளாமல் ஏதோ நான் சாண்டில்யன் ஒருவரது புத்தகங்களைத் தவிர அனைத்து புத்தகங்களையும் கரைத்துக் குடித்தவன் போல இல்லிங்களே... என்று நெற்றிச்சுருக்கி பதில் சொன்னேன். சாண்டில்யன் எழுத்துக்களை படிக்காதவனெல்லாம் உயிரோட இருக்குறதே வேஸ்டுன்னு சொல்றா மாதிரி ஏற இறங்க ஒரு லுக் விட்டார்.

அதன்பிறகு அவருக்கே தெரியாமல் சில சாண்டில்யன் நாவல்களை நோட்டமிட்டபடி வந்தேன். ஒவ்வொன்றிலும் மன்னர் காலத்து கதை என்பது போன்ற ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. பொதுவாக இந்தமாதிரி நாவல்களின் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. ஆன்மிக புத்தகமாக இருந்துவிடுமோ என்ற ஐயப்பாடு. நண்பர் பார்த்த பார்வை மனதை பாடாய்ப்படுத்திக்கொண்டிருந்தது. சரி, என்ன தான் இருக்கிறதென்று படித்துப் பார்த்துவிடுவோமே என்று எண்ணம் மெலிதாக எட்டிப்பார்த்தது. முப்பதிற்கும் மேற்பட்ட நாவல்களில் எதை வாங்குவது என்று தெரியவில்லை.

மறுபடியும் அந்த நண்பரிடமே சென்று வெட்கத்தை விட்டு சாண்டில்யன் நாவல்களில் எது அருமையாக இருக்கும் என்றொரு வரலாற்று சிறப்புமிக்க கேள்வியைக் கேட்டேன். அவர் கடல் புறா என்று கையை நீட்டி காண்பித்தார். ஆங்கே உண்மைத்தமிழன் பதிவு சைஸில் மூன்று புத்தகங்கள் இருந்தன. வெளங்கிடும்ன்னு மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஒரு மரியாதைக்காக அந்த மூன்றில் ஒன்றினை கையில் தூக்கிப்பார்த்தேன். என்னுடைய புஜங்கள் இதுநாள் வரை பலமில்லாமல் இருந்ததன் ரகசியம் புரிந்தது. நண்பர் ஜீன்ஸ் போட்டிருந்த பிகர் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த கேப்பில் நைஸாக புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு நகர்ந்தேன்.

அடுத்தமுறை சாண்டிலயனைப் பற்றி கொஞ்சம் விக்கிபீடியா பார்த்து தெரிந்துக்கொண்டு மீண்டும் புத்தக சந்தைக்கு சென்றேன். ஓவர் டூ வானதி பதிப்பகம். அடுக்கி வைத்திருந்த நாவல்கள் ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்ந்துக்கொண்டிருந்தேன். வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டுமென்றால் எது குறைந்த விலை, குறைந்த பக்கங்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது சாண்டில்யனின் எழுத்துக்களை ருசி பார்த்துவிடும் முனைப்பில் ராஜ யோகம் என்ற தலைப்பிட்ட நாவலை தேர்ந்தெடுத்தேன்.

அடுத்ததாக சாரு. பதிவுலகை பொறுத்தவரையில் இங்கே சாருவின் சாற்றை ஒருதுளி கூட விடாமல் பிழிந்துக்குடித்தவர்கள் அதிகம். (சாருவையே பிழிந்தவர்கள் அதைவிட அதிகம்). இவ்வாறாக சாருவை ஆராதிக்கும் ஒரு கூட்டமும், சாருவை அசிங்கப்படுத்தும் ஒரு கூட்டமும் இருக்குமிடத்தில் சாருவைப் பற்றி எழுதவே பயமாக இருக்கிறது. ஏனெனில் எனக்கு சாரு பற்றி எதுவும் தெரியாது என்பதே அப்பட்டமான உண்மை.

சாருவைப் பற்றி முதல் முதலாக அறிந்துக்கொண்டது குமுதத்தில் தொடராக வெளிவந்த கோணல் பக்கங்களின் மூலமாகத்தான். நான் படித்த சில எபிசோடுகளும் மது, மாது சார்ந்தவையாகவே இருந்தன. அந்த போதையும் எழுத்துநடையில் இருந்த வசீகரமும் எனக்கு பிடிக்கவே செய்திருந்தது. அதைத் தொடர்ந்து வந்த புத்தக சந்தையில் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) சாருவின் எழுத்துக்களை இன்னும் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் கலகம், காதல், இசை என்ற கட்டுரைத்தொகுப்பை வாங்கினேன்.

ஏன் அந்த புத்தகத்தை வாங்கினேன் என்று பின்னாளில் என்னை நானே திட்டிக்கொண்டேன். சத்தியமா சொல்றேன், அந்த புத்தகத்தில் இருக்கும் எதுவுமே எனக்கு புரியவில்லை. ஒருவேளை பின்நவீனத்துவவாதிகளுக்கு மட்டும்தான் புரியுமோ என்னவோ...? அதன்பிறகு அந்த புத்தகத்தை அலமாரியில் இருந்து எடுக்கவே இல்லை. பரிசளிக்கும் சாக்கில் யாருடைய தலையிலாவது கட்டிவிட வேண்டுமென்று உத்தேசம்.

