5 February 2010

அசல் - திவ்யதரிசனம்

வணக்கம் மக்களே...

கடந்த பதிவிற்கு தங்கள் கருத்துக்களை பதிவு செய்த நண்பர்களுக்கு mercy. என்ன புரியலையா...? அதாங்க french பாஷைல thanks. அசல் படம் பார்த்தா உங்களுக்கும் புரியும். வழக்கம்போல தல படத்தை FDFS பார்த்துவிட்டேன். என் மனதில் தோன்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். OK இனி பதிவிற்கு போவோம். டொட்டொடொய்ங்க்...!

பி.கு: இது ஒரு தல ரசிகனின் விமர்சனம்

அசல் - பெயர்க்காரணம்
அப்பா அஜித்தின் மனைவி வழியாக பிறந்தவர்கள் சம்பத்தும் ராஜீவ் கிருஷ்ணாவும். ஆனால் சிங்கத்தின் சிறுவயது சேட்டையில் பிறந்தவர் மகன் அஜித். சட்டப்படி பார்த்தால் மனைவி மூலமாக பிறந்தவர்களே அசல் வாரிசுகள். ஆனால் தந்தையாரின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும் அஜித்தே அசல் வாரிசு என்று இயக்குனர் உணர்த்துகிறார்.

திரைக்கு முன்
வழக்கமாக கிடைப்பதைப் போல idreamsல் ticket கிடைக்கவில்லை. எப்படியோ எதிர்பாரா விதமாக அம்பத்தூர் முருகனில் ticket கிடைக்க பயணமானேன். திரையரங்கம் திருவிழாக்கோலம் பூண்டு இருந்தது. அசல் அஜித்தைப்போலவே கடா மீசையுடன் ரசிகர்கள் பலர் உலவிக்கொண்டிருந்தனர். banner, ஆரத்தி, பாலாபிஷேகம் போன்ற முட்டாள்த்தனங்கள் வழக்கம்போல வேடிக்கையாகவே இருந்தன. தல banner முன்பு தோப்புக்கரணம் போட்ட ஜென்மத்தை என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த அறியாமைக்கூட்டத்தில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ள அவமானமாக இருக்கிறது.

கதைச்சுருக்கம்
கதை franceல் ஆரம்பிக்கிறது. ஜீவானந்தம் (அப்பா அஜித்) france அரசாங்கத்திற்கே ஆயுதம் சப்ளை செய்யக்கூடிய டீலர். அவருடைய அசல் வாரிசுகளாக சாம் (சம்பத்), விக்கி (ராஜீவ் கிருஷ்ணா) மற்றும் ஸ்டெப்சன் சிவா (அஜித்). (இன்னும் எத்தனை காலத்திற்கு கதாநாயகனின் பெயரை சிவா, ஜீவா என்று வைப்பார்கள் என்று புரியவில்லை). அசல் வாரிசுகளுக்கு ஸ்டெப்சன்னை கண்டாலே வெறுப்பு. தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் சப்ளை செய்து பெரிய அளவில் பணம் புரட்ட வேண்டுமென்பது அசல் வாரிசுகளின் விருப்பம். அதை எதிர்க்கும் அப்பாவை கமுக்கமாக தீர்த்துகட்டிவிட்டு களத்தில் குதிக்கின்றனர். இதனால் ஏற்கனவே அந்த பிசினெஸில் இருக்கும் மும்பை டான் ஷெட்டி (கெல்லி டார்ஜி) ஆத்திரமடைந்து அசல் வாரிசுகளில் இளையவரை கடத்துகிறார். தகவலறிந்து கொந்தளிக்கும் கதாநாயகன் மும்பைக்கு பறந்து ஷெட்டி குருப்பை துவம்சம் செய்து தம்பியை காப்பாற்றுகிறார். அசல் வாரிசுகள் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கும் கட்டத்தில் கதாநாயகனை சுட்டு கடலில் வீசுகிறார்கள். இந்த இடத்தில் intermission. கதாநாயகன் சாகமாட்டான் என்பது கடைக்கோடி தமிழ்ரசிகனுக்கும் தெரிந்த விஷயம். உயிர்த்தெழுந்து வரும் நாயகன் அசல் வாரிசுகளை பழி வாங்குவதே பின் பாதி.

AJITH
டைட்டிலில் வெறுமனே அஜித் குமார் என்று போடும்போது தல ரசிகன் என்ற முறையில் வருத்தமடைந்தேன். பின்னர், கதை - திரைக்கதை - வசனம் என்று தல பெயரையும் சேர்த்ததால் படத்திற்கு சேர்ந்த தெய்வதொஷம் கழிந்தது. தலையின் ஹேர் ஸ்டைல் மற்றும் கெட்டப் சூப்பர். தல cigar பிடிக்கும் ஸ்டைல் சூப்பரோ சூப்பர். அந்த மாதிரி cigar எங்கே கிடைக்கும்னு யாராவது கேட்டு சொல்லுங்களேன். மற்றபடி நடிப்பு, சண்டைக்காட்சி, car chasing என்று எல்லாமே கலக்கல். ஆனா தலைக்கு dance மட்டும் யாராவது சொல்லிக்கொடுக்கணும்.

