29 March 2011

பவர் ஸ்டார் சீனிவாசனின் லத்திகா விமர்சனம் - விரைவில்

நாள்: 28.03.2011

நேரம்: காலை 7.30 மணி

***** தொலைபேசி உரையாடல் *****

நான்: ஹலோ மச்சி... தூங்கிட்டு இருக்கியா...

எதிர்முனை: இல்லடா வேலைக்கு கிளம்பிட்டு இருக்கேன்.

நான் (மனதிற்குள்): தப்பாச்சே...

நான்: லீவ் போட்டுட்டு வா மச்சி... படத்துக்கு போகலாம்...

எதிர்முனை: டேய் சும்மா இருடா...

நான்: ஆமாம்டா... நான் சும்மாதான் இருக்கேன்... அதனாலதான் கூப்பிடுறேன்...

எதிர்முனை: ஆபீஸ் போகலைன்னா பிரச்னை ஆயிடும்டா...

நான்: நீ இப்போ லீவ் போடலைன்னா அதைவிட பெரிய பிரச்சனை ஆயிடும் மச்சி... நீ எல்லாம் ஒரு நண்பனா...

எதிர்முனை: இப்ப என்ன உனக்கு லீவ்தானே போடணும்.... சரி போடுறேன்... போதுமா...

நான்: நண்பேண்டா...

எதிர்முனை: நீ சரியான $%&* டா... அதுசரி எந்த படத்துக்கு போறோம்...

நான்: நீ நேர்ல வா மச்சி சொல்றேன்... சஸ்பென்ஸ்...

**************************************************

நேரம்: காலை 11 மணி

நண்பன்: டேய்... இப்பயாவது எந்த படத்துக்கு போறோம்ன்னு சொல்லித்தொலைடா...

நண்பன்: இதுக்கு ஏன்ப்பா நீ இத்தனை முறை திரும்புற...? இதுக்கு அந்த சாமியாரே தேவலை போல இருக்கே...

நான்: இல்ல மச்சி... அது உனக்கு கொஞ்சம் சஸ்பென்சா இருக்கட்டும்ன்னு பார்த்தேன்... வெயிட் பண்ணு...

நண்பன்: நீ மட்டும் இப்ப சொல்லலைன்னா என் தலையே வெடிச்சிடும்...

நான் (மனதிற்குள்): நான் சொன்னாலும் அதேதான் நடக்கும்... பரவாயில்லையா...

நண்பன் (திரையரங்க இணையதளத்தில் செக் செய்துக்கொண்டே): ஒருவேளை தூங்கா நகரமா...? அந்தப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துட்டேனேடா...

நான் (மனதிற்குள்): இது தூங்கா நரகம் மச்சி...

நண்பன்: நான் பாட்டுக்கு நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன்... ஏதாவது பதில் சொல்லேண்டா...

நான்: டேய் சஸ்பென்ஸ்ன்னு சொன்னா உனக்கு பொறுக்காதே... கொஞ்ச நேரம் மூடிக்கிட்டு இரு... தியேட்டருக்கு போனதும் உனக்கே தெரியும்...

நண்பன்: சரி... போய்த்தொலை...

**************************************************

சென்னை அபிராமி மெகா மால் வாசலில்...

நேரம்: மாலை 3 மணி

நான் (தானைத்தலைவர் பவர் ஸ்டார் சீனிவாசனின் லத்திகா திரைப்பட பேனரை காட்டியபடி): மச்சி... இந்தப்படத்துக்கு தான் நாம போகப்போறோம்...

நண்பன் (ஜெர்க்காகி): மச்சி... ஆபீஸ்ல இருந்து கால் வந்துச்சு... நான் அவசரமா போகணும்...

நான்: ஆபீஸ்ல இருந்து கால் மட்டும்தான் வரும்... இப்ப என்கிட்ட இருந்து செருப்பு வரும்... எப்படி வசதி...?

நண்பன்: டேய்... சொன்னாக்கேளுடா இந்தப்படத்துக்கு எல்லாம் எவனும் போகமாட்டான்...

நான்: அப்ப நாம போவோம்...

நண்பன்: ஒரு பெரிய மனுஷனை இப்படி கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போறது அவ்வளவு நல்லா இல்லை...

