8 February 2011

நடிகர் விஜய் – எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்


வணக்கம் மக்களே...

சில வாரங்களுக்கு முன்பு எனக்குப் பிடித்த பத்து விஜய் படங்கள் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒன்றினை எழுத அழைப்பு வந்திருந்தது. அழைத்தவர் ஹிட்ஸ்ராசக்க சி.பி.செந்தில்குமார் (அப்பாடா புதுசா ஒரு பட்டைப்பெயர் வச்சாச்சு...). என்னடா பத்து படங்கள்ன்னு சொல்லிட்டு தலைப்புல ஐந்துன்னு போட்டிருக்கான்னு யோசிக்கிறீங்களா...? இருங்க சொல்றேன். விஜய்ன்னாலே நமக்கெல்லாம் நக்கலடிச்சுதான் பழக்கம். ஆனா, நம்ம கடைப்பக்கம் வர்ற கொஞ்சநஞ்சம் விஜய் ரசிகர்களை வருத்தப்பட வைக்க எனக்கு விருப்பமில்லை. அதுலயும் தளபதிடா தளத்தின் நிர்வாகி வினு வேற முன்னூறாவது பின்தொடர்பவராக இங்கே வந்து இணைந்திருக்கிறார். அதுக்காக, நக்கலடிக்காமலும் இருக்க முடியாது. கல்லா கட்டுமா காவலன் எழுதினப்பவே பதிவுல ஒரு இடத்துல கூட டாகுடர்ன்னுற வார்த்தை வரலைன்னு பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன் ரொம்ப பீல் பண்ணார். அதனால சீரியஸா ஒரு அஞ்சு, நக்கலடிச்சு ஒரு அஞ்சுன்னு ரெண்டா பிரிச்சுக்கிட்டேன்.

இப்போ உண்மையா, சத்தியமா விஜய் நடிப்பில் எனக்குப் பிடித்த ஐந்து படங்களின் பட்டியல்:-
5. ப்ரியமுடன்
விஜய் நடிப்பில் எனக்குப் பிடித்ததிலேயே பழைய படமென்றால் இதுதான். கொஞ்சம் வித்தியாசமான காதல் கதை. ஹீரோயினாக எனக்கு மிகவும் பிடித்த (அப்போ) கவுசல்யா நடித்த படம். விஜய் அவரது நண்பர்களுடன் வரும் சில காட்சிகள் கூட ரசிக்கும் வகையில் இருந்தது. தேவா இசையில் மணிவண்ணன் ஆட்டத்தில் ஒயிட் லகான் கோழியை மறக்கவே முடியாது. இவை எல்லாவற்றையும் விட விஜய் நடிப்பில் இருந்த வில்லத்தனம் அதிகம் ரசிக்க வைத்தது.

எ.பி.காட்சி: விஜய் உயரமான கட்டிடம் ஒன்றின் மொட்டைமாடியில் நின்று தனது காதலுக்காக ஜெய்கணேஷிடம் கெஞ்சுவதும் பின்னர் ஆத்திரத்தில் அவரை அங்கிருந்து கீழே தள்ளிவிடும் காட்சி.

4. ப்ரண்ட்ஸ்
முழுநீள நகைச்சுவை திரைப்படமென்று ஊருக்கே தெரியும். வடிவேலுவிற்காகவே விழுந்து விழுந்து சிரித்த ரசித்த திரைப்படம். விஜய்யும் சூர்யாவும் கூட குறைவில்லாமல் காமெடி செய்திருப்பார்கள். பங்களாவுக்கு வெள்ளை அடிக்க ஆரம்பித்ததும் நம் உள்ளத்தை கொள்ளை அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பிற்பாதியில் கொஞ்சம் தொய்விருந்தாலும் இப்போது தொலைகாட்சியில் நகைச்சுவை காட்சிகளை பார்த்தாலும் மனதுவிட்டு சிரிக்க வைக்கும் படம்.

