15 September 2011

Paranormal Activity – நீங்கள் தூங்கும்போது...?


அன்புள்ள வலைப்பூவிற்கு,

யதார்த்த சினிமா என்றால் என்ன...? ஒரு பத்து வருடங்களுக்கு முந்தய கோலிவுட் மொழியில் சொன்னால் “லா லா... லா லா...” என்று பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு காதலுங்குறது தோட்டத்துல காய்க்கிற பலா இல்ல... வானத்துல இருக்குற நிலான்னு மொக்கைத்தனமா டயலாக் பேசும் படங்கள். இப்போதைய கோலிவுட் மொழியில் சொன்னால் அழுக்கு சட்டை, தாடியுடன் முரட்டுத்தனமான ஹீரோ, வெட்டிப்பய ஹீரோவை வெரட்டி வெரட்டி காதலிக்கிற ஹீரோயின். ஆனால் உண்மையிலேயே யதார்த்த சினிமா என்றால் என்னவென்று பதார்த்தமாக நம் முன்பு படைத்திருக்கிறார் ஒரு மேலை நாட்டு இயக்குனர்.

Title: Paranormal Activity
Tagline: Don’t see it alone
Country: United States
Language: English
Year: 2007
Genre: Mystery, Horror
Cast: Katie Featherston, Micah Sloat
Director, Cinematographer, Editor: Oren Peli
Producers: Steven Schneider, Jason Blum
Length: 97 Minutes


ஒரு இளம் தம்பதியர், ஒரு படுக்கையறை இதுதான் கதை என்று சொன்னால் உடனே அங்கே செக்ஸ்தான் கதைக்கருவாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் அது சில மென்முத்தக்காட்சிகளை தவிர்த்து சிறிதளவேனும் இல்லை.

இளைஞன் ஒருவன் தன் காதலியுடன் ஒன்றாக ஒரு பிளாட்டில் வாழ்கிறான். (திருமணம் செய்துக்கொள்ளாமல் எப்படி ஒரே வீட்டில் வாழலாம் என்று அபத்தமாக கேட்கக்கூடாது). அவனுடைய காதலிக்கு சின்ன வயதில் இருந்தே ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை பின்தொடர்வதாக ஒரு நம்பிக்கை. அவளை திருப்திப்படுத்தும் நோக்கில் காதலன் ஒரு கேமரா வாங்கி அவர்களது தினசரி இரவை படம் பிடித்து காலையில் அதை போட்டு பார்க்கிறார்கள். முதல் இரவும் (அந்த முதலிரவு அல்ல), இரண்டாவது இரவும் அமைதியாக நகர மூன்றாவது இரவில் கதவு தானாக அசைகிறது. அங்கிருந்து ஆரம்பிக்கும் திகில் ஒவ்வொரு இரவாக முன்னேறி இருபத்தி ஒறாவது இரவில் உச்சக்கட்டம் அடைவதே மீதிக்கதை.

இந்தப்படத்தின் ஸ்பெஷாலிடி, இது வழக்கமான சினிமா போல் அல்லாமல், ஏதோ உண்மையிலேயே ஒரு தம்பதியர் தம் அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்தாற்போல ஒரு உணர்வை தருகிறது. படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் ஸ்லைடை நீங்கள் நம்பிவிட்டால் படத்தை இன்னும்கூட அதிகம் ரசிக்கலாம்.

ஒன்றரை மணிநேரம் ஓடக்கூடிய இந்தப்படத்தை கடந்த வெள்ளிக்கிழமை பின்னிரவில் தனியாளாக அமர்ந்து பார்த்தேன். கிட்டத்தட்ட ஒரு மணிநேர படம் முடிந்தநிலையில் பேசாமல் ஆப் பண்ணிட்டு அம்மா பக்கத்துல போய் படுத்துடலாமான்னு நினைக்கிற அளவுக்கு படம் திகிலானுபவம் தந்தது. இத்தனைக்கும் படத்தில் பெரிய அளவில் கிராபிக்ஸ், சவுண்ட் எபக்ட்ஸ் எதுவுமில்லை. ஒவ்வொரு முறையும் படுக்கையறையை காட்டும்போதும் என்னடா நடக்கப்போகிறது என்று பல்லைக் கடித்துக்கொண்டு எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள்.