அப்புறம், பதிவுலகம் வந்தபின்பு குறிப்பாக நித்தியானந்தா டிவி சேனல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டிருந்த சமயம் சாருவை நக்கலடித்து ஆங்காங்கே சில பதிவுகள் எழுதப்பட்டு வந்தன. படிப்படியாக மனதில் சாருவின் மீதிருந்த மரியாதை தேய்ந்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரது எந்திரன், மன்மதன் அம்பு படங்களின் விமர்சனங்களை படிக்க நேர்ந்தது. அதன்பிறகு சொல்லவே வேண்டும். சாருன்னா யாருன்னு கேட்குற அளவுக்கு மாறினேன்.

என்னதான் நடந்தாலும் ஒருசிலர் சாருவை சிலாகிப்பதை பார்க்கும்போது என்னதான் இருக்கிறது சாருவிடம் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் தேகம் நாவலை வாங்கியிருக்கிறேன். யாரோ ஒருவர் சொல்லிக்கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு நாவலைப் படிக்கும்போது எந்தவித எதிர்ப்பார்ப்பும் மனதில் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் மட்டுமே நாவலை முழுமையாக ரசிக்க முடியுமென்று. எனவே எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. யாரிடமும் கருத்து கேட்கவில்லை. கேட்டாலும் தெளிவான விடை கிடைப்பதில்லை. ஒருவர் ராஸ லீலா மாதிரி யாரும் எழுத முடியாதுன்னு சொல்றார். ஒருவர் ஜீரோ டிகிரி தான் சாருவின் மாஸ்டர் பீஸ் என்கிறார். மற்றொருவர் ஜீரோ டிகிரி படித்தால் தலைவலி நிச்சயம் என்கிறார். இப்படியாக சாருவைப் பற்றி தெளிவான எண்ணங்கள் கிடைக்காத நிலையில் எந்தவித எதிர்ப்பார்ப்புக்களுமின்றி தேகத்தில் இருந்து சாருவை படிக்க ஆரம்பிக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

77 comments:

சக்தி கல்வி மையம் said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....

க ரா said...

நல்லா படிங்க.. நாளைக்கு கொஸ்டின் கேக்கறோம்.. ஒழுங்கா பதில் சொல்லனும்... பதில் தப்பா சொன்னா உ.த. அண்ணாச்சியோட ஒரு பத்து பதிவ எடுத்து ஆயிரம் தடவ இம்போசிஷன் எழுதனும் :)

settaikkaran said...

உங்களுக்கும் எனக்கும் இருக்கிற இன்னொரு ஒற்றுமை; எனக்கும் சாரு நிவேதிதா பற்றி தெரியாது. வாசித்ததில்லை. கை கொடுங்க! :-)

எல் கே said...

முதலில் இருவரையும் கலந்தது தவறு. சாண்டில்யன் படிக்க ஆசைப்பட்டால் நீங்க படிக்கவேண்டியது கடல்புறா,யவன ராணி,ராஜ முத்திரை இது மூன்றும் அவருடைய பெஸ்ட்

வருண் said...

ராஜயோகம்லாம் ரொம்ப பின்னால எழுதியதுங்க, அவர் எழுதிய பழைய நாவல்கள்தான் நல்லாயிருக்கும்

* யவன ராணி

* கடல் புறா

* மன்னன் மகள்

* கன்னி மாடம்

* ஜல தீபம்

போன்றவை நல்லாயிருக்கும்.

எதுக்கு காசு போட்டு வாக்ன்கிக்கிட்டு..லைப்ரரில கெடைக்காதா?

Anonymous said...

சாண்டில்யன் கதைகள் கடல்புறா,யவன ராணி படித்தது உண்டு .. சாரு இன்று தான் கேள்வி படுகிறேன்.. நிச்சயம் படிக்க ஆரம்பிப்பேன் :):)

சி.பி.செந்தில்குமார் said...

>>>நண்பர் ஜீன்ஸ் போட்டிருந்த பிகர் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த கேப்பில் நைஸாக புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு நகர்ந்தேன்.adadaa அந்த ஃபிகரை ஒரு ஃபோட்டோ எடுத்திருக்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

சாண்டில்யனின் மாஸ்டர் பீஸ் யவன ராணீ

சி.பி.செந்தில்குமார் said...

கடல் புறாவில் கடல் போர் பற்றிய நுணுக்கங்களும் கப்பல்;ஐ செலுத்தும் முறைகள் பற்றியும் பிரமாதமாக வர்ணீக்கபாட்டிருக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

சாருவின் நாவல்களில் அதிக விற்பனை ஆனதில் ஃபேன்சி பனியனும் நாவல் அப்புறம் ஜீரோ டிகிரி. 2 மே சீன் இரூக்கும்னு நம்பிக்கைல சேல்ஸ் ஆனது.