எ.பி.காட்சி: ஆணியே புடுங்க வேணாம்...!!!

3. கில்லி
இந்த மாதிரி மசாலா படங்கள் எனக்குத் துளியளவும் பிடிக்காது. அதிலும் தெலுங்கு டப்பிங் என்றால் சுத்தம். அதையெல்லாம் மீறி இந்தப்படத்தை ரசிக்க வைத்த ஒரு விஷயம் விஜய்யின் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள். அப்படியே எங்கள் வீட்டு சூழலை பிரதிபலித்தது. அதிலும் விஜய்யும் அவரது தங்கையும் அடிக்கும் லூட்டிகள் செம காமெடி ரகம். அப்புறம், த்ரிஷாவுக்காக கொஞ்சம். படம் பார்த்ததும் ஏதோ கேர்ள்பிரண்டோடு டூர் போயிட்டு வந்த அனுபவம் கிடைத்தது.

எ.பி.காட்சி: குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே... எதை குறிப்பிட்டு சொல்வதென்று தெரியவில்லை.

2. குஷி
திரையரங்கம் சென்று பார்த்த முதல் விஜய் படம். அப்ப, எஸ்.ஜே.சூர்யா மீது கொஞ்சம் நல்ல இமேஜ் இருந்தது. மென்மையான, மேன்மையான காதல் கதை. விஜய் ஜோ சம்பத்தப்பட்ட ஊடல், ஈகோ காட்சிகள் அருமையா இருக்கும். விவேக் காமெடி சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டியது. மும்தாஜை மறக்க முடியுமா....? (ம்ம்ம்... அப்போ அவர் ஸ்லிம்மா இருந்தார்). வழக்கம்போல ரயில்வே ஸ்டேஷன் க்ளைமாக்ஸ் என்றாலும் பிடித்திருந்தது.

எ.பி.காட்சி: வேறென்ன, இடுப்பு காட்சியே தான்.

1. வசீகரா
யாருக்குமே பிடிக்காத படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது ஆச்சர்யம். விஜய் சினேகா ஜோடிப்பொருத்தம் சூப்பர். சிக்னேச்சர் சரக்கு அடிச்சா போதை கொஞ்சம் கொஞ்சமா ஏறுமே அதே மாதிரி விஜய்க்கும் சினேகாவுக்கும் இடையே காதல் கொஞ்சம் கொஞ்சமாக மலரும். மரபு வேலிகளை உடைத்தெறியும் அந்தக் காதல் பிடித்திருந்தது. விஜய் மணிவண்ணன் கெமிஸ்ட்ரி பிடித்திருந்தது. விஜய் நாசர் கெமிஸ்ட்ரியும் அதே பாணி. வடிவேலுவுடன் செய்யும் காமெடி காட்சிகளும் களை கட்டும். எப்போது பார்த்தாலும் மனதை மயிலிறகால் வருடிக்கொடுக்கும் படம்.

எ.பி.காட்சி: விஜய் திருமண விழாவை எப்படி நடத்த வேண்டுமென்று விவரிக்கும் காட்சி. அந்தக் காட்சியில் விஜய்யின் பாடி லாங்குவேஜ் பிரமாதம்.

இந்தப் பதிவை தொடர்வதற்காக இருக்கவே இருக்கிறார் தளபதிடா வினு. அவரை அன்புடன் அழைக்கிறேன்.

நாளைக்கு விஜய் ரசிகர்கள் யாரும் இந்தப்பக்கம் தல காட்ட வேண்டாமென்று மறுபடியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் நாளைய பதிவு: டாகுடர் விஜய் எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

56 comments:

Unknown said...

மொதல்ல விஜய்யவே யானைக்கு பிடிக்காது,இதுல என்ன பிடித்த படங்கள்,பிடிக்காத படங்கள்,ஏன் தல டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு,

//நாளைய பதிவு: “டாகுடர் விஜய் – எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்//” தலைப்பு சரி தானா

Vinu said...

