17 September 2010

வெங்காய பக்கங்கள்...!

வணக்கம் மக்களே...

இன்று என் தமிழ் மக்களை தலை நிமிர வைத்த தன்னிகரற்ற தலைவனின் 132-வது பிறந்தநாள். போஸ்டர் அடித்து, கட்-அவுட் வைத்து, பேனர் கட்டி, மாலை அணிவித்து, கிரீடம் வைத்து, வீர வாளை பரிசாக தந்து, கேக் வெட்டி கொண்டாடுவதற்கு இது தமிழகத்தின் வருங்காலம் என்று சொல்லப்படும் நடிகர்களின் பிறந்தநாளோ, காலம்காலமாக தமிழகத்தின் இருண்டகாலமாக இருந்துவரும் அரசியல்வாதிகளின் பிறந்தநாளோ இல்லை. பிறந்தநாள் என்பது ஒருவரது கருத்துக்களை பரப்புவதற்கும், பாராட்டுவதற்கும் மட்டுமே பயன்பட வேண்டும். எனவே அய்யாவை பற்றி ஏதேனும் எழுதலாமென்று கடந்த ஒரு வாரகாலமாக சிந்தித்து வந்தேன். அய்யாவின் கோடானு கோடி சிந்தனைகளில் எதைப் பற்றி எழுதுவது என்று விளங்கவில்லை. அதுமட்டுமல்ல, எழுதும் பதிவு பெருவாரியான மக்களுக்கு போய்ச்சேர வேண்டுமெனில் கொஞ்சமேனும் மெனெக்கெட வேண்டும்.


அய்யாவின் கருத்துக்களில் அதி முக்கியமானது கடவுள் மறுப்பு தத்துவம்.

"கடவுள் இல்லை... கடவுள் இல்லை... கடவுள் இல்லவே இல்லை...
கடவுளை கற்பித்தவன் முட்டாள்...
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்...
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி..."

இவை வெறும் வார்த்தைகள் அல்ல. சின்ன வயதில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்கு ஒரு முறை சென்றிருந்தபோது தோழர் ஒருவர், மேற்கூறிய வாசகங்கள் ஒவ்வொன்றினையும் விளக்கிச் சொன்னார். முன்னதாக அய்யாவே 40 வருடங்களுக்கு முன்னர் உண்மை இதழில் இவை பற்றி விளக்கம் கொடுத்து கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த உரையை படித்தவர்களோ, கேட்டவர்களோ கண்டிப்பாக மறுக்க முடியாது, மழுப்ப வேண்டுமானால் செய்யலாம். அதனினை எல்லோரும் படித்திட செய்ய வேண்டுமென எண்ணினேன். ஆனால் கட்டுரையில் இருந்த வார்த்தைகள் கொஞ்சம் கடுமையாக இருந்தன. மாற்றுகருத்து கொண்டவர்களே ஆனாலும் அவர்கள் மனம் புண்படுவதை நான் விரும்பவில்லை. நீங்களாகவே படிக்க விரும்பினால் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கிப் படித்துக்கொள்ளலாம்.நான்காண்டுகளுக்கு முன்பு பெரியார் திரைக்காவியம் வெளியானது. வழக்கமாக நம்மூர் இளைஞர்கள் குத்து பாட்டு, குட்டைப்பாவாடை ஹீரோயின் இதையெல்லாம் தானே பார்ப்பார்கள் என்று நானும் முன்பதிவு ஏதும் செய்யாமல் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக சென்னை ஆல்பட் திரையரங்கத்திற்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கே ஹவுஸ்புல் போர்டில் லைட் எரிந்துக்கொண்டிருந்தது. அங்கே நின்றிருந்தவர்களில் பலர் கருஞ்சட்டை அணிந்திருந்தனர். அதிலும் இளைஞர்கள் நிறைய பேர் பெரியார் மற்றும் சே குவேரா படங்கள் பொறித்த பனியன்களை அணிந்து வந்திருந்தனர். எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எப்படியோ ப்ளாக் ஷர்ட்ஸ் போட்டவர்களுக்கு மத்தியில் பிளாக்கில் டிக்கெட் எடுத்து படத்தை பார்த்துவிட்டேன். படத்தில் சொன்ன கருத்துக்களையும் வசனங்களையும் விட அதற்கு கைதட்டிய மக்களை அதிகம் ரசித்தேன்.