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு நல்ல படிப்பாளியே நல்ல படைப்பாளி ஆக முடியும் என்ற அடிப்படையில் நீங்களும் படிக்க ஆரம்பிச்சுட்டீங்க போல.. ம் ம் வாழ்த்துக்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பார்க்கும்போது என்னதான் இருக்கிறது சாருவிடம் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் “தேகம்” நாவலை வாங்கியிருக்கிறேன்.
//

வாங்கியாச்சு.. என்ன பண்ண?..

ஆனா ஒரு விசயம் மட்டும் சொல்லிக்கிறேன் நைனா..

புத்தகத்தை கீழ மட்டும் வெச்சுடாதீங்க...ஹி..ஹி

மக்கா.. குனிந்து புத்தகம் எடுக்கும் நேரத்தில, பின்புறம் களவாடப்பட்டிருக்கும்..ஹி..ஹி

( புத்தகத்தின் பின்புறம் எனப்படிக்கவும்) ...

Unknown said...

தேகம் நானும் படிக்கணும்னு நினைத்துக்கொண்டு உள்ளேன்,மும்பையில் எங்கு கிடைக்கும் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே

Thirumalai Kandasami said...

me too,,not interested in reading Charu's books.


Trust me,,I red "Pirivom santhipom-2" two days before,,due to over expectation results headache for me and found very difficult to complete that novel.

Anonymous said...

Interesting. உண்மையிலேயே, நல்ல எழுத்து நடை. நாவல்களை படித்து விட்டு அதைப் பற்றியும் எழுதுங்கள்.

sathishsangkavi.blogspot.com said...

நிறைவான பதிவு...

சமுத்ரா said...

எனக்கு ஏனோ சாருவைப் பிடிக்காது..

Unknown said...

nallamanithan
தேகம் படித்துவிட்டு நல்லா இருக்க இல்ல நல்லா இல்லையானு சொல்லுங்க .நான் இதுவரைக்கும் அவருடைய கட்டுரை தொகுதியான 'தப்பு தாளங்கள் ' மட்டும்தான் படித்திருக்கிறேன் .

Speed Master said...

படித்து விட்டு அதைப் பற்றியும் எழுதுங்கள்.

பரவாயில்லை புத்தகம் படிக்கும் அளவிற்கு உங்களுக்கு நேரமும் பொருமையும் உள்ளது

வசந்தா நடேசன் said...

\\எல் கே\\மேலே சொன்னதை அப்படியே நானும் வழிமொழிகிறேன் யுவர் ஆனர்!

//முதலில் இருவரையும் கலந்தது தவறு. சாண்டில்யன் படிக்க ஆசைப்பட்டால் நீங்க படிக்கவேண்டியது கடல்புறா,யவன ராணி,ராஜ முத்திரை இது மூன்றும் அவருடைய பெஸ்ட்//

'பரிவை' சே.குமார் said...

படிச்சிட்டு அடுத்த விமர்சனப் பதிவுக்கு ரெடியாகுங்க. வாழ்த்துக்கள்.

ராஜகோபால் said...

தமிழ்ல நாவல் படிக்கணும்னா இங்க போங்க

http://marancollects-tamilebooks.blogspot.com

ஜி.ராஜ்மோகன் said...

சாருவோட" ஜீரோ டிகிரி " எல்லாம் வாங்கி படிச்சுராதீங்க . மண்டை காஞ்சுரும் .

எப்பூடி.. said...

பதிவெழுதி, பின்னூட்டத்திற்கு பதிலளித்து, மத்தவங்களுக்கும் பின்னூட்டமிட்டு, ஒலக மற்றும் உள்ளூர் சினிமா பார்த்து, புத்தக கண்காட்சிக்கு போயி; இத்தனைக்கும் பிறகு புத்தகம் வாசிக்கவும் நேரமிருக்கா? உங்களுக்கு ஒரு நாளைக்கு 48 மணித்தியாலமா?

ஆதவா said...

கல்கிக்குப் பிறகு வரலாற்றுப் புதினங்கள் ரசிக்க எழுதியவர் சாண்டில்யன். என்ன, இவரது கொஞ்சம் இழுவையாக இருக்கும் அவ்வளவுதான். மற்றபடி சுவையானவை.

சாருவின் பல புத்தகங்களின் மூலம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் (என்று சொல்வார்கள்) நான் அவருடைய விமர்சனங்கள், ஓரிரு கதைகள் படித்திருக்கிறேன். நாவல் இதுவரை படித்ததில்லை... என்றாலும் நிறையபேர் அவருடைய எழுத்துக்கள் தனித்தன்மை வாய்ந்தது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பாலா said...

சாண்டில்யன் புத்தகங்கள் எல்லாம் என் அப்பா நிறைய படிப்பார் அப்போது அருகில் இருந்து வேடிக்கை பார்த்ததோடு சரி. அவர் எழுத்து நடை புரிபடாமலே போய்விட்டது. படிக்க தொடங்க வேண்டும்.

சாரு பற்றி நோ காமெண்ட்ஸ்.

