19 April 2011

வில்பர் சற்குணராஜின் சிம்பிள் சூப்பர்ஸ்டார்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

"உலகமெங்கும் உள்ள அன்பார்ந்த உள்ளங்களே... உங்கள் அனைவரையும் பிரசித்தி பெற்ற இந்திய தேசத்தில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். நம் அன்புக்கு பாத்திரமான உலக பிரசித்தி பெற்ற சூப்பர்ஸ்டார் வில்பர் சற்குணராஜ் தன்னுடைய இரண்டாவது சிடியை வெளியிட்டுள்ளார். இந்த சிடியானது இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஒலிபெருக்கி மூலமாக வரும் இந்த பாட்டுகளை நீங்கள் மிகவும் ரசிபீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். நன்றி வணக்கம்..." இப்படித்தான் ஆரம்பிக்கிறது வில்பர் சற்குணராஜின் சிம்பிள் சூப்பர்ஸ்டார் இசைப்பேழை. தொடர்ந்து இதே வரிகள் ஆங்கிலத்தில், பின்னணியில் இந்திய தேசிய கீதம்.


இரண்டு வாரங்களுக்கு முன்பு பவர் ஸ்டார் சீனிவாசனின் லத்திகா படத்தை தாளித்து ஒரு நகைச்சுவை இடுகை போட்டிருந்தேன். அதே பாணியில் இப்போது சிம்பிள் சூப்பர்ஸ்டார் வில்பர் சற்குணராஜை கலாய்த்து ஒரு ஜாலி பதிவை போடலாம் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன், பாடல்களை கேட்கும்வரை. இப்போதிருக்கும் நிலையே வேறு. தனியறையில் சற்குணராஜின் பாடல்களை போட்டு கிறுக்குத்தனமாக ஆடிக்கொண்டிருக்கிறேன்.

யார் இந்த வில்பர் சற்குணராஜ்...? வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட், கழுத்தில் டை என்று சேல்ஸ்மேன் போல காட்சி தரும் இவரை யூடியூப் பயனாளிகளுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். இந்தியாவின் முதல் யூடியூப் நட்சத்திரம் என்று கூட சொல்கிறார்கள். கூகிளில் "WIL" என்று டைப் செய்தால் வில் ஸ்மித்துக்கு முன்பாக வில்பர் சற்குணராஜ் வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கிழக்கத்திய கழிப்பறையை பயன்படுத்துவது எப்படி என்று மேலை நாட்டவர்களுக்கு வகுப்பெடுத்த வாத்தியார். இவருடைய "லவ் மேரேஜ்" ஒளிப்பாடல் யூடியூபில் மிகப்பெரிய ஹிட். இப்போது இவரே இசையமைத்து, பாடல் எழுதி, பாடி வெளியிட்டுள்ள இசைப்பேழை தான் சிம்பிள் சூப்பர்ஸ்டார்.

மொத்தம் பதிமூன்று பாடல்கள். அவற்றுள் மூன்று பாடல்கள் முதல்முறை கேட்டபோதே பச்சக் என்று மனதில் ஒட்டிக்கொண்டு பலமுறை கேட்கத்தூண்டின. பாடல் வரிகளைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் டி.ராஜேந்தர் ஆங்கிலத்தில் ரைம்ஸ் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. ஆனாலும் பிடித்திருக்கிறது. சிம்பு - லொள்ளு சபா ஜீவா இருவரது குரல்களையும் சேர்த்து பிசைந்ததுபோல ஒரு வசீகரமான குரல்.

அட்டைப்பட பாடலான சிம்பிள் சூப்பர்ஸ்டார் பாடல் முதல் பாடலுக்கு சரியான தேர்வு. இசைப்பேழையின் மீது ஒரு அதீத ஆர்வத்தை தூண்டும் விதமாக அந்தப்பாடல் அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து வரும் சூப்பர் மொபைல் என்ற பாடல் நவீன யுகத்தில் மொபைல் போனின் அவசியம், மகத்துவம், அற்புதங்களை எடுத்துச் சொல்லுகிறது.

பாங்க்ரா நடனத்தையும் பாம்பு நடனத்தையும் பற்றி நமக்கு வகுப்பெடுக்கும் பாடல்கள் உள்ளன. குறிப்பாக பாங்க்ரா நடனத்தைப் பற்றி பாடும்போது, பாங்க்ரா நடனம் ஆடுவதற்கு பஞ்சாபியாக இருக்க வேண்டுமென்ற அவசியமே இல்லை. "PUT YOUR HANDS IN THE AIR... DANCING LIKE YOU DONT CARE... THIS IS THE FIRST CLASS BANGHRA..." என்று ஆங்கில விளக்கம் தருகிறார்.

