16 January 2012

பிரபா ஒயின்ஷாப் – 16012012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

வெளியூரில் இருக்கும் நண்பன் ஒருவன் ரொம்ப நாளாக கோபிநாத் எழுதிய தெருவெல்லாம் தேவதைகள் புத்தகம் வேண்டுமென்று கேட்டுக்கொண்டு இருந்தான். கடல்லயே இல்லையாம் என்று அலைக்கழித்த புத்தகம் ஒருவழியாக புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது. கவிதை ஏதாவது நல்லா இருந்தா பொண்ணுங்ககிட்ட நாமளே யோசிச்சு சொன்னா மாதிரி பிட்டைப் போடலாம் என்று புரட்டிப் பார்த்தேன். ம்ஹூம்... இதையெல்லாம் பொண்ணுங்க கிட்ட சொன்னா நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டன்னு சொல்லிட்டு கிளம்பிடுவாங்க. கோபிநாத்தே அவரது கவிதை தொகுப்பை திரும்பவும் படித்தால் கூட விழுந்து விழுந்து சிரிப்பார் என்றே நினைக்கிறேன். அவுட்டேட்டட்.

இந்த நண்ப பயலுக்கு ஏன் இந்த ரசனை...? தம்பிக்கு தபூ சங்கர் பற்றி தெரியாதென்று நினைக்கிறேன். எனக்கு காதல் வாழ்க்கை அமைய தபூ சங்கரின் குறிப்பிட்ட ஒரு கவிதை பேருதவி செய்தது. அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கவிதை உங்கள் வாசிப்பிற்காக:

நீ ஒட்டப்போகும்
ஸ்டிக்கர் பொட்டுக்காக
காத்திருக்கிறது
என் குளியலறை...!

இன்னொரு டைட்டானிக் துயரம் நடந்தேறியிருக்கிறது. Costa Concardia என்கிற இத்தாலிய சொகுசுக்கப்பல் கடலிற்கு நடுவே இடறிய பாறையால் மூழ்க ஆரம்பித்திருக்கிறது. நான்காயிரம் பயணிகளுக்கும் மேல் தாங்கிச் சென்ற கப்பலில் இருந்து அதிர்ஷ்டவசமாக பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்டனர். எனினும் இதுவரையில் ஐந்து பேர் இறந்திருப்பதாகவும் அறுபதுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி ஹாலிவுட் காட்டில் மழைதான்.

கப்பல் விபத்தில் இருந்து தப்பியவர்களில் ஒருவர்.
கடவுள் இருக்கான் கொமாரு...!
போட்டோவில் பாப்பா அநியாயத்துக்கு “இறக்கம்” காட்டியிருந்தார். நான்தான் சபை நாகரிகம் கருதி வெட்டி எறிந்தேன்.

ஜொள்ளு: 
அணு அணுவாய் ரசிக்க வைப்பவர் அனு
ட்வீட் எடு கொண்டாடு:
athisha அதிஷா
கேள்விகேட்காமல் கோமியம் குடிப்பது போல தமிழ்புத்தாண்டையும் சித்திரையில் கொண்டாடுவோம் ;-)

RajanLeaks theTrendMaker™
வேஸ்ட்டா பயந்து செத்துருக்கோம்; பாப்பா நல்ல சோசியல் டைப்புதான்; பயபுள்ள தனுசு நோண்டி நொங்கெடுத்துருக்கான் - சூர்யா (Mind Voice)

ThirutuKumaran திருட்டுகுமரன்
தமிழன் என்று சொல்லடா! தண்ணி அடித்து ஸ்டெடியா நில்லுடா!!

NVaanathi வானதி நடனம்
ரொம்ப நாளுக்கப்புறம் தமிழ்மணம் ஓபன் பண்ணேன்.. ஏன் போனோம் என்றாகிவிட்டது. #நல்லா வைக்கிறாங்க தலைப்பெல்லாம்

ipokkiri போக்கிரி
விஜயகாந்த் வாயை மட்டுமல்ல, அனைத்தையும் மூடிக் கொண்டுள்ளார்-நேரு #கேப்டன்: எனக்கு இப்ப எங்க அரிக்குதுனு சொல்லுங்க பார்க்கலாம்?!

அறிமுகப்பதிவர்:
கடந்த வாரம் கிடைத்த கொஞ்சமே கொஞ்ச நேரத்தில் படித்த கொஞ்சமே கொஞ்சம் பதிவுகளில் புதியவர்கள் யாரையும் கடந்து வரவில்லை. அதனால் நோ அறிமுகப்பதிவர்.