//ஆன்மீக புத்தகமாக இருந்துவிடுமோ

அதென்ன கேள்வி. ஆன்மிகம் மதவாதம் இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். ஆன்மீக புத்தகங்கள் இண்ட்ரெஸ்டிங்ஆக இருக்கும். படித்து பாருங்கள் மதத்தை தள்ளி வைத்து விட்டு. ஆன்மீகத்துக்கு வயது தேவை இல்லை. கடவுள் நம்பிக்கை தேவை இல்லை.

Anonymous said...

நாங்க மட்டும் என்ன சாருவை கரைத்து குடித்தவர்களா இல்லை சாருவுடன் குடித்தவர்களா என்ன? ஏதோ ப்ளாக் ஞானம். ஒண்ணு மட்டும் நிச்சயம். அவர் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு. (சரக்கை சொல்லல) ஏன்ன.. அவர் ரொம்ப நல்லவரு...

குறையொன்றுமில்லை. said...

சாண்டில்யன் கதையைக்கொண்டுபோவதில் மன்னர்தான்.ஆண், பெண் வர்னனைகள் விஸ்தாரமாக இருக்கும்.அதுதான் பொறுமையை சோதிக்கும்.சாரு வோட எழுத்துக்கள் அங்கொன்னும் இங்கொன்னுமாகத்தான் படிச்சிருக்கேன்.

அருள்மொழிவர்மன் said...

எனது 12ம் வயதில் சாண்டில்யன் எழுதிய 'கன்னிமாடம்' என்ற சரித்திர நாவலை படித்தேன். அப்போதுதான் சரித்திர நாவல்களைப் படிப்பதில் ஆர்வம் தொடங்கிற்று. அதன் பின் கடல் புறா, யவன ராணி, ராஜமுத்திரை, அலை அரசி, ராஜ பேரிகை, கடல் புறா, மலை அரசி, ராஜதிலகம் இன்னும் சில புத்தகங்களை வாசித்ததுண்டு.

சாண்டில்யன் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‍ கடல் புறா, யவன ராணி. மீண்டும் அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இன்றும் உள்ளது.

பிரபாகரன் அவர்களே ஒரு அட்வைஸ் நேரமும் ஆர்வமும் இருந்தால் சாண்டில்யன் அவர்களின் அனைத்து நாவல்களையும் படியுங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாண்டில்யன் எழுத்துக்கள் அருமையா இருக்கும், சாருவை பத்தி அதிகமா தெரியலீங்கோ....!

அஞ்சா சிங்கம் said...

சாருவின் எழுத்துக்கள் குப்பை என்று யாரும் சொல்லமாட்டார்கள் .........
நல்ல எழுத்தாளர்தான் ..........
அவரின் சிந்தனைகள்தான் குப்பை ........

சாண்டில்யன் சரித்திர நாவல் எழுதுவதில் ஒரு சூப்பர் ஸ்டார்........
அவரும் சில மோசமான நாவல்களை எழுதி இருக்கிறார் .........

அது சரி நான் ஜீன்ஸ் போட்ட பிகர தான் பார்த்துக்கிட்டு இருந்தேன்னு எப்படியா கண்டுபிடிச்சே ?

Anonymous said...

Prabhakaran I request you to read the books by Dr.Philo Irudhayanath.
He is my grandfather. Most of his works are not know to this generation people. He has done some excellent researches on nomads in Tamilnadu.
Link here: http://goo.gl/hdzOX

---
Regards,
மனோஜ் குமார்.அ

அஞ்சா சிங்கம் said...

சாருவின் எழுத்துக்கள் குப்பை என்று யாரும் சொல்லவில்லை அவர் நல்ல எழுத்தாளர்தான் ........
அவரின் சிந்தனை தான் குப்பை ...........

சாண்டில்யன் சரித்திர நாவல் எழுதுவதில் சூப்பர் ஸ்டார் ..........
ஆங்கில படம் பார்த்தது போல் இருக்கும் ......................

அது சரி நான் ஜீன்ஸ் போட்ட பிகர தான் பார்த்தேன் என்று எப்படியா கண்டுபிடிச்சே .?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சாருவின் பல புத்தகங்களின் மூலம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் (என்று சொல்வார்கள்)-
வேறு ஒருவருமில்லை சாரு தானே அடிக்கடி கூறுவார்.

சாண்டில்யன் வேறு சாரு வேறு....முன்னவரை எல்லோருமே படிக்கலாம்; பின்னவரை எல்லோரும் படித்துவிட முடியாது.
சாண்டில்யனின் கடல் புறா; யவன ராணி - பிரசித்தமானதும், சிறந்தவையும்

Anonymous said...

>>> படிச்சிட்டு சொல்லுங்க. நல்லா இருந்தா வாங்கறேன். என் லெவலுக்கு ஆனந்த விகடன், குமுதம்..that's all.

jayaramprakash said...

சாண்டில்யன் தமிழ் எழுத்துலகின் வரம்.சாரு நிகழ்கால தமிழ் எழுத்துலகின் சாபம்.

Thenammai Lakshmanan said...

கருத்து சொல்ல கூட பயமா இருக்குதுங்கோவ்..:((

Vinu said...

see this link http://vijayfans-vinu.blogspot.com/2011/02/blog-post_8889.html

Vinu said...

நான் தான் உங்கள் 300 வது follower என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்

Unknown said...

