Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

31 March 2014

ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும் - ஆடியோ போஸ்ட்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆடியோ போஸ்ட் வெளியிட வேண்டுமென்பது என்னுடைய நீண்டநாள் அவா. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை முயற்சி செய்தேன். தோல்வி. மொத்தம் நூற்றி எழுபத்தைந்து முறை அந்த ஆடியோ கேட்கப்பட்டிருப்பதாக தரவு சொல்கிறது. அதில் நானே ஐம்பது முறை கேட்டிருப்பேன். எத்தனை பேர் முழுவதுமாக கேட்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதற்குப் பிறகு ஆடியோ முயற்சி ஏதும் செய்யவில்லை.

ஆடியோ போஸ்ட் வெளியிடுவதில் நிறைய சிரமங்கள் உள்ளன. முக்கியமானது இரைச்சல். நள்ளிரவில் அறையில் மின்விசிறியை எல்லாம் கூட நிறுத்திவிட்டு பதிவு செய்ய தயாரானேன். சி.பி.யூவிலிருந்து ஒரு சத்தம், கடிகாரம் டிக் டிக் என்று அடிக்கிறது. ‘நிசப்தத்தை’ புறக்கணித்துவிட முடியாத இடத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். கடிகாரத்தை நிறுத்தியிருந்தால் இன்னும் கூட சத்தம் குறைந்திருக்கும். அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாமென விட்டுவிட்டேன். அடுத்தது குரல். சென்ற முறை பதிவிட்டபோது வாய்ஸ் சர்பத் சாப்பிட்டு பேசியது போல இருக்கிறது என்று சிலர் சொன்னார்கள். என்னுடையது இயல்பிலேயே அப்படித்தான். சாதாரணமாக பேசும்போது பிரச்சனையில்லை. ஏதாவது திட்டமிட்டு பேசினால் நாக்கு குழறும். ஒவ்வொரு பத்தியாக பதிவு செய்து அடோசிட்டியில் ஒன்று சேர்த்திருக்கிறேன்.

இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்க விரும்பினேன். ஆனால் அநியாயத்துக்கு ஐந்தரை நிமிடங்கள் வரை நீண்டுவிட்டது. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...!



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 August 2013

பதிவர் சந்திப்பு: சில கேள்விகளும் பதில்களும்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்னையில், வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி (01.09.2013) பதிவர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. அதுகுறித்த ஒரு கேள்வி – பதில் பகுதி. (புதியவர்களுக்கானது).

பதிவர் சந்திப்பு எங்கே, எப்போது நடைபெறுகிறது ?
01.09.2013 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை சென்னை, வடபழனி கமலா திரையரங்கத்திற்கு அருகிலுள்ள இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நடைபெறுகிறது.

யாரெல்லாம் கலந்துக்கொள்ளலாம் ?
வலைப்பதிவர்கள், ஃபேஸ்புக் பயனாளர்கள், ட்விட்டர்கள், ப்ளஸ்ஸர்கள், வேறு ஏதேனும் சமூக வலைத்தளம் விட்டுப் போயிருந்தால் அதனுடைய பயனாளர்கள், வாசகர்கள். சுருங்கச் சொல்வதென்றால் யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம்.

பதிவர் சந்திப்பில் அப்படி என்னதான் நடக்கும் ?
வழக்கம் போல, பதிவர்கள் சுய அறிமுகப்படலம். சிறப்பு விருந்தினர்களின் (எழுத்தாளர்கள் திரு.பாமரன் மற்றும் திரு.கண்மணி குணசேகரன்) உரை. சில புத்தக வெளியீடுகள். நிறைய அரட்டை.

என்னென்ன புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன ?
மொட்டைத் தலையும் முழங்காலும் – சேட்டைக்காரன்
இதழில் எழுதிய கவிதைகள் – சதீஸ் சங்கவி
வெற்றிக் கோடு – மோகன்குமார்
அவன் ஆண் தேவதை – யாமிதாஷா

சாப்பாடு உண்டா ?
நிச்சயமாக. சைவம், அசைவம் இரண்டும் கொண்ட மதிய உணவு உண்டு. அதுபோக இடையிடையே டீ, சூஸ் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், உணவு ஏற்பாட்டிற்காக முன்பே வருகையை உறுதிப்படுத்திவிடுவது நல்லது.