அனீ ரோஸு... அனீ ரோஸு... என்றொரு பாடல். கிராமிய இசையையும் மேற்கத்திய இசையையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வார்களே, அது உண்மை என்று இந்தப்பாடலை கேட்டுதான் தெரிந்துக்கொண்டேன். ஆமாங்க, எப்பேர்ப்பட்ட மனிதனாக இருந்தாலும் தன்னையே அறியாமல் நடனமாட வைக்கிறது இந்தப்பாடல். பாடல் வரிகளிலும் ஆங்காங்கே நகைச்சுவை பொதிந்திருக்கிறது.

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலைப் பற்றி ஒரு பாடல் இருக்கிறது என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும். வைகை எக்ஸ்பிரஸ் கிளம்பும் நேரம் முதற்கொண்டு ரயிலில் இருக்கும் மேற்கத்திய கழிவறை வரைக்கும் புட்டு புட்டு வைக்கிறார். (மனிதருக்கு கழிவறை மீது அப்படி என்னதான் ஆர்வமோ...?)

அப்புறம், லவ் மேரேஜ் பாடல். முன்னரே குறிப்பிட்டது போல இது ஏற்கனவே சூப்பர் ஹிட்டான பாடல். இந்தப்பாடலை கேட்டபோது, "உங்க நாட்டுல எல்லாம் அம்மா, அப்பா பாக்குறவங்கள தான் கல்யாணம் பண்ணிப்பீங்களாமே..." என்று விசித்திரமாக என்னிடமொரு கேள்வி கேட்ட பிரேசில் தோழி ஏனோ நினைவுக்கு வந்தார்.

ஒட்டுமொத்தமாக இசைப்பேழையை பற்றி குறிப்பிட வேண்டுமென்றால் இது ஒரு கலாச்சார கதவு. மேலை நாட்டவர்கள் நம் நாட்டு கலாச்சாரத்தை, வாழ்க்கைமுறையை புரிந்துக்கொள்ளும் வகையில் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. தொண்ணூறு சதவிகிதம் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளது ஒரு பிளஸ் பாயின்ட். குறிப்பாக, பாங்க்ரா நடனம், பாலிவுட் ஸ்டார், வைகை எக்ஸ்பிரஸ் போன்ற பாடல்கள் வெளிநாட்டவர்களுக்கு ஒரு டூரிஸ்ட் கைடு போல விளங்குகின்றன. அதேபோல, வங்கதேசத்தில் அமைந்துள்ள பனானி ஏரியைப் பற்றிய பாடலும், இத்தாலியில் அமைந்துள்ள கலியாரி தீவைப் பற்றிய பாடலும் நமக்கு ஒரு டூரிஸ்ட் கைடாக அமைந்துள்ளன.

குறைகள் என்று சொல்ல வேண்டுமென்றால், சில இடங்களில் இரைச்சலின் காரணமாக பாடல் வரிகளை சரிவர புரிந்துக்கொள்ள முடியவில்லை. சில பாடல்கள் ஒரே மாதிரியாக, குறிப்பாக கிறிஸ்தவர்களின் துதிப்பாடல்களைப் போலவே அமைந்துள்ளன.

எனிவே, தனியொரு மனிதராக பாடல் எழுதி, இசையமைத்து, பாடி இப்படியொரு உயரத்தை எட்டியிருக்கும் வில்பர் சற்குணராஜின் தன்னம்பிக்கையை பாராட்டியே ஆகவேண்டும். அவருக்கு எனது சல்யூட். அதுமட்டுமில்லாமல் சத்தமே இல்லாமல் பல சமூக சேவைகளையும் செய்து வருவதாக அறிகிறேன். அப்படி இருக்கும்போது, இசைப்பேழையை பணம் கொடுத்து வாங்காமல் பதிவிறக்கம் செய்ததற்காக மட்டும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

32 comments:

சி.பி.செந்தில்குமார் said...

மொத வெட்டு

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல அறிமுகம்.. குட்.. வலைச்சரத்தில் பணி ஆற்றிய பாதிப்பு

செங்கோவி said...

பிரபாக்கு ரொம்ப தைரியம் தான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா நம்மாளு பட்டய கெளப்பிக்கிட்டு இருக்காரு போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இப்போதிருக்கும் நிலையே வேறு. தனியறையில் சற்குணராஜின் பாடல்களை போட்டு கிறுக்குத்தனமாக ஆடிக்கொண்டிருக்கிறேன்./////////

மெய்யாலுமா? அவ்ளோ நல்லா இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அதுமட்டுமில்லாமல் சத்தமே இல்லாமல் பல சமூக சேவைகளையும் செய்து வருவதாக அறிகிறேன்.//////

ரொம்ப நல்ல விஷயம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அப்படி இருக்கும்போது, இசைப்பேழையை பணம் கொடுத்து வாங்காமல் பதிவிறக்கம் செய்ததற்காக மட்டும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்/////////

அதுவும் சரிதான்! ஆனா வேற வழி?

Chitra said...

தனியொரு மனிதராக பாடல் எழுதி, இசையமைத்து, பாடி இப்படியொரு உயரத்தை எட்டியிருக்கும் வில்பர் சற்குணராஜின் தன்னம்பிக்கையை பாராட்டியே ஆகவேண்டும். அவருக்கு எனது சல்யூட். அதுமட்டுமில்லாமல் சத்தமே இல்லாமல் பல சமூக சேவைகளையும் செய்து வருவதாக அறிகிறேன். அப்படி இருக்கும்போது, இசைப்பேழையை பணம் கொடுத்து வாங்காமல் பதிவிறக்கம் செய்ததற்காக மட்டும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.


..... பொதுவாக நாம் பேச - கேட்க - சொல்ல தயங்கும் விஷயங்களை - ஒரு சிம்பிள் லுக் கொடுத்துக் கொண்டே இவர் சர்வசாதரணமாக செய்வது - கலகலப்பாக இருக்கும். He is unique. :-)

Unknown said...

வில்பரின் வெறிபிடித்த ரசிகர்களின் சார்பாக நன்றிகள் கோடி

ராஜகோபால் said...

//"WIL" என்று டைப் செய்தால் வில் ஸ்மித்துக்கு முன்பாக வில்பர் சற்குணராஜ் வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்//


இவரென்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா!

Unknown said...

yaru pa ne ....

N.H. Narasimma Prasad said...

நல்ல பதிவு. இவரை பற்றி நான் ஏற்கனவே ஆனந்த விகடனில் படித்திருக்கிறேன்.

Speed Master said...

இது வஞ்ச புகழ்ச்சியா

தற்குறிப்பேற்றா


(நீங்க நல்லவரா கெட்டவரா)

கேப்டன் விஜயகாந்த் - சிறு குறிப்புகள்

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_19.html

அஞ்சா சிங்கம் said...

///////இப்போதிருக்கும் நிலையே வேறு. தனியறையில் சற்குணராஜின் பாடல்களை போட்டு கிறுக்குத்தனமாக ஆடிக்கொண்டிருக்கிறேன்./////////]

ஏன்யா நல்லாதானே போயிக்கிட்டு இருந்துச்சி ?

ரஹீம் கஸ்ஸாலி said...

சொன்னது போல போட்டாச்சா?

பாலா said...

இவரை சாதாரணமானவர் என்று நினைத்து விட முடியாது. எதோ ஒரு வகையில் உலகத்தை தன்வசம் திரும்பி பார்க்க வைத்தவர். ஏற்கனவே அவர் கொடுத்த கக்கூஸ் டெமோவில் டரியல் ஆகி கிடக்கிறேன்.

Ram said...

வில்பர் கலக்கிட்டாரோ.!! ஹி ஹி.. கேக்குறன் கேட்டுட்டு பேசுறன்.. வில்பர் நல்லா போட்டிருக்காரா இல்ல பிரபா டேஸ்ட் மாறிடுச்சானு.!!

Unknown said...

///////இப்போதிருக்கும் நிலையே வேறு. தனியறையில் சற்குணராஜின் பாடல்களை போட்டு கிறுக்குத்தனமாக ஆடிக்கொண்டிருக்கிறேன்./////////]


ட்ரெஸ்சோடத்தானே ஆடுறீங்க

Unknown said...

ஆமாங்க உங்க கிட்ட ஒருத்தரபத்தி கம்ப்ளைன் பண்ணணுங்க

ஒருத்தரு கொஞ்சா நாளைக்கு முன்னால 'ஓயின் சாப்புன்னு ' ஒரு பதிவு போட்டாருங்க ,அதுல கூட கடேசில ஒரு கஷ்ட்டமான கேள்வி கேட்டாருங்க ,நானும் மண்டைய பிச்சுகிட்டு பதில கண்டுபுடுச்சு சொன்னேங்க ,பதில கண்டுபிடிச்ச எல்லாருக்கு ,என்னமோல சொன்னாரு ஆங் ம்ம் 'ஏதோ மின்னு புத்தகமாம்ல ' அத அனுப்புறேன்னு சொன்னாருங்க ,இன்னைக்கு வரைக்கும் அனுப்பல ,அவர என்னங்க செய்யலாம் ,

ஆனந்தி.. said...