என்னமோ போங்கப்பா இந்த படிச்ச புள்ளைங்களே இப்படித்தான் ரொம்ப நல்லவங்க மாதிரியே.......ஹிஹி!!

எனக்கும் இந்தமாதிரி அறிவாளிக புத்தகங்களுக்கும் சம்பந்தமில்லைங்கோ!!!

pichaikaaran said...

வாழ்த்துக்கள்...

படித்த பின் கருத்து சொல்ல மறக்காதீர்கள்..

மோகன்ஜி said...

தமிழில் எழுத முனைவோர் கண்டிப்பாய் சாண்டில்யனின் எழுத்தைப் படிக்க வேண்டும். யவன ராணி ,கடல்புறா,மலைவாசல்,ஜலதீபம்,
மன்னன மகள் கண்டிப்பாய் படியுங்கள்.

Vinu said...

///// நான் தான் உங்கள் 300 வது follower என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன் // எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... நான் சில சமயங்களில் விஜய்யை கலாய்த்து பதிவு எழுதுவேனே... நீங்கள் படித்தால் வருத்தப்படுவீர்கள் அல்லது கோபப்படுவீர்கள்.//// அது எனக்கு தெரியும் ஆனால் நான் தல அஜித்தை கலாய்க்க மாட்டன்

தூயவனின் அடிமை said...

பாஸ், இருவருடைய புத்தகத்தையும் நான் படித்தது இல்லை.

Philosophy Prabhakaran said...

@ sakthistudycentre-கருன், இராமசாமி, சேட்டைக்காரன், எல் கே, வருண், கல்பனா, சி.பி.செந்தில்குமார், பட்டாபட்டி...., டெனிம், Thirumalai Kandasami, கொக்கரகோ..., சங்கவி, Samudra, நா.மணிவண்ணன், Speed Master, வசந்தா நடேசன், சே.குமார், ராஜகோபால், ஜி.ராஜ்மோகன், எப்பூடி.., ஆதவா, பாலா, ப்ரீதம் கிருஷ்ணா, Lakshmi, அருள்மொழிவர்மன், பன்னிக்குட்டி ராம்சாமி, அஞ்சா சிங்கம், getch, யோகன் பாரிஸ்(Johan-Paris), ! சிவகுமார் !, jayaramprakash, தேனம்மை லெக்ஷ்மணன், Vinu, விக்கி உலகம், பார்வையாளன், மோகன்ஜி, இளம் தூயவன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ இராமசாமி
// நல்லா படிங்க.. நாளைக்கு கொஸ்டின் கேக்கறோம்.. ஒழுங்கா பதில் சொல்லனும்... பதில் தப்பா சொன்னா உ.த. அண்ணாச்சியோட ஒரு பத்து பதிவ எடுத்து ஆயிரம் தடவ இம்போசிஷன் எழுதனும் :) //

என்னங்க இது தண்டனை இவ்வளவு கடுமையா இருக்கு... அவரு பதிவை ஒரு முறை எழுதினாலே விடிஞ்சிடுமே...

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
// உங்களுக்கும் எனக்கும் இருக்கிற இன்னொரு ஒற்றுமை //

அப்படின்னா ஏற்கனவே ஒரு ஒற்றுமை இருக்கா...? அது என்ன...? எனக்கு ஸ்ரேயாவை பிடிக்காதே...

Philosophy Prabhakaran said...

@ எல் கே
// முதலில் இருவரையும் கலந்தது தவறு //

இடுகையில் தான் கலந்துவிட்டேன்... படிக்கும்போது தனித்தனியா தான் படிப்பேன்... கவலைப்படாதீங்க...

// சாண்டில்யன் படிக்க ஆசைப்பட்டால் நீங்க படிக்கவேண்டியது கடல்புறா,யவன ராணி,ராஜ முத்திரை இது மூன்றும் அவருடைய பெஸ்ட் //

நீங்க சொல்ற நாவல்கள் எல்லாம் பெரிய சைஸ் நாவல்கள்... பொறுமையை சோதிக்கும்...

Philosophy Prabhakaran said...

@ வருண்
// எதுக்கு காசு போட்டு வாக்ன்கிக்கிட்டு..லைப்ரரில கெடைக்காதா? //

லைப்ரரி பற்றி அடிக்கடி நினைப்பதுண்டு... ஆனால் ஏனோ இதுவரை விஜயம் செய்ததில்லை... நேரமில்லை என்று சொல்லி அலட்டிக்கொள்வேன்... ஒரு சோம்பேறித்தனம்...

Philosophy Prabhakaran said...

@ கல்பனா
// சாரு இன்று தான் கேள்வி படுகிறேன். //

என்னாது கேள்விப்படுறீங்களா...? இதை சாரு விசிறிகள் கேட்டால் வெட்டுகுத்து ஆகிடும் மேடம்...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// adadaa அந்த ஃபிகரை ஒரு ஃபோட்டோ எடுத்திருக்கலாம் //

அப்புறம் நம்ம பதிவும் சாருவின் புத்தகம் மாதிரி ஆகிடுமே...