2007ம் ஆண்டு இந்தப்படத்தை ஒரு திரைப்பட விழாவில் வெளியிட்டபோது நிறைய ரசிகர்கள் பாதி படத்திலேயே எழுந்து போய்விட்டார்களாம். படம் பிடிக்காமல் அல்ல, பயத்தினால். அதனால்தானோ என்னவோ படத்தை விநியோகம் செய்ய ஆள் கிடைக்காமல், பல தடைகளை கடந்து 2009ம் ஆண்டு படம் வெளியாகியிருக்கிறது. ரிலீஸான புதிதில் மந்தமாக இருந்த வசூல் படத்தில் காட்டப்படும் இரவுகளைப் போல 21 நாட்கள் கழிந்தபின்னர் சூடு பிடித்து குறைந்த முதலீட்டில் எக்கச்சக்க வசூலை வாறிக்கொடுத்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு இந்தப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு சென்னை மோட்சம் திரையரங்கில் வெளியானது. பார்க்கலாமா வேண்டாமா என்று யோசித்து முடிப்பதற்குள் படம் தூக்கப்பட்டுவிட்டது. இந்தப்படத்தின் prequel கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்திருக்கிறது. மேலும், அதனுடைய prequel அதாவது paranormal activity 3 அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

இந்தப்படத்தை நான்கைந்து நண்பர்கள் குரூப் சேர்ந்து பார்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. முடிந்தவரைக்கும் தனியாளாக, தனியறையில் இரவு நேரத்தில் பாருங்கள். அதுதான் ஒரிஜினல் திரில். இல்லை, நான் ரொம்ப தைரியசாலி என்று மார்தட்டுபவர்கள் உங்கள் தங்கை, தம்பி, மனைவி அல்லது கணவருடன் சேர்ந்து பார்த்து அவர்களை பயப்பட வைப்பது தனி சுகம்.

பதிவிறக்க லிங்குகள்:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 comments:

Philosophy Prabhakaran said...

பதிவு போட்டு அரை மணிநேரம் ஆகுது... ஆனா தமிழ்மணத்துல இணைய மாட்டேங்குது... யாராவது பார்த்தா இணைச்சிடுங்க...

'பரிவை' சே.குமார் said...

படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்.
தமிழ்மணத்தில் இணைத்து வாக்கும் அளித்தாச்சு.

Unknown said...

இனி படத்தை பார்க்க வேண்டியதுதான் பாக்கி

கேரளாக்காரன் said...

Write atleast one horror movie spoiler every week...

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

நல்ல இருக்கு !
நல்ல விமர்சனம் !
கொஞ்சம் லேட்.....
அம்புட்டுத்தான் .
வார்த்தைகள் உங்கள் வசப்டுகிறது .....
நட்புடன் யானைக்குட்டி

Jayadev Das said...

வெளிநாட்டுக்காரன் சினிமா நம்ம யதார்த்தத்தை பிரதிபலிக்காது சாமி.............

Unknown said...

படம் பார்க்கும்போது அவ்வளவா பயமா இல்ல எனக்கு!
ஆனா கொஞ்ச நாளைக்கப்புறம் தூக்கம் வராத நள்ளிரவு நேரத்தில திடீர்னு படம் நினைவுக்கு வந்திச்சுன்னா....வரும்!!! வர வாழ்த்துக்கள்! :-)
அப்ப பாருங்க பாஸ்...எப்பிடி இருக்குதுன்னு....!

Unknown said...

இந்த படம் உண்மையிலே ரொம்ப ரொம்ப த்ரிலா இருந்துச்சு... அதுவும் நைட் இந்த படத்தை பாத்துட்டு தூங்கவும் முடியல தூங்காம இருக்கவும் முடியல.. இதுல 2 ஆவது part வேற ரிலீஸ் ஆயிருச்சு.. அதயும் பாத்துட்டேன். அது இதுக்கு மேல த்ரில்.. கண்டிப்பா எல்லாரும் பாருங்க.. பிரபாகரன் நீங்க 2 வது partகும் விமர்சனம் எழுதுனா ரொம்ப நல்லா இருக்கும்...

