18 February 2011

நடுநிசி நாய்கள் – வக்கிரமான கிரியேட்டிவிட்டி

வணக்கம் மக்களே...

கெளதம் மேனன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர். காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் ரசனையான மனிதர். அபாரமான கிரியேட்டிவிட்டி கொண்டவர். குறிப்பாக காதல் காட்சிகளை படமாக்குவதில் அவருடைய ஸ்டைலே தனி. அப்படிப்பட்ட ஒருவர் ஒரு த்ரில்லர் படம் எடுத்தால்...? இப்படியான எதிர்பார்ப்புகளோடு நடுநிசி நாய்கள் படத்திற்காக நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இரண்டு மணிநேரங்கள் கடந்தபிறகு என்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகியிருந்தது.

கதைச்சுருக்கம்:
எட்டு வயதில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படும் ஒரு சிறுவன். அதுவும் அவரது தந்தையால் உட்படுத்தப்படுகிறான். அதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கு பக்கத்து வீட்டு ஆன்ட்டியின் ஆதரவும் அன்பும் கிடைக்கிறது. ஆன்ட்டியின் உதவியால் தன் தந்தையிடம் இருந்து மீண்டு வரும் சிறுவன் ஆன்ட்டியின் பராமரிப்பிலேயே வளர்கிறான். ஆனால் தந்தையிடம் இருந்து மீண்ட சிறுவன் தனது மனப்பிறழ்வில் இருந்து மீளவில்லை. அதனால் ஏற்படும் சம்பவம்களும் பாதிப்புகளுமே மீதிக்கதை.

மீதிக்கதையை திரையில் பாருங்கள் என்றெல்லாம் சொல்லவே மாட்டேன். ஆனாலும் ஒரு நல்ல விமர்சனத்தை எழுதும் நோக்கில் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

நாயகனாக சமர், வீரா என்ற கேரக்டர்களில் புதுமுகம் வீரா நடித்திருக்கிறார். அப்படியென்றால் டபுள் ஆக்ஷனா என்று கேட்காதீர்கள். ஸ்பிளிட் பர்சனாலிட்டி. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் மல்டிபிள் பர்சனாலிட்டி. நல்ல நடிப்பு, பிரமாதமான நடிப்பு. ஆனால் எரிச்சலூட்டுகிறார். அவரது பாத்திர படைப்பு அப்படி. அதிலும் முதல் பாதியில் அடிக்கடி மீனாட்சி அம்மா, மீனாட்சி அம்மா என்று சொல்லி சொல்லியே வெறுப்பேற்றுகிறார்.

நாயகி சுகன்யாவாக சமீரா ரெட்டி. நாயகி பெயரை சுகன்யா என்று வைத்ததில் எனக்கு பர்சனலாக மிகவும் வருத்தம். (ஏன் என்றெல்லாம் கேட்கப்பிடாது...) நல்லவேளையாக அவருக்கு கடைசிவரை எந்த அசம்பாவிதமும் நடக்காததால் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன். ஆனால், அழகையா நடிப்பையோ ரசிக்க முடியாதபடி இரண்டாம் பாதி முழுக்க வதைக்கப்படுகிறார்.

படத்தில் மொத்தமே நான்கு (முக்கிய) கேரக்டர்கள்தான். நாயகன் நாயகியை தவிர்த்து பக்கத்து வீட்டு ஆன்ட்டியாக புதுமுக நடிகை ஸ்வப்னா. அவரை தேர்ந்தெடுத்ததில் கெளதமின் ரசனையை வியக்கிறேன். நல்ல அழகு, எனினும் அந்த அழகு சிதைக்கப்படுகிறது. அப்புறம், விஜய் என்னும் போலீஸ் அதிகாரியின் கேரக்டரில் புதுமுக நடிகர் தேவா. ஆரம்பத்தில் வரும் சில காட்சிகள் அவர் புத்திசாலி போலீஸ் என்று கூறுகிறது. ஆனால் இறுதிவரை அந்த புத்திசாலித்தனத்திற்கு வேலை கொடுக்கப்படவில்லை.

ஒரே ஒரு காட்சியில் சமந்தா. படத்தில் அவருக்கு கொடுக்கப்படாத முக்கியத்துவத்தை எனது பதிவில் கொடுத்து ஆறுதலடையவே மேலே இருக்கும் ஸ்டில்.