// சாருவின் நாவல்களில் அதிக விற்பனை ஆனதில் ஃபேன்சி பனியனும் நாவல் அப்புறம் ஜீரோ டிகிரி. 2 மே சீன் இரூக்கும்னு நம்பிக்கைல சேல்ஸ் ஆனது. //

தேகம் கூட அந்த நம்பிக்கையில் சேல்ஸ் ஆனதா தான் கேள்விப்பட்டேன்... இதில் சரோஜா தேவி புத்தகம்ன்னு மிஷ்கின் வேற பப்ளிசிட்டி கொடுத்துட்டார்... ஆனா சத்தியமா நான் அதுக்காக வாங்கலைங்கோ...

Philosophy Prabhakaran said...

@ பட்டாபட்டி....
// வாங்கியாச்சு.. என்ன பண்ண?..

ஆனா ஒரு விசயம் மட்டும் சொல்லிக்கிறேன் நைனா..

புத்தகத்தை கீழ மட்டும் வெச்சுடாதீங்க...ஹி..ஹி

மக்கா.. குனிந்து புத்தகம் எடுக்கும் நேரத்தில, பின்புறம் களவாடப்பட்டிருக்கும்..ஹி..ஹி

( புத்தகத்தின் பின்புறம் எனப்படிக்கவும்) ... //

ஒவ்வொரு முறையும் நீங்க போடும் பின்னூட்டங்கள் கூட சாருவின் எழுத்துக்கள் போலவே புரியவே மாட்டேங்குது... ஒருவேளை "பின்"நவீனத்துவவாதிகளுக்கு மட்டும்தான் புரியுமோ என்னவோ...?

Philosophy Prabhakaran said...

@ டெனிம்
// மும்பையில் எங்கு கிடைக்கும் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே //

ம்ஹூம் தெரியவில்லை... ஆன்லைனில் வாங்கும் வசதி உள்ளதா என்று பார்க்கவும் அல்லது நண்பர்கள் யாரையாவது வாங்கி கூரியரில் அனுப்பச் சொல்லுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ Thirumalai Kandasami
// Trust me,,I red "Pirivom santhipom-2" two days before,,due to over expectation results headache for me and found very difficult to complete that novel. //

பிரிவோம் சிந்திப்போம் சுஜாதா எழுதிய நாவலாச்சே... அதற்கே தலைவலியா...? எதுவும் சொல்வதற்கில்லை...

Philosophy Prabhakaran said...

@ கொக்கரகோ...
// நாவல்களை படித்து விட்டு அதைப் பற்றியும் எழுதுங்கள். //

கண்டிப்பாக எழுதுகிறேன்... ஆனால் நாள் ஆகும்... ஏன்னா, நான் பேசிக்கல்லி ஒரு சோம்பேறி...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// தேகம் படித்துவிட்டு நல்லா இருக்க இல்ல நல்லா இல்லையானு சொல்லுங்க .நான் இதுவரைக்கும் அவருடைய கட்டுரை தொகுதியான 'தப்பு தாளங்கள் ' மட்டும்தான் படித்திருக்கிறேன் . //

கண்டிப்பா சொல்றேன்... பொறுமையா இருக்கணும்... தப்புத் தாளங்களா தலைப்பே ஒரு மாதிரியா இருக்கே...

Philosophy Prabhakaran said...

@ வசந்தா நடேசன்
// எல் கே மேலே சொன்னதை அப்படியே நானும் வழிமொழிகிறேன் யுவர் ஆனர்! //

நானும் அவருக்கு சொன்ன பதிலையே வழிமொழிகிறேன்...

இடுகையில் தான் கலந்துவிட்டேன்... படிக்கும்போது தனித்தனியா தான் படிப்பேன்... கவலைப்படாதீங்க...

Philosophy Prabhakaran said...

@ ராஜகோபால்
// தமிழ்ல நாவல் படிக்கணும்னா இங்க போங்க

http://marancollects-tamilebooks.blogspot.com //

இந்த தளத்தை ஏற்கனவே யாரோ ஒரு நண்பர் எனக்கு அறிமுகப்படுத்தினார்... பயனுள்ள தளம்தான்... ஆனால் சாருவின் நாவல்களோ, சாண்டில்யன் நாவல்களோ கிடைக்கப்பெறவில்லை... இருப்பினும் நன்றி...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// பதிவெழுதி, பின்னூட்டத்திற்கு பதிலளித்து, மத்தவங்களுக்கும் பின்னூட்டமிட்டு, ஒலக மற்றும் உள்ளூர் சினிமா பார்த்து, புத்தக கண்காட்சிக்கு போயி; இத்தனைக்கும் பிறகு புத்தகம் வாசிக்கவும் நேரமிருக்கா? உங்களுக்கு ஒரு நாளைக்கு 48 மணித்தியாலமா? //

இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க கேள்வியை கேட்டுட்டீங்களே...

ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் மட்டுமே ஆன்லைனில் செலவிடுவேன்... மூன்று மணிநேரம் நண்பர்கள் பதிவை படித்து பின்னூட்டமிடுவேன்... பெரும்பாலும் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை... ஒரு மணிநேரம் எனக்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதில் போடுவேன்... மேலும் ஒரு மணிநேரம் இதர பணிகளுக்காக செலவிடுவேன்...

