9 August 2011

உ.த அண்ணாச்சியையே உணர்ச்சிவசப்படவைத்த நடிகை...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முஸ்கி: இன்று காலை ஜாலியாக ஒரு பதிவை எழுதுவதாக ஆரம்பித்து கடைசியில் அழுகாச்சியா முடிச்சிட்டேன். அதை ஈடுகட்ட இன்னொரு ஜாலி பதிவு.

தமிழ் சினிமாவில் எப்போதும் யாருக்கும் நிரந்தர இடமில்லை. அதுவும் கதாநாயகிகளை பொறுத்தவரையில் கடக்கும் மேகங்களாக நித்தம் ஒரு நாயகனுக்கு முத்தம் தருவார்கள். இங்கே பல நடிகைகளுக்கு முதல் படமே கடைசி படமாகவும் அமைந்துவிடுகிறது. இப்போது தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருக்கும் சில அழகான நடிகைகள், அதாவது முதல் படமே கடைசி படமாக அமைந்துவிடாது என்று நம்பப்படும் சில நாயகிகளைப் பற்றி பார்ப்போம்.

ப்ரியா ஆனந்த்:
சென்னையில் பிறந்த NRI. தமிழில் வாமனன் படத்தில் அறிமுகமானபோது அதிகம் பேசப்படவில்லை. இருப்பினும் “ஒரு தேவதை பார்க்கும் நேரமிது...” பாடலில் கொஞ்சம் ஈர்த்தார். இரண்டாவது வெளிவந்த “புகைப்படம்” அட்டர் ப்ளாப். இப்போது வெளிவந்திருக்கும் நூற்றென்பது படத்தில் மட்டும் ஏனோ அழகு கூடியிருக்கிறது. அதிலும் இடுப்பழகை காட்டும் அந்தக்காட்சி படத்தில் ஹைலைட். தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். கொஞ்சம் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பதை காட்டினால் தேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனனி ஐயர்:
150க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் புன்சிரிப்பை பகிர்ந்தவர், அவன் இவன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார். பாலா படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ, லைலா விட்டுச்சென்ற “லூசுப்பெண்” இமேஜை பிடித்துவிடுவார் என்று தெரிகிறது. சென்னையில் பிறந்தவர், சொந்தக்குரலில் பேசி நடிப்பவர் போன்றவை ப்ளஸ் பாயிண்டுகள். அவன் இவன் படம் தெலுங்கிலும் டப்பாகியிருப்பதால் அங்கேயும் ஒரு துண்டை போடுவார் என்று நம்பலாம்.

ரிச்சா கங்கோபத்யாயா:
பெயர் ரிச்சா, ஆயா என்று என்னவோ போல் இருந்தாலும் ஆள் நன்றாக இருக்கிறார். டெல்லியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். சிலபல அழகிப்போட்டிகளில் பரிசு பெற்று, மாடலிங்கில் ஒரு கலக்கு கலக்கிவிட்டு இப்போது சினிமாவில் நுழைந்திருக்கிறார். தெலுங்கில் சில வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு இப்போது தமிழில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் அறிமுகமாகவிருக்கிறார். ஆனால் அதற்கு முன்னதாக சிம்புவுடன் நடிக்கும் ஒஸ்தி படம் திரை தட்டும் என்று தெரிகிறது. சிம்பு படம் என்பதால் நிறைய எதிர்பார்க்கலாம்.

நித்யா மேனன்:
இவரும் தமிழில் நூற்றென்பது படத்தின் மூலமாகவே அறிமுகமானார். கேரளாவில் பிறந்த இவர், ஜர்னலிசம் மீது காதல் கொண்டு படித்திருக்கிறார். அதற்குள் யாரோ ஒரு புண்ணியவான், நீங்க நடிச்சா ஆகணும்ன்னு சினிமாவுக்கு இழுத்துட்டு வந்திருக்கார். பெரும்பாலும் மலையாள படங்களில் நடிப்பவர். மற்றபடி நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்த பெருமை இவருக்கு உண்டு. ஒரு ஆங்கிளில் பார்த்தால் இறந்துபோன நடிகை செளந்தர்யா மாதிரி இருப்பது இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்டு.

ப்ரனிதா:
பெங்களூரில் பிறந்த ப்ரனிதா, ஒரு கன்னட படத்தில் அறிமுகமாகி, பின்னர் பவா என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹிட் அடித்திருக்கிறார். தமிழில் இவர் அறிமுகமான உதயன் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் உதை வாங்கினாலும் அடுத்தது புளியம்கொம்பாக பிடித்திருக்கிறார். கார்த்தி நடித்து வெளிவர இருக்கும் சகுனி படத்தில் அம்மணி தான் நாயகி.