நான் கடந்து வந்த பள்ளி, கல்லூரி நாட்களில் நண்பர்கள் சிலரைப் பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். வெளிப்படையாக காட்டிக்கொள்ளாவிட்டாலும் பெரும்பாலான இளைஞர்கள் மனதில் கடவுள் மறுப்பு, சம தர்மம் போன்ற பகுத்தறிவு கொள்கைகள் குடிக்கொண்டிருக்கும். ஆனால் இறுதிவரை அவர்கள் இதே நிலைப்பாடுடன் இருப்பார்களா என்றால் இல்லை. காலங்கள் கடக்க சமுதாயம் அவர்களது சிந்தனைகளை சவக்குழியில் தள்ளுகிறது. மூடநம்பிக்கைகள் அவர்களது அன்றாட வாழ்க்கையின் அங்கமாகி விடுகின்றன. கோவிலுக்கு செல்வது என்பதை கழிவறைக்கு செல்வதைப் போல அவசியமாக கருதுகிறது இந்த வெங்காய சமூகம். அப்பா அம்மா பேச்சை தட்ட முடியாமல் வரதட்சணை வாங்க ஆரம்பிக்கும் ஆண், தாலி கட்டுவது, காது குத்துவது, மொட்டை போடுவது என்று என்னவெல்லாமோ செய்ய சமுதாயம் அவனை உந்துகிறது. நானும் இதற்க்கெல்லாம் விதி விலக்கல்ல என்று நினைக்கும்போது எனது இயலாமையை நினைத்து மல்லாக்க படுத்து துப்பிக்கொள்ளலாமா என்றே தோன்றுகிறது. ஒரு வார்த்தை சொன்னால் உறவினர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது. என் தந்தைக்கு உடல்நிலை குணமடைந்தால் எனக்கு குலதெய்வ கோவிலில் மொட்டை எடுப்பதாக வேண்டிக்கொண்ட அத்தை ஏன் தனக்கு மொட்டை அடித்துக்கொள்வதாக வேண்டிக்கொள்ளவில்லை என்று எனக்கு கடைசி வரை புரியவே இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு அனைத்து பிரிவினரும் அர்ச்சகராகும் உரிமைக்காக திராவிடர் கழகம் போராடிக்கொண்டிருந்தது. அப்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த  பக்தர் ஒருவர், "நீங்கள் தான் கடவுளே இல்லை என்று கூறுகிறீர்களே... பிறகு எந்த பிரிவினர் அர்ச்சனை செய்தால் உமக்கென்ன ஓய்..." என்று விதண்டாவாதம் பேசினார். கழகம் போராடுவதே உங்களைப் போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்காகத்தானே என்று சொல்லி அவரிடம் வாக்குவாதம் செய்யத் தோன்றியது. ஆனால் சொன்னவர் என் உறவினர் என்பதால் பொத்திக்கொண்டேன். நூறாண்டுகளுளுக்கு முன்பு நெல்லை, கழுகுமலை கிராமத்தில் எனது அந்த உறவினர்  பெருமையாக சொல்லிக்கொள்ளும் அவரது சமூகத்தினர் தேரடித் தெருக்கள் வழியே மத ஊர்வலம் போக தடை போடப்பட்டது என்பதும் இதற்கு பதிலளிக்கும் வகையில் அப்பகுதியில் வாழ்ந்த அந்த சமூகத்தினர் அனைவரும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்துவிட்டார்கள் என்பதும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெரியார் என்ற ஒருவர் இல்லாமல் இருந்திருந்தால் இன்றும் அவர் செருப்பில்லாமல் நடந்துக்கொண்டும், உயர்சாதியினர் என்று சொல்லிக்கொள்பவர்களை காணும்போதெல்லாம் சைக்கிளை விட்டு இறங்கி உருட்டிக்கொண்டும் தான் இருந்திருப்பார்.