ஹ ஹ...எங்க ஊரு பிரபா இந்த சற்குணம் பையன்...ஹ ஹ...விகடனில் வெளிவந்த சற்குணம் பேட்டியை இன்னும் நினைச்சாலும் சிரிப்பேன்...Madurai always rocks....;))))

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹி...ஹி... நல்லா தான் எழுதியிருக்கிங்க

Oceanhooks said...

@Speedmaster
Thank for your recent post in the "cycle gap" :)

கவிதை பூக்கள் பாலா said...

ஆஹா ......

நிரூபன் said...

சகோ, இந்த வில்பர் சற்குணராஜின் Eastern டாய்லெட் காமெடி தான் எனக்கு மிகவும் பிடித்தது, பதிவுலகில் அவரை முதன் முதலாக அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள் சகோ.

ஆனந்தி.. said...

தங்கள் ப்லாக் ஐ பற்றி வலைச்சரத்தில் கூறி இருக்கிறேன்..
http://blogintamil.blogspot.com/2011/04/beautiful-blogs.html

Anonymous said...

//இசைப்பேழையை பணம் கொடுத்து வாங்காமல் பதிவிறக்கம் செய்ததற்காக மட்டும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்//

அவன் இவன் டி.வி.டி...உங்க கிட்ட..

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார், விக்கி உலகம், செங்கோவி, பன்னிக்குட்டி ராம்சாமி, Chitra, இரவு வானம், ராஜகோபால், jaya, N.H.பிரசாத், Speed Master, அஞ்சா சிங்கம், ரஹீம் கஸாலி, பாலா, தம்பி கூர்மதியான், நா.மணிவண்ணன், ஆனந்தி.., தமிழ்வாசி - Prakash, micman, bala, நிரூபன், ! சிவகுமார் !

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்... தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆஹா நம்மாளு பட்டய கெளப்பிக்கிட்டு இருக்காரு போல? //

ஆமாங்க... நீங்களும் ஏதாவது நல்ல விதமா எழுதியிருப்பீங்கன்னு நம்பி அந்த லிங்கை கேட்டேன்... ஆனா அது ஒரே காமெடி...

// மெய்யாலுமா? அவ்ளோ நல்லா இருக்கா? //

உண்மை...

// அதுவும் சரிதான்! ஆனா வேற வழி? //

இன்னும் சொல்லப்போனால் தேடினாலும் கிடைக்காது... சென்னையில் மியூசிக் வேர்ல்டு, ப்லாநெட் எம் போன்ற பெரிய கடைகளில் மட்டும்தான் கிடைக்கும்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// ஒருத்தரு கொஞ்சா நாளைக்கு முன்னால 'ஓயின் சாப்புன்னு ' ஒரு பதிவு போட்டாருங்க ,அதுல கூட கடேசில ஒரு கஷ்ட்டமான கேள்வி கேட்டாருங்க ,நானும் மண்டைய பிச்சுகிட்டு பதில கண்டுபுடுச்சு சொன்னேங்க ,பதில கண்டுபிடிச்ச எல்லாருக்கு ,என்னமோல சொன்னாரு ஆங் ம்ம் 'ஏதோ மின்னு புத்தகமாம்ல ' அத அனுப்புறேன்னு சொன்னாருங்க ,இன்னைக்கு வரைக்கும் அனுப்பல ,அவர என்னங்க செய்யலாம் , //

மன்னிக்கவும்... கொஞ்சம் தாமதமாயிடுச்சு... அனேகமா இப்போ கிடைசிருக்கும்ன்னு நம்புறேன்...

Philosophy Prabhakaran said...

@ ஆனந்தி..
// எங்க ஊரு பிரபா இந்த சற்குணம் பையன்... //

ஓ... அதான் இப்படியா...

Philosophy Prabhakaran said...

@ நிரூபன்
// இந்த வில்பர் சற்குணராஜின் Eastern டாய்லெட் காமெடி தான் எனக்கு மிகவும் பிடித்தது //

என்னது காமெடியா... அவர் கேட்டா ரொம்ப பீல் பண்ணுவாரு...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// அவன் இவன் டி.வி.டி...உங்க கிட்ட.. //

இங்கே எல்லாமே பதிவிறக்கம் தான்...