N.H. Narasimma Prasad said...

கண்டிப்பா இந்த படத்தை நான் பார்க்க மாட்டேன். என்ன நான் ரொம்ப 'தைரியசாலி'.

MANO நாஞ்சில் மனோ said...

ம்ஹும் நமக்கு தமிழ்படம் பார்க்ககூட நேரமில்லை, இவர் ஆங்கிலப்படம் பார்த்து விமர்சனம் வேற போடுறார் அவ்வ்வ்வ்...

MANO நாஞ்சில் மனோ said...

விமர்சனம் சூப்பர்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

tamilmanam seven hi hi...

Anonymous said...

சத்தியமாய் நான் பார்க்க மாட்டேனுங்க )))

பாலா said...

நண்பரே இந்த படத்தை பார்த்த பின் எனக்கு மட்டுமல்ல, நண்பர்கள் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது உண்மை. இது குறித்து நான் முன்பு ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.


http://balapakkangal.blogspot.com/2010/04/blog-post_20.html

மஜீத் said...

nrflyingtaurus@gmail.com///
.
.
இது தம்பி அசீத்து வச்ச பேரு இல்ல?flying tauras flying kaakkaa flying kaadai சரியான சாப்பாட்டு ராமன் அசீத்து!!

மனித புத்திரன் said...

வெளிநாட்டுக்காரன் சினிமா நம்ம யதார்த்தத்தை பிரதிபலிக்காது சாமி.............///
.
.
.
இங்க ஒலக சினிமாவ குறை சொல்றவங்க எதுக்கு அதை பாக்கணும்?அதான் கொசு தனுசு நடிச்ச மொக்கை மசாலா இருக்கே அதை பாருங்கோ!!

Anonymous said...

நல்ல பொழுதுபோக்கு சீகுவேல்...நல்ல விமர்சனமும் கூட...

pichaikaaran said...

கண்டிப்பாக பார்க்க வேன்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் .. நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செம படமா இருக்கும் போல.....

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,

யதார்த்த சினிமா பற்றிய அருமையான விளக்கப் பகிர்வோடு,
உதாரணப் படம் பற்றிய அறிமுகத்தினையும் பகிர்ந்திருக்கிறீங்க.

டைம் கிடைக்கும் போது இப் படத்தினைப் பார்க்கிறேன் பாஸ்.

பாரி தாண்டவமூர்த்தி said...

நான் முன்பே ஒரு முறை இந்த படம் பாதி பார்த்து பயத்தில் மீதியை பார்க்காமல் விட்டுவிட்டேன்...Real horror movies….

சதீஷ் மாஸ் said...

என்ன பாஸ் இதலாம்.. ஒரே ஒலகப்படமா பாக்கறீங்க போல... பிட்டுக்கு ஆசப்பட்டு மண் சுமந்த கதை ஆயிடும் போல இருக்கு... என்ன எதாச்சும் புரியுதா??

சாந்தி மாரியப்பன் said...

நானும் இந்தப் படத்தைப் பார்த்திருக்கேன். ரொம்ப பயங்கரமா இருக்கும். அதுவும் கரெக்டா நள்ளிரவு ரெண்டு மணிக்குத்தான் சேட்டை ஆரம்பம். கடைசி சீனைப் பார்த்து பயப்படாதவங்க இருக்க முடியாது. :-)

kobiraj said...

உங்கள் வலை தளத்துக்கு முதல்முறையாக வருகிறேன் .அருமையாய் எழுதுகிறீர்கள் .படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் வருகிறது

இராஜராஜேஸ்வரி said...

திகிலான படத்தை தனியாகப் பார்த்த தில்லான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

பாலா said...

சராசரி திகில் படம் மாதிரி இல்லாமல் மிகவும் டெர்ரராக இருந்தது.. ரெண்டு நாள் தூக்கம் கெடுத்த பிரபா வாழ்க !!