18 February 2011

பச்சையப்பன் கல்லூரியும் பன்னாடைப்பயல்களும்

எதிர்கால இந்தியா, எதிர்கால எகிப்து, எதிர்கால அண்டார்டிகா இதெல்லாம் இவனுங்க கையிலதான் இருக்குதாமாம்...


பல அறிஞர்களையும் பேரறிஞர்களையும் உருவாக்கியதாம் பச்சையப்பன் கல்லூரி #வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...


அப்படியே நேரமிருந்தா இந்த காணொளி கருமத்தையும் பாருங்க...


டிஸ்கி: யூத்துன்னா அப்படித்தான் இருக்கும்ன்னு யாரும் வக்காலத்து வாங்காதீங்க... இந்த கழிசடைகளை நேரில் பார்த்தவர்கள் அந்த காரியத்தை செய்ய மாட்டார்கள்...

Post Comment

82 comments:

Unknown said...

நீங்க இத சொல்றீங்களே.........
அந்தப்பசங்க அந்தக்கல்லூரி முதல்வர் மேலேயே ஆசிட் அடிச்ச வரலாறு தெரியுங்களா.......

சுதர்ஷன் said...

இவங்களையா புரட்ச்சி பண்ணி தமிழுக்கும் தமிழர்க்கும் போராட வைக்கிறது ..முடியல

Romeoboy said...

தப்பு இவங்க மேல மட்டும் இல்ல .. இதை அனுமதிக்கிற போலீஸ்காரங்க அப்பறம் காசுக்கும் டிரஸ்க்கும் ஆசைப்பட்டு இவங்கள அழைச்சிட்டு வர பஸ் டிரைவர் மேலையும் தப்பு இருக்கு.

\\பன்னாடைப்பயல்களும்// இந்த வார்த்தையை தேவையில்லை இங்கே ..

settaikkaran said...

இன்று இதைக் குறித்து எழுதுவதாக இருந்தேன். எனது வேலையை சுலபமாக்கி விட்டீர்கள் நண்பரே! பொதுவாக "பன்னாடைப்பயல்களும்" போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் எனக்கு ஏற்புடையவை இல்லை. ஆனால், நேற்று இந்த நாதாரிகள் அடித்த கூத்தைப் பார்த்தபிறகு,இவர்களையெல்லாம் என்ன திட்டினாலும் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. இவைகளெல்லாம் மாணவர் என்ற பெயரில் உலாத்திக்கொண்டிருக்கிற இரண்டுகால் ஜந்துக்கள்!

settaikkaran said...

//டிஸ்கி: யூத்துன்னா அப்படித்தான் இருக்கும்ன்னு யாரும் வக்காலத்து வாங்காதீங்க... இந்த கழிசடைகளை நேரில் பார்த்தவர்கள் அந்த காரியத்தை செய்ய மாட்டார்கள்...//

கவலையே படாதீங்க, இந்தக் கழிசடைகளுக்கு வக்காலத்து வாங்கவும் நம்மூரில் ஆளுக்குப் பஞ்சமில்லை.

Robin said...

இதுகளுக்கெல்லாம் அரசியல் பின்புலம் இருக்கும்.

sathishsangkavi.blogspot.com said...

எல்லாம் வயசுக்கோளாறு... 3 வருசம் கழிச்சு வெளிய வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும் படிச்சிருக்கலாம் என்று...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சீரியஸ்சா சொல்றேன்.. தலையும் புரியலே..வாலும் புரியலே...

வீடியோவில் கூட்டமா போறாங்களே எதுக்கு பாஸ்?..

ஸ்ட்ரைக் பண்றாங்களா?.. இல்லை கோரிக்கையா?.. இல்லை ?????
விளக்குங்களேன்

ஆதவா said...

எதுக்கு இந்த கூட்டம்???? பஸ் டேன்னா பஸ் மேல ஏறிடுவாங்களோ???

சக்தி கல்வி மையம் said...

சரியான சாட்டையடி பதிவு...

Unknown said...

அன்புள்ள மாணவர்களே!இளைஞர்களே! இளைஞர் என்றால் புகைப்பான் குடிப்பான் ஊர் சுத்துவான் பெண்களை கேலி செய்வான் என்றெல்லாம் இந்த சமூகம் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறது. bachelor க்கு வீடு கூட வாடகைக்கு கிடைக்க மாட்டுது. அதனை மாற்றிக்காட்டவேண்டிய நீங்கள் இப்படி நடந்து கொள்வது மிகவும் வேதனையாக இருக்கிறது. பேருந்து தினம் கொண்டாடுகிற அளவுக்கு தமிழினம் இன்று மகிழ்ச்சியாகவா இருக்கிறது? இந்த தேசத்தின் அவலங்களை எதிர்த்து போராட வேண்டிய தைரியமுடைய ஒரு கூட்டம் தன் சக்தியை இப்படியா வீணடிப்பது? தினமும் கொலைசெய்யப்படுகிற தமிழ் மீனவனுக்காய் ஏன் நீங்கள் கூடவில்லை? திருச்சியிலே பெரியார் சிலை உடைக்கப்பட்ட போது தேர்விற்கு கூட செல்லாமல் நாங்கள் படிக்கிற காலத்தில் போராடியிருக்கிறோம். இந்திய அளவிலான மாணவர் அமைப்பு ஒன்றின் மாவட்ட செயலாளராக பணியாற்றியிருக்கிறேன். போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் என்றாலே மனதில் செகுவாராவைப்போல பகத்சிங்கைப்போல நினைத்துக்கொண்டு வளாகத்தில் உலாவி திரிந்திருக்கின்றோம். ஒரு போராட்ட கலாச்சாரத்தை உருவாக்கியிருந்தோம். அதனோடு தேர்விலும் கூடிப்படித்து தேறினோம். எங்கள் மூத்த மாணவர்கள் உருவாக்கி வைத்திருந்த அந்த பாரம்பரியத்தை நாங்களும் தொடர்ந்தோம். ஆனால் எங்களுக்கு பின் அது தொடராமல் போய்விட்டதோ என நினைக்க தோன்றுகிறது... 'படிக்கிற பசங்க' என நம்மீது பாசம் காட்டிய சமூகம் இன்று அதனையே ஒரு எதிர் காரணமாய் எடுத்துகொண்டு மாணவர்களை எதிர்பதற்கு இது போன்ற சம்பவங்கள் காரனமாகிவிடுகின்ற அபாயம் இருக்கிறது எச்சரிக்கை!