சரி, கடவுள் மறுப்பைப் பற்றி பேச வேண்டாம் அதைத்தவிர பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, தீண்டாமை, சுய மரியாதை என்று ஆயிரம் பக்கங்கள் உள்ளன அய்யாவின்  அரிச்சுவட்டில். கடவுள் மறுப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இன்னபிற கருத்துக்களை பற்றியாவது சிந்திக்க வேண்டும். இன்னும் என்னென்னவோ எழுத வேண்டுமென தோன்றுகிறது. ஆனால் பக்கம் பக்கமாக எழுதினால் படிக்க நினைப்பவர்கள் கூட படிக்காமல் போகும் அபாயம் உள்ளதால் நிறுத்திக்கொள்கிறேன். இதுபோன்ற பதிவுகள் எழுதும்போது பக்தகேடிகள் சிலர் வசைமொழி பாடி பின்னூட்டம் போடுவார்கள். அவர்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். கிளம்பி வாருங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN


பிறப்பு: 21.02.1907                                                                       இறப்பு: 17.09.1979

பி.கு: இன்று நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களது 31-வது நினைவு நாள் என்பதால் அவரைப் பற்றி சில வரிகள் எழுத நினைத்தேன். ஆனால் சில வரிகள் எல்லாம் அவருக்கு போதாது என்பதால் நாம் பிறிதொரு நாளில் அவரது நினைவில் மூழ்கலாம்.

Post Comment

10 comments:

vim said...

Good Registry! Keep it up...

Chitra said...

Very interesting to read.....

சுதன் said...

நல்ல ஒரு பதிவு. உங்கள் இயலாமைகளையும் மறைக்காமல் வெளிப்படுத்தும் குணமே முக்கியம். நானும் நீங்கள் சொல்வது போல சொந்தங்கள் எனும் வட்டத்தினுள் சிக்கிக்கொண்டு மனம் விரும்பா சிலவற்றை செய்ய நேரும் போது கஷ்டமாக இருக்கும்.

MJ said...

every week im awaiting for ur blog,, really itz interesting, d way u share ur thougtz openly datz ur plus, improvising day by day,, i became ur fan machi,, want to meet u,,, :) ...

--Mj

Philosophy Prabhakaran said...

@ vim
Thanks for coming and presenting ur thoughts...

@ Chitra
Chitra sister, thanks for visiting my blogs and posting comments continously...

@ சுதன்
உங்களது பின்னூட்டங்களைப் பார்க்கும் பொது மனம் துள்ளி குதிக்கின்றது... அடிக்கடி வருகை தாருங்கள்...

@ MJ
its really nice to hear... visit my blogs and post comments continuously...

அலைகள் பாலா said...

பெரியார் ஒரு சகாப்தம். பெண்களுக்கும், ஒடுக்கப் பட்டவர்களுக்கும் அவர் செய்த தொண்டு அளவிட முடியாதது. அவர் வந்திருக்காவிட்டால், இந்நேரம் தமிழகம் வாழத் தகுதி இல்லாத இடமாக இருந்திருக்கும். சென்னையில் ஐ.டி கார்டை தொங்க விட்டுக் கொண்டு ஸ்டைலாக நடக்கும் தென் தமிழக பெண்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பெரியாருக்கு நன்றி சொல்கிறேன். அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் கிராமத்து, தாழ்த்தப் பட்ட மாணவர்களைப் பார்க்கும் போது பெரியாருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.

Anonymous said...