நான்: சொல்லிக் கூப்பிட்டா நீ வரமாட்ட... சொல்லாம கூப்பிட்டதால தான் நீ வந்த...

நண்பன்: நீ யா...?

நான்: ஆமாம்யா...

நண்பன்: யா வா...?

நான்: ஆமாம்டா...

நண்பன்: டா வா...?

நான்: கழுதை வயசாகுது லத்திகா படம் பார்க்க பயப்படுற... உனக்கென்ன மரியாதை...

நண்பன்: நீ கெட்டவார்த்தைல திட்டினாலும் நான் உள்ளே வரமாட்டேன்...

நண்பனை வலுக்கட்டாயமாக நான் இழுத்துச்செல்ல...

நண்பன்: போயிறலாம் மாப்பு... உள்ளே இல்ல வெளியே...

**************************************************

நேரம்: மாலை 3.30 மணி

ஒருவழியாக பல தடைகளை கடந்து திரையரங்கினுள் சென்று அமர்ந்தோம்... மற்றவை விமர்சன வடிவில் விஷமாக கூடிய விரைவில்...

லத்திகா படத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு அறுக்கப்பட்ட ஆடு:
ஹிஸ்டடின்னா வரலாறு தானே...

டிஸ்கி: இந்தமுறை "மெட்ராஸ் பவன்" சிவக்குமார் ஆடு தப்பித்துக்கொண்டது... ஆனந்தத்தொல்லை வெளிவரும் வேளையில் அறுத்துட வேண்டியதுதான்...

Post Comment

46 comments:

Unknown said...

வாங்க நண்பா வாங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா பிரபாவுக்கு எப்பவும் நக்கல் தான்

ராஜகோபால் said...

வாழ்த்துகள் பல நாள் பிறகுவந்தமைக்கு

சி.பி.செந்தில்குமார் said...

>>நான்: ஆபீஸ்ல இருந்து கால் மட்டும்தான் வரும்... இப்ப என்கிட்ட இருந்து செருப்பு வரும்... எப்படி வசதி...?


ஹா ஹா செம நக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

>>நான்: கழுதை வயசாகுது லத்திகா படம் பார்க்க பயப்படுற... உனக்கென்ன மரியாதை...

சந்திரமுகி?

சி.பி.செந்தில்குமார் said...

>>ஹிஸ்டடின்னா வரலாறு தானே...

ஹிஸ்டரின்னா?

சி.பி.செந்தில்குமார் said...

சரி சரி.. பிரபா.. பதிவுலகமே டல் அடிக்குது.. ஏதாவது வம்பு சண்டை இருந்தா கொண்டு வாங்க.. கும்மலாம். ஹி ஹி

டக்கால்டி said...

Present and welcome back...

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துகள் .

settaikkaran said...

ரொம்ப நாளாச்சு உங்க இடுகையைப்பார்த்து! மகிழ்ச்சி!

//இது தூங்கா நரகம் மச்சி...//
ஹிஹி! குசும்பு! :-)

settaikkaran said...

//நான்: ஆபீஸ்ல இருந்து கால் மட்டும்தான் வரும்... இப்ப என்கிட்ட இருந்து செருப்பு வரும்... எப்படி வசதி...?//

ஹாஹா! ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல...!

settaikkaran said...

எவ்வளவோ பண்ணிட்டீங்க. இந்தப்படத்தைப் பார்க்க மாட்டீங்களா? ஆல் தி பெஸ்ட்! :-)

Unknown said...

இதுக்கெல்லாம் காரனம் சி.பி தான் ..

ADMIN said...

மறு பிரவேசம்.. வாங்க.. வாங்க.. நான் ரெடி..

ADMIN said...

போர் அடிக்குது இல்லியா.. அதான் அப்படி சொன்னேன்..! நீங்க பாட்டுக்கு எழுதுங்க.. நாங்க பாட்டுக்கு கலாய்க்கிறோம்..!!

செங்கோவி said...