யாரிடம் உறுதிப்படுத்த வேண்டும் ?
வரவேற்புக் குழுவில் இடம் பெற்றுள்ள கே.ஆர்.பி.செந்தில், மெட்ராஸ் பவன் சிவகுமார், அஞ்சா சிங்கம் செல்வின், காணாமல் போன கனவுகள் ராஜி, தென்றல் சசிகலா, ஆரூர் மூனா செந்தில் ஆகியோரில் யாராவது ஒருவரிடம் மெயில் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்.

மொத்தம் எத்தனை பேர் வருவார்கள் ?
இதுவரையில் கிட்டத்தட்ட 250 பேர் தங்களுடைய வருகையை உறுதி செய்திருப்பதாக தகவல். இன்னமும் கூடலாம். வருகையை உறுதி செய்தவர்கள் லிஸ்ட்.

இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கிறது ?
விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமான பணம் வசூலாகும் பட்சத்தில் எஞ்சியிருக்கும் பணத்தில் ஏதேனும் நற்செயல்கள் செய்யலாம் என்பது திட்டம்.

பதிவர் சந்திப்பை யார் ஏற்பாடு செய்கிறார்கள் ? இதனால் அவர்களுக்கென்ன லாபம் ?
இதற்கென ஒருங்கிணைக்கப்பட்ட குழு ஒன்று இயங்குகிறது. அதன் விவரங்களை இந்த சுட்டியில்  காணலாம். இதுபோன்ற சந்திப்புகளால் அவர்களுக்கு எதுவும் நன்மை இருப்பதாக தெரியவில்லை.

அப்ப யாருக்குத்தான் லாபம் ?
லாபம், நட்டம் பற்றி பேச இது வியாபாரம் இல்லை, இது நம் உணர்வு, ஆவல் மற்றும் எண்ணங்கள் சார்ந்த விடயம்.

புதுப்பதிவர்கள் இது மாதிரி சந்திப்புக்கு வர தயங்கறாங்களாமே ?
இருக்கலாம். அவர்களுக்கு ஆரம்ப காலத்தயக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் புதுப்பதிவர்கள் கட்டாயம் இது போன்ற சந்திப்புகளில் கலந்து கொள்ளவேண்டும், ஏனெனில் அவர்கள் தான் தமிழ்வலைப்பதிவுகளின் எதிர்காலம். அவர்களை இழந்தால் வலைப்பதிவுகளில் தமிழ் மெல்லச்சாகும்.

எல்லாம் சரி, சும்மா பதிவு போட்டா ஆச்சா ? எனக்கான அழைப்பிதழ் எங்கே ?
மன்னிச்சிக்கோங்க பாஸ். இதோ உங்களுக்கான அழைப்பிதழ்.

மேலதிக தகவல்களுக்கு:
மதுமதி kavimadhumathi@gmail.com 9894124021
பட்டிகாட்டான் ஜெய் pattikattaan@gmail.com 9094969686
சிவக்குமார் madrasminnal@gmail.com 9841611301
ஆரூர்மூனா.செந்தில்குமார் senthilkkum@gmail.com 8883072993
அஞ்சாசிங்கம் செல்வின் selwin76@gmail.com 9444125010
பாலகணேஷ் bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 July 2013

சாஃப்ட்வேர்க்காரன் சம்பளத்திற்கு எதிர்வினை !