வேதைனையோடு இப்பதிவினை பகிர்ந்துள்ள நண்பர் பிரபா வுக்கு நன்றிகள்... நம் தம்பிகள் தானே மாறிவிடுவார்கள். அதனால் கோபமான வார்த்தைகளெல்லாம் வேண்டாம். அந்த உரிமையில் தான் நீங்களும் திட்டுகிறீர்கள் என்று அவர்களும் உணர்வார்கள்...

இக்பால் செல்வன் said...

பிரபா இந்தப் பதிவை எழுதியதற்கு ஒரு சபாஷ் ! தமிழகம் எகிப்தாய் மாறுமாம் ! பன்னாடை பன்னாடை இந்த மாதிரி மாணவர்கள் இருந்தால் சோமாலியாவாகக் கூட மாற துப்பில்லை...... இவர்களைப் போன்றவர்களை திரையில் ஹீரோக்களாய்க் காட்டும் கழுசடை இயக்குநர்கள் மேலும் உசுப்பேத்தி விட்டதில் இதுகள் எல்லாம் ஹீரோ ரேஞ்சுக்கு சுத்தி திரியறதும், கலிஜ் பிகர்களைத் தள்ளிக் கொண்டுப் போய் ரோமான்ஸ் விடுறதும். என்னக் கொடுமை சார்.......... இந்த மாதிரி விடியோவ எல்லாம் பிபிசியில போட்டு மன்மோகன் சிங்க் தான் பொறுப்புனு ஹாட் நியுஸ் போடனும் போல இருக்கு.......

Chitra said...

இது legal தானா? ஆச்சர்யமாக இருக்கிறது.... பின்னாலே டிராபிக் ஜாம் வேற ஆகுதே...

Pari T Moorthy said...

இவங்கல எல்லாம் திருத்தவே முடியாது ......
அந்த வார்த்தையை எழுதி இருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ....

Unknown said...

சூப்பர்..

மாணவன் said...

பட்டாபட்டி.... said...
சீரியஸ்சா சொல்றேன்.. தலையும் புரியலே..வாலும் புரியலே...

வீடியோவில் கூட்டமா போறாங்களே எதுக்கு பாஸ்?..

ஸ்ட்ரைக் பண்றாங்களா?.. இல்லை கோரிக்கையா?.. இல்லை ?????
விளக்குங்களேன்

:))

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இவர்களுக்கு இன்னும் கொஞ்சம் காரமாக குடுத்திருக்கலாம்! மாணவர்களா இவர்கள்?

ராஜகோபால் said...

படிச்சு முடிச்சது பின்னால கைல டிகிரியா தூக்கிட்டு நாய் மாதிரி அலையகுள்ள தெரியும்

Speed Master said...

இவங்க கையில எதிர்காலமா

அடப்பாவம் அப்துல்கலாம்

அஞ்சா சிங்கம் said...

பன்னாடைகள் என்பது சரிதான் ......
போகிற வழியில் இருக்கும் பெட்டி கடைகளை சூறையாடி கொண்டே போவார்கள் .....
பொதுவாக கலை கல்லூரி மாணவர்கள் மட்டுமே இப்படி பொறுப்பில்லாமல் பொறுக்கி தனம் செய்வது கல்வியின் குற்றமா .
எங்கேயோ தவறு இருக்கிறது ...............

Anonymous said...

manavan ..... ithai parkkum pothu enakkum aasai ivaaru kondaada vendum endru

நட்புடன் ரமேஷ் said...

நேற்றைய முந்தினம் நமது பாரத பிரதமர் மன்மோகன்சிங் அளித்த "எதுவுமே தெரியாது" பேட்டியைவிட இது ஒன்றும் கேவலமில்லை என நினைக்கிறேன். என்ன நண்பர்களே சரிதானே??
http://natputanramesh.blogspot.com/2011/02/blog-post_18.html

மு.சரவணக்குமார் said...

கொண்டாட்டங்கள் எப்போதும் வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது.

எனக்கென்னவோ உங்களுக்கு வயசாய்டுச்சின்னு தோணுது, அல்லது கொண்டாட்ட மனநிலையை தொலைத்து விட்டீர்களென நினைக்கிறேன்.

Anonymous said...

மு.சரவணக்குமார் said.//எனக்கென்னவோ உங்களுக்கு வயசாய்டுச்சின்னு தோணுது, அல்லது கொண்டாட்ட மனநிலையை தொலைத்து விட்டீர்களென நினைக்கிறேன்//கொண்டாட்டமா????????????????????????????????????
!!! பேருந்து தினம் கொண்டாடுகிறேன் பேர்வழி என்று பல வருடங்களாக சென்னையில் ஒரு சில கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் அளவுக்கு மீறி சென்று கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் படிக்கட்டில் பயணம் செய்து பெண்களுக்கு இடையூறு செய்ததை தட்டி கேட்ட பெண்மணியின் தலையில் கல்லை விட்டு எறிந்தனர் நாளைய அப்துல் கலாம்கள். அந்த பெண்ணை ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். கொண்டாட்டத்தை தனி இடத்தில வைத்துகொண்டால் யார் கேட்கப்போகிறார்கள்?? பொதுமக்களின் நிம்மதியை குலைக்கும் செயலை அரசாங்கம் தொடர்ந்து அனுமதித்துதான் வருகிறது. கல்லூரிக்குள் கட்சி நுழைந்த காலம் முதல். பேருந்து தினத்தன்று ஒரு நாள் ஓட்டுனராக இருந்து பார்த்தல் தெரியும் அதன் சித்ரவதை என்னவென்று. பரபரப்பான அண்ணா சாலையில் பேருந்தின் கூரை மீதேறி கொட்டம் அடிப்பவர்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் இன்றி வண்டியை ஓட்டும் ஓட்டுனருக்கு முதலில் 'ஓட்டுனர் நாள்' கொண்டாடட்டும் இந்த 'ராக்கெட் ராஜாக்கள்'. வாங்கடி...இன்டர்வியுல உங்க 'ஆட்டம்' எப்படின்னு பாக்கத்தான போறோம்!!!

Arun Ambie said...

"டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும் நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்" என்று தலைவர்கள் ஆளும் நாட்டில் அடுத்த தலைமுறை இப்படித்தான் இருக்கும். ௧௦௦௦ அப்துல் கலாம் வந்தாலும் கஷ்டம்.

Unknown said...

இளைஞர் சக்தி எவ்வளவு கேவலமான முறையில் வேஸ்ட் செய்யப்படுகிறது? இந்த மாதிரி இருந்தா ஏன் போற இடமெல்லாம் ஒதைக்க மாட்டானுங்க? :((

Anonymous said...

nice post prabha

vasan said...

