21 February 2011

வலைச்சரத்தில் நான்...


வணக்கம் மக்களே...

நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வலைச்சர ஆசிரியர் வாய்ப்பு இப்போது கிட்டியிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை கொடுத்த சீனா அய்யா அவர்களுக்கு எனது முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொண்டு இன்றுமுதல் எனது ஒருவார பயணத்தை தொடங்குகிறேன்.

அழைப்புக்கான மெயில் வந்த நொடியிலிருந்தே ஏனோ ஒரு பயம் கலந்த பொறுப்புணர்ச்சியை உணர்கிறேன். இதுவே என்னுடைய தளம் என்றால் நான் எதை வேண்டுமானால் எழுதிக்கொள்ளலாம். ஆனால் வலைச்சரத்தில் எழுதும்போது சொற்களை கவனமாக தொடுக்க வேண்டுமே...

இந்த ஆசிரியர் பொறுப்பை ஏதோ கடமைக்காக செயல்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. எந்த ஒரு பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தாலும் அதை ஒரு அர்பணிப்புடன் செய்வதே என்னுடைய பாலிஸி. எனவே வலைச்சரத்திற்காக கொஞ்சம் கடுமையாகவே உழைக்கிறேன். அநேகமாக தினம்தினம் இரண்டு இடுகைகள் வரும் என்று நினைக்கிறேன்.

இதன் காரணமாக சொந்த வலைப்பூவிற்கு விடுமுறை விடுவதா வேண்டாமா என்றோ யோசித்தால்... இன்றைக்கு வரவேண்டிய பிரபா ஒயின்ஷாப் மட்டும் ஒருநாள் தாமதமாக நாளை வெளிவரும். மற்றபடி எப்போதாவது நேரம் கிடைத்தால் எதையாவது பற்றி எழுதுகிறேன்.

எனவே, அடுத்த ஒருவார காலத்திற்கு என் மீது அன்புள்ளம் கொண்டவர்கள் வலைச்சரத்தில் எனக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஆதரவளிக்கவில்லை என்றால் உங்களுக்குத்தான் இழப்பு அந்த அளவிற்கு ஒருவாரம் முழுவதும் வலைச்சரத்தில் முழுக்க முழுக்க சரக்கு மட்டுமே...

வலைச்சர இணைப்பு:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

52 comments:

எல் கே said...

நெறையப் புதியவர்களை அறிமுகப் படுத்துவீர்கள் என்று எண்ணுகிறேன்

ஜெய்லானி said...

பணி சிறக்க வாழ்த்துக்கள் ....!!! :-))

settaikkaran said...

வாழ்த்துகள் நண்பரே! சீனா ஐயாவின் அழைப்பு உங்களது வலையுலகப் பயணத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும். :-)

ரஹீம் கஸ்ஸாலி said...

வாழ்த்துக்கள் பிரபா....கலக்குங்கள்.உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் .

ரஹீம் கஸ்ஸாலி said...

வலைச்சரத்தின் லிங்கையும் இங்கு கொடுங்களேன்.

Unknown said...

ஓகே நண்பரே கலக்குங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் பிரபா

Unknown said...

வாழ்த்துக்கள்..... கலக்குங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாவ், கலக்குங்க, நிறைய எதிர்பாக்கிறோம்...........!

Unknown said...

ok

ஜோதிஜி said...

வாழ்த்துகள்.

sathishsangkavi.blogspot.com said...

வாழ்த்துகள்....

யாரும் அறியா புதிய பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்...

வசந்தா நடேசன் said...

வாழ்த்துக்கள் நண்பரே.. ஆவலை தூண்டிவிட்டீர்கள், இழக்க முடியாது, வந்துவிடுகிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தினமும் வலைச்சரம் லிங் மெயிலில் அனுப்பினால் நல்லாருக்கும்...

ராஜகோபால் said...

வாழ்த்துகள் கலக்குங்கள்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

நிறைய விஷயங்களை எதிர் பார்கிறோம், கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள் என நினைக்கிறேன்.

யுவா said...

வாழ்த்துகள்!

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் ....!!

Anonymous said...

//எந்த ஒரு பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தாலும் அதை ஒரு அர்பணிப்புடன் செய்வதே என்னுடைய பாலிஸி.//

நல்ல பாலிஸி. இது உங்களை ஒரு சிறப்பு மிக்க மனிதராக மற்றவர்களிடம் இனம் காண வைக்கும். வாழ்த்துக்கள்.

FARHAN said...

வாழ்த்துக்கள் நண்பா ....

ஆயிஷா said...

வாழ்த்துகள்!

Chitra said...

Congratulations!!!!

எம் அப்துல் காதர் said...

நிறைய எதிர் பார்க்கிறோம் பிரபா வாழ்த்துகள்.

Unknown said...

கலக்குங்கள்! வாழ்த்துகள்!!

எம் அப்துல் காதர் said...

@!@ பன்னிக்குட்டி ராம்சாமி said...

// தினமும் வலைச்சரம் லிங் மெயிலில் அனுப்பினால் நல்லாருக்கும்...//

இதுவே என் அன்பான வேண்டு கோளும். (பணிகளுக்கிடையிலும் படித்துவிடலாமே!)

Anonymous said...

ஆசிரியர் பதவியேற்றமைக்கு வாழ்த்துக்கள் பிரபாகரன்

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் பிரபா....கலக்குங்கள்.

pichaikaaran said...

best wishes

suneel krishnan said...

நல்ல விஷயம்
வாழ்த்துக்கள்

suneel krishnan said...

நல்ல விஷயம்
வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

அசத்துங்க எசமான் அசத்துங்க....

Anonymous said...

வாழ்த்துக்கள் பிரபா..

Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துகள், பிரபா!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் மக்கா!!

பாரி தாண்டவமூர்த்தி said...

ம்ம்.....கலக்க வாழ்த்துக்கள்....

Thirumalai Kandasami said...

2008 ம் ஆண்டில் இருந்து பதிவுலகில் ,பதிவுகளை படித்து வருகிறேன். ஏன் நானும் எழுத கூடாது என்ற எண்ணத்தில் உருவானது தான் "எனது பயணங்கள்".
எனது அண்ணன்,குட்டி ஒரு 10 பதிவுகளை எழுதி இருப்பார்.இது வரை மொத்தம் ஒரு 10 - 20 பதிவுகளை எழுதி இருப்பேன். என்னை அறிமுகப்படுத்திய திரு.பிரபாகரன் அவர்களுக்கு நன்றி.

மேலும் சில பதிவுகளை தொடர்ந்து எழுத முயற்சி செய்வேன்.

குறையொன்றுமில்லை. said...

வாழ்த்துக்கள் நண்பரே நிறைய புதிய பதிவர்களை எதிர்பார்க்கிரோம்.

N.H. Narasimma Prasad said...

வாழ்த்துக்கள். என் Full Support உங்களுக்கு தான்.

கார்த்தி said...

கலக்குங்கோ சார்!!!

பாலா said...

வாழ்த்துக்கள். கலக்குங்கள் தலைவா...

Philosophy Prabhakaran said...

@ எல் கே, ஜெய்லானி, சேட்டைக்காரன், ரஹீம் கஸாலி, விக்கி உலகம், T.V.ராதாகிருஷ்ணன், டெனிம், பன்னிக்குட்டி ராம்சாமி, நா.மணிவண்ணன், ஜோதிஜி, சங்கவி, வசந்தா நடேசன், ராஜகோபால், தமிழ்வாசி - Prakash, Yuva, வேடந்தாங்கல் - கருன், கொக்கரகோ..., FARHAN, ஆயிஷா, Chitra, எம் அப்துல் காதர், ஜீ..., இந்திரா, சே.குமார், பார்வையாளன், dr suneel krishnan, MANO நாஞ்சில் மனோ, கந்தசாமி., ! சிவகுமார் !, ப்ரியமுடன் வசந்த், Pari T Moorthy, சி.பி.செந்தில்குமார், Thirumalai Kandasami, Lakshmi, N.H.பிரசாத், கார்த்தி, பாலா

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ எல் கே
// நெறையப் புதியவர்களை அறிமுகப் படுத்துவீர்கள் என்று எண்ணுகிறேன் //

ஆமாம் நண்பா... நிறைய பேர் என்று சொல்வதை விட நிறைய இடுகைகளை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லலாம்...

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
// சீனா ஐயாவின் அழைப்பு உங்களது வலையுலகப் பயணத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும். :-) //

அட அப்படியா சேட்டை... மகிழ்ச்சி...

Philosophy Prabhakaran said...

@ ரஹீம் கஸாலி
// வலைச்சரத்தின் லிங்கையும் இங்கு கொடுங்களேன். //

கொடுத்துவிட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி, எம் அப்துல் காதர்
// தினமும் வலைச்சரம் லிங் மெயிலில் அனுப்பினால் நல்லாருக்கும்... //

காலையில் அனுப்பிவிடுகிறேன்... மாலை நேரங்களில் பெரும்பாலும் draftல் சேமித்து வைத்த பதிவை மொபைல் மூலமாகவே போஸ்ட் செய்வேன்... அதனால் லிங்க் அனுப்புவது கொஞ்சம் கஷ்டமே...

Philosophy Prabhakaran said...

@ கொக்கரகோ...
// நல்ல பாலிஸி. இது உங்களை ஒரு சிறப்பு மிக்க மனிதராக மற்றவர்களிடம் இனம் காண வைக்கும். வாழ்த்துக்கள். //

ஸ்பெஷலா ஒரு நன்றி...

Philosophy Prabhakaran said...

@ Thirumalai Kandasami
// 2008 ம் ஆண்டில் இருந்து பதிவுலகில் ,பதிவுகளை படித்து வருகிறேன். ஏன் நானும் எழுத கூடாது என்ற எண்ணத்தில் உருவானது தான் "எனது பயணங்கள்". //

நீங்கள் என்னைவிட சீனியர் நண்பா :)

ம.தி.சுதா said...

சும்மா பிச்சு உதறுங்க பீபீ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)

ம.தி.சுதா said...

அதெப்படி நீங்களே 50 ஐ கவ்வுவிங்கள் தப்பு அது எனக்குத் தான் வேணும்...

Speed Master said...

வாழ்த்துக்கள்

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள்

sarujan said...

வாழ்த்துகள் நண்பரே