படத்தில் பாடல்களோ, பிண்ணனி இசையோ இல்லை. ஆனாலும் அது ஒரு குறையாக தெரியவில்லை. சிறப்பு சப்தங்களை வைத்து அந்த காலியிடங்களை கச்சிதமாகவே நிரப்பியிருக்கிரார்கள். சிறப்பு சப்தங்கள் வேலைப்பாடுகள் செய்தவரின் பெயர் ரெங்கநாதன் என்று திரையில் பார்த்ததாக ஞாபகம்.

ஈரம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா இந்தப்படத்திற்கும் ஒளிப்பதிவியிருக்கிறார். ரெண்டும் த்ரில்லர் கதை என்பதாலோ என்னவோ அந்தப்படத்தின் பாதிப்பு ஆங்காங்கே ஒளிப்பதிவில் தெரிகின்றன. எடிட்டிங்கை சில பேர் சிலாகிக்கலாம், ஆனால் எனக்கென்னவோ பிடிக்கவில்லை. இந்த படத்திற்கு இரண்டு மணிநேரம் தேவையே இல்லை. ஒன்றரை மணிநேரத்திலேயே கதை சொல்லி முடித்திருக்கலாம்.

வசனங்கள் மிகவும் குறைவே. அடிக்கடி பீப் ஒலிகள் கேட்கின்றன. (புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்). சில இடங்களில் ஷார்ப்பான வசனங்கள். உதாரணத்திற்கு சமூக வலையமைப்பு தளங்களின் மறுபக்கத்தை விவரிக்கும் வசனம்.

படத்தின் ப்ளஸ்:
- சொல்லப்படாத கதை என்று சொல்லமாட்டேன். எனினும், ஒரு புதிய உணர்வை கொடுத்தது. தொடர்ந்து மதுரக்காரைங்க, கோவில் திருவிழா டைப் படங்கள் பார்த்ததில் இருந்து ஒரு ரிலீப்.
மற்றபடி வேறொன்றும் சொல்வதற்கில்லை...

படத்தின் மைனஸ்:
- வக்கிரமான காட்சியமைப்புகள். இத்தனைக்கும் இன்னும் நிறைய வக்கிரங்களை இயக்குனர் கேமராவின் கோணத்தில் காட்டாமல் புரிய வைத்திருக்கிறார். அப்படி இருந்தும் ரொம்ப மோசம். அதிலும் முதல்பாதியில் செக்ஸ், செக்ஸ், செக்ஸ்.
- இசை, பாடல்கள், சண்டைக்காட்சிகள் இப்படி எதுவுமே இல்லாதது புதிய முயற்சிதான் என்றாலும் ஒரு கமர்ஷியல் சினிமாவாக தோற்றுப்போகிறது.
- நிறைய லாஜிக் மீறல்கள். உதாரணத்திற்கு பட்டணத்து பக்கத்துவீட்டுப்பெண் இப்படியெல்லாம் வலிய வந்து பரிவு காட்டுவார் என்பதில் உடன்பாடில்லை.
- ஏகப்பட்ட குழப்பங்கள். முக்கியமாக, மீனாக்ஷி அம்மா கேரக்டர் எப்படிப்பட்டது என்பது இறுதிவரைக்கும் விளங்கவே இல்லை.

எனக்குப் பிடித்த காட்சி:
உண்மையில் அப்படி எந்தக் காட்சியும் இல்லை என்றாலும் வீரா மீனாட்சி அம்மாவை பலவந்தப்படுத்தி வன்புணரும் காட்சியில் அந்த நடிகையின் நடிப்பு, முக பாவனைகள் பிரமிக்க வைத்தது.

வெர்டிக்ட்:
படம் முழுவதும் முடிந்ததும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களைப் பற்றி இரண்டு ஸ்லைட் காட்டினார்கள். (மெசேஜ் சொல்றாராம்). அந்த கருத்தை சொல்வதற்கு இரண்டு மணிநேரம் கருமத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். கெளதம் மேனன் தான் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் அதை இப்படித்தான் தவறான பாதையில் நிரூபிக்க வேண்டுமா...? இயக்குனர் தனது ரசனையையும், மூளை பலத்தையும் குப்பையில் கொண்டுபோய் கொட்டியிருக்கிறார். மாஸ், கிளாஸ் இரண்டையும் முயன்று இரண்டிலும் பரிதாபமாக தோற்றிருக்கிறார் இயக்குனர்.