சுத‌ந்திர போருக்கும், இந்தி எதிர்ப்பு இய‌க்க‌த்திற்கும் முதுகெழும்பாய் இருந்து நாட்டை த‌ல‌விதிக‌ளை மாற்றிய‌ இந்த‌ மாண‌வ‌ச் ச‌முதாய‌ம், மாண‌வ‌ச‌க்தி, இன்று எடுப்பார் கைப்பிள்ளைக‌ளாய், ச‌ரியான க‌ல்வி முறையும், வாய்ப்பும், ச‌ரியான த‌லைவ‌ன் இல்லாது, திரைஉல‌க‌த்தின‌ரையும் ந‌டிக‌னையும், ந‌டிகைக‌ள‌யும் வ‌ழிகாட்டிக‌ளாய் நின‌த்து வாழ முய்ற்சித்துக் கொண்டிருக்கிறார்க‌ள். ஆங்கில ஆட்சியில் மெக்காலேயின் க‌ல்வியால், அடிநிலை சிப்ப‌ந்திக‌ள். எழுத்த‌ர்க‌ள், ஆட்சியாள‌ர்க‌ளுக்கு ஊழிய‌ம்‌ செய்ய‌ இந்தியாவில் த‌யாரிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். இன்றும் மேலைநாட்டினருக்கு ஊழிய‌ம் செய்ய‌த்தான் (பிபிஒ)நம‌து க‌ல்வி நிலைய‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்கின்ற‌ன‌. தற்போதைய‌ அர‌சிய‌ல் ச‌மூக‌ச் சூழ‌லில், மாணவ‌ர்க‌ளில் ஒரு ப‌குதியினர் போதை சுழ‌லில் சிக்கி பாதை மாறித்தான் போய் கொண்டிருக்கிறார். நம்பிக்கையூட்டி நாளைய‌ நாட்டின் ந‌லமும், அவ‌ர்க‌ளது வ‌ளமும் அவ‌ர்க‌ள‌து கைக‌ளில் தான் இருக்கிற‌து என ந‌ம்பிக்கை ஊட்டுவோம். ந‌ம்ம‌ள‌விற்கு சுத‌ந்திர‌மும், அர‌சிய‌ல் அனுப‌வமும், அறிவும் இல்லாத‌ ஆப்பிரிக்க நாட்டின‌ரும், தாய்லாந்து ம‌க்களும், அர‌புவின் ப‌ல‌ நாடுக‌ளிலும், ம‌க்க‌ளின் குறிப்பாய், இளைஞ‌ர்க‌ள், நவீனத்துவ‌ தொட‌ர்பு வ‌ச‌திக‌ளை, ஊழ‌ல் அர‌சுக‌ளின் எதேச்ச‌திகார‌த்திற்கு எதிராய் எழுந்து போராட‌ ப‌ய‌ன்ப‌டித்தி, ப‌ய‌ன் அடைகிறார்க‌ள். கற்போம், நேர்மை நாட்டை ஆளட்டும்.

முனைவர் இரா.குணசீலன் said...

வருந்தவும்
திருந்தவும்
திருத்தவும்

தேவையான இடுகை!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தப்பன்னாடைக இன்னுமா இப்படி இருக்கானுங்க? பச்சையப்பாஸ், நந்தனம் ஆர்ட்ஸ் எல்லாம் ஒன்லி பொறுக்கீஸ், இவனுகளை ஸ்டூடன்ஸ்னு சொல்றதே தப்பு (ஒரு தடவ பஸ்சையே ஹைஜாக் பண்ணி இருக்கானுங்க தெரியுமா?) முன்னாடி லயோலா காலேஜ் பசங்க கூட அடிக்கடி சண்ட வரும் (அத வெச்சித்தான் காதல் தேசம் படமே எடுத்திருப்பாங்க) ராஸ்கல்ஸ்.... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்னு வக்காலத்து வாங்குறவங்களுக்கு இந்த வீடியோக்களை அவசியம் காட்டனும், சரியான பதிவு பிரபாகரன்..... வெல்டன்!

THE IRON MAN! said...

BE CARFEFUL... While Travelling!

Thirumalai Kandasami said...

Presidency college --Bus Day halts traffic in Triplicane Times

http://timesofindia.indiatimes.com/city/chennai/Bus-Day-halts-traffic-in-TriplicaneTimes/articleshow/7505247.cms

கும்மாச்சி said...

அரசியல் பின்புலம், முன்புலம், அப்பன் அடித்த காசெல்லாம் சேர்ந்துதான் இந்தக் கூத்து, என்னத்த சொல்ல.

பச்சையப்பா ராக்கர்ஸ் said...

டேய் பொட்டப்பயலே எங்கள பன்னாடனு பதிவு போட்டு பேமஸ் ஆகலாம்னு பாக்குறியா மவனே உன்ன பேரிஸ் பக்கம் பாத்தா இருக்குடி. நாங்க பஸ் டே கொண்டாடுனா உனக்கு எங்கடா எரியிது, ஒம்போது மாதிரி மூஞ்ச வெச்சிக்கிட்டு எங்கள பத்தி எழுதிரியாடா பன்னாட பயலே.

சௌந்தர் said...

அரசு பஸ் நல்லா உறுதியா தான் இருக்கு

Anonymous said...

this is the so called bus day celebration in chennai.
prabha congrats to you for this post
i ve seen such things in chennai 10yrs back. its really a shame that it still continues.

Anonymous said...

@ பச்சையப்பா ராக்கர்ஸ்

//டேய் பொட்டப்பயலே எங்கள பன்னாடனு பதிவு போட்டு பேமஸ் ஆகலாம்னு பாக்குறியா மவனே//

pera poda thuppu illadha ne dhan da pottai. unna madiri porukinga varuvinga therinjum dairiyama post potta avaruku oru sabash.


//உன்ன பேரிஸ் பக்கம் பாத்தா இருக்குடி. //

enna pannuva minji pona potta madiri kumbala vandhu adipa. ne appadi adikka pora adi kooda unga ellaryum podhu makkal road la oda oda adikka pora nalaku arambama irukalam.

//நாங்க பஸ் டே கொண்டாடுனா உனக்கு எங்கடா எரியிது, //

$%^&*( kondadarau. adukku en da aduthavan velai kedukkara? en traffic blog panra? un college ulla bus oda vittu adhu tyre kizha paduthu sagu. evan kekka poran.

Jayadev Das said...