Hi Prabhakar.. Being frank to express your thoughts is really amazing..Try to analyse over Periyar's other philosophies..It has more value..Y do you preach about non-existence of god as like religious people who aims to spread their community..Dont ever try to criticise others.. Continue your blogs..Achieve more..Applause for your work - SUGANYA

ரெ கா பால முருகன் said...

அதாவது பிராமணர்கள் மற்றவர்களை எல்லா இடங்களிலும் ஒதுக்குவது நாசிசம் அல்ல என நினைக்கின்றனர். இன்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஓரம் கட்டப்படுவதும், பலவித இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவதும், சட்டங்களுக்கு முரணாக இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத பிராமண அதிகாரிகள் தங்கள் இனத் துவேஷத்தை வெளிப்படுத்துவதையும், இன்னும் சில இளந்தலைமுறைப் பிராமணப் பெண்கள் '.... அய்யர்' என பெயரிலேயே இனத்தை வெளிப்படுத்துவதையும் பார்த்தால் 'இன்னும் பல பெரியார்களின்' தேவை இருக்கின்றது. பெரியாரின் கொள்கைகள் இன்னும் இளந்தலைமுறையினரிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். அதனை அச்சி ஊடகங்கள் செய்ய இயலாது. நமது மின் ஊடகங்கள் மிகவும் தெளிவாக அய்யாவை அவரது தத்துவங்களைக் கொண்டு செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Philosophy Prabhakaran said...

@ அலைகள் பாலா
தொடர்ச்சியான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா...

@ SUGANYA
தங்களது வருகையில் மட்டற்ற மகிழ்ச்சி... தொடர்ந்து வருகை தந்து பின்னூட்டம் போட்டால் பூரிப்படைவேன்... உங்களது பின்னூட்டம் தெளிவாகவும் தரமாகவும் இருந்தது... /* Try to analyse over Periyar's other philosophies..It has more value.. */
இதுவரைக்கும் நீங்கள் புரிந்து கொண்டதே மகிழ்ச்சி... மற்றவைகளையும் எதிர்காலத்தில் புரிந்துக்கொள்வீர்கள்... மற்றவர்களை புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை... மனதில் தோன்றியவைகளை மட்டுமே எழுதியிருந்தேன்...

@ thalaivan
வாங்க தலைவரே... உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்... Anonymous பெயரில் பின்னூட்டம் போடாமல் உங்கள் பெயரில் போட்டது பாராட்டுக்குரியது... ஏற்கனவே நண்பர் ரெ கா பாலமுருகன் உங்களுக்கு போதிய விளக்கம் அளித்திருக்கிறார்... இருப்பினும் என்னுடைய பதில் இதோ... பெரியார் என்பவர் பிராமணர்களுக்கு எதிரானவர் என்று தவறாக புரிந்து வைத்துள்ளீர்கள்... நிச்சயமாக இல்லை... அவரும் நாங்களும் பிராமணீயத்தை மட்டுமே எதிர்க்கிறோம்... பிராமணீயம் என்ற வார்த்தையின் அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன்... தெரியவில்லை என்றால் அதற்காக தனி பதிவையே எழுத தயார்... கலைஞரைப் பற்றியோ வீரமணியைப் பற்றியோ நான் எதுவும் குறிப்பிட விரும்பவில்லை... ஆனால் பெரியார் ஒன்றும் இன அழிப்பு எதனினையும் செய்திடவில்லை... எப்படியோ பெரியார் பற்றிய மற்ற கருத்துக்களையாவது ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்...

@ ரெ கா பாலமுருகன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... எனக்கு முன்னரே தலைவனுக்கு (!!!) பதில் பின்னூட்டம் போட்டதற்கு ஒரு சிறப்பு நன்றி...

'பரிவை' சே.குமார் said...

பெரியார் குறித்த மிக அருமையான பகிர்வு...
பகிர்வுக்கு நன்றி.