12 June 2011

ஆரண்ய காண்டம் - ஆயிரத்தில் ஒன்று

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இந்தப்படத்தை பார்க்கப்போகிறேன் என்று சொன்னதும், சென்சார் கட் வாங்கின படம்ன்னு கேள்விப்பட்டதும் கிளம்பிடுவியே... என்று சில நண்பர்கள் ஏளனம் பேசினார்கள். இன்னும் சிலர் அப்படி ஒரு படமா...? என்று புருவம் உயர்த்தினர். எனினும் இந்தப்படத்தின் விளம்பர யுக்தியால் ஈர்க்கப்பட்டு நீண்ட நாட்களாக இதற்காக காத்திருந்தேன் என்பதே உண்மை. வண்ணாரப்பேட்டை மகாராணி திரையரங்கிற்கு சென்றிருந்தேன். சனிக்கிழமை இரவு என்பதால் குடிமகன்களின் வருகை அதிகமாக இருந்தது. ஒருசில முகங்கள் மட்டுமே படத்தின் வேல்யூ தெரிந்து வந்ததாக தெரிந்தது.


கதைச்சுருக்கம்:
சிங்க பெருமாள் ஒரு அண்டர்கிரவுண்ட் தாதா. அவரது வலது கையாக பசுபதி. இதேபோல கஜேந்திரன் மற்றொரு தாதா. அவரது வலது கையாக கஜபதி. இவர்களுக்கு மத்தியில் கஜேந்திரனுக்கு சேர வேண்டிய ஒரு போதைப்பொருள் சரக்கை பசுபதி கைப்பற்ற நினைக்கிறார். ஒரு கட்டத்தில் சிங்க பெருமாள், கஜேந்திரன் இருவருமே பசுபதியுடன் பகையாக, பழி தீர்த்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை.

இதுதான் காட்ஃபாதர் காலத்திலிருந்தே பார்த்த கதையாச்சே என்று கொட்டாவி விட்டால் திரைக்கதையால் திரும்பிப்பார்க்க வைக்கிறார் தியாகராஜன். சொல்லப்போனால் இது தமிழ் சினிமாதானா...? என்று சந்தேகிக்க வைக்கும் அளவிற்கு நிறைய காட்சிகள். முதல் சில நிமிடங்களின்போது ஏதோ டாக்குமெண்டரி படம் போல நகர்ந்து அப்படியே மெல்ல மெல்ல மெட்ரோ ரயிலாக வேகமெடுக்கிறது கதை. (மோனோ ரயில் என்றும் வைத்துக்கொள்ளலாம்).

தாதா மற்றும் தாத்தா சிங்கபெருமாளாக ஜாக்கி ஷெராஃப். இதே பாத்திரத்தை நாம் பிரபுவாகவோ, ராஜ்கிரனாகவோ இன்னபிற குணச்சித்திர நடிகர்களாகவோ நிறைய படங்களில் பார்த்திருப்போம். அவர்களில் ஒருவரே இந்தப்படத்திலும் நடித்திருந்தால் சலிப்பு தட்டியிருக்கும். நாம் இதுவரை பார்த்திராத ஜாக்கி என்பதால் வசீகரித்தது. அனுபவத்திற்கேற்ப அருமையான நடிப்பு. இவர் "ஈ" என்று பல்லைக்காட்டுவது மாத்திரம் நம்மை "ங்கே" என்று தலைசொறிய வைக்கிறது.

பசுபதியாக சம்பத். இவர்தான் படத்தின் ஹீரோ என்று சொல்லலாம். இவருடைய கேரக்டர் நாம் ஏற்கனவே சென்னை - 28, சரோஜா படங்களில் பார்த்த அதே முரட்டுத்தனமான கேரக்டர்.

சப்பையாக ரவிகிருஷ்ணா. அவருக்கேற்ற பாத்திரம். கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படத்திலும் பதிவிலும் பெண்ணில்லாத குறையை தீர்க்கிறார் யாஸ்மின் பொன்னப்பா. ஜாக்கியின் கீப்பாக வரும் இவருக்கு ஒரு கிளைக்கதையும் அதன் மூலம் ஒரு மெசேஜும் படத்தில் உண்டு.

படத்தில் அதிமுக்கியமாக பாராட்டப்பட வேண்டிய நடிப்பு என்றால் அது காளையன் கதாப்பாத்திரத்தில் நடித்த சோமசுந்தரத்தினுடையது. அட... அட... அட... நடிப்பு, மொழி நடை, உச்சரிப்பு, அங்க அசைவுகள் என்று வெளுத்துக்கட்டியிருக்கிறார். இவருடைய மகன் கொடுக்காப்புலியாக வரும் சிறுவன் வசந்தின் நடிப்பும் அவ்விதமே சிறப்பு.