ஆனால், சமீப காலங்களில் ஜே.கே என்ற பெயரில் எழுதி வருபவரின் இடுகைகள் எக்கச்சக்கமாக ரசிக்க வைக்கின்றன. தெருவிற்கு தெரு பதிவர்கள் கலவை இடுகைகள் எழுதி வந்தாலும் மிகச்சிலருடயது மட்டுமே ஸ்பெஷல். அந்த வகையில் இவர் வாராவாரம் எழுதிவரும் வியாழ மாற்றம் ஆரவாரம்.

நண்பேன்டா...!
காட்டுக்குயிலு மனசுக்குள்ள, முஸ்தபா முஸ்தபா பாடல்களுக்கு அப்புறம் மீண்டுமொரு அழுத்தமான ஃபிரெண்ட்ஷிப் பாடல். இனி நண்பர்களுடைய செல்போன் ரிங்டோன் இதுவாகத்தான் இருக்கும்.

நண்பர்களுக்காக நானே வெட்டிய நண்பன் ரிங்டோன்

திரும்பத் திரும்பப் பேசுற
நீயா நானா நிகழ்ச்சியில் ஜோசியக்காரர்கள், சூனியக்காரர்கள், பேய், பூதங்களை நம்புபவர்கள் வந்தாலே அல்டிமேட் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. இங்க ஒருத்தர் வாயை விட்டுட்டு முழிக்கிறத பாருங்க...!

ஒரிஜினல் கார்த்திக் சுவாமிநாதன்
நேஷனல் வைல்ட் லைஃப் என்ற மேகசின் நடத்திய புகைப்பட போட்டியில் 2011ம் ஆண்டிற்கான விருதைப் பெற்ற சில புகைப்படங்களில் இதுவும் ஒன்று.

உபதேசம் (ஊருக்கு மட்டும்):
உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும்போது அறிவு வெளியே போய்விடும் – ஹென்றி

சுட்ட கவிதை:
இலக்கியம் பேசுபவனோடு
குடித்தல் ஆபத்து
போதையும் ஏறாது...
பேசுவதும் புரியாது...
முடிவில் உங்களை
முட்டாள் என்பான்...!
(முடியலத்துவம் – செல்வேந்திரன்)

நற்செய்தி:
கவுண்டமணி ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக கொலைவெறி கொண்ட மூன்று பதிவர்கள் மேதை படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்திருக்கிறார்களாம். அதனைத் தொடர்ந்து மேதை – சிறப்பு மலரின் முதல் படைப்பாக உங்கள் வாசிப்பிற்காக: மேதை

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

54 comments:

Sivakumar said...

சுட்ட கவிதை செம டாப்பு. ஸ்டிக்கர் பொட்டு கவிதை...உன்னைய....

Sivakumar said...

மேதை சிறப்பு மலர் வேலைய சிறப்பா பாருப்பா. நம் கடன் கடன் வாங்கி மேதை பார்ப்பதே!

நாய் நக்ஸ் said...

Mmm.....
Neengalum
padam parthuttu...

KADAVUL....,,,,MANITHAN.....

ithu ellatahium
thaanditeenga....

Intha...
YARUKKU YAARO..
padathukku
vimarsanam
podunga....
Pl...
Pl....
Pl....
Pl...

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
பல்சுவைப் பதிவு அருமையாக இருக்கிறது.
தபூசங்கரின் முத்தம், வெட்கம் கவிதை இன்னும் என்னுள் நினைவாக இருக்கிறது.

இத்தாலிய கப்பல் விடயம் கவலையளிக்கிறது.

அப்புறமா ஜேகே அறிமுகத்திற்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!

படம் பார்த்து நொந்த மூவரைப் பற்றியும் படித்து அறிந்தேன்.

சிவா போட்டிருக்கிற போட்டோ அந்த படம் பார்த்த பின்னாடி உள்ள சிட்டுவேசனுக்கு ரொம்ப மேட்ச் ஆகுதில்ல.

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// சுட்ட கவிதை செம டாப்பு. //

எல்லாம் பாதிப்பு...

// ஸ்டிக்கர் பொட்டு கவிதை...உன்னைய.... //

லவ் பண்ணுங்க சார்... லைஃப் நல்லா இருக்கும்...