ரேஷ்மி மேனன்:
தலைப்பில் உ.த அண்ணாச்சியை சேர்த்ததற்கு காரணமே இந்தப்பொண்ணு தாங்க. தமிழில் தேநீர் விடுதி படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கும் தேவதை. படத்தை பார்த்த கையேடு பஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் அண்ணாச்சி ரேஷ்மி புகழ்தான் பாடிக்கொண்டிருந்தார். (என்ன கண்ணுடா இது...?) பார்ப்பதற்கு அழகிய பொம்மை போல இருக்கும் இவருக்கு நடிக்கவும் தெரியும் என்பது கூடுதல் சந்தோசம்.

டிஸ்கி 1: உ.த அண்ணாச்சி கோவிச்சிக்க மாட்டார்ன்னு நினைக்கிறேன். அண்ணே... சும்மா உல்லுல்லாயிக்கு தான்... சீரியஸா எடுத்துக்காதீங்க...

டிஸ்கி 2: பின்னூட்டம் போடுபவர்கள், மேற்கண்ட ஆறு அழகிகளில் உங்களுடைய பேவரிட் யாரென்று போடலாமே...

டிஸ்கி 3: மொபைலில் இருந்து பதிவிடுகிறேன், ஒருவேளை இந்தப்பதிவையும் யாராவது படித்தால் திரட்டிகளில் இணைத்துவிடுங்கள்...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

42 comments:

Prabu Krishna said...

எல்லாத் திரட்டிலயும் அணைச்சாச்சு ச்சீ இணைச்சாச்சு . நம்ம ரேஞ்சு வேற தல எனக்கு இதுங்கல்லாம் பிடிக்கிறது இல்ல.நீங்க கேடுட்டீங்களே அதனால ப்ரனிதா,ரேஷ்மி மேனன், நித்யா மேனன், ரிச்சா கங்கோபத்யாயா, ஜனனி ஐயர், ப்ரியா ஆனந்த் இவங்கள மட்டும் பிடிச்சு இருக்கு மத்த யாரையும் பிடிக்கல.

Prabu Krishna said...

உ.த அண்ணாச்சி? அது யாரு ?

நாய் நக்ஸ் said...

ஜொள்-விட நல்ல ஐடியா--நானும் தொடருகிரன்

சேலம் தேவா said...

//உ.த அண்ணாச்சி? அது யாரு ?//

உண்மைத்தமிழன் அண்ணாச்சி..!!
http://truetamilans.blogspot.com/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நமக்கு புடிச்சது, நித்யாதான், அடுத்த வாட்டி அது படம் நாலஞ்சு போடுங்க.... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பாலா படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ, லைலா விட்டுச்சென்ற “லூசுப்பெண்” இமேஜை பிடித்துவிடுவார் என்று தெரிகிறது. ////////

லூசுப்பையன் கண்ல மாட்டாம இருக்கனும்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டிஸ்கி 2: பின்னூட்டம் போடுபவர்கள், மேற்கண்ட ஆறு அழகிகளில் உங்களுடைய பேவரிட் யாரென்று போடலாமே...///////

போட்டாச்சு போட்டாச்சு......

settaikkaran said...

//ப்ரியா ஆனந்த்-கொஞ்சம் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பதை காட்டினால் தேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//

ஆமாம்! நடிப்புத்திறமையைக் காட்டினால் நிச்சயம் தேறுவார்! :-)

நீங்க குறிப்பிட்ட ஒரு படத்தைக் கூட பார்க்கவில்லை. ஆனால், NRI என்பதாலோ என்னவோ ஒரு அலாதியான மேற்கத்திய வசீகரம் இருக்கிறது என்பதால், எனது ஓட்டு ப்ரியாவுக்கே..!

பி.கு. எனக்கென்னவோ இரண்டு மேனன்களில் நித்யாவுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுக்கத்தோன்றுகிறது. உண்மைத்தமிழன் அண்ணன் கோவிச்சுக்க மாட்டார் என்று நம்புகிறேன். :-)

N.Manivannan said...

ஐ லைக் ப்ரனிதா ப்ரனிதா ப்ரனிதா ப்ரனிதா ப்ரனிதா ப்ரனிதா ப்ரனிதா ப்ரனிதா ப்ரனிதா ப்ரனிதா

,

N.Manivannan said...

யோவ் இந்த லிஸ்ட்ல போய் ஜனனி ஐயர் சேர்த்திருக்கையே அதுலாம் ஒரு பிகரா?

N.Manivannan said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...

நமக்கு புடிச்சது, நித்யாதான், அடுத்த வாட்டி அது படம் நாலஞ்சு போடுங்க.... !///

அண்ணே இந்த மாதிரி பிகரலாம் உங்களுக்கு செட் ஆகாதுன்னே ,உங்களுக்கு கோவை சரளா , ஷர்மிலி , அப்பறம் தனுஜா , அப்படி ட்ரை பண்ணுங்கண்ணே ...........உங்க வயசுக்கு அதானே கரெக்ட்டு .

N.Manivannan said...

பாருங்க மக்களே பாருங்க ,சரி பய புள்ள ரொம்ப எழுதாம இருக்கே ,தமிழ்மணம் நட்சத்திரம் கொண்டுவந்து எழுவைக்கலாம் தமிழ்மணம் நெனச்சுச்சு ,ஆனா அங்கயும் வந்து ஜொள்ளு விட்டு நம்மையும் ஜொள்ளு விட வைக்கிறாரே இவர என்ன செய்யலாம் ,நாட்டுக்கு சுதந்திர தினம் வருது நாட்டுக்கு நாலஞ்சு கருத்து சொல்லுவோம் அப்படிங்கிரதுலாம் இல்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// N.Manivannan said...
///பன்னிக்குட்டி ராம்சாமி said...

நமக்கு புடிச்சது, நித்யாதான், அடுத்த வாட்டி அது படம் நாலஞ்சு போடுங்க.... !///

அண்ணே இந்த மாதிரி பிகரலாம் உங்களுக்கு செட் ஆகாதுன்னே ,உங்களுக்கு கோவை சரளா , ஷர்மிலி , அப்பறம் தனுஜா , அப்படி ட்ரை பண்ணுங்கண்ணே ...........உங்க வயசுக்கு அதானே கரெக்ட்டு .
/////////

மணியா.... மறுக்கா மறுக்கா லைன்ல கிராஸ் ஆகுற.... படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி.... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// N.Manivannan said...
பாருங்க மக்களே பாருங்க ,சரி பய புள்ள ரொம்ப எழுதாம இருக்கே ,தமிழ்மணம் நட்சத்திரம் கொண்டுவந்து எழுவைக்கலாம் தமிழ்மணம் நெனச்சுச்சு ,ஆனா அங்கயும் வந்து ஜொள்ளு விட்டு நம்மையும் ஜொள்ளு விட வைக்கிறாரே இவர என்ன செய்யலாம் ,நாட்டுக்கு சுதந்திர தினம் வருது நாட்டுக்கு நாலஞ்சு கருத்து சொல்லுவோம் அப்படிங்கிரதுலாம் இல்ல
////////

ங்கொக்கமக்கா.. எல்லா படத்தையும் பம்மி பம்மி பாத்துட்டு இப்ப எகத்தாளத்த பாத்தியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////N.Manivannan said...
யோவ் இந்த லிஸ்ட்ல போய் ஜனனி ஐயர் சேர்த்திருக்கையே அதுலாம் ஒரு பிகரா?
/////////

எப்படிண்ணே கண்டுபுடிச்சீங்க?

N.Manivannan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// N.Manivannan said...
///பன்னிக்குட்டி ராம்சாமி said...

நமக்கு புடிச்சது, நித்யாதான், அடுத்த வாட்டி அது படம் நாலஞ்சு போடுங்க.... !///

அண்ணே இந்த மாதிரி பிகரலாம் உங்களுக்கு செட் ஆகாதுன்னே ,உங்களுக்கு கோவை சரளா , ஷர்மிலி , அப்பறம் தனுஜா , அப்படி ட்ரை பண்ணுங்கண்ணே ...........உங்க வயசுக்கு அதானே கரெக்ட்டு .
/////////

மணியா.... மறுக்கா மறுக்கா லைன்ல கிராஸ் ஆகுற.... படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி.... !///


அண்ணே என்னனே எனக்கு நித்யாவ ரொம்ப புடிச்சிருக்குனே ,உங்க தம்பி எனக்காக விட்டு குடுக்க கூடாதா ..அந்த பொண்ணுக்கு பேருதானே (ஐயையோ டைப் அடிக்கிறப்ப கரெண்டு கட்டாய்டுச்சே )

N.Manivannan said...

கமெண்ட் மாடரேசன் இல்லன்னு நெனச்சு கமெண்ட் போட்டா ? இப்படி கமென்ட்ட தூக்கிட்டாரே தள நிர்வாகி

தமிழ் வண்ணம் திரட்டி said...

ப்ரனிதா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////N.Manivannan said...
கமெண்ட் மாடரேசன் இல்லன்னு நெனச்சு கமெண்ட் போட்டா ? இப்படி கமென்ட்ட தூக்கிட்டாரே தள நிர்வாகி
////////

இப்பவாவது தெரியுதா நித்யா எனக்குத்தான்னு? கெளம்புய்யா.....

N.Manivannan said...

///இப்பவாவது தெரியுதா நித்யா எனக்குத்தான்னு? கெளம்புய்யா.....///

பிரபாவும் நீங்களும் சேர்ந்து ஏதோ கூட்டு சதி செய்கிறிரீர்கள் ,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// N.Manivannan said...
///இப்பவாவது தெரியுதா நித்யா எனக்குத்தான்னு? கெளம்புய்யா.....///

பிரபாவும் நீங்களும் சேர்ந்து ஏதோ கூட்டு சதி செய்கிறிரீர்கள் ,///////

ஆமா பெரிய பொடலங்கா கூட்டு சதி செய்றாங்க, அப்பவே ஒழுங்கா ஜனனி அய்யரை புடிக்குதுன்னு கமெண்ட்டு போட்டுட்டு போயிருக்கலாம்ல?

N.Manivannan said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// N.Manivannan said...
///இப்பவாவது தெரியுதா நித்யா எனக்குத்தான்னு? கெளம்புய்யா.....///

பிரபாவும் நீங்களும் சேர்ந்து ஏதோ கூட்டு சதி செய்கிறிரீர்கள் ,///////

ஆமா பெரிய பொடலங்கா கூட்டு சதி செய்றாங்க, அப்பவே ஒழுங்கா ஜனனி அய்யரை புடிக்குதுன்னு கமெண்ட்டு போட்டுட்டு போயிருக்கலாம்ல?///


கமெண்ட் 'போட'றது பிரச்சனையை இல்லனே ,ஆனா இவரு அநியாயத்துக்கு நல்லவனா ஆயட்டாரே அதான் எனக்கு வருத்தமா இருக்கு

வைகை said...

ரேஷ்மி மேனன்:

தமிழில் தேநீர் விடுதி படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கும் தேவதை. //

பிரபா.. இனிது இனிது படம் பார்க்கலியா? அதுலே இவங்க அறிமுகம் ஆயாச்சு :))

கேரளாக்காரன் said...

Pranitha va namma annan c p bra nee thaa appadinnu eluthirunthaaaru

கேரளாக்காரன் said...

Priya anand you tube la neelathaamara appadinnu search panni paarunga ellaarkkum avala than pudikkum

Philosophy Prabhakaran said...

@ பலே பிரபு
// உ.த அண்ணாச்சி? அது யாரு ? //

தமிழ்நாட்டுலேயே உ.த அண்ணாச்சி யாருன்னு கேட்ட மொத ஆள் நீதான்யா... உனக்கு கண்டிப்பா நரகம்தான்...

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
// ஜொள்-விட நல்ல ஐடியா--நானும் தொடருகிரன் //

எல்லாம் பன்னிக்குட்டி அண்ணன் கத்துக் கொடுத்ததுதான்...

Philosophy Prabhakaran said...

@ சேலம் தேவா
// உண்மைத்தமிழன் அண்ணாச்சி..!!
http://truetamilans.blogspot.com/ //

நல்லவேளை லிங்கோட சொன்னீங்க... ஊருக்குள்ள நிறைய உண்மைத்தமிழர்கள் சுத்திட்டு இருக்காங்க...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நமக்கு புடிச்சது, நித்யாதான், அடுத்த வாட்டி அது படம் நாலஞ்சு போடுங்க.... ! //

உத்தரவு பன்னிக்குட்டி... குஞ்சாணி...

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
// ஆமாம்! நடிப்புத்திறமையைக் காட்டினால் நிச்சயம் தேறுவார்! :-)

நீங்க குறிப்பிட்ட ஒரு படத்தைக் கூட பார்க்கவில்லை. ஆனால், NRI என்பதாலோ என்னவோ ஒரு அலாதியான மேற்கத்திய வசீகரம் இருக்கிறது என்பதால், எனது ஓட்டு ப்ரியாவுக்கே..!

பி.கு. எனக்கென்னவோ இரண்டு மேனன்களில் நித்யாவுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுக்கத்தோன்றுகிறது. உண்மைத்தமிழன் அண்ணன் கோவிச்சுக்க மாட்டார் என்று நம்புகிறேன். :-) //

சேட்டை... நீங்க இப்படி எல்லாம் கூட பின்னூட்டம் போடுவீங்களா... ஆச்சர்யமா இருக்கு...

விஜய் அவார்ட்ஸ் விழாவில் ஸ்ரேயா டான்ஸ் பார்த்தீர்களா...

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan
// யோவ் இந்த லிஸ்ட்ல போய் ஜனனி ஐயர் சேர்த்திருக்கையே அதுலாம் ஒரு பிகரா? //

எனக்கும் இதே எண்ணம் வந்துச்சு... சரி போய்த் தொலையட்டும் விடுங்க...

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan
// அண்ணே இந்த மாதிரி பிகரலாம் உங்களுக்கு செட் ஆகாதுன்னே ,உங்களுக்கு கோவை சரளா , ஷர்மிலி , அப்பறம் தனுஜா , அப்படி ட்ரை பண்ணுங்கண்ணே ...........உங்க வயசுக்கு அதானே கரெக்ட்டு . //

சரியா சொன்னீங்க தல...

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan
// பாருங்க மக்களே பாருங்க ,சரி பய புள்ள ரொம்ப எழுதாம இருக்கே ,தமிழ்மணம் நட்சத்திரம் கொண்டுவந்து எழுவைக்கலாம் தமிழ்மணம் நெனச்சுச்சு ,ஆனா அங்கயும் வந்து ஜொள்ளு விட்டு நம்மையும் ஜொள்ளு விட வைக்கிறாரே இவர என்ன செய்யலாம் ,நாட்டுக்கு சுதந்திர தினம் வருது நாட்டுக்கு நாலஞ்சு கருத்து சொல்லுவோம் அப்படிங்கிரதுலாம் இல்ல //

மொதல்ல பேருக்கு முன்னாடி இருக்கும் "பிலாசபி" அடைமொழியை தூக்கி கடாசனும்... அப்புறமா எம்.ஆர்.ராதா போட்டோவை எடுத்துட்டு பக்கத்து வீட்டுப்பொண்ணு ராதா போட்டோவை மாட்டனும்... அதுக்கப்புறம் யாரும் எதுவும் கேட்க மாட்டீங்கதானே...

Philosophy Prabhakaran said...

@N.Manivannan
// கமெண்ட் மாடரேசன் இல்லன்னு நெனச்சு கமெண்ட் போட்டா ? இப்படி கமென்ட்ட தூக்கிட்டாரே தள நிர்வாகி //

யோவ் மணி... மொதல்ல ஏதோ உளறுரீங்க அல்லது கலாய்க்கிறீங்கன்னுதான் நினைச்சேன்... அப்புறமா தான் பார்த்தேன் உங்க பின்னூட்டம் ஸ்பாமில் இருந்தது... எசகுபிசகா ஏதாவது டைப் பண்ணா இப்படித்தான் ஆகும்...

Philosophy Prabhakaran said...

@ வைகை
//
பிரபா.. இனிது இனிது படம் பார்க்கலியா? அதுலே இவங்க அறிமுகம் ஆயாச்சு :)) //

அடடா... மிஸ் பண்ணிட்டேன்... (உ.த.அண்ணாச்சி டவுன்லோடு போட்டாச்சா...)

Philosophy Prabhakaran said...

@ கேரளாக்காரன்
உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி...

Sivakumar said...

உ.தா. அண்ணாச்சியை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நடிகை பேரை போடுங்கப்பு..!

Riyas said...

சூப்பரு.. புகைப்படங்கள சொன்னேன்,,

Anonymous said...

அரிய பல தகவல்கள் :)

ஜனனி ஐயர் க்யூட்

கவிதை பூக்கள் பாலா said...

பிரபா ரொம்ப நாளாச்சி நான் வந்து ஆனால் கலர் கலரா போட்டிருகிங்க ......... கொஞ்சம் போதையும் தான்

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// உ.தா. அண்ணாச்சியை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நடிகை பேரை போடுங்கப்பு..! //

அது அவரோட பதிவு சைசுக்கு பெரிய லிஸ்டா இருக்குமே சிவா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Philosophy Prabhakaran said...
@ ! சிவகுமார் !
// உ.தா. அண்ணாச்சியை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நடிகை பேரை போடுங்கப்பு..! //

அது அவரோட பதிவு சைசுக்கு பெரிய லிஸ்டா இருக்குமே சிவா...////

அது ஒண்ணும் பிரச்சனையில்லை, நமீதான்னு மட்டும் போட்டா போதும் கவர் ஆகிடும்....!