கஜேந்திரனாக ஸ்டன்ட் மாஸ்டர் ரேம்போ ராஜ்குமார். இவரைப் பார்த்தால் சமயங்களில் சிரிப்பு தான் வருகிறது. இன்னும் சில கதாப்பாத்திரங்கள். அப்புறம் அஜய்ராஜ், இவர்தான் படத்தில் ஆண்ட்டி-ஹீரோ. இவர் பேசும் வசனங்களை கேட்கும்போது சுவாமி சரக்கானந்தா பளிச்சென்று நினைவுக்கு வந்தார்.

இசை யுவன், ஆனால் பாடல்கள் இல்லை என்றால் ஏமாற்றம் தானே. ஆனால் பின்னணி இசையின் மூலம் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். பின்னணி இசை பல இடங்களில் உலகப்படங்களுக்கு நிகர். சில இடங்களில் உலகப்படங்களை இமிடேட் செய்வதுபோலவும் இருந்தது. ஒளிப்பதிவும் அவ்விதமே சிறப்பு. பெரும்பாலான காட்சிகள் நான் பார்த்து பழகிய வடசென்னையில் எடுக்கப்பட்டிருந்தது, "இது நம்ம ஏரியா..." என்று குதூகலிக்கச் செய்தது.

வசனங்கள்தான் இந்தப்படத்தை எனக்கு பிடிக்க வைத்தது என்றும் கூறலாம். "சாராயம் வாங்கிக்கொடுத்தவர் சாமி மாதிரி..." போன்ற வசனங்கள் சிரிக்கவும் "சிந்திக்கவும்" வைத்தன. (எனக்கு ஓசி சரக்கு வாங்கித்தந்த சாமிகளுக்கு இந்த வசனத்தை டெடிகேட் செய்கிறேன்).

படத்தின் ப்ளஸ்:
- கடந்த பத்தியில் குறிப்பிட்டது போல வசனங்கள்.
- அனைத்து நடிகர்களின் மிகைபடுத்தப்படாத நடிப்பு.
- பின்னணி இசை, ஒளிப்பதிவு.

படத்தின் மைனஸ்:
- ஸ்டார் வேல்யூ இல்லாதது.
- கெட்டவார்த்தைகள், வன்முறைக் காட்சிகள்.

எனக்குப் பிடித்த காட்சி:
ஜாக்கி ஷெராஃப் துப்பாக்கியால் சுடப்பட்டதும் அவர் துடிதுடித்து சாகும் காட்சி. அப்படியொரு அற்புதமான நடிப்பு.

வெர்டிக்ட்:
இடைவேளை வரை மின்னல்வேகம். ஏகப்பட்ட குபீர்சிரிப்பு வசனங்கள், காட்சிகள். இரண்டாம் பாகம் மித வேகம். கொஞ்சம் அரைத்தது என்றாலும் படம் முழுக்க சுவாரஸ்யமாகவே நகர்ந்தது. படத்தின் நீளம் 153 நிமிடங்கள் என்று விக்கிபீடியா சொன்னாலும் படம் இரண்டு மணிநேரத்திலேயே முடிந்துவிட்டது. (சென்சார் அதிகாரிகள் புண்ணியத்தில்). அடுத்தவாரம் அவன் இவன் படம் வெளிவந்ததும் நிச்சயம் இந்தப்படம் காணாமல் போய்விடும். ஒரு நல்ல தமிழ் சினிமாவிற்கு நாமெல்லாம் கொடுக்கும் மரியாதை அதுதானே.

இன்னும் சில அப்பாவிகள் ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்கள் - அவார்டு படம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 comments:

கலாநேசன் said...

//இன்னும் சில அப்பாவிகள் ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்கள் - அவார்டு படம்.//

True

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃபசுபதியாக சம்பத். இவர்தான் படத்தின் ஹீரோ என்று சொல்லலாம். இவருடைய கேரக்டர் நாம் ஏற்கனவே சென்னை - 28, சரோஜா படங்களில் பார்த்த அதே முரட்டுத்தனமான கேரக்டர்.ஃஃஃஃ

அடடா அவரா இவரு பாத்திட்டா போச்சு..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

சாமக்கோடங்கி said...

எங்க ஊர்ல போட்டிருக்காங்க... நீங்க சொல்றது படி பார்த்தா போய்ப் பார்க்கலாம் போல இருக்கு..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அப்ப அவார்ட் நிச்சயம்ன்னு சொல்லுங்க..