சென்னையைப் பொறுத்தவரை "பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல" எனபது போல இரண்டு கல்லூரிகள். ஒன்னு பச்சையப்பா காரங்க, இன்னொருத்தர் இவங்களையே தூக்கி சாப்பிட்டுவிடும் ஆட்கள், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள். [ரவுடின்னு சொன்னா கூட பயம் வராது ஆன்னா லா காலேஜ் பசங்கன்னா கொஞ்சம் நடுக்கமாத்தான் இருக்கும்]. முன்பு பச்சையப்பன் கல்லூரி முன் எப்போதும் ஒரு போலீஸ் Van நிற்கும், குறைந்த பட்சம் ஐம்பது போலீசாவது இருப்பார்கள், அப்படித்தான் அவர்களை வகுப்புகளையே நடத்த முடியும்.
பசு மாதிரி சாதுவாவே இருக்கிறவனும் இந்தக் கல்லூரியில் சேர்ந்து விட்டால் அதே மாதிரி ஆயிடுவான். [When you are in Rome be like a Roman!!]. சென்னையில் நான் பார்த்த இன்னொரு அதிசயம் "எவனா இருந்தா எனக்கென்னடா" என்று கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல வேறு யாருக்கும் பயப்படாத நகரப் பேருந்து நடத்துனர்களும், ஓட்டுனர்களும்!!

TERROR-PANDIYAN(VAS) said...
This comment has been removed by the author.
பாலா said...

//நட்புடன் ரமேஷ்
நேற்றைய முந்தினம் நமது பாரத பிரதமர் மன்மோகன்சிங் அளித்த "எதுவுமே தெரியாது" பேட்டியைவிட இது ஒன்றும் கேவலமில்லை என நினைக்கிறேன். என்ன நண்பர்களே சரிதானே?? //

மன்மோகன்சிங் அளித்த அந்த பேட்டியின் கேவலமான நிலைக்கு மாணவர்களுக்கு அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாததுதான் காரணம். பஸ்சில் இப்படி கத்த தெரிந்தவர்களுக்கு சுட்டுக்கொள்ளப்பட்ட மீனவனுக்காக கத்த தெரியவில்லை. அப்படி கத்த தெரிந்திருந்தால் ஒரு கல்லுலிமங்கன் பிரதமராய் வந்திருக்க முடியாது..
இந்த பன்னாடைபயலுகளால் நானும் என் நண்பனும் பூந்தமல்லி ரோட்டில் ஒரு மணி நேரம் என் பொழைப்பை போட்டு நடுரோட்டில் அல்லாடிக்கொண்டிருந்தேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

@prabhakar

prabhua! pona comment pottadhu nan dhan. name poda maranduten. id konjam problem adan anony name la potten.

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம், S.Sudharshan, ♥ RomeO ♥, சேட்டைக்காரன், டக்கால்டி, Robin, சங்கவி, பட்டாபட்டி...., ஆதவா, sakthistudycentre-கருன், யோவ், இக்பால் செல்வன், Chitra, Pari T Moorthy, கே.ஆர்.பி.செந்தில், மாணவன், மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன், ராஜகோபால், Speed Master, அஞ்சா சிங்கம், நட்புடன் ரமேஷ், மு.சரவணக்குமார், ! சிவகுமார் !, Arun Ambie, தஞ்சாவூரான், vasan, முனைவர்.இரா.குணசீலன், பன்னிக்குட்டி ராம்சாமி, THE IRON MAN!, Thirumalai Kandasami, கும்மாச்சி, சௌந்தர், Jayadev Das, TERROR-PANDIYAN(VAS)

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே...

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
// நீங்க இத சொல்றீங்களே.........
அந்தப்பசங்க அந்தக்கல்லூரி முதல்வர் மேலேயே ஆசிட் அடிச்ச வரலாறு தெரியுங்களா....... //

இதெல்லாம் வேற நடந்திருக்கா...

Philosophy Prabhakaran said...

@ S.Sudharshan
// இவங்களையா புரட்ச்சி பண்ணி தமிழுக்கும் தமிழர்க்கும் போராட வைக்கிறது ..முடியல //

உண்மையில் இது ஒரு வலிமையான சக்தி... இதை பாசிடிவான வழியில் செய்தால் பல சாதனைகள் நம் வசம்...

Philosophy Prabhakaran said...

@ ♥ RomeO ♥
// தப்பு இவங்க மேல மட்டும் இல்ல .. இதை அனுமதிக்கிற போலீஸ்காரங்க அப்பறம் காசுக்கும் டிரஸ்க்கும் ஆசைப்பட்டு இவங்கள அழைச்சிட்டு வர பஸ் டிரைவர் மேலையும் தப்பு இருக்கு. //

அவர்கள் உங்களையும் என்னையும் போல சாமானியர்கள்... இதற்கு மெளனம் சாதிக்கும் அரசையும் கண்டிக்க வேண்டும்... இவர்கள் மீது கை வைத்தால் அது மிகப்பெரிய கலவரமாக வெடிக்கும் என்பதே அரசாங்கத்தின் பயம்...

// \\பன்னாடைப்பயல்களும்// இந்த வார்த்தையை தேவையில்லை இங்கே .. //

இதை விட கடுமையாக சொல்லியிருக்க வேண்டும்...

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
உங்களுடைய பாராட்டு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் விரிவான பதிவாக எழுதியிருப்பேன்... மிக்க மகிழ்ச்சி...

// பொதுவாக "பன்னாடைப்பயல்களும்" போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் எனக்கு ஏற்புடையவை இல்லை. ஆனால், நேற்று இந்த நாதாரிகள் அடித்த கூத்தைப் பார்த்தபிறகு,இவர்களையெல்லாம் என்ன திட்டினாலும் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. இவைகளெல்லாம் மாணவர் என்ற பெயரில் உலாத்திக்கொண்டிருக்கிற இரண்டுகால் ஜந்துக்கள்! //

இது பஸ் டே எனும் ஒருநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல... 159 series, 59 series போன்ற பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் தினமும் இப்படிப்பட்ட அவலங்களை சந்திக்கிறார்கள்... ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண்கள் நிலை பரிதாபத்திற்குரியது... நிறைய ஈவ் டீசிங், எல்லை மீறல்கள், அராஜகங்கள் எல்லாமும் நடக்கும்...

நீங்களும் இதுபற்றி கண்டிப்பாக எழுத வேண்டும்...

// கவலையே படாதீங்க, இந்தக் கழிசடைகளுக்கு வக்காலத்து வாங்கவும் நம்மூரில் ஆளுக்குப் பஞ்சமில்லை. //

வந்துட்டாங்க பச்சையப்பா ராக்கர்ஸ் :)))

Philosophy Prabhakaran said...

