13 July 2012

பில்லா 2


அன்புள்ள வலைப்பூவிற்கு,

மாஸ் ஹீரோக்களின் படங்களைப் பொறுத்தவரையில் அடுத்தடுத்த படங்களில் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே தான் போகிறது, தொடர் தோல்விகள் கொடுத்தாலும் கூட. பில்லாவின் முன்பதிவுகளே அதன் சாட்சி. Ticket New தளமே இரண்டு நாட்கள் தொங்கிவிட்டது. இதோ மூன்றே நாட்களில் பணம் போட்டவர்கள் லாபம் பார்த்துவிடுவார்கள், ஆனால் ரசிகர்கள் தேவையை பூர்த்தி செய்திருக்கிறதா பில்லா...?

Scarface கதையில் கொஞ்சம் நாயகன் பிராண்ட் மசாலாவை தூவி ஒரு சர்வதேச டானின் பயோக்ராபியாக கொடுத்திருக்கிறார்கள்.

அஜீத் எப்பவும் போல ஸ்மார்ட் அண்ட் ஸ்டைலிஷ். தனுஷுக்கு சைக்கோ படங்கள் போல அஜித்துக்கு டான் படங்கள் என்ற வட்டத்திற்குள் மாட்டிக்கொள்வார் போல. சூட், கூலிங் க்ளாஸ், அளவெடுத்து வைத்த பேச்சு, ஸ்லோ மோஷன் நடை என அத்தனையும் அதே அதே. “தல” புராணம் பாடும் தொண்டர்களும், கார் / பைக் சேசிங் காட்சியும் இல்லாதது தலவலி நிவாரணம்.

பார்வதி ஓமனக்குட்டன் ஸ்டார் வேல்யூவிற்கான சேர்க்கை. என்ன ஒரு கூர்மை...! நான் அவங்க மூக்கை சொன்னேன். பா.ஓ’க்கு மொத்தமே நான்கைந்து காட்சிகள்தான். ஆனால் திடீர் திடீரென்று வந்து ஹீரோவிடம் ஐ லவ் யூ சொல்லிவிட்டு பார்வையாளர்களுக்கு ஹீரோவின் பொடனியை மட்டும் காட்டியபடி கிஸ்ஸடித்துவிட்டு டூயட் பாடும் லூசுப்பெண்ணாக காட்டாதது மிகப்பெரிய ஆறுதல். 

ப்ரூனா அப்துல்லா - டான் படங்களில் வழக்கமாக ஒரு ரிவால்வர் ரீட்டா கேரக்டர் வருமே, அதேதான். பார்வதியுடன் ஒப்பிடும்போது அதிகம் கவர்கிறார். அவ்வப்போது பிகினியில் தோன்றி கிறங்கடிக்கிறார். பார்வதி, ப்ரூனா இணைக்கு முன் நயன்தாராவும் நமீதாவும் அறுபது ரூபாய் சரக்காக தெரிவது ஆச்சர்யமில்லை.

சுபான்ஷு, வித்யுத் போன்ற வட இந்திய வில்லன்கள் படத்திற்கு சர்வதேச பாலிஷ் போட்டிருக்கிறார்கள். பின்னவரை துப்பாக்கியிலும் பார்க்கக்கடவது. ரஹ்மான், ரஞ்சித் போன்றவர்கள் முதல் பாகத்தில் நடித்தமைக்காக கடனே என்று சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் ரஞ்சித்துக்கு பிரதான பாத்திரம் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். இளவரசு, ஹீரோயினின் அம்மா தவிர்த்து தமிழ் நடிகர்கள் சொற்பமே.

பாடல்கள் மூன்று பப் ரகம். மதுரை பொண்ணு பாடலில் ஆடும் அத்தனை அழகிகளும் அல்வாத்துண்டுஸ். மீனாட்சி டிக்ஸிட் ஊறுகாயாக தோன்றி தொட்டுக்கொள்ளவா... என்னை தொட்டுக்கொள்ள வா... என்று அழைக்கிறார். இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் வரும் காமிக்ஸ் ஸ்டைல் பாடல் புதுமை. படத்தின் போக்கு கருதி வெளிநாட்டு தெருக்களில் நடனமாடும் டூயட் பாடல்களை தவிர்த்திருப்பது நலம். எண்ட் கார்ட் பாடலில் யுவன் தோன்றுகிறார்.