நன்றி பிரபாகரன்

Vinu said...

பெரும்பாலான பதிவுலகம் விஜயை நக்கல் அடித்தாலும் அவர்களின் அடிமனதில் விஜய்க்கு சிறிய இடம் உண்டு

Vinu said...

டாக்டர் பட்டத்தினை கேவலப்படுத்துவதை கண்டிக்கிறேன் நண்பா!!!

நம்ம இலங்கையில் இதை கலாநிதி பட்டம் என்பார்கள்........
இதில் விஜய்க்கு சிறிய வயதில் நட்பணிகளுக்காக கிடைத்தது. அவருடன் சங்கர் சார்க்கும் கிடைத்தது. ஆனால் விஜயை மட்டும் கிண்டல் அடிப்பது ????

Vinu said...

ம்ம்ம் இங்கு வசீகரா,பிரியமுடன் ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்ப்பு பெறவில்லை என்னினும் வசீகரா பலபேருக்கு பிடித்து இருந்தது....

Vinu said...

ஐந்து படங்களுக்கு பதிலாக பத்து படங்களை போட்டிருக்கலாம் என்பது எனது கருத்து

Vinu said...

காவலன் எங்கே அது பிடிக்கவில்லையா?

Vinu said...

//// அதுலயும் தளபதிடா தளத்தின் நிர்வாகி வினு வேற முன்னூறாவது பின்தொடர்பவராக இங்கே வந்து இணைந்திருக்கிறார். அதுக்காக, நக்கலடிக்காமலும் இருக்க முடியாது////

நக்கல் அடியுங்க ஆனால் தொடர்ந்தும் பதிவுலகம் விஜயை என்னும் தனி நபரை மட்டும் குறிபார்ப்பது ஏன் ????????

விதியை விரைவில் மாற்றுவோம்

suneel krishnan said...

அட விஜய் நடிச்சதுலயே எனக்கும் ரொம்ப பிடிச்ச படம் வசீகரா தான்,அதை நான் ஒரு தடவ பஸ்ல போகும் பொது பாத்தேன் ,அற்புதமான காமடி ,எனக்கு லவ் டுடே பிடிக்கும் ,-ரகுவரனுக்காக ,பூவே உனக்காக ,காதலுக்கு மரியாதை இதுவும் நல்லா இருக்கும்

idroos said...

அடுத்த பதிவில் ஆப்பா

rajini padivukku vandha kolai!! Mirattalkal naalaiyum varalam.
Be carefulful.

idroos said...

கருணா,ஜெயாவ கூட விமர்சிக்கலாம்போல நடிகனை விமர்சிச்சா அவனவனுக்கு பொத்துக்குட்டு வருது.

Anonymous said...

// டெனிம் said...

மொதல்ல விஜய்யவே யானைக்கு பிடிக்காது,இதுல என்ன பிடித்த படங்கள்,பிடிக்காத படங்கள்,ஏன் தல டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு,//


யானையா???? எந்த யானை???

"ராஜா" said...

நாளைக்கு வாறேன்

Vinu said...

///இந்தப் பதிவை தொடர்வதற்காக இருக்கவே இருக்கிறார் “தளபதிடா” வினு. அவரை அன்புடன் அழைக்கிறேன்////

தொடர்கிறேன்

sathishsangkavi.blogspot.com said...

அனைத்தும் வெற்றிப்படங்கள்...

Unknown said...

உலகத்தின் மிக மிக மிக பெரிய பெரிய பெரிய மொக்க இரண்டாவுது மொக்க பதிவு ,முதலாவுது இதே போன்ற அண்ணன் சி.பி.செந்தில்குமாரின் பதிவு

ஒட்டு படுவதற்கு மனசே வரவில்லை பிரபா உங்களுக்காதான் போடுறேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>>யாருக்குமே பிடிக்காத படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது

பெரும்பானமையானவர்களுக்கு பிடிக்காத என மாற்றி சொல்லுங்க..ஏன்னா எனக்கு வசீகரா பிடிக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

பட்டப்பெயர் குடுத்து என்னை கேவலப்படுத்தனுமா? ஹா ஹா ( நாங்க எல்லாம் ஏற்கனவே கேவலப்பட்டுத்தானே கிடக்கோம்?)