@ Robin
// இதுகளுக்கெல்லாம் அரசியல் பின்புலம் இருக்கும். //

ஒரு பத்து சதவிகிதம் பேருக்கு... மற்றவர்கள் அவர்களது அடிவருடிகள்...

Philosophy Prabhakaran said...

@ சங்கவி
// எல்லாம் வயசுக்கோளாறு... 3 வருசம் கழிச்சு வெளிய வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும் படிச்சிருக்கலாம் என்று... //

இந்த மேட்டர் பாதி பேருக்கு பொருந்தும்... மற்றவர்கள் பண பலம், அரசியல் பலத்தை வைத்து எங்கேயாவது அரசு வேலையை வாங்கி அல்லக்கைகளாக வாழ்வார்கள்...

Philosophy Prabhakaran said...

@ பட்டாபட்டி....
// சீரியஸ்சா சொல்றேன்.. தலையும் புரியலே..வாலும் புரியலே...

வீடியோவில் கூட்டமா போறாங்களே எதுக்கு பாஸ்?..

ஸ்ட்ரைக் பண்றாங்களா?.. இல்லை கோரிக்கையா?.. இல்லை ?????
விளக்குங்களேன் //

அண்ணே... இதுக்கு பேருதான் பஸ் டே... தாரை தப்பட்டைகள் முழுங்க 100 பேர் ஏறவேண்டிய பேருந்தில் முன்னூறு பேர் ஏறிக்கொண்டு தொங்கிக்கொண்டு சவ ஊர்வலம் மாதிரி வலம் வருவார்கள்... பேருந்தை ஓட்டுநரோ இயக்குனரோ அதிகாரிகளோ தர மறுத்தால் ஹைஜாக் செய்வார்கள்... பேருந்தில் இருக்கும் பயணிகள் அனைவரும் இறங்கிவிடுவார்கள் / இறக்கிவிடப்படுவார்கள்... மேற்படி சமாச்சாரம் ஒருநாள் கொண்டாட்டமாக இருந்தால்கூட பரவாயில்லை...

முந்தய பின்னூட்டத்தில் இருந்து கொஞ்சம் காப்பி பேஸ்ட்...

159 series, 59 series போன்ற பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் தினமும் இப்படிப்பட்ட அவலங்களை சந்திக்கிறார்கள்... ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண்கள் நிலை பரிதாபத்திற்குரியது... நிறைய ஈவ் டீசிங், எல்லை மீறல்கள், அராஜகங்கள் எல்லாமும் நடக்கும்...

Philosophy Prabhakaran said...

@ யோவ்
நண்பா... இந்தமாதிரியான அட்வைஸ்களை பேருந்தில் பயணிக்கும் சக பயணிகள் எத்தனையோ முறை சொல்வதுண்டு... அவர்கள் கேலிக்கும் வன்முறைக்கும் ஆளாவார்கள் தெரியுமா...

Philosophy Prabhakaran said...

@ இக்பால் செல்வன்
// இவர்களைப் போன்றவர்களை திரையில் ஹீரோக்களாய்க் காட்டும் கழுசடை இயக்குநர்கள் மேலும் உசுப்பேத்தி விட்டதில் இதுகள் எல்லாம் ஹீரோ ரேஞ்சுக்கு சுத்தி திரியறதும், கலிஜ் பிகர்களைத் தள்ளிக் கொண்டுப் போய் ரோமான்ஸ் விடுறதும். என்னக் கொடுமை சார்.......... //

அதைப்பற்றி கூட நான் ஏற்கனவே ஒரு பதிவிட்டிருக்கிறேன்...

தமிழ் சினிமாவின் தறுதலை ஹீரோக்கள்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/02/blog-post_18.html

Philosophy Prabhakaran said...

@ Chitra
// இது legal தானா? ஆச்சர்யமாக இருக்கிறது.... பின்னாலே டிராபிக் ஜாம் வேற ஆகுதே... //

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும் illegal கொண்டாட்டம்...

Philosophy Prabhakaran said...

@ ராஜகோபால்
// படிச்சு முடிச்சது பின்னால கைல டிகிரியா தூக்கிட்டு நாய் மாதிரி அலையகுள்ள தெரியும் //

சங்கவி அண்ணனுக்கு போட்ட அதே பின்னூட்டத்தை காப்பி பேஸ்ட் செய்கிறேன்...

இந்த மேட்டர் பாதி பேருக்கு பொருந்தும்... மற்றவர்கள் பண பலம், அரசியல் பலத்தை வைத்து எங்கேயாவது அரசு வேலையை வாங்கி அல்லக்கைகளாக வாழ்வார்கள்...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// பொதுவாக கலை கல்லூரி மாணவர்கள் மட்டுமே இப்படி பொறுப்பில்லாமல் பொறுக்கி தனம் செய்வது கல்வியின் குற்றமா .
எங்கேயோ தவறு இருக்கிறது ............... //

பச்சையப்பாஸ் கல்லூரி ஒரு உதாரணம்... நந்தனம் ஆர்ட்ஸ், பிரெசிடென்சி, சட்டக்கல்லூரி மாணவர்களும் இந்த லிஸ்டில் அடங்குவார்கள்...

Philosophy Prabhakaran said...

@ மு.சரவணக்குமார்
// கொண்டாட்டங்கள் எப்போதும் வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது.

எனக்கென்னவோ உங்களுக்கு வயசாய்டுச்சின்னு தோணுது, அல்லது கொண்டாட்ட மனநிலையை தொலைத்து விட்டீர்களென நினைக்கிறேன். //

சிவகுமார் பதிலை படிக்கவும்...

முன்னரே போட்ட பின்னூட்ட பதிலில் இருந்து சில பகுதிகள்...

மேற்படி சமாச்சாரம் ஒருநாள் கொண்டாட்டமாக இருந்தால்கூட பரவாயில்லை... 159 series, 59 series போன்ற பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் தினமும் இப்படிப்பட்ட அவலங்களை சந்திக்கிறார்கள்... ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண்கள் நிலை பரிதாபத்திற்குரியது... நிறைய ஈவ் டீசிங், எல்லை மீறல்கள், அராஜகங்கள் எல்லாமும் நடக்கும்...

Philosophy Prabhakaran said...

@ தஞ்சாவூரான்
// இளைஞர் சக்தி எவ்வளவு கேவலமான முறையில் வேஸ்ட் செய்யப்படுகிறது? //

அதுதான் என்னுடைய ஆதங்கமும்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஒரு தடவ பஸ்சையே ஹைஜாக் பண்ணி இருக்கானுங்க தெரியுமா? //

ரெண்டு நாளைக்கு முன்னாடி சென்னையில் நடந்தது கிட்டத்தட்ட ஹைஜாக் தான்... அதுவும் போலீஸ் பாதுகாப்புடன்...

Philosophy Prabhakaran said...

@ Thirumalai Kandasami
செய்திக்கான இணைப்பு கொடுத்ததற்கு நன்றி நண்பரே...

Philosophy Prabhakaran said...

@ பச்சையப்பா ராக்கர்ஸ்
ராக்கர்ஸ்ன்னா என்னங்க எதுவும் கல்லு ஒடைப்பீங்களா...

// டேய் பொட்டப்பயலே எங்கள பன்னாடனு பதிவு போட்டு பேமஸ் ஆகலாம்னு பாக்குறியா //

பேமஸ் ஆக உங்களை எல்லாம் இழுக்க வேண்டிய அவசியமே இல்லை பாஸ்... இது ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு அவ்வளவே...

// மவனே உன்ன பேரிஸ் பக்கம் பாத்தா இருக்குடி. //

ஆமாம் உங்களை பார்த்து நான் பயப்படுகிறேன் என்பதை பெருத்த அவமானத்தோடு ஒப்புக்கொள்கிறேன்... உங்களைப் பார்த்து அரசாங்கமே பயப்படுகிறது... உங்கள் அரசியல் பலம், பண பலம், படை பலம் எல்லாவற்றையும் ஓரமாக வைத்துவிட்டு தனி ஆளாக வாருங்கள்... அதுதான் உண்மையான வீரம்...

// நாங்க பஸ் டே கொண்டாடுனா உனக்கு எங்கடா எரியிது //

ஆண்டிற்கு ஒருநாள் கொண்டாடினால் பரவாயில்லையே... தினம் தினம் அதைத்தானே செய்கிறீர்கள் பக்கிகளே....

// ஒம்போது மாதிரி மூஞ்ச வெச்சிக்கிட்டு எங்கள பத்தி எழுதிரியாடா பன்னாட பயலே. //

தனிமனித தாக்குதல்கள்...? வரவேற்கிறேன் :)))

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// இன்னொருத்தர் இவங்களையே தூக்கி சாப்பிட்டுவிடும் ஆட்கள், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் //

சரியா சொன்னீங்க.... அது இதைவிட மோசமான கலவர கோஷ்டி... படிப்பது சட்டம்...

Philosophy Prabhakaran said...

@ TERROR-PANDIYAN(VAS)
உங்கள் ஆதரவிற்கு நன்றி...

// prabhua! pona comment pottadhu nan dhan. name poda maranduten. id konjam problem adan anony name la potten. //

பரவாயில்லை இருக்கட்டும்... அவர்களுக்கு அதுவே போதுமானது...

சி.பி.செந்தில்குமார் said...

காலேஜ் பசங்க்ன்னா ஜாலியா இருக்க வேண்டியதுதான் ,அதுக்காக இப்படியா?

Anonymous said...

You can remove the title Philosophy from your name. Your post is quite ordinary. Anyone can write that.

Consider the following:

The average age of a college student is 20 - taking both ug and pg.

They are not mature either in emotions or in judgement.

They enter college, in particular, arts and science colleges, with the hope of breathing free air and free thinking.

After sending 14 years in primary and secondary school like slaves where they were restricted to speak or develope independent thinking.

They dont know what to do with the new found freedom here.

They need to be guided how to use it. The college teachers fail to do that.

Left to themselves, they take guidance from anywhere. The ruffian students appear to them the real heroes.

So, they are misguided.

Some of you write here that they should take up the social issues like fishermen issue and fight in streets. It is nonsense. Students need not do that. They can devote their time only for studients and occasional merriments and relaxation.

I would suggest colleges to allow the students go free for all at least a day or two per year like in the Bus day.

It is good. It is an outlet.It boosts their morale. It enhances their self concept as individuals.

For all these, no harm if the public bear their 'bad behaviour' at least one day.

Only one member here wrote that there is more to see here than meets the eye. That member was also reposted by Philosphy Pirabakaran.

Come with another blogpost. Analyse the 'behavior' deeply. Your title 'philsophy' may sound fitting then.

JARF

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அராஜகம்.. இதுக்கு அவங்க அகராதியில கொண்டாட்டம்ன்னு பேரா? கொண்டாட்டம் தேவைன்னு நினைப்பவர்கள் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காம செய்துக்கணும்.. இதற்கெல்லாம் அனுமதி வாங்கி தான் செய்யராங்களா?

ராஜ நடராஜன் said...

பிலாசபி!கல்லூரிக்காலங்கள் அப்படி இப்படியென்றுதான் ஹார்மோன்கள் விளையாட்டுக்காட்டும்.சீரியஸான விசயங்களைப் பகிரும்போது சென்னை மொழியை எழுத்தில் கொண்டு வருவதால் உங்கள் தர்க்க ரீதிப்படியே வைத்துக்கொண்டாலும் கல்லூரிக் கலாட்டாக்காரர்களுக்கும் உங்கள் மொழிக்கும் வித்தியாசமொன்றுமில்லை.

பின்னூட்டத்தில் ஜெயதேவ் தாஸ் சொல்வது போல் பச்சையப்பன் கல்லூரி,சட்டக்கல்லூரி,போக்குவரத்து துறை ஓட்டுனர்,நடத்துனர் இன்னும் பல சென்னையின் அடையாளங்கள்.

மாணவன் சமூக அக்கறையோடு போராட்டத்தில் குதித்தால் கல்லூரி விடுமுறை விட்டு விடுவதால் தங்கள் கல்லூரி கனவு நாட்களை சில சமயம் இப்படித்தான் செலவிடுவார்கள்.

முக்கியமான 2 ட்ராக் ரோடு போட்ட அம்பு எய்தவனை விட்டு விட்டு கல்லூரி அம்புகளை வந்து குத்திடுச்சேன்னு சொல்றீங்க பாருங்க!அங்கே நிக்கிறீங்க:)

Rafeek said...

வக்கலாது வாங்கும் அண்ணன் அனானியை அந்த பஸ்ஸுக்கு பின்னால் போக சொல்லுங்கள்.. அப்புறம் தெரியும் அந்த பய பக்கிகளின்..கொண்டாட்டம் எத்தனை சமூக சீர் கேடு என்று.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சாட்டையடி பதிவு...

தமிழ் அருவா! said...