அப்புறம் பதிவெழுதவதை பற்றி சொல்வதென்றால் வாரக்கடைசியில் உட்கார்ந்து நான்கைந்து பதிவுகள் எழுதி வைத்துவிடுவேன்... உலக சினிமா பார்ப்பது கூட வாரக்கடைசியில் தான்...

புத்தகக் கண்காட்சிஎல்லாம் வருடத்திற்கு ஒருமுறை தானே வருது... அதற்கு நேரம் செலவிட முடியாதா என்ன...?

தவிர்த்து நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன் என்று நீங்களாக கற்பனை செய்துக்கொள்ள வேண்டாம்... அதெல்லாம் எப்போதாவது மூடு வரும்போது உட்கார்ந்து ஒரே சிட்டிங்கில் படித்து முடிப்பேன்...

Philosophy Prabhakaran said...

@ ஆதவா
// சாருவின் பல புத்தகங்களின் மூலம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் (என்று சொல்வார்கள்) //

அதென்ன அடைப்புக்குறிகளுக்குள் என்று சொல்வார்கள்... அதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா...?

Philosophy Prabhakaran said...

@ பாலா
// ஆன்மிகம் மதவாதம் இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். ஆன்மீக புத்தகங்கள் இண்ட்ரெஸ்டிங்ஆக இருக்கும். படித்து பாருங்கள் மதத்தை தள்ளி வைத்து விட்டு. ஆன்மீகத்துக்கு வயது தேவை இல்லை. கடவுள் நம்பிக்கை தேவை இல்லை. //

அப்படிப்பட்ட புத்தகங்கள் கூட இருக்கின்றனவா... இந்த பின்னூட்டத்தை நீங்கள் படித்தால் அப்படிப்பட்ட புத்தகத்திற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்... எனக்கு பிடிக்குமா பிடிக்காதா என்று சொல்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ ப்ரீதம் கிருஷ்ணா
// நாங்க மட்டும் என்ன சாருவை கரைத்து குடித்தவர்களா இல்லை சாருவுடன் குடித்தவர்களா என்ன? ஏதோ ப்ளாக் ஞானம். ஒண்ணு மட்டும் நிச்சயம். அவர் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு. (சரக்கை சொல்லல) ஏன்ன.. அவர் ரொம்ப நல்லவரு... //

ஏன் இந்த கொலைவெறி...? ஆமா, அவருக்கு சரக்கு வாங்கிக் கொடுத்தா அவரோட தளத்துல நம்மள பத்தி நல்ல விதமா எழுதுவாராமே... அப்படியா...?

Philosophy Prabhakaran said...

@ Lakshmi
// சாண்டில்யன் கதையைக்கொண்டுபோவதில் மன்னர்தான்.ஆண், பெண் வர்னனைகள் விஸ்தாரமாக இருக்கும்.அதுதான் பொறுமையை சோதிக்கும் //

படிக்கும் ஆர்வத்தை மென்மேலும் தூண்டி விடுகிறீர்கள் மேடம்...

Philosophy Prabhakaran said...

@ அருள்மொழிவர்மன்
// எனது 12ம் வயதில் சாண்டில்யன் எழுதிய 'கன்னிமாடம்' என்ற சரித்திர நாவலை படித்தேன். அப்போதுதான் சரித்திர நாவல்களைப் படிப்பதில் ஆர்வம் தொடங்கிற்று. அதன் பின் கடல் புறா, யவன ராணி, ராஜமுத்திரை, அலை அரசி, ராஜ பேரிகை, கடல் புறா, மலை அரசி, ராஜதிலகம் இன்னும் சில புத்தகங்களை வாசித்ததுண்டு. //

நீங்க சொன்ன லிஸ்டில் ராஜயோகம் வரவே இல்லையே :(

// பிரபாகரன் அவர்களே ஒரு அட்வைஸ் நேரமும் ஆர்வமும் இருந்தால் சாண்டில்யன் அவர்களின் அனைத்து நாவல்களையும் படியுங்கள். //

இந்தப்புத்தகத்தை முதலில் படிக்கிறேன்... என் மனம் கவர்ந்துவிட்டால் அடுத்து வரிசையாக படிக்க ஆரம்பித்துவிடுவேன்...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// அது சரி நான் ஜீன்ஸ் போட்ட பிகர தான் பார்த்துக்கிட்டு இருந்தேன்னு எப்படியா கண்டுபிடிச்சே ? //

பதிவுல வந்த நண்பன் கேரக்டர் நீங்கதான்னு கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே... அப்படின்னா மெய்யாலுமே ஜீன்ஸ் போட்ட பிகரை பாத்தீங்களா... நான் ஒரு குத்துமதிப்பா தான் எழுதினேன்...

Philosophy Prabhakaran said...