எதிர்பார்க்கப்படும் ஆவி மார்க்: 37, குமுதம் ரேட்டிங்: ஓகே.

டிஸ்கி: Border Town படத்திற்கும் இந்தப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவேளை இருந்தால் அதுவும் எதேச்சையாக அமைந்ததாகவே இருக்கும். மற்றபடி ஏற்கனவே நிறைய தமிழ் சினிமாக்களில் பார்த்த சைக்கோத்தனங்கள் இருக்கின்றன.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

52 comments:

King Viswa said...

பதிவின் தலைப்பே சொல்லிவிட்டது. வேறென்ன சொல்ல.

புத்திசாலிதனமான ஒரு கேள்வி. அந்த நான்காவது நாய் என்ன ஆனது?


கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

சக்தி கல்வி மையம் said...

உங்க விமர்சனத்திற்கும் , சி.பி.எஸ் விமர்சனத்திற்கும் ஆறு வித்தியாசம் இருக்கு...
மொத்தத்தில் படம் பார்க்க சொல்றீங்களா? வேணாங்கிறீங்களா?

See.,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_18.html

Unknown said...

இப்போதைக்கு ஓட்டு பிறகு வந்து படிக்கிறேன்

Unknown said...

அப்ப இதுவும் ஊத்திக்கிச்சா?

Speed Master said...

அப்பாடா பணம் மிச்சம்

மயில் றெக்க said...

இதே படத்தை வெளி நாட்டுக்காரன் எவனாவது எடுத்திருந்தான்னா.
ஆஹோ ஓஹோன்னு பாராட்டி தள்ளியிருப்பீங்க தமிழ்ல இந்த மாதிரி படம் எடுக்க நம்ம இயக்குனர்களுக்கு ஏன் துணிச்சல் இல்லைன்னு கேள்வி கேப்பீங்க.
உங்களை மாதிரி ஆட்களுக்காகவே வேற ஒரு SET OF STYLE படம் எடுத்தா
இப்பிடி விமர்சனம் பண்ணுவீங்க.
நீங்க தெரிஞ்சு வைத்திருக்கிற உலக அறிவுகளின் ஊடே இந்த படம் வராமல் இருந்திருக்கலாம் அதுக்காக
நமக்கு தெரியாத புரியாத ஒரு விஷயத்தை அறவே ஒதுக்கும் பழக்கம் சரியா?
எப்பவுமே நிதர்சனத்தை ஒத்துக்கொள்ள முடியாதுதான். (மாட்டீங்க)

நீங்க POPCORN கொரிச்சிகிட்டே படம் பார்த்திருப்பீங்க போல

Anonymous said...

//வக்கிரமான காட்சியமைப்புகள். இத்தனைக்கும் இன்னும் நிறைய வக்கிரங்களை இயக்குனர் கேமராவின் கோணத்தில் காட்டாமல் புரிய வைத்திருக்கிறார். அப்படி இருந்தும் ரொம்ப மோசம். அதிலும் முதல்பாதியில் செக்ஸ், செக்ஸ், செக்ஸ்//

I am Escape. 'சூடான' விமர்சனத்திற்கு நன்றி!

பொன் மாலை பொழுது said...

ரொம்ப தான் நெஞ்சழுத்தம் உங்களுக்கு புதுசா தமிழ் படம் பாத்துட்டு விமர்சனம் எழுது அளவுக்கு.
எனகெல்லாம் அஞ்சு நிமிழம் கூட இருக்கமுடியாது. எப்படித்தான் சமாளிகிறீன்களோ!!

சுதர்ஷன் said...

நான் படத்தை பார்த்திட்டே வாறன் ..கவுதமின் முயற்சிக்காக :)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்

முத்துசிவா said...

//விக்கி உலகம்

ungalukkagave eluthappatta pathippu thaan


கடுப்பேத்துறார் மை லார்ட்
http://muthusiva.blogspot.com/2011/01/blog-post_26.html

உளவாளி said...

நான் இத ஏதுக மாட்டேன். கண்டிப்பா ஆங்கில படத்திற்கு இணையான வக்கிரம் இருக்காது.. மெல்லும் இது உலகில் நடக்காதது அல்ல.. இத ஏதுக முடியலனா அப்போ மதுரகாரங்க படத்தையே பாக்கவேண்டியதுதான்...