//Jayadev Das said...
சென்னையைப் பொறுத்தவரை "பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல" எனபது போல இரண்டு கல்லூரிகள். ஒன்னு பச்சையப்பா காரங்க, இன்னொருத்தர் இவங்களையே தூக்கி சாப்பிட்டுவிடும் ஆட்கள், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள். //

ஒன்னு இல்ல ஒண்ணு. சட்டக் கல்லூரி இல்ல சட்டக்கல்லூரி. வார்த்தைக்கு நடுவுல கேப் விடாம அடிக்கணும்.

தமிழ்ல யாரு பிழையோட எழுதுனாலும்...விடமாட்டேன்! வெல்க தமிழ்!

THE IRON MAN! said...

//Anonymous said...
You can remove the title Philosophy from your name. Your post is quite ordinary. Anyone can write that.

Consider the following:

The average age of a college student is 20 - taking both ug and pg.

They are not mature either in emotions or in judgement.

They enter college, in particular, arts and science colleges, with the hope of breathing free air and free thinking.

After sending 14 years in primary and secondary school like slaves where they were restricted to speak or develope independent thinking.

They dont know what to do with the new found freedom here.

They need to be guided how to use it. The college teachers fail to do that.

Left to themselves, they take guidance from anywhere. The ruffian students appear to them the real heroes.

So, they are misguided.//

I SAY YOU SHUT UP! DONT WRITE WITHOUT KNOWING THE FACTS!! JUST SHUT UP I SAY!!

ஜோதிஜி said...

நண்பரே

தலைப்புக்கு ஒரு கவர்ச்சி வேண்டும் என்பதற்காக இப்படி வைத்து உள்ளீர்களா?

கல்லூரியில் படிக்கும் எல்லோருமே இது போன்ற நிகழ்வுகளை தாண்டி தான் வந்துள்ளோம்.

கல்லூரி நிர்வாகம்? மாணவர்களின் எண்ணங்கள்? சம கால அரசியல்?

யார் காரணம்?

ஒரு கல்லூரியில் அல்லது இது போன்ற பல கல்லூரியில் ஒரு வருடத்தில் 5000 மாணவர்கள் செய்வதால் மொத்தமாக எல்லா மாணவ சமுதாயமும் இப்படித்தான் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதாக நீங்களும் பின்னூட்டத்தில் வழிமொழிந்த பலரும் சொல்லி உள்ளார்கள்.

முக்கிய காரணம் இன்றைய இளைஞர்களுக்கு ஆதர்சனமான தலைவர்கள் இல்லை. அக்கறை கொண்ட வழிநடத்த வேண்டிய தலைகள் இல்லை என்பது தான் முக்கியம.

எந்த இளைஞர்களிடமாவது உனக்குப் பிடித்த தலைவர்கள் யார் என்று கேட்டுப் பாருங்கள். அப்படி எவருமே எனக்கு இல்லை என்பார்கள். காரணம் ஊடகம் காட்டும் மாயக் கவர்ச்சிகள்.

திரைத்துறையில் உள்ளவர்களை காட்டும் திரைப்பட வெத்து வேட்டுசற்று கூட வெட்கம் இல்லாமல் சுதந்திர தியாகிகள் போல கால் மேல் கால் போட்டுக் கொண்டு மொக்கையாக நேயர்கள் என்ற பெயரில் இவர்களிடம் தொலைபேசி வாயிலாக கேட்கும் பலரின் கேவலமான பாராட்டுக்களை ஊன்றி கவனித்துப் பாருங்கள்.

காரணம் வழி நடத்தவும் நம் நாட்டில் ஆள்இல்லை. வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய நபர்களும் தகுதியானவர்களாகவும் இல்லை. அவரவர் அள்ளிக்கோ முடிந்தவரைக்கும் சுருட்டிக்கோ என்று ஊழல் பேர்வழிகளாக இருப்பதால் இப்படிப்பட்ட மாணவர்களின் நிகழ்வுகள் உங்களுக்கு பூதாகரமாக தெரிகின்றது.

நீங்கள் காட்டிய படத்தில் உள்ள ஐந்து மணி நேரத்தில் கிடைக்கும் சந்தோஷத்தை இந்த மாணவர்கள் அனுபவித்து விட்டு பொதுமக்களை, மற்றவர்களை தொந்தரவு படுத்தி விட்டு ஏதோவொரு திரையரங்கத்திற்குள் புகுந்து விடும் மாணவர்களை வைத்து மொத்த இளைய சமூகத்தையும் ஒரே பார்வைக்குள் கொண்டு வராதீர்கள்.

Anonymous said...

இந்த கம்மனாட்டி பசங்கல நாடு கடத்தனும்!

Unknown said...

நேற்று உங்க ஊருக்கு வந்திருந்தேன் இந்த பன்னாடைகளின் சேட்டைகளை கீழ்பாக்கம் பக்கம் பஸ் வந்த பொழுது பார்த்தேன்

ஒரு போலீஸ் கார அக்கா " ஏண்டா எங்க தாலியை அறுக்குரீங்க " என்றார்

ஊரான் said...

கண் மூடித்தனமாக மாணவர்களைத் திட்டுவதனால் தீர்வுகள் எதுவும் கிடைக்காது. நண்பர் ஜோதிஜி குறிப்பிட்டதைப் போல மாணவர்களை வழி நடத்த முன்னுதாரணமிக்கத் தலைவர்கள் யாரும் இல்லை என்பதே எதார்த்தம். சமூகச் சீரழிவு என்பது மாணவர்களிடம் மட்டுமல்ல சகல பிரிவு மக்களிடமும் வெவ்வேறு வகைகளில் அளவுகளில் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவதற்கு வழிதேடும் கடமை நம் அனைவருக்குமே உண்டு. மாணவர்களை ஒழுங்கு படுத்த முடியும் என்பதற்கான ஒரு அனுபவத்தையும் சற்றே படியுங்கள்.

பச்சையப்பன் கல்லூரி மாணவன் என்றாலே முகம் சுழித்துச் செல்பவரா நீங்கள்? ஒரு போராட்டத்தின் கதையைக் கேளுங்கள்!

சென்னை மாணவர்களின் புதிய ‘தல’! சிறப்பு ரிப்போர்ட்!!

http://www.vinavu.com/2010/11/01/rsyf-rocks/

நன்றி!
www.hooraan.blog.spot.com

Anonymous said...

"பன்னாடைகள்" என்கிற வார்த்தை இங்கு தேவையற்றது...

Anonymous said...

இது போன்ற ஒரு சம்பவம் சென்னை அண்ணா சாலைளும் நடந்தது...