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
// Intha...
YARUKKU YAARO..
padathukku
vimarsanam
podunga.... //

ஏற்கனவே சாம் ஆண்டர்சனை பலமுறை துவைச்சு காயப்போட்டாச்சு... பாவம்யா அந்த மனுஷன்...

Philosophy Prabhakaran said...

@ நிரூபன்
// சிவா போட்டிருக்கிற போட்டோ அந்த படம் பார்த்த பின்னாடி உள்ள சிட்டுவேசனுக்கு ரொம்ப மேட்ச் ஆகுதில்ல. //

Actually, அது வேற சிச்சுவேஷன் நிரூபன்... லேப்டாப்புல நீங்களும் நானும் எழுதுற மொக்கைப் பதிவுகளை படிச்சிட்டு டரியல் ஆகி தலைல கை வச்சு உட்கார்ந்திருக்காரு...

அனுஷ்யா said...

தபூ சாராலதான் பாதி பசங்க பர்ஸ் மாட்டிகிடுச்சு...நீங்களும் சிக்கிடீன்களா?
சபை நாகரிகம் அது இது ன்னு இது மாதிரி மூட் அவுட் பண்ணாதிங்க..
இந்த மாதிரி வீடியோவெல்லாம் பாக்க சொல்லி எந்த விஞ்ஞானியா உன்கிட்ட சொன்னாரு?
அப்புறம் அந்த ரிங்க்டோனுக்கு நன்றி...

அனுஷ்யா said...

ஜேகே தளத்திற்கு சென்றிருந்தேன்..அருமை...

சில்க் சதிஷ் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கேபிள் சார்

பால கணேஷ் said...

சுட்ட கவிதையை மிகவும் ரசித்தேன். அனைத்து மேட்டர்களுமே இம்முறை மிக நன்று.

Try 🆕 said...

நன்றி

Unknown said...

//இலக்கியம் பேசுபவனோடு
குடித்தல் ஆபத்து
போதையும் ஏறாது...
பேசுவதும் புரியாது...
முடிவில் உங்களை
முட்டாள் என்பான்...!//
அனுபவம் பேசுகிறது!!

துரைடேனியல் said...

Ellaa paguthigalum Nach nu irukku. Kavithaiyum (Neenga nenaikkirathu alla) Thathuvamum special touch. Kappal vipathu intha varuda Sogam. Vipathil thappiyavargalil vera photo kidaikkalaiyo ungalukku?

தினேஷ்குமார் said...

இலக்கியம் பேசுபவனோடு
குடித்தல் ஆபத்து
போதையும் ஏறாது...
பேசுவதும் புரியாது...
முடிவில் உங்களை
முட்டாள் என்பான்...!
(முடியலத்துவம் – செல்வேந்திரன்)....

ஆஹா புரிஞ்சுக்கிட்டியே பிரபா ...

Riyas said...

தபூசங்கரின் காதல் கவிதைகள் என்னையும் கவர்ந்தது..
அவரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் சிறிய கவிதைப்புத்தகத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் காதலர்களுக்கான தேசிய கீதம்..

அப்புறம் அந்த புகைப்படம் சூப்பர்.. நண்பன் பாடல் நல்லாயிருக்குத்தான்.. ஆனாலும் முஸ்தபா அளவுக்கெல்லாம் இல்ல.

ஹாலிவுட்ரசிகன் said...

// நான்தான் சபை நாகரிகம் கருதி வெட்டி எறிந்தேன். //
நம்ம மேலயும் கொஞ்சம் இறக்கம் காட்டுங்க.

// இங்க ஒருத்தர் வாயை விட்டுட்டு முழிக்கிறத பாருங்க...! //

நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். மிக செமயான தலைப்பு.

நல்ல ஒரு பதிவாளர் அறிமுகம். நன்றி.

Unknown said...

//போட்டோவில் பாப்பா அநியாயத்துக்கு “இறக்கம்” காட்டியிருந்தார். நான்தான் சபை நாகரிகம் கருதி வெட்டி எறிந்தேன்//
வன்மையாகக் கண்டிக்கிறேன்! :-)

Unknown said...

சுட்ட கவிதை செம்ம!
சுருதி பற்றிய ட்வீட் சூப்பர்! :-)
மேதை நீங்க பாக்கலையா? இருங்க சிவகுமார் பதிவில பாக்கிறேன்!

Unknown said...

//தெருவிற்கு தெரு பதிவர்கள் கலவை இடுகைகள் எழுதி வந்தாலும் மிகச்சிலருடயது மட்டுமே ஸ்பெஷல்//
ஆமா பாஸ்! பிரபாவின் வைன் ஷாப் மாதிரி!
கலக்கல்ஸ்!