Jayadev Das said...

சரி, படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

கார்த்தி said...

ஏன் இப்போ முந்தி மாதிரி அடிக்கடி எழுதுவதில்லை?
இந்த படம் இலங்கையில் திரையிடப்படவில்லை. பார்ப்போம் நல்ல கிளியர் கொப்பி டவுண்லோட் பண்ண வெயிட்டிங். நீங்கள் சொல்லியிருப்பதால் படம் பாக்கும் ஆர்வம் கூடியிருக்கு!

கறுவல் said...

பார்க்கலாம் போல இருக்கே!!

அமீரகத்தில் ரிலீஸ் ஆகுமோ தெரியாது... இல்லேன்னா இருக்கவே இருக்கு Torrent... ஹி..ஹி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ படம் பார்க்கலாம்......!

N.Manivannan said...

////இந்தப்படத்தை பார்க்கப்போகிறேன் என்று சொன்னதும், சென்சார் கட் வாங்கின படம்ன்னு கேள்விப்பட்டதும் கிளம்பிடுவியே... என்று சில நண்பர்கள் ஏளனம் பேசினார்கள்.////


ஏளனம் பேசினார்களா? ,பாவம் அவர்களுக்கு தெரியவில்லை உண்மையே அதுதான் என்று

N.Manivannan said...

///இன்னும் சில அப்பாவிகள் ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்கள் - அவார்டு படம்.///


அப்பாவினா யாருன்னே ?

kanagu said...

நேற்று தான் படம் பார்த்தேன்... அருமையாக இருந்தது... :)

தமிழில் குவெண்டின் போல் டார்க் காமெடி கலந்து வந்திருக்கும் இந்த படம் கண்டிப்பாக வரவேற்கப் பட வேண்டும்..

படத்தோட டிவிடி சீக்கிரம் வெளிவந்தால் நிச்சயம் தயாரிப்பாளர் லாபம் பார்க்கலாம்... ஏனெனில் தொலைக்காட்சிகள் இந்த படத்தை வாங்க நிச்சயம் ஆர்வம் காட்ட மாட்டார்கள்...

டி.சாய் said...

முன்னோட்டம் பர்த்ததுமே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. இங்கு படம் வெளியாகாது தி.வி க்கு காத்திருக்க வேண்டியதுதான் :)

N.H.பிரசாத் said...

நல்ல விமர்சனம். ஆன அடிக்கடி நீங்க ஏன் காணாம போயிடுறீங்க?

நேசமுடன் ஹாசிம் said...

நல்ல விமர்சனம் வாழ்த்துகள்

http://hafehaseem00.blogspot.com/2011/06/blog-post_12.html

என் தளத்தில் ஈழத்துப்பாலகன் ஒரு கவிதை வடிவில்

Senthil said...

i ilke yr review!!!!!!

please be aware that its a copy of great mexican film 'trade'

bala said...

''எனக்கு ஓசி சரக்கு வாங்கித்தந்த சாமிகளுக்கு இந்த வசனத்தை டெடிகேட் செய்கிறேன்''
ithi ellamaa veliila sollikittu thiriva nanba ha ha ha enna...........

விக்கி உலகம் said...

நல்லா இருக்கு உங்க விமர்சனம் நன்றி

இரவு வானம் said...

மெட்ரோ ரயில் மோனோ ரயில் - செம நக்கல், விமர்சனம் வழக்கம் போல அருமை, பைவ் ஸ்டார் கிருஷ்ணா செம காமெடி இல்ல :-)

Atheist said...

ஸ்பானிஷ் படங்களின் தழுவல் போல உள்ளது..
அனோக மக்களுக்கு பிடிக்க வாய்ப்பு இல்லை..

! சிவகுமார் ! said...

Pulp Fiction....

! சிவகுமார் ! said...

'தமிழ் சினிமாவில் தருதலை ஹீரோக்கள்' (http://philosophyprabhakaran.blogspot.com/2010/11/blog-post.html?utm_source=BP_rand) நீங்கள் எழுதியதுதான். ஆரண்ய காண்டத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் எப்படிப்பட்டவை? ரொம்ப நல்ல புள்ளைங்களா?????????????????????

hitherto said...

what the hell.are u nuts?is absence of star value a negative point...i think its one of the biggest plus points.do you want prakash raj to play the role of jackie shroff and vikram to play pasupathi..that would have spoiled the movie you idiot.

செ.சரவணக்குமார் said...

அருமையான விமர்சனம் பிரபா.