சாமக்கோடங்கி said...

வினவில் என்னுடைய பின்னூட்டம்...

//சாமக்கோடங்கி
Your comment is awaiting moderation.

இந்தக் கட்டுரையை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. சிறிது
மிகைப்படுத்தப் பட்டும், நேரில் எல்லாவற்றையும் பார்த்தது போலும் எழுதி
இருப்பது கட்டுரை என்பதை கதை போல் மாற்றி விட்டது.

அந்த மிகைப்படுத்துதளைத் தவிர்த்து, என்ன நடந்தது என்பதை இருதரப்பிலும்
கேட்டு எழுதி இருந்தால், பொதுமக்களுக்கு உண்மையைக் கொண்டு சென்றது போல
ஆகி இருக்கும்.

எந்தப் பக்கம் தவறு இருந்தாலும், கண்டிப்பாகக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்…

மாணவர் பக்கமும் கொஞ்சம் தவறு இருக்கிறது. தான் சந்தோஷமாக இருக்கும்போது
பொது மக்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில்
கொண்டாட்டங்களை நிகழ்த்துவது தவறு. அதை எந்த போதுநோக்குடைய மாணவனும்
செய்ய மாட்டான். அவ்வாறு செய்பவர்களுக்கு அதைப் பற்றி எடுத்துரைத்து
காவல் துறை எச்சரிக்கையோடு விட்டு இருக்கலாம்.

ஆனால் அதையே சாக்காக வைத்து, அரசியல் பின்னணியுடன், ஆதாயத்துடன் அரசு
வன்முறையைக் கட்டவிழ்ப்பதும் மிகவும் கண்டனத்திற்குரியது.

அனால் இந்தக் கட்டுரை மாணவர்களை முற்றிலும் ஆதரிப்பது போலவும், பல
பிரச்சினைகளை இதனுடன் பின்னி இருப்பதும் அதன் நடுநிலைதன்மையை கேள்விக்
குறி ஆக்குகிறது..

பத்திரிக்கைகள் ஒரு தலை பட்சமாக எழுதுகின்றன, மாணவர்களை ரவுடிகளாக சித்தரிக்கின்றன. அப்படியாயின், போராட்டம் எந்தப் புள்ளியில் ஆரம்பித்தது, வன்முறை எந்தப் புள்ளியில்
ஆரம்பித்தது என்பதைத் தெளிவாகக் கூறுவது நடுநிலையாளர்களின் கடமை. நாங்களும் உண்மையைத் தெரிந்து கொள்ள எதுவாய் இருக்கும்..

போராட்டம் என்பது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். அதன் உண்மையான நோக்கத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது போராட்டக் காரர்களின் கடமை.

எந்த நேரமும் அது எளிதில் வன்முறையாக மாறி விடலாம்.


நன்றி
சாமக்கோடங்கி//

சாமக்கோடங்கி said...

என்னுடைய மற்றொரு பின்னூட்டம்..

//சாமக்கோடங்கி
Your comment is awaiting moderation.

பிலாசபி பிரபாகரன் பதிவில் அந்தக் காணொளியைப் பார்த்தேன். பொது மக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது சொத்தான அரசுப் பேருந்தின் மேலே இத்தனை பெரும் ஏறி ஆட்டம் போட்டுக் கொண்டு போவது தான் பஸ் டே வா..?? இத்தனை பெரும் டிக்கட் வாங்கிக் கொண்டு தான் ஏறினார்கள் என்பதை யார் பார்த்தது..?? வாங்கி இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..?? எனக்குத் தோன்றவில்லை.

இது போன்று அட்டூழியங்களில் ஈடு பட்டு, பிறகு அரசியல்வாதிகள் செல்லும்போது போக்குவரத்தைத் தடை செய்கிறார்கள், வழி மறிக்கிறார்கள், அரசியல்வாதிகள் ரோட்டில் மேடை போடுகிறார்கள், பொது சொத்தை நாசம் செய்கிறார்கள், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறார்கள் என்று எந்த மூஞ்சியைக் கொண்டு சொல்வார்கள்..??

நாளைய இளைய சமுதாயம் இப்படி இருப்பது வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது. கல்லூரிக்குள் புகுந்து போலீஸ் சூறையாடி இருப்பதைப் பற்றி இது போன்ற காணொளி ஏதேனும் இருந்தால் போடவும். அப்பொழுது தான் உண்மை புரியும்.

என்னைப் பொருத்தவரை பிலாசபி பிரபாகரன் எழுதியது தான் சரி.. போலீஸ் அராஜகத்தின் அரசியல் பின்னணிகள் பற்றி ஆதாரம் தேவை..

நன்றி
சாமக்கோடங்கி.
Reply
Posted on 02-Mar-11 at 11:10 am //

சாமக்கோடங்கி said...

எந்த நேரத்திலும் வன்முறை நிகழும் அபாயம் உள்ளது என்பதை மாணவர்கள் உணரவில்லையா..??

நண்பன் said...

பஸ்ஸை ஒட்டுரவனை செருப்பால அடிக்கணும்
இதெல்லாம் மாடு மேய்க்க கூட உதவாக்கரைகள் ஒன்னு கூட உருப்புடதுக

Vasant said...

@prabakar -
I used to read tamil blogs and I am regular visitor to some blogs. I have redirected to this page when I was surfing on net. When I was reading your blog, I felt that the blogger like you should NOT use unparliamentary language ( I understand the problem to public because of such unwanted activities of students) . But, I ma writing this comment here to appreciate the way to handle the replies. Especially to "Rockers" (His anger is acceptable, but again language used unacceptable) . This is the first time I am writing comment to blog after many years just to appreciate the way you have handled him. WISE.....

Philosophy Prabhakaran said...

மிக்க நன்றி வசந்த்...

சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு என்பதைப் போல பதிவுலகில் அடிக்கடி ஏதாவது பிரச்சனை நடந்துக்கொண்டே இருக்கும் :)

இங்கே தவறு செய்யாதவர்கள் யாருமில்லை... சில தவறுகளை செய்கிறோம், பின்னர் திருத்திக்கொள்கிறோம்... இந்த பதிவிற்கு நான் வைத்த தலைப்பு தவறானது எனக்கு அன்றே புரிந்துவிட்டது... தற்போது அது போன்ற சொற்களை பயன்படுத்துவது இல்லை...

ராக்கர்ஸ் என்னும் பெயரில் பின்னூட்டமிட்டவருக்கும் பச்சையப்பன் கல்லூரிக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது... என் மீதுள்ள தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக ஒருவர் செய்த வேலை அது...