சென்னை பித்தன் said...

ஒயின் சாப் சரக்கு நல்ல சரக்கு!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைத்தும் அமர்களப்படுத்துகிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்புறம் மேதை படத்தை நீங்களும் சேர்ந்து பார்த்தாக கேள்வி...

ஆனால் இதுவரை விமர்சனம் போடாதது கண்டனத்துக்குறியது...


இந்த பிளாக்கிலும் மேதை விமர்சனத்தை
விரைவாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேதை பார்த்த மாமேதையே.... இன்னும் ஏன் தாமதம்.... இன்னேரம் குமுறிக் கொப்பளித்திருக்க வேண்டாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த வார கவர்ச்சிப்படம் இடம் மாறி இருக்கு போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதப்போயா அணு அணுவா ரசிச்சீங்க....? மேதை படம் பார்த்ததுல எங்கெங்கெயோ டேமேஜ் ஆகி இருக்கு போல......?

Unknown said...

கலக்கல்.

//// போட்டோவில் பாப்பா அநியாயத்துக்கு “இறக்கம்” காட்டியிருந்தார். நான்தான் சபை நாகரிகம் கருதி வெட்டி எறிந்தேன்.////
நீங்க கொஞ்சம் எறக்கம் காட்டி இருக்கலாம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நாலே வரியாயினும் காதல் கைகூடும் கவிதை சூப்பர்....

ஹாலிவுட் எடுக்க ஒரு நிஜம் கேடச்சாச்சு....

ஜேகே said...

அடடா தலைவரே, எனக்கும் ஒரு கட்டிங் ஒதுக்கினதுல போதை தலைக்கு மேல ஏறிப்போச்சு.

அறிமுகத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி பிரபா! வாசிப்பது மட்டும் இல்லாமல் அறிமுகப்படுத்தியது எனக்கு இன்னும் பெருமை தான்... நன்றி.

நிரூபன் .. உங்களுக்கும் நன்றி

அன்புடன்,
ஜேகே
orupadalayinkathai.blogspot.com/

சமுத்ரா said...

wine shop is dull this week..

Anonymous said...

சரக்கு ஏத்தாமல் வயன் ஷாப் நடத்தும் பிரபாவுக்கு வாழ்த்துக்கள்..

அம்பலத்தார் said...

கப்பல் கவிழ்ந்ததில் கவலையே

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// தபூ சாராலதான் பாதி பசங்க பர்ஸ் மாட்டிகிடுச்சு...நீங்களும் சிக்கிடீன்களா? //

ஆமா மக்கா மாட்டிக்கிட்டேன்...

// சபை நாகரிகம் அது இது ன்னு இது மாதிரி மூட் அவுட் பண்ணாதிங்க.. //

அப்பட்டமா போட்டா நம்மள மூட் அவுட் ஆக்கிடுவாங்க...

Philosophy Prabhakaran said...

@ சில்க் சதிஷ்
// இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கேபிள் சார் //

அதை கேபிள் சார் தளத்துக்கு போய் சொல்லுங்க சிலுக்கு சார்...

Philosophy Prabhakaran said...

@ கணேஷ்
// சுட்ட கவிதையை மிகவும் ரசித்தேன் //

ஆனால் நீங்கள் புகைப்படம் மாற்றியதை நாங்கள் ரசிக்கவில்லை....

Philosophy Prabhakaran said...

@ ilavarasan
// நன்றி //

எதுக்கு...?

Philosophy Prabhakaran said...

@ veedu
// அனுபவம் பேசுகிறது!! //

ஆமாம் தல...

Philosophy Prabhakaran said...

@ துரைடேனியல்
// Vipathil thappiyavargalil vera photo kidaikkalaiyo ungalukku? //

கிடைச்சது... ஆனா பிடிக்கலை...

Philosophy Prabhakaran said...

@ தினேஷ்குமார்
// ஆஹா புரிஞ்சுக்கிட்டியே பிரபா ... //

இனிமே சிக்க மாட்டேன்ல...

Philosophy Prabhakaran said...

@ Riyas
// தபூசங்கரின் காதல் கவிதைகள் என்னையும் கவர்ந்தது..
அவரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் சிறிய கவிதைப்புத்தகத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் காதலர்களுக்கான தேசிய கீதம்.. //

ஆமாம் தல... எனக்கும்தான்...