Ram said...

என்னமாதிரி போட்டாலும் படத்த பாப்பேன்.. 'தல'ய வச்சி படமெடுக்காம போயிருக்கலாம்.. ஆனா நான் கௌதமின் ரசிகன்..

சி.பி.செந்தில்குமார் said...

>>
வசனங்கள் மிகவும் குறைவே. அடிக்கடி பீப் ஒலிகள் கேட்கின்றன. (புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்).

ஹா ஹா சென்சார் கட்டிங்கா?

சி.பி.செந்தில்குமார் said...

>>>எதிர்பார்க்கப்படும் ஆவி மார்க்: 37, குமுதம் ரேட்டிங்: ஓகே.

கரெக்ட் தான். ஆனால் கவுதம் மேல் விகடனுக்கு சாஃப்ட் கார்னர் உண்டு.. பார்ப்போம்

சி.பி.செந்தில்குமார் said...

காலைல மெசேஜ் அனுப்பினீங்க. ரிப்ளை பண்ணூனேன். ரீ ரிப்ளை பண்ணவே இல்லையே,,?

Unknown said...

நடு நிசி (இசி) நாய்கள் !
இதுக்கு, இந்தக் கதை தேவலை
http://writervisa.blogspot.com/2011/02/blog-post.html

மோகன்ஜி said...

நன்றி பிரபாகர். சேமித்த டிக்கெட் பணத்தை மணியார்டர் செய்யவா?!

Chitra said...

Thank you for the warning... I will skip this movie..

ஆதவா said...

படத்தோட கதை இன்னும் படிக்கலை!!! படம் பார்த்துட்டு சொல்றேங்க.

கார்த்தி said...

இன்னும் பாக்கல பாத்திட்டு வந்து முழுவதும் வாசிக்கிறன்!!

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

மிக ஆழமான ஆனால் அவசரமாக பதிந்த தோற்றம் பதிவில் நிற்கிறது .
ஆனாலும் வலுவான பட்டு தெறிக்கும் வெடி .
இயக்குனரின் முயற்சிக்கு ஒரு சபாஷ் மிஸ்ஸிங் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கௌதம் மேனன் படங்கள்ல எப்பவுமே ஒரு சாஃப்ட் டச், ரொமான்ஸ் இருக்கும் (காக்க காக்கவுல கூட, ரொமான்ஸ் பிரமாதமா வந்திருக்கும்), ஒருவேளை அதை முற்றிலுமாக மாற்றிவிட்டு வேறு விதமா எடுக்க முயற்சி பண்ணி இருப்பாருன்னு நினைக்கிறேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாயகி சுகன்யாவாக சமீரா ரெட்டி. நாயகி பெயரை சுகன்யா என்று வைத்ததில் எனக்கு பர்சனலாக மிகவும் வருத்தம். (ஏன் என்றெல்லாம் கேட்கப்பிடாது...) ////////

கேட்கலீங்கோ..... !!!

ப்ரியமுடன் வசந்த் said...

பிரபா சின்ன ரிக்வெஸ்ட்

நல்ல விமர்சனத்தை தலைப்பு கெடுப்பது போன்று தோன்றுகிறது..

ஒகேவா..பார்த்து எழுதுடா...

Jayadev Das said...

//எட்டு வயதில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படும் ஒரு சிறுவன். அதுவும் அவரது தந்தையால் உட்படுத்தப்படுகிறான். //இதுக்கு மேல நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம், படத்தை திருட்டு CD யில கூட நான் பார்க்கப் போவதில்லை. // வீரா மீனாட்சி அம்மாவை பலவந்தப்படுத்தி வன்புணரும் காட்சியில் அந்த நடிகையின் நடிப்பு, முக பாவனைகள் பிரமிக்க வைத்தது.// ஆஹா ... எதையெல்லாம் ரசிக்கிராங்கையா....ஐயோ... ஐயோ....

Dupukku said...

your comments reflect your split personality. whats your conclusion abt the film?.