அஜீத் பேசும் வசனங்கள் ஆங்காங்கே ஷார்ப். “தீவிரவாதி வெற்றி கண்டால் போராளி” என்ற கருத்தை வலியுறுத்தும் வசனத்தில் என்னையே அறியாமல் என் கரங்கள் தட்டிக்கொண்டன. 

படத்தின் பட்ஜெட்டில் பாதியை தக்காளி ஜூஸுக்காகவே செலவு செய்திருப்பார்கள் போல. படம் பார்ப்பவர்கள் ஒரு கணம் ஜெர்க் ஆகும்படி கன்னாபின்னாவென்று ‘சதக் சதக்’ செய்கிறார்கள். 

அண்ணாச்சி – அப்பாசி – டிமிட்ரி என்று கதை பயணிக்கும் விதம் அருமை. நாயகன், புதுப்பேட்டை போல அற்புதமாக சொல்லக்கூடிய வாய்ப்பு இருந்தும்கூட அவற்றை முழுமையாக பயன்படுத்த தவரியிருக்கிறார் சக்ரி. விக்கியில் படித்தவரைக்கும் பில்லா Scarface உருவல் என்பது “தல”குனிவு.

படத்தில் அஜித்தை ஏன் இலங்கை அகதியாக காட்டவேண்டும்...? அஜீத் ஏன் இலங்கைத்தமிழ் பேசவில்லை....? நல்லவேளையாக அஜீத் ஈழபாஷை பேசவில்லை. (அட்டகாசம் தூத்துக்குடி பாசை நினைவிருக்கிறதா...? தமிழ் தப்பித்தது...!) அந்த மனிதர்களை தமிழ் சினிமா இயக்குனர்கள் இதற்கு மேலும் சித்திரவதை செய்யாமல் இருக்கலாம். 

கடைசியில் இதுதான் நடக்கும் என்று முன்பே தெரிந்துவிடுவதால் படத்தினூடே சுவாரஸ்யம் குறைந்துக்கொண்டே போகிறது. நீளம் குறைத்திருப்பது சலிப்பை தவிர்க்கிறது. படத்தின் இறுதியில் காட்டப்படும் சர்வதேச டான் பில்லாவை முதல் பாக பில்லாவோடு பொருத்த முடியவில்லை.

மொத்தத்தில் கண்களுக்கு கவர்ச்சியாக, அதிக பொருட்செலவு செய்து ஹாலிவுட் ஸ்டைலில் (பழைய டயலாக்தான்... பொறுத்துக்கோங்க, இப்ப முடிஞ்சிடும்...!) படம் காட்டியதற்காக பில்லாவை பாராட்டலாம்.

பில்லா – டாஸ்மாக்கில் ஒரு ஹாப்சன்ஸ்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 comments:

அஞ்சா சிங்கம் said...

படம் சரி இல்லைன்னு அணில் ரசிகர்கள் அஞ்சு பதிவு போட்டுடாங்க நீங்க என்னன்னா பார்க்கலாம்ன்னு சொல்றீங்க . யாரைத்தான் நம்புவதோ பேதை (போதை) நெஞ்சம் ..................

Unknown said...

//பில்லா – டாஸ்மாக்கில் ஒரு ஹாப்சன்ஸ்...!//

டாஸ்மாக்கில் ஹாப்சன்ஸ் கிடைக்கறதே பெரிய விசயம்தானே, ஆவரேஜ் படமா இருக்கும்னு நினைக்கிறேன்.

Unknown said...

நேர்மையான விமர்சனமாக இதை எடுத்துக்கலாம் என்றே நினைக்கிறேன்...!

Anbu said...

Padam Super nu solringa. Apo pathutalam

'பரிவை' சே.குமார் said...

படம் பற்றி பாஸிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன...

Anonymous said...

saturday en gadhi?

கும்மாச்சி said...

ஆகமொத்தத்தில் திருட்டு வி.சி.டியில் பார்த்தால் போதும் என்கிறீர்கள்.