Philosophy Prabhakaran said...

@ ஹாலிவுட்ரசிகன்
// நம்ம மேலயும் கொஞ்சம் இறக்கம் காட்டுங்க. //

என்ன சார்... மேலே கீழேன்னு அசிங்கமா பேசுறீங்க...

Philosophy Prabhakaran said...

@ ஹாலிவுட்ரசிகன்
// நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். மிக செமயான தலைப்பு. //

அது சொந்த யோசனை இல்லை சார்... யூடியூபிலேயே இருந்தது...

Philosophy Prabhakaran said...

@ ஜீ...
// வன்மையாகக் கண்டிக்கிறேன்! :-) //

யாரை...?

// மேதை நீங்க பாக்கலையா? //

இன்றைய பதிவை வாசிக்கவும்...

Philosophy Prabhakaran said...

@ ஜீ...
// ஆமா பாஸ்! பிரபாவின் வைன் ஷாப் மாதிரி!
கலக்கல்ஸ்! //

ஏன் தல இந்த உள்குத்து... நான் அந்த லிஸ்டில் இல்லை...

Philosophy Prabhakaran said...

@ சென்னை பித்தன்
// ஒயின் சாப் சரக்கு நல்ல சரக்கு! //

நன்றி சார்...

Philosophy Prabhakaran said...

@ கவிதை வீதி... // சௌந்தர் //
// அனைத்தும் அமர்களப்படுத்துகிறது... //

நன்றி செளந்தர்...

// இந்த பிளாக்கிலும் மேதை விமர்சனத்தை
விரைவாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்... //

போட்டாச்சு... போட்டாச்சு...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// மேதை பார்த்த மாமேதையே.... இன்னும் ஏன் தாமதம்.... இன்னேரம் குமுறிக் கொப்பளித்திருக்க வேண்டாமா? //

யம்மாடியோவ் எவ்வளவு ரசிகர்கள்... இப்ப போட்டாச்சு... ஸ்டார்ட் மியூசிக்...!

// இந்த வார கவர்ச்சிப்படம் இடம் மாறி இருக்கு போல? //

படம் இடம் மாறலை... ஆனால் படத்திற்கு முன்னாடி வேறு சில புகைப்படங்களை இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது...

// அதப்போயா அணு அணுவா ரசிச்சீங்க....? மேதை படம் பார்த்ததுல எங்கெங்கெயோ டேமேஜ் ஆகி இருக்கு போல......? //

தப்புதான்... நேரமின்மையால் இந்த வார தேடல் கொஞ்சம் மந்தமாயிடுச்சு... அதனால தான் அறிமுகப்பதிவர் கூட போடல...

Philosophy Prabhakaran said...

@ arunambur0
// நீங்க கொஞ்சம் எறக்கம் காட்டி இருக்கலாம். //

நான் ஏறக்கம் காட்டினா யார் பாக்குறது...???

Philosophy Prabhakaran said...

@ தமிழ்வாசி பிரகாஷ்
// நாலே வரியாயினும் காதல் கைகூடும் கவிதை சூப்பர்.... //

நன்றி...

Philosophy Prabhakaran said...

@ ஜேகே
// அறிமுகத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி பிரபா! வாசிப்பது மட்டும் இல்லாமல் அறிமுகப்படுத்தியது எனக்கு இன்னும் பெருமை தான்... நன்றி. //

தலைவரே... நீங்க அறிமுகமில்லை...

Philosophy Prabhakaran said...

@ சமுத்ரா
// wine shop is dull this week.. //

டைம் இல்லை...

Philosophy Prabhakaran said...

@ ரெவெரி
// சரக்கு ஏத்தாமல் வயன் ஷாப் நடத்தும் பிரபாவுக்கு வாழ்த்துக்கள்.. //

யாரோ உங்களுக்கு தவறான தகவல் கொடுத்திருக்காங்க....

Philosophy Prabhakaran said...

@ அம்பலத்தார்
// கப்பல் கவிழ்ந்ததில் கவலையே //

ஆமாம் சார்...

ஹாலிவுட்ரசிகன் said...

// அது சொந்த யோசனை இல்லை சார்... யூடியூபிலேயே இருந்தது... //
இல்ல பாஸ் ... நான் சொன்னது ஒளிபரப்பான அன்று ப்ரோகிராமை பார்த்தேன். மிகவும் இன்ட்ரஸ்டிங்கான தலைப்பு [Topicன்னு தமிழ்ல சொல்லேன்]