அன்புள்ள வலைப்பூவிற்கு,


நான் பிழைப்பிற்காக தகவல் தொழில்நுட்ப துறையை அண்டியிருந்தாலும் கூட, இன்னமும் கலாசார ரீதியாக என்னுடைய சக பணியாளர்களுடன் ஒன்ற முடியாத நடுத்தர வர்க்க சாதாரணனாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். ஆறாயிரம் ரூபாய்க்கு கூலர்ஸ் வாங்குவது, இரண்டாயிரம் ரூபாய்க்கு சென்ட் பாட்டில் வாங்குவது என சில த.தொ பணியாளர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை பார்த்து கடுகடுப்பானாலும் கூட இணையவெளியில் அதனை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவ்வாறு வெளிக்காட்டுவது மல்லாக்க படுத்துக்கொண்டு உமிழ்ந்துக் கொள்வதற்கு சமம் அல்லது நம்முடைய பதிவை தெரியாத்தனமாக மேனேஜர் படித்துவிட்டு “வொர்க் கல்ச்சருன்னா என்னன்னு தெரியுமாய்யா உனக்கு ? என்று லெக்ச்சர் எடுக்கக்கூடும் என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.

அதையும் தாண்டி வா.மணிகண்டனுடைய சமீபத்திய பதிவை படித்ததும் ஒரு வயிற்றுக்கடுப்பு கிளம்பியது. கூடை வச்சிருக்குறவங்களுக்கெல்லாம் லைட்டு கொடுக்குறதில்லை என்பது போல பின்னூட்டப்பெட்டியை மூடி வைத்திருப்பவர்களுக்கெல்லாம் கருத்து / எதிர்வினை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் வா.மணியின் பதிவை படிக்கும் பொது தரப்பு ஆட்கள், த.தொ பணியாளர்களை பார்த்து அய்யோ பாவம் என்று உச்சு கொட்டுவதற்குள் என்னுடைய கருத்தை பதிவு செய்துவிட விரும்புகிறேன்.

வா.மணியின் பதிவை நான் முழுமையாக எதிர்க்கவில்லை. பிள்ளைகள் பெற்ற ஒரு குடும்பத்தலைவராக அவர் அவருடைய கவலைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள சில சால்ஜாப்பு காரணங்களை படிக்கும்போது தான் எதைக்கொண்டு சிரிப்பது என்று தெரியவில்லை. தவிர, பிற துறைகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் த.தொ ஆட்களை விட அதிகம் சம்பாதிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். த.தொ பணியாளர்களும் எல்லோரைப் போலவும் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மற்ற வேலைகளோடு ஒப்பிடும்போது த.தொ பணியாளர்கள் அதிகம் உழைக்கிறார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதை ஒப்புக்கொள்ள இயலாது.

அவருடைய சாஃப்ட்வேர்க்காரன் பற்றிய பதிவு – “என்னத்த சம்பாதிக்கிறோம் ? வேன் ஹியூசனில் சட்டை வாங்குவதற்கும், கே.எப்.சியில் கோழிக்கறி சாப்பிடுவதற்கும், பிள்ளைக்குட்டிகளை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்வதற்கே மொத்த பணமும் காலியாகிவிடுகிறது. ஆச்சு பார்த்தீங்களா ? மாசக்கடைசியில் நாங்களும் கடன் வாங்கித்தான் பொழப்பை ஓட்டுறோம். நாங்களும் உங்களை மாதிரி அன்றாடங்காய்ச்சிகள் தான் !” என்கிற ரீதியில் செல்கிறது.

மணிகண்டனின் பதிவுடைய முதல் சில பத்திகள் பொருளாதார வீழ்ச்சிக்கு பிந்தைய த.தொ பணியாளர்களின் வாழ்க்கையைப் பற்றி புலம்புகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் த.தொ ஆட்களின் சம்பளம் கணிசமாக குறைந்துவிட்டது உண்மைதான். ஆனால் திறமை உள்ளவர்கள் யாரும் தெருவுக்கு வந்துவிடுவதில்லை. “ஆடி” காரில் போய்க்கொண்டிருந்தவர்களை திடீரென அம்பாஸடருக்குள் அமர வைத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது இவர்களுடைய வாழ்க்கை. அதன்பிறகு, “என்னய்யா பெருசா காசை வாங்கிட்டோம் ? மிஞ்சி மிஞ்சிப்போனா பிச்சைக்காசு ஐம்பதாயிரம். அதை வைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் தெரியுமா ?” என்று தொடர்கிறார்.