வெல்கம் பேக்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்கள் அண்ணன், நாளைய சூப்பர் ஸ்டார், நாளை மறுநாளைய முதல்வர், பவர் ஸ்டார், டாகுடர் சீனி அவர்களின் திரைக்காவியத்தை இனிதே பார்த்துவிட்டு விமர்சனம் எழுதும் பிரபாகரன் அவர்களை வாழ்த்துகிறோம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன பிரபா ஆளையே காணோம்? எங்கே போயிருந்தீங்க...? டைம் கேப்ப பாத்தா ஏதோ ரிமாண்டுல இருந்துட்டு வந்த மாதிரி தெரியுதே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
சரி சரி.. பிரபா.. பதிவுலகமே டல் அடிக்குது.. ஏதாவது வம்பு சண்டை இருந்தா கொண்டு வாங்க.. கும்மலாம். ஹி ஹி///////

அடடே ஒரு ஆடே கெடாவெட்டுக்கு ஆசைப்படுதே.....?

Unknown said...

//ஒருவழியாக பல தடைகளை கடந்து திரையரங்கினுள் சென்று அமர்ந்தோம்... மற்றவை விமர்சன வடிவில் விஷமாக கூடிய விரைவில்...//
அய்யய்யோ! :-)

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

சரி சரி.. பிரபா.. பதிவுலகமே டல் அடிக்குது.. ஏதாவது வம்பு சண்டை இருந்தா கொண்டு வாங்க.. கும்மலாம். ஹி ஹி............

//////////////////////\

பிரபா அடுத்த ஆடு ரெடி ..................

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வாங்க வாங்க! எங்க போயிருந்தீங்க இம்புட்டு நாளா?

Speed Master said...

வாங்க வாங்க

குறையொன்றுமில்லை. said...

ஹா, ஹா, ஹா, இதைத்தவிர வேர எ
ந்ன சொல்ல?

அமுதா கிருஷ்ணா said...

வடபழனி கமலாவில் ஃப்ரீ ஷோவிற்கு கூவி கூவி ஆட்களை பிடித்துக் கொண்டு இருந்தனர்.பயந்து போய் எதிர்பக்கமாய் ரோடு க்ராஸ் செய்து ஓடி விட்டேன்.

Sivakumar said...

திரும்பி வந்தாலும் குசும்பு மட்டும் குறையல பிரபா. என்னது நான் தப்பிச்சிட்டேனா? சென்ற சனிக்கிழமை ஆறு பேரை கஷ்டப்பட்டு லத்திகா படம் பார்க்க தயார் செய்து வைத்திருந்தேன். இறுதி நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார்கள். விடமாட்டேன். இந்த வாரம் படம் ஓடினால்(?) பார்த்தே தீருவோம்.

-பவர் ஸ்டார் தலைமை ரசிகர் மன்றம்.

middleclassmadhavi said...

வருக வருக!

Ram said...

பிரபா திரும்ப பதிவு வந்திடுச்சே.!!

உங்கள பத்திய பதிவு போட்டுடவேண்டியது தான்..!!

அறுக்கப்பட்ட ஆடுக்கு என் வருத்தத்தை தெரிவித்துவிடுங்கள்..

pichaikaaran said...

Welcome back

ம.தி.சுதா said...

வாங்க வாங்க ஆவலோட எதிர் பார்த்திருக்கோம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரொம்ப நாள் கழிச்சு வந்தாப்ல தெரியுது...வெல்கம் பிரபா

எனது வலைப்பூவில்: சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ

தூயவனின் அடிமை said...

வாங்க நண்பரே.

Anonymous said...

என்ன புது வேலை கிடைச்சிருச்சா .... ஆளையே காணோம் !!!

vim said...

Welcome Back...

vim said...

Welcome Back...

மோகன்ஜி said...

நல்லா கலாய்க்கிறீங்க பிரபா!

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம், சி.பி.செந்தில்குமார், ராஜகோபால், டக்கால்டி, இராஜராஜேஸ்வரி, சேட்டைக்காரன், கே.ஆர்.பி.செந்தில், தங்கம்பழனி, செங்கோவி, பன்னிக்குட்டி ராம்சாமி, ஜீ..., அஞ்சா சிங்கம், ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி, Speed Master, Lakshmi, அமுதா கிருஷ்ணா, ! சிவகுமார் !, middleclassmadhavi, தம்பி கூர்மதியன், பார்வையாளன், ♔ம.தி.சுதா♔, தமிழ்வாசி - Prakash, இளம் தூயவன், இக்பால் செல்வன், vim, மோகன்ஜி

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// சரி சரி.. பிரபா.. பதிவுலகமே டல் அடிக்குது.. ஏதாவது வம்பு சண்டை இருந்தா கொண்டு வாங்க.. கும்மலாம். ஹி ஹி //

ஏன் இந்த கொலைவெறி...??? என்னையும் அரசியல்வாதி ஆக்கிடாதீங்க....

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// எங்கள் அண்ணன், நாளைய சூப்பர் ஸ்டார், நாளை மறுநாளைய முதல்வர், பவர் ஸ்டார், டாகுடர் சீனி அவர்களின் திரைக்காவியத்தை இனிதே பார்த்துவிட்டு விமர்சனம் எழுதும் பிரபாகரன் அவர்களை வாழ்த்துகிறோம்....! //

அப்படியே மவுன்ட் ரோடு பக்கம் ஒரு அறுபது அடி கட்-அவுட் இறக்கிடுங்க...

// என்ன பிரபா ஆளையே காணோம்? எங்கே போயிருந்தீங்க...? டைம் கேப்ப பாத்தா ஏதோ ரிமாண்டுல இருந்துட்டு வந்த மாதிரி தெரியுதே....? //

தனி இடுகை போடுறேன்...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// பிரபா அடுத்த ஆடு ரெடி .................. //

அந்த ஆடு மறுபடியும் சென்னைக்கு வந்தா அறுத்துடலாம்...

Philosophy Prabhakaran said...

@ அமுதா கிருஷ்ணா
// வடபழனி கமலாவில் ஃப்ரீ ஷோவிற்கு கூவி கூவி ஆட்களை பிடித்துக் கொண்டு இருந்தனர்.பயந்து போய் எதிர்பக்கமாய் ரோடு க்ராஸ் செய்து ஓடி விட்டேன். //

அடடே 110 ரூபாயை வீணடித்துவிட்டேனே.... தெரிந்திருந்தால் ரசிகர்கள் படையோடு கமலாவிற்கு சென்றிருப்பேனே...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// சென்ற சனிக்கிழமை ஆறு பேரை கஷ்டப்பட்டு லத்திகா படம் பார்க்க தயார் செய்து வைத்திருந்தேன். இறுதி நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார்கள். விடமாட்டேன். இந்த வாரம் படம் ஓடினால்(?) பார்த்தே தீருவோம்.

-பவர் ஸ்டார் தலைமை ரசிகர் மன்றம். //

என் இனமடா நீ... பவர் ஸ்டாரின் அடுத்த படத்திற்கு நீங்க, நான், இரவு வானம் எல்லாரும் ஒன்னாப்போய் கும்மிடலாம்...

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன்
// உங்கள பத்திய பதிவு போட்டுடவேண்டியது தான்..!! //

ம்ம்ம்... நடத்துங்க... ரொம்ப கேவலமா திட்டிடாதீங்க...

// அறுக்கப்பட்ட ஆடுக்கு என் வருத்தத்தை தெரிவித்துவிடுங்கள்.. //

அந்த ஆடு இப்போ எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை...

Philosophy Prabhakaran said...

@ இக்பால் செல்வன்
// என்ன புது வேலை கிடைச்சிருச்சா .... ஆளையே காணோம் !!! //

கிட்டத்தட்ட... விரைவில் தனி இடுகையில் விவரிக்கிறேன்... என் மீது கோபம் எதுவும் இல்லையே...

உலக சினிமா ரசிகன் said...

ரித்தீஸ் இல்லாத தமிழ்சினிமாவுக்கு டாக்டர் சீனிவாசன்தான் அருமருந்து.

தமிழ்ப் பையன் said...

என்ன பிரபா... யாராவது தம்பி மீது கோப்படுவாரா? அப்படி கோபப்பட்டால் அண்ணன் என்று சொல்ல முடியுமா?? கோபம் எல்லாம் இல்லை. என்ன எதையும் நேருக்கு நேர் கேட்டுத் தொலைத்துவிடுவேன். அதான் நம்ம மைனசும், பள்சும் .....