முத்தரசு said...

எல்லாமே மொக்க படமா இருக்கு இவ்வளவு தான் உம்ம சரக்கா?

Speed Master said...

ரைட்டு அடுத்த பதிவ சீக்கரம்

Anonymous said...

>>> பிரியமுடன் எனக்கு பிடித்த திரைப்படம்!

ராஜகோபால் said...

நாளை வருகிரேன்

Unknown said...

சரிங்க பிரபா ஓட்டுப் போடறேன்! :-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனக்கு வசீகரா ரொம்ப பிடிக்கும்! அதுல காம்பரமைஸ் பண்ணிக்கிறது பத்தி அண்ணன் ஒரு வகுப்பு எடுப்பாரே அந்த சீன் ரொம்ப பிடிக்கும்! வில்லேஜ் கல்யாணம் பத்தி கார்த்திக் ஒரு பாட்டு படுவாரே சூப்பரா இருக்கும்!



அப்புறம் வேட்டைக்காரன் ல எல்லாப் பாடல்களும் பிடிக்கும்! அனுஷ்கா ரொம்ப நல்லா நடிச்சிருப்பாங்க! ( ஹி.... ஹி..... நான் சொல்வதெல்லாம் உண்மை )

Anonymous said...

click and read

====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும்.



..

ஆதவா said...

நல்ல பதிவுங்க... வசீகரா எனக்கும் ரொம்ப பிடிச்ச படம்னாலும் அதைவிட பிடிச்சது சச்சின்!!!

idroos said...

நாளைய பதிவில் முதலிடம் பெறப்போகும் படம் சுறாதானே எப்படி என் கணிப்பு.

idroos said...

5.maanpiku maanavan
4.udhaya
3,2 place padangal sankavi kooda nadicha kaaviyangalil ethunum irandu
1.suraa(best blade ever made)

Anonymous said...

அப்போ நாளைக்கு விஜயை பின்னி எடுக்க போறிங்க :-)

பாரி தாண்டவமூர்த்தி said...

காதலுக்கு மரியாதையை சேத்திருக்கலாம். அதேபோல பூவே உனக்காக, துள்ளாதமனமும் துள்ளும்...இவை இல்லை எனில் விஜய் வளர்ந்திருக்கவே முடியாது என்பது என் கருத்து....

Jhona said...

நானும் உங்கள போல தான் பாஸ், எனக்கும் விஜய் என்ற நடிகனை பிடிக்காது.... இருப்பினும் அவர் நடிப்பில் வெளி வந்த படங்களில் எனக்கு பிடித்தது துள்ளாத மனமும் துள்ளும்...

pichaikaaran said...

என்னதான் விஜய் ரசிகர் என்றாலும் , தல ய காப்பாத்த ஹெல்மெட் போட்டாகணும் . தாட் ஈஸ் பவர் ஆஃப் தல

Unknown said...

life ல compramaise தேவைதான் அதுக்காக இப்படியா கொடும.......என்னமோ போங்க நண்பரே உங்களுக்காக ஓட்டும் பின்னூட்டமும்!!

பதிவுக்கு கண்டிப்பா நன்றி சொல்ல மாட்டேன்.

ஏன்னா தன்னோட சுயநலத்துக்கு அப்பாவி ரசிகன பயன்படுத்துற எவனுக்கும் மன்னிப்பே கிடையாது.

Thanglish Payan said...

Vijay fan ah nenga..
appadiye ajith pathiyum oru pathivu venum..

its good actually. :)

கார்த்தி said...