// ஐ.டி கம்பெனிகள் என்ன கரட்டடிபாளையத்திலும், வள்ளியாம்பாளையத்திலுமா இருக்கின்றன? பெங்களூரிலும் சென்னையிலும் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை பன்னிரெண்டாயிரத்துக்கு குறைவாக வாடகைக்கு பிடிக்க முடிவதில்லை- அதுவும் கூட ஊருக்கு ஒதுக்குப் புறமாகத்தான் இந்த வாடகையில் கிடைக்கும். //

பெருநகரங்களில் சொந்தவீடு இல்லாமல் தங்கி பணிபுரிவது என்பது சிரமமான விஷயம் தான், அதிலும் குடும்பம் குட்டியோடு இருப்பதென்றால் ரொம்ப கஷ்டம் தான். ஆனால் பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிக்கும் அனைவருமே பன்னிரெண்டாயிரம் கொடுத்து தான் வசிக்கிறார்களா ? ஏன் ஆறாயிரம், எட்டாயிரத்திற்கெல்லாம் வாடகை வீடுகள் கிடைப்பதில்லையா ? நிச்சயமாக கிடைக்கும். ஆனால், பகட்டாக வாழ்ந்து பழக்கப்பட்ட நம் ஆட்கள் கொஞ்சம் விசாலமாக, கார் பார்க்கிங்குடன் கூடிய, பால்கனி வசதி கொண்ட போன்ற சில சொகுசுக்களை எதிர்பார்ப்பதால் பன்னிரெண்டாயிரம் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறது. (வீட்டு வாடகையை பொறுத்தவரையில் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணமே பொருளாதார வீழ்ச்சிக்கு முந்தய த.தொ சமுதாயம் தான் என்பதை மறந்துவிட வேண்டாம்). அப்புறம் பெட்ரோல் செலவு, இன்டர்நெட் செலவு (!!!), பிள்ளைகளின் படிப்புச் செலவு போன்ற சில நியாயமான காரணங்களை சொல்லியிருக்கிறார்.

// இது போக பெரும்பாலான கம்பெனிகளில் திங்கள், செவ்வாய் ஃபார்மல் ட்ரஸ்’, புதன், வியாழன் செமி ஃபார்மல்’, வெள்ளியன்று கேசுவல்என்ற நடைமுறை உண்டு. வான் ஹூசனிலும், பீட்டர் இங்க்லாண்டிலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சட்டை எடுக்க முடிகிறதா? அதுவும் டீம் பாலைவனமாக இருந்துவிட்டால் பரவாயில்லை. ஒன்றிரண்டு ஃபிகர்கள் இருந்துவிட்டால் அவர்களுக்கு வேண்டியாவது மாதம் ஒரு செட் துணி எடுக்க வேண்டியிருக்கும். ஆக இதுக்கு சராசரியாக மாதம் ஒரு ஐந்திலிருந்து நான்காயிரம் வரை. //

கவுண்டர் வாய்ஸ்: அவனவனுக்கு ஒன்னுக்கு வரலைன்னு வருத்தப்படுறான். இவனுக்கு இளநியில தண்ணி வரலையாம் !

நான் தெரியாமல் தான் கேட்கிறேன், சென்னை / பெங்களுருவில் வேன் ஹியூசன், பீட்டர் இங்க்லேண்ட் தவிர வேற ஜவுளிக்கடைகளே இல்லையா ? ஒருவேளை பிராண்டட் சட்டை அணியாவிட்டால் உடலில் அரிப்பெடுக்குமா ? (ஃபிகர்களுக்காக புதுத்துணி எடுக்க வேண்டியிருக்கிறது என்பது நகைச்சுவைக்காக எழுதிய வரிகளாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்).

// இந்தச் செலவை எல்லாம் செய்து முடித்தாலும் சம்பளப் பணத்தில் பத்தாயிரம் ரூபாய் மிச்சமிருக்கிறது அல்லவா? அதுக்கு வினை வைக்கத்தான் கிரெடிட் கார்ட், பெர்சனல் லோன் EMI என்று ஏதாவது வந்து சேர்ந்துவிடுகிறது. //

ஏதோ செய்யாத பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கும் தொனியில் எழுதியிருக்கிறார். நீ ஏன் மேன் லோன் வாங்குற ? எதுக்கு EMI கட்டுற ? பகட்டான வாழ்க்கையைத் தேடி வாங்கிய கடனைத்தானே ஓய் அடைக்கிறீர்கள் ?