SAMEERA - BHAVANA
சாராவாக சமீரா, சுலபாவாக பாவனா. இருவரில் இவர் கதாநாயகி, இவர் இரண்டாம் கதாநாயகி என்று தரம் பிரிக்க முடியவில்லை. வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகிகளைப்போல 100% waste என்று சொல்லமுடியாது. ஆனால் 50% waste தான். சமீரா முந்தய படத்தைவிட கொஞ்சம் பொலிவாக தெரிகிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். பாவனா ஆரம்பத்தில் லூசுப்பென்னாக காட்டப்பட்டாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு நடித்திருக்கிறார். இருவரும் தல மீது தாங்கள் கொண்ட possessivenessஐ பகிர்ந்துக்கொள்ளும் அந்த காட்சி அருமை. படத்தின் முடிவில் எந்தவித லாஜிக்கும் இல்லாமல் பாவனாவை அஜித்தின் ஜோடியாக்குவதை நான் விரும்பவில்லை. ஒருவேளை அப்பா அஜித்தைப்போல திருமனத்திற்க்குப்பின் சமீராவை ஸ்டெப்னீயாக வைத்துக்கொள்வார் போல.

VILLANS
சம்பத், ராஜீவ் கிருஷ்ணா, சுரேஷ், கெல்லி டோர்ஜி, பிரதீப் ரவாத் என்று ஏகப்பட்ட வில்லன்கள். இவர்களில் பிரதீப் ரவாத் வழக்கமான டம்மி பீஸ் தமிழ் சினிமா வில்லன். ராஜீவ் கிருஷ்ணாவும் படம் ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே அல்லக்கையாக்கபடுகிறார். சம்பத் கஷ்டப்பட்டு பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார். சுரேஷ், ஜெமினி படத்தில் வரும் கலாபவன் மணியைப்போல் வித்தியாசமாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் பின்னர் தொலைந்துபோகிறார். கெல்லி டோர்ஜி மட்டும் மனதில் நிற்கிறார். ஆனால் பாவம் மனிதர் முதல் பாதியிலேயே மர்கயா.

மற்றும் பலர்
டான் சமோசா என்ற நகைச்சுவை பாத்திரத்தில் யூகி சேது. வடிவேலு, விவேக் போல சிரிப்பு டானாக வந்து சென்றாலும் யூகி பேசும் வசனங்கள் எல்லாமே கலக்கல். யூகி இன்னும் கூட பேசியிருக்கலாம்.
சிறப்பு தோற்றத்தில் பிரபு. சந்திரமுகியில் ரஜினிக்கும், வசூல்ராஜாவில் கமலுக்கும் செய்ததை இந்த படத்தில் தலைக்கு செய்திருக்கிறார்.
இவர்களைத் தவிர படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை.

பாடல்கள்
பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடித்திருந்தன. ஆனால் உங்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. சிங்கம் என்றால்... என்று தொடங்கக்கூடிய பாடல் நீண்ட காலம் நிலைக்கும். துஷ்யந்தா... பாடலில் வைரமுத்துவின் வரிகள் காமக்களியாட்டம் போட்டிருக்கிறது. எங்கே எங்கே... பாடல் திரையில் வராதது ஏமாற்றத்தை தந்தது.

மற்றபடி editing, cinematography, art direction, BGM இதைப்பற்றியெல்லாம் எழுதும் திறமை என்னிடம் இல்லை.

RESULT
விஜய் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்து சென்னையில் இருக்கும் ரவுடிகளை அழிக்கிறார் என்றால் அஜித் இந்தியாவில் இருந்து கிளம்பி பன்னாடுகளில் உள்ள பன்னாடை டான்களை அழிக்கிறார். பரமசிவனில் பாகிஸ்தான், பில்லாவில் மலேசியா, ஏகனில் ஹாங்காங், இப்போது அசலில் பிரான்ஸ். தல இனியாவது முழிச்சுக்கோங்க, இல்லன்னா சன்ரைஸ வேற யாராவது குடிச்சிடுவாங்க.

ajith fans இந்த படத்தை ஒருமுறை ரசிக்கலாம் மற்றவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.


அசல் - ???

படத்திற்கு என்ன one line punch கொடுக்கலாம் என்று நீண்ட நேரம் யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை. நீங்களே சொல்லுங்களேன்.

என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

3 comments:

வரதராஜலு .பூ said...

//அஜித் இந்தியாவில் இருந்து கிளம்பி பன்னாடுகளில் உள்ள பன்னாடை டான்களை அழிக்கிறார். பரமசிவனில் பாகிஸ்தான், பில்லாவில் மலேசியா, ஏகனில் ஹாங்காங், இப்போது அசலில் பிரான்ஸ். //

எப்பிடிங்க இப்பிடில்லாம்?

//தல இனியாவது முழிச்சுக்கோங்க, இல்லன்னா சன்ரைஸ வேற யாராவது குடிச்சிடுவாங்க.//

எத்தினி தடவ சொன்னாலும் திருந்தமாட்டாரு போல?

//படத்திற்கு என்ன one line punch கொடுக்கலாம் என்று நீண்ட நேரம் யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை. //

சுத்தம். அஜித் ஃபேனே ஒண்ணும் சொல்ல முடியலியா?

ஷாஜி said...

// ஒருவேளை அப்பா அஜித்தைப்போல திருமனத்திற்க்குப்பின் சமீராவை ஸ்டெப்னீயாக வைத்துக்கொள்வார் போல.//

--Superb line. kalakkunga thala...

nis said...

பழைய கள்ளு என்றாலும் செம taste ஆ இருக்கு பிரபா;)))