Riyas said...

present.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஜாக்கி சேகருக்கும், ஒங்கள விமர்சனத்திற்கும் நிறைய மாற்றங்கள் உள்ளனவே? அவர் படம் ஓரளவு தேறும் என்பது போல எழுதியுள்ளார். நீங்கள் சரியில்லை என்பது போல எழுதியுள்ளீர்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

/////நாயகி சுகன்யாவாக சமீரா ரெட்டி. நாயகி பெயரை சுகன்யா என்று வைத்ததில் எனக்கு பர்சனலாக மிகவும் வருத்தம். (ஏன் என்றெல்லாம் கேட்கப்பிடாது...) ////////

கேட்கலீங்கோ..... !!!


ஆ..... எனக்கு தெரிஞ்சாகனும்! சும்மா சொல்லுங்க பாஸ்!!

பாலா said...

கவுதம் படத்தில் டீசன்சியை எப்படி எதிர் பார்க்க முடியும். ஹை கிளாஸ் ஆங்கில கெட்ட வார்த்தைகள் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். சரிதானே?

எப்படி இருந்தாலும் படத்தை பார்ப்பது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன தடுக்காதீங்க...

Unknown said...

ஓகே ஓகே

pichaikaaran said...

பிரபல இயக்குனர எடுத்தாலும், ப்ளூ பில்ம் , தவறுதான் என ஆணித்தரமாக சொல்லும் நேர்மை பிடித்து இருக்கிறது

Philosophy Prabhakaran said...

@ King Viswa, sakthistudycentre-கருன், விக்கி உலகம், இரவு வானம், Speed Master, திருடன், ! சிவகுமார் !, கக்கு - மாணிக்கம், S.Sudharshan, முத்துசிவா, உளவாளி, தம்பி கூர்மதியன், சி.பி.செந்தில்குமார், ஆகாயமனிதன்.., மோகன்ஜி, Chitra, ஆதவா, கார்த்தி, krishnamoorthy, பன்னிக்குட்டி ராம்சாமி, ப்ரியமுடன் வசந்த், Jayadev Das, Dupukku, Riyas, தமிழ்வாசி - Prakash, மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன், பாலா, நா.மணிவண்ணன், பார்வையாளன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ King Viswa
// புத்திசாலிதனமான ஒரு கேள்வி. அந்த நான்காவது நாய் என்ன ஆனது? //

இந்தமாதிரியெல்லாம் ஆழமா யோசிக்கப்பிடாது...?

அப்புறம் இந்த கேள்வியை படிக்கும்போதுதான் எனக்கு ஒரு கேள்வி தோணுது...? யுத்தம் செய் படத்தின் க்ளைமாக்சில் போலீஸ் அதிகாரியின் மொபைலில் "Daddy Calling..." என்று வருகிறதே... என்ன காரணம்...?

// கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர் //

காமிக்ஸ் மீது அதிக ஈடுபாடு இல்லாததால் வருவதில்லை... தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...

Philosophy Prabhakaran said...

@ sakthistudycentre-கருன்
// உங்க விமர்சனத்திற்கும் , சி.பி.எஸ் விமர்சனத்திற்கும் ஆறு வித்தியாசம் இருக்கு...
மொத்தத்தில் படம் பார்க்க சொல்றீங்களா? வேணாங்கிறீங்களா? //

யாரு நடுநிசி நாய்கள் விமர்சனம் போட்டாலும் இதே பின்னூட்டம் தான் போல... வெளங்கிடும்...

Philosophy Prabhakaran said...

@ திருடன்
யார் விமர்சனம் போட்டாலும் இதே பின்னூட்டத்தை காப்பி பேஸ்ட் செய்வீர்களோ...

// இதே படத்தை வெளி நாட்டுக்காரன் எவனாவது எடுத்திருந்தான்னா.
ஆஹோ ஓஹோன்னு பாராட்டி தள்ளியிருப்பீங்க தமிழ்ல இந்த மாதிரி படம் எடுக்க நம்ம இயக்குனர்களுக்கு ஏன் துணிச்சல் இல்லைன்னு கேள்வி கேப்பீங்க. //

நீங்கள் border town படத்தை மனதை வைத்துக்கொண்டு கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்... border town, y mama tu tambien எந்த படமாக இருந்தாலும் அதிலொரு மெசேஜ் இருக்கும்... இந்தப்படத்தில் என்ன இருக்கிறது... கடைசியில் இரண்டு ஸ்லைட் போடுகிறார்கள் என்று தயவு செய்து சொல்லாதீர்கள்... அதைச் சொல்வதற்கு படமே தேவையில்லை தொலைக்காட்சி விளம்பரமே போதுமானது...