// இத்தனையும் போக கே.எஃப்சி, பீட்ஸா கார்னர் என்று வாயைத் திறந்து கொண்டிருக்கும் பூதங்களுக்கு கிள்ளியும் அள்ளியும் போட வேண்டியிருக்கிறது. //

கே.எப்.சி, பீட்சா கார்னரில் சாப்பிட்டுத் தொலைக்காமல் பெருநகரங்களில் வாழவே முடியாதா ? எனக்குத் தெரிந்து எல்லா மென்பொருள் நிறுவன வளாகங்களின் சுற்று வட்டாரங்களிலும் ஓரிரு தள்ளுவண்டிக்கடைகள், ஃபாஸ்ட் ஃபுட் நிச்சயமாக இருக்கும். நம்மவர்களும் கரட்டடிபாளையத்தில் இருந்து சென்னைக்கு வந்த புதிதில் அந்த மாதிரி கடையில் எல்லாம் சாப்பிட்டிருப்பார். இப்பொழுது கொஞ்சம் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதால் அதுபோன்ற ரோட்டுக்கடைகளை பார்த்தால் முகம் சுழிப்பதும் ஸ்டோமக் அப்செட் ஆகிடும் என்று சொல்லி சீன் போடுவதுமாக பொழுதைக் கழிக்கின்றனர்.

// அரசு ஊழியர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் சம்பளம் எந்தவிதத்திலும் குறைவில்லை. இப்பொழுதெல்லாம் அரசாங்க ஊழியர்களின் சம்பளமே நாற்பது ஐம்பதைத் தொடுகிறது. அவர்களுக்கு சம்பளமா முக்கியம்? கிம்பளம்தானே மெயின் மேட்டர். சேனல்களில்  எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதுகளைத் தொடுகிறார்கள். ஐடிக்காரன் மட்டும் என்ன பாவம் செய்தான்? //

பிற துறையினர் எல்லாம் நோகாமல் நோம்பி கும்பிடுவது போல அல்லவா இருக்கிறது. கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதை தொடுகிறார்களாம். என்னடா இது சோதனை ? ஒருவேளை வயதை குறிப்பிடுகிறாரோ ? யாரும் வேலைக்குச் சேர்ந்ததும் போய் பேராசிரியராக அமர்ந்துவிட முடியாது. பேராசிரியராக முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும், விரிவுரையாளராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் மணிகண்டனுக்கு தெரியாதா என்ன ? முனைவர் பட்டம் எல்லாம் ஒரு விஷயமா என்று வெளியிலிருந்து பார்ப்பவர்கள் வெகுசாதாரணமாக சொல்லிவிடலாம், த.தொ தொழிலாளர்கள் எளிதாக பணம் சம்பாதிப்பதாக வெளியாட்கள் நினைக்கிறார்களே அது போல.

பொதுவாகவே மணிகண்டனின் வரவு செலவு கணக்கு தப்புக்கணக்காக தோன்றுகிறது. கணக்கு பாடத்தில் அவரு கொஞ்சம் வீக் போல. இருவரும் சம்பாதிக்கிறோம் என்றபடி ஆரம்பித்த அவருடைய பதிவு போகப் போக இருவருக்கும் பொதுவான செலவுகளை அவருடைய சம்பளத்திலிருந்து மட்டும் குறைத்துக்கொண்டு ஆச்சு பார்த்தீங்களா ? ஐம்பதாயிரம் காலி என்று கணக்கை முடித்துவிட்டார். தவிர, மணிகண்டன் போல பிள்ளைக்குட்டிகள் பெற்றெடுத்த த.தொ பணியாளர்கள் இந்நேரம் சொந்த வீடு, கார், சுவற்றில் மாட்டுகிற தொலைக்காட்சி என்று செட்டில் ஆகியிருப்பார்கள்.