இதில் குஷி படம் வந்ததை ஏற்கமுடியல!

Jayadev Das said...

//அப்படியே எங்கள் வீட்டு சூழலை பிரதிபலித்தது.// அப்படியா, திரிஷா ரோல்ல யார் இருக்காங்க!
//எ.பி.காட்சி: வேறென்ன, இடுப்பு காட்சியே தான்.//எங்க அலுவலகத்தில் ஒரு பெங்காலி, அவனுக்கு தமிழ் படங்களில் வரும் மசாலா ரொம்ப இஷ்டம். இந்தக் காட்சியைப் பாத்துட்டு எல்லோர்கிட்டயும் சொல்லி விழுந்து விழுந்து சிரிச்சு எங்க மானத்தைவாங்கிகிட்டான், கிராதகன்.
வசீகரா-எனக்கும் ரொம்ப பிடிக்கும், விஜய் [கடைசி காட்சி தவிர] ஹீரோயிசம் காட்டாம நடிச்ச படம்.

டக்கால்டி said...

பூவே உனக்காக, நினைத்தேன் வந்தாய் மற்றும் மின்சார கண்ணா போன்ற படங்களும் எனக்குப் பிடித்தவை...

தமிழ்வாசி பிரகாஷ் said...

காதலுக்கு மரியாதை படத்துக்கு இடம் இல்லையா?

Philosophy Prabhakaran said...

@ டெனிம், Vinu, dr suneel krishnan, ஐத்ருஸ், இந்திரா, "ராஜா", சங்கவி, நா.மணிவண்ணன், சி.பி.செந்தில்குமார், மனசாட்சி, Speed Master, ! சிவகுமார் !, ராஜகோபால், ஜீ..., மாத்தி யோசி, ஆதவா, கந்தசாமி., Pari T Moorthy, Jhona, பார்வையாளன், விக்கி உலகம், Thanglish Payan, கார்த்தி, Jayadev Das, டக்கால்டி, தமிழ்வாசி - Prakash

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ டெனிம்
// ஏன் தல டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு //

யாராவது தொடர் பதிவிற்கு அழைத்தால் தொடர்வதும், தொடர்வதற்கு பிறரை அழைப்பதும் தான் பதிவுலக மரியாதை...

// தலைப்பு சரி தானா //

சரிதான்... டாக்டர் அல்ல... டாகுடர் தான்...

Philosophy Prabhakaran said...

@ Vinu
// பெரும்பாலான பதிவுலகம் விஜயை நக்கல் அடித்தாலும் அவர்களின் அடிமனதில் விஜய்க்கு சிறிய இடம் உண்டு //

இங்கேயும் அது இருக்கு... அது ஒரு பரிதாப உணர்ச்சி...

// இதில் விஜய்க்கு சிறிய வயதில் நட்பணிகளுக்காக கிடைத்தது. அவருடன் சங்கர் சார்க்கும் கிடைத்தது. ஆனால் விஜயை மட்டும் கிண்டல் அடிப்பது ???? //

விஜயோ, ஷங்கரோ, கமலோ யாராக இருந்தாலும் கெளரவ டாகுடர் பட்டங்களுக்கு நான் மரியாதை கொடுப்பதில்லை... அது சில உள்நோக்கங்களோடு கொடுக்கப்படும் பட்டம் என்பதே அடியேனின் கருத்து...

// ஐந்து படங்களுக்கு பதிலாக பத்து படங்களை போட்டிருக்கலாம் என்பது எனது கருத்து //

ஐந்துக்கே அதிகமாக யோசிக்க வேண்டியதாக போய்விட்டது... எனினும் மீதி ஐந்து நாளைக்கு வரும்:)))

// காவலன் எங்கே அது பிடிக்கவில்லையா? //

பார்க்கவில்லை... பார்த்தாலும் பிடிக்காது...