கேரளாக்காரன் said...

Paakkaamale kooda irukkalaam

N.H. Narasimma Prasad said...

Nice Review Prabha. Thanks for Sharing.

வவ்வால் said...

பிரபா,

தெளிவேயில்லையே, சரக்கு போட்டு படமா இல்லை ,பதிவா? இருக்கு ஆனால் இல்லை போல விமர்சனம் இருக்கு :-))

Jayadev Das said...

@ வௌவ்வால் .....

ரிபீட்டு...........

ஏதோ அஜித் ரசிகர்கள் கோபப் படக் கூடாதுன்னு எழுதின விமர்சனம் மாதிரி இருக்கு.............. :((

Vadakkupatti Raamsami said...

நீ சொன்னாலும் சொலாட்டியும் தனுசு சைக்கொதான் அவுரு அண்ணனும் அதே ராஜராஜ சோழனை கேம்ப் பயர் டேன்ஸ் ஆட வைத்த புத்திசாலி

Katz said...

படம் எப்படின்னு நச்சுன்னு தெளிவா சொல்லவே இல்லையே!

natarajan said...

பாஸ் தல படம் தல படம் தான்..அது நல்லா இருந்தா என்ன இல்லாட்டி என்ன
shwara.blogspot.com

Rizi said...

தல ரசிகன் என்ற கர்வத்தை விட்டுக்கொடுக்காத விமர்சனம்..

தல ஸ்டைல் எப்பவும் அசத்தல்தான்.. ஆனா படத்துக்கு அது மட்டும் போதுமா.. கதை,திரைக்கதை அப்பிடி அயிட்டம் எல்லாம் வேணாமா..

Rizi said...

@மௌனகுரு said...
Paakkaamale kooda irukkalaam

என்ன பாஸ் இப்பிடி சொல்லிபுட்டிக என் தளத்துக்கு வந்து தலய தெரியுமா தமிழ் சினிமாவ தெரியுமான்னு கொதிச்சிங்க.. இங்க பிளேட்ட மாத்திட்டிங்களே..:)

NAAN said...

உள்குத்து எதுவும் இல்லைன்னாக்க...இது நல்ல நடுநிலையான விமர்சனம்...........

Doha Talkies said...

நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்.
அந்த bottle க்கு நன்றி.
கிரேட் எஸ்கேப்.
http://dohatalkies.blogspot.com/2012/07/2-doha-qatar.html

அனுஷ்யா said...

நடுநிலையான விமர்சனம்ன்னு இத நான் சொன்னா கூட என்னை அஜீத் வெறியன்னு முத்திரை குத்திருவானுங்க போல ஒரு குரூப்பு... நல்ல விமர்சனம் பிரபா.. மேலே சில பேர் படம் எப்புடின்னு சொல்லவே இல்லைன்னு கேட்பதிலேயே தெரிகிறது இந்த விமர்சனத்தில் நீங்க நல்லா இருக்குன்னு சொல்வதை அவர்கள் ஏற்க தயாரில்லை என்பது...

Ponmahes said...

I think this not a biased review...

I felt only one while watching the movie is ...

2 hours not required to tell this story..
and director forget to speed up the screenplay....

Ponmahes said...

பில்லா – டாஸ்மாக்கில் ஒரு ஹாப்சன்ஸ். what is ஹாப்சன்ஸ்? Please reply

ananthu said...

பிரபா எனக்கு படம் பிடித்திருக்கிறது , அதே சமயம் திரைக்கதையை இன்னும் சுவாரசியப்படுத்தியிருக்கலாம் .... பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் படம் படு ப்லாட்டாக இருக்கிறது ... ஹீரோயின்களும் கண்களுக்கு ஒப்பவில்லை ...

Vadakkupatti Raamsami said...

பார்வதி, ப்ரூனா இணைக்கு முன் நயன்தாராவும் நமீதாவும் அறுபது ரூபாய் சரக்காக தெரிவது ஆச்சர்யமில்லை.//////
மாம்ஸ் போட்டுக்க நானும் இதையேதான் நினைத்தேன்...செம பிகருங்க டன்சன் ஆகி போச்சு