// ஒருவேளை ப்ரோமோஷன் கிடைத்து சம்பளம் லட்ச ரூபாயைத் தொட்டாலும் எதுவும் மிச்சம் ஆகாது. கார் வாங்கி அதற்கு EMI, பெட்ரோல், ஒருவேளை டிரைவர் வைத்தால் அவர் சம்பளம் பன்னிரெண்டாயிரம் ரூபாய். //

இதுதான் ஃபினிஷிங் டச். ஆக, ஒரு லட்சமில்லை எத்தனை லட்சங்கள் வாங்கினாலும் கூட எல்லாவற்றையும் தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ / பகட்டான வாழ்க்கைக்கோ செலவு செய்துவிட்டு மாசக்கடைசியில் எங்க பர்ஸும் காலியாத்தான் இருக்கு, நாங்களும் ஏழைங்க தான் என்று புலம்புவார்கள். மனிதர்கள் அவரவர் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்வது இயல்புதான். ஆனால் புலம்பக்கூடாது. நாய் வேஷம் போட்டா குரைச்சுதான் ஆகணும்னு தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல த.தொ வேலை என்பது நாமாகவே வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்ட நாய் வேடம். குரைத்து தான் ஆகவேண்டும். விருப்பமில்லையென்றால் சர்வசாதாரணமாக ஐம்பதை தொடுகிற பேராசிரியராக பணிபுரியலாமே ? பொறியியல், MCA முடித்தவர்களுக்கு நிச்சயமாக கல்லூரி விரிவுரையாளர் பணி கிடைத்துவிடும். அதுவும் இல்லையென்றால் த.தொ இளைஞர்கள் அடிக்கடி ஃபேஷனுக்கு சொல்வதைப் போல ஊருக்கு போயி வெவசாயம் பார்க்கலாம் அல்லது கரட்டடிபாளையத்திற்கோ வள்ளியாம்பாளையத்துக்கோ போய் எருமை மாடு மேய்க்கலாம் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 August 2012

பதிவர் சந்திப்பு – பரபரப்பான பத்து தலைப்புகள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

1. பதிவர் சந்திப்பை நடத்திய பொறுக்கிகள்
பதிவர் சந்திப்பு குழுவினரைப் பற்றி ஒருத்தருக்கு ஒரு பத்தி என்ற விகிதத்தில் மொக்கை போட வேண்டும். இறுதியாக பதிவர் சந்திப்பு முடிந்ததும் விருந்தினர்கள் பயன்படுத்திய பேப்பர் கப், ப்ளேட் போன்ற வஸ்துக்களை விழாக்குழுவினர் “பொறுக்கி” கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டார்கள் என்று முடிக்க வேண்டும்.

2. பதிவர் சந்திப்பையும் மதுவையும் பிரிக்க முடியுமா ???
பதிவர் சந்திப்பை பற்றி இரண்டு பத்திகள் மொக்கை, பதிவர் மதுமதியை பற்றி இரண்டு மொக்கை பத்திகள். பின்னர் பதிவர் மதுமதியை நாங்கள் செல்லமாக மது என்றுதான் அழைப்போம். அவரையும் பதிவர் சந்திப்பையும் பிரிக்க முடியுமா என்று கேள்விக்குறியோடு முடிக்க வேண்டும்.

ஒளியூடுருவும் உற்சாக பானத்தை வாட்டர் பாட்டிலில் ஒளித்துவைத்து அருந்தும் மெட்ராஸ் பவனார்...!
3. உற்சாக பானம் அருந்திய மெட்ராஸ் பவனார்...!
முதலில் சிவகுமார் பற்றி இரண்டு பத்திகள். பின்னர் அவருடைய குணத்தைப் பற்றி, அன்னார் ரொம்ப நல்லவர், வல்லவர், பொதுவுடமைவாதி, சீரிய பேச்சாளர், ஒழுக்க சீலர், எச்சச்ச கச்சச்ச. அப்புறம் பதிவர் சந்திப்பன்று காலையிலிருந்து ஓடியாடி உழைத்து சிவகுமார் அயர்வானார். சில மில்லி உற்சாக பானம் குடித்ததும் மீண்டும் தெம்பானார். அந்த உற்சாக பானத்தின் பெயர் H20 என்று முடிக்க வேண்டும்.