// நமக்கு தெரியாத புரியாத ஒரு விஷயத்தை அறவே ஒதுக்கும் பழக்கம் சரியா? //

உங்களுக்கு ரொம்ப புரிஞ்சிடுச்சுன்னா உங்க தளத்துல படம் அருமையா இருக்குன்னு ஒரு விமர்சனம் போடுங்க...

நீங்க முதலில் படமே பார்க்கலைன்னு நினைக்கிறேன்... முதல்ல போய் படத்தை பார்த்துட்டு வாங்க...

Philosophy Prabhakaran said...

@ கக்கு - மாணிக்கம்
// ரொம்ப தான் நெஞ்சழுத்தம் உங்களுக்கு புதுசா தமிழ் படம் பாத்துட்டு விமர்சனம் எழுது அளவுக்கு.
எனகெல்லாம் அஞ்சு நிமிழம் கூட இருக்கமுடியாது. எப்படித்தான் சமாளிகிறீன்களோ!! //

காசு கொடுத்து டிக்கட் வாங்கினதுக்கு இது கூட செய்யலைன்னா எப்படி...

Philosophy Prabhakaran said...

@ உளவாளி
// கண்டிப்பா ஆங்கில படத்திற்கு இணையான வக்கிரம் இருக்காது.. //

இல்லைதான்... ஆனால் இதனால் சொல்லவரும் கருத்து என்ன என்பதே முக்கியம்...

// மெல்லும் இது உலகில் நடக்காதது அல்ல.. //

இருக்கட்டுமே... உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சம்பவத்தை படம் பிடித்து காட்டியதில் என்ன சாதித்துவிட்டார் இயக்குனர்... இன்னும் எத்தனையோ கதைக்களங்கள் காத்திருக்கும்போது ஏன் இப்படி ஒரு படத்தை எடுக்கவேண்டும்...

// இத ஏதுக முடியலனா அப்போ மதுரகாரங்க படத்தையே பாக்கவேண்டியதுதான்... //

இனி அதைத்தான் செய்யவேண்டும் போல...

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன்
// என்னமாதிரி போட்டாலும் படத்த பாப்பேன்.. 'தல'ய வச்சி படமெடுக்காம போயிருக்கலாம்.. ஆனா நான் கௌதமின் ரசிகன்.. //

ம்ஹூம்... அதுக்கு மேல உங்க இஷ்டம்...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// ஹா ஹா சென்சார் கட்டிங்கா? //

ஆமாம் தல சேம் ப்ளட்...

// கரெக்ட் தான். ஆனால் கவுதம் மேல் விகடனுக்கு சாஃப்ட் கார்னர் உண்டு.. பார்ப்போம் //

இந்த முறையுமா...?

// காலைல மெசேஜ் அனுப்பினீங்க. ரிப்ளை பண்ணூனேன். ரீ ரிப்ளை பண்ணவே இல்லையே,,? //

டைப் பண்றதுல பிஸி ஆயிட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ மோகன்ஜி
// சேமித்த டிக்கெட் பணத்தை மணியார்டர் செய்யவா?! //

ஆஹா இது நல்லா இருக்கே...

Philosophy Prabhakaran said...

@ krishnamoorthy
// மிக ஆழமான ஆனால் அவசரமாக பதிந்த தோற்றம் பதிவில் நிற்கிறது . //

ஆம்... கொஞ்சம் அவசரமாகவே எழுதினேன்...

// இயக்குனரின் முயற்சிக்கு ஒரு சபாஷ் மிஸ்ஸிங் . //

கெளதம் மேனன் தான் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் அதை இப்படித்தான் தவறான பாதையில் நிரூபிக்க வேண்டுமா...? இயக்குனர் தனது ரசனையையும், மூளை பலத்தையும் குப்பையில் கொண்டுபோய் கொட்டியிருக்கிறார்.

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// கௌதம் மேனன் படங்கள்ல எப்பவுமே ஒரு சாஃப்ட் டச், ரொமான்ஸ் இருக்கும் (காக்க காக்கவுல கூட, ரொமான்ஸ் பிரமாதமா வந்திருக்கும்), ஒருவேளை அதை முற்றிலுமாக மாற்றிவிட்டு வேறு விதமா எடுக்க முயற்சி பண்ணி இருப்பாருன்னு நினைக்கிறேன்....! //

ஆமாம் அதுக்காக இப்படியா...