@ மனோஜ் குமார்.அ
// Prabhakaran I request you to read the books by Dr.Philo Irudhayanath.
He is my grandfather. Most of his works are not know to this generation people. He has done some excellent researches on nomads in Tamilnadu. //

உங்கள் தாத்தாவின் பெயரை கேட்டதும் எப்படிப்பட்ட புத்தகங்களோ என்று பயந்தேன்... கேரளா ஆதிவாசிகள், நீலகிரி பாடகர்கள் என்று வசீகரமான தலைப்புகளாகவே இருக்கின்றன... பயணக்கட்டுரைகளின் தொகுப்பு என்று தெரிகிறது... ஆனால் எனக்கு ஆன்லைனில் புத்தகங்கள் வாங்கி பழக்கமில்லை... வானதி பதிப்பகம் தான் போல... சென்னையில் எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள்... வாங்கிப் படிக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ யோகன் பாரிஸ்(Johan-Paris)
// முன்னவரை எல்லோருமே படிக்கலாம்; பின்னவரை எல்லோரும் படித்துவிட முடியாது //

அது என்ன பின்னவரை எல்லாரும் படித்து விட முடியாது... கஷ்டமான சிலபஸா...???

Philosophy Prabhakaran said...

@ jayaramprakash
// சாரு நிகழ்கால தமிழ் எழுத்துலகின் சாபம். //

ஏன் இப்படி ஒரு ஆவேசம்.... யாராவது கோவிச்சிக்கப் போறாங்க...

Philosophy Prabhakaran said...

@ Vinu
// see this link http://vijayfans-vinu.blogspot.com/2011/02/blog-post_8889.html //

பார்த்தேன்...

நல்ல பதிவு... ரீமேக் படங்களில் நடிப்பதில் தவறில்லை... அது எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் யாராக இருந்தாலும் சரி... இதற்காக தேவையில்லாமல் ஒப்பிட்டு காட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை... எம்.ஜி.ஆர், ரஜினி ரசிகர்கள் கோபம் கொள்ளக்கூடும்...

// நான் தான் உங்கள் 300 வது follower என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன் //

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... நான் சில சமயங்களில் விஜய்யை கலாய்த்து பதிவு எழுதுவேனே... நீங்கள் படித்தால் வருத்தப்படுவீர்கள் அல்லது கோபப்படுவீர்கள்...

// அது எனக்கு தெரியும் ஆனால் நான் தல அஜித்தை கலாய்க்க மாட்டன் //

நீங்கள் அஜித்தைப் பற்றி தவறாக எழுதினாலும் நான் ஏற்றுக்கொள்வேன்... ஆனால் எனது வாசகர் ஒருவர் வருத்தப்படுவதை விரும்பமாட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
// என்னமோ போங்கப்பா இந்த படிச்ச புள்ளைங்களே இப்படித்தான் ரொம்ப நல்லவங்க மாதிரியே... //

நான் நல்லவன்னு உங்களுக்கு யாருங்க சொன்னது... நானெல்லாம் அல்கஞ்சாரி குல்கா பார்ட்டி...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// வாழ்த்துக்கள்...

படித்த பின் கருத்து சொல்ல மறக்காதீர்கள்.. //

அவ்வளவுதானா... உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேனே...

Philosophy Prabhakaran said...

@ மோகன்ஜி
// தமிழில் எழுத முனைவோர் கண்டிப்பாய் சாண்டில்யனின் எழுத்தைப் படிக்க வேண்டும். யவன ராணி ,கடல்புறா,மலைவாசல்,ஜலதீபம்,
மன்னன மகள் கண்டிப்பாய் படியுங்கள். //

நீங்க சொன்ன லிஸ்டில் ராஜயோகம் வரவே இல்லையே :(

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹ்ம்ம்.. சாரு அவர்களின் தேகம்.. புத்தகம் படித்து விட்டு உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒரு விஷயம் உண்மை தான்.. எந்த புக் படிப்பதாக இருந்தாலும்.. எதிர்பார்ப்பு ஏதும் இல்லாம இருந்தா படிக்கணும்.. முன்னாடியே கருத்து கேட்டு பிறகு, படிப்பது.. அவ்ளோ சுவாரஸ்யம் இருக்காது தான்..

Anonymous said...

பிரபாகரன்!
There is a book store named AnyIndian.com just outside the T.Nagar bus stand. I highly recommend you to read the books of Dr.Philo Irudhayanath. You will really have a great experience in reading it. I have always wanted to blog his researches, but couldnt do it for some reasons.Looking forward for your positive reply :)

bookstore link: http://anyindian.com/
--
என்றும் அன்புடன்
மனோஜ் குமார்.அ

Anonymous said...

Prabhakaran read this:

http://www.visvacomplex.com/philo_irudhayanath.html

---
A.ManojKumar

Philosophy Prabhakaran said...

@ மனோஜ் குமார்.அ
// பிரபாகரன்!
There is a book store named AnyIndian.com just outside the T.Nagar bus stand. I highly recommend you to read the books of Dr.Philo Irudhayanath. You will really have a great experience in reading it. I have always wanted to blog his researches, but couldnt do it for some reasons.Looking forward for your positive reply :) //

அந்த தளத்திற்கு சென்றேன்... கடையின் அட்ரஸ் கிடைத்தது... அடுத்த முறை தி.நகர் செல்லும்போது வாங்கிவிடுகிறேன்...

ManojKumar said...

ok Prabha :)