4. பதிவர் சந்திப்பிற்கு ஊறுகாயான இஸ்லாமிய பதிவர்கள்...!
பதிவர் சந்திப்பை பற்றியும், மது சர்ச்சைகள் பற்றியும் சில பத்திகள். பின்னர் விழிப்புணர்வு, நடுநிலை, மதநல்லிணக்க (!!!) ஜல்லிகள். அப்புறம் பதிவர் சந்திப்பிற்கு இஸ்லாமிய சகோக்களும் வந்திருந்தார்கள். அவர்கள் மதிய உணவின் போது அன்போடு உணவு பரிமாறினார்கள். சகோ. மனிதாபிமானி தான் நண்பர்கள் அனைவர் இலையிலும் ஊறுகாய் வைத்தார் என்று முடிக்க வேண்டும்.

5. தமிழ் பதிவர்களின் அத்தாரிட்டி யார்...?
முதலில் உங்களுக்கு தெரிந்த பிரபல / பிராப்ள பதிவர்களான கேபிள், ஜாக்கி, லக்கி, கே.ஆர்.பி பற்றி எழுதி மொக்கை போட வேண்டும். பின்னர் கூகுள்காரன் தான் நமக்கு ஓசியில் வலைப்பூ கொடுக்கிறான், அதனால் அவன்தான் தமிழ் பதிவர்களின் அத்தாரிட்டி என்று கோல் போட வேண்டும். பின்னூட்டத்தில் யாராவது வந்து, “வாத்தா... எவன்டா அது என்னைப்பத்தி எழுதினது...” ன்னு கேட்டா, “அண்ணே... ஆக்குசன் நடிகர் ஜாக்கி சான் என்னுடைய வசாகார்... அவரைப்பற்றி தான் சொன்னேன்... நீங்கங்கங்க யாருன்னே எனக்கு தெரியாது...” என்று பல்டியடிக்க வேண்டும்.

மொட்டைமாடியில் கொட்டை அடிக்கப்பட்ட ஜோடிபுட்டிகள்...!
6. பதிவர் சந்திப்பில் ஆபாசம் காட்டிய பதிவர்...!
முதலில் விழாக்குழுவில் உள்ள “அந்த” சம்பந்தப்பட்ட பதிவரைப் பற்றி சில பத்திகள். அப்புறம் பதிவர் சந்திப்பின் கண்ணியம் பற்றியும், இந்திய இறையான்மை பற்றியும் சில பத்திகள். பின்னர் பதிவர் சந்திப்பிற்கு வருகை தந்த விருந்தினர்கள் “ஆ...!” என்று ஆச்சர்யப்படும் வகையில் நண்பர் “பாசம்” காட்டினார். அதைத்தான் ஆ...பாசம் என்று சொன்னேன் என்று முடிக்க வேண்டும்.

7. தேசிய கீதத்தை அவமதித்த தமிழ்ப்பதிவர்கள் மாநாடு...!
மறுபடியும் இந்திய இறையான்மை, மகாத்மா (!!!) காந்தி பற்றி சில பத்திகள். முடிந்தால் ராபிந்திரநாத் தாகூர் பற்றியும், அவரது புலமை பற்றியும் சில மொக்கைகள். அப்புறம் தமிழ் பதிவர்கள் தேசிய கீதத்தை தமிழில் தானே பாடியிருக்க வேண்டும். ஏன் வங்காள மொழியில் பாடினார்கள் ??? என்ற வரலாற்று சிறப்புமிக்க கேள்வியை முன்வைக்க வேண்டும்.