Philosophy Prabhakaran said...

@ ப்ரியமுடன் வசந்த்
// பிரபா சின்ன ரிக்வெஸ்ட்

நல்ல விமர்சனத்தை தலைப்பு கெடுப்பது போன்று தோன்றுகிறது..

ஒகேவா..பார்த்து எழுதுடா... //

தலைப்பை படித்ததும் பாசிடிவ் விமர்சனமா நெகடிவ் விமர்சனமா என்று புரியக்கூடாது என்று சொல்லுகிறீர்கள்... அப்படித்தானே...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// ஆஹா ... எதையெல்லாம் ரசிக்கிராங்கையா....ஐயோ... ஐயோ.... //

நீங்க வேற... அதை ரசிக்கலை... அந்த நடிப்பை பிரமித்தேன்...

Philosophy Prabhakaran said...

@ Dupukku
// your comments reflect your split personality. whats your conclusion abt the film?. //

அதைத்தான் வெர்டிக்ட் பத்தியில் சொல்லியிருக்கேனே...

படம் முழுவதும் முடிந்ததும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களைப் பற்றி இரண்டு ஸ்லைட் காட்டினார்கள். (மெசேஜ் சொல்றாராம்). அந்த கருத்தை சொல்வதற்கு இரண்டு மணிநேரம் கருமத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். கெளதம் மேனன் தான் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் அதை இப்படித்தான் தவறான பாதையில் நிரூபிக்க வேண்டுமா...? இயக்குனர் தனது ரசனையையும், மூளை பலத்தையும் குப்பையில் கொண்டுபோய் கொட்டியிருக்கிறார். மாஸ், கிளாஸ் இரண்டையும் முயன்று இரண்டிலும் பரிதாபமாக தோற்றிருக்கிறார் இயக்குனர்.

Philosophy Prabhakaran said...

@ தமிழ்வாசி - Prakash
// ஜாக்கி சேகருக்கும், ஒங்கள விமர்சனத்திற்கும் நிறைய மாற்றங்கள் உள்ளனவே? அவர் படம் ஓரளவு தேறும் என்பது போல எழுதியுள்ளார். நீங்கள் சரியில்லை என்பது போல எழுதியுள்ளீர். //

நான் அவர் அளவிற்கு பெரிய அறிவுஜீவி இல்லைங்கோ...

Philosophy Prabhakaran said...

@ மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன்
// ஆ..... எனக்கு தெரிஞ்சாகனும்! சும்மா சொல்லுங்க பாஸ்!! //

ரொம்பவும் விருப்பப்பட்டால் மெயில் அனுப்புகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ பாலா
// சரிதானே? //

சரிதான்....

// எப்படி இருந்தாலும் படத்தை பார்ப்பது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன தடுக்காதீங்க... //

பாருங்க... உங்க பர்சப்ஷனையும் எதிர்நோக்குகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// பிரபல இயக்குனர எடுத்தாலும், ப்ளூ பில்ம் , தவறுதான் என ஆணித்தரமாக சொல்லும் நேர்மை பிடித்து இருக்கிறது //

இது ப்ளு பிலிம் என்று நான் சொல்லவே இல்லை... ஒருவேளை நீங்கள் ப்ளு பிலிம் பார்த்ததே இல்லை போல...

அதுசரி, சாரு இந்தப்படத்திற்கு ஆதரவாக எழுதியிருந்தாரே... நீங்கள் மாற்றிச் சொல்கிறீர்கள்...

Harini Resh said...

பிரபா உங்கள் விமர்சனம் இப்போ தான் பார்த்தேன் முன்னமே பார்த்த்ருந்தால் தியட்டரில் 2 மணித்தியாலம் செலவழித்திருக்க மாட்டேன்

என்னவோ உங்கள் அழசல் சரியாக தன் தோன்றுகிறது

நன்றி

KARATAN said...

I had even been experienced but happen on oneday THE WHOLE THEATRE I AM THE ONLY AUDIEN TO WATCH THAT RUBBISH BUCKET(NADU NEESEE NAAAAAAAAAAAAAAAAIIIIIIIIIKKKKKKAAAALLLLLLLLLLL.....CAN NOT FIND THE WORD TO SCOLD .ITHUVUM KADANTHU POHUM.