// நக்கல் அடியுங்க ஆனால் தொடர்ந்தும் பதிவுலகம் விஜயை என்னும் தனி நபரை மட்டும் குறிபார்ப்பது ஏன் ???????? //

பதிவுலகம் எப்படி என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை... ஆனால் நான் விஜயை மட்டும் குறி எல்லாம் பார்ப்பதில்லை... என்னை இந்த தொடர்பதிவிற்கு அழைக்கவில்லை என்றால் நான் ஏன் இதையெல்லாம் எழுதப்போகிறேன்...

// தொடர்கிறேன் //

நன்றி... எழுதியபிறகு லிங்க் அனுப்பவும்...

Philosophy Prabhakaran said...

@ dr suneel krishnan
// தை நான் ஒரு தடவ பஸ்ல போகும் பொது பாத்தேன் //

என்ன ஒற்றுமை... நானும் பாண்டிச்சேரியிலிருந்து சென்னை திரும்பும்போது ஒரு பஸ் பயணத்தில்தான் பார்த்தேன்... ஆனால் அப்போது தெளிவாகத்தான் இருந்தேன்...

Philosophy Prabhakaran said...

@ ஐத்ருஸ்
// rajini padivukku vandha kolai!! Mirattalkal naalaiyum varalam. //

அதுசரி, ரஜினி பதிவிற்கு கொலைமிரட்டல்கள் வந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்... அந்த பயலுவ அட்ரஸ், போன் நம்பர் கொடுத்தும் காணாம போயிட்டாங்க... பின்னூட்டம் போடும்போது வெட்டிடுவேன், குத்திடுவேன்னு போடுறாங்க... தக்காளி, நேர்ல வாங்கடான்னா நான் சென்னையில இல்லை, எனக்கு இன்னைக்கு வயித்தால போகுதுன்னு கதை உடுறானுங்க...

// கருணா,ஜெயாவ கூட விமர்சிக்கலாம்போல நடிகனை விமர்சிச்சா அவனவனுக்கு பொத்துக்குட்டு வருது. //

Well Said... அப்படி ஏமாத்தி வச்சிருக்குறானுங்க...

// நாளைய பதிவில் முதலிடம் பெறப்போகும் படம் சுறாதானே எப்படி என் கணிப்பு. //

தப்பு... ஆனா நெருங்கிட்டீங்க...

// 5.maanpiku maanavan
4.udhaya
3,2 place padangal sankavi kooda nadicha kaaviyangalil ethunum irandu
1.suraa(best blade ever made) //

அப்படின்னா உங்களையும் தொடர்பதிவிற்கு அழைக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ இந்திரா
// யானையா???? எந்த யானை??? //

விடுங்க மேடம்... எனக்கு என்று போடவேண்டியது எழுத்துப்பிழையாகி விட்டது... நம்மளே ஒரு குத்துமதிப்பா புரிஞ்சிக்க வேண்டியதுதான்...

Philosophy Prabhakaran said...

@ சங்கவி
// அனைத்தும் வெற்றிப்படங்கள்... //

ஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப ஜாஸ்தி சார்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// ஒட்டு படுவதற்கு மனசே வரவில்லை பிரபா உங்களுக்காதான் போடுறேன் //

கவலைப்படாதீங்க... நம்ம கச்சேரி நாளைக்குத்தான்... இது சும்மா உல்லுல்லாயி...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// பெரும்பானமையானவர்களுக்கு பிடிக்காத என மாற்றி சொல்லுங்க..ஏன்னா எனக்கு வசீகரா பிடிக்கும் //

திருத்தத்திற்கு நன்றி... சிநேகாவிற்காகத்தானே...

// பட்டப்பெயர் குடுத்து என்னை கேவலப்படுத்தனுமா? ஹா ஹா ( நாங்க எல்லாம் ஏற்கனவே கேவலப்பட்டுத்தானே கிடக்கோம்?) //

பெருமைப்படுத்தி இருக்கேன்னு சொல்லுங்க தலைவரே...

Philosophy Prabhakaran said...

@ மனசாட்சி
// எல்லாமே மொக்க படமா இருக்கு இவ்வளவு தான் உம்ம சரக்கா? //

இதுவே மொக்கை என்றால் அப்போ நாளிக்கு எழுதப்போறத என்னான்னு சொல்லுவீங்க...

Philosophy Prabhakaran said...

@ மாத்தி யோசி
// அப்புறம் வேட்டைக்காரன் ல எல்லாப் பாடல்களும் பிடிக்கும்! அனுஷ்கா ரொம்ப நல்லா நடிச்சிருப்பாங்க! //

என்னது அனுஷ்கா அந்த படத்துல நடிச்சாங்களா... என்ன சொல்றீங்க... ஏதோ மூணு பாட்டுக்கு வந்து ஆ(ட்)டிட்டு தானே போனாங்க...

Philosophy Prabhakaran said...

@ Anonymous
// click and read

====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். //

சூப்பர்ப்... பொய் சொல்றேன்னு நினைக்காதீங்க... இதே பதிவை நானும் எழுதனும்னு நினைச்சேன்... அதை கொஞ்சம் நகைச்சுவையான எழுத்துநடையுடன் எழுத வேண்டுமென்று காத்திருந்தேன்... அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டீர்கள்... பரவாயில்லை இருக்கட்டும்... யார் எழுதினால் என்ன...? கருத்து தானே முக்கியம்... எனது ஏதாவதொரு பதிவில் உங்கள் இடுகைக்கு இணைப்பு தருகிறேன்...

உங்கள் சேவை தொடரட்டும்...

Philosophy Prabhakaran said...

@ ஆதவா
// வசீகரா எனக்கும் ரொம்ப பிடிச்ச படம்னாலும் அதைவிட பிடிச்சது சச்சின்!!! //

காமெடி சீன்ஸ் நல்ல இருக்கும்...

Philosophy Prabhakaran said...

@ Pari T Moorthy
// காதலுக்கு மரியாதையை சேத்திருக்கலாம். அதேபோல பூவே உனக்காக, துள்ளாதமனமும் துள்ளும்...இவை இல்லை எனில் விஜய் வளர்ந்திருக்கவே முடியாது என்பது என் கருத்து.... //

இது விஜய்யின் வெற்றிப்பட லிஸ்ட் இல்லை... விஜய் நடிப்பில் எனக்குப் பிடித்த படங்கள் மட்டுமே...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// என்னதான் விஜய் ரசிகர் என்றாலும் , தல ய காப்பாத்த ஹெல்மெட் போட்டாகணும் . தாட் ஈஸ் பவர் ஆஃப் தல //

தெளிவா தான் இருக்கீங்களா... இல்லைன்னா இன்னும் இலக்கிய போதை தெளியலையா...

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
// ஏன்னா தன்னோட சுயநலத்துக்கு அப்பாவி ரசிகன பயன்படுத்துற எவனுக்கும் மன்னிப்பே கிடையாது. //

உங்களுக்கு விஜய் மீது இவ்வளவு கோபம் இருக்கும்னு எதிர்பார்க்கலை... தளபதி கட்சி மட்டும் ஆரம்பிக்கட்டும் அதுக்கப்புறம் நம்ம எல்லாரும் கூட்டா சேர்ந்து கிழிக்கலாம்...

Philosophy Prabhakaran said...

@ Thanglish Payan
// Vijay fan ah nenga.. //

அய்யயோ இல்லீங்க...

// appadiye ajith pathiyum oru pathivu venum.. //

நல்லபடியா தானே... எழுதிட்டா போச்சு...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// அப்படியா, திரிஷா ரோல்ல யார் இருக்காங்க! //

ச்சே போங்க சார் எனக்கு வெட்கமா இருக்கு... நீங்களே இந்த பதிவை படிச்சு தெரிஞ்சிக்கோங்க...

http://philosophyprabhakaran.blogspot.com/2010/04/ii.html