8. உனா தானா அண்ணாச்சியை அவமதித்த பதிவர் குழுமம்...!
உண்மைத் தமிழன் அண்ணாச்சி உண்மையிலேயே எம்புட்டு நல்லவர் என்று விளக்கிச் சொல்லி சில பத்திகள். நடுநடுவே முருகா, செந்திலாண்டவா இதெல்லாம் போட்டுக்கணும். அப்புறம் அறுபது வயதை கடந்த பதிவர்களுக்கு பதிவர் சந்திப்பில் பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசு தந்து மரியாதை செய்தார்கள். ஆனால் பல வருடங்களுக்கு முன்பே அறுபதைக் கடந்த எங்கள் சித்தப்பு உனா.தானாவை மறந்துவிட்டார்கள் என்று முடிக்க வேண்டும்.

பதிவர்கள் நட்பை விரும்பாத சிராஜுதீன்...! (அம்புக்குறி இடப்பட்டுள்ளது)
9. தமிழை மறந்த தமிழ்பதிவர்கள்...!
முதலில் தமிழனின் ஒரிஜினல் பெருமை, போதி தருமர், திருவள்ளுவர், கான்ஸ்டான்டியுஸ் ஜோசப் பெஸ்கி பற்றியெல்லாம் ஜல்லியடிக்க வேண்டும். பின்னர் பதிவர் சந்திப்பில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது மேடையில் வீற்றிருந்த பதிவர் பாடலை மறந்துவிட்டதாகவும், அதை சமாளிக்க கஞ்சா இழுக்கும் ரியாக்ஷன் கொடுத்ததாகவும் அடித்துவிட வேண்டும். நான் பார்த்தேனே... அப்படியெல்லாம் நடக்கலையே...” என்று மடக்கும் பின்னூட்டவாதிகளுக்கு போலி தமிழ் தேசியவாதிகள், நட்ட நடு சென்டர்கள் போன்ற பட்டங்களை தரவேண்டும்.

10. பதிவர்களில் யார் யார் எந்தெந்த க்ரூப்....? ஒரு நடுநிலை ஆய்(வு)...!
மறுபடியும் பதிவுலகில் மூத்த / பீத்த பதிவர்கள் பற்றி சில பத்திகள். பதிவுலகை நாங்கள் தான் கண்காணித்து, கட்டிக்காத்துக் கொண்டிருக்கிறோம் என்பது போன்ற வார்த்தைகள் கொண்ட பத்தி. பின்னர் பதிவர் சந்திப்பின் போது யார் யார் எந்தெந்த ப்ளட் க்ரூப் என்று பேசிக்கொண்டிருந்தோம். கேபிள் ஓ பாசிடிவ் க்ரூப், ஜாக்கி ஓத்தா நெகடிவ் க்ரூப் என்று அடித்துவிட வேண்டும். 

மேற்படி பதிவுகள் போடும்போது பின்னூட்ட மட்டறுத்தல் வைத்துக்கொண்டால் மற்றவர்கள் / உற்றவர்கள் காறி உமிழும்போது உங்கள் முகத்தில் படாமல் தப்பிக்கலாம். முடிந்தால் பின்னூட்டப்பெட்டியை மூடிக்கொண்டு இருக்கலாம்.

யாராவது வந்து இப்படி கெட்டவார்த்தையெல்லாம் போட்டு பதிவு எழுதியிருக்கீங்களே தம்பின்னு கேள்வி கேட்டா, யார் சொன்னது இது பெண்களெல்லாம் படிக்கும் கண்ணியமான வலைப்பூ...! அதனால் “ம” வில் ஆரம்பித்து “ரு” வில் முடியும், நடுவில் “யி” அல்லது “சு” வரக்கூடிய, தலைமுடியை குறிக்கக்கூடிய “அந்த” கெட்டவார்த்தையை எங்கம்மா சத்தியமா நான் பயன்படுத்தவே மாட்டேன் என்று அடித்துக்கூற வேண்டும்.

திருவள்ளூர் “வாசி”கள் மட்டும் தங்களுடைய பதிவின் தலைப்பில், ”அந்த”, “அது”, அதேதான்” போன்ற சங்கேத வார்த்தைகளை பயன்படுத்திக்கொள்ள பெசல் அனுமதி உண்டு...!


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment